Wednesday, September 27, 2023

ஒரு சங்கடச் செய்தி !

 நண்பர்களே,

வணக்கம். சுகவீனங்களுடனான நெடியதொரு போராட்டத்தினில் தோல்வியை ஒத்துக் கொண்டு அம்மா இயற்க்கையோடு ஒன்றாகிப் போய் விட்டார்கள் ! கடந்த வியாழனன்று நள்ளிரவுக்கு மேல் எதிர்பாரா நோவுகள் சுனாமியாய் தாக்கிட, அன்று தப்பிய நினைவு இறுதி வரைக்கும் திரும்பவேயில்லை ! ஏதேதோ முயற்சித்தும் இனி செய்வதற்கு ஏதுமில்லை என டாக்டர்களும் திங்களன்று கைவிரித்திட, வீட்டுக்கு அழைத்துச் சென்ற  பத்தாவது நிமிடத்தில் அம்மாவின் மூச்சு அடங்கிப் போனது ! கண்ணெதிரே ஒரு ஜீவன் விடைபெறுவதை பார்க்கும் கொடுமையோடு துவங்கிய இந்த வாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என தொடர்ந்த தினங்களில் நீண்டு வந்துள்ளது ! And சகல காரியங்களும் முடிந்த கையோடு இங்கே இப்போது ஆஜராகியுள்ளேன் ! 

மரணம் இயற்கையின் நியதியே என்றாலும், அதனை மிக நெருக்கத்திலிருந்து பார்ப்பது ஒரு மிரளச் செய்யும் அனுபவமாய் இருப்பதை மறுக்க மாட்டேன் ! கடந்த ஐந்தாண்டுகளாகவே ஊர் ஊராய், ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாய் அலைவதே அம்மாவின் விதி என்றாகிப் போயிருந்தது. அந்த 5 ஆண்டுகளில் 9 ஆபரேஷன்கள் என்ற ரணகளங்கள் அரங்கேறிய பொழுதுகளில் - 'இந்த வேதனைக்கு ஒரு நிரந்தர விடுதலை கிட்டினால் தேவலாமே ?' என நினைக்கத் தோன்றியது நிஜமே ! ஆனால் அம்மாவின் விரல் தொடும் அண்மையில் அந்த விடுதலை நின்ற போது, அதனை வரவேற்க எங்களுக்குத் திராணியே இருக்கவில்லை தான் ! But அனுமதி கேட்டுப் பெற்றுவிட்டெல்லாம் காலன் தனது கடமைகளைச் செய்வதில்லையே ?! வந்தார் & 2 தினங்களுக்கு முன்வரையிலும் ரத்தமும், சன்னமான சதையுமாய் இருந்ததொரு ஜீவனை இன்று போட்டோவில் புன்சிரிக்கும் நினைவாய் உருமாற்றிவிட்டு தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார் !   கடைசி காலத்தில் நிறைய கஷ்டப்பட்டு விட்டார்கள் -  இனியாவது இன்னல்களின்றி நிம்மதியாய் துயில்வார்கள் என்ற பிரார்த்தனைகளுடன் வழியனுப்பியுள்ளோம் ! புனித மனிடோ காத்தருள்வாராக ! 



October புக்ஸ் வரும் வாரத்தில் பெரிய தாமதங்களின்றிப் புறப்பட்டு விடும் ! கொஞ்சமாய்ப்  பொறுத்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையுடன் கிளம்புகிறேன் all ! God be with us all !  

Saturday, September 23, 2023

பிரிவியூஸ் ஒரு தொடர்கதை !

 நண்பர்களே,

வணக்கம். மெகா டெக்ஸ் பணிகளை உருண்டு, புரண்டு ஒரு வழியாய் கரை சேர்த்தாச்சு ! 700 பக்கங்களாக துவங்கிய திட்டமிடல் 712 ஆக முன்னேறி, இப்போது 720 என்று நிறைவடைந்துள்ளது ! அதில் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் எனது பேனாவிலிருந்து எனும் போது, திருவாளர் நாக்கார் தெருவைக் கூட்டிக் கொண்டு கிடப்பதில் வியப்புகளில்லை தான் !  And அச்சும் முடிந்து, சகலமும் நாளை பைண்டிங் செல்கிறது ! அங்கே காலில் வெந்நீரை ஊற்றாது புக்ஸை நிறைவாய் முடித்து வாங்கிட இயலும் தருணத்தில் டெஸ்பாட்ச் இருந்திடும் - so அதுவரையிலும் பொறுமை ப்ளீஸ் guys ! 

And இம்மாதத்தின் இன்னொரு டெக்ஸ் சாகசமும் கூட திங்களன்று அச்சுக்குச் செல்லவிருக்கிறது - நம்ம V காமிக்சின் உபயத்தில் ! சகோதரனின் சகாப்தம் - டெக்சின் அண்ணாரின் கதை ! பென்சில் மீசையும், சாந்தமான முகமுமாய் காட்சி தரும் சாம் வில்லரோடு பயணிக்க, இந்த மாதத்து V பயணச்சீட்டினை வைத்துக் காத்துள்ளது ! இதோ - ஒரிஜினல் அட்டைப்படமும், உட்பக்க பிரிவியூவும் :



மறுக்கா நினைவூட்டி விடுகிறேன் folks ; இது V காமிக்சின் வெளியீடு ! So அதற்கான இறுதி க்வாட்டர் சந்தா செலுத்தி விட்டீர்களா ? என்று ஒருவாட்டி உறுதி செய்து கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? இன்னமும் செய்திருக்கவில்லை எனில் - இதோ உள்ளது அதற்கான விபரம் : 

*ரெகுலர் சந்தாக்களில் உள்ளோர் எனில் : ரூ.325 

*அல்லாதோர் - ரூ.425

Moving on, அக்டோபரின் இதழ் # 3 - நான் ரொம்பவே எதிர்பார்த்திடும் தாத்தாக்கள் படலம் ! இதோ - லூட்டியடிக்கும் பெருசுகளின் மூன்றாவது ஆல்பத்தின் பிரிவியூ : 





Again அட்டைப்படத்துக்கு ஒரிஜினல் டிசைனே - வண்ணச் சேர்க்கையில் மட்டுமே மாற்றத்துடன் ! கதைத்தலைப்பின் எழுத்துரு - நண்பர் ஜெகத்தின் ஜாலம் ! And கதையின் ஓட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வசன நடை எப்போதும் போலவே  raw ஆகவே இருந்திடவுள்ளது ; பிரிவியூ பக்கமே அதை பறைசாற்றிடுவதைப் பார்த்திடலாம் ! 'இதை இன்னும் கொஞ்சம் நாசூக்காய் கையாண்டிருக்கலாமே ?' என்ற விமர்சனங்கள் வருமென்பதை யூகிக்க முடிந்தாலும், இந்தத் தொடரின் தன்மைக்கும், கதாப்பாத்திரங்களின் இயல்புக்கும் - 'உள்ளது உள்ளபடியே" என்ற பாணி தான் suit ஆகுமென்பது எனது நம்பிக்கை ! அது மாத்திரமன்றி, "18+க்கான வாசிப்பு" என்ற பரிந்துரை சகிதம் வந்திடவிருக்கும் ஆல்பத்துக்கு வசன பாணியில் சமரசம் செய்திட அவசியங்களும் இராதென்பது எனது திண்ணமான எண்ணம் ! So முன்கூட்டியே be prepared ப்ளீஸ் !

ஒன்றுக்கு இரண்டாய் 'தல' ஆல்பங்கள் அதிரடியாய் களமிறங்கும் மாதத்தில், பொதுவாய் வேறெந்த இதழ் வெளியானாலும் விற்பனையில் சட்னி ஆவது வாடிக்கை ! அது தெரிந்திருந்தும், ஒன்றுக்கு மூன்றாய் பெருசுகளை இம்மாதம் களமிறக்கி விட்டுள்ளேன் ! "இழக்க ஏதுமில்லை" என்பதையே வாழ்க்கையின் தாரக மந்திரமாய்க் கொண்டு பயணிக்கும் பெருசுகள், இந்த மோதலில் இருந்து  எவ்விதம் வெளிப்படுகிறார்கள் என்று பார்ப்பதே இம்மாதத்தின் எதிர்பார்ப்புகளுக்குள் எனக்குப் பிரதானமானது ! பார்ப்போமே !! 

இம்மாதம் இன்னொரு இதழும் உண்டு ; and அதுவும் வண்ண இதழே ! "பேய் புகுந்த பள்ளிக்கூடம்" என்ற 32 பக்க டைலன் டாக் கலர் த்ரில்லர் தான் அது ! சந்தாக்களோடு நாம் பிராமிஸ் செய்திருந்த 4 விலையில்லா இதழ்களின் வரிசையில் இது # 2. மீதமிருக்கும் இரண்டுமே 'டெக்ஸ்' கலர் மினிஸ் - for November & December ! அமானுஷ்யங்களை ஆய்வு செய்திடும் இந்த புதிர் ஹீரோவின் லேட்டஸ்ட் பாணியிலான கதை இது ; ரொம்பவே crisp கதைக்களம் + சித்திரங்கள் + கலரிங் என வசீகரிக்கிறது ! As usual இங்கே லாஜிக்குக்கு பெருசாய் இடம் நஹி தான் - ஆனால் மின்னலாய்ப் பறக்கும் இந்த 32 பக்க ஆல்பத்தை மறுபடியும் வாசிக்கத்  தோன்றாது போகாதென்பேன் ! 

And that winds up the October previews !!

இதோ - 2 வாரங்களுக்கு முன்னே கேட்டிருந்த மறுபதிப்புகள் சார்ந்த கேள்விக்கான உங்களின் பதில்கள் !!


80 + 47 = 127 பேர் "வாசிப்பும் உண்டு" என்று பதிலளித்திருப்பதில் மெய்யாலும் எனக்கு வியப்பே ! And 176 பேர் இதனில் பொறுப்பாய் வோட்டளித்திருப்பதை பார்க்கும் போது, the poll stands credible ! இந்த பதிலானது தானாய் எனது அடுத்த கேள்வியையும் வரவழைக்கிறது ! 

இதோ இந்த லிஸ்டை சித்தே பாருங்களேன் guys : 

  1. லார்கோ வின்ச் 
  2. வெய்ன் ஷெல்டன் 
  3. ஜில் ஜோர்டன் 
  4. மேஜிக் விண்ட் 
  5. டைலன் டாக் 
  6. ஜூலியா 
  7. டயபாலிக் 
  8. டெட்வுட் டிக்
  9. தோர்கல் 
  10. ப்ளூகோட்ஸ் பட்டாளம் 
  11. ஜானதன் கார்ட்லேண்ட் 
  12. கமான்சே 
  13. ட்யூக் 
  14. ஜெரெமியா 
  15. பெளன்சர்  
  16. Smurfs 
  17. லியனார்டோ தாத்தா 
  18. ரின்டின் கேன் 
  19. மேக் & ஜாக் 
  20. கர்னல் க்ளிப்டன் 
  21. தாத்தாஸ் 
  22. ஏஜென்ட் சிஸ்கோ
  23. C.I.A ஏஜெண்ட் ஆல்பா 
  24. SODA 
  25. டிடெக்டிவ் ரூபின் 
  26. டேங்கோ
  27. ஸாகோர்  
  28. நெவாடா 
  29. அண்டர்டேக்கர் 
  30. ரிங்கோ ஸ்டார் 
  31. ஸ்டெர்ன் 
  32. I.R.$
  33. LADY S
  34. மிஸ்டர் நோ
  35. சுட்டிப் புயல் பென்னி  

கடந்த பத்தாண்டுகளில் நாம் அறிமுகப்படுத்தியுள்ள புது நாயக / நாயகியரின் பட்டியல் இது - எனக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள இயன்றமட்டுக்கு ! For sure - இந்த லிஸ்ட்டில் இன்னமுமே ஆட்கள் இருப்பர் என்பது நிச்சயம் !!  மேற்படிப் பட்டியலில் - இப்போதும் நம் மத்தியில் உலவிடுவோர் வெகு சொற்பம் and அந்த சொற்பமுமே பெரும்பாலும் எனது பிடிவாதங்களின் பொருட்டே என்பது தான் வார்னிஷ் அடிக்காத நிஜம் ! 

"ஒரு SODA ஆல்பம் போடவா ? ஒரு ஜான் மாஸ்டர் மறுபதிப்பு வெளியிடவா ?" என்று கேட்டால் பெரும்பான்மையின் பதில் என்னவாக இருக்குமென்பது நாமெல்லாமே அறிந்ததே ! "ஒரு கிளிப்டன் கார்ட்டூன் ஆல்பம் போடவா ? அல்லது அந்த ஸ்லாட்டில் ஒரு கவ்பாய் ஆல்பம் போடவா ?" என்ற choice உங்களிடம் தந்தால் என்ன பதிலளிப்பீர்கள் என்பது தெரிந்த சமாச்சாரம்  ! "ஒரு ஆல்பா ஆல்பமா ? ஒரு ரிப் கிர்பி கதையா ?" என்று one to one மோதலை முன்மொழிந்தால் , நம்ம CIA ஏஜெண்ட் ஏதேனும் முனிசிபல் குப்பை கிடங்கில் தான் பார்சலாகிக் கிடப்பார் ! அட, "லேடி S வேணுமாங்கோ ? இயவரசி மாடஸ்டி வேணுமா ?" என்ற கேள்வியை நான் கேட்டு முடிக்கும் முன்பாகவே மாடஸ்டிக்கு தோரணமெல்லாம் கட்டி முடித்திருப்பீர்கள் ! 

நிச்சயமாய் இங்கு யாரது ரசனைகளிலும் பிழை சொல்லிடவோ / இதையெல்லாம் ரசிக்க மாட்டேங்கிறீங்களே ! என்று விசனப்படுவதோ எனது நோக்கமே அல்ல ! மாறாக - ரொம்பவே சிம்பிளான வினா என்னிடம் !!

"புதுசு என்ற தேடல்களுக்கெல்லாம் பெருசாய் அவசியங்கள் லேதுவா ? கொஞ்சம் டெக்ஸ் ; கொஞ்சம் லக்கி ; கொஞ்சம் மற்ற நாயக / நாயகியரின் கலவையிலேயே வண்டியை ஓட்டிக்கலாமா ?" என்பதே my question ! 
  • கார்ட்டூன் - "அட மொக்கை போடாதேப்பா" என்று சொல்லி விட்டீர்கள் !
  • எதிர்கால அபோகாலிப்ஸ் தொடர் - "அட நீ ஓரமா போவியா ? ஒரு ஜெரெமியாவே போதும் நைனா" என்று தீர்ப்புச் சொல்லி விட்டீர்கள் !
  • டார்க் காமெடி பாணிகள் - 'என்னமோ நீ சொல்றே...அதுக்கோசரம் படிக்கிறோம்" என்று புரிய வைத்து விட்டீர்கள் !
  • கி.நா.ஸ்  - 'அடி வாங்காம ஓடிப்புடு !' என்று அன்பாய் எச்சரித்து விட்டீர்கள் !
  • Fantasy - "புடிக்கும் ; ஆனா விற்காது !" என்று மண்டையில் குட்டுடன் சொல்லியாச்சூ !
So - எஞ்சியிருக்கும் டிடெக்டிவ் + வெஸ்டர்ன் ஜானர்களிலேயே இன்னும் கொஞ்சம் புதியவர்களைத் தேடிக் குடாயணுமா ? அல்லது 'இப்போதுள்ளோருடனே க்ளாஸிக் பார்ட்டிக்களின் புதுக் கதைகளையும் கொஞ்சமாய் தொட்டுக்கினு கொட்டும் குப்பையே மதி !' என்பீர்களா ? Honest பதில்ஸ் ப்ளீஸ் ? 

இங்கு பதிலளிக்க விரும்பா நண்பர்களுக்கென poll லிங்க் இதோ :


Bye all....see you around ! Have a good weekend !

Saturday, September 16, 2023

வருவார்....வெல்வார்....!

 நண்பர்களே,

வணக்கம். பல்வேறு சலூன்களில் பலதரப்பட்ட தறுதலைகளை நம்ம 'தல' குமட்டோடு 'கும்மு..கும்மு..' என்று கும்மியெடுப்பதைப் பார்த்திருப்போம் ! 'அப்டி போடுங்கண்ணே...இன்னும் ரெண்டு  சாத்துங்க' என்றபடிக்கே பக்கத்தைப் புரட்டிப் போயிருப்போம் ! ஆனால் பாவப்பட்ட அந்த மிஸ்டர் தறுதலைஸ், சேதாரமான பல்செட்களோடும், பின்னியெடுக்கும் பல்வலிகளோடும், அந்தக்காலத்து வைத்தியர்களிடம் போய் வைத்தியம் பாக்க என்ன பாடு பட்டிருப்பார்களோன்னு எப்போவாச்சும் யோசித்துப் பார்த்திருப்போமா ? அந்த ஞானோதய வேளை  கடந்த மூணு தினங்களாய் நேக்கு வாய்த்துள்ளது - கடைவாயில் தெறித்து வரும் பல்வலியின் உபயத்தில் !! போன வருஷமே 'ரூட் கெனால்' ட்ரீட்மெண்ட் என்று குடைந்து ரொப்பிய பல்லின் வேரில் மறுக்கா சீழ் பிடித்திருக்க, அதனை பொறுமையாய் தான் சீர் செய்திட இயலுமென்று டாக்டர் சொல்லி, மாத்திரைகளைத் தந்திருந்தார் ! மாத்திரையின் வீரியம் மட்டுப்படும் நொடியில், 'தல' கிட்டே சாத்து வாங்குற மெரியே feel ஆகத் துவங்கிட, தறுதலைஸ் பட்டிருக்கக்கூடிய கஷ்டங்களை எண்ணிப்பார்த்து கண்ணிலே ஜலம் வைப்பது போலாகிறது !! ஆனாலும் நீங்க பாவம்டா டேய் நீர்யானைகளா !!  வாழைப்பழத்தை விழுங்கவே மூணு தபா யோசிக்க வைக்கிற பல்வலியோட, என்னத்தை சாப்பிட்டு ஒடம்ப தேத்திக்கிட்டு,கடாமாடுகள் மாதிரி  மறுக்கா அடிவாங்க எப்புடித்தான் ஆஜராவீங்களோ ?!!

"இன்னா மேன் நேரா வன்மேற்கிலேர்ந்து இஷ்டார்ட் ஆகுது வண்டி ?" என்று கேட்கிறீர்களா - காரணம் கீதே !! ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல....நான்கு காரணங்கள் கீதே !!  அந்த நான்குமே ஒற்றைப் புள்ளியில் இணைந்து "THE SUPREMO ஸ்பெஷல்" என்ற பெயருக்குள் ஐக்கியமாகின்றனவே !! And ஐயோ...சாமீ...தெய்வங்களே......இந்தப் பெயரினை நண்பர்களில் யாரேனும் முன்மொழிந்தீர்களா ? என்பது குறித்து இந்த நொடியில் எனக்கு திடீரென்ற சந்தேகம் தலைதூக்கிடுகிறது ! If yes - சிரமம் பார்க்காது ஞாபகப்படுத்திடுங்களேன் ப்ளீஸ் - ஹாட்லைனில் உரிய credit தந்திடத் தவறக் கூடாதல்லவா ?  

நிறைய டெக்ஸ் & டீம் கதைகளுக்குள் சடுகுடு ஆடியுள்ளோம் தான் ; 548 பக்க நீள ஒற்றைக் கதைக்குள்ளும் உலாற்றியாச்சு தான் ; ட்ரிபிள் ஆல்பம் + டபுள் ஆல்பம் + சிங்கிள் ஆல்பம் என்ற கூட்டணி இதழையும் பார்த்தாச்சு தான் - ஆனால் இரவுக்கழுகாரின் இந்த 75-வது ஆண்டின் சிறப்பிதழில் கிட்டி வரும் அனுபவங்கள் செம unique ! நான்கு தலைமுறைகளை சார்ந்த கதாசிரியர்கள் !! நான்கு காலகட்டங்களில் உருவான கதைகள் !! நாயகர் ஒருவரே என்றாலும் அவரது கதையோட்ட பாணிகளுக்குள் உள்ள நுட்பமான மாற்றங்கள் !! காலம் எத்தனை மாறியிருந்தாலும், அந்த வன்மேற்கின் கதைக்களங்கள் இம்மிகூட மாறியிருக்கா ஆச்சர்யங்கள் - என இங்கே எனக்குக் காணக் கிடைத்துள்ள அனுபவங்கள் அனைத்துமே செம fresh !! ஆனால் 712 பக்கங்கள் கொண்ட ராட்சஸ இதழ் எனும் போது, நடப்பாண்டின் அட்டவணையினை அறிவித்த நேரம் முதலாகவே, இதனில் பெண்டு கழறப் போவது சர்வ நிச்சயம் என்று கணிசமான அள்ளு விட்டுக்கொண்டிருந்தது ! முன்னெல்லாம் கருணையானந்தம் அங்கிளை டெக்ஸ் கதைகளை எழுதச் சொல்லி விட்டு டெக்ஸ் & கார்சனின் பகுதிகளை மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்க,பெருசாய் கஷ்டம் தெரிந்திடாது ! But 224 பக்கக் கதையெல்லாம் இனி நமக்கு ஒத்து வராதென்று அங்கிள் ஜகா வாங்கிய பிற்பாடு, கடந்த 7 /8 ஆண்டுகளாகவே நம்மள் கி நாக்கார் தெருவை கூட்டாத குறை தான் ! And no different this month as well !! 

இதில் கூத்து என்னவென்றால் கடந்த 10 நாட்களாய் மொழிபெயர்ப்பு + எடிட்டிங் என ஒரே நேரத்தில் 4 கடைகள்  விரித்துப் பணியாற்றிடுவதால், உறக்கத்திலும், குதிரைப்படைகளின் அணிவகுப்புகளும், நள்ளிரவில் "யாஹூஹூ" என்ற கூக்குரல்களோடே பாயும் போக்கிரிகளும் ; பாலைவன மோதல்களுமே  கனவாய் வருகின்றன ! அர்ஜென்டினாவில் நடக்கும் இராணுவ மோதல்களில் இரவுக்கழுகாரும், சின்னப் பருந்தாரும் ஜோடி போட்டு செய்திடும் அதிரடிகளோடு கொஞ்ச நேரம்  ; அபாச்சே பூமியில் அரங்கேறும் ரகளைகளில் வெள்ளிமுடியாரும், டெக்ஸும் செய்திடும் சாகசங்களுடன் கொஞ்ச நேரம் ; மெக்சிகோ எல்லையோரக் கணவாயினுள் முழு டீமுடன் 'தல' நிகழ்த்திடும் அதிரடியோடு கொஞ்ச நேரம்  ; சியோக்ஸ் மண்ணில் ஆத்ம நண்பர்கள் இருவர் மட்டும் நடத்திடும் தேடலுடன் மீத நேரம்  - என முழுக்க முழுக்க வன்மேற்கில் தான் இப்போதெல்லாம் ஜாகை ! இதே ரீதியில் இன்னும் தொடர்ந்தால், ஆபீஸ் போவதற்கு குருத ஏதேனும் மேயுதா ? வழுக்கைக் கபாலத்தை மறைக்க stetson தொப்பி கீதா ? என்றும் தேடத் தோன்றும் போலும் ! 

குட்டிக்கரணங்கள் பல போட்டு கலரிலான 3 கதைகளின் பணிகளுக்கும் மங்களம் பாடியாச்சு & இதோ - "பூதம் காத்த புதையல்" black & white கதைக்குள் பேனா ஓடிக்கொண்டுள்ளது ! ஏற்கனவே அட்டைப்படமெல்லாம் ரெடியாகி, நகாசு வேலைகளுக்குப் போயிருக்க, செவ்வாய் முதல் அச்சும் துவங்கிடும் !! 712 பக்கங்கள் கொண்ட முரட்டு புக் + ஹார்ட் கவர் என்பதால், பைண்டிங்கில் போதிய அவகாசம் தந்திட வேண்டியிருக்கும் !! So இயன்றமட்டுக்கு நம் தரப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி விட்டால் "HAPPY 75-th தல & டீம் !!" - என உற்சாகமாக வாழ்த்துச் சொல்லி கேக்கை கொஞ்சம் விழுங்கிக்கொள்ளலாம் அல்லவா ? So full steam ahead என்று விரட்டி வருகிறோம் வண்டியை !

4 தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகள் கதாசிரியர்களாக இருந்தாலும், இங்கே ஓவியப் பொறுப்பின் பெரும்பான்மை Galleppini என்ற ஜாம்பவானின் கையில் இருப்பதைக் காணவுள்ளீர்கள் ! 2 கதைகளுக்கு அவரது தூரிகை சித்திரங்கள் தீட்டியிருக்க, பாக்கி இரண்டில் வேறு ஓவியர்கள் களமிறங்கியுள்ளனர் ! 

ஒற்றை இதழாக இருப்பினும், 4 தலைமுறைகளில் வெளியான கதைகள் என்பதால் ஒவ்வொன்றிலும் காத்துள்ள அனுபவம் ரொம்பவே different : 

  1. பிதாமகர் போனெல்லியின் கைவண்ணத்திலான சாகசமோ உருவாக்கப்பட்டிருப்பது 1967-ல் ! அதன் பின்பாய் 1970 ; 1990 ; 2002 ; 2007 ; 2016 ; 2023 ஆகிய ஆண்டுகளில் இந்த 81 பக்க சாகசம் மறுபதிப்பு கண்டுள்ளது !! 
  2. அவரது புதல்வரான செர்ஜியோ போனெல்லியின் ஆக்கம் உருவானது : 1982-ல் ! பின்னாட்களில், 1985 ; 1997 ; 1998 ; 2003 ; 2009 ; 2010 ஆகிய ஆண்டுகளில் ரீப்ரின்ட் செய்துள்ளனர் ! 
  3. கிளாடியோ நிசி அவர்களின் கைவண்ணத்திலான கதை படைக்கப்பட்டது 1990-ல் & 2006 ; 2009 ; 2011 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டுள்ளது !
  4. இன்றைய ஜாம்பவான் போசெலி அவர்களின் படைப்பான "வந்தார்....வென்றார்..." வெளியானது 2009-ல் ! And 2012 ; 2014 & 2016 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டுள்ளது ! முதல் 3 கதைகளும் க்ளாஸிக் கமர்ஷியல் டெக்ஸ் பாணியில் இருக்குமென்றால், இதுவோ "கிங் ஸ்பெஷல்" இதழில் வெளியான ஆழமான, அழுத்தமான சாகசத்தின்  ஜாடையினில் இருந்திடும் ! In fact நிறைய டெக்ஸ் ஆர்வலர்களின் all time favorites பாட்டிலுக்குள் இந்த அதிரடிக்கு உயரிய இடமுண்டு ! Truth to tell, இந்த சாகசத்தினை ரொம்ப ரொம்ப முன்னமே வெளியிட எனக்கு செம ஆசை தான் ; ஆனால் அதன் மொழியாக்கம் நிச்சயம் சுலபமாய் இருக்கவே போவதில்லை என்பதை என்னுளிருக்கக்கூடிய சோம்பேறிமாடன் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க, தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றேன் ! But finally we are there - in ஆர்ஜென்டினா ! கடல் கடந்து கியூபாவுக்கு தல பயணப்பட்ட பொழுது நமக்கு கிட்டிய அனுபவமானது, கொஞ்சம் விட்டலாச்சார்யா பப்படம் ரேஞ்சில் இருந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம் தான் ; but இம்முறையோ இது செம ரியலிஸ்டிக் கதைக்களம் கொண்டதொரு saga ! க்ளைமாக்சில் தந்தையும், மகனும் முன்னெப்போதும் நாம் பார்த்திரா sequence-ல் நம்மைக் கட்டுண்டு போகச் செய்வது க்ளாஸிக் போசெலியின் மாயாஜாலம் என்பேன் ! என்னை செமத்தியாய் நாக்குத் தொங்கச் செய்த சாகசமும் இது தான் ; பணியின் இறுதியில் ஒரு இனம்புரியா நிறைவைத் தந்த சாகசமும் இது தான் !   
இதோ - some ப்ரீவியூஸ் :






மீத 2 ஆல்பங்களிலிருந்தான ப்ரீவியூஸ் அடுத்த பதிவிற்கென வைத்துக் கொள்வோமே ? எனது செப்டெம்பரின் இதுவரைக்குமான பொழுதுகளை பிஸியாக்கித் தந்த பணிகள் இவையே ! புக்காக்கி, ஒரே தொகுப்பாய் அத்தனை கதைகளையும் உங்களிடம் ஒப்படைக்கவும் , உங்களின் அலசல்களை உள்வாங்கிடவும் இப்போதே ஆர்வம் அலையடிக்கிங்ஸ் ! இன்னும் 2 வாரங்களில் அதனை நனவாக்கிட புனித மனிடோ அருள் புரிவாராக !! 

கிளம்பும் முன் காத்திருப்பதும் 'தல' தகவலே !! And ஆச்சர்யங்கள் ஒரு போதும் மட்டுப்படுவதில்லை போலும் !! ஒரு காலத்தில் எனக்குள்ளே ஒருவித இறுமாப்பு இருந்ததுண்டு - உங்கள் கி பல்ஸ் நேக்கு ஸ்பஷ்டமாய் அறியும் என்று ! ஆனால் இப்போதெல்லாம் அவ்வித கற்பனைகளில் திளைப்பதில்லை - simply becos இண்டிகேட்டரே போடாம வண்டிய ஓட்டுற கலையில் நீங்கள் எனக்கு அண்ணன்களாகி விட்டீர்கள் ! நானாச்சும் புளிய மரம், முருங்கை மரம் என்று ஏற்றிக்கிட்டிருப்பேன் ;  நீங்களோ தண்ணிக்குள் ; குகைக்குள் ; ஆகாசத்தில் என்ற ரேஞ்சில் சவாரி பண்ணுகிறீர்கள் !! பாருங்களேன் மெபிஸ்டோ ரிசல்ட்டை :




"மெபிஸ்டோவே இனி வாணாம் !!" என்று வாக்கு குத்திய 15 ஜீவன்களுள் ஞானும் ஒருவன் !! ஆத்தீ !!!

And மறுபதிப்பு சார்ந்த வோட்டிங்குமே சுவாரஸ்ய பதில்களைத் தந்துள்ளன !!  Again surprised - but pleasantly !! 


ரைட்டு...."பூதம் காத்த புதையல்" முடித்த கையோடு , தாத்தாஸ் கூட்டணியோடு கும்மியடிக்க கிளம்புகிறேன் ! 2023-ன் அட்டவணையிலேயே நான் பேனா பிடிக்க ரொம்பவே ஆர்வமாக இருந்த ஆல்பம் அது தான் & ஒரு வழியாய் அந்த பாட்டையாஸ் லோகத்தில் உலவிடும் ஏகாந்தத்தை அனுபவிக்க வெயிட்டிங் ! Of course - அது வெகு ஜன ரசனைப்பட்டியலில் இடம்பிடிக்கும் ஆலபமல்ல என்பதில் no secrets - ஆனால் இந்த ஒற்றை ஆண்டு மாத்திரம் சந்தாவில் எனக்காக பொறுத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் ! 2024 முதலாய் இந்த முதியோர் ஆர்மி முன்பதிவுத் தனித்தட  பயணிகளாகி விடுவார் ! 

Bye all.....see you around ! Have a lovely long weekend ! முன்கூட்டிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களுமே !! கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளும் போது ஆவ்ரெல் டால்டனை நினைச்சுக்கோங்கோ !! 

Saturday, September 09, 2023

தேர்தல்கள் ஒரு தொடர்கதையே !

 நண்பர்களே,

வணக்கம். செப்டம்பர் ஒரு decent ஆரம்பத்தினைக் கண்டிருப்பதில் ஆந்தையன் & கோ.செம ஹேப்பி அண்ணாச்சி ! என்ன தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாய் எந்த மாதத்துக்கு-எந்த இதழ்களென்ற திட்டமிடல்களைச் செய்தாலும் - சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் உருவாக்கித் தரும் கூட்டணிகள் தம் பங்குக்கு ஊட்டிடும் சுவாரஸ்யமே தனி ரகம் தான் ! இதோ இந்த மாதம் அகஸ்மாத்தாய், நெவாடா & மிஸ்டர் நோ - என 2 புது வரவுகள் களம்காண்பது கூட அத்தகையதொரு நிகழ்வே ! And இதுவரைக்குமான அலசல்களில், அந்த 2 புதியவர்களுமே அழகாய் ஸ்கோர் செய்திருப்பது இந்த செப்டெம்பரின் உற்சாகங்களுள் பிரதானம் என்பேன் ! Thanks a ton folks !

வீடியோ பதிவோடு இதழ்களை அறிமுகம் செய்து கொஞ்ச காலம் ஆகி விட்டதென்பதால், நேரம் கிட்டும் போது நமது YouTube சேனலில் இம்மாதத்து இதழ்களைப் பற்றி மேற்கொண்டு பேசிட எண்ணியுள்ளேன் ! அதற்கு மத்தியில், இங்கே சமீப வாரங்களின் பாணியினில் ஓரிரு முக்கிய கேள்விகளை மாத்திரம் உங்கள் முன்வைத்து விட்டு நடையைக் கட்டிடவுள்ளேன்  ! புது இதழ்கள் உங்கள் கரங்களில் உள்ள பிரெஷ்ஷான பொழுதிது என்பதால், எனது மொக்கைகளைக் காட்டிலும் உங்களின் அலசல்களுக்கே முன்னுரிமை தந்திட வேண்டும் ! So இந்த வாரயிறுதியில் 'என் கேள்விக்கென்ன பதில் ?' என்பதே நிலவரம் guys !!

எனது முதல் கேள்வியானது நமது போன மாதத்து டெக்ஸ் இதழானது ஆங்காங்கே எழுப்பியுள்ள சில உரையாடல்களின் நீட்சியே ! என்ன தான் நமது வலைப்பக்கத்தைத் தாண்டி, வேறெந்த சமூக ஊடகப் பக்கங்களிலும் நான் தலை காட்டுவதில்லை என்றாலும், ஆங்காங்கே அரங்கேறிடக்கூடிய சில சுவாரஸ்ய topics மீதான விவாதங்கள், நண்பர்களின் உபயத்தில் என்னை எட்டிடத் தவறுவதில்லை ! அவ்விதம் வந்ததொரு சமீப பட்டிமன்றம் - டெக்ஸ் கதைகளில் மெபிஸ்டோ ஒரு பலமா ? பலவீனமா ? என்ற தலைப்பினில் ! இங்கே நான் மட்டும் சாலமன் பாப்பையாவாய் அமரும் வாய்ப்பு கிட்டியிருப்பின்,  மெபிஸ்டோவுக்குத் தடா போடும் ஆப்பையாவாக மாறியிருப்பேன் என்பதில் no secrets ! நமது இரண்டாம் வருகையினில் - டெக்ஸ் பங்கேற்கத் துவங்கிய "சிவப்பாய் ஒரு சொப்பனம்" இதழிலிருந்தே நம் மத்தியில் நம்மவருக்கொரு முறையான branding தந்திட ரொம்பவே கவனமாய் இருந்திருந்தோம் ! அதற்கு முன்பான காலகட்டத்தினில் டெக்ஸ் & கோ. மாயாஜால எதிரிகளை ; விட்டலாச்சார்யா பாணி வில்லன்களைச் சந்திக்கும் கதைகளையும் தயக்கங்களின்றிக் களமிறக்கியிருந்தோம் ! ஆனால் post 2012 - டெக்ஸ் கதைகளுக்கென ஒரு டெம்ப்ளட் செட் செய்திட ஓசையின்றி முனைந்திருந்தோம் ! 'தல'யின் வரிகளில் பன்ச் வீரியங்கள் சற்றே தூக்கலாகியதும், வெள்ளிமுடியாரின் அலப்பறைகள் ஒரு மிடறு ஜாஸ்தியானதும் மாத்திரமன்றி, டைகர் ஜாக் பேசுவதில் கூட ஒரு pattern ஏற்படுத்தியிருந்தோம் ! முன்னாட்களின் நமது மொழியாக்கங்களில் டைகர் ஜாக் டெக்சிடம் பேசும் போது "நீ...வா..போ..." என்றே இருந்திருக்கும் ! ஆனால் கடந்த 11 ஆண்டுகளாய் "இரவுக்கழுகார் " என்ற அடையாளத்துடனே டைகர் ஜாக் கண்ணியமாய் உரையாடிடுகிறார் ! (இது தேவை தானா ? செவ்விந்தியன்னா இளப்பமா ? டெக்ஸுக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு ?? வா..போ..என்று பேசினால் என்ன குறைஞ்சிடும் ?" என்ற வினாக்கள் நம்மில் ஒரு அணியினருக்குத் தோன்றாது போகாது தான் - அதை அடுத்த பட்டிமன்றத்துக்கான தலைப்பாக வைச்சுக்குவோமுங்களா ?) And கிட் கூட "அங்கிள் கார்சனை" உரிமையோடு கலாய்ப்பதையும் பார்த்திருக்கலாம் & "என் பிள்ளை கிட் " என்று சுக்கா ரோஸ்ட் காதலர் காட்டிடும் பாசப் பிரவாகங்களுமே highlight ஆகிடுவதற்கு கவனம் தந்திருந்தோம் ! In fact - கிடைக்கும் வாய்ப்புகளில் கார்சன் சுக்கா ரோஸ்ட்களை வெளுத்துக் கட்டுவதையும் கதையின் போக்கிற்கொரு much needed relief ஆகப் பார்த்திடவும் தொடங்கியிருந்தோம் ! 

இத்தனை கண்டிஷன்களைப் போட்டுக் கொண்ட கையோடு துவக்கம் முதலாய் நான் கொண்டிருந்த மேஜர் கொள்கையே - நோ to மெபிஸ்டோ என்பதே ! இது குறித்து  ரெகுலராய் கேள்விகள் எழுந்ததும், ஓட்டை ரெக்கார்டாய் அதே பதிலை நான் சொல்லி வந்ததையும் இந்தத் தளம் அறியும் ! நான் வேணாம் என்பதும், போட்டாலென்ன ? என்று நண்பர்கள் அவ்வப்போது வினவுவதும் தொடர்கதையாகவே இருந்து வந்தது ! But ரொம்ப ரொம்ப காலத்திற்குப் பின்னே மெபிஸ்டோ நம் மத்தியில் மீள்வருகை செய்திடும் சூழல் தானாய் அமைந்து போனது - "இளம் டெக்ஸ்" கதைத் தொடரானது அவரையும் தீண்டிச் சென்ற காரணத்தால் ! போன வருஷத்து தீபாவளி மலராய் வெளியான அந்த கலர் ஆல்பத்தில் மெபிஸ்டோவின் அறிமுகம் எவ்விதமிருந்தது என்பதை போச்செல்லி அவர்களின் கைவண்ணத்தில் பார்த்திருந்தோம் ! ஒரு சாதாரண மேடை மாயாஜாலக்காரனாய் மெபிஸ்டோ அறிமுகமான அந்த ஆல்பம் நம்மிடையே மாஸ் ஹிட் ! So இந்தத் தொங்குமீசை வில்லன் நமது ராடாருக்குள் மறுக்கா புகுந்தது இவ்விதமே ! And டெக்சின் ஆண்டு # 75-ன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாய், மெபிஸ்டோவுக்கு ஒரு fresh lease of life தந்திட போனெல்லி எடிட்டர்கள் தீர்மானித்திருக்க, சரமாரியாக டெக்ஸ் vs மெபிஸ்டோ மோதல்களுடனான கதைகள் களமிறங்கின ! அவற்றுள் "மீண்டு(ம்) மாயன்" சாகசமும் ஒன்று ! ரொம்ப ரொம்ப சமீபப் படைப்பு & more than anything else - டாப் கதாசிரியர் போசெல்லியின் கைவண்ணம் என்பதால், நடப்பாண்டில் அட்டவணைக்குள் இந்த ஆல்பத்தினை இணைத்திருந்தேன் ! 

And அந்தப் புள்ளியில் துவங்கியது தான் இது சார்ந்த விவாதங்கள் ! "ஆத்தீ....மிடிலே !!" என்று ஓரணியும்..."அட்றா சக்கை...அட்ரா சக்கை" என்று இன்னொரு அணியும் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொண்டதை ஆங்காங்கே காண இயன்றது ! Given a choice - நான் டெக்சின் ரெகுலர் கதைகளோடே  பயணிக்க விழைவேன் ; ஆனால் எந்தவொரு விஷயத்திலும் நான் 'வேணாம்...வேணாம்..' என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே அந்தச் சமாச்சாரம் மீது நண்பர்களில் சிலருக்கொரு கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதை பார்த்து வருகிறேன் !  And எனது தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளைக் கொண்டு உங்களின் வாசிப்புகளை ரொம்பவே கட்டுப்படுத்திடலாகாதே என்ற சிறு நெருடல் என்னுள் ! So சொல்லுங்களேன் புலவர்களே : 

*டெக்ஸ் கதைகளில் அவ்வப்போதாவது இந்த மாந்த்ரீக பார்ட்டி தலைகாட்டிட வேண்டிய அவசியம் என்ன ?

OR

*டெக்ஸ் கதைகள் இருக்கும் தெருப் பக்கமாய்க் கூட இந்த தொங்குமீசையனை நடமாட விடப்படாது - என்பதற்கான காரணங்கள் என்ன ?

காரமின்றி, சாரத்தோடு விவாதிப்போமா ப்ளீஸ் ? And வோட்டு போடுவதாயின் - இதோ லிங்க் : https://strawpoll.com/40Zmq5WE2Za

And இந்த வாரயிறுதிக்கான எனது இரண்டாவது கேள்வியானது நாம் நிறையவே பேசியுள்ளதொரு topic தான் ! ஆனால் ரசனைசார் விஷயங்களில் ஐந்தாண்டுகளுக்கு முன்பானதொரு கருத்தானது இன்றைக்கும் அதே நிறத்தோடும், அதே சார்போடும் காட்சி தர வேண்டுமென்ற கட்டாயங்கள் கிடையாதெனும் போது - ஒரு மறுவிவாதத்தில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! Moreso நாம் பயணித்து வரும் இந்த நாட்களில் இந்தத் தலைப்புக்கு முக்கியத்துவம் முன்னெப்போதையும் விடக் கூடுதலாயுள்ளதால் - இந்த விவாதம் அத்தியாவசியமானதுமே என்பேன் ! மேட்டர் இது தான் :

  • சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் -1
  • உயிரைத் தேடி 
  • கார்சனின் கடந்த காலம் 
  • யார் அந்த மாயாவி ?
  • நியூயார்க்கில் மாயாவி !
  • சூ..மந்திரகாளி !
  • வானவில்லுக்கு நிறமேது ?
  • The BIG BOYS ஸ்பெஷல் 

மேற்படி லிஸ்ட்டில் உள்ள நாயக / நாயகியர் ஒருவருக்கொருவர் பெரியதொரு தொடர்பில்லாதோராக இருப்பினும், ஒற்றை விஷயத்தில் இவர்கள் அனைவரும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து நிற்கின்றனர் ! And அது தான் - "வெளியாகிய மிகச் சொற்பமான அவகாசத்திலேயே விற்றுத் தீர்ந்த இதழ்ககளின் நாயகப் பெருமக்கள்" என்ற  அடையாளம் ! And இவை சகலமுமே மறுபதிப்புகள் என்பது கொசுறுத் தகவலும் ! 

***ஒரு லியனார்டோ தாத்தாவின் கார்ட்டூன் இதழும் சரி, நீலப் பொடியர்களின் ரவுசுகளும் சரி, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின்னேயும் கையிருப்பில் இருக்க, அதே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளான சுஸ்கி & விஸ்கி 'பச்சக்'கென்று விற்றுக் காலியாவதன் மாயம் தான் என்ன ? 

***உயிரைக் கொடுத்து உருவாக்கிய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களும், அர்ஸ் மேக்னாக்களும், "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்களும்" கையிருப்பில் கணிசமாய்க் கிடக்க, "உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ?

***Fantasy ஜானரில் தோர்கல் மிளிர, நாம் மங்கு மங்கென்று குட்டிக்கரணங்கள் அடிக்கும் அதே பொழுதினில், ஸ்பைடராரும், மாயாவிகாருவும் BIG BOYS ஸ்பெஷலில் ஜாலியாக ஆஜராகி அதகள வெற்றி காணும் ஜாலம் தான் what ?

One to one ஒப்பீட்டில், விற்றுத் தீர்ந்த கதைகள் - இன்றைய நடப்பு ஆல்பங்களை விடவும் பன்மடங்கு ஒசந்தவை என்றெல்லாம் சத்தியமாய்ச் சொல்லிட வாய்ப்பில்லை ! கதைக்கள நவீனங்களில், சித்திர முன்னேற்றங்களில், கலரிங் ரம்யங்களில் புதுயுகக் கதைகள் any day outscore the oldies !! ஆனாலும் இந்த பால்யத்துப் பார்ட்டீஸ் மீதான நமது மோகங்கள் மட்டுப்படும் அறிகுறிகளைக் காணோமே என்பதில் தான் ஆச்சர்யமே !! 

Oh yes - ஒரு பதிப்பாளனாய் நான் புகாரே வாசிக்கப் போவதில்லை ; கிட்டங்கிகளை நிரப்பும் முகாந்திரங்கள் தராத சகலத்தையும் ஆரத் தழுவிடவே செய்வேன் தான் ! And சக்கரங்களைச் சுழலச் செய்யும் புண்ணியவான்களுமே இவர்கள் தான் !  So இவை இன்னமும் தேவையா - தேவை இல்லையா ? நோஸ்டால்ஜியாவுக்குள் எத்தனை காலம் தான் திளைத்திருக்க இயலும் ? என்ற கேள்விகளெல்லாம் என்னிடமில்லை !! ரசனைசார் சமாச்சாரங்களில் each to his own என்பதை எப்போதோ நான் புரிந்து கொண்டு விட்டேன் ! And பழசை ரசிப்போரின் ரசனைகளில் பழுதுள்ளது என்றோ, புதுசின் கொடி பிடிப்போர் புதுயுகங்களின் பிள்ளைகள் என்றோ ஒரு நொடி கூட நான் கருதிடப்போவதில்லை ! என் கேள்வி ரொம்ப ரொம்ப சிம்பிளானது

"நோஸ்டால்ஜியா" என்ற ஒற்றை விஷயத்தின் வீரியம் அந்தப் பழம் நாயகர்களின் கதைகளுக்குள் இன்றைக்கும் ஈர்ப்போடு புகுந்து வாசிக்க உதவிடுகிறதா ? நீங்கள் ஆவலாய் கோரிப் பெற்றிடும் இந்த மறுபதிப்புகளையெல்லாம் மெய்யாலுமே வாசிக்கவும், அந்நாட்களைப் போலவே ரசிக்கவும் முடிகிறதா ? இது மாத்திரமே எனது வினா !

புரிகிறது தான் - "கார்சனின் கடந்த காலம்" ஒரு கலெக்டர்'ஸ் எடிஷனாய் தகதகக்கும் போது - அதனை ஒரு காமிக்ஸ் ஆர்வலராய் கைப்பற்றும் வேட்கை மேலோங்குகிறது ! "இரத்தப் படலம்" போலான மறுபதிப்புகள் ரொம்பவே புராதனம் கொண்ட படைப்புகள் அல்ல எனும் போது - அதனூடே எப்போது மறு சவாரி செய்தாலும் அலுக்காது போகலாம் தான் ! 

ஆனால் in general - "இயவரசி ஸ்பெஷல்" ; "இரட்டை வேட்டையர் ஸ்பெஷல்" ; "பாட்டில் பூதம்" ; "ஜான் மாஸ்டர் ஸ்பெஷல்" ; "அலி பாபா ஸ்பெஷல்" என்று பிரவாகமெடுக்கும் விண்ணப்பங்களின் பின்னணியில் வாசிப்பின் அவாக்களும் உள்ளன தானா ? என்பதே என்னை நெருடும் கேள்வி ! காசைக் கொடுத்து வாங்குகிறீர்கள் ; சிலாகிக்கிறீர்கள் - அத்தோடு என் பாடு ஓய்ந்து விடவேண்டும் தான் ; வாங்கியதை நீங்கள் பேரீச்சம்பழத்துக்குப் போட்டால் கூட கேள்வி கேட்கும் உரிமை நேக்கு லேது தான் ! But அகவைகள் கூடிப் போனாலும், இந்தப் பழமை மீதான மோகம் அட்டகாசமாய் தொடர்வதன் மாயம் என்னுள் எழுப்பிடும் curiosity தான், உங்கள் மௌனங்களைக் கரைக்க முயற்சிக்க நினைக்கின்றது ! 

Again - "இது மட்டம் - அது ஒஸ்தி" என்ற பஞ்சாயத்துக்களின்றி, மனதில் படுவதைப் பகிர்ந்திடுவோமே ப்ளீஸ் ? And again - இதோ வோட்டுக்கான லிங்க் :https://strawpoll.com/PKgl3A2OEnp

எனது கேள்வி # 3 - மேலுள்ள வினாவின் நீட்சியே ! In fact அதை முன்வைத்தால் - "பிள்ளையையும் கிள்ளிப்புட்டு , தொட்டிலையும் ஆட்டுறியே ப்ளடி ராஸ்கோல் !" என்று உங்களுக்குத் திட்டத் தோன்றும் ! But நாமெல்லாம் என்னிக்கி துடைப்பங்களைப் பார்த்துப் பின்வாங்கியிருக்கோம் ? சுத்தமான வீரர்களுக்கு மு.ச.வும் ; மூ.ச.வும் ஒன்று தானே ? 

விஷயம் இது தான் guys :

ரொம்ப நாள் கோரிக்கைகளுள் ஒன்று - அந்நாட்களில் ஜூனியர் லயனிலும், மினி-லயனிலும் வெளியான "அலி பாபா" கதைகளின் மறுபதிப்பு என்பதை நாமறிவோம் ! அவற்றின்  டிஜிட்டல் கோப்புகள் எங்குமே பத்திரப்படுத்தப்படவில்லை என்பதால் மறுபதிப்பு செய்திட வழியின்றியே இத்தனை காலமாய் இருந்து வந்தது ! ஆனால் அந்தக் குறை சமீபப் பொழுதுகளில் நிவர்த்தி  செய்யப்பட்டிருக்க,இன்று அலி பாபா வண்ணத்தில் மிளிர வாய்ப்புகளுண்டு ! ஆனால்...ஆனால்...இதன் உரிமைகளுக்கென படைப்பாளிகள் எதிர்பார்த்திடும் தொகையானது\ நாம் வாடிக்கையாய் தந்து வரும் ராயல்டிக்களை விடவும் கணிசமாய்க் கூடுதலாக இருப்பதால் ரிவர்ஸ் அடித்து விட்டோம் ! 48 பக்கங்கள் கொண்டதொரு ஆல்பமானது வழக்கம் போல லக்கி லுக் சைசில் வெளியாவதாக இருந்தால் அதன் விலையினை ரூ.230 சுமாருக்கு நிர்ணயிக்க வேண்டி வரும் போலுள்ளது ! இந்த விலைக்கு பொதுவாய் கடைகளில் விற்பதெல்லாம் கடினமே என்பதால் - this will need to be a முன்பதிவு இதழ் only ! இத்தனை பணத்துக்கு அது ஒர்த் தானா ? என்பதே இங்கு எனது கேள்வி # 3. இங்கே டிஜிட்டலில் பிரிண்ட் போட்டு "சேவை" செய்து வரும் அடியார்களின் விலைக்கு முன்பாய் ரூ.230 என்பதெல்லாம் ஒரு பெரிய மேட்டராகவே தென்படாது போகலாம் தான் ; ஆனால் அந்த உட்டாலக்கடிகளையெல்லாம் ஒரு அளவீடாகக் கொள்ளாது, அந்த விலைக்கு இந்த இதழ் சுகப்படுமா ? என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் ?  நீங்கள் ஓ.கே. எனும் பட்சத்திலும் இது நனவாகிட அவகாசமெடுக்கும் தான் ; ஆனால் இது பயணிக்க வேண்டிய பாதையா ? இல்லையா ? என்பதைத் தீர்மானிக்க வேண்டியோர் நீங்களே என்பதால் பந்து இப்போது உங்களின் தரப்பில் ! So சொல்லுங்களேன் folks !!


ரைட்டு....இந்த வாரக் கேள்விகளைக் கேட்டாச்சு ! போன வாரத்து கேள்விகளின் விடைகளை பார்க்கலாமா ? 

BOUNCER : ரொம்பவே டைட்டானதொரு விடை தந்துள்ளீர்கள் folks ! Phewwww !!

ஒல்லிப்பிச்சான் ஸ்டெர்ன் விஷயத்திலோ ஸ்பஷ்டமாய்த் தீர்ப்பளித்து விட்டீர்கள் - thank you !! 

Bye folks....see you around ! Have a great weekend !! And செப்டெம்பரின் அலசல்களும் தொடரட்டுமே - ப்ளீஸ் ? 

Thursday, September 07, 2023

செப்டெம்பரின் 4 !!

 நண்பர்களே,

வணக்கம். ஒரு வழியாய் நேற்றைக்கு கூரியர் டப்பிக்கள் இங்கிருந்து புறப்பட்டு விட்டன - சுக்காய்க் காய்ந்த ஹார்ட் கவர் புக்சின் பைண்டிங் சகிதம் ! So கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு பெட்டியாட்டம் தென்படும் ரிப் கிர்பி இதழினை தைரியமாய்ப் புரட்டலாம் !  கூடவே தோர்கல் ; நெவாடா & மிஸ்டர் நோ இடம் பிடித்திருப்பதால் - ரொம்பவே varied ஜானர்களில் வாசிப்பு இம்முறை(யும்) வெயிட்டிங் ! 

இங்கி -பிங்கி போட்டு எதை முதலில் வாசிப்பதென்று தேர்வு செய்தாலும் சரி, உங்களின் ரசனைகளுக்கேற்ப தேர்வு செய்தாலும் சரி - எனது பார்வையில் இம்மாத show stealer - நமது கண்ணாடிக்கார ஜென்டில்மேன் டிடெக்டிவின் டைஜஸ்ட் தான் ! தெள்ளத் தெளிவான கதைகள் ; சிம்பிளான கதை மாந்தர்கள் and ரொம்பவே நேசமான புன்னகையுடனான ரிப் கிர்பி 8 கதைகளில் ஜாலம் செய்திருக்க, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்க இது செம தேர்வாக இருக்கக்கூடும் ! And எட்டில் ஒரு குட்டிக்கதைக்கு நமது குடந்தை நண்பர் J பேனா பிடித்துள்ளார் ! அது எந்தக் கதையென்று spot செய்திட முடிகிறதாவென்று பாருங்களேன் !

இம்மாதத்தின் இன்னொரு black & white இதழான மிஸ்டர் நோ சாகசமும் செம நேர்கோடு & செம சுவாரஸ்யம் ! சிம்பிளான கதைக்கருவே என்றாலும் அந்த அமேசான் கானகப் பின்னணி சூப்பராக ரசிக்கச் செய்கிறது ! பர பர ஆக்ஷன் & நம்ம V காமிக்சின் வாடிக்கைப்பாடி செம crisp வாசிப்பும் இங்கு கியாரண்டி ! So வாரயிறுதி வரைக்கும் அதிக நேரம் தந்திட இயலா நண்பர்களுக்கு - இது செம apt choice ஆக இருக்கக் கூடும் !

And தோர்கல் !! கணிசமான மொத்துக்களை அட்டைப்படம் ஈட்டியிருப்பினும், உள்ளிருக்கும் 2 கதைகளும் காப்பாற்றி விடுமென்ற நம்பிக்கையுள்ளது ! க்ளாஸிக் கதைகள் என்பதால், இரண்டுக்குமே நமது கருணையானந்தம் அவர்களே பேனா பிடித்துள்ளார் ! தோர்கலின் பயணம் தொடர்ந்து செல்கிறது - கொஞ்சமாய் வளர்ந்த ஜோலனுடன் ! பின்னாட்களில் அந்தக் குட்டிப்பையனுக்குமே இத்தொடரில் முக்கிய பங்கிருக்கவுள்ளது என்பதை கதாசிரியர் லைட்டாக கோடிட்டுக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது !! பார்ப்போமே !

And இறுதியாய் புது வரவு நெவாடா ! வன்மேற்கினுள் மோட்டார் சைக்கிள் ஓட்டிப் போகும் நாயகர் ! மனதில் படுவதை பட்டென்று பேசும் மனுஷன் ! இவருக்குப் பேனா பிடிக்கும் போது  லைட்டாக 'டெட்வுட்  டிக்' எட்டிப் பார்த்தார் தான் ! புதியவரை எடை போடும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் ! 

Online ஆன்லைன் லிஸ்டிங்கும் போட்டாச்சு folks & இன்று கடைகளுக்கும் புக்ஸ் புறப்படுகின்றன ! So சந்தாவின் அங்கமாய் அல்லாத நண்பர்கள், ஏதேனுமொரு மார்க்கத்தில் புக்ஸை பெற்றுக் கொள்ளலாம் ! இதோ லிங்க் : https://lion-muthucomics.com/monthly-packs/1124-september-pack-2023.html

Happy shopping & Reading all !! 

Before I sign out, சின்னதொரு பகிரல் : சுகவீனத்தில் விழுவதில் அப்பாவுக்கு போட்டியாய் தற்போது அம்மா மருத்துவமனையில் இருக்க, இந்த வாரத்தின் பொழுதுகளில் இங்கே பிளாக்கில் ரொம்பவெல்லாம் எட்டிப்பார்க்கவே தீரவில்லை ! So 386 பின்னூட்டங்கள் என்ற முந்தைய பதிவுக்குள் நுழைந்திருக்க முடிந்திருக்கவில்லை ! அங்கு நீங்கள் பதிவிட்ட பின்னூட்டங்களில் ஏதேனும் கவனத்துக்குரியவை என்று எண்ணிடும்  பட்சங்களில், இங்கே copy - paste ப்ளீஸ் ! 

Bye all...see you around ! Take care !

Sunday, September 03, 2023

இன்னும் கொஞ்சம் பதில்ஸ் ப்ளீஸ் ?!

 நண்பர்களே,

வணக்கம். தங்கை பையனுக்கு திருமண நிச்சயம் ஒருபக்கம் ; செப்டெம்பர் இதழ்களின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னொரு பக்கம் - இங்கே எட்டிப் பார்க்கக் கூட இயலா சூழல் இவ்வாரம் முழுவதிலும் ! ஒரு வழியாய் பதிவுக்கென சனியிரவு ஆஜராகிடும் போது பார்த்தால் பின்னூட்ட எண்ணிக்கை "359" என்று நிற்கிறது ! "ஆகாகா...மூ.ச.படலம் வெயிட்டிங் போலும் ; இந்தப் பதிவை டைப்பிய பிற்பாடு போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்று" லேப்டாப்பை தட்ட ஆரம்பித்தால் Wi-fi சதி செய்கிறது !! எப்படியோ - தக்கி முக்கி ஒப்பேற்றியுள்ளேன் - அடஜஸ்டூ ப்ளீஸ் !  

First things first....புக்ஸ் சகலமும் பைண்டிங் முடிந்து சனி மாலையே தயாராகி விட்டன ; ஆனால் இங்கு கொட்டித் தீர்க்கும் மாலை மழைகளுக்குக்  கொஞ்சம் மருவாதி தர வேண்டிப் போயுள்ளது ! ரிப் கிர்பி ஸ்பெஷல் - ஹார்ட் கவர் பைண்டிங் புக் என்பதால், இந்த ஈர நேரத்தில் இன்னமும் காய்ந்த பாடில்லை ! So ஓரிரு நாட்கள் காய்ந்திட அவகாசம் தந்தான பிற்பாடே டெஸ்பாட்ச் இருந்திடும் folks ! ஏற்கனவே செய்த பிழையினை இன்னொருவாட்டி செய்து வாங்கிக்கட்டிக் கொள்ள முதுகு தயாரில்லை ; so அருள்கூர்ந்து நம்மாட்களை "இன்னும் அனுப்பலியா ???" என்ற கேள்வியோடு மூக்கில் குத்த வேணாமே - ப்ளீஸ் ? புக்ஸ் புறப்படும் வேளையினில் இங்கு நானே அறிவிப்பேன் ; thanks for your understanding guys !!

இதோ - செப்டெம்பரின் V காமிக்சின் பிரிவியூ - நெடுநாள் விளம்பரமாய் மாத்திரமே தொடர்ந்த மிஸ்டர் நோ சகிதம் ! 


மிஸ்டர் நோ !! 'ஜெரி டிரேக்' என்பது நிஜப் பெயர் ; ஆனால் கதை முழுக்கவே மனுஷனை மிஸ்டர் நோ என்றே விழிக்கின்றனர் ! 1975-ல் தற்போதைய போனெலி குழுமத் தலைவரின் தந்தையாரான செர்ஜியோ போனெலி அவர்களின் கைவண்ணத்தில் உருவான நாயகர் இவர் ; 31 ஆண்டுகளுக்குத் தொடர்ந்துள்ளார் - 379 இதழ்களுடன் ! And சமீபமாய் இன்னொரு 14 கதைகளும் வெளிவந்துள்ளன எனும் போது - கானகங்களில் உலவும் இந்த பிளேபாய் பைலட்டின் தொடரில் நானூறுக்குக் கொஞ்சம் குறைவான கதைகள் உள்ளன ! That is a huge number indeed ! 1950 என்ற காலகட்டம் ; அமேசான் கானகங்களும், தென்னமெரிக்க தேசங்களும் கதைகளின் பின்புலங்கள் ! காரணங்கள் மாறுபட்டாலும், வருகை தருவோரை அமேசானின் மேலே பறக்க இட்டுச் செல்லும் மனுஷன் ரகம் ரகமான இக்கட்டுகளில் சிக்குகிறார் and நேர்கோட்டுக் கதைகளாக இருப்பினும் ரசிக்கும் விதமாய் உள்ளன ! சமீப ஆண்டுகளில் இந்த நாயகர் அமெரிக்காவிலும் வெற்றி நாயகராய் தடம் பதித்து வருகிறார் - ஆங்கிலப் பதிப்புகளுடன் ! சிறுகச் சிறுக ஜெரி ட்ரேக் நம் மத்தியிலும் பாப்புலர் ஆகிடுவாரென்று நம்புவோமாக !  

And இதோ - ரிப் கிர்பி & நெவாடா இதழ்களின் உட்பக்க டிரெய்லர்களுமே :

REPRINT


முதல் பக்கம் - எந்தக் கதையின் மறுபதிப்பென்று யூகிக்க முடிகிறதா guys ?

And இதோ நெவாடா


லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பாணியினில் ஒவ்வொரு பக்கமும் அதிரச் செய்கிறது !!  

Moving on, 2024-க்கான அட்டவணையினில் "உள்ளே-வெளியே" ஆட்டம் ஜரூராய் அரங்கேறி வருகிறது ! சமீப காலமாய் அவ்வளவாய் சோபித்திருக்கா ரிப்போர்ட்டர் ஜானிக்கு, ஓராண்டு ஒய்வை வழங்கச் சொல்விடுவீர்களென்ற எதிர்பார்ப்பில் பாஸ்டர் நாயகருக்கு டிக் அடித்திருந்தேன் ; ஆனால் சோடாவை ஓரமாய்ப் போடா என்று நீங்கள் சொல்லியிருக்க, அட்டவணையில் பண்டமாற்று நடந்துள்ளது ! இதே பாணியில் இன்னும் ஓரிரு கேள்விகள் என்னிடம் உள்ளன guys - ரெகுலர் தடத்தில் இடம் தருவதா ? அல்லது ஆன்லைன் மேளா நாட்களின் on demand தடத்துக்கு மடைமாற்றம் செய்வதா ? என்று ! கேள்விகளை இங்கும் கேட்டுள்ளேன் ; ஆன்லைன் வோட்டிங் தளத்திலும் கேட்டுள்ளேன் ! வசதிப்படும் இடத்தினில் பதிலிடலாம் மக்கா ! 

1.ஒல்லி பிச்சான் கௌபாய் நமது லிஸ்டில் முதல் ஆளாய் இடம் பிடிப்பதை அறிவோம் ; but அந்த ஒல்லிப் பிச்சான் வெட்டியானுக்கு ஏற்ற இடம் எதுவென்பது தான் இந்த நொடியில் எனது குழப்பம் ! Given a choice - இவரை ரெகுலர் தடத்திலேயே புகுத்தி விடுவேன் தான் ; ஆனால் சந்தாவில் உள்ள நண்பர்கள் இது குறித்து என்ன எண்ணுகிறார்கள் ? கடைகளில் செலெக்ட் செய்து வாங்கும் நண்பர்கள் என்ன அபிப்பிராயப்படுகிறார்கள் ? என்றறிந்தால் தேவலாம் என்று பட்டது ! So சொல்லுங்களேன் - "ஸ்டெர்ன்" : ரெகுலர் தடத்துக்கானவரா ? அம்புட்டு ஒர்த் இல்லாதவரா ? 


2.அடுத்த கேள்வி பவுன்சர் சார்ந்தது ! நடப்பாண்டினில் இவரது ஆல்பத்தினைப் புகுத்த ஸ்லாட் இல்லை எனும் போது  2024 தான் இவருக்கான பொழுதாகிறது ! Again அதே கேள்வி தான் !! விரசம் இல்லாமல் நகற்ற முடியும் எனில், இந்த மனுஷனை ரெகுலர் சந்தாவினில் இணைப்பது ஓ.கே.வா ? அல்லது - நோ poison tests ; முன்பதிவுத் தடமே மதி ! என்பீர்களா ? நானூறு ரூபாய்க்கான தெறி  சாகசம் எனும் போது, அதற்கான பொருத்தமான இடமெது ? என்பதை நீங்களே சொல்லி விட்டால் நலம் ! So your thoughts ப்ளீஸ் ? 


இரு வினாக்களுக்குமான உங்களின் பதில்கள் 2024 அட்டவணையினைப் பூர்த்தி செய்திட பெரிதும் உதவும் என்பதால் - ப்ளீஸ் do share your thoughts ! 

Before I sign out - சில ஜாலி updates :

A.ஒரு ஒன்-ஷாட் கவ்பாய் கி.நா.கண்ணில் பட்டுள்ளது - ரொம்பவே ஜாலியானதொரு சித்திர பாணியில் ! And கலரிங்கிலும் அட்டகாசமாய் ஜாலம் செய்கிறது ! புடிச்சி போடுவோமுங்களா ?  

B.ஒரு கணிசமான ஏற்றுமதி ஆர்டர் + ஒரு மீடியமான ஏற்றுமதி ஆர்டர் என 2 export ஆர்டர்கள் கிட்டியுள்ளன - வெகு சமீபமாய் ! முதலாம் ஆர்டரில் கிட்டத்தட்ட நமது கையிருப்பில் பெரும்பான்மை titles புறப்பட்டுள்ளன ! கடல்கடந்த புது வாசகர்களைத் தேடிச் செல்லும் நமது நாயகர்களுக்கு good luck சொல்வோமா ? 

C.எதிர்பார்த்தபடியே THE BIG BOYS ஸ்பெஷல் இதழின் கையிருப்பு தரைதட்டி விட்டது ! அடுத்த சில நாட்களில் "காலி" என்ற போர்டை மாட்டிப்புடலாம் ! க்ளாஸிக் வாசகாஸ் - அசத்துறீங்கோ !!! புது இதழ்களின் பக்கமாகவும் உங்களின் கடைக்கண் பார்வைகளை சித்தே ஓட விடலாமே - ப்ளீஸ் ?

D.'தல' டெக்சின் 75-வது பிறந்தநாளுக்கென போனெலியில் உருவாக்கியிருப்பது ஒரு 132 பக்க கலர் இதழ் தான் ; but அதன் கோப்புகளை வரவழைத்துப் பார்த்தால் தெறிக்க விடுகிறது ! அனல் பறக்கும் ஆக்ஷன் ; டெக்சின் மனைவி லலித் வருகை - என்று மின்னலாய் ஓட்டமெடுக்கிறது கதை ! சடுதியில் இங்கே தூக்கி வந்திடலாமென்று எண்ணுகிறேன் !!  

E.சில புது ஆல்பங்கள் சுடச் சுட உருவாகி வருகின்றன ! 



Bye all...see you around !! 
"தல" பிறந்தநாள் மலருக்கென இங்கே நாம் திட்டமிட்டிருக்கும் 700 பக்கங்களுக்குள் உருண்டு புரளக் கிளம்புகிறேன் ! See you around ! Have a great Sunday !