நண்பர்களே,
வணக்கம். யுகங்களுக்கு முன்பானதொரு நிகழ்வு போல் உள்ளது - புக்ஸ் வெளியான தினத்தில் ஒரு பதிவையும் போடும் போது. முன்பெல்லாம் பக்கத்து வீட்டில் மாடு கன்று போட்டிருந்தால் அதற்கு ஒரு பதிவு, ஆபீஸ் போகும் வழியில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தால் அதற்கு இன்னொரு பதிவு என்றெல்லாம் கூத்தடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் பிஸியான பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பழக்கம் மலையேறி இருந்தது. And இரு வாரங்களாய், ஒழுங்குப் பிள்ளையாய் பதிவு போட ஆரம்பித்த பிற்பாடு, இந்தப் பழக்கத்திற்குமே ஒரு புனர்ஜென்மம் தந்தால் தப்பில்லை என்று பட்டது. And அதற்கு கூடுதலாய் உந்துசக்தி தந்தது ஒரு ஒடிசலான உருவமே. In fact என் பார்வையில் இந்த மினி பதிவின் நாயகனே அவர்தான்.
ஒவ்வொரு மாதமும் அட்டவணையில் முன்கூட்டியே அறிவித்த இதழ்களை slot in செய்துவிட்டு அவற்றுக்குள் தத்தகா புத்தகா என்று உருண்டு புரண்டு எப்படியேனும் முதல் தேதிக்கு தயார் செய்வது என்பது இப்போதெல்லாம் நம் ஆட்களுக்கு தூக்கத்திலும் சாத்தியம் என்ற ரேஞ்சுக்கு நகர்ந்துள்ளது. தாமதம் என்று எழும் பட்சத்தில் முக்காலேமூன்று வீசம் அது இந்த முழியாங் கண்ணனின் சோம்பல் காரணமாய் இருந்தால்தான். And ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல ஆண்டின் கிளைமேக்ஸ் பகுதியில் எப்படியோ ஒரு வண்டி இதழ்கள் குழுமி விடுவதும் இப்போதெல்லாம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகின்றது. And அப்படிப்பட்ட பிஸியான மாதங்களில், பணிகளை முடித்த கையோடு நெட்டி முறிப்பது என்பது மெய்யாலுமே ஒரு அட்டகாச அனுபவம்.
இதோ என் முன்னே செப்டம்பரின் ஐந்து இதழ்களும் கலர்கலராய், சைஸ் சைஸாய், மினுமினுத்துக் கொண்டிருக்கின்றன. இளம் டெக்ஸ் ஒருவரைத் தாண்டி பாக்கி நான்கு இதழ்களுமே கலர் என்பதால் - மேஜை மீது பரப்பிப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் 'ஆ'வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். As cover pages go - இம்முறை யுத்தமே : டெக்ஸுக்கும், ஸ்டெர்னுக்கும் மத்தியில்தான் என்பேன். "எமனுடன் ஒரு யுத்தம்" அட்டைப்படத்தில் அந்த கெத்து நமக்கு பரிச்சயப்பட்ட ஒன்று என்றால், "விதி எழுதிய விசாரணை"யில் சோகம் படர்ந்த அந்த முகத்தோடு ஜெயில் செல்லுக்குள் ஸ்டெர்ன் அமர்ந்திருப்பது வானவில்லின் மறுமுனை. மஞ்சள் சட்டைக்காரரிடம் அந்த கம்பீரத்துடன் ஒரு வசீகரம் தென்படுகிறது எனில், இந்த நாகரீக வெட்டியானிடமும் ஏதோ ஒரு இனம் சொல்ல முடியா ஈர்ப்பு இருப்பதை என்னளவிற்காவது மறுக்க இயலாது. So இம்மாத அட்டைப்படப் போட்டியில் எனது ஓட்டு ஸ்டெர்னுக்கே. And ஒரு பேமானி எடிட்டராக அல்லாது, காமிக்ஸ் ஆர்வலனாக மாத்திரமே இருந்திருக்கும் பட்சத்தில் இம்மாதம் முதலில் வாசிக்க நான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடியதுமே "விதி எழுதிய விசாரணை"யாகத் தான் இருந்திருக்கும். இன்னமும் யோசிக்கின்றேன் - இந்த மனுஷனை முதல்வாட்டி பார்த்த போதே தமிழுக்குக் கொண்டு வரும் உந்துதல் எழுந்தது ஏன் என்று. பெருசாய் ஆக்ஷன் கிடையாது தான். அண்டர்டேக்கரைப் போல இவர் ஒரு அதிரடிக்காரரும் அல்ல தான். நமக்கு நிரம்பவே பழக்கப்பட்ட வன்மேற்குப் பின்னணி - ஆனால் முற்றிலும் வேறொரு பாணியில் நம்மோடு உரையாடுகின்றது !! And டமால் டுமீல் நங் கும் என்றெல்லாம் அல்லாது மெல்லிய உணர்வுகளோடு இந்த மெலிந்த தேகக்காரரை படைப்பாளிகள் பயணிக்கச் செய்திருப்பது முதல் புரட்டலிலேயே தெரிந்தது தான்.இருந்தாலுமே எனக்கு இவர் மீது ஒரு soft corner எழாது போகவில்லை. நம்பினால் நம்புங்கள் - முன்னொரு காலத்தில்...ரொம்ப ரொம்ப முன்னொரு காலத்தில்.... நம்ம மண்டை கூட ஸ்டெர்னின் இஸ்டைலில் தொங்கும் கேசத்துடன் காட்சி தந்தது தான் அவர் பக்கமாய் அணி சேர உதவிய ஒரு காரணமோ என்னவோ??!!
இன்னும் நிறைய பேருக்கு இதழ்களே கையில் கிடைத்திருக்காது என்பதாலும் இன்னும் பலர் வாங்கி இருக்கவே மாட்டார்கள் என்பதாலும், இங்கு ஸ்பாய்லராக நான் பெரிதாக எதையும் பேசி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன். மாறாக இவற்றுள் என்னை என்ன ஈர்த்தது என்பதை சொன்னால் maybe மதில் மேல் பூனையாய் நிற்கக்கூடிய நண்பர்களுக்கு தீர்மானம் செய்வது சுலபமாகி விடக்கூடுமோ என்னவோ. Without doubt - இந்த ஆல்பத்தின் பிரதம நாயகர் : சித்திரப் பணியையும், கலரிங் பணியையும், ஒருசேரச் செய்திருக்கும் ஜூலியன் மாஃப்ரே தான். அந்த முதல் பக்கத்திலேயே நியூ ஆர்லியன்ஸ் நகரின் ஒரு ஏரியல் ஷாட்.... அதுவும் ஒரு மழை பெய்யும் தினத்தில். அடுத்த பிரேமில் கல்லறைத் தோட்டத்தில் வெட்டியானும், சக பணியாளரும் பிஸியாக இருக்கும் காட்சியோடு துவங்கும் அந்த கதையில் நியூ ஆர்லியன்ஸ் நகரும் சரி, அதன் மாறுபட்ட கட்டிடங்களும் சரி, கதை சொல்லலில் ஒரு மௌனப் பங்கேற்றிருப்பதாக எனக்குப் படுகின்றது. ஒவ்வொரு லாங் ஷாட் பக்கத்திலும் பின்னணியில் தெரியும் கட்டிடங்களை மறக்காமல் பாருங்களேன் folks - ஒரே ஸ்டைலில் இரண்டாவது கட்டிடம் இருப்பதாகத் தெரியவே செய்யாது. And கதையைப் பொறுத்தவரை, எப்போதும் போலவே மெலிதான மனித உணர்வுகளே இங்கு பிரதானமாக்கப்பட்டுள்ளன. பிழைப்பு நாடி புது மண்ணில் வேர்பிடிக்க எத்தனிக்கும் மரங்கள் என்ன மாதிரியான இன்னல்களை சந்திக்கின்றன என்பதை பக்கம் 73-ல் கதை முடியும் பிரேமில் ஓவியர் மௌனமாய் சொல்லி இருப்பது ஒருநூறு வீரியமான வரிகளை விட வலியவை !!
And இங்கே நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு விஷயமும் உண்டு. டின்டின் கதைகளுக்கு போடப்படும் சித்திர பாணிக்கு லைன் கிளேர் என்று பெயருண்டு என ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதாவது பெரிதாய் பேக்ரவுண்ட், ஏகமாய் முகபாவங்களில் டீடைல்ஸ் என்றெல்லாம் இல்லாது, சிம்பிளாக இப்படி வரைந்தால் மூக்கு, அப்படி வரைந்தால் வாய், அப்படி வரைந்தால் கண்கள், இப்படி விரிந்தால் கோபம், இப்படி சுருங்கினால் கடுப்பு என்று சகலத்தையும் மிகச் சுலபமான நேர்கோடுகளுக்குள் அடக்கும் அந்த பாணியை ஜாம்பவான் ஹெர்ஜ் தனது அடையாளமாக்கி இருந்தார். அதே ரேஞ்சுக்கு இல்லாவிடினுமே இங்கும் ஓவியர் முகபாவங்களை இயன்ற மட்டிற்கு பெரிய மெனக்கெடல்கள் இன்றி அதே சமயம் அசாத்தியமாய் வேறுபடுத்திக் காட்ட கதை நெடுக உழைத்திருப்பது கண்கூடு. ஒற்றைப் பக்கத்தில் நம்மை ஒட்டுமொத்தமாய் மிரளச் செய்வதெல்லாம் இந்த ஓவிய பாணிக்குக் கிடைத்திருக்கும் ஒரு அங்கீகாரம் என்றே சொல்வேன். புரட்டுவோர், படிப்போர் யாரையும் பக்கம் 70 ஒரு புரட்டு புரட்டாமல் விடாது என்பது எனது திட நம்பிக்கை. "Sorry bro, எனக்கு பொழுதுபோக்கே பிரதானம், 'நொய் நொய்' என்று நகரும் கதைகளெல்லாம் நமக்கு சரிப்படாது" எனும் அணியாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் that's absolutely fine too folks. ஸ்டெர்ன் பக்கமாய் வராது ஒரு U டர்ன் அடித்து விடுங்கள். இது மெதுவாக நகரும் மென்மையான உணர்வுகளின் பிரவாகம் மட்டுமே. எனக்கு பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் ஹாப்பி அண்ணாச்சி. இல்லாது போனாலும் no worries.
இம்மாதத்தின் எனது இரண்டாவது வாசிப்பாக இருக்கக்கூடியது நமது பாயாசக்கார பாசக்காரர் அடிக்கடி குறிப்பிடும் ஓடிக்கொண்டிருக்கும் இளமதிகாரியே. ஆத்திச்சூடி எப்போதுமே தலைப்புகளுக்கு செட் ஆகும் பட்சத்தில், ஒரு தெறிக்கச் செய்யும் vibe தரும் என்பது எனது நெடுங்கால நம்பிக்கை. And அது இம்மாதமும் மெய்யாகியுள்ளது. இந்தப் பெயரானது இளம் டெக்ஸின் தொடரின் எந்த ஒரு ஆல்பத்துக்குமே பொருந்தக்கூடிய generic வகை என்பதை மறுக்கவே மாட்டேன். So, ஓராண்டுக்கு முன்பாகவே கதைகளை, பெயர்களை இறுதி செய்யும் வேளைகளில் இது போலான தலைப்புகள் அவ்வப்போது எனக்குக் கை கொடுப்பதுண்டு. And பின்னாட்களில் அந்தக் கதைகள் ரெடியாகி, அவற்றுள் பணியாற்றும் சமயம், பெயர்கள் பொருந்திப் போவதைக் கவனிக்கும் போது, "ச்சே ... பின்னிட்டடா மாப்ள" என்று நமக்கு நாமே சால்வை போர்த்திக்கொள்ளத் தோன்றும். And இந்த மூன்று அத்தியாய சாகசத்தில் எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது - முன்கதை, பின்கதை, சைடு கதை என்றெல்லாம் கொக்கிகளைப் போடாது, 'ஏக்'தம்மில் மூச்சிரைக்க ஓட்டமெடுக்கும் கதையாகவும் இருந்தது தான் ! என்னதான் அத்தனை கதைகளுக்குள்ளும் புகுந்து, அன்னம் தண்ணீர் புழங்கி இருந்தாலுமே, அந்த மாதம் முடிந்த கையோடு அவை சார்ந்த cache மெமரிகளை அப்படியே ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி விடுவது வழக்கம். So, நாலு வருஷங்களுக்கு முன் வந்த கதையில் இந்த அப்புச்சி அங்கே வந்து நாலு அப்பு அப்பினார் என்றோ, இந்த அண்ணாச்சி அந்த சாகசத்தில் உசிரை கொடுத்தார் என்றோ கதைகளின் ஊடே குறிப்புகள் எழும்போது மண்டையை மங்கு மங்கென்று சொரிந்து கொள்ளவே தோன்றும். இம்முறை அதுபோலான இடர்கள் ஏதுமின்றி, கோவையின் ஜி.டி.நாயுடு ஃபிளைஓவரில் 'சல்' என்று வண்டி பறப்பது போல இளம் டெக்ஸும், டைனமைட்டும் தூள் கிளப்புவது செப்டம்பரின் செம ஹைலைட் என்பேன். And பாயாசம் போடும் எண்ணத்தில் இருப்போர் கூட இதில் relate செய்திட ஒரு வசனம் உள்ளது. எங்க எந்த context-ல் என்று தேடிப் பிடிப்பது உங்க வேலை மக்களே. ...
Moving on, இம்மாதத்தின் எனது மூன்றாவது வாசிப்பாக இருக்கக்கூடியது 'கோட்டையில் ஒரு குட்டிப் புயல்' தான். ஒரு போஷாக்கான பொடியன் கையை சப்பிக் கொண்டிருக்க, பின்னணியில் நமது சார்ஜன்ட் மாட்டின் மடியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அந்த யுத்தகளம் ஒரு குட்டி நர்சரி போல் காட்சி தருவது ஆரம்பமே வித்தியாசமானது என்று பறைசாற்றுகிறது. பக்கத்தைப் புரட்டும் முதல் நொடியில் என்னை மிரளச் செய்வது - அந்தக் கலர் கூட்டணி தான். சும்மா பச்சை பசேல் புல்வெளிகளும், அடர்நீல ராணுவச் சீருடைகளும், பளீரென்ற மஞ்சள் தொடுவானப் பின்னணிகளும், எமிலியின் பஞ்சுமிட்டாய் கலர் கவுன்களும் பக்கத்துக்குப் பக்கம் கண்ணைப் பறிக்கின்றன என்று சொன்னால் அது மிகையே நஹி. நான் ஹாட்லைனில் குறிப்பிட்டிருந்தது போல, இந்த சாகசம் முழுக்கவே ஸ்கூபிக்கும், ரூபிக்கும் செம டஃப் தருவது கோட்டையின் கர்னல் தான். கதையோடு பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த மனுஷன் வரும் பக்கங்களிலெல்லாம், உற்சாக மீட்டர், பரபரப்பு மீட்டர் 'பச்சக்' என உச்சம் செல்வதை பேனாபிடிக்கும் போதே உணர முடிந்தது.
இங்கொரு நிஜத்தை சொல்லி வைக்கட்டுமா? 2027 அட்டவணையில் இந்த நீலச்சீருடையினர் இடம்பிடிக்கப் போகின்றனரா ? இல்லையா ? என்பதை நிர்ணயம் செய்திட இந்த இதழே உதவிடக்கூடும் என்று எனக்கு மண்டைக்குள் ஒரு சிந்தனை. So all the more reason for you to read and share your thoughts please 🙏🙏
அப்புறம் GEN Z தளத்தில் குட்டிப்பசங்களுக்கான "புதுசாய் ஒரு பூதம்". இதுவுமே கலரில் அந்த கியூட்டான படுக்கவச சைஸில் பட்டையைக் கிளப்புவதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் காக்காவுக்கு, கண்ணில் தெரியும் முட்டையெல்லாம் பீமா ஜூவல்லரி சொக்கத்தங்கமாய் தென்படுவது இயல்பே எனும்போது - நிஜ ஜூரிகளாய் நீங்களே இருக்க முடியும். எது எப்படியோ இந்த ஜூனியர் டிடெக்டிவ்ஸ் கதைத் தொடரானது இந்த சாகசத்தோடு நிறைவு பெறுகிறது. And இந்த GEN Z தளத்திற்கு சந்தா கட்டி இருப்போர் தவிர்த்து ரொம்பச் சிலரே இதை தனிப்பட்ட முறையில் வாங்கி வருவதால், அடுத்த ஆண்டிற்கு GEN Z ஒரு பெரிய கேள்விக்குறியே !!
Last but not the least, TERRIFIC TEX தனித்தடத்தின் 'எமனுடன் ஒரு யுத்தம்' - நம்மவரின் ஒன் ஷாட் சிங்கிள் ஆல்பம். இது பாக்கெட் சைஸில், நியூஸ்பிரண்ட்டில் வெளிவந்ததொரு சாகசம் என்பது நினைவுள்ளது. And தற்செயலான ஒற்றுமையாய், அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்த இதழ்களாய் 'எல்லையிலொரு யுத்தம்' and 'எமனுடன் ஒரு யுத்தம்' என கிட்டத்தட்ட ஒரே போலான கதைக்களங்களோடு ஆல்பங்களும் வெளிவந்திருப்பது வியப்பே. புதுசாய் படிப்போருக்கு கிளாசிக் டெக்ஸ் படைப்புகளின் புராதனம் லைட்டாக கண்ணில் படக்கூடும் தான். இது பெரியவர் ஜி.எல். போனெல்லி மற்றும் துவக்க நாட்களின் ஓவியர் கேலப்பீனி பணியாற்றிய ஆல்பமே. And இப்போதெல்லாம் மௌரோ போஸெலி அவர்களின் வேற லெவலிலான 'தல' கதைகளைப் பார்த்த பின்பு, இங்கே லைட்டான நெருடல் எழும் பட்சத்தில் - மிரட்டும் கலரும் சரி, அந்தப் பரபரப்பான ஆக்ஷனும் சரி, அதனை சமன் செய்துவிடும் என்று நம்பலாம்.நம்மில் கணிசமானோருக்கு இது முதல் வாசிப்பாகவே இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. Because 1980-களின் இறுதிகளில் இது ஒரிஜினலாக வெளிவந்த சமயத்தில் வாசித்து வந்தோரில் இன்று தொடர்ந்திடும் நண்பர்களின் சதவீதம் ரொம்பவே குறைச்சலாக இருக்கும் என்பது உறுதி. So நிச்சயமாக இந்த quickfire ஆல்பம் ரசிக்கத் தவறாது என்பது எனது நம்பிக்கை.
ஆக, ஐந்து இதழ்களோடு இந்த செப்டம்பர் உங்கள் முன்னே கடைவிரித்து நிற்கின்றது.
- ஒரு கிராபிக் நாவல்,
- ஒரு ஹியூமர் ஆல்பம்,
- ஒரு ஹை வோல்டேஜ் வன்மேற்கு சாகசம்,
- ஒரு கிளாசிக் வன்மேற்கு சாகசம்,
- ஒரு சுட்டீஸ் குட்டி இதழ்
என்று சுவைகளிலும் வெரைட்டி காத்துள்ளது.
So யாருக்கு எது பிடித்திருந்தாலும், அவற்றிலிருந்து வாசிப்பைத் துவக்கிய கையோடு, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி, உங்களது எண்ணங்களை பதிவு செய்திடும்படி yet again கேட்டுக்கொள்கிறேன் folks. And ஸ்டெர்ன் ஆல்பத்தை வாசிக்க நீங்கள் தயாராகி வரும் பட்சத்தில், please do try it when you are relaxed and free. பக்கங்கள் 72 இருந்தாலும் வாசிப்புக்கென அரைமணி நேரம் பிடித்தாலே ஜாஸ்தி என்பேன். So நடுநடுவே மற்ற பணிகளுக்கு நேரம் தர அவசியம் இல்லாததொரு அரைமணி நேரத்தை இந்த நவீன வெட்டியானுக்கென ஒதுக்கினால் இவர் தரக்கூடிய அனுபவம் ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும் என்பேன். Give it a try please.
ரைட்டு...அக்டோபரின் ஜான் பிளாக்ஸாடுடன் பயணத்தைத் தொடர கிளம்புகிறேன் guys. Happy reading and happy sharing too. Bye for now...See you around !!





Hi Sir
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
DeletePresent sir
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteஎன்னங்க நீங்க டைமிங் மிஸ் பண்றீங்க போங்ககா. நீங்க வணக்கங்கள்னு டைப் பண்றதுக்குள்ள அவங்க கமெண்ட் பண்ணிடராங்க 😅
Deleteஆமாங்க தம்பி 😂😂😂😂😂
DeleteToday 1st Comment
ReplyDeleteTop 10
ReplyDeleteNo.4
ReplyDelete😊😊😊
DeleteGreetings sir, Good to see back to back blogs
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஇந்த தடவை சீக்கிரமாக ஆர்டர் போட்டதிற்கு காரணம்
ReplyDeleteவீட்டில் ப்ளூகோட்ஸ் எப்போது என இரண்டு வாரமாய் கேட்டுகிட்டே இருந்தாங்க
படித்துவிட்டு சிரித்து கொண்டு இருந்தாங்க
ஸ்கூபி சாமர்த்தியசாலி யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரிந்தவன் என சொல்லி சிரிச்சாங்க
ப்ளூகோட்ஸ் கண்டிப்பாக அடுத்த வருடம் வேண்டும், சார்
Superb
ReplyDeleteப்ளூகோட்ஸ் 2027க்கு வரலாம் சார்.
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தனை இதழ்களும் அட்டகாசம்.
ReplyDeleteMe in 😘👍💐🙏😄
ReplyDeleteMe Happy annachi
ReplyDeleteWe want ப்ளூ கோட்ஸ் Sir😘👍💐🙏
ReplyDeleteYes 💪💪💪
DeleteReceived the books today evening sir. Shall take one or two days to complete. Eventhough Classic Tex is already in my collection, Colour Reprints are always more attractive in my view sir.
ReplyDelete@Edi Sir 🙏💐😘
ReplyDeleteஇந்த மாத combo books ₹699 (including courier charges) என தெரிவித்து உள்ளீர்களே. 🤔
4 புக்ஸ் விலையே ₹660 வருகிறது.
கூரியர் charges ₹39 மட்டும்தானா Sir 🤔
எப்படியும் வெயிட் 2 kgs வரும் போல. 🫣
கம்பெனிக்கு கட்டுப்படி ஆகுங்களா சார் 🤔🤔😘
நான்கும் சிறப்பு
ReplyDeleteசார், கார்ட்டூன் ரெயிலில் இப்போது இருக்கிறதே மொத்தம் 3 பெட்டி தான். அதில் ஒன்றைக் கழற்றி விட்டு விட வேண்டாமே? ப்ளூகோட்ஸ்-க்கு ஒரு ஸ்லாட் ப்ளீஸ்.
ReplyDelete23rd
ReplyDelete🙋🏻♂️
ReplyDelete🙋🏻♀️🙋♀️
Deleteமீண்டுமோர் அருமையான பதிவு சார்....புத்தகங்களை புரட்டும் போது முதலில் என்னைக் கவர்ந்தது ...அந்த ப்ளூ கோட்ஸ் வண்ணச் சேர்க்கைதான்....வேற லெவலில் அசத்தல்
ReplyDeleteநன்றிகளைத் பற்றி தெரியாது மன்மதா....ஆனால் நாங்கள் இங்கு இருக்கிறோம்......😄😄😄🦾🦾🦾செம செம........சார்....அட்டைப்படம் இதுதான் டாப்....இது வரை வந்த அட்டைகளில் ஏ என ஒவ்வோர் வாயும் முனுமுனுப்பது உறுதி...புத்தகத்தை கைல ஏந்தயிலேயே பாயாச பார்ட்டிகள் தலைலயே அந்த பானையான புத்தகத்தில் நச்
ReplyDeleteகதையின் துவக்கமே தீப்பிடிக்குது....வண்ணங்களில் ஓர் மிரட்டல்....நம்ம தலலல இப்படி அதிரடி இருந்தும்...நான் தேடும் டெக்ஸ் இருந்தும் சுத்தமா நினைவிலில்லை....
Deleteசாரி....பன்றிகளை பற்றி தெரியாது மன்மதா என படிக்க
Deleteகண்ணீர் தீவில் மாயாவி....வேற லெவல் சார் ...பத்து பக்கத்துக்கே இழுத்திருச்சி .....முதல் புரட்டல்...இதுவும் தொட்டதா கூட நினைவில்லை...வெண்டைக்காய் கிலோ என்ன விலையோ...வருகிறது விளம்பரங்கள் அன்றய காலகட்ட விளம்பர ஈர்ப்புக்கு மீண்டுமோர் சவால்...பால்யத்துக்கு காலப் பயணம் தர தவறில்லை....சுவிட்சர்லாந்தில் மாயாவி....மாயாவி மேக்னோ....அடடா அமர்க்களம்....அட்டையுமழகே...
ReplyDeleteகோட்டையில் ஒரு குட்டிப்புயல்....முதல் பக்கமே தலைப்பை வந்திடுச்சு போல....வண்ணங்களின் வாரிசு.....புரட்ட புரட்ட பேரானந்தம்...நாளை முதல் புரட்டல் இதான்....நேரம் வாய்க்குமா என ஒரு கை பாக்கனும்
ReplyDeleteஓட்டத்தை கைவிடேல் துவக்க பக்கங்கள் வெகு அழகு...சுட்டெரிக்கும் சூரியன் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்தப் பரந்த பாறைப் பகுதிகளில் வெப்பக் காற்றினூடே மரணத்தின் நெடியும் கலந்திருந்தது....
ReplyDeleteஅப்படியே அந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல....
இரண்டே பக்கங்கள் தமிழர்க்கு பெருமை நீந்திக் கொள்ளும் நம் மக்கள் சாராய சோதனைக்குப்....திரைப் போதைக்கும் அடிமையாகி உரிமைய இழந்து வந்தாரை ஆள விட்ட அவலநிலை செவ்விந்தியரை தமிழனாய் காட்ட தவறில்லை....
ஹாட் லைன் அடுத்த மாத விலங்குகள் தலை சுவாரஸ்யத்தை இப்பக்கங்களுக்கிணையாய் ஏற்ற தவறவில்லை
அட்டை நெட்டிலே டாப்பாய் தெரிய.....நேரில் வண்ணச் சேர்க்கை ஈர்ப்பால்....எமனுடன் ஓர் யுத்தத்துக்கு பின்பாய் சென்றாலும்.....அந்தப் பாய்ச்சல் அதகள ஈர்ப்பாய்
Deleteவிதி எழுதிய விசாரணை....முதல் பக்கமே அப்படியோர் கவிதையாய் மனதை நனைக்குது மழையாய் மழையால்.....
ReplyDeleteஅந்த மழை செல்ல தோண்டிய வழித்தடம் அதிலோடும் நீர்....விடுமுறைக்கு சிறுவயதில் ஊரில் ரசித்த அந்தக் காலம் அடேயப்பா....இந்த ஒரு பக்கமே போதும் சார் இக்கதைக்குள்ளே வழிந்தோடி எனது நேரமெல்லாம் நிரம்ப ...
புதுசாய் ஓர் பூதம் ....ஏழு மணிக்கு புத்தக பார்சலோட வீட்டுக்குள் நுழைய .....சின்னவர் சூப்பர்பா என எனது பின்னே பாய....நான் திண்பண்டம் ஏதும் வாங்கலையே என நொறுங்க....புத்தக பார்சலோட சின்னவர் ஏகப்பட்ட மகிழ்ச்சியோடு ஓட....படித்து கொண்டிருந்த மூத்தவருக்கு நான் சப்போர்ட் செய்ய அமர்ந்திருக்க...பார்சல் பிரிக்க பட்டதை கவனிக்கவில்லை....சின்னவர் அவருடைய குட்டி புத்தகத்தின் பின் பகுதிய ...அந்த டெடிய முழுக்க பிங்க் நிறத்தால் அவர் சவுரியத்துக்கு குளுப்பாட்டியதோர் அழகு....இனி ஏழு முதல் என்பதை மூன்று முதலென மாற்றலாம்....மாற்றமே மாறாதது....
ReplyDeleteஅழகு
Deleteமகிழ்ச்சி மக்கா
Deleteசெமயாய் ஓர் செப்டம்பர்....பம்பர்
ReplyDeleteTex – "எமனுடன் ஒரு யுத்தம்"
ReplyDeleteஅட்டைப்படமே அட்டகாசம்!
கள்ள நோட்டடிக்கும் கயவர்களை கையும் களவுமாக கபளீகரம் பண்ண Carson-ஓடு களம் இறங்குகிறார் நம்ம இரவுக் கழுகர்!
ஆரம்பமே அதிரடிதான். But pages போகப் போக humour, action-ஐ overtake பண்ணுது. என்னடா இது, நம்ம படிக்கிறது Tex-ஆ இல்ல Chic Bill-ஆன்னு doubts வருது! 😂 ஒரு second அட்டைப்படத்தைப் பார்த்து acknowledgement போட்டுட்டு continue பண்ணினா, அடுத்தடுத்து action top gear போட்டுத் தூக்குது.
சும்மா ஒரு 2000 பேரை சுட்டுத்தள்ளிட்டு, கள்ள நோட்டை lens-ல பார்த்து அதுல இருக்குற secret message-ஐ decode பண்ணிட்டு போய், ஒரு மாஸ் முடிவோடு கதையை முடிக்கிறார் Tex.
In short, heavy action-packed story, minimal dialogues, நிறைய humour... இது ஒரு sure hit list!
இது ஒரு classic story. அந்தக் காலத்துலேயே writers fake currency-க்குள்ள secret message வைக்கிற அளவுக்கு detailing கொடுத்திருக்காங்க! கதை முழுக்க unnecessary-ஆ எதையும் இழுக்காமல், straight-ஆ action-க்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது நல்லா இருக்கு.
இந்த மாதிரி classic titles-ஐ, அந்தக் காலத்துல வந்த மாதிரியே black & white-ல, அதே pulp paper quality-யோட replica edition-ஆ போட்டா சிறப்பா இருக்கும்.
Comic book collectors-களும் இதே மாதிரியான original-style replica version-ஐ விரும்பி வாங்குவாங்க. இப்போ கூட grey market-ல இதுபோன்ற பழைய editions-க்கு பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குறாங்க... (Not all!) 😄
இப்படி ஒரு classic Tex-ஐ மறுபடியும் அந்த vintage feel-ஓட கொண்டு வந்தா, collector-களுக்கு செம treat-ஆ இருக்கும்! 🔥
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteநேற்றே ஒரே ஸ்பீடில்
ReplyDeleteஇரண்டு புத்தகங்களை முடித்து விட்டேன்..
ஸ்டெர்ன்
இளம் டெக்ஸ்...
இரண்டிலும் ஏறக்குறைய ஒரே கதைக்களம்...
இளம் டெக்ஸ் நம் மனதில் இருக்கும் ஒரு ஹீரோயிசம்...
அதன்படியே கதை போகிறது.
ஆனால் ஒரிஜினலாய்
நாம் அனைவரும் ஸ்டெர்ன் தான்..
கதைப்படி தான் நாம் தடுமாறுகிறோம்..
முதலில் ஸ்டெர்ன் படித்து விட்டு இளம் Tex படித்தால் தப்பினோம்...
அல்லது மனதின் பாரத்தை இறக்க முடியுமா என்பது சந்தேகமே....
// ஆனால் ஒரிஜினலாய்
Deleteநாம் அனைவரும் ஸ்டெர்ன் தான்.. ///
True sir.
முதலில் ஸ்டெர்ன் தான் படிக்கலாம்னு நினைச்சிருந்தேன் சார். ஆனா கொஞ்சம் சிரிக்கணும் போல ஆசை ஆசையாய் இருந்தது. அதனால ப்ளூகோட்ஸ் முதல்ல. 😍😍😍😍😍😍😍😍
ReplyDeleteவிதி எழுதிய விசாரனை
ReplyDelete100/10
ஸ்டெர்ன் கதாபாத்திரம் 💖💗💓💞💕❣💝💛💚💙💜🤍
வெட்டியான் மனதை வருடும் கதையோட்டம்.
ReplyDeleteசூப்பர் பதிவு சார். நன்றி
ReplyDeleteHi
ReplyDeleteவிதி எழுதிய விசாரணை
ReplyDeleteஇந்த amusement parks-ல “Free Fall”னு ஒரு ride இருக்கும். மெதுவா height-க்கு நம்மள ஏத்திட்டு, திடீர்னு பொத்துன்னு high speed-ல கீழே போட்டுட்டு, நம்மள ஒரு வழி பண்ணிடும்.
இந்த story-யும் அதே மாதிரிதான்!
மெதுவா கதை start ஆகி, characters-ஐ set பண்ணிட்டு, திடீர்னு என்னடா நடக்குது இங்கன்னு ஒரு வெறித்தனமான சம்பவம். அதுக்கப்புறம் chasing, actionன்னு கதை பறபறன்னு போய், நமால digest பண்ணவே முடியாத ஒரு climax-ல முடிஞ்சிடுது.
இந்தக் கதை politics, race hatred, எப்படி ஒரு system தனக்கு சாதகமா rules-ஐ bend பண்ணுது, அதே system எப்படி விளிம்பு நிலை மனிதர்களோட விதியையே திருப்பிப் போடுது என்பதையெல்லாம் பேசுது.
Vera level artwork! Framing, wide-angle shotsன்னு ஒவ்வொரு panel-ம் கதையை dialogues இல்லாமலேயே smooth-ஆ move பண்ணுது. சில scenes-ல அந்த visual storytelling மட்டும் பார்த்தாலே போதும்... என்ன நடக்குதுன்னு நமக்கே புரிஞ்சிடுது.
ஒரு page-ஐ கூட miss பண்ணாம படிக்க வேண்டிய graphic novel இது!
இந்த வருடத்தின் Top Graphic Novel-களில் இதுவும் கண்டிப்பா ஒன்று! 🔥
Excellent review
DeleteNice review bro
Deleteajithsiva1000:
Deleteஅருமையான விமர்சனம் மட்டுமல்ல - முழுமையான விமர்சனமும் கூட !
உங்கள் விமர்சனத்தைப் படித்தவுடன், விதி எழுதிய விசாரணை..! புத்தகத்தை உடனே படிக்க வேண்டும் போல் இருக்கிறது !
நன்றாக எழுதுகிறீர்கள் !
Test
ReplyDeleteMike testing... 1.2.3
ReplyDeleteMike testing 3...2..1...
ReplyDeleteகேட்கிறதுங்க சார் 😇😊
Delete1. STERN :
ReplyDeleteஸ்டெர்ன் கதைகளில் எப்போவும் கதை தான் கதாநாயகன் .. மனித எண்ணங்கள் , செயல்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும், மாறும் என்பதே இக்கதையின் பிரதானம் .. இங்கு நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் யாரும் இல்லை .. எல்லாம் சூழ்நிலை கைதிகளே .. தனி மனிதனாக இருக்கும் போது செய்ய தயங்கும் அல்லது செய்ய பயப்படும் விஷயங்களை MOB MENTALITYல் இருக்கும் போது EASY ஆக செய்ய முடிகிறது .. STERN IS ALWAYS MORE CLOSE TO REALITY .. THAT FINAL PAGE HITS HARDER .. NEED STORIES LIKE THIS AT LEAST OCCASIONALLY ..
9.5/10 ...
2. BLUE COATS :
NOT A BIG FAN OF BLUECOATS .. DUE TO SAME WAR TEMPLATE .. இந்த முறை அது போல் இல்லாமல் it was fun .. ரூபி அண்ட் scooby இதில் பிரதான characters ஆக இல்லாமல் மற்ற characters முக்கியத்துவம் இருந்தது ஒரு காரணம்.. கர்னலும் அவரது மற்ற சிப்பாயிகளும் stole the show ..
9/10 ...
3. டெக்ஸ் :(ELDER )
மறுபதிப்பாக இருந்தாலும் ITS MY FIRST TIME READ .. TYPICAL TEX BANG BANG COMMERCIAL ENTERTAINER .. FUN AND BREEZY READ .. 8/10 ..
4. ஜூனியர் டிடெக்டிவ்ஸ் :
IT REMINDS ME OF SCOOBY DOO CARTOONS .. FUN READ .. GEN Z CAN CONTINUE NEXT YEAR SIR ..
// STERN IS ALWAYS MORE CLOSE TO REALITY //
Delete100% True.
விதி எழுதிய விசாரணை - சுமார் ஒருமணி நேரம் ஆனது கதையை படித்து முடிக்க ஒரு அமைதியான சூழலில். இந்தமுறை கதையை சித்திரம்களே மனதை வருடி கதையை அழகாக சொல்லியது. ஒவ்வொரு பக்கத்தில் உள்ள சித்திரங்களும் பலவிசயம்களை நமக்கு சொல்லி கதையுடன் நம்மை பயணிக்க செய்தது. வசனங்கள் குறைவு ஆனால் அதன் தாக்கம் மிகவும் விரீயமானது.
ReplyDeleteகதையின் கடைசி பக்கம்களை பார்த்த உடன் கதையின் ஆரம்பத்தில் இருந்து பயணித்த வந்த என்னை கண்களை கலங்க வைத்து விம்மி அழ செய்து விட்டது.
சோகம் என்று சொல்லும் நாம மனதில் பாரம் இருக்கும் போது இளையராஜாவின் தாலாட்டை கேட்கும் பொழுது நாமும் பயணித்து கண்களை நனைத்துக் மனதை லகுவாகி கொள்வோம், அதுவே இந்த கதையில் நடந்தது.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
ReplyDelete
இந்த ஸ்டெர்ன் ஆல்பம் ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது
Delete24 நேர விடா முயற்சிக்கு பிறகு பின்னூட்டம் இட முடிந்தது.
ReplyDeleteஅது கிடா முயற்ச்சில
Delete
ReplyDelete
THE BLUECOATS
Bluecoats வெறும் போர் கதை அல்ல.
இதில்:
போர் + நகைச்சுவை + சாகசம் + வரலாறு எல்லாம் கலந்து இருக்கும்.
ஆனால் இந்த கதை கொஞ்சம் வித்தியாசம் .
(புதியவர்களுக்கு ஒரு அறிமுகம்
Sergeant ரூபி– ராணுவ விதிமுறைகளை மிகவும் கடுமையாகப் பின்பற்றும் Sergeant.போரில் வீரமாக இருக்க விரும்புவார்
ஸ்கூபி– போரில் ஈடுபடுவதை விரும்பாத, புத்திசாலித்தனமாக பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முயலும் ஒரு Corporal.
ஆனால் ஸ்கூபி பெரும்பாலும் “எப்படியாவது உயிருடன் திரும்ப வேண்டும்!” என்ற எண்ணத்தில் இருப்பார். 😄
ஒவ்வொரு album-லும் Civil War காலத்தின் வெவ்வேறு சம்பவங்களை மையமாகக் கொண்டு தனித்தனி சாகசக் கதை இருக்கும்.)
கோட்டையில் ஒரு குட்டி புயல்
கதை சுருக்கம்
அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இருவரும் பாலைவனப் பாதையில் பயணிக்கும் போது ஒரு ஆதரவற்ற ஆண் குழந்தையை
கண்டெடுக்கிறார்கள். அந்த குழந்தையை ராணுவ முகாமிற்கு அழைத்து வருகின்றனர்.
ராணுவ முகாமில் நடக்கும் கலாட்டாக்கள்,
கரடுமுரடான வீரர்கள் வாழும் முகாமிற்குள் குழந்தை வந்தவுடன் சூழலே மாறுகிறது.
துப்பாக்கியையும் வாளையும் பிடிக்கும் கரங்களுக்குத் துணி மாற்றுவதும் (Diapering), குழந்தையைத் தாலாட்டுவதும் மாபெரும் சவாலாக மாறுகிறது.
கேப்டன் மற்றும் மேஜர் போன்ற உயர் அதிகாரிகள் குழந்தையை முகாமில் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அந்த குழந்தைக்காக முழு ராணுவ முகாமே தலைகீழாக மாறுவது போன்ற காட்சிகள் நல்ல நகைச்சுவை.
இறுதியில், குழந்தையைக் தொலைத்த உண்மையான பெற்றோரிடம் குழந்தை சேர்ந்ததா என்பதே கதை.
ரூபி மற்றும் ஸ்கூபி கதாபாத்திரங்களின் உள்ளே இருக்கும் தாய்மை மற்றும் பாச உணர்வை மிக அழகாக வெளிப்படுத்திய கதை இது.
8/10.
அருமையான விமர்சனம் சார்
DeleteChick Bill:
Delete//(புதியவர்களுக்கு ஒரு அறிமுகம்
Sergeant ரூபி– ராணுவ விதிமுறைகளை மிகவும் கடுமையாகப் பின்பற்றும் Sergeant.போரில் வீரமாக இருக்க விரும்புவார்
ஸ்கூபி– போரில் ஈடுபடுவதை விரும்பாத, புத்திசாலித்தனமாக பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முயலும் ஒரு Corporal.
ஆனால் ஸ்கூபி பெரும்பாலும் “எப்படியாவது உயிருடன் திரும்ப வேண்டும்!” என்ற எண்ணத்தில் இருப்பார். 😄
ஒவ்வொரு album-லும் Civil War காலத்தின் வெவ்வேறு சம்பவங்களை மையமாகக் கொண்டு தனித்தனி சாகசக் கதை இருக்கும்.//
மிகவும் உபயோகமானத் தகவல் ! இத்தனைக் காலமாக இந்தக் கண்ணோட்டத்தில் நான் பார்த்ததும் இல்லை ; படித்ததும் இல்லை ! அமெரிக்க சிவில் வார் - போர்க்களங்களின் பகடி என்று நினைத்து மட்டும் படித்து வந்தேன். இவர்களின் குணாதிசயங்கள் என்னவென்று ஒருமுறை கூட யோசித்ததில்லை ! இன்றைய உங்களின் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனி The Blucoats புத்தகம் படிக்கும் போது இந்தக் கண்ணோட்டத்தில் படித்துப் பார்க்கிறேன்!
நன்றி !
**** விதி எழுதிய விசாரணை ****
ReplyDeleteமுந்தைய ஸ்டெர்ன் கதைகளை விடவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கதை இது!
ஆரம்பம் முதல் இறுதிவரை தடக் தடக் இதயத்தோடே பயணம் செய்ய வேண்டி இருந்தது! படிக்க ஆரம்பித்தால் யாராலும் முடிக்காமல் வைக்க இயலாது!
ஸ்டெர்ன் - என்னதான் போலீஸ் உருட்டினாலும் மிரட்டினாலும் துளியும் வளைந்து கொடுக்காத இந்த ஒல்லிபிச்சான் மனிதனின் மன உறுதி ரொம்பவே வியக்க வைக்கிறது - ஸ்டெர்னின் மீதான மரியாதையை ஒரு படி அதிகரிக்கிறது!
சம்பாதித்த காசை பேங்கில் போடப் போனது ஒரு குற்றமா?!! ஒரு சிறு சம்பவம் எத்தனை பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பதை பூதாகரமாக சொல்கிறது இக்கதை!
கதையில் வழக்கத்தை விட கம்மியான வசனங்கள் தான். ஓவியங்களே மீதிப் பாதியைப் பேசி விடுகின்றன. எண்ணிக்கை குறைவென்றாலும் ஒவ்வொரு வசனமுமே சுளீர் என்று ஒரு எதார்த்ததை எடுத்துச் சொல்லி மனசுக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது!
'ணங்.. கும்.. சத்' - இதிலுமே நிறைய உண்டுதான். ஆனால் நாமறிந்த வழக்கமான ஒன்றல்ல!
கிளைமாக்ஸ் - மனசுக்குள் மௌன அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது!
ஸ்டெர்ன் - காமிக்ஸ் உலகம் தவற விடக் கூடாத கேரக்டர்!
🤴
அதே அதே விஜய். கிராபிக்ஸ் நாவல் என்று நினைக்கும் நண்பர்கள் இது போன்ற கதைகள் தான் நமது வாழ்கை என்று புரிந்து கொண்டால் இவற்றை கொண்டாடுவார்கள்.
Delete//ஸ்டெர்ன் - காமிக்ஸ் உலகம் தவற விடக் கூடாத கேரக்டர்!//
DeleteYes இளவரசரே
ஒன்றுக்கு இரண்டாய் டெக்ஸ் இருக்கும் மாதத்திலும், ஒரு வெட்டியான் வெளிச்ச வட்டத்தை தனதாக்கி வருவது மெய்யாலுமே interesting 😀😀
ReplyDeleteசார் டெக்ஸ் கதைகள் வழக்கமான நங் கும் சத் கொஞ்சம் காமெடி மற்றும் ஆக்சன் கொண்ட சூப்பர் ஹீரோ கதை, நிஜத்தில் செய்ய முடியாத விஷயங்கள் இந்த கதைகள் படிக்கும் போது கிடைக்கும். ஆனால் இந்த நவீன வெடியான் போன்ற கதைகள் இயல்பான மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் சார், எனவே இதற்கே எனது முதல் மரியாதை சார்.
Deleteப்ளூ கோட்ஸ்ஸும் சரியான போட்டி கொடுக்கிறார்கள் சார்.பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளார்கள்.
ReplyDeleteநானும் வந்துட்டேன்
ReplyDeleteவிதி எழுதிய விசாரணை
ReplyDelete
ஸ்டெர்ன் தனது ஊதியத்தை வங்கியில் டெபாசிட் செய்யச் செல்லும்போது ,முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் வங்கியாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்புகிறார்கள்.
சாட்சியாக விசாரிக்கப்படும் ஸ்டெர்ன், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காட்டும்படி கோரப்படுகிறார் , மேலும் காவல்துறை, அப்பாவிகளான மூன்று இத்தாலிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பிடித்துப் பழிபோட முயல்கிறது.
அந்த இத்தாலியர்கள் குற்றமற்றவர்கள் என்பதில் ஸ்டெர்ன் உறுதியாக இருக்கும் நிலையில், காவல் நிலையத்தில் அவர்களைக் குற்றவாளிகள் என ஒப்புக்கொள்ள வலுவான அழுத்தம் தரப்படுகிறது.
ஆனால் ஸ்டெர்ன் அதற்குப் பணிய மறுக்கிறார். இதன் விளைவாக,
இதனால் ஆத்திரமடையும் காவல்துறை, ஸ்டெர்ன் மீதே பொய்க் குற்றம் சுமத்தி, அந்த இத்தாலியர்களில் ஒருவனான லூக்காவோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைத்துச் சிறையில் அடைக்கிறது.
ஆனால், ஸ்டெர்ன் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அந்தப் பிரதிவாதிகளில் ஒருவனுடன் சிறையிலிருந்து தப்பிக்கும்போது கதை முழுவதுமாகத் தலைகீழாக மாறுகிறது.
மனசாட்சிக்குத் துரோகம் செய்ய விரும்பாத ஸ்டெர்ன், மொழி தெரியாத அந்த இத்தாலிய இளைஞன் லூக்காவுடன் சேர்ந்து கைவிலங்கோடே சிறையிலிருந்து தப்பிக்கிறார். காவலர்களிடமிருந்து தப்பி ஓடும் அந்த ஆபத்தானப் பயணத்தில், இருவருக்கும் இடையே ஒரு ஆழமான பிணைப்பு உருவாகிறது.
இறுதியில் ஸ்டெர்ன் தனது தன் மீதான பழி துடைக்கப்பட்டாலும், இந்த அதிகார வர்க்கத்தின் சுயரூபத்தைக் கண்டு விரக்தியடையும் ஸ்டெர்ன், மீண்டும் தனது பழைய அமைதியான சவ அடக்கம் செய்யும் வாழ்க்கைக்கு திரும்புகிறார். 8/10
அருமை நண்பரே
Deleteநான் இளம் டெக்ஸ் புத்தகத்துல 50 pages இப்போதான் complete பண்ணேன். Artwork-ல இருக்குற ஆட்களையும் background-ஐயும் distinguish பண்ணிப் பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இது இந்த மாதிரி artwork-ல common-ஆ இருக்குற விஷயமா? இல்ல desert-ல இருக்குற harsh-ஆன வெயில், high sun rays-ஐ காட்டுறதுக்காகவே இப்படியொரு effect use பண்ணியிருக்காங்களா? இல்ல எனக்குத்தான் ஏதாவது eye issue இருக்குமா?
ReplyDeleteSaguaro புத்தகத்தைப் படிக்கும்போதும் இதே மாதிரி issue எனக்கு இருந்தது.
YOUNG TEX :
ReplyDeleteசமீப காலமாக ELDER TEXஐ விட YOUNG TEX STORIES R BETTER SIR .. NEED MORE OF" இளம் தல" .. அந்த மாதம் ஒரு "இளம் தல "கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் ..
9/10 ..
டெஸ்ட்
ReplyDeleteமூன்று நாட்களாக ஊட்டியில் ஹால்ட் என்பதாலும் இங்கு வாசிப்பதற்கு ஓர் இளம் டெக்ஸ் வாசிக்க தான் நேரம் இருக்கும் என்பதாலும் ஊட்டி குளிரில் சூடு பறக்க இளம் டெக்ஸை வாசித்து முடித்தாகி விட்டது...ஆசிரியர் சொன்னது போல் இந்த முறை எந்த முன்கதை நினைவும் இல்லாமல் ஓர் தனிப்பட்ட டெக்ஸ் சாகஸமாகவே இந்த இதழ் சூடு பறக்க பறக்கிறது...என்ன எப்பொழுதும் குற்றவாளிகளை ரேஞ்சராக துரத்தி தூள் படுத்துபவராகவும்..எதிரிகளை பழிவாங்குபவாரகவும் இருப்பவர் இந்த முறை தேடப்படும் குற்றவாளியாக இருந்து அதே காரியத்தை செவ்வென செய்கிறார்..இந்த கதையின் மூலம் தான் ரேஞ்சருக்கான தகவலும் தகுதியும் ஷெரீப் மூலம் அறியப்படுகிறது போல..மொத்தத்தில் வழக்கமான வெற்றிகரமான அதிரடி ஆக்ஷன் டெக்ஸ் இந்த முறையும்
ReplyDeleteஊட்டி பகுதி வட்டச் செயலாளர் ஆரு ப்பா...? தலீவருக்கு கட் அவுட்லாம் செரியா, முறையா வைச்சாச்சா...?
Deleteஎன்னதான் டெக்ஸ் தான் முதல்ல படிக்கிறதுணு சொன்னாலும் பார்சல் பிரித்தவுடன் பளிச்சுன்னு கண்ணுல பட்டது ப்ளூ கோட்ஸ் தான் சும்மா இரண்டு பக்கங்கள் படித்து விட்டு வைக்க்கலாம்னு நினச்சு படிக்க ஆரம்பித்தேன் . முடித்து விட்டு இப்ப மறு மறு வாசிப்பு ,மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே உள்ளது . இன்னும் தல பக்கம் திரும்பவே முடியல.
ReplyDeleteஇம்மாதம் முதலிடம் ப்ளூ கோட்ஸ் தானோ?
பக்கத்துக்கு பக்கம் புன்னகைக்க வைக்க தவறவில்லை.மொத்தத்தில் ப்ளூ கோட்ஸ். மதிப்பெண்கள் 10/10
மகிழ்ச்சி சார்
Deleteப்ளூ கோட்ஸ் அழகான நகர்த்தல் கள்.....குழந்தையோடு நகரும் கதை நம்ம குள்ளனை அசாத்திய சூப்பர் மேனாக்க.....கதை வண்ணங்களின் துணைகொண்டு குழந்தையின் பெற்றோரை நாம் தேடத் தோணாமல் நகர பெற்றோர் இயல்பாய் இணைவதை கவனித்தீர்களா....அட்டகாச ஓவியங்களோடு மின்னலாய் பாயும் கதை.....சூப்பர் சார்....
ReplyDelete//குழந்தையின் பெற்றோரை நாம் தேடத் தோணாமல் நகர //
Deleteஆமாங்க ஸ்டீல்
கதையோடு ஒன்றி நாம மறந்து விடுகிறோம்
🙂
Deleteவிதி எழுதிய விசாரனை
ReplyDeleteமகிழ்ச்சியாக வாங்கிய சம்பளத்தை பேங்க்ல் சேமிக்க போய் சிக்கலில் மாட்டி போலிசார் விசாரணை என்ற பெயரில் கைது ஆகி அதில் இருந்து சக கைதியால் மேலும் சிக்கல் இதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருவார் என்ற பயத்தை நமக்கு ஏற்படுத்தி விடுகிறது. இதில் லேசான சோகம் இழை ஓடிக்கொண்டிருக்கும் பாசவலை போல போலிசார் அவர்களின் நிலை கேசை முடிக்க வேண்டிய அவசரம் உயிர் போவதாக இருந்தாலும் உண்மை தான் ஏற்று கொள்வேன் என்ற கதாநாயகன். கதைகளின் படங்கள் ஆயிரம் விசயங்களை நமக்கு சொல்லுகிறது
இது போன்ற மனிதர்கள் அரிதாகக் கொண்டு இருக்கிறார்கள் கண் முன்னே கொலைகாரர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலை கடைசியாக இந்த பிரச்சனையில் இருந்து விடுவிகபடுகிறார்
க. ரவீந்திரன் அவர்களின் விமர்சனம்
எமனுடன் ஒரு யுத்தம்
ReplyDeleteகிளாசிக் டெக்ஸ் இந்த கதையை ஏற்கனவே படித்த ஞாபகம் சுத்தமாக இல்லை. இதிலும் முதல் பக்கத்தில் இருந்து எடுத்த துப்பாக்கியை கடைசி பக்கம் வரை டெக்ஸ், கார்சனும் உள்ளே வைக்கவே இல்லை மொத்த எதிரியின் கும்பலையும் போட்டு தள்ளிவிட்டு, மெக்சிகோ சென்று அந்த கும்பலையும் சரணடைய செய்வது எல்லாம் வேற லெவல்.
ஆனால் நான் ரொம்ப ரசித்தது நீங்க போட்ட எக்ஸ்ட்ரா நம்பர் தான் இந்த முறை டெக்ஸ் தான் புலம்புகிறார் கார்சன் அமைதியாக தான் கதை முழுக இருக்கிறார். எனக்கு பிடித்தது.
எனது மதிப்பெண் 8/10
குமார் சேலம்
மூன்றாவதாக படித்தது ஒட்டமதைக் கைவிடேல்
ReplyDeleteயங் டெக்ஸ் எப்போதுமே வேகம் வேகம், இந்த கதையோ படு வேகம்.
அட்டகாசமான ஹீரோவின் entry அதற்கு பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் டெக்ஸ். அவரை பிடிக்க கிளம்பும் ஷெரீஃப், இறுதியாக சுபம். ஒவ்வொரு ஆக்சன் sequence உம் அபாரம்.
எனது தாழ்மையான வேண்டுகோள் ரொம்ப கேப் விட்டு விட்டு யங் டெக்ஸ் வருவதால் அந்த கேரக்டர்கள் மறந்து விடுகிறது. வருடத்திற்கு இரண்டு இளம் டெக்ஸ் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன். முடிவு தங்கள் கையில்.
எனது மதிப்பெண் 10/10
குமார் சேலம்
அடுத்து படித்தது
ReplyDeleteவிதி எழுதிய விசாரணை
இந்த வெட்டியான் எனக்கு மிகவும் பிடித்த இப்போதைய ஹீரோக்களில் ஒருவன். கதையும் ஆரம்பம் முதல் இறுதி வரை செம்ம விறுவிறுப்பு கடைசியில் மனதை கனக்க வைக்கும் முடிவு. ஓவியங்கள், வசனங்கள் எல்லாமே டாப் அதும் அந்த போலீஸ் கூண்டில் இருந்து அந்த பையனை இழுத்து செல்ல முயலும் அந்த கூட்டத்திடம் ஸ்டெர்ன் போராடும் காட்சி யப்பா. So many intricate scenes so many visula treats. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம்மை சுற்றி உள்ளவர்கள் தீர்மானிப்பது ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள ஸ்டெர்ன் மறுப்பது . எழுத வேண்டியது நான் புரிந்து கொண்டது நிறைய ஆனால் இப்போது எழுதினால் ஸ்பாய்லர் ஆகிடும்.
எனது மதிப்பெண் 100/10. Wow
சூப்பர் பாஸ்ட் விமர்சனம்.
Deleteசெப்டம்பர் மாத இதழ்கள் ஐந்தில் நான்கு படித்து முடித்து விட்டேன்.
ReplyDeleteமுதலில் படித்தது புதுசாய் ஒரு பூதம்
இந்த முறை நம்ம ஜூ. டி டீமுக்கு இரண்டு மர்மங்களை துப்பறிய வேண்டிய வேலை. ஒன்று அவர்களது கிளாசுக்கு புதிதாக வந்த பையன் ஒரு வாம்பயரா என்ற புதிர், இரண்டாவது தங்கள் கிளாசில் படிக்கும் மாணவிக்கு லவ் லெட்டர் எழுதியது யார் என்ற புதிர். எப்போதும் போல ரொம்பவே realistic ஆக ரொம்ப ஃபன் ஆகவே போகிறது கதை. மீதியை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் ஒரே ஒரு சிறிய குறை ஹாட்லைன் இல் எடிட்டர் சார் இதுவே கடைசி ஜூ. டி கதை என்று எழுதி இருந்தது தான் 😭😭😭. சார் பார்த்து ஏதாவது பண்ணுங்க
எனது மதிப்பெண் 100/10
கதையே அம்புட்டு தான் சார் - நான் எந்தா செய்யும்?
Deleteபுதுசாய் ஒரு பூதம் - போட்டோவில் காட்டேரி இல்லை ஏன் என்பது ஒரு சிறிய ஏற்றுகொள்ளும் காரணத்துடன் இருந்தது 😍 எளிதான ஆனால் அடுத்து என்ன என்று இந்த குட்டி துப்பறியும் கும்பலுடன் ஆர்வமுடன் நானும் பயணித்தேன் , மகிழ்ச்சி.
ReplyDeleteநேற்று அலுவலகம் இருந்ததால் ப்ளு கோட்ஸ் படிக்க முடியவில்லை. இன்று இப்போது தான் படித்து முடித்தேன். சும்மா சொல்லக்கூடாது சூப்பர் கதை. ரோந்து போகும் ஸ்கூபியும் ரூபியும் ஒரு குழந்தையை கண்டு பிடிக்க அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கதை. சிரிக்க ஏராளமான இடங்கள் அந்த கர்னல் படும் பாடு, குழந்தைக்கு ஒன்று என்றால் பொங்கி எழும் ஸ்கூபி. Total fun மொத்தத்தில் A+. ப்ளூ கோட்ஸ் தாராளமாக தொடரலாம். கூடவே மேக் அண்ட் ஜாக்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்.
ReplyDeleteஎனது மதிப்பெண் 10/10
குமார் சேலம்
//ப்ளூ கோட்ஸ் தாராளமாக தொடரலாம். கூடவே மேக் அண்ட் ஜாக்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்//
Delete+9
மேக் & ஜாக்குக்கு குதிர ஓட்ட தெரியுமோ - என்னவோ சார் 🤔🤔
DeleteWe want blue coats and more cartoons
ReplyDelete+9
Deleteஎனக்குமே தான் சார் வேணும்.... யாரு கிட்டே கேக்கலாம்... 🤔🤔?
Deleteஎனக்கும் நிறைய கார்ட்டூன் கதைகள் வேண்டும்
DeleteCinebook லே வாங்கி அனுப்பச் சொல்லுவோம் சார் - நண்பர் சங்கர் செல்லப்பன் இங்கிலாந்தில் தான் கீறார்!
Deleteஆனா பாருங்க எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது அதே நேரத்தில் உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்த திருப்தி கிடைக்காது சார்.
Deleteதமிழில் உங்களிடம் தான் சார் கேட்க முடியும். ஆங்கிலத்தில் பல கார்ட்டூன் கதைகள் இருந்தாலும் / படித்தாலும், அழகு தமிழில் படிக்கவே ஆசை. நம் வாசகர்கள் மனது வைக்க வேண்டும்.
Deleteஸ்மர்ஃஸ், சுஸ்கி விஸ்கி வருடத்திற்கு ஒன்றாவது (2-3 கதைகள் கொண்ட ஒரு கலெக்டர்ஸ் இதழாக வந்தால் நன்றாக இருக்கும்.
- கண்களை திறந்து கொண்டே கனவு காணும் கோட்டை சாமி..
ப்ளூகோர்ட் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்த கதை வந்து சிக்ஸராக பறக்க விட்டிருக்கிறது. அடுத்த வருஷம் அட்டவணையில் இடம் பிடிக்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் பிரகாசம் & அவசியம் என்று சொல்லாமல் சொல்லி உள்ளது.
ReplyDeleteசரி, கதை என்னனு பார்த்தால், ஒரு பேபி மையப்படுத்தி கதை நகர்கின்றது. கோட்டைக்கு வரும் ஒரு பேபியால் ஏற்படும் கூத்துக்களை செம லூட்டியாக சொல்லி உள்ளார்கள். பேபி கோட்டைக்குள் யார் மூலம் வருது? ஏன் வருது? யாருடைய குழந்தை? திரும்பவும் அங்கேப் போய் சேருதா? அல்லது கோட்டையிலேயே வளருதா? என காமெடியாக,கிளைமேக்ஸ் முன் நம்ம தமிழ் பட பாணியில் ஒரு ட்விஸ்ட் வேறு வைத்துத் தெறிக்க விட்டு உள்ளார்கள்.
அதிலும் பதுங்கும் கழுகு தன் பையன் கிரேசிக்கு ஹார்ஸ்க்கு (பெயர் எல்லாம் எங்க சார் பிடிச்சிங்க, செம்ம) எமிலிக்கு பெண் கேட்டு வரும் அந்த
சீக்வென்ஸ் எல்லாம் காமெடி அதகளம் தான். கர்னல் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு அதை காப்பாற்ற பொய் மேல் பொய் சொல்லி எடுத்து அவிழ்த்து விடும் அந்த 7-8 பக்கங்கள் சரியான காமெடி ரணகளம்.
இந்த கதை ஒரிஜினல் வெளி வந்து சரியாக 40 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போதே இந்த சித்திரங்களுக்கு அழகான வர்ண கலவை மெருகூட்டல் என்பதெல்லாம், இன்றளவும் இதை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. காவின் & லாம்பில் கைவரிசையில் இது ஒரு அட்டகாசமாக தொடர் என்ப தில் சந்தேகம் இல்லை. இவர்களின் கூட்டணியில் மொத்தம் 60 கதைகள் கிட்ட வந்தது என்பது மலைக்கச் செய்யும் ஒரு மேஜிக் நம்பர். நம்ம ரேடாரில் போர் சம்பந்தமாக கதைகள் (போர் அடிக்கும்) அவ்வளவாக வெளிவருவதில்லை என்பதாலும் தற்போதுள்ள ஒரே போர் சம்பந்தப்பட்ட ஜானர் இந்த ப்ளூகோட் கதை என்பதால், அதன் மேல் அளவிற்கு அதிகமான ஒரு ஈர்ப்பு.
இந்த டார்க் யூமர் காமெடியை, இந்த தொடர் தவிர்த்து நாம் எதிலும் பார்க்க முடியாது. இந்த தொடர் அமெரிக்கா உள்நாட்டு போர் சம்பந்தமாக இருந்தாலும் எடிட்டரின் தற்போதைய கதை தேர்வுகள் பற்றிச் சொல்லியாக வேண்டும். மெக்சிகோவில் பாதிரி மாதிரி அங்கி மாட்டிக் கொண்டு அலையும் அந்த கதை, அப்புறம் இப்போது வந்திருக்கிற இந்த கோட்டையில் பேபி போன்ற கதைகளின் தேர்வுகள் ஒரு நல்ல
சாய்ஸாக படுகிறது.
BLUECOATS, Once again, rocks!!!!🤩🤩🤩
விருப்பமுள்ளவர் மீண்டும் முதல் பத்தியை படிச்சீக்கோங்க...!!!
//இந்த கதை ஒரிஜினல் வெளி வந்து சரியாக 40 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போதே இந்த சித்திரங்களுக்கு அழகான வர்ண கலவை மெருகூட்டல் என்பதெல்லாம், இன்றளவும் இதை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது//
DeleteNot so சார்...பாசிட்டிவ்ஸ் / நெகடிவ்ஸ் கொண்டு பிரிண்ட் செய்திடும் காலகட்டம் - இது ஒரிஜினலாய் வெளியான சமயம்.. டிஜிட்டல் கோப்புகளாய் சகலத்தையும் மாற்றும் 2000+ காலகட்டத்தில் முக்கிய தொடர்களை remastering எனும் பிராசசில் மெருகூட்டினர். அதனால் தான் இன்று டாலடிக்கிறது.
And ஒரு கொசுறுத் தகவல் : சமீபமாய் பிரின்டிங்குக்கு பயனாகி வரும் inks முன்பை விட ஒரு grade உசத்தி!
வால், சூப்பர் சார்
Delete100
ReplyDeleteme the 103 !
ReplyDeleteஎமனுடன் ஒரு யுத்தம்.!
ReplyDeleteபுதிய வெளியீடு என்று நினைத்திருந்தேன். தங்களின் இந்தப் பதிவின் மூலமே அது மறுபதிப்பு என்றும், முதல் பதிப்பு 1980 என்பதும் தெரிந்தது !
போலவே ஸ்டெர்ன் கதைப் பற்றிய குறிப்புகள் - படிக்கும் போது கூடுதல் சுவாரஸ்யம் தருவதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை !
இந்தப் பதிவு, இந்த மாத புத்தகங்களின் தகவல் சுரங்கம் என்று சொன்னால் மிகையில்லை !
🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇
ReplyDeleteநண்பர்களே, அகில உலக தமிழ் டெக்ஸ்வில்லர் ரசிகர்களே@
லயன் காமிக்ஸின் பயணத்தில் ஆசிரியர் திரு Vijayan S விஜயன் அவர்கள் எத்தனையோ சாதனைகளை கடந்து சாதித்து வர்றார்.
ஒரு ஹீரோவின் 50வது, 100வது இதழ்கள், கதைகள் என்ற மைல்கற்களை டெக்ஸ் வில்லர் ஏற்கனவே வெற்றிகரமாகத் தாண்டி நம்மை வசிகரித்து வர்றார்.
இன்று நம் கைகளில் தவழ்ந்து வரும் டெக்ஸ் வில்லரின் சாகசம் "ஓட்டமதைக் கைவிடேல்..." கதைக்கு தனிசிறப்பு உண்டு....
*""லயன் காமிக்ஸின் "175"வது கதை வெளியான நாயகன்"" என்ற சிறப்பையும் இன்று டெக்ஸ் பெறுகிறார்....!*
ஆம் நண்பர்களே டெக்ஸ் வில்லர் தமிழில் சாகஸம் செய்யும் 175வது கதை இம்மாத "ஓட்டமதைக் கைவிடேல்"...
ஒரு காமிக்ஸ் நாயகனின் 175கதை வெளியாவது இன்றைய காலகட்டத்தில் அசாத்திய சாதனையே... வாழ்த்துகள் எடிட்டர் சார் & டீம் லயன்....💐💐💐💐💐💐💐
தொடர்ச்சியாக 200, 250,300....னு டெக்ஸின் பயணம் லயனில் தொடர வாழ்த்துகள்.....
#தொடர் கதைகள் ஒரே கதையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
#யங் டெக்ஸின் ஒரு குறிப்பிட்ட 2,3,4,5பாகங்கள் கொண்ட ஆர்க்குகள் ஒரே கதையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
#லயன் 250, தீபாவளி வித் டெக்ஸ், டைனமைட் ஸ்பெசல், Supremo ஸ்பெசல் போன்ற வற்றில் வந்திருந்த தனி தனி கதைகள் தனிதனியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
#வெளியீடு எண்கள் வழங்கப்படாத இலவச இணைப்புகளும் கதை எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
#மறுபதிப்புகள் ஆக சில கதைகள் வந்திருந்தாலும் அவைகள் ஒரு முறை மட்டுமே கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.
#டெக்ஸ்க்கு அடுத்தபடியாக லக்கி லூக், மாடஸ்தி, ஸ்பைடர் போன்ற லயன் ஹீரோக்கள் எண்ணிக்கையில் இருக்க கூடும்
#ஒரு டெக்ஸ் fan boy ஆக இயன்றவரை தகவல்களை திரட்டி உள்ளேன். 99% சரியாக இருக்க கூடும். லயன் காமிக்ஸ் எனும் 41ஆண்டுகால பதிப்புகளின் வரலாற்றை அலசி ஆராய்வதும் லேசுபட்ட விசயம் அல்ல. ஏதேனும் பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.
#இது ஒரு ரசிகனின் பார்வையில் பட்டியல் இடப்பட்டதே..மாற்று கருத்துகளுடன் வேறு எண்ணிக்கை கொண்ட பட்டியல் போடுவதும் அவரவர் விருப்ப தேர்வே!
--STV வித் KOK, ஷெரீப், பேபி & கனவுலகம்
ReplyDeleteதமிழ் டெக்ஸ் வில்லர் கதைகள்.....175°
1.தலைவாங்கிக் குரங்கு-1985
2.பவளசிலை மர்மம-1986
3.பழிவாங்கும் பாவை-1987
4.பழிக்குப்பழி-1987
5.ட்ராகன் நகரம்-1988
6.இரத்த முத்திரை-1988
7.வைக்கிங் தீவு மர்மம்-1989
8.மாய எதிரி-1989(மாடஸ்தியின் நடுக்கடலில் அடிமைகள் இதழில் இணைந்து வந்தது)
9.அதிரடிக் கணவாய்-1989
10.எமனோடு ஒரு யுத்தம்-1990
11.மரணத்தின் நிறம் பச்சை-1991
12.சைத்தான் சாம்ராஜ்ஜியம்-திகில் கோடைமலர்1991
13.பழிவாங்கும் புயல்-1991
14.கழுகு வேட்டை-1991
15.இரத்த வெறியர்கள்-1993
16.இரும்புக் குதிரையின் பாதையில்...!-1994(லயன் சென்சுரி ஸ்பெசல்)
17.பாலைவனப் பரலோகம்-1995(லயன் டாப்10 ஸ்பெசல்)
18.மரண முள்-1996
19.நள்ளிரவு வேட்டை-1996
20.மரண நடை-1997
21.கார்சனின் கடந்தகாலம்-1997
22.பாங்க் கொள்ளை-1997
23.எரிந்த கடிதம்-1998
24.மந்திர மண்டலம்-1999
25.இரத்த நகரம்-1999
26.எல்லையில் ஒரு யுத்தம்-2000
27.மரண தூதர்கள்-2000
28.மெக்ஸிகோ படலம்-2001
29.தனியே ஒரு வேங்கை, கொடூர வனத்தில் டெக்ஸ்& துரோகியின் முகம்(3பாக தொடர் கதை)-2002
30.பயங்கரப் பயணிகள் & துயிலெழுந்த பிசாசுகள்(இருபாக தொடர்)-2002
31.பறக்கும் பலூனில் டெக்ஸ்-2003
32.ஓநாய் வேட்டை& இரத்த தாகம்(இருபாக தொடர்)-2003
33.இருளின் மைந்தர்கள்-2003
34.சாத்தான் வேட்டை-2003
35.கபால முத்திரை& சதுப்பில் ஒரு சதிகார கும்பல்(இருபாக தொடர்)-2004
36. சிவப்பாய் ஒரு சிலுவை-2004
37.இரத்த ஒப்பந்தம், தனியாத தணல் & காலன் தீர்த்த கணக்கு(3பாக தொடர்)-2005
38.கானகக் கோட்டை-2006
39.பனிக்கடல் படலம்-2007
40.மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு& எமனின் எல்லையில் (3பாக தொடர்)-2008
41.சிவப்பாய் ஒரு சொப்பனம்-2013
42.பூத வேட்டை-2013
43.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் வில்லரின் முதல் தமிழ் வண்ண இதழ்)-2013
44.நீதியின் நிழலில்-தீபாவளிமலர்2013
45.மரண தேசம் மெக்ஸிகோ -தீபாவளிமலர்2013
46.நில் கவனி சுடு-2014
47.காவல் கழுகு-2014
48.சட்டம் அறிந்திரா சமவெளி-2014
49.வல்லவர்கள் வீழ்வதில்லை-2014
50.ஒக்லஹோமா-தி லயன் 250-2015
51.முகமில்லா மரண தூதன்-தி லயன் 250-2015
52.பிரம்மன் மறந்த பிரதேசம்-தி லயன் 250-2015
53.டைனோசரின் பாதையில்...!-தீபாவளி வித் டெக்ஸ்-2015
54.எமனின் வாசலில்...!-தீபாவளி வித் டெக்ஸ்-2015
55.சட்டத்திற்கொரு சவக்குழி-2016
56.திகில் நகரில் டெக்ஸ்-2016
57.விதி போட்ட விடுகதை-2016
58.தலையில்லாப் போராளி-2016
59.டாக்டர் டெக்ஸ்-2016
60.குற்றம் பார்க்கின்!-2016
61.ஒரு கணவாயின் கதை-"ஈரோட்டில் இத்தாலி"- இதழ்-2016
62.துரோகத்திற்கு முகமில்லை-2016
63.தற்செயலாய் ஒரு ஹீரோ-2016
64.சர்வமும் நானே!-தீபாவளி மலர்-2016
65.நீதிக்கு நிறமேது?-2016
66.ஆவியின் ஆடுகளம்-2017
67.அராஜகம் அன்லிமிடெட்-2017
68.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-2017
69.ஒரு வெறியனின் தடத்தில்-2017
70.கவரி மான்களின் கதை-2017
71.கியூபா படலம்-"லயன்300"-2017
72.கடற்குதிரையின் முத்திரை-2017
73.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-தீபாவளிமலர்-2017
74.அழகாய் ஒரு அராஜகம்-தீபாவளிமலர்-2017
75.ஒரு கணவாய் யுத்தம்-2018
76.விரட்டும் விதி-2018
77.வெண்பனியில் செங்குருதி-2018
78.பாலைவனத்தில் புலனாய்வு-2018
79.கடைசிப்பலி-2018
80.நடமாடும் நரகம்-2018
81.இரவுக்கழுகின் நிழலில்-2018
82.காற்றுக்கு ஏது வேலி-2018
83.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-2018
84.புயலுக்கொரு பிரளயம்-டைனமைட் ஸ்பெசல்-2018
85.தெற்கே ஒரு தங்கத்தேட்டை-டைனமைட் ஸ்பெசல்-2018
86.காதலும் கடந்து போகும்-தீபாவளி மலர்-2018
87.புனிதப் பள்ளத்தாக்கு-2018
88.காலனின் கானகம்-2018
89.யார் அந்த மரண தூதன்?-2018
90.சாத்தானின் சீடர்கள்-2019
91.பாலைவனத்தில் ஒரு கப்பல்-2019
92.பச்சோந்திப் பகைவன்-2019
93.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-2019
94.சிங்கத்தின் சிறுவயதில்-2019
95.நட்புக்கு நாட்களேது-2019
96.தகிக்கும் நியூ மெக்சிகோ-2019
97.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-2019
98.புதைந்து போன புதையல்-2019
99.சர்க்கஸ் சாகசம்-தீபாவளி மலர்-2019
100.சூது கொல்லும்-2019
Delete101.ரெளத்திரம் மற-2019
102.ஒரு துளி துரோகம்-பிப்ரவரி2020
103.இருளோடு யுத்தம்-மார்ச்2020
104.வானவில்லுக்கு நிறமேது!-மே2020
105.கைதியாய் டெக்ஸ்-ஜூன்2020
106.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020-யங் டெக்ஸ் 1-4
107.பந்தம் தேடிய பயணம்-செப்டம்பர்2020
108.யுத்த களத்தில் டெக்ஸ்-தீபாவளி மலர்-நவம்பர்2020
109.பனிவனப் படலம்-தீபாவளி மலர்-நவம்பர்2020
110.விண்டர் ஸ்பெசல்-நவம்பர்2020
111.ஒரு கசையின் கதை-டிசம்பர்2020
112.தங்கத்தின் பாதையில்-பிப்ரவரி2021
113.மின்னும் சொர்க்கம்-பிப்ரவரி2021
114.நெஞ்சே எழு-மே2021
115.ஒரு பிரளயப் பயணம்-ஜூலை2021
116.புத்தம் புது பூமி வேண்டும்-லயன்400-ஆகஸ்ட்2021
117.பனியில் ஒரு புதுநேசம்-ஆகஸ்ட்2021
118.கண்ணே கொலைமானே-அக்டோபர்2021
119.பொக்கிஷம் தேடிய பயணம்...தீபாவளி மலர்-நவம்பர்2021
120.ஓநாய் ஜாக்கிரதை-தீபாவளி மலர்-நவம்பர்2021
121.பருந்துக்கொரு பரலோகம்-தீபாவளி மலர்-நவம்பர்2021
122.திக்கெட்டும் பகைவர்கள்-டிசம்பர்2021-யங் டெக்ஸ்-5-9
123.பாலைவனத்தில் பிணம் தின்னிகள்-மார்ச்2022
124.சிகாகோவின் சாம்ராட்-ஏப்ரல்2022
125.விடாது வஞ்சம்-மே2022
126.ஒரு காதல் யுத்தம்-ஜூன்2022
127.புயலில் ஒரு புதையல் வேட்டை-ஜூலை2022
128.மெளன நகரம்-ஆகஸ்ட்2022
129.சொர்கத்தில் சாத்தான்கள்-செப்டம்பர்2022-யங் டெக்ஸ் 14&15
130.ஒரு மாயனோடு மோதல்-தீபாவளி மலர்-அக்டோபர்2022-யங் டெக்ஸ் 10-13
131.பருவத்தே கொலை செய்-தீபாவளி மலர்- அக்டோபர்2022
132.நிழல்களின் ராஜ்யத்தில்-டிசம்பர்2022
133.பகை பல தகர்த்திடு-ஜனவரி2023
134.பறக்க மறந்த பறவைகள்-பிப்ரவரி 2023
135.ஓநாய் வனத்தில் டெக்ஸ்-மார்ச்2023-யங் டெக்ஸ்-16&17
136.கலவர பூமியில் கனவைத் தேடி-ஏப்ரல்2023
137.ஒரு கெளபாய் காதலி-மே2023
138.கரையெல்லாம் குருதி-ஜூன்2023
139.கைதியாய் கார்சன்-ஜூலை2023
140.மீண்டு(ம்) வந்த மாயன்- ஆகஸ்ட் 2023
141.திக்கெட்டும் திகில்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023
142.சர்ப்பத்தின் சின்னம்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023
143.வந்தார் வென்றார்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023
144.பூதம் காத்த புதையல்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023
145.சகோதரனின் சகாப்தம்-V10-அக்டோபர்2023
146.The Tex சிக்ஸர் ஸ்பெசல்-தீபாவளி மலர்-நவம்பர்2023-யங் டெக்ஸ்-18-23
147.குற்றத்தின் குரல்- சந்தா இலவச இணைப்பு -நவம்பர்2023
148.உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி-டிசம்பர்2023
149.பருந்துக்கொரு பொறி-சந்தா இலவச இணைப்பு-டிசம்பர் 2023
150.கண்ணீருக்கு நேரமில்லை-ஜனவரி2024-யங் டெக்ஸ்-24&25, பகைவருக்குப் பஞ்சமேது?.-ஏப்ரல்2024, யங் டெக்ஸ்-26&27, டெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ்-டிசம்பர்2024-யங் டெக்ஸ்-28---(5பாக கதை.)
Delete151.காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்-பிப்ரவரி2024
152.புயலுக்குப் பின்னே பிரளயம்!-மார்ச்2024
153.சிறைப் பறவையின் நிழலில்-ஜூன்2024
154.சூறாவளியின் தடத்தில்-சந்தா ஃப்ரீ-ஆகஸ்ட்2024
155..சினம் கொண்ட சின்ன கழுகு-செப்டம்பர்2024
156.இறுதி ஆட்டம்-V22-அக்டோபர்2024
157.பனிமண்டலப் போராளிகள்-தீபாவளி மலர் நவம்பர்2024
158.The Magic Moment Special- (MMS1-டிசம்பர்2024&MMS2-மே2025)
159.இளமை எனும் பூங்காற்று-ஜனவரி2025
160.தலைநகரில் தலைமகன்-பிப்ரவரி2025
161.சாபம் வாங்கிய சுரங்கம்-மார்ச்2025
162.சாபங்கள் சாய்வதில்லை-ஏப்ரல்2025
163.சட்டத்தோடு சடுகுடு-ஜூன்2025
164.உதிரம் பொழியும் நிலவு-ஆகஸ்ட்2025
165.எட்டும் தூரத்தில் யுத்தம்-செப்டம்பர்2025
166.மெக்ஸிகோவில் ஓரு மாய ரயில்-தீபாவளி மலர்-அக்டோபர்2025
167.புயலில் ஒரு சூறாவளி-டிசம்பர்2025-யங் டெக்ஸ்
168.விதி எழுதிய வெற்றி வரிகள்-ஜனவரி2026
169.என் இனிய பொய்யே-பிப்ரவரி2026
170.கார்சனைக் காணோம்-மார்ச்2026
171.மரணம் மறந்த மம்மி-ஏப்ரல்2026
172.நித்திரையில்லா நித்தியன்-மே2026
173.இரத்தம் ஓர் நிறம்-ஜூன்2026
174.நிதிக்கு நீதி-ஜூலை2026
*175.ஓட்டமதைக் கைவிடேல்-செப்டம்பர்2026*
மகிழ்ச்சியான விஷயம்! இதனை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.
Deleteதலைவன் டெக்ஸ் வில்லரின் புத்தகங்களை வரிசைப்படி அடுக்கி வைக்க வெகு நாட்களாக தேவைப்பட்டதொரு தகவல் பதிவு..
DeleteCopy Paste செய்துக் கொண்டேன்! மிக்க நன்றி!
டெக்ஸ் welcone back. பக்கா புள்ளி விவரங்கள். நன்றி
Deleteஅடடே, 175-ஐ தொட்டாச்சா சார்....?! இந்த நம்பர்களுக்குள் நிறையவே தகவல்கள் பொதிந்துள்ளன - ஏதேனும் ஒரு சோம்பலான வாரப் பதிவில் எழுத முனைகிறேன்..!
Deleteமிக அழகான தொகுப்பு நண்பரே.. வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Deleteஆசிரியரிடமிருந்து அந்த அழகான தொகுப்பை எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏
Deleteஓடு.. ஓடு.. ஓடு.. ஓடு.. ஓடு.. ஓடு.. ஓடு.. ஓடு.. வராம்பாரு வேட்டைக்காரன் !!
ReplyDeleteமுதல் கதையாகப் படித்து முடித்து விட்டேன்! கதை மிக நன்றாக இருக்கிறது! பலவித திருப்பங்களுடன் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்கிறது! அரிஸோனாவின் நிலப்பரப்புகள் கதையெங்கும்
அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன! கதையின் ஊடே காட்சிப்படுத்தப்பட்டுள்ள இயற்கையின் சித்திரங்கள் மனதைப் பரவசப்படுத்துகிறது! ஒரே மூச்சில் மூன்று பாகங்களையும் படித்து விட்டேன்! இளம் டெக்ஸின் ரசிக்க வைக்கும் இன்னும் ஒரு புத்தகம்!
காமிக்ஸ் தொடர்ச்சியாகப் படித்து வெகு நாட்களாகி விட்டதால், இந்தக் கதையை படிக்கும் போது இளம் டெக்ஸ் எனக்கு கிட் வில்லர் கதாபாத்திரமாகவே நினைத்து மனம் பிரமையில் ஆழ்ந்து விட்டது! முதல் பாகம் முடிந்த பிறகு தான் மனம் யதார்த்தத்தை ஏற்று கொள்ளத் தொடங்கியது! கார்சன் இல்லாததால் வசனங்கள் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்திருந்தது. அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த இந்தக் கதை வண்ணத்தில் வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும்!
டெக்ஸ் வில்லர் - ஒரு முன்கோபி; கொஞ்சம் கூட பொறுமை கிடையாது என்று வருவோர் போவாரெல்லாம் இங்குக் கமெண்ட் போடுவார்கள்! ஏன் டெக்ஸ் அப்படி இருக்கிறார் என்று யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை! தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக, சட்ட அதிகரிகளால் வேட்டையாடப்படும் ஒரு நபராக, தொடர்ந்து தப்பித்து ஓடிக்கொண்டே இருந்தால் யாராயிருந்தாலும் பொறுமை ஒரு கட்டத்தில் அறவே நீங்கிவிடும், முன்கோபமும் அதிகமாகிவிடும்! இது டெக்ஸ் வில்லரின் குற்றமல்ல - சட்டத்தின் குற்றமாகும் என்பதை இந்தக் கதையின் மூலம் உணர்ந்து கொள்ள முடிந்தது! ஒரு சாதாரண சிறு நகரின் ஷெரிப்புக்கு டெக்ஸ் கொடுக்கும் மரியாதை கூட அலாதியான விஷயம்தான்!
தொடரும்..
முன்பக்க அட்டைப்பட ஓவியம் வசீகரிக்கவில்லை, காரணம் தெளிவில்லாத சித்திர அமைப்பு! பின்பக்க அட்டைப்படம் நன்றாக உள்ளது, இன்னும் கொஞ்சம் தெளிவாக அமைந்து இருந்தால் மிக அழகாக அமைந்திருக்கும்! உதாரணமாக பக்கம் 91ல் நடுவில் உள்ள சித்திரம் கூட நன்றாக இருக்கிறது!
Deleteஎன்னுடைய மதிப்பெண்:
மறு வாசிப்பிற்கு உகந்த புத்தகம்! கலரில் மறு பதிப்பாக வந்தால் நன்றாக இருக்கும்!
பின்குறிப்பு: பாயாசம் என்பது சுத்த சைவம் ஆகும்! பக்கம் 77ல் டெக்ஸ் வில்லரால் பேசப்படும் வசனம் "என்னைக் கொண்டு ஒரு பாயாசம் போடாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறதே?!" ...
என்பது மட்டும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது! நன்றி!
உங்க ஊரிலே மட்டுமல்ல சாரே - லோகம் முழுக்கவே பாயசம் சைவம் தானே நண்பரே... அந்த வரியில் உள்ளது ஒரு metaphor மாத்திரமே - நேரடி பொருள் படுவது நஹி...!
Deleteஅப்புறம் புதுசா ID எனும் மருவெல்லாம் போட்ருக்கீங்க - பச்சே எழுதுற ஸ்டைல் எனும் கொண்டை பழசாவே கீதே நண்பரே...? இதுக்கு எதுக்கு மூட்டை குடவுன் மாறணும்?
//இப்படியாக எனக்குப் பிடித்த கதைகளின் பெயர்களை எழுத நினைக்கும் போது தான் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது! நான் கமெண்டுப் போடும்
Deleteஇந்த பெயர் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை ! எனவே அடுத்த முறை பதிவிடும் போது புதிய பெயரில் வருகிறேன் ; வந்தவுடன் சொல்லியும் விடுகிறேன் !
Posted by critic π to Lion-Muthu Comics at 31 Aug 2026, 17:28//
//உங்க ஊரிலே மட்டுமல்ல சாரே - லோகம் முழுக்கவே பாயசம் சைவம் தானே நண்பரே... அந்த வரியில் உள்ளது ஒரு metaphor மாத்திரமே - நேரடி பொருள் படுவது நஹி...!//
Deleteசார், அது டெக்ஸ்க்கு நான் காய்ச்சிய பாயாசம் :) பாயாசம் போட இயலா விட்டால் சூப் எனும் பொருள்பட :)
ஆங்கிலத்தில் பல கார்ட்டூன் கதைகள் இருந்தாலும் / படித்தாலும், அழகு தமிழில் படிக்கவே ஆசை. நம் வாசகர்கள் மனது வைக்க வேண்டும்.
ReplyDeleteஸ்மர்ஃஸ், சுஸ்கி விஸ்கி வருடத்திற்கு ஒன்றாவது (2-3 கதைகள் கொண்ட ஒரு கலெக்டர்ஸ் இதழாக வந்தால் நன்றாக இருக்கும்.
- கண்களை திறந்து கொண்டே கனவு காணும் கோட்டை சாமி..
"தலைகீழா தான் குதிப்பேன்"னு இக்கட உள்ள கோட்டைச்சாமி இப்போல்லாம் கனவு காண்றதில்ல சார் 🥹
DeleteThis comment has been removed by the author.
Deleteமுன்பணம், பின்பணம் என்பது சிக்கலல்ல ஸ்டீல் - கபாலம் பணால் என்பதே பிரச்னை 🤕
Deleteவிதி எழுதிய விசாரணை - 70 பக்கத்தில் ஓவ்வொரு ஓவியமும் கதை சொல்லும், இந்த பக்கத்தில் வரும் ஒருவரி வசனம் "முடிச்சதாப்பா"; இத வார்த்தையை படித்தவுடன் இயலாமையால் நாம் பேசுவோமே அதே வசனமாக இங்கு வெளிப்பட்டு மனதை பிசைந்து எடுத்தது. அதே பக்கத்தில் கடைசி பேனலில் அந்த சிறுவனை ஸ்டெர்ன் தனியாக கீழே இறக்க முடியாமல் சத்தமாக கதறும் இடம் நம்மையும் கதற செய்தது.
ReplyDeleteஅடுத்த பக்கத்தில் "முடிச்சமட்டுக்கும் போராடிப் பார்த்தேன்... என் மனசாட்சியே அதுக்கு சாட்சி" இதனை விட ஸ்டெர்ன் நிலைமையை தெளிவாக சொல்ல முடியாது!
😥😢😢😢😢
Deleteஅங்கே சற்றே கூடுதல் அழுத்தம் தர கதாசிரியருக்குத் தோன்றியதற்கு காரணம் உள்ளது சார்....
Deleteசாவோ, சடலங்களோ வெட்டியானுக்குப் புதுசே கிடையாது - yet ஒரு புது அறிமுகத்தின் மரணம் ஸ்டெர்னை உலுக்குகிறது...! அந்த நட்பும், மனிதபிமானமும் பிரவாகம் எடுக்கும் கிளைமாக்ஸ் simply awesome...
// ஒரு புது அறிமுகத்தின் மரணம் ஸ்டெர்னை உலுக்குகிறது...! //
Deleteஇந்த கோணத்தில் நான் யோசிக்கவில்லை சார், சூப்பர். அதே நேரம் தனது மனதுக்கு நெருங்கியவர்களின் மரணத்தை முதலில் நேரில் பார்ப்பதன் வெளிபாடாகவும் இதனை நான் உணர்கிறேன் சார்.
வேண்டப்பட்டவர்களுக்காக கண்ணீர் சிந்துவது இயல்பு சார்.... இதுவோ வேறொரு வகை....! ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான ஆற்றமாட்டாமையும் சேர்ந்து கொண்டு வெடித்துச் சீறுகிறது!
Deleteநான் சொல்ல வந்தது ஒரு வெட்டியான் வேண்டபட்டவர்களுக்காக கண்ணீர் சிந்துவதை சார்.
Deleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார்; மிகவும் பொருத்தமாக உள்ளது சார்.
121st
ReplyDeleteசார் நான் இலங்கையில் இருக்கிறேன் இங்கு தமிழ் இதழ்கள் சற்று குறைவாகவே உள்ளது எவ்வாறு தங்கள் இதழ்களை பெற்று கொள்ள முடியும் PDF முறையில் பதிவேற்றம் செய்ய முடிந்தால் நன்று....
ReplyDeleteவாய்ப்பில்லை நண்பரே - மற்ற இலங்கை நண்பர்களைப் போலவே புக்ஸ் வாங்கிடத் தான் வேண்டியிருக்கும்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteயார்லாம் ட்விட்டர் (X) / FB லே இன்னிக்கி ரொம்பவே ஐக்கியமாகியாச்சு 🥹🥹?
ReplyDelete🤔🤔🤔
Deleteஅங்கே என்ன நடந்தது????
Deleteதமிழகமே இன்னிக்கி அங்கே தான் குடியிருக்கு சார் 🥹
Delete***ஓட்டமதைக் கைவிடேல்***
ReplyDeleteடெக்ஸின் மூன்று சாகஸங்கள் செம விறுவிறுப்பு.
சாகஸசங்கள் என்றே சொல்ல வேண்டும், கொள்ளையர்களை நிம்மதியாக இருக்க விடாமல் சாகஸங்கள் செய்து உயிருடன் வந்து தொல்லை குடுக்கிறார்.
வன்மேற்கின் சித்திர ரசிகர் அல்லது டெக்ஸ் மற்றும் ஆக்ஷன் ரசிகர் எனில் மிஸ் செய்திட வேண்டாம்
சித்தரங்களில் வன்மேற்கின் இயற்கையை கருப்பு வெள்ளையில் அட்டகாசமாய் தந்துள்ளார் De Angles
ஒரு அதகளமான ரேஸி ரீடிங் அனுபவம்
அருமை ரம்யா
Deleteநன்றி பரணி சகோ
Deleteவிதி எழுதிய விசாரணை
ReplyDeleteஇந்த சமூகத்தில் ஒவ்வொருவருவருக்கும் நடுவில் கண்ணுக்கு தெரியாத ஒரு சுவர் இருந்துக் கொண்டே இருக்கிறது. அந்த சுவர்களின் பரிமாணம் அவனது அடையாளத்தில் மேலும் வலுப் பெறுகிறது. அடையாளம் இல்லாத மனிதன் ஒன்று அனைவராலும் வேட்டையாடப் படுவான் அல்லது பயங்கரமான வேட்டை மிருகமாக இருப்பான். இதில் முதல் தரத்தில் நமது கதாநாயகன் இருக்கிறான்.
நம் கதாநாயகனின் அடையாளத்தை அறிந்துக் கொள்ள இந்தக் கதையில், மாந்தர்கள் படும் பாடு, உண்மையில் இந்த சமூகம் இயங்கும் விதத்தை அப்படியே தோலுரித்து காட்டுகிறது.எந்த இனத்தை சார்ந்தவன்? எந்த மதத்தை சார்ந்தவன்? எந்த அரசியல் நிலைப்பாடு உள்ளவன்? எந்த சாதியை சார்ந்தவன்? அவன் பேசும் மொழி என்ன? அவன் உண்ணும் உணவு என்ன? அவன் உடுத்தும் உடை என்ன? அவனது பொருளாதார நிலை என்ன? என்பதை பார்வையில் எடை போடுவதையே இந்த சமூகம் செய்து கொண்டே இருக்கிறது. பார்வையில் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காத பொழுது, நேரடியாகவே கேள்வியாக வைக்கப் படுகிறது. அவர்களுக்கு சாதகமான பதில் வந்தால் நீங்கள் வாழலாம், இல்லையென்றால் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பலிக்கடாவாக்கி இந்த உலகத்தை விட்டே அனுப்பவதில் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி சுழலும் அனைத்து தோல்வியாளர்களும் எடுக்கும் ஆயுதமாக உள்ளது.
அடையாளங்களுக்குள் சிக்கும் மனிதர்கள், ஒரு வித பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் சிலர் தனித்துவமாக இருக்க விழைவதுண்டு. அவர்களை பிரச்சினை நிழல் போல தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.
வந்தேறி என்று சொல்பவர்களை கண்டால் எனக்கு தோன்றும் முதல் சிந்தனை. இங்கு யார் வந்தேறி இல்லை என்பதே? ஆனால் ஒரு MOB CULT சிந்தனையில் ஊறித் திளைத்திருக்கும் மாக்களுக்கு வந்தேறி என்று முத்திரை குத்தி அவனை ஒழித்துக் கட்ட பார்ப்பதே முதல் வேலையாக உள்ளது.
ஒருவனின் சம்பளம் என்பது ஒருவனின் பொருளாதார நிலையை பொறுத்து மாறுபடுகிறது. அதற்காக அதிக சம்பளம் கேட்பவனை சோம்பேறி என்பதும். குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வருபவனை ஆபத்தாக பார்ப்பதும் முட்டாள்தனமானது.
அப்படிப்பட்ட முட்டாள்தனத்தை சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அதிகாரம் உள்ளவர்களே மீறும் பொழுது, ரத்தம் சூடேறுகிறது.
குண்டடி பட்டு, உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் மேலாளரின் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த கை வைத்து அழுத்தி கொண்டிருக்கும் ஒருவனை பார்த்து கையை மேலே தூக்கு என்று துப்பாக்கியுடன் கத்தும் காவலரிடம் இருந்து கதை வெறுப்பின் கோர முகத்தை எடுத்துக் காட்ட துவங்குகிறது.
ஆனால் ஒரேயடியாக நெகட்டிவ் டெம்ப்லேட்டில் சிக்கிக் கொள்ளாமல், உன் நேரத்தை வீணாக்காதே நண்பா என மேலாளர் இறந்ததை எடுத்துக் கூறி கலங்கிய கண்களுடன் பார்க்கும் காவலர், நம்பிக்கையின் பக்கம் என்னை கூட்டி செல்கிறார்.பெரும் கொலை கொள்ளை கும்பலின் தலைவன் மாட்ராங்கா கடைசியில் நீதியும் நியாயமும் என்றுமே சாகாது என்று கூறுவதன் மூலம் யார் மீது தப்பு இருக்கிறது என கதாசிரியர் தெளிவாக நமக்கு உணர்த்துகிறார்.
ஓவியங்கள் இந்தக் கதையின் ப்ளஸ் பாய்ண்ட். அதுவும் நம்ம கதாநாயகனின் கண்களில் எத்தனை உணர்ச்சிகள். வசனமே தேவைப்படாத பேனல்கள், அவனது கண் விழிகளின் மொழியிலேயே கடந்து செல்கிறது.
வந்தேறி என்று ஒருவன் மீது வெறுப்பை கட்டியமைக்காமல், யார் தப்பு செய்கிறான்? எங்கு இந்த சிஸ்டம் பிழையாகிறது என்று நாம் சிந்திக்க தொடங்கும் பொழுது இந்த பூமி வாழ்வதற்கான ஏற்ற இடமாக இருக்கும் அது வரை மரணத்தை எதிர்த்து போராடும் ஒரு பெரும் போர்க்களமாகவே இருக்கும்.
கதை - மதிப்பெண்ணுக்கு அப்பாற்பட்டது
ஓவியங்கள் - மதிப்பெண்ணுக்கு அப்பாற்பட்டது
மேக்கிங் - 9/10
சுரேஸ் எனும் சூரியஜீவா
திருவண்ணாமலை
//அவர்களுக்கு சாதகமான பதில் வந்தால் நீங்கள் வாழலாம், இல்லையென்றால் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பலிக்கடாவாக்கி இந்த உலகத்தை விட்டே அனுப்பவதில் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி சுழலும் அனைத்து தோல்வியாளர்களும் எடுக்கும் ஆயுதமாக உள்ளது.//
Delete😞😞😞
வாரே வாவ். சூப்பர் சார் 🙌
Delete//ஆனால் ஒரேயடியாக நெகட்டிவ் டெம்ப்லேட்டில் சிக்கிக் கொள்ளாமல், உன் நேரத்தை வீணாக்காதே நண்பா என மேலாளர் இறந்ததை எடுத்துக் கூறி கலங்கிய கண்களுடன் பார்க்கும் காவலர், நம்பிக்கையின் பக்கம் என்னை கூட்டி செல்கிறார்.//
Deleteஇதே போல நல்லுள்ளங்கள் கதையில் ஆங்காங்கே தலை காட்டுகின்றனர் சார்... குறிப்பாக க்ளைமேக்சில் காவலர்கள் ஓட்டி வரும் வண்டியை ஒட்டு மொத்தமாய் வெறி கொண்ட ஜனம் சூழும் போதும், வண்டியை ஸ்டேஷனுக்கு விரட்ட முனையும் ஏட்டையா...
//ஜனம் சூழும் போதும், வண்டியை ஸ்டேஷனுக்கு விரட்ட முனையும் ஏட்டையா...//
Deleteகாப்பாற்றும் வாய்ப்பு மிக மிக குறைவு என்பது புரிந்தாலும், பயத்தை தாண்டி அவர் எத்தனித்த போது அட சொல்லாதீங்க சீக்கிரமாக வண்டியை விடுங்க என மனம் கூச்சலிட்டது
Good review !
Deleteஆனால், இந்தப் பின்னூட்டத்தில் காணப்படும் தங்களின் சமூகம் சார்ந்தப் பார்வைகள் - பல இடங்களில் முரண்பட்டதாக இருக்கிறது! தற்காலத்தில் அவை அனைத்தும் நகரத்தில் வாழும் மக்களுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாத விஷயங்கள் என்பது என் கருத்து!
இப்போல்லாம் சாரே - ஈ click baits, rage baits இவ்விட தளத்தில் ஈர்ப்பினை ஈட்டுவதில்லா.....!
Delete//வசனமே தேவைப்படாத பேனல்கள், அவனது கண் விழிகளின் மொழியிலேயே கடந்து செல்கிறது.//
Delete+9
//இப்போல்லாம் சாரே - ஈ click baits, rage baits இவ்விட தளத்தில் ஈர்ப்பினை ஈட்டுவதில்லா.....!//
Delete[........ அவர்களுக்கு சாதகமான பதில் வந்தால் நீங்கள் வாழலாம், இல்லையென்றால் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பலிக்கடாவாக்கி இந்த உலகத்தை விட்டே அனுப்பவதில் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி சுழலும் அனைத்து தோல்வியாளர்களும் எடுக்கும் ஆயுதமாக உள்ளது]
இது முரண்பாடான கருத்து என்று கூறுவதில் எங்கிருந்து click baits, rage baits வருகிறது என்று புரியவில்லை!
நன்றி கடலம்மா
Deleteநன்றி பரணி சார்
Deleteஎடி. சார், 100% ரசித்தேன்.. Thanks for the treat sir
Delete//நகரத்தில் வாழும் மக்களுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாத விஷயங்கள் என்பது என் கருத்து//
Deleteசமீபத்தில் சென்னக மேடவாக்கத்தில் வாடகைக்கு வீடு பார்த்தேன். என் பெயர் சுரேஸ் என்றும் என் மனைவியின் பெயர் நாராயணி என்றும் வீட்டு உரிமையாளரிடம் சொன்னேன்.
நீங்கள் கிரிஸ்டியனா என்று கேட்டார் house owner. Medavakkam நகரத்தில் வராது என்று நான் நினைக்கவில்லை...
But thanks for the appreciation of my review.
தங்களின் பதில் பதிவுக்கு நன்றி!
Delete//கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பலிக்கடாவாக்கி இந்த உலகத்தை விட்டே அனுப்பவதில் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி சுழலும் அனைத்து தோல்வியாளர்களும் எடுக்கும் ஆயுதமாக உள்ளது//
இதற்கும் தங்கள் பதிலுக்கும் சம்பந்தம் இல்லையே சார்!
சுரேஷ், நீங்கள் சொல்லும் விஷயம் எல்லா இடத்திலும் நடக்கிறது, கிராமம், நகரம், இந்தியா, வெளிநாடு என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது 😒
DeleteAbsolutely Bharani sir. Yesterday in Singapore there was a protest against indians
Deleteஇதற்கும் தங்கள் பதிலுக்கும் சம்பந்தம் இல்லையே சார்!//
Delete//ஆனால், இந்தப் பின்னூட்டத்தில் காணப்படும் தங்களின் சமூகம் சார்ந்தப் பார்வைகள் - பல இடங்களில் முரண்பட்டதாக இருக்கிறது! தற்காலத்தில் அவை அனைத்தும் நகரத்தில் வாழும் மக்களுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாத விஷயங்கள் என்பது என் கருத்து!//
என்னிடம. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறேன் சார்
//கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பலிக்கடாவாக்கி இந்த உலகத்தை விட்டே அனுப்பவதில் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி சுழலும் அனைத்து தோல்வியாளர்களும் எடுக்கும் ஆயுதமாக உள்ளது//
Deleteஇதற்கும் தங்கள் பதிலுக்கும் சம்பந்தம் இல்லையே சார்!//
இதற்கு பதில் வரலாறுகளில் உள்ளது சார். பெரிய பதிவாக போகும்.. நேரம் கிடைத்தால் எழுதுகிறேன் சார்
+1
Deleteகோட்டையில் ஒரு குட்டிப் புயல்
ReplyDeleteகாமெடி வசனங்கள் இயல்பாக கதையுடன் ஒன்றிப் (-1) போவதால் நிறைய இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது! பதுங்கும் கழுகுக்குக் கதையில் தந்த முக்கியத்துவம் போன்று, கௌரவத் தோற்றத்தில் தோன்றும் பறக்கும் கழுகு வரும் காட்சிகள் Super! உபக் கதாபாத்திரங்களாக வரும் பதறும் எலியும், பாயும் பாம்பும் கூட Super!
பக்கம் 37ல் உள்ள கடைசிச் சித்திரம் - ரூபி மற்றும் ஸ்கூபி, கோபம் வரும்போது அவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை நம் கற்பனைக்கே விட்டு விடுவது போல் அமைத்து இருப்பது மிகவும் ரசிக்க வைக்கிறது :) !
கார்ட்டூன் கதைகளில் கொஞ்சம் கூட லாஜிக்கே இருக்காது என்ற பிம்பத்தை இக்கதை உடைத்துள்ளது! இக்கதையெங்கும் லாஜிக் மீறலே இல்லாமல், வெகு சிறப்பாக அதிரடிச் சிரிப்பு வரும் வகையில் கதை அமைந்திருப்பதே இம்மாத ப்ளூகோட்டின் வெற்றியாக கருதுகிறேன்!
என்னுடைய மதிப்பெண்:
வெகுவாக ரசித்தேன் ; மனம் விட்டுச் சிரித்தேன் ; நிச்சயமாக முதல் இடத்திற்கு போட்டிப் போடும் கதையம்சம் கொண்டது இம்மாத புத்தகம் !
பின்குறிப்பு: இம்மாத ப்ளூகோட் புத்தகத்தை ஆர்வமாக படிக்கத் தூண்டும் வகையில் இங்கு பதிவிட்ட வாசகர் Chick Billக்கு என் நன்றி!
//கார்ட்டூன் கதைகளில் கொஞ்சம் கூட லாஜிக்கே இருக்காது என்ற பிம்பத்தை இக்கதை உடைத்துள்ளது!//
Deleteகொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத கருத்து சார்வாள்...!
//கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத கருத்து சார்வாள்...!//
Delete:)
திருத்திக் கொள்கிறேன்! பெரும்பாலான ?! அல்லது சரிபாதியாக?! அல்லது சில கார்ட்டூன் வரிசையில்?!
"கொஞ்சம் கூட" என்பதை எடுத்துப்புடலாம் சார்... So
Delete"லாஜிக்கே இல்லாத கருத்து சார்வாள்...!"
//கொஞ்சம் கூட" என்பதை எடுத்துப்புடலாம் சார்... So
Delete"லாஜிக்கே இல்லாத கருத்து சார்வாள்...!"//
Okay சார்!
கற்பனைப் புனைவுகள் எனும் போதே suspension of logic ஒரு அங்கமாயிற்றே சார்....? அதில் கார்ட்டூன்கள் மட்டும் என்ன பாவம் பண்ணின...?
Deleteகரெண்டு பொந்துக்குள் விரல் விட்டால் மாயமாவதை நாம் ஏற்றுக் கொண்டதால் தான் ஐந்தரை தசாப்தங்களாய் மாயாவி நம்மிடையே கோலோச்சி வருகிறார்...!
தோட்டாக்கள் தீரவே தீராத பிஸ்டல்கள் நமது கௌபாய் நாயகப் பெருமக்கள் அனைவரிடமும் உண்டு என்பதை துளித் தயக்கமும் இன்றி ஏற்றுக் கொண்டு அவர்களோடு பயணிக்கிறோம்!
ஊர் ஊராய், வெவ்வேறு பெயர்ககோடு மாறி மாறி மொத்து வாங்கினாலும் நம்மவர் XIII-க்கு குணா கமல் போல எதுவும் நேராதென்று நம்புகிறோம்...!
கோடீஸ்வரக் கோமகன் லார்கோவின் எதிரணியில் இருப்போர் யாருக்குமே இவரது தில்லும், சூட்சமங்களும் இராது - அவன்கள் அம்புட்டு பேரும் தோற்கப் பிறந்த பீஸ்கள் என்று உறுதி கொள்கிறோம்!
அப்புறம் பாவப்பட்ட காமெடி அணியிடம் மட்டும் லாஜிக் மீட்டரை உசத்திப் பிடிப்பானேன் சார்..?
மன்னிக்க வேண்டும் சார்! காமிக்ஸ் மட்டுமல்ல நாம் எல்லோரும் ரசிக்கும் சினிமா, பாடல், கவிதை கூட கற்பனை புனைவுகள் தான் என்பதில் மாற்றமில்லை! அவரவர்களுக்கு உள்ள தனிப்பட்ட ரசனையின் பாற்பட்டு, அவர் அவர்களுக்குப் பிடித்ததை ரசிக்கிறோம் ; ஆராதிக்கிறோம்! அதுவே இன்று வரை நடைமுறை என்பதில் நான் மாறுபடவில்லை!
DeleteAvengers Endgame - ன் வில்லன் Thanos ஐ ரசித்த பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் லாஜிக் பற்றி எல்லாம் நான் கவலைப்பட்டதில்லை!
உங்கள் கருத்தில் நான் மாறுபடவில்லை! இந்தக் கதையில் லாஜிக் மீறல் இல்லை என்பதை விவரிக்க நினைத்தபோது, எதிர் வினையாக அவ்வாறு வாக்கியத்தை உபயோகிக்க வேண்டியதாகி விட்டது! மற்றபடி நான் காமிக்ஸில் லாஜிக் எல்லாம் பார்ப்பதில்லை சார்!
Top 4 தரவரிசை September!
ReplyDeleteமுதலிடம்!
1.விதி எழுதிய விசாரணை..! - சோகம்/துயரம்!
1.கோட்டையில் ஒரு குட்டி புயல் - கார்ட்டூன்/ காமெடி!
1.ஓட்டமதைக் கைவிடேல்.! - அதிரடி/ஆக்ஷன்!
இம்மாதம் மூன்று புத்தகங்களும் அந்தந்த ஜானரில் முதலிடம் பிடித்துள்ளன !
இரண்டாம் இடம்
2.எமனுடன் ஒரு யுத்தம்.!
0
இளம் டெக்ஸ் வருடத்திற்கு இரண்டு தொகுப்புகள் வந்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteதெறிக்கும் அட்டைப்படங்கள் இளம் டெக்ஸ் கதைகளில் மிகப்பெரிய ப்ளஸ்
ஓட்டமதைக் கைவிடேல் (இளம் டெக்ஸ்)
ReplyDeleteTitle-க்கு ஏத்த மாதிரியே, இந்தக் கதையோட அசுர ஓட்டம், புத்தகத்தை நம்ம கையில் இருந்து விடாமல் அப்படியே பற்றிக்கொள்ள வைக்குது!
தேடப்படும் குற்றவாளி நம்ம Tex. Sheriff-உடன் partnership போட்டுக்கொண்டு, Bank கொள்ளையர்களைத் தேடித் தேடி வேட்டையாடுகிறார்.
No politics, no story layers.
Almost 200 pages எப்படி போச்சுன்னே தெரியல. Full and full action தான். ஒரு 2 லட்சம் bullets சுட்டுத் தள்ளியிருப்பாங்க போல! 😂
As usual, இதுவும் கண்டிப்பா இந்த year hit list!
என்னோட favourite Tex artist Ortiz தான். ஆனால் இந்த Artwork-ல இருக்குற ஆட்களையும் background-ஐயும் distinguish பண்ணிப் பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இது இந்த மாதிரி artwork-ல common-ஆ இருக்குற விஷயமா? இல்ல desert-ல இருக்குற harsh-ஆன வெயில், high sun rays-ஐ காட்டுறதுக்காகவே இப்படியொரு effect use பண்ணியிருக்காங்களா? இல்ல எனக்குத்தான் ஏதாவது eye issue இருக்குமா?
Saguaro புத்தகத்தைப் படிக்கும்போதும் இதே மாதிரி issue எனக்கு இருந்தது.
செம விமர்சனம்
Deleteவணக்கங்கள் சகோ
Deleteவிமர்சனம் அருமை
இளம் டெக்ஸ் க்கு மெயினாக தொடருபவர் Roberto De Angelis. இது இவரது ஸ்டைல். அவ்வப்போது சில பாகங்களுக்கு மற்ற ஓவியர்கள் தலை காட்டுவார்கள்
First look rating
ReplyDelete1. ஓட்டமதை கைவிடேல்
2. எமனுடன் ஒரு யுத்தம்
3. Stern
4. Blue coats
After reading
1. Stern
2. Young TeX
3. Blue coats
4. எமனுடன் ஒரு யுத்தம்
Super. இன்னும் யங் டெக்ஸ் படிக்கவில்லை. இப்போது வரை ஸ்டர்ன்தான் மனதில் ஓடிக்கொண்டு உள்ளது.
ReplyDeleteஅந்த கதையின் தாக்கம் அப்படி
Deleteஇந்த ஆல்பத்தின் பின்னணி பற்றி ஒரு வீடியோ பதிவு சீக்கிரமே வரும் folks....இன்னும் நிறைய நண்பர்கள் வாசித்துக் கொள்ளட்டுமே என்று தான் காத்திருக்கிறேன்...!
DeleteSuper Sir....waiting
DeleteWe are waiting ☺️
Deleteஅடடே நானும் வெயிட்டிங்
Deleteவெட்டியான் ஸ்டெர்னும், வெட்...ல் நானும்!
ReplyDeleteமீ: மிஸ்டர் உங்களின் விஎவி! கதையைப் படித்து விட்டேன். மிகவும் நன்றாக இருந்தது!
ஸ்: அதுல என்னப்பா சந்தேகம் உனக்கு?! ஜெயிக்கும் குதிர தான நானு!
மீ: ஆனால் தங்களின் மூன்றாவது புத்தகம் வெளியிட ஓட்டெடுப்பு நடந்ததாக ஞாபகம் அதான்...
ஸ்: ஓhh.. அதுவாப்பா.. புதுசா வர்றவங்கள ஏத்துக்க ஒரு இது வேணுமில்லையா.. போகப் போகத் தான நெலவரம் புரியும் அதான்..
மீ: உங்களின் இம்மாத கதையை நட்டு வேறு, போல்ட்டு வேறாக அனைவரும் அலசி, ஆராய்ந்து விமர்சனம் எழுதி விட்டனர், எனக்கும் எழுத ஆசையாக இருக்கிறது, ஆனால், புதியதாக என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை!
ஸ்: எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சுரது இல்ல.. பேசாம என்னோட கதையை இன்னொரு தடவை படிக்கலாமேப்பா...
மீ: wow!
சொல்ல மறந்த கதை!
ReplyDeleteவிஎவி!ல் எனக்குப் பிடித்த வசனங்களில் ஒன்று!
நீதியும், நேர்மையும் என்னிக்கும் சாகாது! சட்டமும் அதன் பரிபாலனமும் தான் தடுமாறும்!
சட்டமும் அதன் பரிபாலனமும் மட்டுமல்ல, படித்தவுடன் என் மனம் கூட தான் தடுமாறியது! உண்மையும், நேர்மையும் நீதியை எதிர்பார்க்கும் போது, நீதி தன்னுடைய சவுக்கை அல்லவா விலாசி இருக்க வேண்டும்?! மாறாக சாகாமல் இருப்பதால் சான்றோர்க்கு என்ன பயன்?! - என்று தோன்றியது!
@vijayan சார், இந்த ஆண்டு சம்பளின் சங்கீதம், பயணம் மாதிரி Mega Size-ஐ விட பெரியதாக ஏதாவது இருக்கா
ReplyDeleteme the advance 200 !
ReplyDeleteவிதி எழுதிய விசாரணை Awesome. அதுவும் அந்த கடைசி frame....
ReplyDelete😍😍😍😍
Deleteபடித்த பின் இம்மாத வரிசை
ReplyDelete1. விதி எழுதிய விசாரணை
2. கோட்டையில் ஒரு குட்டிப்புயல்
3. ஓட்டமதைக் கைவிடேல்
4. எமனுடன் ஒரு யுத்தம்
சூப்பர். இந்த மாதம் எல்லோரும் நமது நவீன வெட்டியான் கதையை தான் முதலில் பபடித்து ரசித்து உள்ளார்கள்.😍😍
Deletehttps://youtu.be/vzag3qPo448?si=v7zocgFYbGEO5WJA
Deleteஸ்டெர்ன் - ஒரு பருந்தின் பார்வையில்..- வீடியோ!
Okay sir
Deleteவணக்கம் குமார்
ReplyDeleteகண்ணீர்த் தீவில் மாயாவி.....என்னை பொறுத்த வரை இரும்புக் கை மாயாவி யின் டாப் சாகசமான களிமண் மனிதர்களுக்கிணையான கதை.....வில்லனின் தோற்றம் நிமிர வைத்தால்.....ஒரு தீவுக்குள் அல்ல தீவே சிறை....சதுப்பு நிலம்....ஆக்டோபஸ்....ஜெல்லி மீன்கள்...என் கதை பாய்ச்சல் மின்னல் வேகம்....படித்ததால் சுத்தமா நினைவில்லை....மாயாவி ரசிகர்களுக்கு மட்டுமல்ல துரத்தல் வேட்டை வேகத்தை விரும்புவோர்க்கும் ஓர் விருந்து..அருமை....சிறுவயது கடலில் சிப்பிக்குள் மறைந்திருந்த முத்து
ReplyDelete👌👌👌
Deleteஅடுத்ததாக Fab Five-இல் வரவிருப்பது எந்த இதழ் சார்
ReplyDeleteஇந்த மாத இளம் டெக்ஸ் & பெரிய டெக்ஸ் இருவருமே ஓய்வின்றி பரபரவென ஆக்ஷன் தான்
ReplyDeleteஎமனுடன் ஒரு யுத்தம் படித்துவிட்டு எங்க அம்மா சொன்னாங்க
ஓயாம சண்டை போட்டுட்டே இருக்காங்க
நான் சொன்னேன்
என்ன செய்ய பெரிய வில்லன் கூட்டத்தை இருவர் முறியடிக்கனும்ல
கார்சனின் வசனங்களும் பட்டாசு
ஸ்டெர்ன் அடுத்த ஆல்பம் அடுத்த வருட சந்தாவில் வர வாய்ப்புள்ளதாங்களா, சார்
ReplyDeleteஉண்டு கண்டிப்பாக உண்டு.
Delete