Powered By Blogger

Sunday, January 12, 2020

தெறிக்கும் தருணங்கள் !!

நண்பர்களே,

வணக்கம். இதமானதொரு சென்னைப் பகலில், சுட்டெரிக்காத இளம் வெயிலை ரசித்தபடிக்கே  டைப்பும் இந்தப் பதிவின் நம்பர் 600 என்று blogger சொல்கிறது ! வியாழன் மாலையே சென்னைப் புத்தக விழா துவங்கியிருக்க, முதல் 2 நாட்களின் விற்பனையும்  இந்தக் க்ளைமட்டைப் போலவே மிதமான ரம்யம் !! சரி, ஒட்டு மொத்தமாய் 9 நாட்கள் விடுமுறை வாய்க்கவுள்ள வேளையில், வாரயிறுதிகளும் மிதமாகவே இருக்குமென்ற எண்ணத்தில் சோம்பிக் கிடந்தால் - சென்ட்ரல் ரயில்நிலையத்து ஆட்டோ மீட்டர்களைப் போல விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது திடு திடுப்பென ! So நொடிக்கொரு தபா 'டிங் டிங்'கென உற்சாகமாய் ஒலிக்கும் கிரெடிட் கார்ட் பில்களின் ஓசையை கேட்டபடியே பதிவுக்குள் நுழைகிறேன் !

இவை தான் புத்தக விழாவுக்குப் போகும் முன்பாகவே பதிவைத் தயார் பண்ணிட எண்ணி சனிக்கிழமை மதியம் ரூமில் குந்தியிருந்த சமயம் நான் எழுதிய வரிகள் ! வெள்ளி மாலையே சென்னைக்கும், புத்தக விழாவுக்கும் hi சொல்லியிருந்தோம் என்பதால் பரபரப்பில்லாத அந்தப் பொழுது சற்றே வித்தியாசமாய்ப்பட்டிருந்தது ! எப்போதும் தெறிக்கும் பிசியில் தென்படும் மைதானம் comparatively அமைதியாய் வெள்ளியன்று   காட்சி தந்தது என்பதால் சனியின் நிலவரம் பற்றி பெரிதாய் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி  சாவகாசமாய் நாலரை சுமாருக்கு ஜூனியர் எடிட்டரும் , நானும் நந்தனம் YMCA மைதானத்தை எட்டிப் பிடித்த போது சாலையிலேயே ஒரு buzz அப்பட்டமாய்த் தென்பட்டது ! 'இது...இது தானே சென்னையின் அடையாளம் !! அட்றா சக்கை....அட்றா சக்கை !!' என்று உள்ளுக்குள் துள்ளினாலும், பெரிதாய் வெளிக்காட்டிக் கொள்ளாது அரங்கினுள்  நுழைந்தோம்  !!  இம்முறை நமது ஸ்டால் இரட்டை அரங்கு எனும் போது தொலைவிலிருதே ஆந்தை விழிகளை ஓட விட எத்தனித்தேன் - கூட்டம் தென்படுகிறதா என்று !! And boy oh boy ...oh boy !!! கூ-ட்ட-ம்  இ-ரு-ந்-த-தா-வா ??

நமது அரங்கில் கம்பியூட்டர் பில்லிங்கின் பொருட்டு சென்னை நண்பர்கள் இருவரைத் தற்காலிகப் பணியாட்களாய் நியமித்திருந்தோம் & ஊரிலிருந்து நம்மவர்கள் மூவர் வந்திருந்தனர் ! ஆக மொத்தம் 5 பேர் பணியில் இருந்தும் நேற்றைய பொழுதின் தெறிக்கும் ஜனத்திரளுக்கு ஈடு தந்திட இயலாது - யாருமே மதிய பூவாவின் பொருட்டு நகர்ந்திருக்கக் கூட இல்லை !! தலைநகரின் வாங்கும் ஆற்றல் தனது மிரட்டலான பரிமாணத்தை காட்டிக் கொண்டிருக்க     - உள்ளுக்குள்  பிரவாகமெடுத்த உணர்வுகளை விவரிக்கத் தடுமாற்றம் மிஞ்சுகிறது ! மின்சாரம் உற்பத்தி  கண்டிருக்கும் நேற்றைய மாலையில் நமது அரங்கினுள் வாசகர்கள் காட்டிய உற்சாகத்தின் உபயத்தில் ! சமீப ஆண்டுகளின் பாணி இம்முறையுமே தொடர்ந்தது - மெய்யாகவே 7 முதல் 77 வரையிலான வாசக / வாசகியர் ரகளையாய் நம் இதழ்களை அள்ளிச் சென்ற வகையில் !! Oh yes "இங்கிலீஷில்   காமிக்ஸ்  இல்லையாக்கும் ?" என்ற கேள்வியோடு நமது அரங்கில் கலர் கலராய் டாலடிக்கும் கார்ட்டூன்களை கண்களில் ஆவல் மிளிர ரசித்து நிற்கும் பிள்ளைகளை  இழுத்துச் செல்லும் பெற்றோருக்கு இம்முறையும் பஞ்சமில்லை தான் !! "ஓ...தமிழ் மட்டும் தானா ?" என்றபடிக்கே அகன்றிட்ட இளசுகளுக்கு குறைவில்லை தான் ! ஆனால் அந்தச் சிறுபான்மையைத் தாண்டி - வாங்குறோமோ-இல்லியோ - பொறுமையாய்ப் புராட்டவாவது செய்வோமென்று இம்முறையும் வருகை தந்த ஜனம் செயலில் காட்டிக் கொண்டிருந்தது நிறைவாய் இருந்தது !! மறுப்பதற்கே இல்லை தான் - விற்பனைகளும் , அவை  கொணர்ந்திட்ட பண வரவுகளும் காதுக்குள் இளையராஜாவின் மெலடிக்களை இதமாய் ஒலிக்கச் செய்தன தான் !! ஆனால் எண்ணற்ற பகல்களும்-ராக்களும் பெண்டை கழற்றிய பணிகளின் நோவுகளையெல்லாம் அங்கே தென்பட்ட வெறித்தனமான வாசக ஆர்வங்கள் நொடிப்பொழுதில் மறக்கச் செய்த மாயாஜாலத்தை என்னென்பது ?!! By now - ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நாம் தரிசிக்கும் காட்சிகள் கிட்டத்தட்ட இவ்விதமே இருந்திடும் என்பதை யூகித்து, கொட்டாவியோடு இதனைப் படிக்கக்  கூடிய நண்பர்களின் பொருட்டு - அதே விவரிப்புகளை இன்னொருக்கா எழுதிடாது - நேற்றைய நிகழ்வுகளின் சாரத்தை மட்டுமே தந்திடுகிறேனே ?!

***இந்தாண்டின் - இதுவரையிலுமான big story மாண்புமிகு லூயி கிராண்டேல் அவர்களே தான் !! Phew !!! இடையில் ஓரிரு ஆண்டுகள் அத்தனை வேகம் காட்டியிரா நமது மாயாவிகாரு இந்தாண்டின் இந்தப் புத்தக விழாவின் கில்லி !! நேற்றைய பொழுதில் மூன்றோ-நான்கோ மாயாவி மறுபதிப்புகள் மாத்திரம் கைவசம் இருந்திருக்காவிடின் அநேகமாய் என்னைச் செவிளோடு சாத்தியிருப்பார்கள் மூத்த வாசகர்களில் பலர் !! சொல்லி மாளாது - இன்னமும் நமது மின்சார விரலோனை நாடி துள்ளிக் குதித்திடும் "கட்டிளங்காளை"களின் உற்சாகங்களை !! நேராய் அந்த மறுபதிப்புகள் வீற்றிருக்கும் ரேக்கின் முன்னே போய் நிற்கும் ஒரு யுகத்துக்கு  முந்தைய ரசிகர்கள் - இடமும் பார்ப்பதில்லை ; வலமும் திரும்புவதில்லை !!  "அட போய்யா...!!யாருக்கு வேணும் உன் மத்த குப்பைகள் ?" என்று சொல்லாது சொல்லியபடியே மாயாவி ப்ளஸ் ஒன்றோ இரண்டோ லாரன்ஸ்-டேவிட் கதைகளை மட்டுமே வாங்கிப் போவோரிடம் நான் கேட்கவே செய்தேன் : "சார்..இவற்றை நீங்க மெய்யாலுமே மறுக்கா படிக்கத் தான் போறீங்களா ?" என்று !! "லூசாப்பா நீ ?" என்பது போலானதொரு பார்வையோடு - "இல்லே...இதெல்லாம் ஒரு ஞாபகார்த்த சேகரிப்புக்கோசரம் தான் !!" என்று சொல்லி விட்டு முகம் நிறைய சந்தோஷங்களோடு புறப்பட்டோர் ஏராளம் - ஏராளம் ! முதிய தந்தையின் முகத்தில் தென்பட்ட பூரிப்பைப் பார்த்து அவரை என்னருகே நிறுத்தி ஒரு க்ளிக் செய்த மகளின் கண்களில் மிளிர்ந்த மகிழ்வுக்கும் ; நொடிப்பொழுதில் 40 அகவைகளைத் துறந்து விட்டு துள்ளிக் குதிக்கும் யூத்தாகிடும் ஆத்துக்காரர்களை ஒரு amused பார்வை பார்த்திட்டே  நின்ற இல்லத்தரசிகளின் மனநிறைவுகளுக்கும் சத்தியமாய் எதுவும் ஈடாகிடாது !! "அரைத்த மாவு ; முன்போகும் பயணத்துக்கு இவை வலு சேர்த்திடாது ; கடல் போல காமிக்ஸ் குவிந்து கிடைக்கும் வேளைதனில் சுற்றிச் சுற்றி இங்கேயே பயணிப்பதில் பிரயோஜனம் கிஞ்சித்தும் லேது !!" காதிலே தக்காளிச் சட்னி வரும் மட்டிற்கு மேற்படி வரிகளை நானும் ஒப்பித்துப் பார்த்து விட்டேன் !! கிராபிக் நாவல்கள் ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 ; லார்கோ etc etc என்று நவீனங்களின் பிரதிநிதிகளைக் களமிறக்கவும் செய்தாச்சு !! ஆனால் அத்தனைக்கும் பின்னே புத்தக விழாத் தருணங்களிலாவது மாயாவி மாமா சாரின் கடாட்சம் இருந்தாலன்றி நிறைய "கட்டிளங்காளைகள்" ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்லும் சங்கடங்கள் தொடர்கதையாகிடும் என்று புரிகிறது ! So மாயாவியாரின் வெளிவந்திரா மறுபதிப்புகள் மாத்திரம் இனி வரும் பிரதானப் புத்தக விழா ஸ்பெஷல்களாய் திடும் திடுமென கண்ணில் படத் துவங்கிடும் என்பதை அகில உலக கிராண்டேல் ரசிகர் மன்றத்தின் அறுபதாவது ; எழுபதாவது வட்டங்களின் சார்பாய் அறிவிக்கிறேன் !! இவை சந்தாக்களின் அங்கமாய் இருந்திடாது ! And for starters - "கொரில்லா சாம்ராஜ்யம்" நடப்பாண்டிலேயே இருக்கும் ! எங்கு-எப்போது ? என்ன மாதிரி ? என்ற nitty gritties களை தீர்மானம் செய்திட கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வேன் - ஆனால் கொ.சா. நிச்சயமாய் உண்டு சாமீஸ் !! 'ஹை !! உவகை தரும் ஊசிப் போன உப்மா இன்னொரு பிளேட்டா ? ஜூப்பரு !!' என்று அன்பான விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்திடக்கூடும் என்பது புரியாதில்லை தான் ! ஆனால் நான் பார்த்த சமாச்சாரங்களையும் ; கண்முன்னே அரங்கேறிய பூரிப்பின் பிரதிபலிப்புகளையும் ;  சிந்திய ஆதங்கங்களையும் ஒரு யுகமாயினும் உணர்ந்திடல்  விமர்சிப்போருக்குச்  சாத்தியமாகாதெனும்   போது - good luck with the brickbats guys !! எங்களுக்கு உப்மாவே போதுமெனும் அணியினரின் புத்தக விழா ஆர்வங்களின் முன்னே இதர வைராக்கியங்கள் பின்செல்வது தவிர்க்க இயலாது போகிறது !

*** மாயாவிக்கு அடுத்தபடியாக evergreen இடம்பிடித்து நிற்பது நமது 'தல' தான் ! அதுவும் அந்த MAXI லயனின் மெகா சைஸ் டெக்ஸ் இதழ்கள் brisk sellers ! மாற்றம் - முன்னேற்றம் - என்று கரடியாய்க் கத்தியபடியே தினுசு தினுசாய்க் கதைகளைக் களமிறக்கிப் பார்த்தாலும் அந்த நேர்கோட்டுப் பாணி ; நேர்கொண்ட பார்வையுடனான நாயகன் ; சிலபல ணங்க் ; கும் ; சத்த் சாத்துக்கள் கொண்ட கதைகளைத் தொனிக்க ஏதும் லேது என்பது yet again புரிகிறது !! மாயாவி மாமன்னர் என்றால் - 'தல' சகலத்துக்குமே மெய்யாலுமே 'தலை தான் !
***Story of the 2020 bookfair வரிசையில் குறிப்பிடத்தக்கதொரு பெயர் நமது 007 தான் ! அந்த நாற்பது ரூபாய்த் தடத்தின் black & white க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் ஈட்டி வரும் அபிமானம் மெய்யாகவே பிரமிக்கச் செய்கிறது ! இங்கொரு சமாச்சாரத்தைக் குறிப்பிட்டே தீர வேண்டும் : கிட்டத்தட்ட 35+ஆண்டுகளாய் உங்களோடு பயணித்து வரும் எனக்கு, உங்களின் ரசனைகளை ஸ்பஷ்டமாய்த் தெரியும் என்ற ரீதியிலானதொரு எண்ணம் உள்ளுக்குள் காலூன்றி நின்றது - சில பல ஆண்டுகளுக்கு முன்வரையிலும் ! ஆனால் இந்த நமது இரண்டாம் வருகைக்குப் பிற்பாடு நான் படித்த முதல் பாடமே - expect the unexpected என்பது தான் !! ஹிட்டான கதைகளை மேம்படுத்திய மறுபதிப்புகளாக்கிடும் போது மொழிபெயர்ப்பையும் புதுப்பித்தால் ரசிப்பீர்களென்று எதிர்பார்த்தேன் ; ஆனால் ரூம் போட்டுத் தங்க வைத்துத் தெளியத் தெளிய நீங்கள் சாத்தியதே மிச்சம் !! கைக்குட்டையைப் பிழியப் பிழிய வைக்கும் அழுகாச்சிக் காவியங்களை ரசிப்பீர்களென்று முயற்சித்தேன் - சில்லு மூக்கு சிதறியதே மிச்சம் !! ரைட்டு...நம்ம golden oldies மறுக்க பவனி வரும் போது விசில் களைகட்டுமென்று எதிர்பார்த்தேன் ; ஆனால் சிரசாசன SMS  களையும், சிலபல ஜாக்கி ஜட்டிகளையும் பார்த்துக் 'கெக்கே பிக்கே' என்று நீங்கள் சிரித்ததே பலன் ! அதே நேரம் 'க்ரீன் மேனரை' என்ன செய்யக் காத்திருக்கிறீர்களோ ? "பராகுடாக்களை" எப்படி அணுகப் போகிறீர்களோ ? என்று தயங்கிய வேளைகளில் தெறிக்க விட்டு வெற்றிகளைக் காட்டியுள்ளீர்கள் ! So நிறைய தருணங்களில்  முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகவே தொடர்ந்திடல் முதுகுக்கு நலம் பயக்கும் என்ற உணர்வினை உள்ளுக்குள் வளர்த்துக் கொண்டாலும், எனது gutfeel மீதான நம்பிக்கைகளை நான் முழுசுமாய் இழந்ததில்லை ! But இந்த ஜேம்ஸ் பாண்ட் க்ளாஸிக் கதைகளுக்கு நீங்கள் தந்திடக்கூடிய வரவேற்பு சிகப்புக் கம்பள பாணியில் இருந்திடுமென்று சத்தியமாய் எனக்கு யூகிக்கச் சாத்தியப்பட்டிருக்கவில்லை ! "ராணி காமிக்ஸ்" போட்டி இதழ் எனும் போது அந்நாட்களில் அவற்றை வாசிக்கப் பெரிதாய் நான் மெனெக்கெட்டதில்லை ! So 007 அங்கு செய்திருக்கக்கூடிய சாகசங்களின் பரிமாணம் என்னை முழுசாய் எட்டியிருக்கவில்லை என்பதே நிஜம் ! தவிர ஆரம்ப நாட்களின் கதை வாங்கும் போட்டியில் ஜேம்ஸ் பாண்டின் விஷயத்தில் நமக்கு கிட்டியது அல்வாவே என்பதால் அவர் மீதே ஒரு மெல்லிய காண்டு இருந்தது நிஜம் ! "சீ..சீ..இந்த அல்வா திகட்டும்...பிசு பிசுன்னு இருக்கும் !" என்ற கதை தான் ! So கிளாசிக் 007 உங்களுள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இன்றைக்கு கண்கூடாய்ப் பார்ப்பது பிரமிக்கச் செய்யும் அனுபவம் !!  பட்டாம்பூச்சிப் படலம் அற்புத வாஞ்சையோடு வரவேற்கப்படுவது இந்த ஜனவரியில் highlight என்பேன் !!

***Happy Story of the bookfair பற்றியும் நான் பேசியே தீர வேண்டும் ! நேற்றைக்கு நான் சந்தித்துப் பேசிய வாசகர்களில் கணிசமானோர் தம் வீட்டுப் பிள்ளைகளையும் என்னிடம் அறிமுகம் செய்து வைத்தனர் - "டெக்ஸ் ரசிகன் " ; லக்கி லூக் ரசிகை" என்ற அடைமொழிகளோடு ! எங்கே - இன்றைய இளசுகள் நம் பக்கமாய் திரும்பிடாதே போய் விடுவார்களோ ? என்ற பீதியினை ஓரளவிற்கு மட்டுப்படுத்திட உதவிட்டது அவர்களுடனான உரையாடல்கள் !! லக்கி லூக்கின் சகல இங்கிலீஷ் டைட்டில்களையும் ஒப்பித்த கையோடு - அவற்றின் தமிழ் பதிப்புகளை பார்த்துக் குஷியான தந்தை & தனயன் ஜோடி ;  சூப்பர் சர்க்கஸில் ஆரம்பித்து, சமீபத்தைய உத்தம புத்திரன் வரைக்கும் ஒவ்வொரு லக்கி ஆல்பத்தையும் நினைவு கூர்ந்திடும் தந்தையோடு உற்சாகமாய்ப் பங்கெடுத்த இளவல் ; டெக்சின் அத்தனை கதைகளும் "தெறி !!" என்று சர்டிபிகேட் தந்த குட்டிப் பெண் - என்று நம் பயணத்துக்கொரு எதிர்காலம் நிச்சயம் உண்டென்று ஊர்ஜிதம் செய்தோர் நேற்றைய பொழுதை பிரகாசமாக்கிய பலருள் பிரதானமானோர் !!

*** Hardcover இதழ்கள் மீதான காதலின் வெளிப்பாடையும் கண்கூடாய்ப் பார்த்திட இயன்றது நேற்றைக்கு !! "நானும் படிக்கணும்  ; என் மகனுக்கும் ரசிக்கணும் ! அதுக்கு ஏற்றா மாதிரி புக்கா காட்டுங்களேன் ?" என்ற வினவலோடு எதிர்பட்டார் வாசகர் ஒருவர் ! சரி, காமிக்ஸுக்குப் புதுசான வாசகருக்கு light வாசிப்புக்களமாகவே தரலாமென்ற எண்ணத்தில் லக்கி லூக்கை சுட்டிக் காட்டினேன் ! ஊஹூம்....கார்ட்டூன் வேணாமே ! என்றார் ! ரைட்டு....ஜேம்ஸ் பாண்ட் 007 என்று பட்டாம்பூச்சிப் படலத்தை நீட்டினேன் ! அதை வாங்கி ரசித்த போதிலும் அவர் கண்கள் மொத்தமாய் நிலைகொண்டிருந்ததோ நமது hardcover கலெக்ஷன் மீதே ! "இதிலே ஏதாச்சும் தாங்க !" என்றவரிடம் "இரத்தக் கோட்டை" இதழை நீட்டிய போது சந்தோஷமாய் வாங்கிச் சென்றார் ! அவர் தானென்றில்லை, தினகரன் குழும எடிட்டர் திரு கே.என். சிவராமன் அவர்களும் நம்மை அன்போடு சந்திக்க வந்த தருணத்தில் சிலாகித்தது ஹார்ட் கவர் இதழ்களின் ரம்யத்தையே ! ஊடக உலகினில் பழம் தின்று கொட்டை போட்டதொரு ஜாம்பவான் பாராட்டும் போது அந்த ஹார்ட் கவர்கள் இன்னமுமே மினுமினுத்தது போலிருந்தது எனக்கு !!

***And yet again கார்ட்டூன்கள் மீதான இரு முற்றிலும் மாறுபட்ட தீர்ப்புகளை நேற்றைக்கு உணர்ந்திட இயன்றது ! ஸ்டாலுக்கு வந்த casual readers மத்தியில் பென்னி ; லக்கி லூக் ; ரின்டின் கேன் ; smurfs சுலபமாய் நட்புப் பாராட்டியதை கவனித்தேன் ! வாஞ்சையோடு கார்ட்டூன் புக்குகளைத் தூக்கிக் கொண்டு பில் போடா நகர்ந்தனர் கணிசமானோர் ! ஆனால் நமது ரெகுலர் வாசக வட்டத்தின் அங்கத்தினரோ - "கார்டூனிலே லக்கி தவிர்த்து வேற எதுவும் புடிக்கல சார் !" என்று உதட்டைப் பிதுக்கிச் சென்றது தவறாது நிகழ்ந்தது !! நானும் மத்திமமாய் விளக்கெண்ணெய் குடிச்சவன் போலொரு புன்னகையோடு 'சரிங்க சார் !' என்று கேட்டு வைத்துக் கொண்டேன் !! வானவில்லின் இரு முனைகள் !! நடுவே ஒரு பொட்டல் தலையன் !! ஹ்ம்ம் !!

***தவறாது நேற்று என்னிடம் சொல்லப்பட்ட இன்னொரு சமாச்சாரம் ட்யுராங்கோ தொடருக்குக் காத்திருக்கும்  'கதம்..கதம்..' தான் ! ஓசையின்றி இந்த மனுஷன் நம் வாசகர்கள் மத்தியில் என்ன மாதிரியானதொரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை நேற்றைக்கு தெள்ளத் தெளிவாய் உணர்ந்திட முடிந்தது ! "ஆறாது சினம் அட்டகாசம்" என்று சொல்லிய அதே மூச்சில் -"அடுத்த வருஷம் தொடர் முடியுதோ சார் ?  " என்று வருத்தத்தையும் வெளிப்படுத்தியோர் ஏகம் ! பார்க்கலாமே நண்பர்களே - இதன் படைப்பாளி உருவாக்கியுள்ள புதுத் தொடர் ட்யுராங்கோவின் இடத்தை இட்டு நிரப்புமா என்று !!

***அநேகரால் அழுத்தமாய் பேசப்பட்ட இன்னொரு topic -  "குண்டு புக் கோரிக்கையே "!! "ஜானியின் கதைகளிலொரு நாலைந்தை இணைத்துப் போடுங்களேன் ; "லக்கி லுக்கில் நாலு ?" ; "கலரில் டெக்ஸ் புதுக் கதைகள் ?" " என்ற ரீதியில் Collection ஆல்பங்களுக்கோசரம் பிடிக்கப்பட்ட கொடிகள் நிறையவே இம்முறை ! நமது பட்ஜெட்டின் நெருக்கடிகளை சொல்லி ; யாருக்கேனும் இத்தனை கூடுதல் வாய்ப்புத் தருவதாயின் - இருப்போரில் யாருக்கேனும் பியூஸ் பிடுங்க வேண்டிவரும் என்பதையும் விளக்கினேன் !  பதிலில் முழுத்திருப்தியின்றி - க.க.போ. என்று நண்பர்கள் நடையைக் கட்டும் போது சங்கடமாகவே இருந்தது எனக்கு ! ஆனால் இதற்கு மேலும்  உங்கள் பர்ஸ்களைப் பதம் பார்க்க நமக்கு சம்மதமில்லை எனும் போது வேறென்ன சாத்தியமோ ?

***Yet another familiar line I got to hear yesterday : "உங்க பதிவுகளின் மௌன வாசகர்கள் சார் ! ஞாயிறு காலையில் கண்ணைத் திறப்பதே உங்க பதிவுகளில் தான் !!" என்ற வரிகளை ! And வழக்கம் போல ஹி..ஹி..ஹி...என்று அசடு வழிந்த கையோடு - "ஏதாச்சும் பின்னூட்டங்கள் போடலாமே சார் ?" என்று கேட்ட போது, பதிலுக்கு அவர்களின் அசடு வழியும் படலம் துவங்கின ! என்றைக்கேனும் ஓய்வுக்குள் புகுந்த பிற்பாட்டின் ஒரு  சாவகாச நாளில் - இந்தப் பதிவுகளின் பயணத்தை அசைபோட நேரம் கிட்டாது போகாது தான் ! விளையாட்டாய் துவங்கியதொரு விஷயமானது இத்தனை காலம் தாக்குப் பிடித்து, உங்கள் ஆர்வங்களையும் தக்க வைத்த மாயத்தை எண்ணி maybe அந்தப் பொழுதினில்,பொக்கை வாய் பிளக்கச் சந்தோஷம் கொள்வேன் ! இந்த நொடிக்கு - "சாமீ...தெய்வமே...வாராவாரம் சனிக்கிழமை மட்டுமாவது  சரஸ்வதி கடாட்சம் கிட்டும் வரம் வேண்டுமே !!" என்ற பிரார்த்தனை தான் !

***கேட்கப்பட்ட அடுத்த கேள்வி : "சென்னையில் ஏன் ஈரோடு பாணியிலான வாசக சந்திப்போ / புக் ரிலீசோ வைப்பதில்லை ?" என்பதே !! நிச்சயமாய் இந்த விஷயத்தில் நமது ஈரோட்டு விழா முன்னணியில் நிற்பதில் சந்தேகங்கள் லேது தான் ! Much as I would like for it to happen in Chennai too - இங்கு நடைமுறைச் சிக்கல்கள் நிரம்பவே உண்டென்பது obvious ! ஆனால் 'மனமிருந்தால் மார்க்கபந்து' எனும் முதுமொழியை மனதில் இருத்திக் கொண்டு 2021-ன் ஜனவரிக்கு ஏதேனும் திட்டமிட முயற்சிக்கலாமா guys ? ஜனவரியின் முதல் வாரயிறுதியில் புத்தக விழா துவங்கிடும் பட்சத்தில் அந்த ஞாயிறு சுகப்படுமா ஒரு புக் ரிலீஸ் + ஜாலியான சந்திப்புக்கு ? மெது மெதுவாய் திட்டமிடலாம் ; ஜெயமென்றால் சந்தோஷம் ; இல்லையெனில் no worries !!


***வண்டி வண்டியாய் புகைப்படங்கள் ; தொண்டை வறண்டு போக அரட்டைகள் என்று என் வண்டி ஜாலியாய் ஒடிக்கண்டிருந்த நேரத்தினில் ஜூனியரோ  ஓசையின்றி கம்பியூட்டர் பில்லிங்கில் நமது சிவகாசிப் பணிப்பெண்கள் செய்து வைத்திருந்த குளறுபடிகள் சகலத்தையும் சரி செய்து கொண்டிருப்பது நடந்து கொண்டிருந்தது ! போன வருஷம் வரைக்கும் பயன்பாட்டில் இருந்து வந்த software சொதப்பிக் கொண்டேயிருந்ததால், புதுசாய் ஏதோ software ஆர்டர் செய்து அதனை நம்மாட்களுக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்க - பின்னணியில் ஜூனியரின் பங்களிப்பு இல்லாங்காட்டி கதை கந்தலாகியிருக்குமென்பது புரிந்தது ! Moreso நேற்றைக்குப் பின்னியெடுத்த கூட்டத்திற்கு முன்போல கையால் பில் போட்டிருந்தால் டப்பா டான்ஸோ டான்ஸ் ஆடித் தான்   போயிருக்கும் ! இரவு 9 மணி நெருங்கிய வேளையில் நண்பர்களுக்கு விடை தந்து விட்டு - கிரெடிட் கார்டு பில்லிங் + ரொக்க விற்பனை என total போட்டுப் பார்த்த போது கை மெல்ல நடுங்கியது - simply becos நேற்றைய மொத்த விற்பனையானது இதுவரையிலும் நாம் பங்கேற்றுள்ள எந்தவொரு புத்தக விழாவிலும் ஒற்றை நாளில் பார்த்திருக்கா ஒரு விற்பனை ரெகார்ட் !!

அசதியில் zombies போல காட்சி தந்த நமது பணியாட்களை விடை தந்த கையோடு ரூமுக்குள் கிளம்பிட சாலைக்கு வந்த போது கூட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூத்த வாசகர் ஒருவர் பைக்குள் கிடந்த மாயாவியாரை நொடிக்கொரு தடவை வெளியே எடுத்துக் பார்த்துத், தடவிக் கொண்டே, வீட்டம்மாவின் முறைப்பையும் சமாளிக்கும் அழகு கண்ணில் பட்டது !! அந்த நொடியில் வெகு சமீபத்தில் நமது FB பக்கத்தில் நண்பர் ஒருவர் எழுதியிருந்த tagline தான் நினைவுக்கு வந்தது !!

ஐந்து முதல் ஈரைம்பது வரை !! காமிக்ஸ் - இது அனைவருக்கும் !!

அந்த "7 முதல் 77 வரை" tagline க்குள் நமது சீனியர் எடிட்டரோ ; மாயாவியை தரிசித்த நொடியில் உற்சாக யூத்தாகிடும் பல முது வாசகர்களோ அடைபட மாட்டார்களேனும் போது - மாற்றத்தை நமது tagline-ல் கொணர்வோமே ? ஒரு நூறு ஆண்டுகள் & more தழைக்கட்டுமே இந்தக் காமிக்ஸ் காதல் !! Feeling truly blessed & truly humbled !!

Bye all ! See you around !







P.S : எனக்கு அனுப்பப்பட்ட போட்டோக்கள் இவையே ! மேற்கொண்டிருப்பவைகளை lioncomics@yahoo.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்திடுங்களேன் ப்ளீஸ் ? 

241 comments:

  1. Replies
    1. Unknown Sir, as you've asked in previous post sharing the queries I asked to Editor and his replies here.
      Q1. Would you please print those old Fleetway comics or some other new comics in English (with ofcourse: Sale for Indian Continent only).
      Reply: There are many players in market already so it might not be possible.

      Q2: Would you please remaining Super reporter Johnny (Ric Hochet) story reprints separately as pre-booked subscription, yearly one or two books is not enough for fans like me.
      Reply: Super reporter Johnny stories are being printed (Johnny 2.0-new books) and reprinted (old stories) every year. We do not have time to put more effort on that one. Until unless we drop other stories, this kind of effort is not possible. If we wish to increase number of books published, the quality might go down, we cannot compromise on the quality of translation and etcetera (which will not be good).

      Delete
  2. காலை வணக்கம், ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு! சென்னைப்புத்தகத்திருவிழா சுவாரஸ்யங்களை முழுவதுமாக அறியக்காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. ஹைய்யா புதுப் பதிவு.....

    ReplyDelete
    Replies
    1. என்னவொரு சந்தோஷம் இரவிக்கு!? பலருக்கும் மகிழ்ச்சி தரும் மாமருந்தாக இருக்கிறது ஆசிரியரின் எழுத்துக்கள்.

      Delete
    2. நம்ம எல்லோருக்கும்தானே இராஜா.....

      Delete
    3. இரவி,,?

      கொஞ்ச நேரத்துல கவிதையோனு சந்தேகப்பட்டுட்டேன்..!

      Delete
  4. EV ur upload panni comment pottachaa

    ReplyDelete
  5. Replies
    1. பீனிக்ஸ் சார் ஹிஹிஹி

      Delete
    2. ராசா தம்பி குமாரை விட பெரிய படிப்பு எல்லாம் படித்து இருக்கார்:-)

      Delete
  6. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே.. 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  7. // மாயாவியாரின் வெளிவந்திரா மறுபதிப்புகள் மாத்திரம் இனி வரும் பிரதானப் புத்தக விழா ஸ்பெஷல்களாய் திடும் திடுமென கண்ணில் படத் துவங்கிடும் என்பதை அகில உலக கிராண்டேல் ரசிகர் மன்றத்தின் அறுபதாவது ; எழுபதாவது வட்டங்களின் சார்பாய் அறிவிக்கிறேன் !! //

    அட்டகாசமான முடிவு. வரவேற்கிறேன்.

    ReplyDelete
  8. ///முதிய தந்தையின் முகத்தில் தென்பட்ட பூரிப்பைப் பார்த்து அவரை என்னருகே நிறுத்தி ஒரு க்ளிக் செய்த மகளின் கண்களில் மிளிர்ந்த மகிழ்வுக்கும் ; நொடிப்பொழுதில் 40 அகவைகளைத் துறந்து விட்டு துள்ளிக் குதிக்கும் யூத்தாகிடும் ஆத்துக்காரர்களை ஒரு amused பார்வை பார்த்திட்டே நின்ற இல்லத்தரசிகளின் மனநிறைவுகளுக்கும் சத்தியமாய் எதுவும் ஈடாகிடாது///

    ஆத்மார்த்தமான வரிகள் சார்!!

    ReplyDelete
    Replies
    1. துள்ளித் திரிந்த காலம், லேசில் மறக்குமா என்ன?

      Delete
  9. // கொரில்லா சாம்ராஜ்யம்" நடப்பாண்டிலேயே இருக்கும்.//
    அடடே அருமை,அருமை.....

    ReplyDelete
  10. @Texkit

    கிர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  11. ####So மாயாவியாரின் வெளிவந்திரா மறுபதிப்புகள் மாத்திரம் ####

    +11111111111111111111111111111111111111111111111111

    ReplyDelete
  12. ///அந்த நாற்பது ரூபாய்த் தடத்தின் black & white க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் ஈட்டி வரும் அபிமானம் மெய்யாகவே பிரமிக்கச் செய்கிறது///

    சூப்பர் சார்!! 007னா.. கொக்கா!!

    ReplyDelete
  13. // மாயாவிக்கு அடுத்தபடியாக evergreen இடம்பிடித்து நிற்பது நமது 'தல' தான். //
    மகிழ்ச்சி, மகிழ்ச்சி......
    அதே நேரத்தில் தேங்கியிருக்கும் பல இதழ்கள் இந்த புத்தக விழாவில் தங்களது ஜாகையை மாற்றும் என்று நம்புவோமாக.....

    ReplyDelete
  14. Replies
    1. விஜயன் சார், 40 ரூபாய் புத்தகத்தில் உள்ள ஒரு சிறிய நெருடல் font size. அதன் பின்னால் உள்ள (சிக்கலை) காரணத்தை ஏற்கனவே சொல்லி விட்டீர்கள். முடிந்தால் இதனை சரி செய்ய ஏதாவது செய்யுங்கள், படிக்க கொஞ்சம் சிரமாகவே உள்ளது.

      Delete
    2. பரணிக்கு வயதாகி விட்டது என உறுதியாகிறது. கண்ணாடி போட்டு படிங்க பெரிஸ்.

      Delete
    3. ஆமாம் 24 முடிந்து 25 வயசு ஆகிறது. நீங்களும் நானும் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து காலேஜில் படிச்சோம் என்பதை கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கோங்க ராஜா :-)

      Delete
    4. ///பரணிக்கு வயதாகி விட்டது என உறுதியாகிறது. கண்ணாடி போட்டு படிங்க பெரிஸ்.///

      உஷ்...!

      இதையெல்லாம் தனிச்செய்தியில தெரிவிங்க சார்.

      நாலு பேரு வந்து போற இடமோல்லியோ..!😊😊😊😊

      Delete
    5. கோவிந்தா @ நாங்கள் அந்த காலேஜில் படித்து முடித்தபின் கூடுதலாக ஒரு வருடம் படித்த நீங்கள் இப்படி சொல்லறது எல்லாம் சரியில்லை. ஆமாம் :-)

      Delete
  15. படித்து விட்டு.....

    ReplyDelete
  16. சென்னை புத்தகக் திருவிழாவில் நமது ஸ்டாலில் வேலை பார்க்கும் நமது காமிக்ஸ் நண்பர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  17. சந்தோசமான இனிக்கும் சேதிகள் சார்....
    மாயாவி வண்ணத்லதான் வேணும்னு நிறுத்தினோம் இக்கதைக்காக சார்....வண்ண மெகா சைசுல வந்தா அள்ளுமே...

    ReplyDelete
  18. சென்னை புத்தகக் திருவிழா நிகழ்வுகள் அருமை. மற்ற நிகழ்வுகளை கேட்க படிக்க ஆர்வமுடன் உள்ளேன் சார்.

    ReplyDelete
  19. // எண்ணற்ற பகல்களும்-ராக்களும் பெண்டை கழற்றிய பணிகளின் நோவுகளையெல்லாம் அங்கே தென்பட்ட வெறித்தனமான வாசக ஆர்வங்கள் நொடிப்பொழுதில் மறக்கச் செய்த மாயாஜாலத்தை என்னென்பது ?!! //

    மனநிறைவு. Satisfaction sir.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான மன நிறைவு தான் சார். Pleased very much pleased

      Delete
  20. // நான் பார்த்த சமாச்சாரங்களையும் ; கண்முன்னே அரங்கேறிய பூரிப்பின் பிரதிபலிப்புகளையும் ; சிந்திய ஆதங்கங்களையும் ஒரு யுகமாயினும் உணர்ந்திடல் விமர்சிப்போருக்குச் சாத்தியமாகாதெனும் போது - good luck with the brickbats guys !! எங்களுக்கு உப்மாவே போதுமெனும் அணியினரின் புத்தக விழா ஆர்வங்களின் முன்னே இதர வைராக்கியங்கள் பின்செல்வது தவிர்க்க இயலாது போகிறது !//

    உண்மை சார். நான் புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  21. மறுபதிப்பு காணா மறுபதிப்பு கதைகள்...


    வாரே வாவ்....இத இத இத தானே எதிர்பார்த்தோம்...:-)

    ReplyDelete
  22. ஸ்பைடர் தேற எனதருமை செந்தூரானை வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஏன்? ஸ்பைடர் இப்ப ஆசுபத்திரில அட்மிட் ஆகியிருக்காரா?!!

      Delete
    2. அவரு ஸ்பைடர தர என்பதை ஸ்டீல் மொழியில் எழுதி இருக்கிறார் :-)

      விஜயன் சார், ஏழு கழுதை வயசான ஸ்டீல ஒழுங்காக தமிழில் பின்னூட்டம் இட சொல்லுங்கள்... இல்ல ஏதாவது முதியோர் ஸ்கூல்ல சேர்த்து விட வேண்டியதுதான் :-)

      Delete
    3. நண்பர்களே....லொக்கு...லொக்கு...ஸ்பைடர் விற்பனை தேர

      Delete
    4. இந்த தேர..தப்பு, அந்த தேற..சரி.
      -- தமிழாசான்.

      Delete
  23. Irumbukai mayaviye ippadina appo Vethala mayavi Indrajal size/color'il thirumbi publish panna varaverppu eppadi irukkum?

    ReplyDelete
  24. மற்றவர்களுக்கு வேணும்னா 'தல' பெரிய ஆளா இருக்கலாம், ஆனா எனக்கு அன்னிக்கு, இன்னிக்கு, என்னிக்குமே 'கை' தான் பெருசு.. அது நம்ம 'இரும்பு கை மாயாவி' மட்டுமே.

    ReplyDelete
  25. இம்முறை ஆசிரியரை சந்தித்த போது கேள்விகளே இல்லை ஒரே பாராட்டு தான். ஏற்கனவே அவ்வளவு திருப்திபடுத்திவிட்டார்.

    கிராபிக் நாவலுக்கு பாராட்டு
    புது ஜேம்ஸ் ஜானிக்கு பாராட்டு
    சந்தா 2020 க்கு பாராட்டு
    மாக்ஸி டெக்ஸ்சுக்கு பாராட்டு

    வேறு என்ன சொல்ல.

    மீண்டும் கணேஷ் அவர்களை சந்திக்க முடிந்தது.
    அடுத்து முதல் முறையாக மகேஷ் மற்றும் பிரசாந்த் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினோம்.

    Gopalakrishnan மகன் ரின்டின் வராத வருத்தத்தை பதிவு செய்துகொண்டிருந்தார்.

    இம்முறையும் எப்படியும் ஈரோடு புத்தக திருவிழா வர உறுதி பூண்டு விடைபெற்றேன்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் கிருஷ்ணா.

      ரின் டின் சர்ப்ரைஸாக வருவார் என நம்புவோம். எனது குழந்தைகளின் favorite.

      Delete
    2. ///இம்முறையும் எப்படியும் ஈரோடு புத்தக திருவிழா வர உறுதி பூண்டு விடைபெற்றேன்.///

      வாங்கோ வாங்கோ.. வெல்கம்! :)

      Delete
    3. வாருங்கள் கிருஷ் உங்களை ஈரோட்டில் சந்திக்க காத்து இருக்கிறேன்.

      Delete
    4. Yday met our beloved Editor with my son. As usual asked about Rin-Tin-can :-)

      2 Stall combination helped more people to come in and look at the books. That is a welcome change compared to previous years.

      Uploaded a small video of Editor in facebook group

      Appreciated Krishna for his YouTube videos 😀

      Delete
    5. வாங்கண்ணா.!வணக்கங்கண்ணா..!

      Delete
  26. விஜயன் சார்,
    "இரும்புக்கை மாயாவி " என்பவர் எங்களுக்கு அப்போதைய 2.0 வெர்ஷன்தானே.ii
    ரத்ன பாலா - அம்புலிமாமா - என்று படித்துக் கொண்டிருந்தவர்கள் - இரும்புக்கை மாயாவியை படித்தது மனதளவில் அடுத்த கட்டத்திற்கு வந்த உணர்வை தந்தவராயிற்றே.
    14 வயதில் காமிக்ஸ் அறிமுகமானபோது படித்த முதல் இதழ்" கொலைகார குள்ள நரி ". எத்தனை முறை தான் படித்து ரசித்த இதழ்.
    அந்த இதழ் பத்திரமாக என்னிடம் இருந்தாலும் - நீங்கள் மறு பதிப்பு செய்தால் மறுபடியும் வாங்கத் தான் போகிறேன்.
    எனவே, இ.கை மாயாவி காதல் என்றும் மாறாதது.
    (கூடவே, லாரன்ஸ் & டேவிட் - ம். _ முதல் முதல் படித்த _ திசைமாறிய கப்பல்கள்"..
    இப்ப எவ்வளவு பயங்கர வில்லன்களை சந்தித்தாலும் - அ. கொ.தீ.க.வை சந்திக்கும் போது ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் நினைவு உள்ளது. >
    மறுபதிப்பு தொடரும் என்ற அறிவிப்பிற்கு நன்றி சார் ii

    ReplyDelete
  27. Irumbukkai mayavi proves we (netizens) are not the only readers.

    ReplyDelete
  28. PS. Gloating laughter is inevitable (sorry advanced learners friends)

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. பதிவோ 600...பசியோ பலநூறு...பெர்ர்ர்ய பதிவு வந்தா பசியாறு

    ReplyDelete
  31. மாயாவி சந்தாவில் இல்லை என்பது திருப்தியான விஷயம்..

    புத்தக விழாக்களில் பழைய வாசகர்களை உற்சாகப்படுத்த என்றமட்டில் சந்தோஷமான விஷயம்...

    மாயாவியை விடுத்து பெரும்பாலானோர் இதர பதிப்புகளை ஏறெடுத்து பார்க்க விரும்புவதில்லை என்பது மெய்யாகவே கவலை தரும் விஷயம்..

    5G அலைவரிசை கைப்பேசி காலத்தில் PCO பெட்டிகள் பழைய நினைவுகளை அசை போட மாத்திரம் உதவும் என்பதில் ஐயமில்லை..

    It's a request not to get carried away by tides of emotion..

    ReplyDelete
    Replies
    1. // 5G அலைவரிசை கைப்பேசி காலத்தில் PCO பெட்டிகள் பழைய நினைவுகளை அசை போட மாத்திரம் உதவும் என்பதில் ஐயமில்லை.. // well said சார். Very well said

      Delete
    2. உண்மை செனாஅனா ஜி!!

      புத்தகத் திருவிழாவில் எடிட்டருக்குக் கிடைக்கும் இந்தமாதிரி எமோஷன்லாம் ஒரு ரெண்டு முனு நாளுக்குப் பிறகு சரியாகிடும்!!

      ஜாக்கிசான் படம் பார்த்துட்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்தா கொஞ்சநேரத்துக்கு யாரையாவது பறந்து பறந்து அடிக்கணும் போல இருக்குமே.. அதுமாதிரிதான்! :)

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ஆனா ....ஆனா.....அந்த சோழர் பொற்காலம்...கடந்தகாலம்னு பின்னோக்கி பார்ப்பதும் ஓர் இன்பம்தான்...பால்ய நண்பர்கள் பார்க்க ஏங்குவதும் கூட அப்படித்தானே....கடந்த கால நினைவுகள அசை போடுவதால் பத்து பைசா பிரயோஜனமில்லைதான்...ஆனா அநாதையாக ஏங்கும் மனம் இனிய நினைவுகளின் தூண்டலால் அடையும் சந்தோசத்துக்கு இணைதான் ஏது....அந்த pcoமுதிர் நண்பர்களின் உண்மையான சந்தோச அதிர்வ அந்த 5g மங்கை இரசித்தபடி நின்ற காட்சிக்கு மதிப்புதான் ஏது....சந்தோசமே பிரதானம்...அதற்க்கு மாயாவியும் ஸ்பைடருமே ஆதாரம்....
      பல நேரங்களில் மூளை சொல்ல மனசு கேக்காது...சில வேளைகளில் மனசு சொல்ல மூளை நம்பாதே....பல நிறங்களில் படைத்த இறைவனின் படைப்பு அப்படித்தானே நண்பர்களே

      Delete
    5. ஆசிரியர் நட்டமடையக் கூடாதெனும் தங்கள் மதிப்பும் புரியுது....ஒரே வழி ஆசிரியர் லிமிட்டெட் எடிசன் தரணும் விற்பனை புள்ளி விவரப்படி

      Delete
    6. இந்த தளத்தில் பலருக்கு மும்மூர்த்திகள் டெரராக காட்சியளிக்கும் நேரத்தில் தளத்தில் வராமல் இருக்கும் பல நண்பர்களுக்கு மாயாவி இன்னும் ஹீரோ தான்.

      அதே நேரம் ஆசிரியர் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த நினைத்து எடுத்த இந்த முடிவுக்கு நான் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன். இதற்கு நாம் அனைவரும் தோள் கொடுக்க வேண்டும்.

      இவர்கள் மற்றும் இவர்களின் வாரிசுகள் கொஞ்சம் நாட்கள் கழித்து நமது மற்ற காமிக்ஸ் களங்களை ரசிக்கும் வாசகர்களாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.

      Delete
  32. மாயாவியோ ஜேம்ஸ் பாண்டோ இவ்வருடம் அட்டவணை தவிர நம் அலுவலகத்திலிருந்து இன்னும் இரண்டு காமிக்ஸ் வெளிவருவது நம் அனைவருக்கும் கொண்டாட்டமே. மகிழ்ச்சியுடன் வரவேற்க்கிறேன். கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
  33. 2021 சென்னை புத்தக கண்காட்சியில் டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை ஏக் தம்மா கலரில் ஹார்ட் பவுண்டில் பிரீமியம் விலையில் லிமிடட் பிரிண்ட்டாக போடுங்க. முன்பதிவுகளுக்கு 100 நாட்கள் டைம் கொடுங்க. கண்டிப்பாக 1000 புத்தகங்கள் விற்பனை ஆகும். சும்மா ஜமாய்ச்சிடலாம் .கண்டிப்பாக போடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் டெக்ஸ் வாசகர்கள் சார்பில்.

    ReplyDelete
    Replies
    1. +1234567891011121314151171812021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100...

      Delete
  34. 007-ன் மறு பிரவேசம் ஹிட் அடித்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

    ReplyDelete
  35. பட்டாம் பூச்சி படலம்..
    ஏற்கனவே நிறைய முறை வாசித்த கதை என்றாலும் கதையின் வீச்சு என்னவென்று இப்போது தான் முழுமையாக புரிகிறது..!
    அட்டகாசமான மொழி பெயர்ப்பு கதையை விறு விறுப்பாக நகர்த்திச் செல்கிறது..!
    007-ஐ மறுபடியும் கொணர்ந்தமைக்கு நன்றிகள் எடிட்டர் சார்.
    எழுத்துருக்களை கொஞ்சம் கவனிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  36. இம்மாத மேக்&ஜாக் கூட்டணி அட்டகாசம் செய்திருக்கிறார்கள்..
    செம்ம...
    👌👌👌👌👌

    ReplyDelete
  37. இருளின் மைந்தர்கள்...
    சொல்லவும் வேண்டுமா என்ன?
    💐💐💐💐💐💐💐
    👌👌👌👌👌👌👌
    🌹🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  38. simply becos நேற்றைய மொத்த விற்பனையானது இதுவரையிலும் நாம் பங்கேற்றுள்ள எந்தவொரு புத்தக விழாவிலும் ஒற்றை நாளில் பார்த்திருக்கா ஒரு விற்பனை ரெகார்ட் !!

    ######


    இறுதிநாள் வரை இந்த விற்பனை களைகட்ட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. இறுதிநாள் வரை இந்த விற்பனை களைகட்ட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் + 9999999999999999999999999999999999999999999999999999999999999999

      Delete
    2. விற்பனை களைகட்டி கிட்டங்கி காலியாக திருச்செந்தூரானை வேண்டுகின்றேன்.

      Delete
  39. அட்டைப்படம் செம..அந்த இடத்ல ட்யூராங்கோக்கு ஈடு இந்த நபரா என எண்ணயில குதிரைக்கு மட்டுஞ்சுமையில்ல....ஆனா கத பட்டய கிளப்பினா சரவணாஸ்டோராரும் நாயககர்தாமே என எண்ணமுதிக்க....வரட்டுமே என வரவேற்கிறேன்...ஹார்டு பவுண்டு...குண்டு புக்கு என்பது இருநூறுக்குள் தனித்து தெரியலாம்...இங்கே நண்பர்கள் மாதமோர் டெக்சுக்கு கொடி பிடிக்கயில் நானும் தங்க முட்டையிடும் வாத்த வவுத்தறுத்து பாக்க வேணாமேன்னு எழுதியவன்தான்....படிக்காத ஒட்டு மொத்த டெக்ச கடந்த நாட்கள்ல படிக்கயில... எனக்கு இளம் டெக்சும் ஒரே கத்தயா தந்தா குண்டு புக்கும் ரெடி...வாசகர்கள் கேட்ட கலர் புக்கும் கிடைக்குமே...இந்த ஆண்டு துவக்க விற்பனை தங்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி...முருகன் அருளால ஸ்பைடருமே மாயாவியும் வெற்றியீட்டி காத்திருக்கும் கதைகளுக்கு வழி விட்டால் அட்டகாசம்தான்

    ReplyDelete
  40. ட்யுராங்கோ...
    ஆத்தாடி...
    எங்கிருந்தயா இந்தாள புடிச்சீங்க...

    ReplyDelete
  41. தலை நகரில் சிங்கத்திற்கு சிறப்பான விற்பனை கேட்டு பேருவகை கொண்டேன்...
    மனம் நிறைந்த போய் கிடக்கிறது..!!!
    ❤️💓💕💖💗💙💚💛💜🖤💝❤️💓💕💖💗💙💚💛💜🖤💝💗💖💕

    ReplyDelete
  42. சார் அதேதான் இது வர வந்த டெக்சட்டைலயே பெஸ்ட்

    ReplyDelete
  43. சார் அடுத்த மாதம் கலர் டெக்சா......சொல்லவேயில்ல

    ReplyDelete
  44. வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  45. // 2021-ன் ஜனவரிக்கு ஏதேனும் திட்டமிட முயற்சிக்கலாமா guys ? ஜனவரியின் முதல் வாரயிறுதியில் புத்தக விழா துவங்கிடும் பட்சத்தில் அந்த ஞாயிறு சுகப்படுமா ஒரு புக் ரிலீஸ் + ஜாலியான சந்திப்புக்கு ? //

    கண்டிப்பாக செய்யலாம். தவறாமல் கலந்து கொள்வேன்.

    ReplyDelete
  46. இவ்வருட புத்தகவிழாநிகழ்வுகள் அங்கு வர முடியவில்லையே என்ற ஏக்கத்தை அதிகப்படுத்தியது. புத்தகவிழாவிற்ப்பனை சந்தோசப்படுத்துகிறது. கொரில்லா சாம்ராஜ்யம் அறிவித்த ஆசிரியருக்கு நன்றிகள் கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  47. கொரில்லா சாம்ராஜ்யம், கொள்ளைக்கார பிசாசு இரண்டுமே வண்ணத்தில் பாக்கெட் சைஸூல போட்டு பாருங்கள் சார். சும்மா பட்டாசாக வெடிக்கும் (விற்பனையில்) அதே போல வைரஸ் - X லந்தால் காரிகனும் கலக்குவார்!

    ReplyDelete
  48. //
    simply becos நேற்றைய மொத்த விற்பனையானது இதுவரையிலும் நாம் பங்கேற்றுள்ள எந்தவொரு புத்தக விழாவிலும் ஒற்றை நாளில் பார்த்திருக்கா ஒரு விற்பனை ரெகார்ட் !!
    //

    அட்டகாசமான செய்தி. வருட ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷமான விஷயம், நமது காமிக்ஸூக்கு தேவையான வைட்டமின் "ப" இந்த வருடம் முழுவதும் இதுபோல் கிடைக்க லட்சுமி தேவியை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  49. காலையில் இங்கே எட்டிப்பார்த்துவிட்டு 'notify me' மூலமாக mail subscriptionல் மட்டும் கமெண்டுகளைப் படித்துக்கொண்டிருக்கும் நண்பர்களின் கவனத்திற்கு :

    எடிட்டர் மதியப்பொழுதில் தன் பதிவை அப்டேட் செய்திருக்கிறார் - சுவையான CBF நிகழ்வுகள் சகிதம்!

    ReplyDelete
    Replies
    1. அடடே!! சித்தே முன்னாடி photo updatesம் செஞ்சிருக்காரே எடிட்டர்!!!

      Delete
  50. ட்யூரங்கோ: அட்டவணை அருமை என்று சொல்வதைவிட செம என்று சொல்வதே சரியாக இருக்கும். வருடம்தோறும் காமிக்ஸ் அட்டைப்படத்தில் இவர்தான் முதல் இடம் என்னைப் பொறுத்தவரை. செம ஸ்டைலிஸ்டான அமைதியாக ரகளை செய்யும் மனுசன். இந்த மாத அட்டைப்படத்தில் பின்புறத்தில் உள்ள படம் மற்றும் வண்ணக்கலவை வேற லெவல்.

    அடுத்த வருடம் வரப்போகும் இவரின் இறுதி கதை தொகுப்புடன் இவரின் வண்ண ப்ளோ அப் A4 சைசில் கொடுத்தால் ஆபீஸில் ஒட்டி வைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பெருசா கேzhuல...
      யார்ட்ட கேக்குர

      Delete
    2. தம்பி க்ளா,
      என்ன தான் சொல்ல வர்றீங்க.

      Delete
    3. ///தம்பி க்ளா,
      என்ன தான் சொல்ல வர்றீங்க.///

      நீங்க இப்படி கேட்டதுக்கு அவர் வந்து விளக்கம் சொல்லுவார்... ஆனாலும் நீங்க அதே கேள்வியத்தான் திரும்பக் கேட்பீங்க!! :D

      Delete
    4. அதாவது பெரிய சைஸ் ப்ளோ அப் கேட்க சொல்றான்.


      ஆசிரியர் கிட்ட கேட்பதை இன்னும் பெரிசா கேளு என்கிறான்... ஆசிரியர் வாசகர்களுக்காக எது வேண்டும் என்றாலும் செய்வார் என்ற அர்த்தத்தில் இரண்டாவது கமெண்ட்!..

      Delete
    5. ஏலே மக்கா கொஞ்சம் எல்லோரும் படிச்சு புரிஞ்சுகிற மாதிரி கமெண்ட் போடுல... இல்ல எல்லோரும் அவங்க முடிய பிச்சுகிட்டு ஏர்வாடி பக்கம் அல்லது எர்வாமென்டின் (
      ervametin)
      தேடி அமேசான் காட்டுக்குள் ஒட போறாங்கல. :-)

      Delete
  51. ஏங்க, எல்லா பன் 'னையும் நீங்களே வச்சுக்கிட்டா எப்படி?

    எல்லாத்துக்கும் பிச்சி குடுங்க.😊😊😊

    ReplyDelete
  52. அன்பு ஆசிரியர்
    2021 இல் தாராளமாக சென்னையில் வாசகர் சந்திப்பு மற்றும் புதிய புத்தக வெளியிடு முயற்சிக்கலாம் .

    ReplyDelete

  53. //;simply becos நேற்றைய மொத்த விற்பனையானது இதுவரையிலும் நாம் பங்கேற்றுள்ள எந்தவொரு புத்தக விழாவிலும் ஒற்றை நாளில் பார்த்திருக்கா ஒரு விற்பனை ரெகார்ட் !!///

    ரொம்பவும் மகிழ்வான விசயம் சார்.

    ReplyDelete
  54. மறுபடியும் மாயாவியா ..?

    கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கோமோ?

    சரி..போய்தான் பாப்போமே...!

    ReplyDelete
  55. மஞ்ச சட்டை கொஞ்சம் மங்கிய சட்டையா தெரியுதே.!

    அட்டைப்படத்தைச் சொன்னேன்.!😊😊😊

    ReplyDelete
  56. பட்டாம்பூச்சி படலம்.

    ரொம்ப நாளைக்குப் பிறகு, ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் சேதாரமின்றி அப்டியே திரும்ப வந்ததில், துள்ளாத மனமும் துள்ளியது.

    என்னதான் புது வெர்சன், நவீன யுக கதைனு புது ஜேம்ஸ்பாண்டு மின்னினாலும், அலட்டலில்லாமல் பட்டையைக் கிளப்பும் அந்த B/W ஜேம்ஸ் பாண்டின் கெத்தும் ஸ்டைலும் தனி..!

    காமிக்ஸை பொருத்தமட்டில் பாண்ட் என்றவுடன், மனதில் நிழலாடும் முகமும் அதுவே.

    இதோ பட்டாம்பூச்சி படலம் கிடைத்ததும், பட்டாம்பூச்சி ப்ரியரான அட்டிலாவை விட சந்தோசத்தில் அகமகிழ்ந்தேன்.

    பெரிய சைஸ்..! எதிர்பாரா சர்ப்ரைஸ்.சிக்கனுடன் கூடிய எக் ரைஸ்.என்னே மணம்..!என்னே மணம்..!

    ரோஜர் மூரின் அட்டைப்படம், இன்னொரு காந்தம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. குச்சியே இவ்ளோ ருசியா இருந்தா, மரம் எவ்ளோ ருசியா இருக்கும். - நாகேஷ். உலகம் சுற்றும் வாலிபன். (ஏனோ ஞாபகம் வந்தது)

      Delete
    3. அட்டகாசமான விமர்சனம் GP. வரவர எங்கயோ போய் டீங்க சார்.

      Delete
  57. விற்பனை நன்றாக இருந்தது என்பது மகிழ்ச்சிகரமான செய்தி. புத்தக விழா முடியும் வரை இந்த விற்பனை தொடர்ந்து கிட்டங்கி காலியாக என்பதே ஆசை.

    இதுவரை மறுபதிப்பில்வெளிவராத மாயாவி இதழ்கள் மறுபதிப்பில்என்பது சரியான முடிவே. செபுவி யில் தொடங்கிய விற்பனை வருடம் முழுதும் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  58. சூப்பர் சூப்பர் சூப்பர்!!!

    பெருசுகளுக்கு மாயாவினா
    சிறுசுகளுக்கு 'ஸ்மர்ப்ஸ்'லயும்

    ஒன்னோ ரண்டோ வெளியிட்டீங்கனா சந்தோஷமா போகும்!!

    ReplyDelete
  59. மாயாவி மாமா விற்பனையில் கலக்குவது மகிழ்ச்சி சார்.!கொரில்லா சாம்ராஜ்யம் வெளிவர இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சி.!

    பழைய வாசகர்களின் மாயாவி காதலை நான் சிலமுறைகள் நேரிலேயே பார்த்துள்ளேன்..!

    அவ்வாறே கார்ட்டூன்களும் (விற்பனையில் உச்சம் தொடவில்லையெனினும்) ஸ்டாக் காலியானால் போதும்..
    அடுத்த வருடம் கூடுதல் ஸ்லாட்ஸ் மற்றும் விடுமுறையில் இருக்கும் சில தொடர்களை எதிர்பார்க்கலாம்.!

    ReplyDelete
  60. புத்தகத் திருவிழாக்களுக்கு மட்டும் என மாயாவி வெளியீடுகள் என்பது நல்ல முடிவு சார்.!

    ReplyDelete
  61. ஸ்மர்ப்ஸ், பென்னி போன்றவையும் இதேபோல் ஏதாவது ஒரு வகையில் வெளியாகும் காலம் ஒன்று மலர்ந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன்..!

    கூடவே ரின்டின்கேன், சுட்டி லக்கி போன்றவையும் வெளியாகும் நாளும் புலருமானால்...

    ReplyDelete
    Replies
    1. சந்தாவில் இல்லாமல் புத்தக விழா ஸ்பெசலாக போட்டுத் தாக்கலாம்.

      Delete
    2. புத்தக விழா களுக்கு ஸ்பெஷல் கார்ட்டூன்கள். நல்ல ஐடியா m

      Delete
    3. ரின்டின், பென்னி, மற்றும் சுட்டி லக்கி என்னுடைய பேவரைட்கள். கடைசியாக வந்த ஸ்மர்ப் கூட அருமையாக இருந்தது. இவையெல்லாம் சிறப்பிதழாக முன்பதிவுக்காவது மூன்று அல்லது நான்கு ஆல்பங்களாக வந்தால் வேண்டுவோர் வாங்கிக் கொள்ளலாம்.

      Delete
    4. //ஸ்மர்ப் கூட அருமையாக இருந்தது. இவையெல்லாம் சிறப்பிதழாக //முன்பதிவுக்காவது மூன்று அல்லது நான்கு ஆல்பங்களாக வந்தால் வேண்டுவோர் வாங்கிக் கொள்ளலாம்.//
      +1 மஹி

      Delete
  62. /// இதன் படைப்பாளி உருவாக்கியுள்ள புதுத் தொடர் ட்யுராங்கோவின் இடத்தை இட்டு நிரப்புமா ///

    ஏற்கானவே ஒரு லோன்சம் கௌபாய் நம்மிடையே காமெடியில் கோலோச்சிக்கொண்டு இருக்கிறார்..!


    இந்த லோன்சம் கௌபாய் குருதைமேலே குந்திகினுகிற ஸ்டைல்லயே ஒரு கெத்து தெரீது.. நல்லா வருவார்னு நம்பிக்கை இருக்கு சார்.!

    ReplyDelete
  63. ஜேம்ஸ்பாண்டின் வெற்றி..

    அவர் வருகையைப் பற்றி அறிவித்தபோது நாங்கள் ஆடிய ஆட்டத்திற்கு நியாயம் செய்திருக்கிறது.!

    நிறைய வரவேண்டும்.. வெற்றி பெறவேண்டும்..!

    ReplyDelete
  64. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும் என்ற ஆசிரியர், சட்டியை .சாரி, பெட்டியை திறக்க சம்மதித்துவிட்டார்.
    அண்டாகா கசம்..அபூக்கா ஹூகும்.. திறந்திடு சீசேம்..
    ஆசிரியரின் மனதை மாற்றிய சென்னை புக் ஃபேர்க்கு நன்றிகள் பல.
    புத்தக விற்பனை சென்ற ஆண்டை விட ஹிட்டடிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  65. அதென்னமோ தெரியல இந்த பதிவ திரும்ப திரும்ப படிக்க தோணுது. 600 வது பதிவு என்பதாலா

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு முழுவதும் நிரம்பி உள்ள பாஸிட்டிவ் எனர்ஜியாலே.

      Delete
    2. குண்டு... ஹாrடு பவுண்டு...டு.. மாயவி

      Delete
  66. காற்றில் மறைந்த கப்பல் - முகப்பேர் ஸ்பெஷல் சொல்லவே இவ்லையே சார்..

    ReplyDelete
  67. // 2021-ன் ஜனவரிக்கு ஏதேனும் திட்டமிட முயற்சிக்கலாமா guys ? ஜனவரியின் முதல் வாரயிறுதியில் புத்தக விழா துவங்கிடும் பட்சத்தில் அந்த ஞாயிறு சுகப்படுமா ஒரு புக் ரிலீஸ் + ஜாலியான சந்திப்புக்கு ? //
    எடிட்டர் சார்
    நிச்சயம் முயற்சிக்கலாம். நான் இப்போதிருந்தே ரெடி. மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் இந்த ஆண்டே வருவதால் 2021 ஜனவரிக்கு யார் அந்த மாயாவியை கொண்டுவரலாம். மாயாவி மறுபதிப்புகளை கடந்த ஆண்டுகளில் வந்த சைசில் வெளியிடுங்கள்.
    கொட்டாவி மன்னர்கள் ஸ்மர்ப் போன்ற போனியாகாத கார்ட்டூன் கதைகளை வெளியிடும் எண்ணமிருந்தால் சந்தாவில் சேர்க்காமல் புத்தக விழாக்களில் மட்டுமே வெளியிடுங்கள். தூக்கம் வராதவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ///கொட்டாவி மன்னர்கள் ஸ்மர்ப் போன்ற போனியாகாத கார்ட்டூன் கதைகளை வெளியிடும் எண்ணமிருந்தால் சந்தாவில் சேர்க்காமல் புத்தக விழாக்களில் மட்டுமே வெளியிடுங்கள். தூக்கம் வராதவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.///

      நம்மில் பலரும் 'ஒருமுறையாவது அப்படியொரு அழகான உலகத்தில் வாழ்ந்துவிட மாட்டோமா' என ஏங்கவைத்திடும் கனவு உலகமது!!

      சமகால நிகழ்வுகளையும் நளினமான முறையில் நையாண்டி செய்து, நடைமுறையில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு கூட்டுமுயற்சியால் எப்படி வெற்றி காண்பது என்பதை ஒரு பாடம் மாதிரி சொல்லியிருப்பார்கள்! இந்த வயதில் இந்தப் பாடமெல்லாம் நமக்குத் தேவைப்படாமல் போகலாம்தான் - ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்காவது ஸ்மர்ஃப் போன்ற இலகுரகப் பாடங்கள் அவசியம் வேண்டும்!!
      இன்றைய நமது ஸ்மர்ஃப்ஸ் வெளியீடுகளுக்காக என்றைக்காவது ஒருநாள் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் நாளொன்று வராமல் போகாது!

      Delete
    2. ///
      நம்மில் பலரும் 'ஒருமுறையாவது அப்படியொரு அழகான உலகத்தில் வாழ்ந்துவிட மாட்டோமா' என ஏங்கவைத்திடும் கனவு உலகமது!!///

      என்னுடைய தீராக்கனவு இது...!

      Delete
    3. Ev சூப்பர்...atr நாட் ஸ்ப்பர்

      Delete
    4. ///இன்றைய நமது ஸ்மர்ஃப்ஸ் வெளியீடுகளுக்காக என்றைக்காவது ஒருநாள் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் நாளொன்று வராமல் போகாது!///

      சூப்பர்! நிஜம்!!

      Delete
    5. உண்மை EV மிகச் சரி

      Delete
  68. 600வது பதிவு வரை உற்சாகமாக நடத்திக் காட்டிய ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

    ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக திருவிழாவில் நமது காமிக்ஸ்களின் பரிமாணம் அடுத்த கட்டங்களுக்கு செல்வது அற்புதமான வளர்ச்சியே... இதற்கும் வாழ்த்துகள்...

    ரசிகர்கள் மற்றும் புத்தகத் திருவிழாக்களின் தேவையறிந்து இரும்புக் கை மாயாவியாரை மீண்டும் கொண்டு வருவது சிறப்பு. அதிலும், இதுவரையில் மறுபதிப்பு செய்யாத கதைகளை மட்டுமே என்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம்... மிக்க நன்றிகள் சார்

    இதே பார்முலாவை மற்ற நாயகர்களுக்கும் பயன்படுத்தினால் (இதுவரையில் மறுபதிப்பு செய்யாத கதைகளை மட்டுமே) லயன்-முத்து தரத்தை பொறுத்த வரையில் கிட்டங்கியில் இருக்க வேண்டிய அவசியம் / நேரம் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து. ஒரே கதையை காமிக்ஸ் கிளாஸிக்ஸிலும், பிறகு மேம்பட்ட தரத்திலும் அதுவும் 5-6 ஆண்டுகள் இடைவெளிக்குள்ளாகவே வெளியிட்டதால் வாசகர்களுக்கு திகட்டியிருக்கலாம்...எனினும் இரண்டையும் வாங்கியவர்களில் நானும் ஒருவன்.


    மற்றபடி லயன், முத்துவில் வரக்கூடிய ஒவ்வொரு கதையுமே மறுபதிப்பு செய்ய ஏற்றவைகளே... எனவே மற்ற நாயகர்களையும், மறுபதிப்பு வளையத்திற்குள் மெதுவாக கொண்டு வருவது பற்றி யோசித்தால், கைகுலுக்க நானும் ரெடி சார்...

    ஒரு வாசகராக மேற்கண்ட கருத்தை சொல்வதற்கும், மறுமுனையில் அதை நடைமுறைப்படுத்துவதிலும் நிச்சயம் சிக்கல்கள் இருக்கும். ஒரு வாசகராக என்னுடைய கருத்தை சொல்லி விட்டேன். இதை நடைமுறைப்படுத்துவது இதர காரணிகளைப் பொறுத்தது...

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் இப்போது அழகாக உங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். மிக அழகாக எழுதுகிறீர்கள்.

      Delete
    2. ///நண்பரே நீங்கள் இப்போது அழகாக உங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். மிக அழகாக எழுதுகிறீர்கள்.///

      உண்ம!

      Delete
  69. //கொட்டாவி மன்னர்கள் ஸ்மர்ப் போன்ற போனியாகாத கார்ட்டூன் கதைகளை வெளியிடும் எண்ணமிருந்தால் சந்தாவில் சேர்க்காமல் புத்தக விழாக்களில் மட்டுமே வெளியிடுங்கள். தூக்கம் வராதவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.//
    👌👌👌 சூப்பர் சார்

    ReplyDelete
  70. Dear Edi,

    Couldn't make it to the Book Fair, this year, but getting the loads of love experience via our friends shares. Happy to hear that the sales have been the highest ever. Good way to ring-in 2020.

    Double Like to plan the next Chennai Book Fair with a Friends-Meet.

    ReplyDelete
    Replies
    1. மீ டூ. உங்களை நேரில் சந்திக்க ஆவல் சார்.

      Delete
    2. பெங்களூர் பக்கம் வந்தால் கூட அவர பார்கலாம் :-)

      Delete
  71. கொட்டாஒஇவிடும் கதைகள் என்பது அவரவர் பார்வையில் மாறுபடலாம். மாயாவி கதைகள்பற்றியே கூட ஒரு தரப்பாருக்கு அப்படி எண்ணமிருக்கலாம். மற்றவர் ரசனையை கேலி பண்ணாத மனநிலையே பாஸிடிவ் எனர்ஜியை தரும்!

    ReplyDelete
    Replies
    1. அழகாக சொன்னீர்கள் பொடியன் சார். // மற்றவர் ரசனையை கேலி பண்ணாத மனநிலையே பாஸிடிவ் எனர்ஜியை தரும்! //

      Delete
    2. // மற்றவர் ரசனையை கேலி பண்ணாத மனநிலையே பாஸிடிவ் எனர்ஜியை தரும்! //

      Excellent
      +11111

      Delete
    3. ///// மற்றவர் ரசனையை கேலி பண்ணாத மனநிலையே பாஸிடிவ் எனர்ஜியை தரும்! ///

      உண்ம!!

      Delete
    4. சின்ன சின்ன விசயங்களை (பிடித்த நடிகர், பிடித்த காமிக்ஸ்) லைட்டாக எடுத்துக்கொண்டால் பிரச்சினையே கிடையாது.!

      ரொம்பவும் ஃபார்மலாக இருந்தால் உலகமே போரடித்துவிடும்..

      அக்காலத்திலேயே மாமன் மச்சான் கேலின்னு கிராமங்களில் சொல்வார்கள்.. அதுபோல சின்ன சின்ன சங்கதிகள் உற்சாகத்தையே தரும்..!

      மடுவை மலைபோல பாவிப்பது மனநிலைக்கு உகந்ததல்ல..!

      (இது என்னுடைய கருத்து மட்டுமே)

      Delete
    5. பொடியர்கள்... பொடியன் ... கிட் k கருத்துக்கு....

      Delete
  72. 600 வது பதிவு. அட்டகாசமான பதிவு. பாஸிட்டிவ் எனர்ஜி மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட பதிவு. நமது உழைப்புக்கு பலனை நேரில் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நீங்கள் இது போல புத்தக விழாக்களில் கலந்து கொள்ளும் போது நண்பர்களின் உற்சாகம் உங்களையும் தொற்றிகொள்கிறது அது நீங்கள் எழுதும் போது மிக அழகாக வெளிப்படுகிறது.

    புத்தக விழா களில் ஹார்டு பவுண்ட் இதழ்கள் அட்டகாசமாக விற்பனை ஆவதாக நீங்களே சொல்கிறீர்கள் சார் இருந்தும் ஹார்டு பவுண்ட் இதழ்களை வெளியிட தயக்கம் ஏனோ?

    இந்த வருடம் சென்னையில் தொடங்கிய விற்பனை வருடம் முழுவதும் தொடரும் என்று நம்புகிறேன்.

    நமது ஸ்டாலில் பணி புரியும் இரண்டு நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    இன்னும் பல விசயங்கள் எழுத வேண்டி இருக்கிறது அவை பின்பு.

    மீண்டும் ஒரு முறை உங்களுக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. // புத்தக விழா களில் ஹார்டு பவுண்ட் இதழ்கள் அட்டகாசமாக விற்பனை ஆவதாக நீங்களே சொல்கிறீர்கள் சார் இருந்தும் ஹார்டு பவுண்ட் இதழ்களை வெளியிட தயக்கம் ஏனோ? //

      Budget is restricting

      Delete
    2. /// நீங்கள் இது போல புத்தக விழாக்களில் கலந்து கொள்ளும் போது நண்பர்களின் உற்சாகம் உங்களையும் தொற்றிகொள்கிறது அது நீங்கள் எழுதும் போது மிக அழகாக வெளிப்படுகிறது.///

      உண்ம!

      Delete
  73. உங்களின் இந்த பதிவை படிக்கும் போது மனதில் ஒரு சந்தோசம் ஏற்பட்டது அது ஏனென்று தெரியவில்லை நன்றி

    ReplyDelete
  74. தெறிக்கவிடும் விற்பனைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  75. ///கொட்டாவி மன்னர்கள் ஸ்மர்ப் போன்ற போனியாகாத கார்ட்டூன் கதைகளை வெளியிடும் எண்ணமிருந்தால் சந்தாவில் சேர்க்காமல் புத்தக விழாக்களில் மட்டுமே வெளியிடுங்கள். தூக்கம் வராதவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.///


    ஆஹா... உங்க வாக்கு பலிக்கட்டும்.
    சந்தோசமா வாங்கிக்கிறோம்...!! :-)

    ReplyDelete
  76. // கொட்டாவி மன்னர்கள் ஸ்மர்ப் போன்ற போனியாகாத கார்ட்டூன் கதைகளை வெளியிடும் எண்ணமிருந்தால் சந்தாவில் சேர்க்காமல் புத்தக விழாக்களில் மட்டுமே வெளியிடுங்கள். தூக்கம் வராதவர்கள் வாங்கிக் கொள்வார்கள். //

    ஆஹா... உங்க வாக்கு பலிக்கட்டும்.
    சந்தோசமா வாங்கிக்கிறோம்...!! :-)

    +11111

    ReplyDelete
  77. //ஜாக்கி ஜட்டிகளையும் //
    Chemistry ல BRAனு படிச்சிருக்கேன்.
    Blue to Red Acid ஆம்

    ReplyDelete
  78. மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் வருவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.நன்றிகள். இரண்டு கதைகளை ஒன்று ஆக வெளியிடலாமே.

    ReplyDelete
  79. ///கொட்டாவி மன்னர்கள் ஸ்மர்ப் போன்ற போனியாகாத கார்ட்டூன் கதைகளை வெளியிடும் எண்ணமிருந்தால் சந்தாவில் சேர்க்காமல் புத்தக விழாக்களில் மட்டுமே வெளியிடுங்கள். தூக்கம் வராதவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.///


    ஆஹா... உங்க வாக்கு பலிக்கட்டும்.
    சந்தோசமா வாங்கிக்கிறோம்...!! :-)

    ReplyDelete
  80. ஹார்டு பவுண்ட் கதைகளுக்கு புத்தக விழாக்களில் வரவேற்பு உள்ளது எனும்போது, வரவிருக்கும் கோடை மலர் தோர்கல் 5 பாக கதையை ஹார்டு பவுண்டு அட்டையோடு வெளியிடலாமே?

    ReplyDelete
  81. கலெக்ஷன் ஸ்டோர் பண்றதுக்கும் அது உகந்த பைண்டிங் சார். பிளீஸ், ரீ கன்சிடர் எடிட்டர் சார்.

    ReplyDelete
  82. எங்க திருப்திக்கு ஹார்டு பவுண்ட். உங்க திருப்திக்கு ஸ்லிப் கேஸ்.என்று போட்டு கொடுத்தால் வேண்டாம் என்ற சொல்லப் போகிறோம்.

    ReplyDelete
  83. விஜயன் சார்,
    என் வாழ்வில் இரண்டாம் தடவையாக ஆண்டு சந்தாவின் முதல் பகுதியை புத்தக திருவிழாவில் செழுத்தியுள்ளேன். பணம் வரவில் வந்ததும் தகவல் தாருங்கள். கொரியர் எப்படி பெற போகிறேன் என தெரியவில்லை.

    ReplyDelete
  84. ₹1000 வொர்த்தான ஸ்பெஷல் புத்தகத்தை 2021 சென்னை புத்தக விழாவில் போட்டு தாக்குங்க எடி ஜீ. பக்கத்துல ஏதேனும் ஓட்டல்லா சின்னதா பார்ட்டி வெச்சி கொண்டடிடுவோம்.

    ReplyDelete
  85. அன்புள்ள ஆசிரியருக்கு
    தாங்கள் வெளியிடப்போகும்
    கொரில்லா சாம்ராஜ்ஜியம்
    தற்போது வெளிவரும் டெக்ஸ் கலர்
    புத்தகம் சிறிய சைசில் கலரில்
    வெளிட்டால் அதன் வரவேற்பு மிகவும்
    அதிகமாக இருக்கும். மேலும் தொடர்ந்து
    கொள்ளையர் பிசாசு
    யார் இந்த மாயாவி
    போன்ற கதைகளையும் வெளியிட்டால்
    சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete

  86. மாயாவிக்கு ஆதரவு பெருகி வருகிறது..

    ஒருவேளை அவர் தமிழ்நாட்டு உளவுப்படையில் சேர்க்கப்பட்டால் அவருக்குள் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதான ஜாலி கற்பனை...

    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

    தமிழ்நாடு உளவுப்படை gadgets ரிஸர்ச் விங்..

    பொறியாளர்: ( மாயாவியிடம்)

    தமிழ்நாட்டில் டெங்கு பயம் இருக்குன்னு உங்கள் விரல்ல மயக்கப்புகை வெளிப்படுத்தறதுக்கு பதிலா குட்நைட் கொசுவிரட்டி புகை வெளிப்படறமாதிரி செட்டிங்ஸ்ஸை மாத்த சொன்னது கூட பரவாயில்லை...

    இன்னும் ஒரு விரல்ல இருக்கற அவசரத்துக்கு பேசறதுக்கு உபயோகப் படக்கூடிய ரேடியோ ட்ரான்ஸ்மிட்டருக்கு பதிலா சூரியன் எஃப் எம் ஆண்டன்னா வைக்க சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லைங்க..

    /////////////////////////// //////////////////////////


    ReplyDelete
    Replies

    1. தர்பார் படம் ஓடும் தமிழக சிறுநகர தியேட்டர் டிக்கட் கவுண்டரில்

      டிக்கெட் விற்பவர்: ( இரும்பு கையிடம்)

      வந்த இடத்தில் வேலை முடிஞ்சு போச்சுங்கறதுக்காக எங்க தியேட்டர் வந்ததுக்காக சந்தோஷம்...

      ஆனா ஐம்பது பேருக்கு பின்னால க்யூவுல நின்னுகிட்டு ரிமோட் மோடில இரும்புக்கையை மட்டும் அனுப்பி டிக்கெட் கேக்கறது சரியில்லைங்க!!

      ])))))))))))))))))))))))))))))((((((((((((((((()(((((((((

      Delete

    2. தமிழக மின்துறை பணியாளர்:
      ( மாயாவி வீட்டில்)

      பொது நன்மைக்குன்னா பரவாயில்லீங்க...

      உங்க ஏரியாவுல கரண்ட் இல்லை..உங்க வீட்டு ஜெனரேட்டர் ஓடலை....

      அதுக்காக ராஜா ராணி சீரியல் பாக்கறதுக்கோசரம் உங்க உடம்புல இருக்கற கரண்ட்ட டிவிக்கும் ,சாட்டலைட் டிஷ்க்கும் கொடுக்கறது சரியில்லைங்க!!

      ]))))))))))))))))))))((((((((((((((((()))))))))((((((())))))

      Delete

    3. (தமிழக அமைச்சரின் முதல் சம்சாரத்திடம்) மாயாவி:

      சாரோட இரண்டாவது சம்சாரம் உங்கள் விட நல்லா வஞ்சிர மீன் குழம்பு வக்கிறாங்கறதுக்காக அந்த ரெஸிபியை தெரிஞ்சுக்கறதுக்காக எல்லாம் மாயமா மறைஞ்சு அவங்க கிச்சன்ல போய் தெரிஞ்சுகிட்டு வரச் சொல்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க,!!!


      √√√√√√√√√√√√√√√√√√√√√√√√^√√√√√√^^√

      Delete

  87. ஸ்மர்பும் அவ்வையும்..

    நபர் 1: ஹா..ஹா..ஹா..ஸ்மர்பா?? கட்டைவிரல் சோட்டு ஆளுங்களுக்கு கட்அவுட்டா??

    நபர் 2 : உருவத்தை பாத்து எப்பவும் எடை போடப்படாது.

    தாழம்பூ மடல் பெரிது...ஆனால் வாசனை சிறிது ..

    மகிழம்பூ அளவில் சிறிது ஆனால் மணம் பல மடங்கு பெரிது...

    நபர் 1: பேச்சு நல்லாத்தான் இருக்கு..மத்த ஹீரோக்கள் எல்லாம் கடல் மாதிரி...

    நபர் 2 : குழந்தைகள் டெக்ஸை ரசிக்க இயலுமா??

    கடல் நீர் குடிக்க உதவாது...

    கடலின் கரையில் உள்ள ஊற்று நீர் தாகம் தணிக்கும்..

    ஸ்மர்ப் குழந்தைகளுக்கான ஊற்றுநீர்..


    நபர் 1: சொல்றது சரிதான் !! ஆனா இதெல்லாம் சுயமா சொல்ற அளவுக்கு உனக்கு அறிவு கிடையாதே??

    நபர் 2 : மெய்தான்!!!

    இதை சொன்னவர் இவர்தான்!!!!



    மூதுரை - பாடல் 12
    ஆசிரியர்: ஔவையார்

    மடல்பெரிது தாழை மகிழ்இனிது கந்தம்
    உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
    மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
    உண்ணீரும் ஆகி விடும்

    பொருள்: தாழம்பூவின் இதழைவிட மகிழம்பூவின் இதழ் சிறியதுதான். ஆனால், அதன் மணம் தாழம்பூவை விட சிறந்தது.
    அதுபோல உடலால் சிறியவர் என எவரையும் கருதவேண்டாம்.
    கடல் எத்தனை பெரிது ஆனால் கடல்நீரை அருந்த முடியுமா? முடியாது. கரை ஊற்றில் ஊரும் நீர்தான் குடிப்பதற்கு ஏற்றதல்லவா?

    ReplyDelete
    Replies
    1. அருமையான பின்னூட்டம் செல்வம் அபிராமி.

      Delete
    2. அருமை செ.அ. சார்.

      ஸ்மர்ப்ஸ்க்கு +100

      Delete
  88. 600ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள் ஆசானே!!!!!

    ReplyDelete
  89. மீண்டும் மாயாவிகாருவா...?
    வருக ....
    வெல்க....!!!!

    ReplyDelete
  90. அதே தான் மறுபதிப்பு வராத ஸ்பைடர் விற்பனை பிய்ககும் சார்.....

    நம்புங்க ஆசான் நம்புங்க.....

    ReplyDelete