Saturday, June 14, 2025

பயணத்தில் ஒரு "பயணம்"!

நண்பர்களே, 

வணக்கம்! புலி­யும் வந்தாச்சு.. and most importantly - காத்திருக்கும் தந்தையர் தினத்துக்கு ஒரு நாள் முன்பாகவே உங்களிடம் ஒப்படைக்கவும் செய்தாச்சு! இனி உங்களுக்காச்சு..Manu Larcenet-ன் ஜாலங்களுக்காச்சு! என்று ஆராமாய் கட்டையை ஒரு நாளுக்காச்சும் கிடத்தத் தயாராகி வருகிறோம்! So இந்தப் பதிவு ரொம்பப் பெருசாகவெல்லாம் இராது! Rather- இந்த மைல்கல் இதழோடு உங்களது selfies; இயன்றால் உங்களது பசங்களுடனான selfies என்று ஜா­லியாக வாரயிறுதியினை செலவிடலாமே?

நிஜத்தைச் சொல்வதானால் இந்தப் "பயணம்'' செல்ல நான் விழைந்தது போன வருடம் ஜுன் 15-க்கே...! பிப்ரவரி 2024 வாக்கில் இந்தப் படைப்பு என் கண்ணில் பட, அப்போவே துண்டைப் போட்டு, அப்போவே டிக்கெட்டும் வாங்கி, அப்போவே பயணம் பண்ணும் ஆசை அலையடித்தது! கதையின் subject - ஒரு தந்தை + மகனின் விடியலுக்கான தேடல் என்ற போதே இதனை Father's Day ஸ்பெஷலாகத் திட்டமிட்டாலென்ன? என்ற நினைப்பும் சேர்ந்தே முளைத்திருந்தது! ஆனால், ஐரோப்பியப் புத்தகவிழா circuit மார்ச்சில் துவங்கி ஜுன் வரைக்கும் வரிசைகட்டி அரங்கேறிடுவது வழக்கம் என்பதால் உரிமைகளுக்கான முடிவெடுப்போர் செம பிஸி! ஒருவழியாக அவர்கள் ஆபீஸ் திரும்பிய பிற்பாடு நமக்கு இசைவைச் சொல்லி­யிருந்த போதே Father's Day 2024 கடந்து சென்றிருந்தது! சரி, ரைட்டு உரிமைகளை வாங்கி விட்டாலும், இதழை வேறெந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடலாகாது என்று அன்னிக்கே தீர்மானித்துக் கொண்டேன்! அதன் நீட்சியே மே 2025-ன் ஆன்லைன் மேளாத் தருணம் & இந்த ஒற்றை இதழை மட்டும் ஜுன் 15-க்கு வெளியிடும் திட்டம்! And here we are....!

இதன் தயாரிப்பிற்குள் இறங்கும் முன்பாகவே "சாம்ப­லின் சங்கீதம்'' முன்பதிவினையும் அறிவித்திருந்தோம் & அதன் ரிலீஸ் தேதியாக ஆகஸ்ட் 2-ஐ மனதில் fix செய்திருந்தோம்! So "ரெண்டு கனமான கிராபிக் நாவல்கள் மிகக் குறுகிய இடைவெளியிலா? ஆஹா... சமாளிக்க வழி தேடணுமே?" என்ற டர்ர்ர் உட்புகுந்திருந்தது! ஆனால், சாம்ப­லின் சங்கீதம் நெட்டி வாங்கும் பணியென்பதால் தானாகவே பின்சென்று விட, பயணம் பண்ண ரூட் க்ளியர் ஆனது!

இங்கே பயன்படுத்த வேண்டிய பேப்பரின் தேர்வு தான் நிரம்பவே படுத்தி எடுத்துவிட்டது! பக்கத்துக்குப் பக்கம் எக்கச்சக்க கறுப்பு solids ; டார்க்கான சித்திரங்கள் எனும் போது, வழக்கமான கனத்திலான காகிதத்தில் அச்சிட்டால் பின்புறம் தெரிவதைத் தவிர்க்க இயலாது! So வாயெல்லாம் பேசிவிட்டு, இங்கே செலவைக் குறைக்கும் முனைப்பில் எதையாச்சும் கோணங்கித்தனமாய் செய்து வைத்தால் மொத்தமாய் Bata பிய்ஞ்சு போகும் என்பது புரிந்தது! So ஈரோட்டு மில்­லில் ஆரம்பித்து, நெல்லை மில்; புகளூர் மில் என்று அத்தனையிலும் சாம்பிள்ஸ் வாங்கினோம்! க்ளாஸிக் இதழ்களுக்குப் பயன்படுத்திடும் அந்த மஞ்சள் நிறப் பேப்பரையும் வாங்கிப் பார்த்தோம்! அத்தனை பேப்பர்களிலும் பிரிண்ட் போட்டும் பார்த்தால் - ஊஹும், எதுவும் தேறக் காணோம்! இந்தப் பக்கத்து அடர் கறுப்பு, மறு சைடில் ஸ்பஷ்டமாய் அத்தனை ரகங்களிலும் தெரியவே செய்தது! இது என்னடா தமிழகத்துக்கு வந்த சோதனை? என்றபடியே வெளி மாநிலங்களது பேப்பர் மில்களின் சாம்பிள்களையும் சேகரிக்க ஆரம்பித்தோம்! 

எண்ட ஸ்டேட் கேரளம்; நா ராஷ்ட்ரம் ஆந்திரா; நன்ன ராஜ்யா கர்னாடகா என்று தேசீய ஒருமைப்பாட்டுச் சின்னமாய் திரிந்த போது தான் - " நிம்ம தேடுற சரக்கு இவிடே உண்டு அன்னைய்யா'' என்றொரு பிரசித்தி பெற்ற மில் அபயக் கரம் நீட்டியது! செம தரமான பேப்பர்; தும்பைப்பூ வெள்ளை என்றில்லாது... மெல்லி­ய சிகப்புச் சாயலோடு ஒரு வெள்ளை; தொட்டாலே செம டெம்பர் என்று கண்ணில்பட்ட முதல் நொடியிலேயே வசீகரித்தது அந்தப் பேப்பர் ரகம்! நாம் மாமூலாய் பயன்படுத்தும் பேப்பரின் திக்னெஸில் கிட்டத்தட்ட 70% அதிக கனம் கொண்டது என்பதால் வதைத்து வந்த see through இங்கே கிஞ்சித்தும் இருக்கவில்லை! So "கண்டேன் சீதையை''என்று freeze ஆகிய நொடியில் நமது பேங்க் கையிருப்போ,  நம்ம விஸ்காம் வாத்தியார் பிரஷாந்தின் புஷ்டியையே ஒத்திருந்தது! மண்டையைச் சொறிந்து நின்ற நொடியில் தான் கனவுலகம் க்ரூப்பின் சார்பில் ஐந்து பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிட புக்ஸ் கொள்முதல் செய்த நண்பர்களின் பணமும்; நமது கையிருப்பில் உள்ள அம்புட்டு புக்ஸிலும் இரண்டு செட் வீதம் அயல்நாட்டுக்கொரு வாசக நண்பர் ஆர்டர் செய்திருந்த பணமும் மிகச் சரியாக வந்து சேர்ந்தன! மறு நாளோ, இன்னொரு வெளிமாநில நண்பர் லக்கி லூக்கின் CINEBOOK கையிருப்பிலி­ருந்து full set (71 புக்ஸ்)க்கான பணத்தையும் அனுப்பிய நொடியில் என் மண்டை நோவுகள் காற்றில் கரைந்தே போயின!

பரபரபவென பேப்பரை வாங்கிப் போட்டோம்! அட்டைப்படத்தின் நகாசு வேலைகள் ஒருபக்கம் மின்னல் வேகத்தில் அரங்கேறின! பக்கங்களை மறுக்கா மறுக்கா சரிபார்த்த கையோடு மின்னலாய் அச்சுக்குச் சென்றோம்! இம்முறை பிராசஸிங்கிலும் துளி கூட சமரசங்களின்றி the best-க்குச் சென்றோம்! கறுப்பு மசி முதற்கொண்டு இந்தவாட்டி ஜப்பான் வரவு! இவ்விதம் பிரிண்ட் செய்து வந்த முதல் தாள் தான், நான் போன வாரம் பேங்க் வாச­லில் நின்றபடியே வாய் பிளக்க ரசித்த சமாச்சாரம்! 

And பைண்டிங்கிலும் நமது வாடிக்கையான நண்பரின் பங்களிப்பு மிரட்டலானது! இது ஸ்கூல் நோட்புக் சீஸனின் உச்ச வேளை என்பதால், ஊர் முழுக்க பல இலட்சங்களில் நோட்டுகள் பைண்டிங்கை எதிர்நோக்கிக் குவிந்து கிடக்கின்றன! அவற்றின் மத்தியில் தம்மாத்துண்டு எண்ணிக்கையுடன் நாம் இத்தனை முக்கியமான பணியோடு நின்ற போதும் அவர் முகம் சுளிக்கவில்லை! நமது பணிகளின் தன்மையினையும், நம் சிறுவட்டத்துக்கு இவை எத்தனை மதிப்பு வாய்ந்தவை என்பதையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் என்பதால் கச்சிதமாய் வியாழன் இரவுக்கு முடித்துத் தந்துவிட்டார்! And வெள்ளியன்று நம்மாட்கள் மின்னல் வேகத்தில் பேக்கிங்கையும் பூர்த்தி செய்தி- இதோ Father's Dayக்கு உங்கள் கைகளில் நம்மாலானதொரு சிறு novelty!

இனி சித்திரங்களினுள்ளும், பயணத்தின் பின்னணியினுள்ளும் நீங்கள் புகுந்திடவுள்ள அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது மட்டுமே எங்களது பணியாக இருக்கப் போகிறது! And if initial reactions are anything to go by - இதுவொரு தெறி இதழ் என்பது உறுதி!

இந்த ஆல்பத்துக்கு இந்த சைஸ், மெனக்கெடல் எல்லாம் நல்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு! 2017-ல் இதே Manu Larcenet-ன் "நிஜங்களின் நிசப்தம் " கிராபிக் நாவலையும் வெளியிட்டிருந்தோம் தான் - but truth to tell, அதன் அருமை எனக்கன்று பூரணமாய் புரிந்திருக்கவில்லை! So சுமாரான காகிதம், சுமாரான சைஸ், தயாரிப்பு என்றே வண்டி ஓட்டியிருந்தேன்! அந்த இதழ் செம ஹிட் தான், but உள்ளுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது - ஒரு பிரமிக்கச் செய்யும் ஜாம்பவானின் படைப்புக்கு உரிய நியாயம் செய்யத் தவறி விட்டோமே என்று! அதை நிவர்த்திக்கவே இன்று இந்த பிரம்மாண்டம்!

More then anything else, எதையேனும் புதுசாய் முயற்சித்து உங்களை அகம் மகிழச் செய்வது தான் என்னை எப்போதுமே இயக்கிடும் பேட்டரி!  So அந்த அத்தியாயத்தின் லேட்டஸ்ட் படலமான இந்தப் "பயணம்'' - நமது பயணத்தின் ஒரு ஸ்பெஷல் அங்கமாகிட்டால் ஆந்தையன் ஹேப்பி அண்ணாச்சி!

Now it's back to the drawing board- அடுத்த குட்டிக்கரணம் எந்த மாதிரி அடிக்கலாமென்ற மகா சிந்தனையுடன்! 

சர்வ நிச்சயமாய் இதனை மேலிருந்து அப்பா ரசிக்காது போக மாட்டார் என்ற நம்பிக்கையுடன் நடையைக் கட்டுகிறேன்! 

Happy Father's Day all.... Enjoy the weekend! Bye for now! See you around!

P. S : ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு & already விற்பனைகள் on fire 🔥🔥.. இதுவொரு லிமிடெட் edition என்பதால் முன்பதிவு தவிர்த்து அதிகப் பிரதிகள் கையில் நஹி! 

https://lion-muthucomics.com/special-release/1342-payanam.html

160 comments:

  1. Hai Sir advance Father's Day Wishes !!!!

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. Happy Father day wishes from a Father😘💐🙏

    ReplyDelete
  4. பயணம் பட்டாஸாக வந்துள்ளது..

    Hopefully,

    சாம்பல் சரவெடியாக வர வாழ்த்துகள்

    😍🔥♥️🌹

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  6. அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பயணங்களுடன் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் 💐💐💐

    ReplyDelete
  8. மிகச் சிறப்பான இந்த புத்தகத்தை நாங்கள் வேற லெவலில் கொண்டாடி இருக்க வேண்டும் சார். இந்தியாவில்வேறு எந்த மொழியிலும் இந்த மாதிரிபுத்தகத்தை காணக்கூட முடியாது தேங்க்ஸ் ஸார்.

    ReplyDelete
  9. நன்றிகள் கனவுலக சகோதரர்களே💐💐💐

    ReplyDelete
  10. // கனவுலகம் க்ரூப்பின் சார்பில் ஐந்து பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிட புக்ஸ் கொள்முதல் செய்த நண்பர்களின் பணமும்; நமது கையிருப்பில் உள்ள அம்புட்டு புக்ஸிலும் இரண்டு செட் வீதம் அயல்நாட்டுக்கொரு வாசக நண்பர் ஆர்டர் செய்திருந்த பணமும் மிகச் சரியாக வந்து சேர்ந்தன! மறு நாளோ, இன்னொரு வெளிமாநில நண்பர் லக்கி லூக்கின் CINEBOOK கையிருப்பிலி­ருந்து full set (71 புக்ஸ்)க்கான பணத்தையும் அனுப்பிய நொடியில் என் மண்டை நோவுகள் காற்றில் கரைந்தே போயின//

    சரியான நேரத்தில் அவர்அவர் அறியாமல் தங்கள் நற்காரியங்களால் துணை நின்ற அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகள்
    💐💐💐

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகள் நண்பர்களே. சிறப்பான செயல் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

      Delete
  11. **"நிஜங்களின் நிசப்தம் " கிராபிக் நாவலையும் வெளியிட்டிருந்தோம் தான் - but truth to tell, அதன் அருமை எனக்கன்று பூரணமாய் புரிந்திருக்கவில்லை! So சுமாரான காகிதம், சுமாரான சைஸ், தயாரிப்பு என்றே வண்டி ஓட்டியிருந்தேன்! அந்த இதழ் செம ஹிட் தான், but உள்ளுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது - ஒரு பிரமிக்கச் செய்யும் ஜாம்பவானின் படைப்புக்கு உரிய நியாயம் செய்யத் தவறி விட்டோமே என்று! அதை நிவர்த்திக்கவே இன்று இந்த பிரம்மாண்டம்!**.
    எவ்வளவு உன்னதமான வரிகள்,
    படைப்பின் மேல் தாங்கள் வைத்து மரியாதை சில்லிட வைக்கிறது சார்.
    அதற்கு எந்தவித குறையும் இல்லாமல்தான் இந்த பயணம் இதழும் மெகா இதழாக வந்துள்ளது தமிழ் காமிக்ஸ் உலகிற்கே பெருமையும் வரலாறும்.

    தங்களது ஒவ்வொரு பிரமாண்ட புதிய படைப்பும் எங்களை ஆச்சரியத்திலும் வியப்பிலும் அதைவிட மகிழ்விலும் ஆழ்த்துகிறது.
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சார் 👏👏💐💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. நமக்குலாம் ஒரு பூனையை கூட ஒழுங்காய் வரையத் தெரியாது சார் ; so சித்திரங்களில் அதகளம் செய்வோரைக் கண்டால் எப்போதுமே ஒரு மரியாதை உண்டு!

      சின்ன வயசில் அப்பாவின் ஆபீஸில் பணியாற்றும் ஓவியர்களின் அருகே அமர்ந்து மணிக்கணக்கில் பராக்குப் பார்ப்பேன்!

      பின்னாட்களில் நமது ஓவியர் மாலையப்பன் பணி செய்த கூடம், நான் அப்போது குடியிருந்த வீட்டுக்கு எதிர் போர்ஷன். So நிறைய இரவுகளில் அவர் வர்ணங்கள் spray செய்யும் போது கிட்டே இருந்து ரசித்துள்ளேன்!

      இங்கோ ஒரு ஓவிய அசுரர் உயிரை கொடுத்து உழைத்திருப்பது தெரிகிறது - அவருக்கு தலை வணங்காது இருக்க முடியாதல்லவா?

      Delete
  12. Happy Father's Day, Sir...🎉🎉🎉

    ReplyDelete
  13. இந்த பயணம் நம்மை நீண்ட தூரத்துக்கு நடத்தி செல்லும் சார்... நமது நீண்ட பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்....அட்டகாசமான மேக்கிங்... புத்தகம் அருமையாக வந்திருக்கிறது. சித்திரங்கள் மிரட்டலாக இருக்கிறது....படிக்க / பார்க்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறது...உங்களுக்கும், குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... அடுத்து, சாம்பலின் சங்கீதத்துக்கு காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  14. //சர்வ நிச்சயமாய் இதனை மேலிருந்து அப்பா ரசிக்காது போக மாட்டார் என்ற நம்பிக்கையுடன் நடையைக் கட்டுகிறேன்!//

    கண்டிப்பாக சார்

    ReplyDelete
  15. இந்த புத்தகத்தை தரமுடன் எங்களுக்கு தந்திட தாங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றிகள் சார்🙏🙏🙏💐💐🌾🌾🌷🌷

    நாங்கள் பிரமிப்பில் இருக்கிறோம் 😊😊😊

    ReplyDelete
  16. *பயணம்*

    முதல் பார்வையில் மூச்சடைக்க வைத்தது...

    உள்ளே நுழைந்த பின் சித்திரங்களுடன் ஐக்கியமானேன்..

    பல இடங்களிங் ஒரு தந்தையாக கண்கள் கலங்க கடந்து போனேன்.

    பல இடங்களில் என் தந்தையை நினைத்து கரைந்து போனேன்

    சுமைதாங்கிகள்
    சலித்துக் கொள்வதில்லை

    பாதுகாப்பு அரண்கள்
    புலம்புவதில்லை

    நுரையீரலில் புகும் கடைசி காற்று வெளியேறும் வரை, ஓயாமல்

    கரை சேர்க்கும்
    தந்தையர்களுக்கு
    கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக..

    தந்தையாக கடமையாற்றிய அனைத்து உயிர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..

    (நாளை விரிவாக)

    ReplyDelete
    Replies
    1. தந்தையாக இருப்பது கடமையல்ல சார் - வரம்!

      Delete
    2. அந்த வரத்தை பெற்ற தந்தையர்களில் கடமையை மறந்தவர்கள் கோடானு கோடி சார்.. இதில் பல பெண்களும், சகோதர, சகோதரிகளும் கூட தந்தை எனும் ஸ்தானத்தில் சிறப்பாக கடமையாற்றியுள்ளார்கள் சார்.. அதனாலேயே தந்தையாக கடமையாற்றிய தாய், தாத்தா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை போன்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தேன் சார்

      Delete
    3. தந்தையாக இருப்பது கடமையல்ல சார் - வரம்!


      ஒவ்வொரு நிமிடமும் அதனை உணர்கிறேன் ஆசிரியரே

      Delete
    4. சுரேஷ் ரொம்ப சரியாக சொன்னீங்க.

      Delete
  17. /// 2017-ல் இதே Manu Larcenet-ன் "நிஜங்களின் நிசப்தம் " கிராபிக் நாவலையும் வெளியிட்டிருந்தோம் தான் . அந்த இதழ் செம ஹிட் தான், but உள்ளுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது - ஒரு பிரமிக்கச் செய்யும் ஜாம்பவானின் படைப்புக்கு உரிய நியாயம் செய்யத் தவறி விட்டோமே என்று ///
    சார்... ஒரு சிறிய வேண்டுகோள். முன்பதிவுத் தடத்தில், நிஜங்களின் நிசப்தம் கதையை இந்த மெகா சைஸில் மறுபதிப்பாக வெளியிட முடியுமா? அற்புதமான சித்திரங்கள்.. ஆனால் சிறிய சைஸ் என்பதால் ரசிக்க இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் சார் - பண்ணலாம்!

      Delete
    2. சார் கண்டிப்பா நிஜங்களின் நிசப்தம் பண்ணனும். இதே போல பெரிய சைசில்

      Delete
  18. பார்சல் வாங்கியாச் அதகளம்....எங்களோட சந்தோசத்த உறுதிபடுத்துவதயே லட்சியமாக வைத்த தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்

    ReplyDelete
  19. இன்று புத்தகம் வந்து சேர்ந்தது. கொட்டும் மழையிலும் மார்க்கெட்டில் இருந்து வரும் வழியில், கொரியர் ஆபீஸ் சென்று புத்தகத்தை வாங்கி வந்து விட்டேன். அற்புதமான, அசத்தலான, மிரட்டலான மேக்கிங் எடிட்டரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எப்படிப்பட்டதொரு அர்ப்பணிப்பு. காமிக்ஸே சுவாசமாக கொண்டதொரு அற்புதமான மனிதர். வாழ்த்துக்கள் சார். இன்னும் பல உச்சங்களை நீங்கள் தொட வேண்டும். நாங்கள் வாழ்த்தி ரசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பல உச்சங்களை நாம் தொட வேண்டும் சார்! பயணம் ஒரு தொடர்கதையே!

      Delete
  20. அற்புத படைப்பு... வாழ்த்துக்கள் sir.. மனம் கனிந்த நன்றி... ❤️❤️👍👍🙏🙏🙏...

    ReplyDelete
  21. // அவற்றின் மத்தியில் தம்மாத்துண்டு எண்ணிக்கையுடன் நாம் இத்தனை முக்கியமான பணியோடு நின்ற போதும் அவர் முகம் சுளிக்கவில்லை! நமது பணிகளின் தன்மையினையும், நம் சிறுவட்டத்துக்கு இவை எத்தனை மதிப்பு வாய்ந்தவை என்பதையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் என்பதால் கச்சிதமாய் வியாழன் இரவுக்கு முடித்துத் தந்துவிட்டார்! //

    நல்ல மனிதர். அவருக்கு நமது பாராட்டுகள் 👏🏻

    ReplyDelete
  22. சார் second edition போட்டு சென்னை புத்தக விழாவில் மிரள விடுங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. பயணம் பண்ண இன்னும் ஒரு நூறு பாதைகள் உள்ளனவே சார் - அடுத்து என்னவென்று பார்க்கலாம்!

      Delete
    2. Durango 17,18,19 அத்தியாயங்கள் சார்.. நாளை விமர்சனத்துடன் கோரிக்கை வைக்கிறேன் சார்

      Delete
    3. டுராங்கோ கோப்புகள் வந்து கிடக்கின்றன சார் - 2 ஆண்டுகளாய்! ஸ்லாட் லேது!

      Delete
    4. கோடை மலர் 2026... பாத்துக்கலாம் சார்

      Delete
    5. ஆமா சார் 3 வருடங்களாக முத்து ஆண்டுமலரில் இடம் பிடித்த நாயகர். 2026 ஒரு ஸ்லாட் பிளீஸ்

      Delete
  23. அட்டகாசமான தயாரிப்பு தரம் எடிட்டர் சார்.

    ரசிச்சு படிக்கலாம்.

    இந்த புக் எங்கள் கைகளில் தவழ உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉💐🍫

    ReplyDelete
  24. 'பயணம்'
    The லயன் லைப்ரரி வெளியிட்ட 'காமிக்ஸ்' என்று பெயரிடப்பட்ட ஒரு சோக காவியம்.

    பார்த்தும், படித்தும் முடித்த பின் ஒரு கனமான சோகத்தை மனதிற்குள் இறக்கி வைத்து விட்டீர்கள்.

    நல் எண்ணங்களும், மனித நேயமும் பூமியின் கடைசி நாள் வரை இருக்கும், இருக்க வேண்டும் என்ற கதாசிரியரின் எண்ணமே 'புலிட்சர்' விருது.

    மயானம் என்றால் என்ன?
    சடலங்கள் புதைக்கப்படும் இடம்.
    புதைக்க இடம் இல்லாமல் மயானமெங்கும் சடலங்கள் சிதறிக் கிடந்தால்....
    அதுவும் பூமியே அப்படி இருந்தால் -
    அது தான் - 'மயான பூமி'.
    முழு அர்த்தம் இந்தக் கதையை படிக்கும் போது உணர முடியும்.

    அப்படிப்பட்ட மயான பூமியில்
    குளிர் தாங்க முடியாமல், பசிக்கு எதுவும் கிடைக்காமல், வடக்கு united states லிருந்து தெற்கு நோக்கி united states road வழியாக பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனும், அவனைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தந்தையும் பயணிக்கும் கதையே 'பயணம்'.

    வழியெங்கும் கோரமான சடலங்கள்.
    சிதைந்து கிடக்கும் நகரங்கள்.
    சாம்பலாய் அலையும் காற்று. அதை சுவாசித்து, அவர்கள் இருமும் இருமலில் நமக்கும் சுவாசிக்க திணறுகிறது.

    நம்பிக்கை என்ற தைரியமூட்டும் அந்த ஒற்றை வார்த்தை இருவருக்கும் எங்கிருந்து வந்தது?
    அப்பா இருக்கிறார் என்று சிறுவனும், தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் தன் மகனைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு தாயைப் போல இங்கே தந்தையும் இருப்பதால் அந்த நம்பிக்கையோடு பயணிக்கிறார்கள்.

    தந்தை தனக்குப் பின்னும் 'நம்பிக்கையை' மகனுக்கு தந்து விட்டுத்தான் செல்கிறார்.
    அடுத்த பயணம் ஆரம்பிக்கிறது.

    இதற்குள் நல்ல மனம் என்றால் என்ன? என்று புரிய வைக்கும் முயற்சியே இப் பயணம்!
    105 ஆம் பக்கத்தைப் பக்கத்தை நல்லவராக வாழ விரும்புபவர்கள் மனப்பாடம் செய்யலாம்.

    மயான பூமியின் சித்திரங்களுக்கு ஏன் மெனக் கெட்டு நல்ல பேப்பரை எடிட்டர் தேடிப் பிடிக்கிறார் என்றால்,
    அவர் வியாபாரம் செய்வதாய் தெரியவில்லை. அவரும் ஒரு படைப்பாளியே!

    எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பிருக்கும் ஒரு கற்பனை நிகழ்வை சித்திரங்கள் ஆக்கியிருக்கும் விதம்.
    அதைப் புத்தகமாய் தந்திருக்கும் விதம்.
    மகத்தான முயற்சி.

    மனமார்ந்த வாழ்த்துகள்.
    தொடரட்டும் இப் பதிப்பலகப் பயணம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் 🙏🙏

      Delete
    2. கலக்கிட்டீங்க சார்

      Delete
    3. உங்கள் விமர்சனமே நாவல்போல அருமையாக உள்ளது 👏🏽

      Delete
    4. செம்ம விமர்சனம்.

      Delete
  25. //மயான பூமியின் சித்திரங்களுக்கு ஏன் மெனக் கெட்டு நல்ல பேப்பரை எடிட்டர் தேடிப் பிடிக்கிறார் என்றால் அவர் வியாபாரம் செய்வதாய் தெரியவில்லை . அவரும் ஒரு படைப்பாளியே.//c .s .khannan சார் நம் அனைவரின் எண்ணங்களை மிக அருமையாகக் கூறியுள்ளீர்கள்.தேங்க்ஸ் சார்

    ReplyDelete
  26. //ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு & already விற்பனைகள் on fire 🔥🔥.. இதுவொரு லிமிடெட் edition என்பதால் முன்பதிவு தவிர்த்து அதிகப் பிரதிகள் கையில் நஹி! //

    அப்போ கோவை புத்தக விழா வரை தாங்கதா😲😲😲🥺🥺

    ReplyDelete
  27. சார் நமது வெளியீடுகளில் வந்ததில் மிகச் சிறந்த ஆக்கம் இது. கார்சனின் கடந்த காலம் maxi size போல அந்த புத்தகத்தை கையில் ஏந்திய போதே தெரிந்தது அது ஒரு மாபெரும் வெற்றி என்று. அதே போல இந்த பார்சலை வாங்கி அட்டையை வருடிய போதே தெரிந்து விட்டது இதுவும் ஒரு மிகப் பெரிய வெற்றி என்று. அவ்வளவு அற்புதமான ஒரு புத்தகம், தயாரிப்பு, பைண்டிங், பேப்பர், நீங்கள் எழுதிய முன்னுரை எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. இப்போது தான் பயணத்தை துவங்குகிறேன். ஆங்கிலத்தில் ஏற்கனவே படித்து இருந்தாலும் நமது அழகு தமிழில் உங்கள் மொழி பெயர்ப்பில் படிப்பது ஒரு Different experience.

      Delete
    2. சூப்பராக சொன்னீங்க குமார்

      Delete
    3. //அழகு தமிழில் உங்கள் மொழி பெயர்ப்பில் படிப்பது ஒரு Different experience.// எடிட்டர் மிரட்டியிருக்கார் சார்...

      Delete
    4. //அழகு தமிழில் உங்கள் மொழி பெயர்ப்பில் படிப்பது ஒரு Different experience//

      😊😊😊

      Delete
    5. இங்கே மொழியாக்கம் சுலபம் yet சற்றே tricky சார்....!

      பாசத்தையும், சோகத்தையும் பிழிந்து, உங்களது தொண்டைகளுக்குள் மடக் மடக் என்று ஜுசாக ஊற்ற நான் முனைந்திருக்கலாம் & அந்த ரூட்டை எடுத்திருந்தால் கைதட்டல் ஈட்டித் தரவல்ல வரிகளும் ஆங்காங்கே சிக்கி இருக்கும்!

      ஆனால் அந்த சபலத்தை ஒரு மாதிரியாய் சமாளித்து விட்டேன் - simply becos இங்கே அந்தத் தந்தை ரொம்பவே practical ஆன மனுஷனாய் வலம் வருகிறார்! அர்ஜுனனுக்கு பறவையின் கருவிழி மாத்திரமே தென்பட்டதைப் போல, அவருக்கு மகனை பத்திரமாய் தெற்கிற்கு கொண்டு செல்வது மாத்திரமே இலக்கு - இலட்சியம்! So அவரைக் கொண்டு நான் சோக ரசம் பிழிந்திருந்தால் அந்தப் பாத்திரமே dilute ஆகியிருக்கக் கூடும்!

      யதார்த்தமாய் டயலாக்ஸ் அமைந்தாலே மதி ; claps வாங்கும் தகுதி இங்கே Manu Larcenet-க்கு மட்டுமே உண்டென்று ஒதுங்கிக் கொண்டதே எனது பிரதான பங்களிப்பு என்பேன் சார்!

      Delete
    6. தம்பு என்று மகனை விளிப்பதை நான் ரொம்ப ரசித்தேன் சார்

      Delete
    7. சுலபமாய் அமைந்த வார்த்தை சார்.. becos....

      Delete
    8. கதை சொல்லும் சித்திரங்கள் இருக்கையில், புதிய வசனங்கள் கண்டிப்பாய் கதையின் போக்கை மாற்றி உணரச் செய்யும். இப்போது செய்துள்ளதுதான் சரி.

      Delete
  28. பயணம்

    எப்படி ஆரம்பிப்பது...
    பிரம்மாண்டம்...
    அதியற்புதம்...
    மீண்டும் இது போன்ற ஒன்றை எட்ட முடியுமா என்ற புதியதொரு மைல்கல்...
    உச்சத்தின் உச்சம்... என்று எத்தனை உரைத்தாலும் இதன் சிறப்பினை அவ்வளவு சரியாக சொல்லி விட முடியுமா என்ற சந்தேகமே எழுகிறது...

    வார்த்தைகளால் சொல்ல முடியாத எண்ணற்ற வலிகளையும், நுண்ணிய உணர்வுகளையும்... இந்தப் பயணத்தின் மெளன மொழி சித்திரங்கள் நமக்குள்ளே கடத்தி திடுக்கிட வைக்கிறது... இதயங்கலங்க வைக்கிறது... வல்லரசுக் கனவில் வகை வகையான அணு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் நாடுகளால் இந்நிலை எப்பொழுது வேண்டுமெனிலும் நமக்கும் நடக்கலாம் என்ற நெஞ்சை சுடும் நிஜத்தை நாம் மறுப்பதற்கில்லை...

    தந்தையும், தனயனும் அழிக்கப்பட்ட மண்ணில் பிழைத்திருப்பதொன்றே வாழ்வின் இலக்காகக் கொண்டு, தொடர்ந்து பயணிக்கின்றனர்... எதிர் வரும் அழிவின் கொடூரங்களை தன் மகன் பார்த்து பயந்து விடுவானே என்று அஞ்சி அதை தவிர்க்க அவர் செய்யும் முயற்சிகள்... அதையும் மீறி ஒன்றிரண்டு கோரங்கள் கண்ணில் படவே செய்கின்றன.

    வழியில் எதிர்படும் மனிதர்களும் தாங்கள் பிழைத்திருக்க எவரையும் கொள்ளையிடவும் / கொல்லவும் தயங்காதவர்களாக இருப்பதும் தாங்கள் பிழைத்திருப்பதற்காக நரவுண்ணிகளாக மாறி கையில் கிடைக்கும் அப்பாவிகளை பிடித்துச் சென்று, அடைத்து வைத்து உடனடியாகக் கொன்றால் அவ்வளவு மாமிசமும் வீணாகுமோ என்று அவர்கள் அங்கங்களை சிறிது சிறிதாக வெட்டி உண்ணும் நிலைக்கு அரக்கர்களாக திரிகின்றனர்.

    இரக்கமற்ற அந்த அரக்க பூமியில் மனித மாண்பு மாறி விடாதவனாக, சின்ன நம்பிக்கை வெளிச்சமாக அந்த சிறுவன் மட்டுமே இருக்கிறான். அவன் தந்தையும் தன் மகனைக் காப்பதொன்றே தன் கடமையென்பதால் சற்று கடின மனத்தினனாக நடந்து கொள்கிறார்... இருந்தும் சில இடங்களில் மகனுக்காக சமரசம் செய்து கொள்கிறார்...

    உண்ணும் உணவு, நீர்,  உறைவிடம், ஆடைகள் என்ற அன்றாட மனித தேவைகளின் அவசியத்தை நமக்கு ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது

    முற்றிலுமாக அழிந்த ஒரு நாட்டில் எங்கும் பறக்கும் சாம்பல் காற்றிலும், திடீரென வீசும் கடும் பனிப் புயலிலும், சுற்றிலும் திரியும் மனித மிருகங்களுக்கு மத்தியில் பசித்த வயிற்றோடு தன் மகனைக் காக்க தந்தை நடத்தும் ஜீவ மரணப் போராட்டத்தில் சற்று இளைப்பாறுதலாக ஒன்றிரண்டு காட்சிகள் வரும்போது நம் மனதும் சற்று ஆறுதலடைகிறது.

    போர்கள அழிவின் வழியில் காணும் அருவியின் அழகு அற்புதம். அந்த நதியில் குளிக்க விரும்பி தங்கள் உடைகளைக் கழற்றும் இடத்தில் அவர்களின் உடலைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போவோம் அந்த அளவிற்கு காட்சியின் ரணம் நம்மை வெகுவாக தாக்கும். அதிலிருந்து மீளவே சில நிமிடங்களானது... இது போன்ற பல காட்சிகள் நம்மை உறைய வைக்கும்...

    இந்த அளவிற்கு ஒரு ஓவிய பிரம்மாண்டத்திற்கு தக்க நியாயம் செய்வது போல நம் எடிட்டர் அச்சுத் தரத்தையும், கதையின் கனத்தை விட பேப்பரின் கனத்தை இரட்டிப்பாக்கி நம்மிடையே புத்தகப் பொக்கிஷமாகக் கொடுத்துள்ளார்... ஆகச் சிறந்த இச்சாதனையை மீண்டும் உடைக்க அவரால் முடியும்... இது போன்றதொரு புத்தகத்தைக் கொடுக்க...

    தந்தையர் தினத்திற்கு நியாயம் செய்ய இதை விட சிறந்த பரிசு வேறெதுவும் இருக்காது...

    அடுத்து வரவிருக்கும் சாம்பலின் சங்கீதத்தையும் இது போன்றதொரு தரத்தில் கொடுக்க வேண்டும் என்ற என் விண்ணப்பத்தினை அவரிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.

    இந்த புத்தகத்திற்கு மதிப்பீடு என்னவென்றால் நம்முடைய மதிப்பெண்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. இந்த புத்தகத்திற்கு மதிப்பீடு என்னவென்றால் நம்முடைய மதிப்பெண்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது.//

      100%

      Delete
    2. இது தான் சார் நம்ம தமிழ் வாசகர்களின் தனித்தன்மையே & இதுவே தான் நமது உந்துதல்களும்!

      இப்படியொரு களத்தினை இன்னொரு மொழியில் சீந்தக் கூட ஆள் இருந்திராது - இங்கேயோ கொண்டாடுகிறோம்! மிரட்டலான அலசல் சார்!

      Thank you 🙏

      Delete
    3. ஒவ்வொரு பத்தியிலும் தங்கள் உணர்வினை அருமையாக வெளிபடுத்தி உள்ளீர்கள், சகோ

      Delete
  29. பயணம் நமது லயன் காமிக்ஸின் பயணத்தில் ஒரு மைல் கல். இன்னும் பல மைல் கல்களை கடக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. நிறைய புது நண்பர்கள் விமர்சனம் எழுதுவதை பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது. கலங்குங்க நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. இக் கா? ங் கா? 🤔🤔

      Delete
    2. Editor சார் அது க் தான்.

      Delete
    3. One of the best book I ever had in my hand if not the best book. So pleased to be a reader of our Lion Comics.

      Delete
    4. க் தானுங்க. தூக்க கலக்கத்துல கலங்கிட்டேன்.

      Delete
    5. படித்த உடன் கலங்கித் தான் போகிறோம் சார்... ஆகையால் தப்பில்லை..

      Delete
    6. தூக்கதுல எந்திரிச்சு எழுதாதீங்கன்னா சொன்னா கேட்டாதானே
      என்ற சகோவை கிண்டல் பண்ண எந்திரிச்ச எந்திரிச்சு இப்படி பழக்கம் ஆகிடுச்சு

      அது கோவை தமிழ் ஸ்டைலுன்னு சொல்லி கூட சமாளிக்க தெரியலை

      Delete
  31. பயணம் இதோட வெய்ட்டே எல்லோரும் உறங்கிய பின் அமைதியாய் மடியில் வைத்த அட்டையை ரசித்து பார்க்கையில் கருப்பினூடே இரத்தச் சிவப்பில் நம்ம லோகோவும் பயணம் என அதில் பயணிக்கும் நரம்பான வெள்ளைக் கோடுகளும் உயிரோட்டமாய்..(கனப்பது தெளிய தெரிய) ..அழகாய் ஈர்க்க அந்த பின்னனில் நம்மை நோக்கி வரும் அவர்களை பார்க்க தயாராகச் சொல்லி இப்பயணத்திற்காக நம் விழிக்க தவுகளை திறந்து வைக்கச் சொல்லும் அட்டைப்படம்...தடவிப் பார்க்க துடிக்கும் கரங்களில் சொர சொரப்பான மலைகள் நிரவ தட்டுப்பட...பயணம்னா மூனு வகை....சந்தோசம்....மகிழ்ச்சி...ஏதோ என நிலை குத்திய வெறுமை....இந்த மூன்றில் ஒன்று நிச்சயம்....இதில் எதைத் தரப்போகுதோ என நுழைய விரக்தியும் வெறுமையுமாய் ஆவலாய் புரளும் பக்கங்கள் நம்பிக்கையூட்டும் விதமாய் இளஞ்சிவப்பில் தாள்கள் நீங்கள் கூறியவாறே இரத்தம் பாய்ச்சும் எனும் நம்பிக்கையை வலுப்படுத்த...தந்தையர் தினமான நாளை ...எனது இளைய மகனது பிறந்த நாளுடன் வருவதால்...எனது நாளைய கடமை ஓடச் சொல்கிறது....பிரிய மனமில்லாமல் பயணத்தை நிறுத்தி தடம் மாறிச் செல்லும் நான் நாளை தங்கள் தடத்தில் பயணிக்கிறேன்....அருமை ஆசிரியரே...என்ன சொன்னாலும் வெற்று வார்த்தைகளே பார்வையின் வழியில்

    ReplyDelete
  32. இரண்டாம் பதிப்பில் ஆயிரம் தொட செந்தூரான் அருளை வேண்டி வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  33. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  34. வெல்கம் .கம்பம் ஜெய் கணேஷ்
    சார்

    ReplyDelete
  35. சார் . இந்த சைஸ் தொடர வாய்ப்புள்ளதாங்க சார்.

    ReplyDelete
  36. அனைத்து சகோதரர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்💐💐💐💐💐❤❤❤❤

    ReplyDelete
  37. இந்த இதழ் நமது சிறிய வட்டத்துடன் நின்று போகக் கூடாது. நம்மாள் எங்கெல்லாம் கொண்டு சேர்க்க முடியுமோ,அதற்க்கான முயற்ச்சியை முன் எடுப்போம் நண்பர்களே

    ReplyDelete
  38. மேலும் 4 பயணம் புத்தகத்துக்கு பணம் அனுப்பிவிட்டேன். 3 பரிசளிக்க ஒன்று எனது மேனேஜர் மகளுக்கு.

    ReplyDelete
  39. பயணம் - செம்ம மேக்கிங் சார். Sprawling canvas for the sketches. கதை என்று பார்த்தால் நமது வெளியீடுகளில் இதை விடச் சிறந்த Graphic Novels வந்துள்ளது தான். For the sheer making, a thumbs up.

    அடுத்து வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால் .. popular ஹீரோக்களின் சிகரம் தொட்ட கதைகளும் இவ்வமைப்பில் வரவேண்டும் - நம்ம பழைய வசனங்கள் தாங்கிய  'தங்கக் கல்லறை' for example !! :-) And why not .. நில் .. கவனி ..சுடு .. அல்லது டிராகன் நகரம் or a 'Supaidar' ;-)

    ReplyDelete
    Replies
    1. நெதமும் பிரியாணி சாப்பிட்டா அஜீரணம் ஆகிப் போகும் சார்! இவற்றை பத்திரப்படுத்துவது அனைவருக்கும் கஷ்டம் ; படிக்கவும் சிரமம்!

      So பட்சணங்களும், பிரியாணியும் பண்டிகை காலங்களுக்கு மட்டுமே இருந்து விட்டுப் போகட்டும்!

      Delete
    2. That's ok sir - I am not asking for monthly a popular title. But handpicked - the best of our lot - say top 20 - to be stored forever ! You may even announce a Top 20 poll and even decide Top 10 from that.

      Delete
    3. Also A Phantom 150 page collection on such a giant canvas ... some Lucky Luke stories - examples - both Billy the Kid Volumes, Puratchi Thee and Nitroglycirene (The most hilarious ever sir - especially that station master :-D :-D :-D).

      There was a one shot cow-boy story that came just after our come back - Yamanin Disai Merku - this canvas is so so apt for that too !! Sokkaa .. sokkaa .. naama innoru 1000 pEr irundhaa Ediya sokkaaya kilichukka vekkalaamE .. ayyagO !! ayyagO !!!

      Delete
    4. //naama innoru 1000 pEr irundhaa Ediya sokkaaya kilichukka vekkalaamE .. ayyagO !!//

      1000 கூட வேண்டியதில்லே சார் - இன்னொரு 500 பேர் இருந்தாலே போதும்! எண்ணியதெல்லாம் நிஜமாகிடும் 🥹🥹

      Delete
  40. 'தங்கக் கல்லறை' தாங்களே Top 10 ல் முதலிடம் கொடுத்துள்ளீர்கள் எடிட்டர் அவர்களே! அந்த கதை கண்டிப்பாக 'பயணம்' இதழ் போல் வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியே!
    மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும் whatsup community ல் கருத்து கேட்டு தாராளமாய் வெளியிடலாம்.

    ReplyDelete
  41. சத்தமின்றி யுத்தம் செய் - DURANGO 

    1-13 அத்தியாயங்கள் 
    கதை/ஓவியம்  - YVES SWOLFS 
    மொழியாக்கம் - திரு.கருணையானந்தம் 

    14-16 அத்தியாயங்கள் 
    கதை-  YVES SWOLFS 
    ஓவியம்  -THIERRY GIROD 
    மொழியாக்கம் - திரு. விஜயன் 

    யாரிந்த மௌனப் புயல்? இந்தக் கேள்வி தான் இந்த கதை தொகுப்புகளின் TAG LINE. நம்ம கதாநாயகனும் ஊர் ஊராக சுற்றுகிறாரே தவிர, இவரைப் பற்றி ஒரே ஒரு தகவல் கூட சொல்லப்படாமல் கதையை நகர்த்திக் கொண்டு சென்றுள்ளனர். முதல் அத்தியாயத்தில் வியோமிங் பணிப்பரப்பில் 1896 ஆம் ஆண்டு இந்தக் கதை  நிகழ ஆரம்பிப்பதாய் தொடங்குகிறார் கதாசிரியர். ஹாரி லாங் எனும் தன் சகோதரன் எழுதிய கடிதத்துக்கு மதிப்பளித்து, வெள்ளை பள்ளத்தாக்குக்கு வருகிறான் நம் கதாநாயகன்.

     கடவுளுக்கு பயந்து, சமூகத்தின் கட்டுத்திட்டங்களுக்கு ஒடுங்கி, அமைதியாய் வாழ்ந்த ஒரு குடும்பத்தை சார்ந்த நம் கதாநாயகன், துப்பாக்கியுடன் தன் காதலை வளர்த்துக் கொண்ட நாள் முதல், அவன் குடும்பத்தாரால் துவேஷிக்கப் பட்டவன் டுரங்கோ என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஆனால் விடை தெரியாத பதில், அவன் தந்தை என்ன ஆனார், தாய் என்ன ஆனார், ஏன் டுரங்கோ ஒரு தொழில்முறை துப்பாக்கியாளன் ஆகிறான் என்பதே.

    டெட்வுட் நகரத்தின் முதியவர் ஒருவர் நம் கதாநாயகனுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

    மூன்றாவது கதையில் அவன் ஓய்வெடுக்கும் பொழுது அவனது கனவில் வரும் மரணதேவதை, டுரங்கோவின் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை கோடிட்டு காட்டுகிறது. அவனின் கடந்த காலம் எப்பேர்பட்டது எனும் கேள்விக்குறிக்கு மட்டும் பதிலளிக்காமல் கதையை நகர்த்திக் கொண்டே செல்கிறார் கதாசிரியர்.

    13 ஆம் கதையில் லூயியை துரத்தி செல்லும் நம் கதாநாயகன், அவனிடம் இருக்கும் கொலை வேட்கைக்கு காரணியாக தன் நினைவுப் பேழைகளில் அமிழ்ந்து போன நினைவுகளை நினைத்து பார்க்கிறான். அந்தப் மூன்று பேனல்கள் சொல்லும் செய்திகள் ஏராளம். ஆனால் அதை பார்வையாளர்களின் புரிதலில் விட்டு செல்கிறார் கதாசிரியர் 

    எண்ணற்ற கதாபாத்திரங்கள், சுற்றி சுழல, ஒவ்வொரு கதையிலும் பெண்கள் தங்கள் பங்குக்கு டுரங்கோவை காப்பாற்றுவதும், இக்கட்டில் மாட்டி விடுவதும் என்று கதையை வித்தியாசமாக நகர்த்திக் கொண்டு சென்றுள்ளார்கள். பெரும்பாலான பெண்கள் மரணத்தை தழுவ, மரணத்தின் உடனே வாழ்க்கை நடத்தும் கதாநாயகன் யாரை நேசிக்கிறான் எனும் குழப்பத்தை அந்த பெண்களிடமும், வாசிக்கும் நம்மையும் குழப்பியபடி பயணிக்கிறான். 

    விவேகமும் பொறுமையும் உன் பிஸ்டலின் தோட்டாக்களைப் போலவே விலைமதிப்பற்றவை என்று தனக்கு கூறப்பட்ட அறிவுரையை அவன் நடைமுறைக்கு கொண்டு வர கிட்டத்தட்ட 15 அத்தியாயங்கள் தேவைப்பட்டுள்ளது.கதாநாயகன் ஒரு முன்னெச்செரிக்கையாளன் என்று காட்டப்பட்டாலும், பல தருணங்களில் தன் அலட்சியத்தால் மாட்டிக் கொள்கிறான். ஆனால் அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் மரணம் தழுவாதா என்று ஏங்கும்  ஒரு கேரக்டராகவே டுரங்கோவை பார்க்க நினைக்கிறது மனது. ஆனால் அவன் இறந்து விட்டால் கதை ஏது. மரணமும் அவனை காதலிக்கிறதோ என்னவோ, அவன் உயிர்வாழ எண்ணற்ற சந்தர்ப்பங்களை வாரி வழங்கிக் கொண்டே செல்கிறது. 

    15 வது அத்தியாயத்தில் தான் டுரங்கோ குறித்து கதாசிரியர் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகளை அவிழ்க்கிறார். மொத்தம் 

    கதையை முடித்த பிறகும் இந்தக் கதையின் TAGLINE மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. யாரிந்த மௌனப் புயல்?

    ReplyDelete
    Replies
    1. SPOILERS ALERT 

      1. ரௌத்திரம் பழகு Les Chiens Meurent En Hiver

      தன் சகோதரனை கொன்ற கயவர்களை வெள்ளை பள்ளத்தாக்கில் பழிவாங்குவது.


      2. மனதில் உறுதி வேண்டும் Les forces de la colère

      வெள்ளை பள்ளத்தாக்கில் அடிபட்ட ரணத்தை குணப்படுத்த ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பீஸ்புல் சர்ச் என்ற பாவப்பட்ட நகரத்தை ரணகலாமாகிய கல்லஹ்ன் எனும் கொள்ளையனையும் அவன் கூட்டத்தையும் வேரோடு அறுப்பது. 

      3. தடை பல தகர்த்தெழு Valstrik voor 'n "killer"

      சில்வர் ப்ரிட்ஜில் தன்னை காப்பாற்றுமாறு வேலைக்கு அமர்த்திக் கொண்ட ஆலன், இறந்து போக, கொலைப்பழி டுரங்கோ மீது விழ, அதை ஆலனின் விதவையின் துணையுடன் சமாளித்து பயணத்தை தொடர்கிறான் டுரங்கோ. ஆனால் ஜென்கின்ஸ் எனும் சில்வர் ப்ரிட்ஜ் ஷெரிப் அவனை தேடப்படும் குற்றவாளி வரிசையில் சேர்க்கிறான்.

      4. தீதும் நன்றும் பிறர் தர வாரா Amos

      தேடப்படும் குற்றவாளி என்பதால் மெக்சிகோ எல்லைக்கு சென்று தப்பிக்க எத்தனிக்கும் நம் கதாநாயகன், அங்கு ஆமோஸ் ரொட்ரிகோஸ் உடன் நட்பை சம்பாதித்துக் கொள்கிறான். சில்வர் ப்ரிட்ஜில் நடந்த சொதப்பலுக்கு காரணமான கம்பெனி நிர்வாகம் அனுப்பிய வெகுமதி வேட்டையனாக லோகன் களமிறங்க, உடன் ஜென்கின்ஸ் கூட்டு சேர, பிங்கர்ட்டன் ஏஜென்சியின் சார்லி சிரிங்கோவும் சட்டத்தின் பக்கம் நிற்க டுரங்கோ என்ன ஆனான் என்பதே கதை.

      5. மௌனமாயொரு இடிமுழக்கம் Sierra sauvage

      நியூ மெக்சிகோ சிறையில் அடைபட்டிருந்த டுரங்கோவை, ஆமோஸ் ரொட்ரிகோசை பிடிக்க அனுப்புவது என்று முடிவெடுத்து டெக்சர்ஸ் கவர்னர் ஆணையிட, வழியில் ஆமோஸ் அவனது நண்பர்கள் ஒர்டேகா குழுவினரால் டுரங்கோ பெடரல் ஏஜெண்டுகளிடம் இருந்து தப்பிக்கிறான். ஆமோஸ் நடத்தும் புரட்சிப் படையின் தாக்குதலுக்கு துணை புரிந்து சாகசங்கள் செய்கிறான்.

      6. நரகத்துக்கு நேர்பாதை Le destin d'un desperado

      தடை பல தகர்த்தெழு எனும் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதி அத்தியாயம் இது. ஆமோஸ், லோகன் போன்றோர் இறந்து கதை முடிவடைகிறது. 

      7. ஒரு ராஜகுமாரனின் கதை Loneville

      லோன்வில் நகரில் நுழையும் டுரங்கோ, அங்கே அந்த கிராம மக்கள் எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று குவித்து வரும் ஒருவனை நிர்மூலமாக்குகிறான். அந்த கிராமத்தில் நடந்த கொடூரங்களுக்கு பின்னணியில் இருந்தவனையும் வீழ்த்துகிறான் நம் கதாநாயகன்.

      8. வேட்டையாடு விளையாடு  Une raison pour mourir 
      ஹேய்ஸ் நகர் மேயரின் மனைவி லூசியின் பாதுகாவலனாக நியமிக்கப் படும் டுரங்கோ, தான் எந்த விதமான வில்லங்கத்தில் தலையிடுகிறோம் என்று தெரியாமலே சிக்கலில் சிக்குகிறான். அந்த வில்லங்கத்தில் இருந்து லூசியின் தந்தை டங்கனால் காப்பாற்றப் படுகிறான். 

      9. ஒரு புதையலின் பாதையில் L'Or de duncan

      லூசிக்கு டங்கன் விட்டு செல்லும் புதையலை தேடி டுரங்கோவும் லூசியும் ஷெரின் நகரத்துக்கு பயணிக்கிறார்கள். அங்கு டங்கனின் டெபுடி ரயனும் புதையலைத் தேடி வர, அந்த ஊர் தாதாவான வில்லியும் வேட்டையில் இறங்க டுரங்கோவின் அதகளம் தொடர்கிறது. 

      Delete
    2. 10. வதம் செய்ய விரும்பு La proie des chacals

      ஹௌலாண்ட் நகருக்கு வரும் டுரங்கோ அங்கு பூர்வ குடி அமெரிக்க பெண்களை கடத்தி விற்கும் கும்பலை காலி செய்கிறான்.

      11. அரக்கர் பூமி Colorado

      நார்ட்டன் வில் நகரில் நடக்கும் அநியாயங்களை தடுக்க பணிக்கு அமர்த்தப்பட்ட நாயகன் சில பல சாகசங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பதுங்குகிறான்.

      12. பனியில் ஒரு புரட்சி L'héritière

      நார்ட்டன் வில் நகரில் புரட்சி வெடிக்க டுரங்கோவின் அதிரடி கதைக்கு சுபம் போட வைக்கிறது.

      13. ஆறாது சினம் Sans Pitié

      நார்ட்டன் வில் நகரில் புரட்சி ஓய்ந்து, நிம்மதி தலை தூக்கியிருந்த நேரத்தில் லூயி ஹோல்டிக்கர் எனும் மிருகம் நடத்திய கொலைவெறி தாண்டவத்துக்கு பழி தீர்க்க நாயகர் அவனைத் தேடி புறப்படுகிறார் 

      14. ரௌத்திரம் கைவிடேல்  Un pas vers l'enfer

      ஹார்லான் என்பவனால் கொல்லப்பட்ட தன் காதலிக்காகவும், தன் குழந்தைக்காகவும், ரௌத்திரத்துடன் ஆனால் மதியூகத்துடன் களமிறங்குகிறான் டுரங்கோ 

      15.எல் கோப்ரா  El Cobra

      ஆதி முதல் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமான மைனிங் கம்பெனிகளின் கூட்டமைப்பில் ஒன்றான லாரன்ஸ் மைனிங் கம்பெனி குறித்து தெரிந்துக் கொண்ட டுரங்கோ, அதை தேடி செல்கிறான். ஆனால் மைனிங் கம்பெனிகளின் கூட்டமைப்பின் சூத்திரதாரி ஸ்டெய்ன்னர் தன்னை ஏமாற்றிய லாரன்ஸை போட்டுத் தள்ள எல் கோப்ரா என்பவனை அனுப்புகிறான். இரண்டு தொழில்முறை துப்பாக்கி வீரர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்களா? என்ன நடந்தது?

      16.நரகத்திற்கு நெருக்கத்தில்  Le Crépuscule Du Vautour

      லாரன்ஸ் மூலமாக ஸ்டெய்ன்னர் குறித்து அறிந்துக் கொண்ட டுரங்கோ, ஸ்டெய்ன்னர்ரை பழிவாங்க களமிறங்குகிறான். ஸ்டெய்ன்னர் வீழ்த்தப்பட்டானா? அடுத்த குறி யார்? எங்கு செல்லப் போகிறான் டுரங்கோ 

      17. Jessie

      18 L'Otage

      19 Oro Maldito 

      கடைசி மூன்று தொகுப்புகளை சீக்கிரமாக வெளியிட ஆவண செய்யுங்கள் எடிட்டர் சார். மௌனப்புயலின் புதிர் வரலாறை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் உள்ளோம்.

      https://lion-muthucomics.com/78-durango

      Delete
    3. சார் படிப்பது ஒருவகை அதனை படித்த பிறகு அலசி விமர்சனம் எழுதுவது ரெண்டாவது வகை என்றால் நீங்கள் ரெண்டிலும் அசத்துறீங்க; பழைய கதைகளை தேடிபடித்து அதற்கு ரசனையாக விமர்சனம் எழுதுவது அதுவும் விரிவாக எழுதுவது எல்லாம் வேற லெவல். உங்கள் வாசிப்பு தாகத்திற்கு ஒரு ராயல் சல்யூட் 😍

      Delete
    4. Thank you sir.
      தேங்கி நிற்கும் புத்தகங்கள் பலரிடமும் சென்று சேர என்னால் இயன்ற பணி

      Delete
    5. Excellent job sir 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

      Delete
    6. சூர்யா சார்.. ட்யுராங்கோவின் அனைத்து கதைகளும் தான் 5 பாகங்களாக முழுவதும் வெளிவந்து விட்டதே.. நீங்கள் இன்னும் 3 பாகங்கள் மீதம் இருப்பதாக சொல்கிறீர்களே..

      Delete
    7. மொத்தம் 26 ஆல்பங்கள் பிளான் செய்துள்ளதாக தெரிகிரது. அதில் பிரஞ்சு மொழியில் இதுவரை 19 வெளிவந்துள்ளது. நாம் தமிழில் வெளியிட்டுள்ளது 16 ஆல்பங்களே. எடிட்டர் சாரும. Slot கிடைக்கவில்லை. கோப்புகள் கைவசம் உள்ளதாக நேற்று ஏதோ ஒரு commentடில் தெரிவித்தார் சார்

      Delete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. கனத்த இதயத்துடன் ஒரு பயணம்... பக்கத்துக்கு பக்கம், ஃப்ரேம் பை ஃப்ரேம் சித்திர அதகளம்.
    கதை.. அழிந்து போன பூமியில் உயிர் வாழும் வேட்கையுடன் தயைனுடன் ஒரு தந்தையின் நெடும்பயணம்..
    வசனங்கள் அதிகமில்லை, மொத்தமாக நான்கைந்து பக்கங்களுக்கு மிகாது.
    ஆனால் இந்த உயிர்ப்பான ஓவியங்கள் சொல்கின்றனவே ஓராயிரம் கதைகளை .
    இவற்றில் எதைச் சொல்வது,
    எதை விடுவது?
    சாம்பல் பறக்கும் காடுகள், பனிப்புயல், கொட்டும் அருவி, உயிரில்லாத மனிதக்கூடுகள் என கிராபிக் நாவலுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய சித்திரங்கள்.
    இந்தக் கதைக்கு வசனங்கள் தேவையே இல்லை.
    உயிர் பிழைக்க ஓடும் ஓட்டத்தில் பேச்சுக்கு ஏது இடம்?
    ஒருவித பிரமிப்பான மனநிலையில் ஆரம்ப முதல் இறுதி வரை நம்மை இருக்க வைத்துவிட்டார் ஓவியர் Manu Larcenet.
    இப்படி ஒரு கதையை துணிந்து தேர்ந்தெடுத்து, அதை மிரட்டலான மெகாவுக்கும் மேலான ஒரு சைசில் , தந்தையர் தினத்தில் நமக்கு அளித்த ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது போலான கதைத் தேர்வுகளே இந்தத் துறையினில் சுவாரஸ்யத்தினை தக்க வைக்கின்றது சார் எனக்கு!

      கமர்ஷியல்ஸ் அவசியமே, but அங்கே சவால்கள் இருப்பதில்லையே!

      Delete
  44. பயணம் - உண்மையான வாழ்கை பயணம்

    ReplyDelete
  45. பயணம்....

    இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன் முதலில் இந்த இதழை பார்த்த பொழுது அதன் பிரம்மாண்டத்தையும்...தரத்தையும்..சித்திரங்களின் அசாத்தியத்தையும் பார்க்கும்பொழுதே ஏற்பட்ட உணர்வு அடேங்கப்பா நாம் நமது தமிழ் காமிக்ஸை எங்கோ கொண்டு சென்று விட்டோம் என்பது தான்...இந்த இதழின் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு உழைப்பாளிக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுக்களும் சார்..

    இதழை முதன்முறை புரட்டி ரசிக்கும் பொழுதே வசனங்கள் அதிகம் கண்ணில் பட காணோமே ..அதே சமயம் சித்திரங்களின் அசாத்தியம் பொறுமையாக கவனித்து ரசித்து கொண்டு செல்ல வேண்டும் போல என மனதில் தோன்ற தங்களின் முன்னுரையும் அதனை தெளிவுபடுத்த ஓர் அமைதியான சூழலில் அந்த பயணத்தை தொடங்கினேன்...முதலில் பயணத்தை தொடங்கிய பொழுதே இதன் சித்திர தரங்கள் கண்களை விரியவைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை..அதுவும் க்ளோஸ்அப் சித்திரங்களில் அடேங்கப்பா ஒரு தீப்பெட்டியும் ஏன் தீக்குச்சியுமே ஏதோ நாமே பற்றுவது போல அவ்வளவு நெருக்கத்தை விதைக்க பயணத்தை தொடர்ந்தேன்...சித்திரங்களின் வழியே பயணத்தை தொடர்ந்தாலுமே தந்தையும் ,மகனின் சிற்சில உரையாடல்கள் மட்டும் பயணத்தில் தொடர்ந்தாலுமே அந்த சிறு உரையாடல்களுமே எவ்வளவு எளிமையான அதே சமயம் மிக வலிமையான உரையாடல்கள் என்பதை நமது உணர்வுகளை ஏதோதோ விதத்தில் தட்டி எழுப்பியதிலே புரிந்து கொள்ளலாம் ..ஏதாவது இடத்தில் இவர்களுக்கான பயணம் நல்ல விதத்தில் முடியாதா என்றே ஓர் இறுகிய மனதுடன் பயணித்து கொண்டே வந்த பொழுது இறுதியில் தந்தை மகனிடம் விடை பெறும் சமயம் என்னால் சத்தியமாக முடியவில்லை..கண்களில் கண்ணீர் அரும்புவே இறுதி பக்கங்களில் பயணிக்க முடிந்ததை என்னவென்று சொல்வது...

    இந்த இதழின் எனது பயணத்தை முடித்தவுடன் எனக்கு தோன்றியது இது போன்ற காவியங்களை எல்லாம் எந்நாட்டுவராக இருந்தாலும் போர் சூழலை ஏற்படுத்தும் இடத்தில் இருப்பவர்கள் வாசிப்பார்களா இதை வாசித்தால் ஆவது போர்களின் வலியை உணர்ந்து அமைதிக்கு திரும்புவார்களா என்பதே...

    கைகளில் மட்டுமல்ல சார் மனதிலும் கனத்தை ஏற்படுத்திய இந்த பயணம் ஓர் காமிக்ஸ் ரசிகருக்கு எப்படிப்பட்ட இதழ் எனில் கதையில் வரும் தந்தையும் மகனுக்கும் திடீர் இல்லத்தில் உணவு குவியல்களை கண்ட பொழுது அவர்களுக்கு கிடைத்தது எப்படிப்பட்ட அதிர்வுகள் கிடைத்திருக்குமோ அதே அதிர்வுகளுக்கான உணர்வுதான் காமிக்ஸ் ரசிகர்களுக்கான இந்த பயணம்...


    ( பின்குறிப்பு : இந்த இதழ் கிராபிக் நாவல் என்பது உடன் இதன் கதைக்களம்..தந்தை மகன் என இருவரின் பயணத்தின் மையம் மட்டுமே..அஸ்தமித்து போன உலகில் விடியலை தேடி இருவர் என்றெல்லாம் இக்கதையினை பற்றிய அறிவிப்புகள் அனைத்துமே இது என்னுள் தள்ளி வைத்தது உண்மை...எனவே இந்த இதழை வாங்காமல் மறுத்தே இருந்து இருப்பேன் காமிக்ஸ் எனும் கனவுலகம் குழுவில் விமர்சன போட்டியில் வென்று இருக்கவில்லை எனில்... அப்படி இந்த இதழை நான் மறுத்து இருந்தால் ஓர் காமிக்ஸ் இலக்கிய புதையலை இழந்து இருப்பேன் என்பது நூறு சதவித உண்மை..அதை தவற விட செய்யாத காமிக்ஸ் எனும் கனவுலகம் குழுவினருக்கும்..இதழை பரிசளித்த அந்த அநாமதேய நண்பர்களுக்கும் எனது கரம் குவிந்த நன்றிகளையும் இச்சமயத்தில் தெரிவித்து கொள்கிறேன்..)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் graphics novelலின் சுவையை உணர வைத்தவர்கள் கனவுலக நண்பர்களே..

      ஜம்போ காமிக்ஸின் இரண்டாவது சீசனின் அனைத்து புத்தகமும் எனக்கு பரிசாக அளிக்கப்பட்டது..

      You deserve our eternal love கனவுலகத்தாரே..

      Delete
    2. உருக்கமான விமர்சனம் தலீவரே 💐💐💐

      Delete
  46. காமிக்ஸ் எனும் கனவுலகம் நண்பர்கள் குழு, பலரின் காமிக்ஸ் கனவுகளை நனவாக்கி வருகின்றது. மனம் நிறைந்த பாராட்டுக்கள் நண்பர்களே...

    ReplyDelete
  47. *பயணம்*

    முதல் பார்வையில் மூச்சடைக்க வைத்தது...

    உள்ளே நுழைந்த பின் சித்திரங்கள் என்னை ஆட்கொண்டது ..

    *SPOILERS ALERT*

    முதல் பக்கத்திலேயே ஆதி கால மனிதனின் கலையான கோட்டோவியங்களை தந்தையும் மகனும் பார்ப்பதாக சித்தரித்துள்ளார்கள். எதற்கு இந்த பக்கம்? இந்த கதைக்கும் இந்த பக்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தான் இந்த புத்தகத்தை படித்து முடித்த பின் எழுந்தது. 

    கலை(ART) மட்டுமே மனிதனை மிருகங்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும் செயல் என கலைஞர்கள் பெருமைப்பட்டு கண்டதுண்டு. ஆனால் அந்த மனிதன் மிருகமானாலும், கலையை கைவிட மாட்டான் என்பது தான் புத்தகம் முழுவதும் ஓவியர் நமக்கு சொல்லிச் செல்லும் செய்தியாக உள்ளது.

    கதையின் காலம் என்னவென்று தெரியாது. கதை நடக்கும் இடம் தெரியாது. நாயகனின் பெயர் தெரியாது. என்று வழக்கமான கதைகளில் கையாளும் இலக்கணம் எதுவுமே இந்த புத்தகத்தில் கிடையாது. ஆனால் மனித மனங்களில் பெரும்பாலும் உணவளிக்கப்படாமல் சோர்ந்து இருக்கும் அந்த மிருகத்தை தட்டி எழுப்பும் முயற்சியா? அல்லது அந்த மிருகம் உயிரிழக்காமல் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது என்று நமக்கு எச்சரிக்கை செய்யும் முயற்சியா? அது எதுவாக இருந்தாலும் ஓவியர் மிரட்டி இருக்கிறார். கதையில் வருவதை அப்படியே சித்தரித்துள்ளாரா என்பது இங்கு என் மனதில் எழுந்த கேள்வி. அதற்கு நான் அந்த நாவலை இப்பொழுது படிக்க வேண்டும் எனும் உந்துதலை ஏற்படுத்தியுள்ளது இந்த படைப்பு.

    37ஆம் பக்கத்தை அடையும் வரை ஒரு வித இறுக்கத்துடன் பக்கங்களை புரட்டிக் கொண்டே சென்றாலும், என்னவோ நடக்கப் போகிறது என்ற பதைபதைப்புடன் தான் ரசித்துக் கொண்டே சென்றேன். நீர்வீழ்ச்சி நீரில் குளிக்க மகனும் தந்தையும் துணிகளை கழற்றி குளிக்கத் தொடங்கியவுடன் தான் கடந்து வந்த 35 பக்கங்களின் கணம் என்ன என்று புரிந்தது. அங்கு தொடங்கிய அதிர்ச்சி கடைசி வரை விலகவே இல்லை.

    நெருப்பு தன் பசியை, செடி கொடி என்று கண்ணில் படும் அனைத்தையும் மென்று தின்று செரித்த உடன்,  அதன் எச்சமாக விட்டுச் சென்ற சாம்பல், காற்றிலும், பூமியிலும் படிந்து மூச்சு விடுவதைக் கூட சிரமமாக இருக்கும் சூழ்நிலையில், மீட்கப்பட்டு விடுவோம் என்று காலம் முழுவதும் நம்பிக்கை எனும் கரம் பிடித்து நடந்த மனித இனம் இரு கூறாக பிரிகிறது, அதாவது பார்வையில் தென்படும் சக மனிதனையும் உணவாக பார்க்கும் மிருகங்களாகவும், அந்த மிருகங்களிடம் சிக்க கூடாது என்று ஒளிந்து வாழும் வக்கற்றவர்களாகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட வக்கற்ற வர்க்கமாக நம் கதாநாயகனும் அவரது தந்தையும் சித்தரிக்கப் படுகிறார்கள். 

    உடமையாளர்களின் சம்மதம் இல்லாமல் பூட்டி வைத்துள்ள அறைகளை ஆராய, நம் கதாநாயகனின் மனம் மறுதலிக்கிறது. அனுமதி இல்லாமல் நுழைந்தால் அது திருட்டு என்று அவனுக்கு சிறு வயது முதலே புகட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் இப்படி ஒரு உன்னதமான மனிதனாக அவன் உருவாகி இருக்க முடியாது. தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்கும் பழக்கம் உள்ள மனிதன் தன் குடும்பத்துக்காக சேர்த்து வைத்த உணவை உபயோகிக்க முடியாமல் மாண்டு போக, அதை எதேச்சையாக கண்டுபிடித்து தன் பசி தீர்த்துக் கொள்ளும் நம் கதாநாயகன் அவர்களுக்கு நன்றி கூறும் சமயம், விக்கித்துப் போனேன்.

    ஆங்காங்கே கதாசிரியர் செய்துள்ள பிளாக் காமடி இறுக்கத்தை தளர்த்தினாலும், அடுத்த நிமிடமே மீண்டும் அந்த சாம்பலின் நெடி மூச்சு திணற வைக்கிறது. 

    பல இடங்களிங் ஒரு தந்தையாக கண்கள் கலங்க கடந்து போனேன்.

    பல இடங்களில் என் தந்தையை நினைத்து கரைந்து போனேன்

    சுமைதாங்கிகள் சலித்துக் கொள்வதில்லை. பாதுகாப்பு அரண்கள்
    புலம்புவதில்லை. நுரையீரலில் புகும் கடைசி காற்று வெளியேறும் வரை, ஓயாமல் கரை சேர்க்கும் தந்தையர்கள் கடைசி வரை எதிர்பார்ப்பது தன் மீது நம்பிக்கை வையுங்கள் என்பதே. அந்த நம்பிக்கையை பெறவும், அந்த நம்பிக்கை உடையாமல் பாதுகாக்கவும் அவன் செய்யும் செயல்கள் அசாத்தியமானது.  அதே நம்பிக்கையை மகன்களும் தன் தந்தையிடம் இருந்து எதிர்பார்ப்பது தான் யதார்த்தமானது. 

    ReplyDelete
    Replies
    1. ஆபத்து இருக்கும் என்று கருதி போக வேண்டாம் என்று தந்தையை கெஞ்சும் கதாநாயகனுக்கு அந்த எதிர்பார்ப்பு பொய்த்து போகிறது. நல்லவர்கள், நல்லவர்களுக்கு உதவாமல் சுயநலத்துடன் கடந்து போவது எந்த வகையில் நல்லது என்ற கேள்விக்குறியுடன் அலையும் கதாநாயகனின் மௌன  கேள்விக்கு அந்த தந்தையால் சமாளிப்பு என்பதே பதிலாக வருகிறது.

      தங்கள் பொருட்களை திருடிக் கொண்ட ஒரு வக்கற்ற வர்கத்தை சார்ந்த ஒருவனை, துப்பாக்கி முனையில், திருடியதற்கு தண்டனையாக, அந்த குளிர் பிரதேசத்தில் உடையை கழற்ற சொல்லும் தன் தந்தையுடன் கெஞ்சிக் கதறி நியாயத்தை நிலைநாட்டும் சமயம், இது maturity என்று கூறிக் கொண்டு வளர்ந்து நிற்கும் மனிதனுக்கு சாத்தியமா என்று கேள்விக்குறியே எழுந்து நிற்கிறது. மனம் முழுவதும் கதை நடக்கும் பகுதியின் பனிப்பிரதேசத்தை போலவே வெண்மையாக இருக்கும் ஒரு குழந்தையால் மட்டுமே இது சாத்தியம் என்று மனம் அரற்றியது.

      கடைசியில் நம் கதாநாயகன் பிழைதானா? வாழ்க்கையில் ஜெயித்தானா எனும் கனத்த கேள்வி இரண்டு நாட்களாய் மனதை பிராண்டிக் கொண்டே இருக்கிறது. கடைசி பக்கத்துக்கு அடுத்த பக்கத்தில் ஒரு சிறுவனின் தலையை துண்டித்து வைத்தது போல் இருக்கும் அந்த காட்சி, கனவாக இருக்க வேண்டும் என்று சமாதானப்படுத்திக் கொண்டே இருக்கிறது. 

      திரு. கம்பம் ஜெய்கணேஷ் தன் விமர்சனத்தில் கூறியது போல் இந்த அற்புதமான ஆக்கத்துக்கு மதிப்பளிக்க என்னால் இயலாது. 

      மிகவும் கடினமான ஒற்றை வார்த்தை ஆங்கில சொல்லாடல்களுக்கு, நமக்கு இணக்கமாக அந்நியமாக தெரியாதபடி அற்புதமாக நம் தாய்மொழியில் மொழி பெயர்த்து கொடுத்த எடிட்டருக்கு ஒரு சிறப்பு நன்றி உரித்தாக வேண்டும். 

      இதே போல ஒரு அதி அற்புதமான படைப்பான, குண்டு புத்தகமும், அதனை தொடர்ந்து வரப்போகும் பிற படைப்புகளும் எங்களை ஆட்கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

      Delete
    2. சூப்பர் சுரேஷ் சார்...

      எனக்கு *பிரளயத்தின் பிள்ளைகள்* கதையே ரொம்ப புடிச்சிருந்தது.. நாலு தடவை படிச்சிருக்கேன்.!
      சிப்பாயின் சுவடுகளில்.. பிரளயத்தின் பிள்ளைகள்.. போன்ற கதைகள் நிஜங்களின் நிசப்தம் & பயணம் கதைகளை விட எளியதுதான்.!
      அப்போ எல்லோரும் தெறிச்சி ஓடியதால பல நல்ல கதைகளை நாம் இழந்துவிட்டோம்..!
      இப்போகூட ஒண்ணும் கெட்டுப்போயிடலை.. இதுபோன்ற கனத்த களங்களை அப்பப்போ முயற்சி பண்ண நம்ம எடிட்டர் சாருக்கு ஆதரவு குடுத்தோம்னா போதும்.!

      Delete
    3. தெறிச்சு மட்டுமா ஓடுனாங்க.... 🥹🥹🥹

      ......நமக்கான புது பிக்னிக் சந்தையும் காட்டிப்புட்டில்லே போனாங்க!

      (பி. கு. இன்று முதல் கார்த்திக்கின் அவாப்படி - பிரசித்தி பெற்ற மூ.ச.வானது "பிக்னிக் சந்து" என்று அன்போடு அறியப்படும் 💪💪

      Delete
    4. சார் @ // மூ.ச.வானது "பிக்னிக் சந்து" என்று அன்போடு அறியப்படும் 💪💪 //

      😆😆😆🤣🤣

      Delete
    5. சுரேஷ் @ உங்களின் ஒவ்வொரு விமர்சனம் நிறைய விஷயங்களை விரிவாக சொல்லுகிறது. தொடருங்கள் 🌸 வாழ்த்துக்கள்

      Delete
    6. //37ஆம் பக்கத்தை அடையும் வரை ஒரு வித இறுக்கத்துடன் பக்கங்களை புரட்டிக் கொண்டே சென்றாலும், என்னவோ நடக்கப் போகிறது என்ற பதைபதைப்புடன் தான் ரசித்துக் கொண்டே சென்றேன். நீர்வீழ்ச்சி நீரில் குளிக்க மகனும் தந்தையும் துணிகளை கழற்றி குளிக்கத் தொடங்கியவுடன் தான் கடந்து வந்த 35 பக்கங்களின் கணம் என்ன என்று புரிந்தது//

      ஆமாங்க சகோ
      குளிருக்காக அடர்த்தியாக அவர்கள் அணிந்தருந்த உடையால் கொஞ்சம் புஷ்டியாக இருப்பார்கள் என நினைத்திருந்தேன்

      Delete
    7. //சுமைதாங்கிகள் சலித்துக் கொள்வதில்லை. பாதுகாப்பு அரண்கள்
      புலம்புவதில்லை. நுரையீரலில் புகும் கடைசி காற்று வெளியேறும் வரை, ஓயாமல் கரை சேர்க்கும் தந்தையர்கள் கடைசி வரை எதிர்பார்ப்பது தன் மீது நம்பிக்கை வையுங்கள் என்பதே. அந்த நம்பிக்கையை பெறவும், அந்த நம்பிக்கை உடையாமல் பாதுகாக்கவும் அவன் செய்யும் செயல்கள் அசாத்தியமானது. அதே நம்பிக்கையை மகன்களும் தன் தந்தையிடம் இருந்து எதிர்பார்ப்பது தான் யதார்த்தமானது.//

      👌👌👌

      Delete
  48. உங்கள் விமர்சனம் மிகவும் அருமை... 👌👌👌
    ஸ்பாய்லர் அலர்ட் இல்லையென்றால் இந்தக் கதையை / இது நம்முள் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வை முழுமையாக வெளிப்படுத்தலாம்.

    ஆனால் நம் விமர்சனம் படிப்பவர்களை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற முழு கவனத்தோடு பதிவிட்டதால் அதன் முழுப் பரிணாமத்தை வெளிப்படுத்த முடியவில்லை..

    என்னையும் மீறி ஒன்றிரண்டு இடங்களைச் சொல்லி விட்டேன்.

    வார்த்தைகள் பேசப் படாத ப(இ)டங்கள் விட்டுச் செல்லும் மௌன ரணங்களை மிக நேர்த்தியாக, அடர்த்தியாக, அளவாக வசனங்களை உயயோகப்படுத்தி அதை ஆற்றுப் படுத்தியிருப்பார் நம் எடிட்டர்... வசனங்கள் அவ்வளவு இயல்பாக / கனமாக வந்திருக்கிறது...

    மிருகங்கள் போல சங்கிலியால் பூட்டி பெண்கள், ஆண்கள் இவர்களை அழைத்துச் செல்லும் போது... அங்கஹீனர்களாக இருக்கும் பெண்கள் தங்கள் வயிற்றில் பிள்ளைகள் சுமந்து செல்லும் காட்சி அவர்கள் இறைச்சி தேவை மட்டுமின்றி இச்சைத் தேவைக்கும் பயன்படுத்தி இருக்கிறார்களே இந்த மனித மிருகங்கள் என்ற அதீத கோபமும், அவர்கள் ஆற்றாமையை நினைத்து வருத்தமும் மேலோங்குகிறது.

    தேவையான அனைத்தும் ஒரிடத்தில் கிடைத்தும் தந்தையும், தனையனும் அங்கேயே இருந்தால் அந்த சொகுசு வாழ்க்கையே பழகி, உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் குறைந்து, எளிதில் பிடிபட்டு விடுவோமோ என்ற வாழ்க்கை எதார்த்தத்தை நமக்கு பதிவு செய்யுமிடம் மிகவும் அருமை... (பின்னால் அவர்களின் கோர முடிவு அங்கேயே இருந்திருந்தால் இருவரும் உயிர் பிழைத்திருப்பார்களே என்ற ஆதங்கமும் எழுகிறது)

    சார் கதை முடிவில் நீங்கள் குறிப்பிட்டது தான் உண்மை அச்சிறுவன் உணவாகக் கொ(ல்)ள்ளபட்டது உண்மையே... உண்பதற்கு கடினமில்லாத இறைச்சி என்பது ஒரு காரணமாக இருக்கலாம்... ஏனெனில் கதை முழுக்க ஒரு குழந்தைகளும் அங்கு இல்லை... முதலில் அந்த வேட்டைக் கும்பல் வரும் போது கூட அதில் ஒருவனின் முதல் இலக்கு அந்தச் சிறுவனே...

    கடைசியில் அந்தத் தந்தையால் கொல்லப்பட்டு அந்தக் கும்பலுக்கே அவன் இரையாவது காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்... அந்தக் காட்சிக்குப் பின் தான் அக்கும்பல் மனிதக் கறி உண்டு வாழ்வோர் என்பதே நமக்கு விளங்கும்...

    இந்தக் கதை முடிவில் கடற்கரைக்கு வந்த பின்னே அங்கும் தப்பிச் செல்லும் வாய்ப்பில்லை என்று உணரும் போது இனி எங்கு சென்று உயிர் பிழைக்க முடியும் என்று நமக்கே தோன்றும்...

    இந்தக் கதைப்படி முடிவு என்பது பூடகமாகச் சொல்லப்பட்டுள்ளது. மனித மிருகங்களில் கடைசியாய் மிஞ்சும் இருவரில் ஒருவர் இரையாய் தீர்ந்த பின் தான் இந்த கதை நிற்கும்... இதுதான் வலியது வாழும் என்பதோ... 😞

    ReplyDelete
    Replies
    1. Survival of the fittest சார்.....!

      And சில தருணங்களில் அந்த "fittest"க்கான அடையாளங்கள் - குரூரம் , இரக்கமற்ற தன்மை, சுயநலம், ரவுத்திரம், நியாய தர்மங்களை மறத்தல் - என கொடூரமானவைகளாகவும் இருக்கலாம் போலும் 😶😶

      Delete
    2. இல்ல சார்.. இந்தக் கதையில் நல்லவர்கள் ஒதுங்கி செல்வதே நல்லதல்ல என்றே கதாசிரியர் அந்த சிறுவன் மூலமாக புரிய வைக்க முயற்சிக்கிறார்.. கெட்டவர்கள் கூட்டமாக வாழ்வதும் நல்லவர்கள் ஒளிந்து ஒதுங்கி வாழ்வதும் எவ்வளவு அபத்தமானது என்று நமக்கு புரிய வைக்க முயற்சிக்கிறார். இன்னும் நிறைய பேசினால் அது ஒரு அரசியல் பிரசங்கமாகவே மாறிப் போகும்.

      Delete
    3. // நல்லவர்கள் ஒதுங்கி செல்வதே நல்லதல்ல என்றே கதாசிரியர் அந்த சிறுவன் மூலமாக புரிய வைக்க முயற்சிக்கிறார்.. கெட்டவர்கள் கூட்டமாக வாழ்வதும் நல்லவர்கள் ஒளிந்து ஒதுங்கி வாழ்வதும் எவ்வளவு அபத்தமானது என்று நமக்கு புரிய வைக்க முயற்சிக்கிறார். //

      Correct

      Delete
  49. 'பயணம்' நிறைய நண்பர்களை ஆட்கொண்டிருப்பது அவர்களின் எழுத்துக்கள் மூலமாக அறியமுடிகிறது. 👏👏👏💐💐💐

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய நண்பர்கள் புத்தகத்தை பிரிக்காமலும், சில நண்பர்கள் புத்தகம் கிடைக்காமலும் காத்திருக்கிறார்கள்...

      Delete
  50. தங்கத் தலை வரின் "தங்கக் கல்லறை " சார் , இது ஒண்ணு மட்டும் பயணம் சைஸுலவேண்டும் சார் . அப்புறம் 2026 ஆண்டு மலர் ட்யூராங்கோ தானே ங்க சார்.

    ReplyDelete
  51. பயணம் நேற்று கிடைக்கப் பெற்றேன். புத்தகத்தின் உருவாக்கம் மிகப் பெரும் பாராட்டு பெற்றிருக்க, ஆர்வத்துடன் ஆசை தீர ரசித்துக் கொண்டே படிக்க ஆரம்பித்தேன் "தெரியலை" என்று முடிவுறும் இந்த ஒற்றை வார்த்தைக்கு பதிலாகைஒவ்வொருமுறையும் "தெரியலையே"என்ற வார்த்தைதந்தையிடம் இருந்து வரும்போது இதன் பின்னணியில் இன்னும் தெளிவான பதில் உள்ளது என்பது மனதை பிசைகிறது. தயாரிப்பை விட மொழி பெயர்ப் பிலும் அனுபவித்து கொண்டாட நூறாயிரம் விசயங்கள் உள்ளன

    ReplyDelete
  52. **பயணம் விமர்சனம்*

    ஞாயிறு மாலை ஆரம்பித்து புதன் மாலை முடித்தேன்

    தொடர்ச்சியாக படிக்க என் மனதால் இயலவில்லை. வர்ணிக்க வார்த்தைகள் இன்றி சித்திரங்களால் கதைக்குள் இழுத்து பயணிக்க வைத்துள்ளார் *Manu Larcenet.*
    எங்கும் வறட்சி, உணவு உருவாக்கிட வழியில்லை, குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லை, வெட்ட வெளியில் படுத்து தூங்கிட பாதுகாப்பும் இல்லை, இப்படிதொரு உலகில் தன் மகனை ஜீவித்து வைப்பதும் மட்டும் இல்லாமல், சுயமாக வாழ வைக்கவும் விழைந்திடுகிறார் இங்கே ஒரு தந்தை. பெயர்கள் ஒரு பொருட்டாய் இல்லை
    மனிதன் உருவாருக்கி பெருமையாய் நின்ற கட்டிடங்கள், பொருட்கள் சீந்தாவாரற்று நிர்மூலமாகி கரிசலகளாக காட்சி அளிக்கின்றன். கதையிலும் குளிர், இக்கதையினை படித்திட்ட வேளையில் கொவையிலும் குளிர், அதனால் என்னமோ குளிரை உணர்ந்த மாதிரி இருந்தது😌😌😌

    *காட் பிராமிஸ்* என்று அச்சிறுவன் தன் தந்தையிடம் சத்தியம் கேட்டபோது எங்கே இருந்து வந்தது இந்த நம்பிக்கை என ஒரு நிமடம் ஸ்தம்பித்தேன். அவன் வயதில் ஓடியாடி விளையாட ஒன்றும் இல்லை, பொம்மை இல்லை, நண்பர்கள் இல்லை, அவனை உற்சாகமாக்கிட எதுவுமே இல்லை, எந்த நம்பிக்கையில் அவன் தந்தையிடம் அப்படியொரு வார்த்தையை உபயோகித்தான், அவன் தந்தை அவனிடம் இதற்கு முன்னர் தன் சத்தியத்தை காக்கும் பொருட்டு இதை சொல்லி இருந்தாலும், நம்பிக்கை இழக்காமல் அச்சொற்களை
    உதிர்த்த அவன் மனது. இங்கு இறை நம்பிக்கை பற்றி நான் கூற வரவில்லை, ஒரு சோதனை வந்தாலே, இறைவன் இருக்கிறாரா என கேட்கும் மனிதர்களிடையே, *எதுவும் இல்லாத உலகில் நம்பிக்கை கொண்ட அவன் மனம் என்னை உலுக்கியது*.

    இரு பூட்டுகள் இக்கதையில் வருகின்றது, ஒரு பூட்டு சிறுவனுக்கு திறக்கும் முன்னே உள்ளூணர்வு தரும் எச்சரிக்கை, ஆபத்தை உணர செய்யும் வளர்ந்த விட்ட உள்ளூணர்வை காண்பிக்கிறது இரண்டாவது பூட்டை திறக்கும் போகும் முன் பயத்தில் வேண்டாம்ஙென தயங்கி நிற்க, தந்தை ஒன்று தந்திட்ட வலியால் ஒதூங்கி போக கூடாதென, அதனை திறக்கிறார், நன்மையே பயக்கிறது, அதை சேமித்து வைத்த மனிதர்களுக்கு நன்றி சொல்லும் அவனின் மனம் வருடி செல்கிறது.
    104 பக்கத்தில் ஒப்பிய அவன் கண்ணம், 105 பக்கத்தில் நன்கு சாப்பிட்ட பின் சதை போட்ட அவன் கன்னங்கள், சித்திரக்காருக்கு கைதட்டல்.
    இந்த பூட்டுகள் போன்று தான் நம்மில் சிலர் முதல் முயற்சியில் தரும் வேதனைகளிலும் காயங்களிலும் இரண்டாவது முயற்சியை எடுப்பதில்லை.

    உணவை பகிர்ந்திட தன் தந்தை மனதை சம்மத்திக்க வைத்திடும் போது, இந்த உலகில் புதிதாய் உருவாகிடும் தலைமுறையிடம் மானிடம் முற்றிலுமாக அழியாமல் தழைத்திருக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.

    143 - பக்கத்தில் அவன் தந்தை திருடிய நபரிடம் நடந்திட்ட விதத்தை ஏற்று கொள்ள இயலாமல் அவன் அழுத போது, அவன் அழுகை என்னையும் ஆட்கொண்டது , இந்த இடத்தில் சித்திரம் மிக அருமை, அவன் உள்ள குமுறல்களை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் சித்திரக்கார் *Manu*
    என்னால் சிறிது நேரத்துக்கு தொடர முடியவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டதும் எனக்கும் பிடிக்கவில்லை. அடுத்த பக்கத்தில் தந்தையை மசிய வைக்கும் வசனங்கள் பேசி அவரை நல்லது செய்ய வைக்கிறான். அவர் வேண்டுமென்றே செய்யவில்லை அவரது சூழ்நிலை என புரிதலுடன் பேசுவது மிக மிக அருமை. தன் தந்தை நல்லவர் என்ற பிம்பத்தை அவர் உடைக்காமல் இருந்தது நெஞ்சுக்கு இதம்.
    பயணத்தை மீண்டும் தொடந்திட போது அதுவரை இலைமறை காயாக இருந்த கொடுரத்தை காண நேரிடுகிறான் சிறுவன், தொடரவும் முடியாமல், கீழே வைக்கவும் முடியாமல் அடுத்தது என்ன பார்த்திடுவோம் என தொடர்ந்திட்டேன். கடல் கருப்பு வெள்ளையிலும் தந்தை தனயனுடன் ரசிக்க முடிந்தது, எதிர்பார்த்த பொலிவை இழந்துள்ளது என புரிந்து கொள்ள முடிந்தது. முடிவு நான் எதிர்பார்த்திடவில்லை, ஆனால் அவன் தந்தை அவனை தயார் படுத்தி உள்ளார் என்பது உறுதியாக தெரிந்தது

    வசனங்கள் இயல்பாக உணர்ச்சி பூர்வமாய் எழுதப்பட்டிருப்பது தந்தை மகனுக்குமான உரையாடல்களில் நம்மை ஒன்ற வைக்கிறது . " தம்பு" சகோதர்கள் சொன்னதுதான், நானும் ரசித்தேன். சாரி தம்பு ரொம்பவே மனதை கனக்க செய்தது . இறுதியில் அந்த தந்தை பேசிடும் வசனங்களில் மனம் கனத்து அழுகை வந்துவிட்டது*

    என் பார்வையில் 400 என்பது விலை குறைவே, தன் காமிக்ஸ் வட்டத்தை நன்கு தெரிந்து வைத்து குறைவான விலையில் நிறைவான படைப்பாய் தந்திட்ட தங்களுக்கு நன்றிகள், சார்
    தரமான மேக்கிங்
    வருடத்திற்கு இது போன்று ஒன்று அல்லது எதேனும் ஒரு புதிய முயற்சிக்கு ஆதரவுகள் பல தங்களுக்கு நல்கிடட்டும்.
    எனது ஆதரவுகள் என்றுமே உண்டுங்க, சார்

    Once Again Thank you Sir

    ReplyDelete
  53. @Ramya 😘👍
    அருமை.. அருமை.. 👍💐💐🙏

    ReplyDelete
  54. கடல் சகோ நிஜமா நீங்க தான் இந்த விமர்சனத்த எழுதினீங்களா? இல்ல மண்டபத்தில் யாராச்சும்(சூர்ய ஜீவா, கம்பம் ஜெய் கணேஷ்) எழுதிக் கொடுத்தாங்களா?கலக்கறீங்க. "ங்" இல்ல க்" தான்

    ReplyDelete
    Replies
    1. 😂😂😂😂😂
      நன்றிகள் சகோதரரே
      நானே நானே தங்க, சகோ😁
      நமது தளத்தில் கிடைத்த எழுத்து அனுபவம் முன்னேற வாய்பளித்துள்ளது, பயன்படுத்தி கொண்டேன், சகோ

      Delete
    2. மேடம், கனவுலகம் நடத்திய விமர்சன போட்டியில் முதல் பரிசை தட்டியவர் நண்பரே...

      Delete
  55. பயணம் நம்மில் உருவாக்கியுள்ள அதிர் வலைகள் பிரமிக்கத் தக்கது. கடல் சகோ, மற்றும் பரணிதரன் விமர்சனங்களே அதற்கு சான்று

    ReplyDelete
  56. இன்று பதிவுக்கிழமை, சார்
    புகை சமிக்ஞை அனுப்புகிறோம்

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் கடல். சார் இன்று பதிவுக் கிழமை...

      Delete
  57. தேங்க்ஸ்,சூர்ய ஜீவா சார் //கனவுலகம் நடத்திய விமர்சன போட்டியில் முதல் பரிசைவென்றவர்கடல் லிஸ்டர். //, வாழ்த்துக்கள் கடல் சகோ. செல்போன் மாற்றிய போதுகனவுலகம் க்ரூப் இல் இருந்து வெளியேற நேரிட்டது. இன்னும் மறுபடி இணையவில்லை.

    ReplyDelete