நண்பர்களே,
வணக்கம்! ஆகஸ்ட் 'ஆ கயா'... ஈரோட்டுப் புத்தகவிழா மினி சந்திப்பு... டின்டின்... டெக்ஸ் அதகளம் என தெறிக்கவிட்ட கையோடு இப்போது 'ஜா கயா'வை நெருங்கி நிற்கின்றது! And செப்டம்பரோ வெகு அண்மையில் நின்றபடிக்கே மதுரைப் புத்தகவிழாவோடும் இணைந்தபடியே "ரா...ரா...! பழகிப் பார்க்க ரா...ரா '' என்று ராகம் பாடி வருகிறது! And இந்த செப்டம்பரிலோ சுவாரஸ்ய மீட்டர்களில் துளியும் தொய்வில்லாத மூன்று ரகளைகள் வெயிட்டிங்!
To start with- இம்மாதத்தின் highlight என நான் பார்த்திடுவது "தல'' டெக்ஸையோ; "சிகப்புத் தல'' ஸாகோரையோ; நம்ம உட்சிட்டியின் கோமாளி கோஷ்டியையோ அல்ல! மாறாக - நாயக/ நாயகியர் பலங்களை நம்பிடாது- கதை + சித்திர பாணிகளின் வலுவில் எகிறியடிக்கவிருக்கும் "வதம் செய்வோம் வேங்கைகளே'' one shot ஆல்பத்தினையே செப்டம்பரின் சர்ப்ரைஸாகப் பார்க்கத் தோன்றுகிறது! So முதல் ப்ரிவியூ இந்த வித்தியாசமான களமாக இருக்கட்டுமே?!
நிஜத்தைச் சொல்வதானால்- "மாங்கா.. நரூட்டோ... சைட்டாமா..டெத் நோட்.'' என்று இளசுகளும், சில சாயம் பூசிய / பூசாத இளசுகளும், புரியாத எதை எதையோ ஒப்பித்து வந்த நாட்களில் எனக்கே அந்தப் புது பாணிக்குள் தலைநுழைத்துப் பார்க்கும் ஆசை எழுந்தது! அதன் தொடர்ச்சியாய் போன வருஷத்து சென்னை காமிக்-கானின் போது ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் எட்டாயிரத்துக்கோ - ஒன்பதாயிரத்துக்கோ "மாங்கா'' கொள்முதல் பண்ணியிருந்தேன்- பரிசீலித்துத் தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில்! அந்தக் காசுக்கு மாங்காய் வாங்கியிருந்தாலாச்சும் சுண்டலோ- ஊறுகாயோ, போட்டிருக்கலாம் போலும்; சுத்தமாய் அந்த ரகத்தோடு ஒன்றிட முடியவேயில்லை எனக்கு ! மனசுக்குள் யாரோ "அங்கிள்..அங்கிள்..'' என்று உரக்கக் கூவுவது போல அன்றைக்கே தோன்றியது! (சத்தியம் மக்களே- மைண்ட் வாய்ஸ் ஒலித்தது சமீபத்தில் அல்லவே அல்ல!)
சரி, ரைட்டு.. maybe நம்மள் புள்ளையாண்டன் முழுநேர எடிட்டராகும் சமயத்தில் இந்தக் கதைகளைக் கையாள இயலுமோ- என்னவோ ; இப்போதைக்கு இது வேலைக்கு ஆகாதென்று அந்தப் புத்தகங்களை பீரோவுக்குள் திணித்தேன்! இதெல்லாம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் போனெலியில் ஒரு வித்தியாசமான சமுராய் one shot ஆல்பம் இருப்பது கண்ணில்பட்டது! அப்புறமென்ன- 'ஜப்பானிய மாங்கா' ஒத்து வரலைன்னாலென்ன? ஜப்பானோடு இப்படியாச்சும் ஐக்கியமாவோமே! என்ற மகா சிந்தனை எழுந்தது! அதைத் தொடர்ந்து இந்த ஆல்பத்தின் கோப்புகளை வரவழைத்துப் பார்த்தால் artwork சும்மா ரணகள மாஸ்!! கதையோ மன்னர்கள் காலத்தில் நிகழ்வது போலத் தென்பட்டாலும், நெடுக பட்டையைக் கிளப்பிய ஆக்ஷனும், அந்த சித்திர மாயாஜாலங்களும் தீர்மானிக்கும் வேலையை எனது சார்பில் செய்து முடித்துவிட்டன! 2025-ன் அட்டவணையில் இதை நுழைத்தே தீருவதென்று அந்த நொடியே fix ஆனேன்! So "மாங்கா' இல்லாவிடினும் அதைப் போட்டுத் தாக்கும் தேசத்தையே களமாக்கிய கதையினை ரசிக்கத் தயாராகிக் கொள்வோமா folks? (இதற்கு முன்னே ஜானி in ஜப்பான் தவிர்த்து வேறு கதைகள் எவையேனும் ஜப்பானிய பின்புலத்தில் நிகலந்துள்ளதாய் நினைவிருக்கா folks 🤔?)
இங்கே ஆழமான கதை முடிச்சுகளோ; யூகிக்க முடியாத ட்விஸ்ட்களோ லேது! சிம்பிளான நேர்கோட்டுக் கதை தான்! ஆனால், அதை முன்னெடுத்துச் சென்றுள்ள பாணி, சித்திரங்களில் மிரட்டியுள்ள விதம்- totally வேறொரு லெவல்! அதிலும் ஒரு குள்ளமான பெரியவர் தான் கதையின் அச்சாணி ; அந்த மனுஷன் ஆக்ஷனில் விடும் ஃபயர் மூச்சிரைக்கச் செய்கிறது! கதையின் முடிவினை open ஆகவே விட்டுள்ளதால் maybe இதனைத் தொடரவும் கூடும் தான்! தொடர்ந்தார்களெனில் நிச்சயம் அதகளமே!
இதோ- ஒரிஜினல் அட்டைப்படமும்- உட்பக்க ப்ரிவியூக்களும்!
Moving on, இம்மாதத்தின் ஒரே கலர் இதழில் கூத்தடிக்கக் காத்துள்ளோர் நமது ஆதர்ஷ உட்சிட்டி கும்பலே! But இந்த தபா ஓரமாய் நின்று பிலிம் காட்டுவதோடு அடங்கிடாமல் சிக் பில்லுக்கு மெய்யாலுமே ஒரு ஹீரோ ரோல்! சந்தர்ப்பங்களால் மனுஷன் ஒரு திருட்டுக் கும்பலில் அங்கமாகிட, ஊரே அவரை வேட்டையாடும் நிலை எழுகிறது! இருக்கவே இருக்கார் நம்ம ஆபத்பாந்தவர்- அண்ணன் 'கிட் ஆர்டின்'!! And அவரும் சிக்பில்லை தேடிப் புறப்பட, வழக்கம் போல கூத்துக்கள் களை கட்டுகின்றன! தெறிக்கவிடும் கலரில் இதோ- ப்ரிவியூஸ்!
இக்கட one request ப்ளீஸ் : இம்மாத ஆன்லைன் கொள்முதல்களின் போது, இந்த சாகஸத்திற்குமே சேர்த்தே "ஜே'' போட்டீர்களெனில் சிக் பில்லுக்கும் மவுசு கூடும் ; கார்ட்டூன்களுக்கும் சற்றே உரம் கிட்டும்! Please folks- இவை தவிர்க்கப்பட வேண்டிய வாசிப்புகளே அல்ல! உங்களில் நிறைய பேர் கார்ட்டூன்களை தாண்டிப் போய்க் கொண்டே இருப்பது தான் இந்த genre தொய்வு காணக் காரணமாகிடுகிறது! உங்களுக்கு ரசிக்காட்டியும், உங்க ஜூனியர்ஸ் வசம் கொடுத்துப் பாருங்களேன் - ப்ளீஸ்?
லிஸ்டில் கடைசியாய் வந்தாலும் விற்பனைகளில் முதலிடத்தை ஆராமாய் தக்க வைத்துக் கொள்ளப் போகும் "தலக்கட்டுக்கள்'' - நம்ம சின்னத் தல + ஜம்பிங் தல தான்! இளம் டெக்ஸ் & ஸாகோர் மறுபடியும் கரம் கோர்க்கிறார்கள்- "எட்டும் தூரத்தில் யுத்தம்'' என்ற black & white சாகஸத்தில்! பற்றாக்குறைக்கு இளமை ததும்பும் கார்சனுமே செம ஸ்டைலிஷாக இங்கு உலா வருகிறார்! இந்த ஆக்ஷன் மேளாவில்! TEX ; ZAGOR என இரண்டு HUGE ஆளுமைகள் ஒரே கேன்வாஸில் மிளிரும் போது, அங்கே பரபரப்புக்குப் பஞ்சமாவது இருக்க முடியுமா? - அதுவும் அற்புதமான சித்திரங்கள் தம் பங்குக்குத் துணை நிற்கும் போது! இதோ பாருங்களேன்..!
ஆக, செப்டம்பரின் ரெகுலர் தடத்து ரகளைகள் இவையே! "வதம் செய்வோம் வேங்கைகளே'' அச்சாகி, பைன்டிங்கில் இருக்க, பாக்கி இரண்டு இதழ்களும் தொடரவிருக்கும் நாட்களில் பூர்த்தி கண்டிட வேண்டும்!
And செப்டம்பர் 5-ம் தேதி மதுரையில் புத்தகவிழா துவங்கிடவிருக்க, முதன்முறையாக எங்க ஏரியா மாநகரை சிறப்பிக்கும் விதமாய் கலரில் வேதாளர் கலக்கவிருக்கிறார்! நண்பர் ரபீக்கின் அறிமுகத்தில் பரிச்சயமான வடநாட்டு டிஜிட்டல் ஓவியரின் அதகள கலரிங்கில் "கபால வேட்டை'' மதுரை புத்தக விழா ஸ்பெஷலாகக் களம் காணவுள்ளது!
வேதாளர் புத்தகவிழாக்களின் டார்லிங் என்பதால், இப்போதிலிருந்தே சென்னை விழாவுக்குள் முகமூடியாரின் கையிருப்புகளை அதிகமாக்கிட முயற்சித்து வருகிறோம்! இந்த வடநாட்டு டிஜிட்டல் ஓவியரின் வேகம் ரொம்பவே மிதம் என்றாலும் பணியில் மிளிரும் தரம் முற்றிலும் வேறு லெவல்! இவர் மட்டும் இன்னும் துரிதமாய் பணிகளை முடித்திட இயலும் பட்சத்தில் வேதாளரை மட்டுமன்றி மாண்ட்ரேக் மாம்ஸையுமே கலரில் தரிசிக்கலாம்! What say folks??
அப்புறம் ரவுண்டு கட்டிப் புத்தக விழாக்கள் தொடரவிருப்பதால் நம்ம கேரவனும் இங்கும், அங்குமாய் சுழன்று வருகிறது! தற்போதைய முகாம் முத்து நகர் தூத்துக்குடியில்! Next - மதுரை! இங்கொரு உரத்த சிந்தனை!
அண்ணாச்சி விலகிச் சென்றுவிட்டதைத் தொடர்ந்து திருமதி.ஜோதி மட்டுமே நம் சார்பில் ஊர் ஊராய் பயணித்து வருகிறார் ஒவ்வொரு புத்தக விழாவுக்குமே ! பெரும்பாலும் வண்டி ஓடி விடுகிறதென்றாலும் - ஒரே தேதிகளில் இரு வேறு நகரங்களில் விழாக்கள் நடக்கும் போது தான் ஆள் பற்றாக்குறை வதைக்கிறது ! இதோ ஈரோட்டில் விழா நடந்த அதே நாட்களில் நாகபட்டினத்திலும் புத்தகவிழா நடைபெற்று வந்தது! அடுத்தடுத்து தேதிகள் உதைக்கும் போது "நாம இங்கே போகலாம்- அங்கே வாணாம்!'' என்ற ரீதியில் சில தீர்மானங்களை எடுக்க வேண்டிப் போகிறது! இன்னுமொரு நபர் மட்டும் கிட்டிவிட்டால், விடுதல்களின்றி சீஸனின் முக்கிய விழாக்களிலெல்லாம் கலந்து கொண்ட திருப்தி நமதாகிடும்! இதன் பொருட்டு, சிவகாசியில் சல்லடை போட்டு ஆள் தேடி வருகிறோம் தான்! ஆனால், உருப்படியான ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது!
*ரைட்டு.. விழா ஒன்றுக்கு ஐந்திலக்கத்தில் காசைச் சுருட்டி, பைக்குள் திணிப்பதே பிரபஞ்சத்தின் டிசைன்'' என்று எண்ணிய அற்புதன் முதல் அத்தியாயம்! என்ன - பணத்தைச் செருக நினைத்தது ஆபீஸுக்கான பையாக அல்லாது - தனது சொந்த ஜோப்பியாக அமைந்து தொலைத்தது தான் இக்கட்டே!
*"அக்காங்.. AC ஹாலாக இருந்தாலுமே.., என்னாலே மற்ற பதிப்பக ஆட்களோடு சேர்ந்துலாம் ஒரே மண்டபத்திலே தங்க முடியாது!'' தனியா ரூம்.. இல்லாட்டி ஞான் யூ-டர்ன் போடுமாக்கும்!"என்று பழிப்புக் காட்டிய கர்மவீரர் next !
*இரவு எட்டாகிவிட்டால், கைகள் நடுங்க ஆரம்பித்து விட, ஸ்டாலைப் பூட்டிவிட்டு - தண்ணீர்த்தொட்டி தேடிய கன்னுக்குட்டியாய் ஓட்டம் பிடித்த பிரகஸ்பதி கிட்டினார் அடுத்ததாய் !
*இதோ இருக்கும் திருநெல்வேலிக்குப் போன முதல் தின ராவிலேயே "எனக்கு ஒரு மாதிரி homesick-ஆ இருக்கு'' என்றபடிக்கே சொல்லாமல், கொள்ளாமல் ராத்திரி மூன்று மணிக்குக் கம்பி நீட்டிய கடமைவீரன் அதற்கப்புறம்!
*"எங்க ஓனருக்கு இதுலாம் சும்மா டைம்பாஸ்! என்னை சும்மானாச்சும் தான் அனுப்பியிருக்காங்க!'' என்று மதியம் குறட்டை விட்டு ஸ்டாலிலேயே ஓரமாய்ப் படுத்துறங்கிய புண்ணியகோடி லேட்டஸ்ட் !
So தேடிக் கொண்டிருக்கிறோம், அயராது தேடிக் கொண்டிருக்கிறோம் - சிறுநகர விழாக்களிலும் பங்கேற்றிடதொரு திறமையான பகுதி நேர பணியாளரை !! Maybe- just maybe, உங்கள் உறவு வட்டத்தில் பொருத்தமாய் யாரேனும் இருப்பின் கம்யூனிட்டி வாட்சப் நம்பருக்குத் தகவல் தெரிவியுங்களேன் folks?! (96000 61755)
ரைட்டு! தீபாவளி மலரில் டெக்ஸ் 330 பக்க அதிரடியைக் காட்டிட; ஏஜெண்ட் ராபின் ஒரு 282 பக்க திரில்லரில் ரகளை செய்திட- அதன் பிற்பாடு 452 பக்கங்களுடன் காத்துள்ளார் பெரியண்ணன் - சாம்பலின் சங்கீதம்!! So இப்போதிலிருந்தே சுக்குக் காப்பி; black டீ என்று சகலத்தையும் போட்டு வைத்துக் கொண்டு இரவுகளை பிஸியாக்க வேணும்! தேவுடா.. கரம் கொடுங்கள் ப்ளீஸ்!!! குவிந்து கிடக்கும் பணிகளுக்குள் மூழ்கிடப் புறப்படுகிறேன் folks!
Questions for this week :
1.இம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ?
2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ?
3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்?
4.வேதாளர்! வாங்குவீங்களா?
Bye all.. See you around! Have a lovely weekend!
First
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
DeleteMe first
ReplyDeleteWow romba naalakku appuram
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteHi
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteChik bill Aduthu vatgam seyyym vengai appuramum eppovume katta kadaisiya than vinayak...
ReplyDeleteவடகம் செய்யும் வேங்கையா 🤔🤔?
Delete😄😄
Delete////வடகம் செய்யும் வேங்கையா 🤔///
Delete🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Key board and google mayangal
Deleteவடகம்... 😄😄😄😄😄...
DeleteMe.
ReplyDeleteBaranitharan..
வணக்கங்கள் தலீவரே
Delete1.கி.நா, 2. TeX 3. CB
ReplyDelete2.கி.நா
3.100%
4.17 மதுரையில் இருப்பேன் சார்.. அது வரை புத்தக விழா இருந்தால் வாங்குவேன் சார்
அருமை சகோ
Deleteஆழ்கடல் அதகளம்- உண்மையில் அதகளமான கதை. ரிப் இந்த முறையும் என்னை கவர்ந்து விட்டார்.
ReplyDeleteயெஸ்...
Deleteஇவரின் கதையை எப்போது படித்து முடிந்தாலும் ஒரு மகிழ்ச்சியான மனநிறைவு கிடைக்கிறது.
Deleteநன்றி.
ரிப் கதைகள் எப்போதும் பாஸிட்டிவ் எண்ணங்களை கொடுப்பவை...
Delete100% உண்மை
Deleteகதையின் முடிவு சூப்பர். அலட்டல் இல்லாத ஹீரோ.
Deleteஉண்மை. ரிப் கிர்பி படிப்பது எப்போதுமே ரொம்ப ஜாலியாக இருக்கும்.
Deleteவணக்கங்கள்
ReplyDelete
ReplyDelete// 1.இம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ? //
10/10...
// 2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ? //
வதம் செய்வவோம் வேங்கைகளே...
// 3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்? //
100%
// 4.வேதாளர்! வாங்குவீங்களா? .//
ஆம்...
நானும் ஆமோதிக்கிறேன்💐😘🙋♂️🙋♂️🙋♂️
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteHi
ReplyDeleteபுது புது அர்த்தங்கள் - கொஞ்சம் சுவாரசியமாக படிக்க நன்றாக இருந்தது. ஒரு குறை என நான் நினைப்பது முதல் பக்கத்துக்கும் அடுத்து வரும் பக்கங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது போல் எனக்கு தோன்றியது.
ReplyDeleteகடந்த வருடம் வந்த வேதாளரின் வண்ண கதைகளை விட இந்த கதை நன்றாக இருந்தது.
மகிழ்ச்சி
கதையின் மையக்கரு சுவரஸ்யமானது,பழையமைமான கதைகளில் தொடர்ச்சியான் தொடர்பு கொஞ்சம் பிரச்சினை தான் போலும்,எனக்கும் இந்த எண்ணம் தோன்றியது...
Deleteஎஸ் எஸ்
Deleteகிங்ஸ் ஸ்பெஷல் கதம்பக் கூட்டணி நல்லா இருக்கு சார்,நாலு கதை முடிச்சாச்சி...
ReplyDeleteஅடுத்த கிங் ஸ்பெஷல்-2 வும் கலக்கட்டும்...
நவம்பர் or டிசம்பர் சார்!
Deleteசிறப்பு...
Deleteமூன்று அட்டைப்படங்களும் செம மாஸ்
ReplyDeleteஇம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ? //
ReplyDelete10/10...
// 2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ? //
வதம் செய்வவோம் வேங்கைகளே...
// 3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்? //
100%
// 4.வேதாளர்! வாங்குவீங்களா? .//
இல்லை.. பத்து வயசுல இருந்து இந்திரஜால்ல படிச்சு படிச்சு சலிச்சு சலிச்சு பார்த்தாலே ஓடுற மாதிரி ஆயிடுச்சு ..
பின்னட்டை டிசைனிங் செம😍😍😍
ReplyDeleteகலக்குறீங்க சார்
💛💙❤❤💚💜
ReplyDeleteJust curious Sir
ReplyDeleteWhat manga did you buy, Sir?
அவை பீரோவுக்குள் உறங்குகின்றன ஒண்ணரை வருஷங்களாய் 🤕
Deleteகடல் இந்த கேள்வியை தான் நானும் கேட்க வந்தேன். பெயர் மட்டும் சொல்லுங்க சார்.
Deleteஆமாங்க சகோ, பெயர் சொல்ல மாட்டேங்கிறார்
Deleteமங்கா பெயர் மட்டும் சொல்லுங்க, சார்
அப்படியே எடுத்து எங்க கிட்ட கொடுத்தீங்க என்றால் படித்து விட்டு பத்திரமாக திருப்பி கொடுத்து விடுவோம்
DeleteThis comment has been removed by the author.
Deleteஇதையும் சொல்ல நினைத்தேன், நீங்க சொல்லிட்டீங்க குமார் சகோ
Deleteசெம
குமார் சகோ சொல்வதை வழி மொழிகிறேன், சார்
//இம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ? //
ReplyDelete10/10
// 2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ? //
வதம் செய்வவோம் வேங்கைகளே...
// 3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்? //
100%
// 4.வேதாளர்! வாங்குவீங்களா? .//
எதொவொரு ஈர்ப்பு இன்னும் உள்ளதுங்க, சார்
கண்டிப்பாக வாங்கிடுவேன்
🙏🙏💐Welcome to Classic club 🙏💐😄
Deleteஜம்பிங் தல சகோ, நம்ம கிளாசிக் க்ளிப்பில் ஆல்ரெடி இருக்கோம்
Deleteமாண்ட்ரேக் எனது பேவரிட்😊😁
//எனக்கு ! மனசுக்குள் யாரோ "அங்கிள்..அங்கிள்..'' என்று உரக்கக் கூவுவது போல அன்றைக்கே தோன்றியது!//
ReplyDelete😄😄😄😄
ReplyDelete// 1.இம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ? //
100/100
// 2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ? //
சிக்-பில்
// 3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்? //
100%
// 4.வேதாளர்! வாங்குவீங்களா? .//
50:50
This comment has been removed by the author.
ReplyDelete// தீபாவளி மலரில் டெக்ஸ் 330 பக்க அதிரடியைக் காட்டிட//
ReplyDeleteசாதாரண நாளிலேயே 296 பக்கம் (இந்த மாதத்தை சொல்றேன்) டெக்ஸ் வந்துட்டு போனாரு... முன்னுத்தி முப்பது எல்லாம் ரொம்ப சிறுசு சார்!!
😮😮😮
Deleteகலரில் சார் 🥹
Delete// கலரில் சார் //
Deleteசூப்பர் சார். டெக்ஸ் கலர் கதைகள் இப்போது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கிறது.
டெக்ஸ் தீபாவளி மலர் கலரிலா😍😍😍
Deleteசூப்பர் 🔥🔥🔥
1.10/10. 2.முதல் வாசிப்பு இம்மாதம். சிக்பில் 3 .100சதவீதம். 4 .வேதாளர் நிச்சயமா வாங்குவேன்
ReplyDeleteஅட்டைப் படங்களின் அசத்தல்,
ReplyDeleteஅம்சமான ஓவியங்கள்,
மதுரை ஸ்பெஷல்,
சேலம் ஸ்பெஷல்,
என ட்ரெய்லர்களின் பதிவு படிச்சதும் ரெம்பவுமே திருப்தியா இருந்ததுங்க சார்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌 சூப்பர்.
"வதம் செய்வோம் வேங்கைகளே" கதையின் விளம்பரம் பார்த்தப்பவே ரெம்பவும் எதிர்பாத்த கதைங்க சார்.
எப்படியோ தள்ளி தள்ளி போய் இதோ அடுத்த மாதம் கைக்கு வரப்போவதை நினைத்தால் 💥😍.
பனிபடர்ந்த பின்னணியில் வ வே அட்டைப்படம் அசத்தல் என்றால்,
கலர்ஃபுல் ல் சிக்பில் அட்டைப்படம் இன்னொரு அசத்தல் ரகமென்றால்,
வன் மேற்குக்கே உரித்தான ஸ்டைலுடன்
டெக்ஸ்+ ஸாகோர் ன் அட்டைப்படம் 🔥.
ஆஹா, "மீண்டும் வடநாட்டு ஓவியரின் கைவண்ணமா?❤️"
"கீழ்த்திசை சூன்யம்" கலரிங் தந்த திறமையை இந்த முறையும் எதிர்பாக்கலாம்.
தொடர்ந்து வரும் வேதாளர் கதைகளுக்கு அவரையே கலரிங் பண்ண சொல்வது சரியான முடிவுங்க சார்.
லேட்டானாலும் பரவாயில்லை, பொறுமையாக செய்து வெளியிட்டலாம்.
அட்டகாசமான கலருடன்
வேதாளர் கம்பீரமாக ஒரு ரவுண்ட் வருவார்,
வரனும்.
மேலும் மந்திரவாதி கலரில் வருவதும்
வர வேற்கத்தக்கது.
இதுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல தீபாவளி விருந்துக்கு 1050 பக்க சொச்ச பக்க காமிக்ஸ் புத்தகங்கள் என்பது வாசகர்களுக்கு மிகப்பெரிய விருந்து.
❤️❤️❤️😍😍😍😍😍😍🔥❤️🔥🔥🔥🔥.
Questions for this Answer:-
1) 1)வதம் செய்வோம் வேங்கைகளே -10/10.
2) எட்டும் தூரத்தில் யுத்தம் -10/10.
3) சிக்பில் - 10/8.
2) முதல் தேர்வு "வதம் செய்வோம் வேங்கைகளே".
3) welcome சிக்பில்.
4) கண்டிப்பாக வேதாளர் வாங்குவேன் சார்.
🌹🌹🌹
🥰🥰🥰😘👍
Deleteவணக்கம்ங்கோ🙏
ReplyDelete// கபால வேட்டை'' மதுரை புத்தக விழா ஸ்பெஷலாகக் களம் காணவுள்ளது! //
ReplyDeleteச
செப்டம்பர் பேக்கிங் இதழ்களில் எங்களுக்கு கிடைத்து விடுமா சார்...
Me too.. 🙋♂️🙋♂️🙋♂️
Deleteஇல்லே சார்.... மதுரை விழாவின் போது தான் ரிலீஸ் ஆகும்! Maybe திருச்சி தொடரக் கூடும்.... so அந்த ஸ்பெஷல் இதழையும் சேர்த்து அடுத்த மாதம் வாங்கிக்கலாம்!
Deleteஓகே சார்...
Delete48...
ReplyDelete// சாம்பலின் சங்கீதம்!! So இப்போதிலிருந்தே சுக்குக் காப்பி; black டீ என்று சகலத்தையும் போட்டு வைத்துக் கொண்டு //
ReplyDeleteஆர்வத்தின் டெம்போ எகிறிக் கொண்டே போகிறது சார்...
///(இதற்கு முன்னே ஜானி in ஜப்பான் தவிர்த்து வேறு கதைகள் எவையேனும் ஜப்பானிய பின்புலத்தில் நிகலந்துள்ளதாய் நினைவிருக்கா folks 🤔?)///
ReplyDeleteநம்ம இளவரசி கதையே ஜப்பானில் நடந்துள்ளதேங் சார்.
லயன் 116- திகில் நகரம் டோக்கியோ- அக்டோபர் 1995
இதில் வில்லன்கள் இருவரும் ஐப்பானிய சகோதர தொழில் அதிபர்கள்
பெட் வைத்து சாதிப்பார்கள்.
மாடஸ்தியோட மோதி அழிவு நிச்சயம் ஆனபோது இருவரும் எதிர் எதிராக நின்று நீண்ட கத்தியால் ஒருவரையொருவர் வெட்டி தற்கொலை செய்து கொள்வர்.
அவன்களோட கடைசி, டயாலக் செம அது....
""" ஏக காலத்தில் வெட்ட வேண்டும் சகோதரா.."""
🫣🫣🫣🫣
Deleteகண்டிப்பா அவருக்கு ஞாபகம் இருக்கும்..
Deleteநமக்கு Test வைக்கிறார்.
என்று நினைக்கிறேன்.
- எனவே மாடஸ்டியோடு
ஒப்பிட்டு பார்க்க கண்டிப்பாக இந்தக் கதையைத்தான் முதலில் படிக்க வேண்டும் ..
அருமை சகோ 👏👏👏
Deleteவணக்குமுங்கோ…
ReplyDelete// வதம் செய்வோம் வேங்கைகளே //
ReplyDelete2025 காமிக்ஸ் அட்டவணை அறிவித்த போது என்னை மிகவும் கவர்ந்த கதை இது. ஆர்வமுடன் காத்திருக்கிறேன் சார்.
// So தேடிக் கொண்டிருக்கிறோம், அயராது தேடிக் கொண்டிருக்கிறோம் - சிறுநகர விழாக்களிலும் பங்கேற்றிடதொரு திறமையான பகுதி நேர பணியாளரை !! //
ReplyDeleteகண்டிப்பாக சார்.
//மாண்ட்ரேக் மாம்ஸையுமே கலரில் தரிசிக்கலாம்! //
ReplyDeleteசூப்பர் சார்
கலரில் மாண்ட்ரேக் செம
I am waiting 🥰😘👍💐
Delete/// இந்த தபா ஓரமாய் நின்று பிலிம் காட்டுவதோடு அடங்கிடாமல் சிக் பில்லுக்கு மெய்யாலுமே ஒரு ஹீரோ ரோல்! சந்தர்ப்பங்களால் மனுஷன் ஒரு திருட்டுக் கும்பலில் அங்கமாகிட, ஊரே அவரை வேட்டையாடும் நிலை எழுகிறது! இருக்கவே இருக்கார் நம்ம ஆபத்பாந்தவர்- அண்ணன் 'கிட் ஆர்டின்'!! ///
ReplyDelete--- plot ஏ செமயா இருக்கேங் சார்...
இம்மாதம் மொத மரியாதை சிக்பில்& கோவுக்கே..
டெக்ஸ்&ஸகோர் சித்திர அதகளம் சார்...
ReplyDeleteஅட்டைபடம் இதுவரை வந்ததுலயே....😉😉😉
😁😁😁😊😊
Deleteஎழுத்துருவ ஆக்கங்கள் செமயாக உள்ளதுங்க, சார்
ReplyDeleteஒவ்வொரு முறையும் கதைக்கேற்ப புதுமையான ஸ்டைலில் அசத்துகிறார் சகோதரர் ஜெகதீஷ்
+1000
Delete///ஜெகதீஷ்///
Deleteஜெகத் குமார்!
மன்னிக்க ஜெகத்குமார் சகோ
Deleteபாராட்டுகள் சகோதரரே
நன்றிகள் இளவரசரே
1 10/10
ReplyDelete2 முதல் வாசிப்பு கிராபிக் நாவல்
3 சிக்பில் நிச்சயம் வாங்குவேன்.
4 முகமூடி வீரர் மாயாவி என்று ராணி காமிக்ஸ் மூலம் காவிக்ஸில் நான் பார்த்த முதல் ஹீரோ வேதாளர் தான் அதனால் வேதாள மாயாத்மாவை நிச்சயமாக வாங்குவேன்.
1.இம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ?
ReplyDelete10/10
2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ?
சிக்பில்தான்
3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்?
100%
4.வேதாளர்! வாங்குவீங்களா?
அது..அது..அது..வாங்கி படிக்காம பத்திரமாக வைப்பதை விட, வேதளார் ரசிகர் யாரோ ஒருவருக்கு புக் போய் சேரும் வாய்ப்பை தடுப்பானேன் என்ற நல்லெண்ணத்தில்......!
// அது..அது..அது..வாங்கி படிக்காம பத்திரமாக வைப்பதை விட, வேதளார் ரசிகர் யாரோ ஒருவருக்கு புக் போய் சேரும் வாய்ப்பை தடுப்பானேன் என்ற நல்லெண்ணத்தில்......! //
Deleteநல்ல ஐடியா. நானும் இனிவரும் காலங்களில் முயற்சிக்கிறேன்
🥰🥰😘Me in🥰😘👍
ReplyDeleteஇம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ? //
ReplyDelete10/10...😘
// 2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ? //
வதம் செய்வோம் வேங்கைகளே...😘🥰
// 3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்? //
100%🥰😘
// 4.வேதாளர்! வாங்குவீங்களா? .//
ஆம்...😘👍🥰 definetly Sir😘😘
நாங்க எல்லாம் கிளாசிக் Gang sir 😘🥰👍
(எம்புட்டு? 🤔
எப்ப பணம் அனுப்பனும் சார் 😘🥰)
5. *மாண்ட்ரேக் மாம்ஸ்* கலரில் வேண்டும் 👍😘
6. "வதம் செய்வோம் வேங்கைகளே" அட்டை AI உபயம் போல் உள்ளதே Sir🤔🤔😘
கதையையே உருவாக்கும் போனல்லிக்கு அட்டையை உருவாக்குவது கம்பு சுத்தும் கடினமா - என்ன? அவுங்க எதுக்கு சாரே AI பக்கம் ஒதுங்க போறாங்க?
Deleteஎடிட்டர் சார்.. இளம் டெக்ஸ் அட்டைப்படம் அட்டகாசம்!! ' எட்டும் தூரத்தில் யுத்தம்' எழுத்துரு நிச்சயமா வேற லெவல்!! ஆனால் டைட்டிலுக்கு மேலே அந்த (+) symbol கொஞ்சம் குழந்தைத்தனமா இருக்கிற மாதிரி இருக்குங்க சார். முடிஞ்சா எதாச்சும் பண்ணுங்க..இல்லனா பரவால்ல!
ReplyDelete' தீவிரவாதி சிக்பில்' திரைப்படம் அட்டகாசம்!! 'சிக்பில், டாக்புல், கிட் ஆர்டின் தோன்றும்'னு போட்ட நீங்க பொடியனுக்கும் ஒரு கிரெடிட் கொடுத்திருக்கலாம் சார்!😅
ReplyDeleteஆமாங்க இளவரசரே
Deleteஅப்படியே சிக் பில் படமும் பின்னட்டையில்
எனது முதல் வாசிப்பு 'வதம் செய்வோம் வேங்கைகளே' தான்! கி. நா பாணி கதைகள் எப்போதுமே கிளுகிளுப்பானவை!!😍😍😍
ReplyDeleteஅட்டைப்படத்தில் அந்த பனி படர்ந்த பின்புலம் மிக அருமையாக வரையப்பட்டிருக்கிறது!!😍😍😍😍😍😍
Deleteஆமாங்க இளவரசரே
Deleteசெம மாஸாக உள்ளது
தீவிரவாதி சிக் பில் அட்டைப்படம் மாஸ்
ReplyDeleteவண்ண சேர்க்கை அசத்துகிறது 😍😍😍
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்லகாலம் பிறக்குது - அட்டகாசமான சிரிப்பு கதை, நிறைய இடங்களில் படங்கள் சிரிக்க செய்தது, ஆவ்ரெல் + ரின் டின் கேன் அலப்பறைகள் தொப்பை குலுங்க சிரிக்க வைத்தது. பல இடங்களில் எடிட்டர் சாரின் சுயஎள்ளல் சரியான இடங்களில் பயன்படுத்தி உள்ளது சிறப்பு. எடிட்டர் இந்த கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.
Deleteமொத்ததில் மனமகிழ்வு.
Hi Editor sir , Vanakam . Good to hear about Vedhalar story coming . Madrake in color - is it part of kings special -2 or is it separate one sir ?
ReplyDeleteAbout Kamache series- any chance of his stories coming in next year sir ?
கமான்ச்சே??
Delete"ஒரேயொரு குருக்கள் வரார்" கதை ஆகிப்புடும் சார்! அந்த ஓநாய் கணவாய் மட்டும் கலரில் வரும்!
Hi Editor sir , got it sir .
DeleteMadrake story in color - when is this coming and is it a separate book or part of kings special 2?
வந்துட்டேன்.
ReplyDeleteசுவாரசிய மீட்டர்
ReplyDelete1. வதம் செய்வோம் வேங்கைகளே
2. சிக் பில்
3. டெக்ஸ் அண்ட் ஸாகோர்
முதலில் படிக்க இருப்பது
வதம் செய்வோம் வேங்கைகளே தான்.
சிக் பில் இல்லாமலா?
ஓ வேதாளர் வேறு இருக்காரா?
அதும் கலரில் செம்ம சார்
வெற்றி வெற்றி
தங்ககல்லறை மறுபதிப்பு ரெஸ்பான்ஸ் புத்தக திருவிழாகளில் எப்படி உள்ளது சார்?
ReplyDeleteஈரோடு மட்டும் தானே சார் தங்கக் கல்லறை பார்த்திருக்கும் விழா? தூத்துக்குடில்லாம் ஸ்கூல் பிள்ளைகள் கூட்டத்தை எதிர்பார்த்தே ஓடும் வண்டி!
Deleteஇந்த முறை ஊருக்கு நடுவே அனைவரும் வந்துபோக வசதியான இடம் சார். எனவே கூட்டம் அதிகம் வர வாய்ப்புகள் அதிகம் சார்.
Delete///இந்த முறை ஊருக்கு நடுவே அனைவரும் வந்துபோக வசதியான இடம் சார். எனவே கூட்டம் அதிகம் வர வாய்ப்புகள் அதிகம் சார்.///
Deleteகுட்! விற்பனை சிறக்கட்டும்!👍💐
அருமை பரணி சகோ
Deleteசார் அருமை.....மூன்று அட்டைகளும் அதகளம் செய்தாலும் ஏ...டாப் ஜம்பாரும் டெக்சுமே அந்த தண்ணி ஒரிஜினலா டாலடிப்பதென்ன....வண்ணங்கள் என்ன....காட்சிகள் என்ன....இனிமேலும் இதான் டாப்பாருக்கும்னு பட்சி சொல்லுது...
ReplyDeleteகாத்திருக்க கதைளும் ண்ண வேதாளமும் உற்சாகத்த கிளப்ப....மாண்ட்ரேக் மெய்யாலுமே ஆர்வத்தை கூட்டுது வண்ணப் சிந்தனைகள் புதிதாய் கிட்டும் பணியாளர்கள் குறித்த வேதனை பிரேக் போட....எல்லாம் சரியாகி விடும் எனும் ஆறுதலோடு....
1. நூற்றுக்கு மேல்
2. வதம் செய்வோம் வேங்கைகளே
3.1000%
4. இதென்ன கேள்வி
சாரி தண்ணி போல கானலாய் கட்டுப்படும் மலைத் தொடர்
DeleteHi..
ReplyDelete93rd
ReplyDelete// 1.இம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ? //
ReplyDelete8/10 ..
// 2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ? //
சிக்-பில் ..
// 3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்? //
100%
// 4.வேதாளர்! வாங்குவீங்களா? .//
definitely yes ..
//But இந்த தபா ஓரமாய் நின்று பிலிம் காட்டுவதோடு அடங்கிடாமல் சிக் பில்லுக்கு மெய்யாலுமே ஒரு ஹீரோ ரோல்! சந்தர்ப்பங்களால் மனுஷன் ஒரு திருட்டுக் கும்பலில் அங்கமாகிட, ஊரே அவரை வேட்டையாடும் நிலை எழுகிறது//
ReplyDeleteஎனக்கு வுட்சிட்டியில் மிக பிடித்தவர் என்றால் அது சிக்பில் தாங்க
முதன் முதலில் படிக்க ஆரம்பித்த போது, இவரது கதாபாத்திரம் ரொம்ப பிடித்து போனது
பின்னர் கிட் ஆர்டின் & டாக்புல் மேடை பிடித்திட, கிட் ஆர்டின் & கோ என்று வளர்ந்தது, மகிழ்ச்சியே, ரொம்பவே ரசித்தேன் ,
ஆனாலும் சிக்பில் மட்டுபட்டதில் லைட்டாக வருத்தம் இருந்தது
சிக் பில் மீண்டும் களம் இறங்குவதில் மகிழ்ச்சிகள் பல, லைட்டாக கண்கள் வேர்த்தன
பின்னட்டையில் கூட சிக்பில்லை காணோம் 😭😭😭😭😭
Deleteஆமாம் ரம்யா. இவரை அட்டையில் காணோம்
Deleteதலைப்பில் மட்டும் சிக் பில் உள்ளது. முன் அட்டை மற்றும் பின் அட்டையில் இவரை காணோம்
Deleteசார்.. அப்படியே அந்த மூ. ச பக்கமா கொஞ்சம் வர்றிங்களா? 😌
Deleteஇளவரசரே 😂😂😂
Deleteஆமாங்க பரணி சகோ
நமக்கெல்லாம் முதல் அறிமுகம் சிக் பில் & கோ என்பதே😐😐😐
Yes Ramya.
Deleteஇளவரசரே கார்ட்டூன் ரசிகர்களான நாம் எல்லாம் சாப்ட். அதையே கடைசி வரைக்கும் கடைபிடிப்போம்.
//இளவரசரே கார்ட்டூன் ரசிகர்களான நாம் எல்லாம் சாப்ட்//
Deleteசரிதாங்க PfB! ஆனா சாது மிரண்டால் (மூ)சந்து கொள்ளாதுன்றதையும் நீங்க புரிஞ்சிக்கிடணும்!!😝
இளவரசே அடுத்த வருடம் கண்டிப்பாக கார்ட்டூன் ஸ்பெஷல் வரும். இல்லை என்றால் மூ ச விட வேற ஒரு ஐடியா உள்ளது, உங்கள இடையலகை குலுக்கி ஆடும் போராட்டம் நடத்தலாம். சும்மா காமிக்ஸ் உலகமே அதிரும்.
Deleteஎன்னுடைய favourites இது போல தான் இருக்கும்
ReplyDelete1. 8/10
2.a. ஜாப்பனீஸ் ஸ்டோரி
2.b. டெக்ஸ் அண்ட் சாகோர்
2.c. உட்ஸிடி உட்டாலங்கடீஸ்
3. என்னை பொறுத்தவரை சிக்பில் அண்ட் லக்கி லுக் ஆர் equals .
4. வேதாளர் தான் நான் பார்த்த முதல் காமிக்ஸ். கலர் கன்றாவியாக இருந்துவிடுமோ என்ற பயம் தான்.
கீழ்த்திசை சூன்யத்தில், டிஜிட்டல் கலரிங் அருமையாக வந்திருந்தது, சகோ
Deleteஇவரது கைவண்ணமே, சகோ
பலரும் இங்கு பாராட்டி இருந்தார்கள், சகோ
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...!
Deleteஅப்டின்னு எப்பயோ படிச்ச நினைவு பிரதர் 🤔!
"எட்டும் தூரத்தில் யுத்தம்". முதன் முறையாக டெக்ஸும் கார்சனும் இதில் தான் சந்திக்கிறார்கள் என்று நினைக்கிறேன்
ReplyDeleteசிங்கத்நலைவி மாடஸ்டிக்கு ஒரு ஜப்பான் சாகஸம் உண்டே
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஇந்த் மாதம் இளம் யுவதிகள் அட்டைப்படத்தில் இல்லை, எங்கள் இளவரசரின் ஜூம் கண்களுக்கு வேலை இல்லாமல் செய்து விட்ட ஆசிரியர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். இவன் இளவரசரின் ஜூம் கலைகண் ரசிகர் மன்றம்
ReplyDeletePfB.. 'ஜூம் கலைகண் ரசிகர் மன்றம்'🤣🤣🤣🤣🤣🤣🤣
Deleteபரணி சகோ 😂😂😂
Delete//இளவரசரின் ஜும் கலைகண் ரசிகர் மன்றம்//. வாழ்த்துக்கள். இவண் .இளவரசர்இடையழகு ரசிகர் மன்றம்
ReplyDeleteஆஹா!!😍😍😍😇😇😇😁😁
Deleteராஜசேகர் சார் 🤣🤣🤣🤣🤣
Delete
ReplyDelete*உதிரம் பொழியும் நிலவு.....*
இம்மாத டெக்ஸ் கதையின் தலைப்பே ரொம்ப கவித்துவமானது. வெள்ளி நிலா, பால் நிலா, குளிர் நிலா, அழகு நிலானு காவியங்களிலும், கவிதைகளிலும், பாடல்களில் சொல்லப்பட்டுள்ளதை ரசித்திருப்போம். என் சின்ன வயசுல நிலானா, அந்த *என் இனிய இயந்திரா* பொதிகை தொடர்ல நிலாவாக வந்த சின்ன வயசு ஊகா தான் எனக்கு தெரிஞ்ச அழகு நிலா! அந்த கண்கள் இன்னமும் மறக்க இயலாதவை!
இத்தனை நிலா தெரியும்; அதென்ன "உதிரம் பொழியும் நிலா"??? தலைப்பே கொஞ்சம் மிரட்டுது. 1980ல நானெல்லாம் நுங்கு வண்டி ஓட்டிய காலத்தில் ஒரு திரைப்பட பாடல் வெளியானது. இல்லாத உவமைகளை கொண்டு பாடலாசிரியர் கட்டமைத்திருப்பார். இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்... இந்த வரிசையில் உதிரம் பொழியும் நிலாவையும் வைக்கலாம்.
தலைப்பே நிறைய விசயங்களை தலைக்குள் சுழல வைத்திட்டது. சரி கதைக்குள் போகலாம் நண்பர்களே.
ஃப்ளாஷ் பேக்கில் நடக்கும் கதைகள் எப்போதும் சூப்பர் ஹிட்தான். இதில் நேரடியாக ஃப்ளாஷ் பேக் காலத்திலேயே கதை தொடங்குது.
அமெரிக்க உள் நாட்டு யுத்தத்திற்கு பின்பான தெற்கு டெக்ஸாஸில் யங் ரேஞ்சர்கள் டெக்ஸ்ம் அவரது பார்ட்னர் கஸ் பெய்லியும் மூன்று கமான்சே குற்றவாளிகளை தேடி செல்கின்றனர். ப்ளாக் மூன் பண்ணை பாஸின் இளம் மகள் அடாவை அவரது பண்ணையின் முன்னாள் கெளபாய், கமான்சே சார்வெஸ் கடத்திசென்றிடுகிறான். அடாவை மீட்பதற்கு செல்லும் அவளை மணம் புரிய உள்ள டபுள் ராக் பண்ணையை சேர்ந்த கார்ல், ப்ளாக் மூனின் மேற்பார்வையாளர் சைமன்ஸ்& அவர்களது கெளபாய்களை டெக்ஸ்ம் பெய்லியும் எதிர் கொள்கின்றனர்.
கொட்டும் மழையில் கமான்சேக்கள் ஒளிந்துள்ள மலைப்பகுதியில் அனைவரும் தேடி செல்ல, கடுமையான மோதலுக்கு பின் அடாவை மீட்கின்றனர். மோதலில் இளம் ரேஞ்சர் பெய்லியும் பல கமான்சேக்களும் மாண்டுபோக சார்வெஸ் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறான்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத அடாவை மணம் புரிய கார்ல் மறுக்க, சார்வெஸால் குத்தப்பட்ட அடாவின் தந்தை ஸ்டார்க் இறக்க டெக்ஸ் விடை பெறுகிறார்.
16ஆண்டுகள் ஓடிப்போகிறது. நவஹோ கிராமத்திற்கு திரும்பும் வழியில் டெக்ஸ் அடாவை சந்திக்கிறார். அடா, ரிக் சைமன்ஸ் தம்பதிகளின் இளம் மகன் டேனியல். டேனியல் உருவில் செவ்விந்திய கலப்பினன் ஆக வளர்கிறான். ஊர் அடாவை சார்வெஸின் காதலியாக தூற்றுகிறது. கார்லின் கெளபாய்களால் அவமானப்படுத்தப்படும் டேனியல் பண்ணை காவலுக்கு போகிறான்.
இரவில் பண்ணைக்கு திரும்பும் கார்ல் கொடூரமாக கொல்லப்பட, ப்ளாக் மூனின் கால்நடைகளும் சூறையாடப்பட்டு கெளபாய்களும் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். தடயங்களை காணும் டெக்ஸ்க்கு அது சார்வெசின் பழிவாங்கும் செயல் என தெரிகிறது. இதற்கிடையில் டேனியல் காணாமல் போக அவனை கடத்தியதும் சார்வெஸ் என உறுதியாகிறது.
டெக்ஸ், ரிக் சைமன்ஸ்& சில கெளபாய்கள் டேனியலை மீட்க சார்வெசின் பாதையில் மெக்ஸிகோவுக்கு பின்தொடர்கின்றனர்.
வழியில் சார்வெசை தேடும் வயதான யுமா சைலண்ட் புட்டை சந்திக்கின்றனர். சார்வெசை தொடர்ந்தால் மரணம் உறுதி என சைலண்ட் புட் எச்சரிக்க, கதை சூடுபிடிக்கிறது.
கடுமையான பாலை வன பரப்பான பேட் லேண்டை கடந்து செல்வது.....
ரியோ கிராண்டை கடந்து மெக்ஸிக எல்லை பாதுகாப்பு படையோடு உரசுவது.....
சார்வெசின் வலையில் விழாமல் நைச்சியமாக அவனை தொடர்வது....
என பரபரப்பான மெக்ஸிகோ மலைகளில் கதை நகர்கிறது.
என்ன முயன்றும் சார்வெஸை நெருங்க கூட இயலவில்ல டெக்ஸ்& கோ வால்...
ஒரு மலை முகட்டில் சார்வெஸின் வலையில் வீழும் டெக்ஸ்& ரிக் எக்குதப்பாக சிக்கிட......
#இதில் இருந்து மீண்டனரா?
#சைலண்ட் புட் என்னவானான்?
#அடாவின் மர்மம் என்ன?
#சார்வெஸ் அடாவின் காதலனா?
#டேனியல் என்ன செய்தான்?
போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லிட ஏகப்பட்ட ட்விஸ்ட் & அதிரடிகளுடன் நீஈஈஈஈண்ட பரபரப்பான க்ளைமாக்ஸ் காத்துள்ளது.
#அடாவின் மர்மம் விலகும்போது *உதிரம் பொழியும் நிலவு* -ன் அர்த்தம் விளங்கும்போது ஆச்சர்யம் காத்துள்ளது.
வேறு பாணியில் வரையப்பட்ட ஓவியங்கள் டெக்ஸை சற்றே அந்நியப்படுத்தினாலும் கதையின் ஓவியங்கள் நம்மை கட்டி போடுகின்றன....
மழை பொழியும் டெக்ஸ்ஸாஸ் மலை முகடுகள், குத்து பாறைகள், பாலைவன பேட்லேண்ட்ஸ் காட்சிகள், மெக்ஸிகோவில் சார்வெஸின் மறைவிடம் தேடிபோகும் வழியெங்கும் பாறைகளும், மலைகளும் நிறைந்த காட்சிகள் என கதை முழுதும் ஓவியங்கள் ரசிக்க வைக்கின்றன....
தல மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும் 100/100 ஸ்கோர் வழங்காமல் இருக்க இயலாது....!!!!
அட்டகாசமான விமர்சனம்
Deleteடெக்ஸ் ரசிகரின் விரிவான விமர்சனம். 👏🏻
Delete"நரகத்தை பார்த்தேன்" மங்கா தானே சார். நீங்கள் ஒரு முன்னோடி என்பதை நீங்களே மறந்து விட்டீர்கள்.
ReplyDelete🎵 செப்டம்பர் மாதம், செப்டம்பர் மாதம்🎵,
ReplyDeleteமூன்று கதைகளும் முத்தான கதைகள்.
ஒரு ஓய்வு பொழுதை அள்ளிக் கொடுத்த இந்த ஞாயிறு - 'தங்கக் கல்லறை' மறுபதிப்பின் புண்ணியத்தில் இனிதே கழிந்தது! சுமார் பத்து வருட இடைவெளிக்கு பிறகு படிக்கிறேன் என்பதால் புதிதாக படிப்பது போன்ற உணர்வே இருந்தது!
ReplyDeleteபெரிய சைசில், அசத்தும் பிரின்டிங் தரத்தில், இதமான வண்ணத்தில், பரபரப்பான கதை களத்தில், அருமையான வசனங்களில் - தங்கக் கல்லறையைப் படிப்பது விறுவிறுப்பான ஒரு சுகானுபவம்!!
மார்ஷலாக டைகரும், டெபுடியாக ஜிம்மியும் கதையை நெடுக வியாபித்து இருந்தாலும், இறுதியில் மனதில் நிற்பது கொடூரமான சிந்தனைகளைக் கொண்ட லக்னர் (எ) கஸ்டாப்பும், அவனால் பிசாசாக, பாவப்பட்ட ஜீவனாக அலைய நேரிட்ட ஒரிஜினல் லக்னரும் தான்!
புத்தக ஆக்கம் அபாரம்!! உள்பக்கங்களை தடவினால் மொடமொடவென்று நெளியும் பைண்டிங் பிசகு மட்டும் கொஞ்சமாய் ஒரு திருஷ்டி பொட்டு போல தோன்றினாலும் - பக்கங்களை திருப்பி படிக்க படிக்க அந்த மொட மொட கிட்டத்தட்டக் காணாமல் போய்விடுவதும் ஒரு ஆச்சரியம் தான்!
ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனும் கொண்டாட வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, படித்துத் திளைக்க வேண்டிய மகத்தான படைப்பு இதுவென்பதற்கு இப்போதும் மாற்று கருத்து ஏதுமில்லை!!💐💐💐
பிடியுங்கள் 1000 பொற்காசுகளை
Delete1000 பொற்காசுகள் கூட வேண்டாம்.. ஆயிரம் சாதா காசுகள் கிடைத்தாலே ஒரு ரவுண்டு பன்னோ, முக்கோண சமோசாவோ வாங்கி சாப்பிட்டு பசியாறிக்குவேன்!😁
Deleteநான் இன்னும் அந்த புத்தகத்தை திறந்து கூட பார்க்கவில்லை. புதிய கதைகள் இன்னும் சில படிக்காமல் உள்ளது, அவைகளை படித்த பிறகுதான் தங்ககல்லறையை படிக்க வேண்டும்.
Delete// 1.இம்மாத 3 இதழ்களின் கூட்டணிக்கு உங்களின் சுவாரஸ்ய மீட்டர்களில் எவ்வளவு மார்க்ஸ் போடுவீங்களோ? //
ReplyDelete9/10
// 2.மூன்றையும் ஒருசேர வாங்கிடுவோராக இருக்கும் பட்சத்தில், உங்களின் முதல் வாசிப்பு எதுவாக இருக்குமோ? //
டெக்ஸ்
// 3.சிக் பில்? உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்புகள் எவ்வளவு சதவிகிதம்? //
100%
// 4.வேதாளர்! வாங்குவீங்களா? .//
நமது வெளியீடுகளை புறக்கணிப்பது கடினம். ஆகையால் முழு மனதுடன் வாங்காமல் அரை மனதுடன் வாங்கி படிப்பேன்
expecting new japanese saga
ReplyDeleteமேகமாய் வந்து போகிறாய் - அட வித்தியாசமான ஆரம்பம், சுவாரசியமாக இருந்து.
ReplyDeleteஆம் sir... ஒரு பொறுப்பானவர் கிடைப்பது அரிதுதான்... அதுவும் புத்தகங்களை நேசிப்பவராகவும்
ReplyDeleteஇருப்பது அபூர்வம்.. ஜோதி சகோவுக்கு வாழ்த்துக்கள்.. ❤️👍🙏...
150
ReplyDeleteகிங்ஸ் ஸ்பெஷல் முடிச்சாச்சி,கலவையான கதைகள்,கலவையான உணர்வுகள்,ஒவ்வொன்றும் தனித்தனி ரகம்,சிறை மீட்டிய சித்திரக் கதை சுவராஸ்யமாவே போச்சி,LCU மாதிரி கெடுவான் கேடு நினைப்பான் வசனம் ஒரே புள்ளியில் இணைக்குதோ ?!
ReplyDeleteஎல்லா கதையிலும் "இழவு"
வசனம் மாதிரி இந்த தடவை "கெடுவான் கேடு நினைப்பான்" ஆகிடுச்சோ...
வேட்டை மறக்கா வல்லூறுகள் தோட்டா தெறிக்கும் டேங்கோவின் மற்றொரு சாகஸம்,ஸ்டைலிஷ் ஸ்டார் டேங்கோ ஆக்ஷனில் அதகளம் செய்கிறார்...
கேல்குலஸ் படலம்,கேப்டன் ஹேடாக்கின் கோடை இடிக்குக் கொடுவா குடை பிடிக்க...
ஹேடாக்கின் ஜலதோஷம் எல்லா பாத்திரங்களுக்கும் பிடிச்சிடுச்சு போல,குர்வி டாஷின் குடுமியைக் குமுறியெடுக்க...
ஓவியங்கள் அசத்தல்...
ஜாலிலோ ஜிம்-இன்ஷுரன்ஸ் ஏஜெண்டின் அலப்பறை...
"உசிரை எடுக்கும் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டுகள்கிட்டேர்ந்து மட்டும் தான் எனக்குக் காப்பீடு இல்லே"...
ஜிம்முக்கு ஜாலி,ஹேடாக்குகிற்கு கடுப்பு,ஹி,ஹி,ஹி...
// "உசிரை எடுக்கும் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டுகள்கிட்டேர்ந்து மட்டும் தான் எனக்குக் காப்பீடு இல்லே"... //
DeleteROFL
தி டெரர் லைப்ரரி,
ReplyDeleteஸ்னாக்ஸ் (காரப் பொரி) சாப்பிட்டுக் கொண்டே வாசிக்க அருமையானதொரு தொகுப்பு...
குட்டி,குட்டியான திகில் தொகுப்பு நல்ல டைம்பாஸ்...
தங்கக் கல்லறை உண்மையான லக்னரின் Survival ம்,கஸ்டாப்பின் பேராசை,நயவஞ்சகமும்,டைகரின் விடாபிடி தேடலும்,ஜிம்மியின் சரக்குமாய் அசுரத்தனமானதொரு பயணம்...
ReplyDeleteபாலைவனப் பயணத்தில் சரக்கும், தண்ணீரும் தொண்டையை நனைத்ததோ இல்லையோ,பாலைவனத்தின் மணல் புழுதிகள் அனைவரின் தொண்டையை வறட்டியிருக்கும்...
தங்கக் கல்லறை எல்லாம் திரும்ப,திரும்ப படிச்சிக்கிட்டே இருக்கலாம்,விமர்சனம் செய்யத்தான் வார்த்தைகளை தேடனும்...
வாசிப்பாளனின் சிந்தையை ஆக்ரமிக்கும் மகத்தானதொரு படைப்பு த.க...
முழுமுதல் கடவுள் விநாயகருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமரணப் பொறி,
ReplyDeleteஅட்டகாசமான ஆக்ஷன் ஸ்டோரி,தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை...
கேடுகெட்ட ஸ்கெடி கடைசிவரை திருந்தவே இல்லை,புழு,பூச்சிக்கும் கெடுதல் நினைக்காத புரபஸர் ரொபர்டோ மனதை கவர்ந்து விட்டார்...
Good review
Deleteஹனிகன்,
ReplyDeleteமரணப் பொறி,ஹனிகன் இரண்டு ஆக்ஷனுமே நட்புதான் மைய இழை...
டாக்டர் ஜைல்ஸின் அர்ப்பணிப்பு ஒருபக்கம் வியப்பையும்,ஆச்சரியத்தையும் வரவழைத்தாலும்,இன்னொரு பக்கம் எரிச்சலையும் வரவழைத்து விடுகிறது...
ஹனிகன் நல்ல டைம்பாஸ் ஆக்ஷன் ஸ்டோரி...
கடந்த ஞாயிறு காமிக்ஸ் நண்பர்கள் வாட்ஸ்ஆப் குழுவில் நடந்த ஓரு ஜாலி & இன்ட்ரஸ்ட்டான கேள்வி பதில் போட்டிகள்....
ReplyDeleteகடந்த 40-50 ஆண்டுகளின் லயன், முத்து, மினிலயன், திகில் factல இருந்து கேள்விகள் செட் பண்ணபட்டிருந்தன...
ஒரு ரெண்டு மணி நேரம் டைம் வைத்து கொண்டு எத்தனை பதில்கள் அளிக்க முடியுதுனு ஒரு ட்ரை பண்ணி பாருங்களேன் நண்பர்களே...
*1. முதல் பதிப்பு, கிளாசிக்ஸ் பதிப்பு, மறுபதிப்பு (50) ஆகிய மூன்றிலும் ஒரே அட்டைப்படம் வந்த மாயாவியின் கதை எது .. ?*
*2. ஒருமுறை கூட ரீப்ரிண்ட் வராத ஸ்பைடர் கதைகள் ஏதேனும் நான்கு ..?*
*3. வேதாளரின் ஓவியர் வேற எந்த ஹீரோவுக்கு வரைந்து உள்ளார் ..?*
*4. ரொம்ப, ரொம்ப குட்டி ஹார்ட் கவர் புக் எது ..?*
*5. லயன் காமிக்ஸ் ல் விளம்பரப்படுத்தப்பட்டு சுமார் ஒரு 20 வருடங்களுக்கு பின் வெளிவந்த கதைகள் ஏதேனும் 2 ..?*
*6. லயன், திகில், முத்து .. மூன்றிலும் தோன்றிய ஒரு ஹீரோ , யார் ..(ஸ்பெஷலாக இருந்தாலும் ஓகே)*.
*7. இரண்டு கதைகளில் (புக்) மட்டுமே வந்த ஏதேனும் இரண்டு ஹீரோக்கள் ..?*
*8. ஸ்பெஷல் வெளியீடுகளில் இடம்பெற்றும் ரீபிரின்ட் வராத ஏதேனும் இரு டெக்ஸ் கதைகள் ..?*
*9. லக்கி லூக் ன் Maxi சைஸ் என்னென்ன ..?*
*10. திகிலின் முதல் மூன்று இதழ்கள் ரீ பிரிண்டாக இடம் பெற்றுள்ள புத்தகங்களின் பெயர் என்ன ..?*
*11. லக்கி லூக் - புரட்சி தீ ன் முதல் பதிப்பின் விலை என்ன ..?*
*12. காமிக்ஸ் கிளாசிக்ஸில் வெளியான பெரிய சைஸ் புக் எது ..?*
*13. காமிக்ஸ் கிளாசிக்சில் அட்டைப்படம் தலைகீழாக ஒட்டி வெளியான கதை எது ..?*
*14. மாடஸ்டியின் இரட்டை ஆல்பங்களில் ஏதேனும் ஒன்று ..?*
*15. சமீபத்தில் வேதாளர் எத்தனை கலர் புத்தகங்களில் வந்துள்ளார் ..?*
*16. டெக்ஸ் வில்லரின் முதல் முழு வண்ண புத்தகம் எது ..?*
Delete*17. இரண்டாம் பாகம் முன்பும், முதல் பாகம் பின்பும் வெளிவந்த புத்தகங்கள் எது ..?*
*18. பேட்மேன் கதைகளில் ஏவையேனும் நான்கு புத்தகங்களின் பெயர்கள் ..?*
*19. லயன் காமிக்ஸ் ல் வெளிவந்த லாரன்ஸ் & டேவிட் கதைகள் என்னென்ன ..?*
*20. ஓவியர் வில்லியம் வான்ஸ் வரைந்த ஏதேனும் நான்கு ஹீரோக்களின் பெயர் ..?*
*21. Lady S புத்தகங்கள் எத்தனை இதுவரை வந்துள்ளது ..?*
*22. "உயர்திரு இல்லை" யாருங்க அவரு ..?*
*23. சுமார் 20 வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி ஆகியுள்ள ஏதேனும் இரண்டு ஹீரோக்கள் ..?*
*24. அட்டை படத்தின் வண்ணம் தலைப்பிலேயே உள்ள கதை எது ..?*
*25. 10 ரூபாயில் வெளிவந்த டெக்ஸ், டைகர் தனிக் கதைகள் (one shot story) என்னென்ன ..?*
*26. தமிழில் இதுவரை வெளியாகி உள்ள கமான்சே கதைகள் எத்தனை ..?*
*27. மூன்று கதைகளில் (தனி புக்) மட்டுமே வந்துள்ள ஏதேனும் இரண்டு ஹீரோக்கள் ..?*
*28. லயன் காமிக்ஸ் ல் ஆர்ட் பேப்பரில் வெளிவந்த முதல் முழு வண்ண புக் எது ..?*
*29. ரின் டின் கேன் ன் தனி கதைகள் எத்தனை ..?*
*30. இரும்பு கை மாயாவி செப்பு வலை கவசத்தோடு வந்த நான்கு புத்தகங்களின் பெயர்கள் ..?*
*31. சார்லியின் சூப்பர் ஹிட் கதையாக அதிக வாசகர்களால் தேர்வு செய்யப்படும் பதில் ..?*
Delete*32. பராகுடா வின் இரண்டு பாகங்களிலும் உள்ள மொத்த அத்தியாயங்கள் எத்தனை ..?*
*33. அட்டையில் ஒரு பெயரும் உள்ளே ஒரு பெயருமாக (சற்று மாறி) வெளிவந்த டெக்ஸ் கதை எது..?*
*34. ஸ்பைடர் ன் நம்பர் 1 கதையாக அதிக வாசகர்களால் தேர்வு செய்யப்படும் பதில் எது ..?*
*35. மாடஸ்டியின் ஓவியர் வேறொரு கதைக்கும் வரைந்து உள்ளார்.. அது என்ன கதை ..?*
*36. இரட்டை வேட்டையரின் மிகப்பெரிய சாகசம் எது ..?*
*37. இரு வண்ணத்தில் வெளியாகி உள்ள ஏதேனும் ஒரு 5 கதைகளின் (புக்) பெயர்கள் ..?*
*38. மறுபதிப்பில் (வண்ணத்தில்) சற்று பெயர் மாறி வெளிவந்துள்ள டெக்ஸ் கதைகளில் ஏதேனும் ஒன்று ..?*
*39. ஒரிஜினல் பெயரிலிருந்து தமிழுக்கு பெயர் மாறி வந்துள்ள ஏதேனும் இரண்டு ஹீரோக்கள் ..?*
*40. ""அந்த ஸ்பெஷல் புக்"-- ல், வெளிவந்த நான்கு கதைகளும் கிட்டத்தட்ட ஒரே அளவான பக்கங்கள் .. என்ன ஸ்பெஷல் அது ..?*
*41. அந்தப் பாடலை எனக்கும் சொல்லிக் கொடுங்கள் அங்கிள் .. - இடம்பெற்றுள்ள கதை எது ..?*
Delete*42. நான் ஒரு அற்ப ஜீவன் .. என் உயிரே போவதானாலும் என்னுள் பதுங்கிக் கிடக்கும் பேயோடு போராடியே தீருவேன் .. - இடம் பெற்றுள்ள கதை எது ..?*
*43. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும் அவனை பலி கொண்டு விட்டது .. - இடம் பெற்றுள்ள கதை எது ..?*
*44. என்னுடைய கேள்வி இதுதான் .. பொறி எங்கே வைக்கப்பட்டுள்ளது .. - இடம் பெற்றுள்ள கதை எது ..?*
*45. பொதுவாக நான் எதைக் கண்டும் கலவரப்பட மாட்டேன் .. ஆனால் இன்று உன் கண்களில் காணப்படும் பீதி ரத்தத்தை உறைய வைப்பதாக உள்ளது .. - இடம் பெற்றுள்ள கதை எது ..?*
Excellent questions!
Deleteஇந்த இன்ட்ரஸ்ட்டான போட்டியில் கடுமையான போட்டி நிலவியது....
Deleteரிசல்ட் ---போட்டி நடத்துனர் அறிவிப்புபடியே....
அற்புதமான பதில்களை அளித்து அதிக மதிப்பெண்கள் பெற்று காமிக்ஸ் உலகின் அனுபவசாலி என்பதை நிரூபித்து முதலிடம் பெறுகிறார் தல டெக்ஸ் @Salem Tex Vijayaragavan அவர்கள் .. வாழ்த்துக்கள் தல ..
🔥😍💓💥👍💐💐💐💐
மதிப்பெண்கள் 70/100 . 💥
இரவு பணியின் நடுவிலும் காமிக்ஸ் எனும் மாயாஜாலத்தின் தூண்டுதலால் பணி செய்தவாரே பதிலளித்து, இரண்டாம் இடத்தை பெற்று அசத்துகிறார் நள்ளிரவு நாயகன் @செந்தில் சத்யா1 ..
வாழ்த்துக்கள் ஜி ..
🔥💓💥👍💐💐💐
இரண்டாம் இடம் @செந்தில் சத்யா 58/100
இரவு 10 மணிக்கு ஆஜராகி 10.30 மணிக்கு செல்போன் சுவிட்ச் ஆப் .. அதற்குள் அளித்த அனைத்து பதில்களும் சரி .. 😱 மூன்றாவது இடம் பெறுகிறார் தம்பி ப்ளைசி @ப்ளைசி பாபு
வாழ்த்துக்கள் பாபு ..
💥🔥💓👍💐💐💐💐
மூன்றாம் இடம் @ப்ளைசி பாபு 55/100
அதற்கு அடுத்த இடத்தில் 48 மதிப்பெண்களுடன் @கணேஷ்குமார் @கோவிந்தராஜ் பெருமாள் இருக்கிறார்கள் .. 4வது & 5வது இடத்தை பிடிக்கிறார்கள்👍
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐
வாழ்த்துகள் நண்பர்களே
Deleteசிறப்பு சிறப்பு
Deleteவெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐💐💐
என்ற சகோ, என் தோழர், என் அணியின் கேப்டன்😍😍😍
மூவருக்கும் பாராட்டுகள்
க்ளாசிக் காதலர் கணேஷ்குமார் சகோவிற்கும், ஈரோடு விமர்சன வித்தகர் கோவிந்தராஜ் சகோவிற்கும் சிறப்பு வாழ்த்துகள்
Deleteஇங்கு தொகுத்த பதிவட்டதற்கு நன்றிகள் சகோ💐💐💐
Delete@Salem Tex Vijayaraghavan சகோ
வாழ்த்துகளுக்கும் உற்சாகமான பாராட்டுக்கும் நன்றிகள் பரணி& என்ற சகோ...🥰🥰🥰🥰🥰🥰
Deleteஉங்களின் இத்தனை ஆண்டு ஊக்கப்படுத்தலே பல்வேறு தகவல்களை திரட்டி, இதுபோன்ற போட்டியில் வெல்ல முழு முதற் காரணம்.. இந்த வெற்றி நண்பர்கள் அனைவருக்கும் உரித்தானது.🙏🙏🙏🙏🙏
ஜப்பானிய நாட்டில் நடக்கும் இன்னொரு கதை நம்ம மாடஸ்டியின் 'திகில் நகரம் டோக்யோ' சார்.
ReplyDeleteஅருமையான ஆக்ஷன் கதை இது. கார்வினும், இளவரசியும் ட்ரைனிங் எடுக்கும் போதும், கண்களை கட்டி விட்டு ஒருவருக்கொருவர் மோதும் போதும், இன்னாரோடு தான் மோதுகிறோம் என்று கண்டுபிடிக்கும் கட்டம் சூப்பராக இருக்கும்
மறுபதிப்புக்குத் தகுதியுள்ள கதை இது
ReplyDelete+9
Deleteகேள்விகளுக்கு எனக்கு தெரிந்த வரையான பதில்கள்
ReplyDelete3.மாண்ட்ரேக்
4. விசித்திர சவால் - ஸ்பைடர்
6. ரிப்போர்ட்டர் ஜானி (அ) XIII
8. இரும்புக் குதிரையின் பாதையில்(லயன் செஞ்சுரி ஸ்பெஷல்), மாய எதிரி
9. கௌபாய் எக்ஸ்பிரஸ் , பிசாசுப் பண்ணை, மனதில் உறுதி வேண்டும்
10. என் பெயர் லார்கோ & தங்கக் கல்லறை(முதல் கலர் மறுபதிப்பு)
11. 7.50
12. விண்வெளி கொள்ளையர்
15. 4
16. நிலவொளியில் ஒரு நரபலி
20. ப்ருனோ ப்ரேசில், டைகர், XIII, ரிங்கோ
21. 4
23. ப்ருனோ ப்ரேசில்
25. தோட்டா தலைநகரம்(டைகர்), டெக்ஸ் - பறக்கும் பலூனில் டெக்ஸ், மெக்ஸிகோ படலம்
26. 8
29. 3
31. சிறை மீட்டிய சித்திரக்கதை
32. 6
34. யார் அந்த மினி ஸ்பைடர்
35. அமாயா
37. ஒரு கோச் வண்டியின் கதை, ஜேன் இருக்க பயமேன், புரட்சீ தீ, மேடையில் ஒரு மன்மதன்
38. குற்றம் பார்க்கின்
39. ரிப்போர்ட்டர் ஜானி, ஸ்கூபி & ரூபி, இரும்புக்கை மாயாவி, கேப்டன் டைகர், லாரன்ஸ் & டேவிட்
41. கார்சனின் கடந்த காலம்
42. தங்க கல்லறை
சகோ@ அளித்துள்ள 25விடைகளில் 19சரி
Deleteமதிப்பெண்கள்=38/100..
வெல்டன்💐💐💐💐💐
Super 😍
Deleteசற்றே நீளமானனனனன பதிவு
ReplyDelete*உதிரம் பொழியும் நிலவே*
வாவ், செம அட்டகாசம் படித்து முடித்ததும் சொல்ல தோன்றிய வார்த்தைகள்.
சத்தமின்றி அசையா படக்காட்சிகளாய் இருக்கும் சித்திரங்கள் கதை படிக்கும் மனதில் எழுப்பிடும் உணர்வுகளால் நம்மை கதைக்குள் பயணிக்க வைக்கிறது. ஆரம்பமே இதற்கு சிறந்த உதாரணம், சித்தர திறன்களால் பேசிடும் படக்காட்சிகளும், அழகிய பௌணர்மி இரவை வர்ணிக்கும் வசனங்களும் இணைந்து, அந்த நிசப்த இரவினில் நடந்திட போகும் அசம்பாவம் ஆரம்பிக்கும் முன்னே திகில் உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன.
அதென்னமோ தெரியல படமாக்கட்டும், கதை ஆகட்டும், சத்தம் கேட்டு எந்திரிக்கும் முதல் ஜீவன் கொலை செய்யப்பட்டிருவாங்க, இங்கும் அதுவே😔😔😔
ஒரு கமான்சேவின் பழிவாங்கும் கடத்தல், அடுத்தடுத்த தேடல் சம்பவங்கள் தொடர,
எண்ட்ரி ஆகிறார்.
டெக்ஸ் & கஸ் உதவியுடன் கடத்தி கொண்டு போன அடாவை மீட்கின்றனர் பண்ணை ஆட்கள், ஆனால் நிலவரம் கை மீறிய நிலையில். சில பலிகள் குடுக்க படுகின்றன.
16 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் பயணமாகும் பாதையில் முற்றுப்பெறாத ஒன்று மீண்டும் தலைத்தூக்கிட 'தல'யின் தலையீடு அவசியமாகிறது. வில்லனோ வில்லரின் வருகையில் இன்னும் துள்ளலாகி விடுகிறான் தனக்கு டபுள் டமாக்கா கிடைத்துள்ளது என்ற எண்ணத்தில்.
*ரிக் சைமன்ஸ்*
அடாவை அவர் கைபிடித்தது மட்டுமல்லாமல், மனஉறுதி கொண்ட அப்பெண் மேலும் துணிச்சல்காரியாக மாறுவதில் துணையாக நின்றுள்ளார். டேனியலுக்கு நல்ல தந்தையாக இருந்திடுகிறார்.
என்ன அப்போப்ப பையனை மீட்டே தீருவேன் வீர வசனம் பேசிட்டு, அப்படியே கார்சனின் சாயலில் நெகடிவ்வாக பேசிட, டெக்ஸ் அச்சமயங்களில் அவரை லைட்டாக பகடி செய்திடுகிறார்
சார்வெஸ் இருவரையும் மனதளவில் தாக்குகிறான், ஆனால் டெக்ஸ் அதனை எச்சரிக்கை உணர்வாக எடுத்து கொள்ள, ஆனால் ரிக் அச்சமயங்களில் தடுமாறுகிறார், தீர்க்கமான தந்தை பாசம் அவருக்கு துணையாக நிற்க பின்வாங்காமல் முன்னேறுகிறார்.
ஆனாலும் மனிதர் டெக்ஸ் இல்லை என்றாலும் தனித்து செல்ல கூடியவர் என்பதையும் அவ்வப்போது காண்பிக்கிறார், வெற்றி சதவீகிதம் 50% தான் என்ற போதிலும். அவரது எண்ணம் டேனியலுக்கு அவனின் உண்மையான தந்தை யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது. தான் இல்லை என்றாலும் டேனியல் தன்னையே தந்தையாக மனதில் கொண்டு நல்வழியில் வளர்ந்து விட வேண்டும் என்ற அவரது நல்லெண்ணம் ரிக்கை மனதுக்கு பிடிக்க செய்கிறது.
*ரிக்கின் கனவுக்குள் கனவு காட்சியை சார் டீசராக கம்னியூட்டியில் காட்டியபோது* *பலவிதமான யோசனைகள் தோன்றியது ஞாபகம் வந்தது,செம கனவு* 😂😂😂.
*சைலைண்ட் புட்* , பெயருக்கேற்றவாறு சைலண்ட்டாக வலம் வந்து, தேவையான இடங்களில் பேசி நம்மை ஈர்க்கிறார், ஆனாலும் அவர் பேசிடும் போது ஒன்று மனதை தடுமாற செய்கிறார் அல்லது தையரிமூட்டுகிறார். இறுதியில் டெக்ஸை கலாய்ப்பது தனி😊😋😂😌😜
*
*சார்வெஸ்*
Deleteகதையில் என்னமாய் பயம் காட்டி விட்டான், இந்த கமான்சே. பொதுவாகவே கமான்சேக்களிடம் முரட்டு குணம் உண்டு, இவனிடம் இருப்பதோ மிக மிக மூர்க்கமான தீர்க்க குணம், எதையும் ஆழ்ந்து சிந்தித்து திட்டம் போட்டு, அதை நிறைவேற்றுவதில் காட்டிடும் அவனது செயல்திறன், அவனது புத்தக்கூர்மையை வெளிப்படுத்துகிறது. இவனது மூர்க்க குணத்தை அவனது உடல்மொழியில் சித்திரப்படுத்தி உள்ள ஓவியர் Mastantuono-க்கு பாராட்டுகளுக்குரியவர். முக்கியமாக அவனது வெறி கொண்ட பார்வை சித்தரபபடுத்திய விதம் அருமை. பேச்சை குறை, ஆக்ஷனில் காமி என்பதற்கு உதராணமாக இருக்கிறான் சார்வெஸ். அவனது தீர்க்கமான பார்வை, மாந்த்ரீகம் டெக்ஸிடம் செல்லுபடியாகவில்லை. அவனும் அறிந்து வைத்திருக்கிறான் டெக்ஸை வீழ்த்துவது சுலபமில்லை என்று, அவனது கூட்டாளிகளும் இதை புரிந்து வைத்திருந்தாலும், அதுவரை கிட்டிய வெற்றிகளால், அவனது மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
தேவையின்றி சில கொலைகளை அவன் செய்வது தன்னை தேடி வருபவர்களை பயமுறுத்தவை மட்டுமல்ல தன் கூட்டாளிகளை தன் மீது நம்பிக்கை கொள்ள செய்யவும் என்பதாகவும் இருக்கிறது. இதன்மூலம் அவன் எவ்வளவு கொடூர மனதுடையவன் என்பது புலனாகிறது. டெக்ஸுடன் இணைந்த கார்போரலின் இறப்பு மனதை ரணமாக்கின்றன😥😥😥. சிறிது நேரம் எனினும் டெக்ஸ் கூட இணைந்து செயல்பட்டு மனதில் இடம் பிடிக்கிறார் *அல்கலா*
என் பேட்டைக்கு வாங்கட என மறைமுகமாக சார்வெஸ் அழைப்பு விடுப்புவதை புரிந்து கொள்கிறார் டெக்ஸ், தன் சக்திகள் நிரம்பிய இடத்தில் டெக்ஸ் மற்றும் ரிக் சைமன்ஸ் கதையை முடித்து விட மனக்கோட்டை கட்டி வைத்திருந்தான்.
அடா வருவதை அவன் கணிக்கவில்லை, ஒருவேளை தன்னை எந்த ஜீவனாவது கொலை செய்திட முடியுமா என்று கேட்கவில்லையா? அல்லது டெக்ஸ், ரிக் சைமன்ஸ் மற்றும் டேனியல் இவர்கள் எவரேனும் கையில் மட்டும் தனக்கு தீங்கு நேருமா என கேட்டானா? புரியவில்லை
ஆனால் அடா வருவதை அவன் சக்தி சொல்லாததும், அதனால் அந்த நொடியில் அவனுள் எழும்பும் அதிர்ச்சியும் பயமும் ஒருசேர பீதியில் அடாவை பார்க்கிறான் , கணம் யோசிக்காமல் தன் துப்பாக்கியால் வதம் செய்திடுகிறாள் நம் வீர மங்கை. அத்தனை நேரம் தைரியம், எகத்தாளம், துச்சம், மூர்க்கம் அனைத்தும் தொணித்த முகத்தில் நொடிப்பொழுதில் குடிகொள்ளும் பீதியை அட்டகாசமாக வெளிபடுத்தி உள்ளார் ஓவியர்.
*
*அடா* 💐🌸🌻
Delete16 வயது இளம்பெண்ணாக அறிமுகமாகி 16 வருடங்களில் துணிச்சல் மிகுந்த பெண்ணாக மாற்றம் கண்டுள்ள அழகு மங்கை.
வேகன் வண்டி கீழ் ரிக் மற்றும் டெக்ஸ் மாட்டி கொண்டு தப்பிக்க வழியின்றி இருக்க, அந்த இடத்தில் டெக்ஸ் அதிரடி சாகஸம் செய்திடும் வாய்ப்பும் இல்லை, , எதிரிகள் மனம் மாறிடுவாங்களா, சார்வெஸிடம் அங்கு மாட்டி கொண்டு பின்னர் தப்பிப்பாரா, இல்லைன்னா கடைசி வாய்ப்பாக கார்சன் கெஸ்ட் ரோலில் தலை காட்டிடுவாரா என்றெல்லாம் கூட தோன்ற ஆரம்பிக்க, அதிரடியாக இக்கட்டில் காட்சி அளிக்கும் தேவதையாக வந்து செயலாற்றிடுகிறார், அடா. அப்போதும் சைலண்ட் ஃபுட் சொல்ல டெக்ஸ் தலைதூக்கி அடாவை பார்க்கும்போது அங்கு நிற்கும் அடாவின் உடல்மொழியை அற்புதமாக வரைந்துள்ளார் சித்திரக்காரர். அவளை பார்த்து ஆச்சரிய சந்தோச புன்னகை புரிந்திடுவார். அருமையான காட்சிகள்.
டெக்ஸ், ரிக், சைலண்ட் புட் இவர்களுக்கு சண்டைகளோ, இது போன்று சூழ்நிலையோ புதிதல்ல, ஆனால் அடாவிற்கு அப்படி இல்லை, முதன் முறையாக அவ்வளவு தூரம் தனி ஆளாக பயணித்து வந்ததே பெரிய விசயம். இரவில் அத்தனை கமான்சேக்கள் முன், அதுவும் தன்னை மனதாலும் உடலாலும் பலகீன படுத்திய மூர்க்கன் சார்வெஸ் முன் தைரியமாக வந்த அடாவின் செயலே வீரத்தை பறை சாற்றுகிறது.
தன் மாந்த்ரீகம் உச்சமாக இருக்கும் என சார்வெஸ் கருதிய இரவில் , பெண்ணை அற்பமாக எண்ணிய அவனும், அவனது மாந்த்ரீகமும் ஒழிவது மிகச் சரியான தண்டனையே. அவன் கர்வத்தை, நம்பிக்கையை ஆட்டம் காண வைத்த நொடியில் அவன் உயிர் அவனிடம் இல்லை.
*நம்ம ஆதர்ஷ ஹீரோ டெக்ஸ்*
டெக்ஸ் பொறுமையும், நம்பிக்கையும் இழந்த குழுவை நிதானமாகவும் விவேகத்துடனும் வழிநடத்தி செல்கிறார்.
சூப்பர் ஹீரோவாக வலம் வந்திடும் டெக்ஸ் அடிபட்டு இக்கட்டிலும் மாட்டி கொண்டு நம்மையும் கலங்கடித்து விடுகிறார். மயங்கி கிடப்பவர் ஐந்தோ பத்தோ நிமிடங்களில் எந்திரித்து சுடுவது, அவரது ஆழ்நிலை மனதும் எவ்வளவு திடகாத்திரமாக இருக்கின்றது என்பதற்கு சாட்சி. *Ofcourse its a Tex thing, because its one of its strong traits* .
சார்வெஸ் உடன் இருக்கும நபர்களை உளவியல் ரீதியாக மண்டையை கழுவி சூழ்நிலையை சாதகமாக்கி கொள்வது செம சாமர்த்தியம்.
எவ்வளவு பெரிய வீரனாக தங்களை காட்டி கொண்டாலும், வார்த்தைகளால் அவர்களை முதலில் துவம்சம் செய்கிறார் டெக்ஸ். பலகீனமான
பெண்களையும், குழந்தைகளையும் கடத்தும் நீயெல்லாம் வீரத்தைப் பற்றி பேசலாமா..?, நீதான் கோழைத்தனமாகச் சுற்றிலும் வீரர்கள் சூழ நிற்கிறாய்! என்று சார்வெஸை சாடிடும் போது அத்தனை நேரம் பயம் காட்டி கொண்டிருந்த சார்வெஸ் ஒரு வெற்று பீஸ் என்ற எண்ணத்தை உருவாக்கிடுகிறார், டெக்ஸ்🔥🔥🔥
இந்த இடத்தில் சார்வெஸை கோழை என்றும், அவனுடன் இருப்பவர்களை வீரர்கள் என்றும் கூறி எப்படி வார்த்தைகளால் அவனை மட்டுப்படுத்துகிறார். இப்படி பேசி அவனை வெறி கொள்ள செய்து, புத்தி மழுங்கி செய்வது மட்டுமஅல்லாமல், அவனது வீரர்கள் மனதில் சந்தேகம் எனும் விதையை போட வார்த்தைகளால் குழி தோண்டுகிறார், நம்ம டெக்ஸ்.
கதையின் பிரதான கதாபத்திரங்களுடன் உலா வந்தாலும், தன் அக்மார்க் முத்திரை பதித்து நம் உள்ளங்களை கொள்ளை கொள்வதில் கச்சிதமாக செயல்படுகிறார், டெக்ஸ் 💘💘💘.
290 சாகஸத்திற்கு வசனங்கள் எழுதுவது சுலபமான காரியமில்லை, *ஹேட்ஸ் ஆப் டூ யூ சார்* 💐💐💐. மன ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் கதையில் வசனங்கள் பிரதானம், பலமும் கூட. வசனங்கள் கச்சிதமாக உள்ளன.
இந்த அட்டகாசமான கதையை தமிழில் தந்தற்கு நன்றிகள், சார்
சித்திரங்கள் கதைக்கு செம போனஸ்,
சில காட்சிகளை வரைய முயற்சித்தேன்,
சிறு கோடு கூட முகத்தில் காட்டும் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை எவ்வளவு முக்கியதுவம் செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இத்தனை பெரிய அட்டகாசமான கதைக்கு சித்தரம் போடுவது சாதரமான காரியமல்ல. அதீத ஆர்வமும், பொறுமையும் இதனை சாத்தியமாக்கிடும்.
Big applauds to *Mouro Boselli* for the amazing adventure and *Mastantuono* for the wonderful artwork.
*டெக்ஸ் என்ற பெயரை நம்மூள் தீப்பொறியாக வைத்திருக்கும் போனெல்லி குழுமத்திற்கு பெரிய சல்யூட்.*
அடேங்கப்பா எவ்வளவு விரிவான அலசல் விமர்சனம். பாராட்டுக்கள்.
Deleteரொம்ப ரசித்து படித்து இருகீர்கள், படித்ததை அட்டகாசமாக எழுதி இருக்கிறீர்கள்.
Deleteநன்றிகள் சகோ 💐💐💐
Deleteமிக மிக நீண்ட தல கதைக்கு மிக மிக மிக நீஈஈஈஈளமான விமர்சனம் எழுதி சிறப்பு சேர்த்த *என்ற சகோ* கடலுக்கு வாழ்த்துகள்& பாராட்டுகள்💐💐💐💐💐👏👏👏👏👏
Deleteஇத்தனை நீளமான விமர்சனம் எனும்போது டைப் செய்ய எத்தனை நாள் ஆகியிருக்கும்னு புரிகிறது.... தூள் பண்ணிட்டீங்க சகோ.🥰🥰🥰🥰💞💞💞💞💞
😅😅😅
Deleteஆமாங்க ரொம்ப நீளம்
நன்றிகள் சகோ
❤💛💙💚💜
The best review of this month.
Delete@Edi Sir😘🥰
ReplyDeleteஇன்று பதிவு கிழமை Sir 😄💐🙏
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஆமாங்க சார்
Deleteசெப்டெம்பர் மாத புத்தகங்கள் எப்போது கிடைக்கும்?
ReplyDeleteஇன்று புத்தகங்கள் கிளம்பிடுங்களா, சார்?
Deleteகபாலர் வேட்டை ப்ரிவிய் அன்றி பார்த்திடலாமா, சார்?
Next week Kumar
Deleteஜெர்மனியில் ஜானி,
ReplyDeleteஹேங்மேன் எனும் எத்தன்,சதுரங்க ஆட்டம் போல் திட்டம் போடுவது செம,அதை ஜானி முறியடிப்பதும் செம...
எங்கே ஜானி பல்பு வாங்கிடுவாரோன்னு தோண வெச்சி,கடைசியில் அவிழ்க்கப்படும் ட்விஸ்டுகள் சுவாரஸ்யம்,கண்ணுக்குத் தெரியாமல் கண்ணிவெடி போல ஆங்காங்கே ட்விஸ்ட்களை ஒழிய வைத்து,இறுதியில் அவிழ்ப்பதுதான் வாசிப்பின் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது...
போர்ஷே காரில் அந்த சேஸிங் செம...
ஹேங்மேன் திரும்ப வேற ஏதேனும் ஜானி சாகஸத்தில் தலைகாட்டுகிறாரா ?!
ஜெர்மனியில் ஜானி திருப்தியான வாசிப்பு...
//ஜெர்மனியில் ஜானி திருப்தியான வாசிப்பு...//
Delete+1
இதனை படிக்க ஆரம்பித்தேன், சில பக்கங்கள் படித்த பிறகு ஆபீஸ் வேலை காரணமாக தொடர முடியவில்லை, இந்த வாரம் இந்த கதையை படித்து முடிக்க வேண்டும்.
Deleteநல்லா விறுவிறுப்பா போகுதுப்பா...
Deleteஆமாங்க , நல்ல விறுவிறுப்பு, கார் சேஸ்ஸிங் செம
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் புத்தகங்க கிளம்பியாச்சா
ReplyDeleteHi. Nan Sri Lanka la irunthu santhaa moolam books vanga mudiuma? Inge vilaigal athigam. Athigaara poorvamaga lion team idam irunthu evvaru help peruvathu?
ReplyDeleteContact Lion office whatsapp number brother : +91 98423 19755
Delete200
ReplyDelete