நண்பர்களே,
வணக்கம் புதுசாய் ஒரு நாள், புதுசாய் ஒரு பொழுது, தமிழகத்துக்கே புதுசாய் ஒரு பயண திசை.... ! Gen-Z களின் சகாப்தம் இது என்பதால், இனிமேலும் இந்த "வணக்கம், வந்தனம், நமஸ்காரமெல்லாம் எடுபடுமா என்று சொல்லத் தெரியவில்லை. So, "நல்லா இருக்கீங்களா மக்களே?" என்று ஆரம்பிப்போமா?அட, ஆரம்பம் எப்படி இருந்தாலும் நாம அரைக்கப்போற மாவு அதுவேதானே? So, "ஆகிற பொழப்பப் பாருடா தம்பி" என்று மைண்ட்வாய்ஸ் சொல்கிறது.
பொதுவாகவே வண்டியை நமது வாட்சப் கம்யூனிட்டி பக்கமாய் திருப்பிய நாள் முதலாக, இங்கே ப்ளாக்கில் புதிய இதழ்கள் பற்றிய preview-வைத் தாண்டி பெரிதாய் நான் எதுவும் எழுதுவதில்லை. In some ways, சோம்பலின் வெளிப்பாடு என்று கூட அதைச் சொல்லலாம். ஆனால் இந்த மே மாதமோ, கைகளில் மூன்றே புக்ஸ் மட்டுமே இருந்தாலும், என்னையும் அறியாமல் அவற்றைப் பற்றிப் பேச ஒரு உந்துதல் உள்ளுக்குள்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னே படைப்பாளிகளைச் சந்திக்க இத்தாலி சென்றிருந்த போது, டெக்ஸ் அலுவலகத்திற்குள் மிட்டாய் கடைக்குள் நுழைந்த கண்கள் விரிந்த குழந்தையைப் போலவே வாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அதுமட்டுமின்றி, நமது மறுவருகையின் துவக்க நாட்கள் என்னும்போது, டெக்ஸ் Universe-க்குள் இன்றைக்குப் போல் அன்று பூரணமாய் நாம் மூழ்கி இருக்கவுமில்லை. So, கதாசிரியர் மௌரோ போசெலி அவர்களைச் சில நிமிடங்கள் சந்தித்ததைத் தாண்டி, அவருடன் பெரிதாய் interact செய்திட சந்தர்ப்பமும் அமைந்து இருக்கவில்லை. ஆனால் இந்தக் கடைசி பத்து ஆண்டுகளில் வண்டி வண்டியாய் டெக்ஸ் கதைகளோடு அன்னம் தண்ணி புழங்கிய பிற்பாடு, அதிலும் மௌரோ போசெலியின் படைப்புகளில் எக்கச்சக்கத்தை ருசித்த பிற்பாடு, அந்த மனுஷனை எண்ணி மானசீகமாய் சிலை வைக்காது இருக்கவே முடியவில்லை.
கிடைத்த கொஞ்ச அவகாசத்தில் நான் அவரிடம் கேட்ட ஒரே கேள்வி: "கண்ணிலேயே பார்த்திருக்காத ஒரு யுகத்தில், கண்ணிலேயே பார்த்திருக்காத மனிதர்களுடன் அரங்கேறியதொரு சூழலைப் பற்றி இத்தனை இத்தனை கதைகளை எங்கிருந்துதான் உருவாக்க கற்பனைகள் துளிர் விடுகின்றனவோ?" என்பது மட்டுமே. சின்னதொரு புன்னகையில் பதில் சொன்னவர், என்னை டெக்ஸ் story room-க்குள் இட்டுச் சென்ற போது ஏற்கனவே திறந்து இருந்த வாய் கூடுதலாக ஓபன் ஆகியது. திரும்பிய திக்கிலெல்லாம் வன்மேற்கு சார்ந்த reference புத்தகங்கள், கோப்புகள், ரைபிள் பொம்மைகள், பிஸ்டல் பொம்மைகள், கோச் வண்டி பொம்மைகள், குதிரை மாடல்கள் என்று குவித்து வைத்திருந்தனர். அங்கே இருந்த அந்தச் சின்னச் சின்ன பொம்மைகளும் கூட அந்த காலத்தின் பிரதிபலிப்பு. ஒரு கோச் வண்டி என்றால் எப்படி இருக்கும்? ஒரு பிஸ்டல் என்றால் அதன் எடை என்ன? அதன் வடிவம் என்ன? என்று ரேஞ்சில் அவர்கள் செய்திடக்கூடிய அலசல்கள் சகலத்துக்கும் அங்கே references இருந்தன. அதே போல வன்மேற்கின் ஒவ்வொரு காலகட்டத்தையும் அங்குலம் அங்குலமாய் வாசிக்கவும், அலசி ஆராய்ந்திடவும் ஒரு டீமே அவர்களிடம் இருப்பது தெரிந்தது.
"நியூ மெக்ஸிகோ" என்று எடுத்துக் கொண்டால் அதன் வரலாறு, அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், வாழ்ந்த மனிதர்கள், சொல்லும்படியான பிரதான சம்பவங்கள் என்று குறிப்பு எடுத்துக் கொள்கிறார்கள். இதே போல அரிசோனா, டெக்சாஸ், உடாஹ், சான் பிரான்சிஸ்கோ என்று நெடுக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பான அந்தக் காலகட்டத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராயும் போது, ஒரு துக்கணூண்டு புள்ளியாய் ஏதேனும் ஒரு விஷயம் கிடைத்தால் கூட அதை இறுகப் பற்றிக் கொண்டு அதனை மேற்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். ஆக, முதல் புள்ளி அழகாய் அமைந்துவிட்டால், அப்புறமாய் அதை ரங்கோலி ஆக்கும் வேலைகளை போசெலி தெறிக்கவிடும் லாவகத்துடன் செய்து முடிக்கிறார். Of course, இதைச் சொல்வது சுலபமே; வாய் கிழியப் பேசுவதும் அதைவிட சுலபமே. 220 பக்கங்களுக்கு ஒரு சிறு புள்ளியை நீட்டிச் செல்வதென்பது அசாத்தியம் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் அதனையே வாழ்க்கையின் லட்சியமாக்கி இருக்கும் மனுஷனுக்கு இதெல்லாம் ஜகஜம் தான் போலும்.
இதோ காத்திருக்கும் "நித்திரை மறந்த நித்தியன்" கூட மௌரோ போசெலியின் yet another masterpiece. இம்முறையோ களம் மெக்ஸிகோ; அங்கு அரங்கேறும் ஒரு வினோதத் திருவிழா கதைக்கு பின்புலமாகிறது. பற்றாக்குறைக்கு மெக்சிக நாட்டுப்புற கதைகளில் புழங்கிடும் ஒரு அமானுஷ்யத் தகவலை இறுக்கமாய் பற்றிக்கொள்ளும் போசெலி, இந்த 52 பக்க கலர் கிராபிக் நாவலில் ஊடுகட்டி அடித்திருப்பது அட்டகாசம் .ஆண்டுக்கு ஒருமுறை Franco-Belgian சித்திரபாணிகளில், பக்க நீளங்களில் கதை அமைப்பினில் ஒரு டெக்ஸ் ஆல்பத்தையும் கடந்த 10-12 ஆண்டுகளாகவே போநெல்லி வெளியிட்டு வருகின்றனர். இந்த மாதம் உங்களை எட்டிட உள்ள இந்த ஆல்பமோ 2025-இல் வெளியான முயற்சி. அந்நேரமே இது என் கண்ணில் பட்டிருந்தது; நம் நண்பர்களுள் யாரோ ஒருவருமே கூட இது குறித்து வினவி இருந்தது நினைவு உள்ளது. நான் பார்த்ததெல்லாம் கதாசிரியர் யார் என்பது மாத்திரமே. போசெலி என்றிருந்த மறுநொடியில் எவ்வித தயக்கமும் இன்றி 2026-இன் பட்டியலுக்குள் இதனை முதலாவதாய் குறித்து வைத்திருந்தேன்.
In fact, இது ஜனவரியிலேயே வந்திருக்க வேண்டிய ஆல்பமே. ஆனால் போன வருஷம் நமது ஈரோடு சந்திப்பின் போது, நம்ம சேலத்து டாக்டர் சார், "ஆண்டின் முதல் மாதத்தில் பொங்கல் விடுமுறைகளும் இருக்கும் போதெல்லாம் ஏதாச்சும் ஒரு தாட்டியமான டெக்ஸ் சாகசத்தை போட்டுத் தாக்குங்க சார், 'இளமையெனும் பூங்காற்று' ரேஞ்சுக்கு புசுக்கென்று முடியும் கதைகள் வேண்டாமே" என்ற கோரிக்கையை எழுப்பி இருந்தது நினைவுக்கு வந்தது. சரி, அதுவும் சரிதான். சென்ற வருடம் வந்த டெக்ஸ் கிராபிக் நாவல் அத்தனை ரம்யமில்லை எனும்போது, மறுபடியும் அந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஜனவரிக்கு எண்ணியிருந்த இந்த இதழைப் பின்தள்ளி இருந்தேன்.
பத்து நாட்களுக்கு முன்பாக இந்தக் கதைக்குள் பணி செய்ய புகுந்தபோது, பொம்மை பார்த்திருந்த அனுபவம் மட்டுமே இந்தக் கதையோடு எனக்கு இருந்தது. பெரிதாய் கதைச் சுருக்கத்தையோ, கதையை கிளைமாக்ஸ் வரையோ வாசித்துவிட்டு வேலைகளை நான் ஆரம்பிப்பதே கிடையாது. அட, பக்கத்தைப் புரட்டப் புரட்டக் கதையோடு பயணித்தால் போதும்தானே என்பதே இந்தச் சோம்பேறி மாடனின் ஆரம்ப காலம் முதலான வாடிக்கை. இங்கே கதை நெடுக மெக்ஸிகோ மண் கண்ணில்பட்டது எனக்குள் லைட்டாக ஒரு குஷியை ஏற்படுத்தியது. Because, மெக்ஸிகோவில் அரங்கேற்றிடும் சாகசங்கள் அனைத்துமே பட்டாசு ரகமே. கனடாவுமே அதேபோலதொரு களம்தானல்லவா? மெதுமெதுவாய் பணிகளுக்குள் புகுந்தபோது ஒரு விஷயம் பிரதானமாய்ப் புரிந்தது. 220 பக்கங்கள் எனும் நெடும் canvas சாத்தியமாகிடும்போது, ஒரு சாகசத்தைப் பிரம்மாண்டமாக்கிச் சொல்லும் களம் கதாசிரியர்களுக்கு வாய்க்கின்றது. ஆனால், 52 பக்கங்களே கதை சொல்லலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்போது, கிரிஸ்ப்பாகக் கதை நகர்த்தலைச் செய்திடும் லாவகம் போஸலிக்கு லாலாகடை அல்வாவைச் சாப்பிடுவது போல் என்பது ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. கோமஸ் என்றதொரு புது ஓவியரின் கைவண்ணத்தில் சித்திரங்கள் பிளஸ் கலரிங் அனல் பறக்க விட்டுக்கொண்டிருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கதையினூடே ஒரு மெல்லிய திகில் படர்வதை உணர்ந்தபோது பரபரப்பு எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. அந்த நொடியில் இது கற்பனையா? ஏதேனும் நிஜச் சம்பவமா? என்றெல்லாம் கூகுள் பண்ணி ஞானத்தை வளர்த்துக்கொள்ள நான் மெனக்கெடவில்லை. Becos, clean slate ஆனதொரு மனதுடன் போஸலியுடன் பயணம் செய்வதுதான் உசிதமாக இருக்கும் என்றுபட்டது. So, கதையின் போக்கிற்கே பயணத்தையும் மேற்கொண்டபோது கிட்டிய அனுபவம் செம ஜிலீர். Oh yes, தமிழ்ச் சினிமாக்களின் கதைக்களம் போல யூகிக்கக்கூடிய சுலபமான பிளாட்தான். ஆனாலும், ஒரு கற்பனை அல்லாத புள்ளியைக் கதைக்குள் கொணர்ந்து, அங்கு நமது நாயகர்களையும் இறக்கிவிட்டு, கதையோடு அவர்களைப் பிசிறின்றிப் பயணிக்கச் செய்யும் அந்த வித்தை மெய்மறக்கச் செய்தது நிஜமே.
பக்கங்கள் 52 என்றாலும், பக்கம் ஒன்றிற்கு குறைந்தது எட்டிலிருந்து பத்து சித்திரங்கள் என்பதால், வசனங்களும் கணிசமே. ஆனாலும் துளி கூட தொய்வின்றி டாப் கியரில் ஆரம்பிக்கும் கதையானது முற்று என்ற புள்ளி வரையிலும் டாப் கியரிலேயே பயணிப்பதை நான் ரசித்தது போலவே நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
இந்தக் கதைப் பின்னணி பற்றி மேலோட்டமாய் ஹாட்லைனிலும் எழுதி இருக்கிறேன் தான். ஆனால் கதைக்குள் மூழ்குவதற்கு முன்பாக அதனை கூகுள் செய்வதோ, YouTube-ல் தேடுவதோ வேண்டாமே ப்ளீஸ் மக்களே. என்னவென்றே தெரியாது உட்புகுந்து ஒரு மெக்சிகன் நம்பிக்கை என்னவென்று தெரிந்துகொண்டு, அப்புறமாய் அதனை ஸ்டடி செய்து "ஓஹோ! இந்த புள்ளி இவ்விதம் தான் ஆரம்பமா?" என்று கிரகித்துக் கொள்ளுங்களேன். தலைகீழாய் செய்துவிட்டால் வாசிப்பில் நிச்சயமாய் வேகம் குன்றிவிடும். Spoiler Alert தந்துவிட்டேன், இனி உங்கள் கைகளில்.
சித்திரங்களும் டிஜிட்டல் கலரிங்கும் முற்றிலுமாய் வேறொரு லெவல். சுட்டெரிக்கும் மெக்சிகோவின் அந்த மண்ணும் சரி, அந்த ஸ்பானிஷ் ஸ்டைலிலான கட்டிடங்களும் சரி, மெக்சிக கோவ்பாய்களின் உடுப்புகளும், நாலு மண்டைக்கு சேரக்கூடியதொரு தொப்பியையும் நெடுக பார்ப்பது செமத்தியாக உள்ளது. And நடுநடுவே சில பக்கங்கள், சில பிரேம்கள் சுற்றிலும் வெள்ளை பார்டர்கள் இன்றி edge to edge இருப்பதையுமே காணப்போகிறீர்கள். So, "நடுவுல கொஞ்சம் வெள்ளை பார்டரை காணோம், பைண்டிங்கில் கோளாறு !! நடந்தது என்ன?" என்று ஒரு விசாரணைக் கமிட்டி போட்டுவிட வேண்டாமே ப்ளீஸ்.
இம்மாத்தின் அடுத்த ஹைலைட் மூன்று Top நாயக நாயகியர் பங்கேற்கும் The கோடைமலர் '26. என்னை கேட்டால் இந்த இதழுக்கு "Dark ஸ்பெஷல்" என்று கூட பெயர் வைத்திருக்கலாம். Becos, தற்செயலானதொரு ஒற்றுமையாய் மூன்று கதைகளுக்குமே டிஜிட்டல் கலரிங் பெருவாரியான டார்க் கலர்களில் செய்துள்ளனர். ஜானியின் வரிசையில் இது ரொம்ப லேட்டஸ்ட் ஆல்பம் அல்ல. So, அந்நாட்களது கலரிங் ஸ்டைல் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. டாங்கோவிலோ அதன் ஓவியருக்கும் கலரிங் ஆர்டிஸ்டுக்கும் அடர்வண்ணங்களில் Light and Dark என்று பிரித்து காட்டுவதில் ஒரு அலாதி பிரியம் எப்போதுமே உண்டு. So, அங்கமும் ஏகப்பட்ட அடர்த்தியான கலரிங். இம்முறை ரூபின் ஆல்பத்திலுமே கலரிங்கில் அதே போலான பாணி தான். So, கதைகள் நெடுக Dark themes கையாளப்பட்டிருப்பதை பார்த்திடலாம். தற்செயலான இன்னொரு ஒற்றுமையாய் மூன்று கதைகளுக்குமே கதைப் பின்புலங்களுமே செம டார்க்.
வழக்கமாய் ஜானி கதைகளில் நெளிநெளியாய் இடியாப்பத்தை சுற்று சுற்று என்று சுற்றிவிட்டு, இறுதியில் இரண்டே பக்கங்களில் சகல முடிச்சுகளையும் அவிழ்த்துவிட்டு "சுபம்" போட்டுவிடுவார். இம்முறையும் கிட்டத்தட்ட அதே பாணி தான். ஆனால் "சுபம்" போடும் கட்டத்தில் மனம் லேசாகக் கனப்பதை தவிர்க்க இயலாது. இப்போதெல்லாமே ஜானி கதைகளை நான் தான் கையாண்டு வருகிறேன் என்பதால் ஜானி சார் மீது ஒரு பயம் கலந்த மரியாதை ஒருமிடறு தூக்கலாக இருப்பது நிஜமே. கருணையானந்தம் அங்கிள் எழுதிக் கொண்டிருந்த வரைக்கும் "ஆங்... ரைட்டு ஜானி கதைகள் என்றாலே இப்படித்தான் இருக்கும் !" என்ற நம்பிக்கையில் பெருசாய் நோண்டாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன் தான். ஆனால் இப்போதெல்லாம் புள்ளி வைக்கத் தவறினால் கூட புடனியோடு போடுவதால். ஒரு பக்கம் பிரெஞ்சு ஒரிஜினல், இன்னொரு பக்கம் ஆங்கில மொழிபெயர்ப்பு அப்புறம் சந்தேகங்களை நிவர்த்திக்க கூகிள் என்ற கையோடே எழுத வேண்டியுள்ளது. இந்த அழகில் இடியாப்பமும் நூடுல்ஸும் கலந்து தட்டில் பரிமாறப்படும் போது வாய்க்குள் நூடுல்ஸை நுழைக்கிறேனா முட்கரண்டியை மட்டுமே நுழைத்துக் கொண்டிருக்கிறேனா என்பதில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டி உள்ளது.And சமீப ஆண்டுகளில் வெளிவந்துள்ள ஜானி கதைகளுள் இம்மாதம் காத்திருக்கும் "திகில் முகமூடி" has to rank among the best என்பேன்.
நீங்கள் என்னதான் நமது புன்னகை இளவரசரை கொண்டாடினாலும் எனக்கு அவரது சில கதைகளின் மீது லைட்டான மனத்தாங்கல் உண்டு தான். இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நிறைய முறைகள் நினைத்திருக்கிறேன். ஆனால் ஒரு தெளிவான கதை நாட் கிடைத்துவிட்டால்...அதுவே மதி. பாக்கி சகலத்தையும் கதை சொல்லலில் சரி செய்து விடுவோம் என்று கதாசிரியர் சந்தேகத்திற்கு இடமின்றி establish செய்வதை இம்முறை பார்க்க முடிகிறது. திகில் முகமூடி வழக்கம் போல் கதை நெடுக வந்து போகும் மனிதர்களை எல்லாமே சந்தேக வட்டத்திற்குள் உட்படுத்தும் ஒரு murder thriller தான். இம்முறையோ ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகள் சரளமாய் அரங்கேறிட சீட்டின் நுனியில் அமர்ந்தபடியே பேனா பிடித்த பிழைப்பாகிப் போனது. And yes, கதை climax-ஐ நெருங்கிய போது மெதுமெதுவாய் கொலையாளி யார் என்பதை யூகிக்க எனக்கு சாத்தியப்பட்டது தான். ஆனால், அதை முறைப்படி கதாசிரியர் சொல்லும் தருணத்தில் துவக்கப்புள்ளிகளிலிருந்து சகலத்தையும் கனெக்ட் செய்திடும் அந்த நேர்த்தி பிரமிக்கச் செய்தது. கோடை மலரில் இம்முறை ரிப்போர்ட்டர் ஜானிக்கே முதல் ஸ்லாட் தந்துள்ளோம். அதற்கு காரணமில்லாதில்லை. இந்த இதழில் உங்கள் வாசிப்பை ஜானியிலிருந்தே துவக்கினால் சிறப்பு தான் என்பேன்.
Next in line நமது லோன்ஸ்டார் டாங்கோ. முதல் சாகசம் முதலாகவே இவரிடம் ஒரு வித மௌனமான கோபம் குடியிருப்பதை பார்க்க முடிந்தது. "தனிமையே என் துணைவன்" என்ற பாட்டு இவருக்குமே சூட்டாகும் தான் என்றாலும், நடுவே அந்த அர்ஜென்டின போலீஸ்காரர் மரியோ பார்ட்னர் ஆகிய பிற்பாடு அந்த கோபம் சற்றே மட்டுப்பட்டிருந்ததாய் பின்னாட்களது ஆல்பங்களில் தெரிந்தது. ஆனால் இம்முறையோ மனுஷன் ஒரு ரௌத்ர தாண்டவத்தை அரங்கேற்றி இருப்பதை பார்த்திடலாம். இந்த ஆல்பத்தினுள் புகுந்திட முன்பாக முடிந்தால் அத்தியாயம் இரண்டை ஒருவாட்டி புரட்டிக்கொண்டால் கதை மாந்தர்களை அடையாளம் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பேன். OS, என்னைப்போல வெண்டைக்காய் பார்ட்டியாக நீங்கள் இல்லாதிருக்கும் பட்சத்தில், "சிவந்த மண்" சாகசத்தில் வந்து சென்ற அந்த தீவு வாசிகளை உங்களுக்கு நினைவு இருக்கவும் கூடும். முழுக்கவே பராகுவே எனும் தென்னமெரிக்க தேசத்தில் அரங்கேறிடும் இந்த சாகசம் ஒரு high voltage அடிதடி மேளா தான். டாங்கோவின் தொடரில் நாம் தற்சமயம் தொட்டிருப்பது ஆல்பம் நம்பர் ஆறு. இன்னமும் இதுவரை நாம் முயற்சித்திருக்காத ஆல்பங்கள் மூன்றே தான் பாக்கி. So, happy to see us making decent progress with this series.
கோடை மலரின் இன்னொரு highlight நமது சிகாகோ டிடெக்டிவ் அம்மணி ரூபின் தான். ரூபின் கதைகளில் எப்போதுமே ஒரு வித கனம் இருப்பது முதல் நாளிலேயே புரிந்தது. அந்த கனம் ரொம்பவே அழுத்தமாகிட கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அந்த சித்திர பாணியை semi-cartoon style-இல் அமைத்திருப்பதாக எனக்குப் படுகிறது. இதே கதையினை நார்மலான உயிரோட்டமான ஓவியங்களில் படைத்திருந்தால் படிக்க கொஞ்சம் அயர்வு ஏற்பட்டிருக்குமோ என்னவோ சொல்ல தெரியவில்லை. ஆனால் இந்த லைட்டான சித்திர பாணியில் கனமான கதைக்களங்களை சுலபமாய் ரூபின் பேலன்ஸ் செய்து விடுகிறார்.
"விடுமுறையில் விதி முடிப்போம்" ஒரு யதார்த்தமான குற்றப்புலனாய்வு. ஜேம்ஸ் பாண்ட் பாணியில் இங்கே அணுகுண்டு கடத்தலையோ, தேச துரோக வழக்குகளையோ நமது கேரட் கேச அம்மணி துப்புத் துலக்குவதில்லை. ஆனால் விடுமுறைக்கு வீடு செல்லும் போதும் எதிர்படும் வில்லங்கத்தை அட்டகாசமாய் அம்மணி கையாள்வதே இந்த 44 பக்க அதிரடி !! வசனங்கள் கணிசமாய் உண்டு தான், and, கடந்த சில ஆண்டுகளின் வழக்கம் போல ரூபினுக்கு முதல் கட்ட பேனா பிடிப்பு நமது டீமின் Ms.P. சுகன்யா. இரண்டாம் கட்ட பேனாப்பிடிப்பு நமது புடைத்த மூக்கர். வண்டி வண்டியாய் டயலாக்ஸ் இருந்தாலும் துளியும் அயர்வூட்டாமல் கதையை நகர்த்திச் செல்வது கதாசிரியரின் பிரதான வெற்றி என்பேன். And, கதை முடியும் அந்த இறுதி பிரேமில் வசனங்களே இன்றி இரண்டே சித்திரங்களில் அவர் சொல்ல முனையும் செய்தியும் ஒரு ஹைக்கூ கவிதை ரகம். So, மளமளவென்று வாசித்து விட்டு நகரும் வேகத்தில் சித்திரங்களையும் சில மௌனக் குறியீடுகளையும் miss பண்ணி விடாதீர்கள் மக்களே.
இம்மாதத்தில் பேனாவைத் தூக்கிக்கொண்டு நான் ஷன்டிங் அடிக்கும் மூன்றாவது இதழ் பூம் பூம் தாத்தா. இதன் target audience Gen-Z என்றாலுமே, நம் மத்தியில் உள்ள தாத்தாக்களுக்கு இது சத்தியமாய் ரசிக்காது போகாது என்பது உறுதி. Maybe, சில பல youth-களுக்கு "இதில் என்னய்யா இருக்கு?" என்று தோன்றலாம்தான். ஆனால், மனித உறவுகளின் ஒரு அழகான பரிமாணத்தை காட்சிப்படுத்தும் இந்தத் தொடர், இன்றில்லாவிட்டாலும் ஏதோ ஒரு தூரத்துப் பின்னாளியில் உங்களுக்குள் Resonate ஆகாது போகாது என்பேன்.அதிலும், அந்தக் கடைசிக் குட்டிக்கதையில் குட்டிப்பாப்பா ரோஸ் சொல்லும் செய்தி தாத்தாவுக்கு மட்டுமல்ல, நமக்குமேதான் என்று தோன்றுகிறது. இன்னொரு குட்டிக்கதையில் இன்றைய ஓட்டமோ-ஓட்டம் யுகத்தில் பெற்றோர்களுக்குமான அழகானதொரு தகவல் waiting. So, "பூம் பூம் தாத்தா" சர்வ நிச்சயமாக பூமர் தாத்தா அல்லவே அல்ல. முயற்சித்துப் தான் பாருங்களேன் folks ? And yes please, வீட்டு குட்டீஸ்களிடம் கொடுக்கவும் முயற்சியுங்களேன்.
ரைட்டு... இம்மாதத்து மூன்று இதழ்களைப் பற்றியும் பொறுப்பாய் preview செய்தாச்சு. இனி இவற்றை அலசிட உங்களையே நம்பியிருப்போம். ஒரு வண்டி இதழ்கள் காத்துள்ள ஜூன்-ல், ராபினின் "எங்கேயோ கேட்ட குரல்" மிரட்டோ மிரட்டென்று மிரட்டிக்கொண்டிருக்க, அவரோடு டிஜிட்டல் விடியலுடன் போராட இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன். Bye all, see you around. Have a great week ahead!
ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி guys : https://lion-muthucomics.com/latest-releases/1461-2026-may-pack.html
And இது TERRIFIC TEX சந்தாவுக்கான ஆன்லைன் லிங்க் : https://lion-muthucomics.com/tex-willer/1460-the-terrific-tex-for-current-subscribers.html


Hai Sir
ReplyDelete❣️😊
ReplyDeleteHi...
ReplyDeleteகாலை வணக்கம் சார்
ReplyDeleteFirst Comment 🥰
ReplyDelete😘😘💐Me in😘
ReplyDeleteTop 10
ReplyDeleteவணக்கம் சகோதரர்களே...
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete10க்குள் வந்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன் இதழ்களுக்காக....
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDelete19ஆம் நூற்றாண்டு, குதிரை கோச்சு வண்டி அனல் பறக்கும் பாலைவனம் காடுகள் துப்பாக்கிகள் செவ்விந்தியர்கள்.. எந்த நூற்றாண்டுகள் ஆனாலும் தப்பு மட்டுமே செய்வோம் செய்வதால் 4 ஆயிரம் பேர் இருந்தால் அதை தட்டிக் கேட்க நான்கு பேர் வருவார்கள்.... அப்படி நால்வர் படையுடன் களம் இறங்கி ஒவ்வொரு மாதமும் சலிப்பு தட்டாமல் கொண்டு செல்லும் டெக்ஸ் படைப்பாளிகளின் திறமைக்கு ஒரு பிக் சைட் அதிலும் டெக்ஸின் மிக முக்கிய படைப்பாளியானபோனேலின் திறமையை வியக்காமல் இருக்கவே முடியாது.... எங்கள் வாழ்க்கையில் ஒரு ஒரு வியக்கத்தக்க மனிதராகவே நிற்கின்றார் எங்கள் மனதில்.... ❤️❤️❤️❤️❤️
ReplyDelete@Edi சார் 😘💐
ReplyDeleteWish you a very Happy திருவிழா சார் 😘👍😄💐
இன்னிக்கி கருப்பட்டி முட்டாய் தான் திருவிழா பெசல் சார் - பேயா இனிக்கும் !! நாமெல்லாம் அதை பேப்பரிலே எழுதி வாசிச்சுக்கிற பார்ட்டி !!
Deleteநம்ம திருவிழா இன்னிக்கி ரெட் கன் - ராபின் என இரண்டு "R 'ஸ் கூடத்தான் !
Wow எம்மாம் பெரிய பதிவு. சும்மா தெறிக்க விடுது சார் preview. Awesome
ReplyDeleteஜானிக்காக வெயிட்டிங்
ReplyDeleteஅட்டகாசமான பதிவு. நன்றி சார்.
ReplyDelete21st
ReplyDelete22வது
ReplyDeleteI received the books sir. Thank you!
ReplyDelete// இந்த மே மாதமோ, கைகளில் மூன்றே புக்ஸ் மட்டுமே இருந்தாலும், என்னையும் அறியாமல் அவற்றைப் பற்றிப் பேச ஒரு உந்துதல் உள்ளுக்குள். //
ReplyDeleteThank you sir! Happy to hear this!!
// சின்னதொரு புன்னகையில் பதில் சொன்னவர், என்னை டெக்ஸ் story room-க்குள் இட்டுச் சென்ற போது ஏற்கனவே திறந்து இருந்த வாய் கூடுதலாக ஓபன் ஆகியது. திரும்பிய திக்கிலெல்லாம் வன்மேற்கு சார்ந்த reference புத்தகங்கள், கோப்புகள், ரைபிள் பொம்மைகள், பிஸ்டல் பொம்மைகள், கோச் வண்டி பொம்மைகள், குதிரை மாடல்கள் என்று குவித்து வைத்திருந்தனர். //
ReplyDeleteYour are gifted to see all of them sir.
//Your are gifted to see all of them sir//
DeleteYes bro
Hi..
ReplyDeleteடெக்ஸ் வில்லரின்
ReplyDeleteநித்திரை மறந்த நித்தியன்
படித்து முடிச்சாச்சு
சூப்பர் ப்ரோ
Deleteபுத்தகங்கள் மேக்கிங் அட்டகாசம். குறிப்பாக கொடைமலர் செமயாக உள்ளது!
ReplyDeleteநித்திரை அறியா நித்தியன்
ReplyDeleteஅட்டைப்படம் சித்திரங்கள் கதை அம்சம் கதையோட்டம் கதை முழுவதிலும் நிலவி வரும் ஒரு மெல்லிய திகில் அனைத்தும் அற்புதம். 9/10
சிறிய மனக்குறைகள்
அட்டைப்படத்தில் கார்சன் இல்லாதது
டெக்ஸின் முக வடிவமைப்பு சற்று வசீகரம் குறைந்து இருப்பது.
அட்டையில் கார்சனை என்னிக்கி காட்டியுள்ளனர் சார் - முக்காலே மூன்று வீசக் கதைகளின் ராப்பர்களில் டெக்ஸ் solo ராஜ்ஜியம் தானே?
DeleteAnd டெக்ஸ் தொடரானது கிட்டத்தட்ட ஒரு mass assembly line போல எனலாம்! இப்போதெல்லாம் 10+ ஓவியர்கள் ஆக்ட்டிவ்வாக தொடரில் பணியாற்றி வருகின்றனர்! So ஓவிய பாணிகளில் variations தென்படுவதை எதிர்பார்க்கவே செய்யணும் சார்!
IS MAGGIE GARRISON COMING THIS MONTH SIR .. AS U TOLD IN HOTLINE ..
ReplyDeleteஜூன்?
DeleteJune
Deleteமுதலில் படித்தது முத்து கோடை மலரில் இருந்த டேங்கோ எனது Favorite ஹீரோக்களில் ஒருவர்.
ReplyDeleteதலைப்பே அட்டகாசம் நதி ஒன்று கரைகள் மூன்று அதற்கான காரணமும் கதையில் உண்டு.
கதையை பற்றி சொல்வதற்கு பெரியதாக எதுவும் இல்லை, ஆனால் டேங்கோ படிக்க காரணங்களே வேறு. அழகாக ஆரம்பிக்கும் aandes மலை தொடர், இகுவாசு நீர்வீழ்ச்சி என்று ஓவியங்கள் அற்புதம். பிறகு அந்த கிளைமாக்ஸ் கார் சண்டை. இதெல்லாம் ஒருபுறம்.
அதை விட முக்கியமான ஒன்று கதையை படிக்கும் போது ரசித்த வசனங்கள்
" இன்றைய காலகட்டத்தில் கௌரவம் என்பதற்கு பெரிய அர்த்தம் ஏதுமில்லை என்பது எனக்கு தெரியும்! "
" ஓடாமல் எதிர்த்து நிற்பவர்கள்... பெரும் தைரியசாலிகளாக இருக்க வேண்டும்! அல்லது செம முட்டாள்களாக! இல்லையென்றால் விசுவாசத்தின் மறு உருவங்களாய்...! "
" உன் நண்பன் லேசுபட்ட ஆளே இல்லை மரியோ!
இரும்பால் செய்யப்பட்டவனா?
தீரா வைராக்கியம் இரும்பை விட வலிமையானது!. "
என்னா வசனம் சார்!!!😍🥰
இதை எல்லாம் எழுதிய கைக்கு ஒரு தங்க மோதிரம் வாங்கி போட வேண்டும் சார்.
Superb Start to the Summer.
சோ பாஸ்ட் குமார்.
DeleteHi good morning guys
ReplyDeleteமுதல் பார்வையில் முதல் பார்வைய அகற்ற முடியல டெக்சின் முதல் பக்கமே...வண்ணமய ஜானி....ரூபின்....அதிரடி டேங்கோ வேற லெவல் சார்...கோடை மலர் புத்தக அட்டை கச்சிதம்
ReplyDelete*நித்திரையறியா நித்தியன்*
ReplyDeleteஇந்த மாதம் டெக்ஸ் 50 பக்கங்கள் தானா வழக்கமான அளவில் என வருத்தத்தில் தான் பார்சலை பிரித்தேன் ஆனால் டெக்ஸ் பெரிய இதழாக வந்ததில் மிக மகிழ்ச்சி..காரணம் டெக்ஸ் இதழை வாசிக்க ஆரம்பித்தால் குறைந்த பட்சம் அரை மணிக்கும் மேலாக அல்லது ஒருமணி நேரமாவது அந்த வன்மேற்கில் உலவ முடியும் என்பதாலேயே ...நல்ல வேளை இந்த முறை பக்கங்கள் குறைவாக இருப்பினும் பெரிய அளவில் அதிக வசனங்களுடன் இந்த நித்திரையறியா நித்திரனும் அரை மணி நேரத்திற்கும் மேலாகவே என்னை அந்த வன்மேற்கு உலகில் உலவ வைக்க கொஞ்சம் திடுக் ,திடுக்குடனும் வாசிக்க வைத்தது...அருமையான அட்டைப்படம்...தெளிவான சித்திரங்கள் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லராக எப்பொழுதும் போலவே இந்த இதழும் கமர்ஷியல் விறுவிறுப்புடனே வேகமாக சென்றது...டெக்ஸ் கதையை எல்லாம் கிராபிக் நாவல் என படைப்பாளிகளே முத்திரை குத்தினாலும் நான் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் ( டெக்ஸ் ன் "வல்லவர்கள் வீழ்வதில்லை" தவிர..அது எனக்கு மட்டுமே கிராபிக் என்பது வேறு..)..இறந்தவர்கள் குறிப்பிட்டொரு நாளில் உயிர்தெழுந்து வந்து நம் இடையே உலாவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடும் ஒரு விழாவில் அது கற்பனையா ,நிஜமா என்றே அறியா நிலையில் நமது நாயகர்கள் டெக்ஸ் அங்கே களம் புக அதன் பிறகு களம் சொல்லவா வேண்டும்...ஆனால் மற்ற சாகஸங்களை போல் துப்பாக்கியில் மட்டும் தீர்வு காண்பது அல்லாமல் ஓர் புது பதை பதைப்புடனும் ..திருப்பங்களுடனும் என அட்டகாசமாய் சென்று இறுதியில் ஓர் மென் சோகத்துடன் முடிந்து இந்த நித்திரையறியா நித்திரன் மனதை வென்று விடுகிறார் எப்பொழுதும் போல் .....
அருமை தல
Deleteஅடுத்து கோடை மலருக்கு முன் ஆசிரியர் சொன்னபடி டேங்கோ வின் இரண்டாம் சாகஸமான சிவந்த மண் இதழை தேடி எடுத்து விட்டேன்...அதனை வாசித்து விட்டு பின் கோடை மலரை வாசிக்க இப்பொழுது தயார் ஆகிறேன்...:-)
ReplyDeleteநீங்க ஒருத்தர் தான் தலைவரே ஆசிரியர் சொல்லுறத கேட்குறீங்க
Delete:-))
Deleteவாரிசுகளுக்கான ஜென்"சி இதழை மகளுக்கு பார்சலை பிரித்தவுடன் அவர்களுக்கு கொடுக்க இந்த மாசம் அந்த ஸ்கூல் பசங்க கதையாப்பா அதுவா இருந்தா சூப்பர் என கேட்டு வாங்கினார்...ஆனா ல் தாத்தா பேத்தி கதை என இருந்தாலும் ஓகே என மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்..அவர்களுக்கு மிக பிடித்தது துப்பறியும் மாணவர்களே...:-)
ReplyDeleteஅடுத்த மாசம் வர்றாங்க தலீவரே!
Deleteசூப்பர்...தேங்யூ சார்...!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete“திகில் முகமூடி” — Reporter Johnny மீண்டும் மாஸ் காட்டியிருக்கிறார்! 🔥
ReplyDeleteReporter Johnny தொடருக்காக நான் ரொம்ப ஆவலாக காத்திருந்தேன். காரணம், இந்த தொடரின் கதைகள் சினிமாத்தனமாக இல்லாமல் மிகவும் realistic ஆக இருக்கும். வேகமான திரைக்கதை, புத்திசாலித்தனமான twists, investigation flow — இதுதான் Johnny கதைகளின் பெரிய பலம். இந்த கதையும் அதற்கு விதிவிலக்கல்ல.
Serial murder case ஒன்றை விசாரிக்கும் Johnny… ஆரம்பத்திலிருந்து கதையை பிடித்து கொண்டு போகும் narration semma. இடையே வரும் clues, suspects, misdirection எல்லாமே மிகவும் smart ஆக எழுதப்பட்டிருக்கிறது. நான் நிறைய world cinema, thriller stories பார்த்திருந்தாலும், இந்த கதையின் climax twist உண்மையிலேயே surprise கொடுத்தது.
ஆனால் இந்த முறை twist வெறும் “mass twist” மட்டும் இல்லை… மனசை கொஞ்சம் கனமாக்கும் ஒரு emotional weight உடன் வருகிறது. அந்த ending முடிந்த பிறகும் கொஞ்ச நேரம் மனதில் நின்று விடுகிறது.
வழக்கம்போல Johnny character pakka mass. எந்த scene-லும் bore அடிக்காமல் story jet வேகத்தில் போகிறது.
ஆனா negatives என்று பார்த்தால், climax portion கொஞ்சம் rushed ஆக இருந்த உணர்வு வந்தது. குறிப்பாக villain motive மற்றும் emotional impact-ஐ இன்னும் சில pages கூடுதலாக visual panels மூலம் காட்டியிருந்தால் இன்னும் powerful ஆக இருந்திருக்கும். சில இடங்களில் dialogue மூலம் மட்டும் explain செய்தது கொஞ்சம் abrupt feel கொடுத்தது.
மேலும் ₹450 priceக்கு book size கொஞ்சம் disappointment. குறைந்தது ஒரு Max size அல்லது gundu book format-ல், கூடுதலாக சில stories உடன் வந்திருந்தால் value இன்னும் satisfy ஆகியிருக்கும்.
அதைத் தாண்டி பார்க்கும்போது, இது மீண்டும் ஒரு solid Reporter Johnny thriller.
Mass + Mystery + Emotional climax — மூன்றையும் சரியாக balance செய்திருக்கிறார்கள்.
Johnny ரசிகர்களுக்கு கண்டிப்பாக miss பண்ணக்கூடாத ஒரு thriller experience. 🔥
மகிழ்ச்சி
Deleteநல்ல விமர்சனம் சார்...நானும் ஜானி கதையை இப்பொழுது தான் வாசித்து முடித்தேன்..நன்று..!
Deleteநண்பரே, வீட்டில் பழைய பேப்பரை எடைக்குப் போட்டிருக்காட்டி, பிப்ரவரி மாதத்து தினசரிகளில் Finance பக்கங்களை விரித்துக் கொள்ளுங்கள் & இன்னிக்கி பேப்பரிலும் அதே பகுதியை திறந்துக்கோங்க.....!
Deleteஅமெரிக்க டாலர் & யூரோ கரென்சிகளின் பிப்ரவரி மதிப்பையும், இன்றைய மதிப்பையும் லேசா ஓப்பீடு மட்டும் பண்ணிப் பாருங்களேன்!
83 ரூபாய் இருந்த டாலர் இன்று ரூ.94.70. ரூ.102 இருந்த யூரோ இன்னிக்கி ரூ.112. 🤕🤕🤕🤕!
கதைகளில் ஆரம்பித்து, பேப்பர், இங்க், அச்சு மூலப்பொருட்கள் - என்று நாம் பயன்படுத்தும் சகலமும் அந்நியச் செலாவணி சார்ந்தவை! இரான் யுத்தம் ஆரம்பித்த நாள் முதலாய் ஒவ்வொரு விதத்திலும் பட்டாப்பட்டியை கழற்றி வருகின்றன - எகிறியுள்ள செலவினங்கள்!
போன அக்டோபரில் அறிவித்த அதே விலைகளுக்கு இந்தாண்டின் முழுமையினையும் நகர்த்தி முடிக்கும் போது - இடுப்பில் அருணாக்கொடி மிஞ்சினாலே அது தெய்வச் செயலாக இருந்திடும் போலும்! இதில் MAXI சைஸ் அல்லது குண்டாய் புக்குக்கு எங்கே போவது சார்?
சார், ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் உங்கள் blog மற்றும் மொழி பெயர்ப்புகளில் "லாவகம்" என்ற வார்த்தையை உபயோகிக்கிறீர்கள். ஆனால் பிரபல வார பத்திரிகைகளில் "லாகவம்" என்று போடுகிறார்கள். இதில் எது சரி. அல்லது இரண்டுமே சரியா?
ReplyDeleteதமிழில் ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு எழுத்துகளில் ஒரு சொல் தொடங்காது என்பதால் அவற்றுள் ஓர் எழுத்தில் தொடங்கும் இச்சொல் தமிழ்ச்சொல் அன்று என்பது உறுதி. லாகவம் என்பது தமிழில் அதிகமாக வழங்கும் வேற்றுமொழிச் சொற்களில் முதன்மை இடத்திலுள்ள சமற்கிருதச் சொல். அதனால்தான் அந்தச் சொல்லின் எழுத்துக்கூட்டலில் நமக்குக் குழப்பம்.
Deleteஇது சமற்கிருதச் சொல் என்பதை மொழியாய்வறிஞர் ப. அருளியின் “அயற்சொல் அகராதி” உறுதிப்படுத்துகிறது.
(கிரகம், கிருகம் எனும் வடசொற்களின் சரியான எழுத்துக்கூட்டலும் சரியான பொருளும் தெரியாததால் புதுமனை புகுவிழாவின்போது வீட்டில் (கிருகம்) குடியேறுவதற்கு மாறாக, வானில் உலவும் கோளத்தில் (கிரகம்) குடியேறுவதாகச் (கிரகப் பிரவேசம்) சிலர் சொல்கிறார்கள்.)
இலாகவம் என்பதன் பொருள் என்ன? திறமை, எளிமை, சாமர்த்தியம், விரைவு, இலகு என்பனவோடு மேலும் பல பொருள்களும் காட்டப்படுகின்றன.
இலகு – இலாகு – இலாகை – இலாகவம்.
இலாகையாயிருக்க = தளர்ச்சியாய் இருக்க.
இலாகையாய்ப் பேச = கட்டுப்பாடில்லாமல் பேச.
இலாகவம் என்பதற்கு இணையாகத் தமிழில் வாகு என்றொரு சொல் உண்டு. இது எழுத்துக்கூட்டல் குழப்பமெல்லாம் இல்லாத சொல். இந்தச் சொல்லை நாம் வாகாக மறந்துவிட்டு இலாகவத்தில் கலந்துவிட்டோமோ!
வாகு எனும் பெயர்ச்சொல்லுக்கு அழகு, ஒழுங்கு, அமைப்பு, வடிவம், திறமை, வசதி, தோது என்றெல்லாம் பொருள்.
இச்சொல் “வாகா நியாய வட்டி வாங்காமல்” எனப் ‘பணவிடுதூது’ நூலிலும், “வாகுபெறு தேர்வலவனை” எனக் ‘கந்தபுராண’த்திலும் வருகிறது.
வட்டார வழக்காக
“அந்த மாட்டின் வாகு அப்படி” என்றும்,
“வாகா இருக்கிறாளா பாரு” என்றும்,
பொதுவாக
”அது தங்குவதற்கு வாகான இடம்”
“கை வாகாக வைத்திருந்த தடியை எடுத்து அடித்தார்”
என்றெல்லாம் வழங்குகிறது ‘வாகு’.
வாகு என்பதற்கு அழகு என்றும் பொருள்.
அதை வாகாய்ச் செய்! = Do it nicely என்கிறது வின்சுலோ அகராதி.
அடுத்த தபா "சுளுவா வலிச்சுகினார் " என்று எழுதிடறேன் நண்பரே.... அல்லாருக்கும் சுளுவா போயிடும் 👍
Deleteஎன ஒரு மெனக்கிடல் ராஜா சார்.
Deleteலாவகம் (Laavagam) என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் திறமை, சாமர்த்தியம் அல்லது நளினம் (Dexterity, Finesse, Skillfulness) ஆகும். விக்சனரி +1
Deleteஇதன் முக்கிய அம்சங்கள்:
பொருள்: ஒரு கடினமான செயலை மிகவும் எளிதாகவும், நேர்த்தியாகவும் செய்யக்கூடிய தன்மை.பயன்பாடு: "அவன் அந்த வேலையை மிகவும் லாவகமாகச் செய்தான்" (He did the work very skillfully).
சரியான வடிவம்: 'லாவகம்' என்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், 'லாகவம்' (Laghuvam) என்பதே சரியான பதம். இது 'இலகு' (எளிமை) என்ற வார்த்தையிலிருந்து உருவானது. விக்சனரி +3
Got it Sir.
Delete*The கோடை மலர் '26*
ReplyDelete_*1. திகில் முகமூடி*_
Freddy Krueger, போல ஒரு திகில் பட வில்லனின் முகமூடியை அணிந்து வரிசையாக கொலைகள் நடக்கின்றன. ஒவ்வொன்றும் ஜானிக்கு சவாலை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது... இறுதியில் ஜானிக்கு மிக நெருங்கியவரும் கொல்லப்பட, ஜானி குழப்பத்தின் உச்சிக்கு செல்கிறான்... இறுதியில் கொலையாளியின் சௌரூபம் totally off the left field. மற்றுமொரு வெற்றி ஜானி-நாடீன் கூட்டணிக்கு.
Solid 4 stars out of 5.
_*2. நதி ஒன்று கரைகள் மூன்று*_
Lonestar Tango தூள் பரத்தும் மற்றொரு அதிரடி ஆக்ஷன் சாகசம்... தீப்பொறி போல் ஆரம்பித்த கதை, சரவெடியாக சுழன்று இறுதியில் அணுகுண்டாக வெடித்து அதகளப் படுத்துகிறது... அழகான ஓவியங்கள், அருமையான வண்ணச்சேர்க்கை, நறுக்குத் தறித்தார் போல வசனங்கள்.
ஒரே குறை. கதையின் நீளம் மட்டுமே... மிகவும் சீக்கிரம் முடிந்துவிட்டது.
Definitely 4.9 stars out of 5
_*3. விடுமுறையில் விதி முடிப்போம்.*_
கானகத்தில் summer camp வந்த சிறு குழந்தையை தேடி வரும் ஆசிரியர்கள், அவளை ஒரு வயதான தம்பதிகள் அடைக்கலம் கொடுத்திருக்க, நன்றியுடன் அழைத்துச் செல்கிறார்கள்..
என்னைப் பொருத்தவரை இதைவிட த்ரில்லிங்கான ஆரம்பம் சமீப கால காமிக்ஸ்களில் நான் படிக்கவில்லை...
ரூபின் ஓய்விற்காக தனது பெற்றோரின் ஊருக்கு வருகிறார்... ஜூரி டூட்டி பார்க்கும் கஸினை பார்க்க ரூபின் செல்ல, அவளது செல்ல மகள் சம்மர் கேம்ப் சென்றுள்ளதாக அறிகிறார்... ஒரு நூல்கண்டு மெல்ல மெல்ல சுழன்று நூல் நீளமாக பிரிவதைப் போல், மர்மங்கள் மெல்ல மெல்ல முடிச்சவிழ்கிறது...
Last but not the least என்பது போல், என்னைப் பொருத்தவரை இதுதான் Rubin's best ever story. இந்த கதை சமீபமாக நான் படித்த காமிக்ஸ்களில் one of the very Best.
Rubin Wins Hands Down 🥳🥳🥳
A solid 9 stars out of 5
மொத்தத்தில் இந்த வருட *The கோடைமலர் '26* ஒரு அதிரி புதிரி ஹிட் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை...
😍♥️😘🥰
அஞ்சுக்கு ஒன்பது மார்க்...! ஹை 😎😎
DeleteSuper Raja sir.
Deleteஅருமை டாக்டர் சகோ
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete😊😊😍😍😍
Deleteசூப்பர் சார்!
Deleteகொடுமை என்னவென்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்திடும் பெரும்பான்மை நண்பர்கள் இந்த GEN Z புக்சை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை 🤕🤕
Deleteசார், இந்த கதை உண்மையில் எளிதான வாசிப்புக்கு உத்திரவாதம் + எல்லா வயதினரும் படிக்க சிறந்த கதை சார் இது!
பூம் பூம் தாத்தா - இந்த மாதமும் முதலில் படித்த கதை இது தான், ரொம்ப ஜாலியாக அதே நேரம் இப்போதைய குழந்தைகளின் சுட்டித்தனத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவது மற்றும் மிகவும் எளிதான வாசிப்பு அனுபவத்தை தருவதால் இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து இதற்கே முதல் இடம்.
Deleteஇந்த முறை கதையின் பல விஷயம்கள் எங்கள் வாழ்வில் நடந்துள்ளது:
1. பௌன்சியில் விளையாட கூப்பிட்ட தாத்தாவிடம் நீங்கள் யூத் தான் என்று சொல்லும் பேத்தி; எனது குடும்பத்துடன் பௌன்சி பார்க் சென்ற போது, எனக்கு வேண்டாம் என்று இருந்தவனை எனது மகன் நீங்கள் யூத்தான் அப்பா என்று விளையாட வைத்தது.
2. பேத்தியின் கேம் டேப்லட்டை மறைத்து வைக்கும் தாத்தா; எங்களது மகளின் லேப்டாப்பே கதியென்று கிடப்பதை கண்டு அதனை ஒளித்து வைத்தது.
3. தாத்தாவின் அட்வைஸ் கேட்டு விட்டு அவருக்கு பதிலுக்கு பதில் பேசும் பேத்தி; இன்றைய குழந்தைகள் எல்லாம் இப்படித்தான் உள்ளார்கள்! பெரியவர் சிறியவர் என்று பேசும் தலைமுறையை கண்முன் காண்பித்தது.
4. பேத்தியை வெளியுலகம் சென்று விளையாட சொல்லும் தாத்தாவின் அட்வைஸ்; எங்கள் குழந்தைகளுக்கு பலமுறை செய்து விட்டோம்.
5. பள்ளி ஆண்டவிழாவுக்கு தாமதமாக வரும் பெற்றோர் முன்னால், பேத்தியுடன் சேர்த்து மீண்டும் அந்த ப்ரோகிராம்மை பெற்றோர் முன்னால் செய்வது; எங்களின் மகனின் முதல் வகுப்பு கிளாஸ் அசெம்ப்ளி நிகழ்ச்சிக்கு கடுமையான ட்ராபிக் காரணமா பார்க்க முடியாமல் மிகவும் தாமதமாக சென்றோம். மகனின் கிளாஸ் டீச்சரிடம் வருத்தத்துடன் சொன்னோம், அவர்கள் எங்களின் ஆசையை/ஆதங்கத்தை புரிந்து கொண்டு கவலைபடாதீர்கள் எல்லா குழந்தைகளும் அதே costumesஇல் தான் இருக்கிறார்கள் என்று சொல்லி அவர்களை மீண்டும் ஒரு முறை எங்களுக்காக perform பண்ண செய்தது, மறக்க முடியாத தருணம்!
இந்த கதை தொடர் எங்களுக்கு மிகவும் பிடித்து உள்ளது!
// கொடுமை என்னவென்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்திடும் பெரும்பான்மை நண்பர்கள் இந்த GEN Z புக்சை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை //
Deleteவருத்தமாக உள்ளது சார்.
ஒரு முறையாவது அவர்கள் முயற்சித்து பார்த்தால் நன்றாக இருக்கும் சார்! "Don't judge a book by its cover" என்பது தான் சார் ஞாபகத்திற்கு வருகிறது சார்.!
அருமையான தருணங்கள் பரணி சகோ
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஆமாங்க சார்
Deleteஆளே இல்லாத கடையின் பெஸ்ட் கஸ்டமர்ஸ் நீங்க ரண்டு பேரும் 💪... So ராகி மால்ட் ஆர்டர்!!
Deleteஒரு ஆப்பிள் ஜுஸ் சொல்லுங்க சார்.
Deleteகுமார் சகோ 😂😂😂
Deleteஇதுதான் சேலம் கும்சும்பா குமார் :-)
Deleteசார் டெக்ஸ் கதையை இன்னும் கொஞ்ச நேரத்தில் படித்து முடித்து விடுவேன்!
Delete"விடுமுறையில் விதி முடிப்போம்" ரூபின் சாகசம்.
ReplyDeleteகாணாமல் போன ஒரு குழந்தையை தேடி வரும் ஒரு சிறிய குழுவுடன் தொடங்கும் கதை ஒரு புறம், மறுபுறம் Work ஸ்ட்ரெஸ்சில் இருக்கும் ரூபின் விடுமுறைக்கு ஊருக்கு வந்து சேர, அந்த சிறிய ஊரில் ஒரு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரிந்தாலும் சடசட என்று மிக வேகமாக செல்லும் கதை, ரூபின் உடை மாற்றம் செய்து flight பிடித்து கிளம்பியதும் டாப் கியரில் செல்கிறது. செம்ம climax. வாய் விட்டு பல இடங்களில் சிரிக்க வைக்கும் வசனங்கள். இப்போது உள்ள டாப் ஹீரோக்களில் ரூபினும் ஒருவர். Awesome Transaltion by both Suganaya and our beloved Editor சார்.
இன்னும் ஜானி மட்டும் படிக்க வேண்டும். கோடை மலர் வாரே வா மீண்டும் 80s க்கு சென்ற ஒரு திருப்தி.
குமார் சேலம்
அருமை குமார் சகோ
Deleteநான் ரூபின் வரவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேனுங்க
Gen Z பூம் பூம் தாத்தா.
ReplyDeleteஇந்த முறையும் இந்த புத்தகத்தை நான் முதலில் படிக்க வில்லை. தங்கையின் மகள் நித்திலா இப்போது இங்கே இருக்க. கவரை பிரித்து புத்தகத்தை முதலில் எடுத்தது அவள் தான். இப்போவே கதை கேட்பேன் என்று எடுத்து சென்று விட்டாள்.
நேற்று தான் அனுமதி பெற்று படித்தேன். செம்ம ஃபன் நைட் வீட்டுக்கு போய் பொம்மை எடுத்து வருவது செம்ம சாகசம். அதும் சாவி Drainage இல் விழுந்து விட எனக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை. Loved it
😊😊👌👌👌
DeleteThis comment has been removed by the author.
Delete// நேற்று தான் அனுமதி பெற்று படித்தேன் //
DeleteGEN Z ரசிகர்களிடம் அந்த பயம் / மரியாதை இறுக்கட்டும் குமார் ;-)
தலைவனோடு ஒரு திகில் பயணம்...! -- உண்மையில் செம திகிலாக போய் கொண்டு இருக்கிறது சார்!
ReplyDelete"மில்லரும், லார்சனும்" -- இவை உண்மையில் எழுத்து பிழைகளா அல்லது மெக்ஸிகோவில் சில பெயரை இப்படித்தான் உச்சரிப்பார்களா என்று தெரியவில்லை எனக்கு,
Deleteஅவங்க உண்மை பெயரை சொல்லாமல் Under cover Agents ஆக அங்க இருக்காங்க
Deleteஓ அப்படியா குமார்
Deleteஇன்று மாலை முதல் எனது பயணம் கோடை மலருடன் தான் :-)
ReplyDeleteஅட்வென்சர் பயணம்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநித்திரையறியா நித்தியன்
Deleteசெம செம வித்தியாசமான டெக்ஸ் கதை சார்! நீங்கள் சொன்னது போல விறுவிறுவென்று வேகமாக சென்றது! சித்திரம்கள் மற்றும் வண்ணக்கலவை அட்டகாசமாக உள்ளது, டெக்ஸ் கதைக்கு இது போன்ற வண்ணத்தை பார்ப்பது இதுவே முதல் முறை சார்.
படிக்கும் போது சில பெயர்கள் சரியாக என்னால் ஞாபகத்தில் வைத்து கொள்ள சிரமமாக இருந்தது, அவைகளை மீண்டும் படித்து பார்த்து புரிந்து கொண்டேன்! இந்த கதையில் உபயோகபடுத்திய எழுத்துஉரு அளவு (font size) சிறியதாக இருந்தது, படிக்க சிரமமாக இருந்தது; ஆனால் சித்திர பேனல் அளவுக்கு எனும் போது நீங்கள் அதற்க்கு ஏற்றாற் போல நீங்கள் கையாண்டு இருப்பது புரிகிறது!
இவ்வளவு கனமான கதையிலும் நீங்கள் ஆங்காங்கே எழுதி இருந்த கார்சன் & டெக்ஸ் உரையாடல் சிரிக்க வைத்தது. "நீ தூங்கும் போது அந்த கறுப்புச் சாரோ வந்து உன் கால்களை பிடித்து இழுத்தால், என்னை மட்டும் எழுப்பாதே"
கதையை படித்து முடிக்கும் போது மனது கனமானது உண்மை சார்.
// படிக்கும் போது சில பெயர்கள் சரியாக என்னால் ஞாபகத்தில் வைத்து கொள்ள சிரமமாக இருந்தது, அவைகளை மீண்டும் படித்து பார்த்து புரிந்து கொண்டேன்! // நான் அப்படியே தாண்டி சென்று விட்டேன். மறுபடி ஒரு முறை படிக்க வேண்டும்
Delete😂 எனக்கும் இதே தான்... ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் ஸ்பென்சர் ஜான்சனிடம் பொன்னியின் செல்வனில் வரும் பெரும்பிடுகு முத்தரையர், இரட்டை குடை ராஜாளியார், செங்கண்ணர் சம்புவரையர், வாணர் குலவீரன் வல்லவரையன் வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர், என்ற பெயர்களை உச்சரிக்க சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது 😂
Delete//படிக்கும் போது சில பெயர்கள் சரியாக என்னால் ஞாபகத்தில் வைத்து கொள்ள சிரமமாக இருந்தது//
Deleteநீங்க குறிப்பிடடு இருந்ததால் நினைவில் நிறுத்தி கொள்ள பார்த்தேன், இரண்டு மூன்று படித்திப்போது தான் இன்னார் என நினைவில் வைத்து கொண்டேன். இறுதியில் சொல்லப்பட்ட பெயர் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அந்த பெயர் மட்டும்நினைவில் நின்றது
ReplyDeleteகோடை மலர்
திகில் முகமூடி
எடிட்டர் சார் கதையின் வில்லனை அடையாளம் கொண்டு விட்டதாக சொன்னார். என்னால் முடியவில்லை.
9/10
விடுமுறையில் விதி முடிப்போம்
Jury சிஸ்டம் பற்றி முன்பே ஒரு பதிவு எழுதியதாக ஞாபகம்.
மிகவும் புதுமையான கதை அம்சம்.
ரூபின் மனதை மிகவும் கவர்கிறார்.
9/10
நதி ஒன்று கரை(கள்) மூன்று
கவித்துவமான மற்றும் தத்துவார்த்தமான தலைப்பு.
இந்த கதைக்கு இது எப்படி பொருந்தி வருகிறது என்று புரியவில்லை.
நதி ஒன்று கரை மூன்று என்பதே சரி என்று நினைக்கிறேன்.
சித்திரங்கள் 9/10
கதை 7/10
***பூம் பூம் தாத்தா***
ReplyDeleteசோ சோ க்யூட்💛💙💚💜💝
பேத்தி ஆட்டத்துக்கு ஈடு குடுத்து (ஈடு குடுக்க முடியலைனாலும் பேத்தி விடுவதாக இல்லை) இணைந்து கொள்கிறார் இந்த மம்மிப்பா.
ரொம்ப க்யூட்டான ஜாலியான தருணங்கள் கிடைக்கிறது இருவருக்கும்.
ரசிக்க வைக்கிறது இந்த பந்தம்.
க்யூட்டான பந்தத்திற்கு ரசனையான வசனங்கள்
வசனங்கள் மிக மிக அருமை
வர்ணச்சேர்க்கை அட்டகாசம், குழந்தைக்களுக்கான என்றாலும் ஒவ்வொரு காட்சியின் டீடெயில்ஸ்களில் நன்றாக கவனம் செலுத்தி உள்ளார்கள் ஆர்டிஸ்ட்
செம்ம கடல். Gen Z means absolute fun. அதும் தாத்தா தக்காளி டிரஸ் போட்டு ஆடும் ஆட்டம். 😂🤣
Deleteஆமாங்க சகோ அந்த தக்காளி டிரஸ்...அந்த தக்காளியோட பொண்ணு நானு😂😂😂
Delete// அந்த தக்காளியோட பொண்ணு நானு //
DeleteYes. YES!!!!
*முத்து கோடை மலர் -26*
ReplyDeleteஇந்த முறை ஹார்ட்கவர் அட்டையில் சிறிது மாறுதலான அட்டைப்பட சித்திரத்தில் உள்ளே மூன்று அட்டகாசமான அசத்தல் கதைகள் ....மூன்று கதைகளின் சித்திரமும்...வண்ணமும் என கலந்து கட்டி கண்ணை கவர கோடைக்கான அழகான இந்த கோடை மலர் அழகு...
முதல் கதை...
திகில் முகமூடி...
ரிப்போர்ட்டர் ஜானியின் கதைகள் ஒரே பாணியிலானவை என்றாலுமே அவரின் ஒவ்வொரு சாகஸம் வாசிக்கும் சமயம் எல்லாம் ஓர் ஆவல் தன்னால் ஏற்படுவதுண்டு...அந்த அழகான தெளிவான துல்லியமான சித்திரபாணி ஜானி கதைகளுக்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ் எனலாம்...வழக்கமான த்ரில்லர் சஸ்பென்ஸ் போல இந்த கதையும் படு விறுவிறுப்பாக நகர்கிறது...ஓர் திகில் முகமூடி அணிந்த ஒரு கொலையாளியை தேடி ஜானி அலைய அதே முகமூடி அணிந்த நபர்களுமே வரிசையாக கொலையுண்டாக ஓர் விறுவிறு சஸ்பென்ஸ் உடனே கதை சென்று கொண்டு இருக்க இறுதியில் கடைசி இரண்டு பக்கங்களில் மர்மம் விலகுகிறது...பல முடிச்சுகளை கொண்ட ஜானியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் சாகஸங்கள் கடைசி ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ அத்தனை முடிச்சுகளையும் ஒவ்வொரு முறையும் அவிழ்க்கும் பொழுதும் வியப்பே..இது போன்ற கதைகளில் வாசிப்போருக்கு எந்த ஒரு குழப்பமும் சந்தேகமும் ஏற்படாதவாறு மொழி ஆக்கம் செய்வதும் கடினமே...அதை எப்பொழுதும் திறம்படவே நம் லயன் குழு செயல்படுகிறது..கதைக்கும் சித்திரத்திற்கும் மட்டுமல்ல மொழி ஆக்கத்திற்கும் ஸ்பெஷல் பாராட்டுகள் சார்...
இரண்டாம் கதையான டேங்கா..
நதி ஒன்று கரைகள் மூன்று...
இந்த கதை தனியாகவே படித்தாலும் தனிப்பட்ட சாகஸமாகவும்...புரியும்படியாக இருந்தாலும் இதற்கு முன்னர் வந்திருந்த சிவந்த மண் சாகஸத்தை வாசித்து விட்டு இந்த கதையை வாசித்தால் சிறப்பு என ஆசிரியர் கூறியது நூற்றுக்கு நூறு சரி...தனியாக வாசித்தாலும் ஓகே ஆனால் சிவந்த மண்ணை வாசித்து விட்டு இதனை வாசித்தால் இன்னும் கதை நம்மை நெருக்கத்துடன் பயணிக்க வைக்கும் என்பதுடன் அதன் அட்டகாசமான தொடர்ச்சியாகவும் இந்த நதி ஒன்று கரைகள் மூன்று சாகஸம் அமையும் என்பது புலப்படும்...அந்த சாகஸத்தில் நடுக்கடலில் அமைதியை ரசித்து கொண்டு இருக்கும் டேங்கோவிற்கு எப்படி போராட்ட களம் அமைகிறதோ அதேபோல் இந்த சாகஸத்தில் வறண்ட நிலப்பரப்பில் தனிமையை ரசித்து கொண்டிருக்கும் டேங்கோவிற்கு அதே போல் ஓர் போராட்ட களம் அமைகிறது இந்த சாகஸத்தில்...டேங்கோவை விட அட்டகாசபடுத்தும் வயதான மைக் இந்த இதழில் மரணத்தை சந்திக்கும் பொழுது நமக்கும் மனது கனக்கிறது...மீண்டும் ஓர் அட்டகாசமான ஆக்ஷன் சாகஸமாக டேங்கோ நம்மை மனதை கவர்கிறார்..முதன்முறை அனைத்து நாயகர்களுமே அறிமுகமான அந்த முதல் மலரில் மொத்தமாக வாசித்த பொழுது மற்றவர்களை போலவே டேங்கோவும் எனக்கு சுமாராக தெரிந்தது போல் ஓர் எண்ணம்..ஆனால் தனியாக டேங்கோவை வாசிக்கும் பொழுதுதான் டேங்கோவின் அட்டகாசம் அமர்க்களபடுகிறது...அடுத்த டேங்கோவின் சாகஸத்தை காண இப்பொழுதே மனம் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது...
மூன்றாம் சாகஸம்...
விடுமுறையில் விதி முடிப்போம்....
ரூபினின் சாகஸம்....இதற்கு முந்தைய சாகஸங்களை வாசித்ததை விட போன முறை ரூபின் வாசித்த பொழுது ரூபின் சூப்பர் என தோன்றியது..இந்த விடுமுறையில் விதி முடிப்போம் சாகஸத்தை படித்தவுடன் அதற்கு மேல் தோன்றி "வாவ்.." போட வைத்து விட்டது..விடுமுறையில் தன் தாய்,தந்தையுடன் இருக்க சொந்த ஊருக்கு வந்த ரூபினுக்கு அந்த சின்ன நகரத்தில் நடந்து கொண்டிருந்த பெரிய அதிர்ச்சியை ஆக்ஷனுடன் அட்டகாசமாக துப்பறிந்து அதகளப்படுத்துகிறார்..ரூபினின் சாகஸத்தில் ஷெரீப் ஆக இருக்கும் தந்தைக்கு தன் மகள் போலீஸாக இருக்கும் உண்மை தெரிந்து இருப்பதும் ஆனால் தாயாருக்கு விளம்பர துறை மாடல் பெண்ணாகவும் தெரிந்து இருக்க ரூபின் குடும்பத்தில் இருக்கும் சமயம் நமக்கு புன்சிரிப்புடன் கதையை வாசிக்க செய்கிறது...என்னை கேட்டால் கார்ட்டூன் பாணி சித்திரத்திலியே ரூபின் இப்படி மனம் கவர்கிறார் என்றால் மற்ற நாயகர்கள் போல் சிறப்பான டெக்ஸ்வில்லர் ..இளவரசி போன்றோர் போல் தெளிவான ஒரிஜினல் சித்திர தரத்தில் வருகை தருமாயின் இளவரசிக்கு மட்டுமல்ல பல ஆண் நாயகர்களுக்கே சவால் விடுவார் இந்த அம்மணி...அட்டகாசம்..
மொத்தத்தில் இந்த கோடை மலரின் மூன்று சாகஸங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு நம்மை மனம் கவர வைக்கிறது..
சூப்பர் தல. அருமையான விமர்சனம்.
Delete//அடுத்த டேங்கோவின் சாகஸத்தை காண இப்பொழுதே மனம் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது...//
Delete+9
//இது போன்ற கதைகளில் வாசிப்போருக்கு எந்த ஒரு குழப்பமும் சந்தேகமும் ஏற்படாதவாறு மொழி ஆக்கம் செய்வதும் கடினமே...அதை எப்பொழுதும் திறம்படவே நம் லயன் குழு செயல்படுகிறது..கதைக்கும் சித்திரத்திற்கும் மட்டுமல்ல மொழி ஆக்கத்திற்கும் ஸ்பெஷல் பாராட்டுகள் சார்...//
Deleteஆமாங்க தலீவரே
இந்த முறை தாத்தா பேத்தி கதை வாரிசுகளுக்கும் பிடித்து விட்டது..எனக்கும் பிடித்து விட்டது...:-)
ReplyDeleteமகிழ்ச்சி தல
Deleteநதி ஒன்று கரைகள் மூன்று - பர பர, அட்டகாசமான ஆக்ஷன் , நண்பர்களுக்காக உயிரை கொடுக்க பழிவாங்க அற்புதமான நட்பின் கதை, அழகாக சித்திரம்கள், ரசிக்கும் படியான வசனம், கையில் எடுத்த புத்தகத்தை படித்து முடித்தவுடன் தான் வைக்க செய்யும் வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. ஒரு விறுவிறுப்பான ஆங்கில படத்தை பார்த்த உணர்வு படித்து முடித்தவுடன்!
ReplyDelete🔥🔥🔥
Delete*****நதி ஒன்று...கரைகள் மூன்று..!*****
ReplyDeleteஓபனிங்கே அட்டகாசம்
மனதை மயக்கிடும் ரம்யமான சித்திரங்கள்.
அதுவும் இகுவாசு நீர்வீழ்ச்சி
கலரிங் ஆர்டிஸ்டும் அசத்தி உள்ளார்.
ஹாலிவுட் ஆக்ஷன் படம் பார்ப்பது போன்று என்று சகோதரர்கள் சிலாகித்தார்கள், அதை ஆமோதிக்கிறேன்😊😊😊😍😍
சண்டை காட்சிகளில் அதகளப்படுத்தி உள்ளார் *பிலிப் ஷெவியர்* .
அந்த ஒன்றை பல்லு தெறிக்கும் காட்சி செம, பல்செட்டே பறக்கிறது என நினைத்து விட்டேன்.
பிரச்சனை என்னவென்று தெரியும் வரைக்கும் தான் பேச்சு,
களத்தில் இறங்கினதும் Full pace action தான்
கண்களை வசீகரமாக வரைவதிலும், அதில் காட்சிக்கான உணர்ச்சிகளை கொண்டு வருவதில் சிறப்பான வேலையை செய்பவர் ஆர்டிஸ்ட் பிலிப். இங்கும் சித்திரப் படுத்துவதில் மெரசல் செய்துள்ளார் *பிலிப்* .
மனதை ஊடுருவிடும் பார்வைகள்.
அடுத்த டேங்கோ கதைக்கு எதிர்பார்க்க வைத்து விட்டது இந்த கதை.
டேங்கோ on full rage mode.
அப்புறம் நம்ம மரியோவுக்கு ஓவர் குசும்பு.
வசனங்கள் 👏👏👏👏👏🔥🔥🔥🔥
கதை- ஒரு ஆக்ஷன் கதைக்கு என்ன தேவையோ அதே ஒற்றை வரி கதை, அதகளம்
சித்திரங்கள் - 100/10
கோடைக்கு ஏற்ற எண்டெர்மெயின்ட், Do not miss
Excellent ரம்யா
Delete// அந்த ஒன்றை பல்லு தெறிக்கும் காட்சி செம, //
DeleteYes. +100
ReplyDeleteஜானி
1.ஜெர்மனியில் ஜானி
2.ஜானிக்கொரு தீக்கனவு
3.திகில் முகமூடி
வரிசையாக மூன்று ஹிட்ஸ் .
👍👍👍
Delete*முத்து கோடை மலர் -26*
ReplyDelete1.நதி ஒன்று கரைகள் மூன்று
பர பர, அட்டகாசமான ஆக்ஷன் கதை.. ஒரு விறுவிறுப்பான ஆங்கில படத்தை பார்த்த உணர்வு படித்து முடித்தவுடன் .. CAN INCREASE ONE MORE SLOT FOR TANGO .. 9/10 ..
2.விடுமுறையில் விதி முடிப்போம்.
Jury சிஸ்டம் பற்றி ஒரு DIFFERENT GENRE கதை .. another RUBIN HIT .. 9/10
3.திகில் முகமூடி
USUAL JOHNNY KNOT STORY .. ஓர் விறுவிறு சஸ்பென்ஸ் உடனே கதை சென்று கொண்டு இருக்க இறுதியில் கடைசி இரண்டு பக்கங்களில் மர்மம் விலகுகிறது..
8.5/10 ..
இந்த கோடை மலரின் மூன்று சாகஸங்களுமே நம்மை மனம் கவர்கிறது..
***திகில் முகமூடி***
ReplyDeleteவிறுவிறு என கதை செல்கிறது, கொலைகள் திட்டமிடப்பட்டு அடுத்தடுத்து நடக்க, குடலை உருவிடும் தடயம் ஒவ்வொரு இடத்திலும் கஅடைக்க, கொலையாளி யாருனு தெரியலையே என நம்ம ஜானி & கோ சுற்ற, கொலைக்காரன் நம்ம மேலே கதையை படிக்கறவங்களைக்கு கூட சந்தேகம் வராது என கொலைகளை நடத்தி கொண்டிருக்க, கொலைகாரனுக்கு முற்றுப்புள்ளி விழுகிறது.
பாதியை தாண்டியதும் கொலையாளி யார் என சந்தேகிக்க முடிந்தது, ஜானிக்கும் சந்தேகம் வந்து முக்கிய கேள்வியை கேட்கிறார், தவறான பதிலே கிடைக்கிறது.
இணைப்பு புள்ளியை நாடீன் மீண்டும் நினைவுப்படுத்துகிறார், ஆனால் எப்படி எதனால் என கேள்வி எழுகிறது, கடைசி கொலை விடையளிக்கிறது.
கதையின் கான்செப்ட் நல்ல த்ரில்லரானது, ஆனால் பயங்கர இடியாப்பமாய் சுற்றி வைத்துள்ளார் கதாசிரியர்.
வசனங்கள் சுலபமான வேலை இல்லை, வசனம் எழுதியதற்கு பாராட்டுகள் சார்.
க்ளாசிக் ஜானியின் நுணுக்கமான சித்திரங்கள் பிடித்தமான ஒன்று.
8/10
😍😍😍😍😍
Delete*****நித்திரையறியா நித்திரன்*****
ReplyDeleteடெக்ஸ் கதையே இந்த தடவை மனதை கனக்க செய்து விடடதுங்க.
49 & 50 பக்கங்களால் கண்ணீர் திரை கட்டி விட்டது😢😢😢
மௌரோ போசெல்லி அட்டகாசப்படுத்தி உள்ளார், அவரது கற்பனைத்திறனுக்கு ஒரு சல்யூட்.
சித்திரங்கள் அருமையோ அருமை
டிஜிட்டல் கலரிங்கில் வர்ணசேர்க்கை மிக மிக தரமாக படைத்துள்ளார்கள்.
மெக்ஸிகோ பெண்களின் அழகை நேர்த்தியாகவும், அவர்களின் உடைகளின் வர்ணங்களையும், டிசைன்களையும் சித்தரப்படுத்தியதில் சிறப்பாக செய்துள்ளார்கள்.
சாரோ விளையாட்டு வீரர்களின் உடைகளை சித்திரப்படுத்தியதில் அழகோ அழகு. ரசித்து கொண்டே இருக்கலாம் என்றிருந்தது. விளையாட்டு மைதானத்தின் புழுதி பரக்க காட்சி, அம்மக்களோடு
முகாமிட்ட இடத்தில் தீ மூட்டப்பட்ட நெருப்பின் வர்ணம்.
கதை சொல்லும் போது ஒரே பேணலில், முகாமிட்டு கதை சொல்லும் இடமும், கதைக்கபடும் இடமும் மெலிதாக கலந்து பெற்று தந்திருப்பது அருமை.
ஒவ்வொரு பக்கத்தையும் சிலாகித்து கொண்டே செல்லலாம்.
அடெல்மா முகத்தை சீரியஸாக பேசும்போது, ஒரு பக்கம் நம்பிக்கையும், இன்னொரு பக்கம் சிரிப்பும் வந்தது. ஆனால் அவர் ரொம்ப நம்பிக்கையுடன் அழுத்தமாக குறிப்பிடுகிறார், உண்மையா, பொய்யா என்பதை ஆராய நம்மிடம் விட்டு விடுகின்றனர்.
இசபெல் அழகு😊💐
கதையும் தரம், சித்திரங்களும் தரம்
சில சமயங்களில் சில கதைகளுக்கு விலை கூடுதல் என்ற கம்ப்ளேன்ஸ் உண்டு, தோன்றவும் செய்யும்.
ஆனால் தரமான படைப்பை குறைவான விலையில் தரும் போது பாராட்டுகள் குறைவே.
என் பார்வையில் இந்த படைப்பிற்கு இந்த விலை குறைவே.
இந்த சிறப்பான, தரமான படைப்பை குறைவான விலையில் தந்ததிற்கு நன்றிங்க, சார்
இந்த கதையை தேர்வு செய்து தந்ததிற்கும் நன்றிங்க.
எனக்கு மிக பிடித்திருக்கு
டெக்ஸ் கார்சன் வசனங்கள் அருமை,
கதைக்கு சிறப்பாய் அமைந்துள்ளன.
பாராட்டுகள் சார்
அட்டைப்படம் செம தூள்🔥🔥🔥
படித்ததை ரசிக்கும்படி விமர்சனமாக எழுதி இருகீர்கள். பாராட்டுகள்.
Deleteகதைகளுக்கு மாதம் தவறாமல் விமர்சனம் எழுதும் உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுகிறேன்.
அருமையான விமர்சனம் சகோ..
DeleteThis comment has been removed by the author.
Deleteநன்றி சகோதரர்களே 😊😊😊💐💐
Delete*நித்திரையறியா நித்திரன்*:
ReplyDeleteமௌரோ போசெல்லி அட்டகாசப்படுத்தி உள்ளார், அவரது கற்பனைத்திறனுக்கு ஒரு சல்யூட்.
COLORING AND DRAWING R AWESOME .. TEX வித்தியாசமான GENREல் வரும்போது IT LOOKS GOOD .. 9/10 ..
நாளைக்கு கண்டிப்பாக பதிவு உண்டு குமார். பந்தயம் கட்டலாமா 😄
ReplyDelete😊😊😁😁😁
Deleteகண்டிப்பாக இன்னைக்கு பதிவு வந்தே ஆகணும் பரணி.
Deleteமே மாத இதழ்களின் வெற்றி, ஜூன் preview இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு பேச.
Deleteஆமாம் குமார். Fab 5, graphic novel, டெக்ஸ் கிளாசிக் முன் பதிவு நிலவரம்.
Deleteஆமாங்க சார்
ReplyDeleteதிகில் முகமூடி செம திகில் 😍
ReplyDeleteஜூன் மாதம் லக்கி லுக் கதை உண்டா சார்?
ReplyDeleteலக்கி லூக் ஜூலை மாதம் வருவார்
Deleteஅட ஆமாங்க ஆகஸ்ட் திருவிழா இன்னும் இரண்டே மாதங்கள் தான்!
ReplyDeleteசார் இன்னும் பதிவு வரல...
ReplyDeleteஅப்ப இன்னைக்கு பதிவு கிடையாதா குமார் 😒😒😒🥲🥲
Deleteநீங்க தான் நேற்றே பதிவு வரும் என்று பந்தயம் எல்லாம் kattneenga.
Deleteஆமாம் குமார்.போன வார இறுதியில் பதிவு வரவில்லை என்பதால் ரொம்ப நம்பிக்கையுடன் இருந்தேன் குமார் 😒
Deleteசார் பதிவு
ReplyDeleteஇந்த வாரமும் பதிவு கிடையாதா
ReplyDelete