Saturday, June 24, 2023

மஞ்சள் மாநகருக்கு வாரீகளா ?

 நண்பர்களே,

வணக்கம். செயற்கை நுண்ணறிவு (AI) எக்கச்சக்கத் துறைகளில் வூடு கட்டி அடித்துக் கொண்டிருக்க, கூடிய சீக்கிரமே வலைப்பதிவுகளையும் அதுவே எழுதித் தந்து விட்டால், நான்பாட்டுக்கு என்ன சப்ஜெக்ட் என்பதை மாத்திரம் சொல்லி விட்டு, ஜாலியாய் காலாட்டிக் கொண்டே உங்களோடு பின்னூட்டங்களில் ஐக்கியமாகி விடுவேன் ! அப்படியொரு நாள் புலரும் வரைக்கும், சனிக்கிழமைதோறும் லேப்டாப்பை லொட்டு லொட்டென்று தட்டும் நடைமுறை தொடர்ந்திடும் - இதோ சமீபத்  தாமதங்களை ஈடு செய்திட, ஆபீஸோடு அடித்து வரும் குட்டிக் கரணங்களின் மத்தியில் இங்கே அடியேன் ஆஜராகியுள்ள பாணியினில்! 

ஜூலை இதழ்கள் 6-ம் தேதிக்கு டெஸ்பாட்ச் செய்வதாய் வாக்குத் தந்துள்ளேன் என்பதால், pulling out all stops to get things done !! அதிலும் இம்மாதத்து "சம்மர் ஸ்பெஷல்" பைண்டிங்கில் சொதப்பியுள்ளதை ஈடு செய்திடும் விதமாய், "லயன்'s லக்கி ஆண்டுமலரை" upgrade செய்திடத் தீர்மானித்துள்ளோம் ! போன ஆண்டினைப் போலவே ரெகுலர் பைண்டிங் இதழாய் அறிவிக்கப்பட்ட இந்த இதழினை - அழகான ; உருப்படியான ஹார்ட்கவர் இதழாய் ஜூலையில் ஒப்படைக்கவுள்ளோம் ! அவசரகதியில் களமிறங்கி இந்த இதழிலும் கோட்டை விடலாகாது என்பதால், மின்னலாய் பணியாற்றி அச்சுப் பணிகளை முடித்து விட்டோம் ! So சாவகாசமாய் பைண்ட் செய்து ; புக்ஸ் முழுசாய் காய்ந்திட இம்முறை கணிசமான அவகாசம் இருக்கும் ! And வன்மேற்கின் அத்தியாயங்கள் # 2 & 3 ஜூலையில் வண்ண இதழ்களாய்க் காத்திருப்பதால், அங்கேயும் we are on target ! கடந்த 2 வாரங்களாக proof reading பணிகளில் நண்பர்கள் உதவி வருவதால், தெற்கேயும், வடக்கேயுமாய் பிரிண்ட்அவுட்கள் பயணித்து வருகின்றன - ஒவ்வொரு கதையினையுமே குறைந்த பட்சமாய் இருவராச்சும் சரி பார்த்திட வேண்டி ! ஆனால்...ஆனால்...அச்சில் எழும் எழுத்துப் பிழைகளை "printer's devils" என்று ஏன் அழைக்கிறார்கள் என்பதையுமே பார்க்க முடிகிறது - becos பிழைகளானவை அனைவருக்குமே இருட்டுக் கடை அல்வாவை சரளமாய் தந்து கொண்டிருப்பத்தைக் காண முடிகிறது ! Anyways - இறுதியாய் நானும் ஒருவாட்டி இந்த எழுத்துப்பிழைச் சைத்தான்களோடு குஸ்தி போட நேரம் தந்தும் வருகிறேன் ; so முன்னிருந்த அளவுக்கு நெருடல்கள் இராதென்று நம்பலாம் ! Fingers crossed & thanks our proof readers !! ஆகஸ்ட்டில் உங்கள் உழைப்புகளின் பலன் தெரியாது போகாது !

இம்மாதத்தின் வாசிப்புக் களம் பக்கமாய் கவனத்தினைத் திருப்பினால் - எனக்குத் தென்படும் முதல் சமாச்சாரம், 'பொம்ம புக்' களின் மத்தியினில் உள்ள "மலையும்..மடுவும்" மாதிரியான வேறுபாடு தான் ! இரவுக் கழுகாரும், இருள்வனத்து மாயாத்மாவும் படைத்திருக்கும் விருந்துகள் - முருகன் இட்லி கடை மெனுவினைப் போல சுலபமான ஒன்றென்றால், "சம்மர் ஸ்பெஷல்" பரிமாறி இருப்பதோ - சிம்மக்கல் கோணார் கடையின் மெனுவிற்கு நிகரான heavyweight ! 

வாசிப்புகளை நீங்கள் எந்த இதழிலிருந்து துவங்கிடுவீர்கள் என்பதை உங்களுக்கு சாத்தியப்படும் அவகாசங்களே நிர்ணயம் செய்திடும் என்பதால் அது பற்றிக் கேட்கப் போவதில்லை ! But எப்போதும் போலவே V காமிக்சில் துவங்கினால், நமது கிரிக்கெட் டீமின் டாப் ஆர்டர் நண்டு பிடிக்க முனைந்து விட்டு, அவுட் ஆகி வாபஸாகும் நேரமே இந்த இதழினை வாசித்து முடிக்க உங்களுக்குத் தேவைப்படக்கூடும் ! ஸாகோர் - இந்த தபா முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரில் என்பதால், அந்தக் கல்கதாயுதம் மண்டையைப் பிளக்கும் பிரேம்கள் கணிசம் ! எப்போதும் போலவே புது யுக ஓவியர்கள் சித்திர தரத்தில் பின்னியெடுத்திருக்க, அந்தச் சித்திர ரம்யத்தை ரசிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால் தப்பில்லை என்று தோன்றுகிறது ! காத்திருக்கும் ஸாகோரின் அடுத்த ஆல்பத்துக்குப் பின்பாய் கொஞ்சம் நீளம் ஜாஸ்தியான கதைகளோடு இந்த ஜம்பிங் நாயகரை களம் காணச் செய்ய எண்ணியுள்ளோம் ! So போனெலியின் டாப் நாயகர்களுள் ஒருவரான இந்தச் சிவப்புச் சட்டைக்காரரின் அடித்து ஆடும் ஆட்டங்களை வரும் மாதங்களில் / ஆண்டுகளில் பார்த்திடவுள்ளோம் !

"கரையெல்லாம் குருதி" !! "சித்திரக்கதை வித்தைகளின் அத்தனை பரிமாணங்களும் எங்களுக்கு(ம்) அத்துப்படி" எனும் போனெலியின் statement ஆகவே இந்த இதழை நான் பார்க்கிறேன் ! "அது என்ன பிரான்கோ-பெல்ஜிய பாணி ? எங்கள் கதாசிரியர்களுக்கும் 44 பக்கங்களுக்குள் கதை சொல்லும் சூட்சமம் தெரியும் ; எங்கள் ஓவியர்களுக்கும் கலரில், பிரெஞ்சு ஆல்பங்களின் ஸ்டைலில் சித்திரங்கள் தீட்டத் தெரியும் ; எங்களது கலரிங் ஆர்டிஸ்ட்களும் உலகத் தரங்களே !!" என்று பறைசாற்றும் ஒரு தனித்தடத்தில் டெக்ஸை இறக்கி விட, அவர் பின்னியெடுக்கிறார் ! தெனாவட்டுப் பண்ணையார் ; சுபாவமான அவரது மகள் ; ஏழைத் தாயின் உத்தம புத்திரன் ; உள்ளூர் புரட்சி - என்று ஜாலியாய் நம்மூரின் கோலிவுட் பாணியில் நகரும் கதை என்றாலும், இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் entry கொடுக்கும் போது, கதையின் canvas வசீகரம் பெற்று விடுகிறது !! செம breezy read என்பதோடு, பின்னணியில் இக்கட எனக்கு வேலை ரொம்பவே குறைவு என்பதால் இந்தத் தடத்தினில் நிறைய கதைகள் இருந்தால் சூப்பராக இருக்குமே ? என்ற ஆசை அலையடிக்கிறது ! அந்தோ - "இது ஊறுகாயாய் மாத்திரமே இருந்திட வேண்டிய ஐட்டம் தம்பி !!" என்று போனெல்லி தீர்மானித்துள்ளதால், விரல் விட்டு எண்ணி விடும் அளவிலான கதைகள் மட்டுமே உள்ளன ! Maybe அவற்றை இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கண்ணில் காட்டலாமோ ?

Finally - ஆல்பா...ரூபின்..டேங்கோ..சிக் பில் கூட்டணியிலான சம்மர் ஸ்பெஷல் !! சிக் பில்லின் காமெடி தோரணம் எப்போதும் போலவே வழுக்கிக் கொண்டு ஓடி விடும் என்பதில் ஐயங்களில்லை ! And லோன்ஸ்டார் டேங்கோவுமே சீரான நேர்கோட்டுக் கதை என்பதால் அந்த சமுத்திரத்தையும், பனாமாவின் அழகையும் ரசித்தபடிக்கே 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸை கதையினூடே ஒட்டி விடலாம் தான் ! அப்பாலிக்கா காத்துள்ள ரூபின் அம்மணியும், ஆல்பா அண்ணாத்தையும் தான் தத்தம் பாணிகளில் உங்கள் நேரங்களைக் கணிசமாய்க் கோரிட உள்ளனர் ! இரு கதைகளுக்குமே இன்னும் கொஞ்சம் பக்க எண்ணிக்கையினை கூட்டித் தந்திருந்தால், அரக்கப் பரக்கக் கதைகளை நிறைவு செய்யத் தேவை எழுந்திராது தான் ! But கடைசி 2 பக்கங்களில் தான் மொத்த முடிச்சுகளையும் அவிழ்க்க சுகப்படுமென்று கதாசிரியர் Mythic தீர்மானித்திடும் போது, பொறுமையாய் அந்தப் பக்கங்களை  உள்வாங்கிக்கொள்ள நேரம் தருவதை மட்டுமே நாம் செய்திட இயலும் ! And முதல் வாசிப்பில் "புரிஞ்சா மெரியும் கீதுப்பா...பிரியாத மெரியும் கீதுப்பா...!!" என்ற உணர்வுகள் இங்கே தலைதூக்கினால் ஆச்சர்யமே கொள்ள மாட்டேன் ! So சொல்லுங்களேன் ப்ளீஸ் - முதல் வாசிப்பிலேயே ஜெயமா உங்களுக்கு ? என்று ?!!

Moving on, ஒண்ணரை மாத தொலைவினில் காத்துள்ள ஈரோட்டு புத்தக விழா சந்திப்பின் ஏற்பாடுகள் பொருட்டு உங்களுக்கு ஒரு கேள்வி folks ! வழக்கமாய் நாம் சந்திக்கும் அந்த Le Jardin ஹோட்டலானது முழுசாய் மராமத்துக்காக பூட்டப்பட்டுள்ளதால் வேறொரு இடம் தேடிட வேண்டியுள்ளது ! ஈரோட்டுக்கு AUGUST 5 தேதிக்கு ஒரு எட்டு வந்து போக உங்களில் எவ்வளவு பேருக்குத் தோதுப்படும் என்பதை உத்தேசமாய் கணக்கிட முடிந்தால் அதற்கேற்ப ஹால் பிடிக்க முயற்சிக்கலாம் ! So இதோ உள்ள இந்த லிங்க்கில் போய் உங்களின் பதில்களை பதிவிடலாமே - ப்ளீஸ்  : https://strawpoll.com/GeZAOwWAEnV

புறப்படும் முன்பாய் - இதோ ஒரு sneak preview !! 


நிறைய திருத்தங்கள்..மாற்றங்கள் கண்டுள்ள அட்டைப்படத்தின் முதல் ஸ்கெட்ச் மாத்திரமே இது !! முடிந்திருக்கும் டிசைன் செம அழகாய் வந்துள்ளதாக எனக்குப்பட்டது !! 

Bye all...see you around ! ஜூலை பணிகளை பூர்த்தி செய்ய நான் கிளம்புகிறேன் ; in the meantime நடப்பு இதழ்களின் அலசல்களை நீங்கள் ஆரம்பிக்கலாமே - ப்ளீஸ் ? Have a great weekend !

Saturday, June 17, 2023

இன்னொரு சனியிரவு !!

 நண்பர்களே,

வணக்கம். இந்தப் பதினொன்று plus ஆண்டுகளில், இங்கே பதிவுப் பக்கத்தில் ரணகள WWF நடந்து கொண்டிருந்த தருணங்களில் கூட, தலைகாட்ட நான் தயங்கியதில்லை ! ஆனால் முதன்முறையாக ஒரு இமாலயத் தாமதம் நிகழ்ந்துள்ள இந்த நொடியில் உள்ளுக்குள் ஓராயிரம் உறுத்தல்கள் ! காரண காரியங்கள் பற்றிய கதைக்குள் புகுவதற்கு முன்பாய் தகவல் சொல்லிவிடுகிறேனே - "சம்மர் ஸ்பெஷல்" hardcover புக் என்பதால் பைண்டிங்கில் சற்றே காய்ந்திட வேண்டியுள்ளது ! So நாளை (திங்கள்) or in the worst case செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடும் ! கொஞ்சமே கொஞ்சமாய் இந்த ஒற்றை மாதம் மட்டும் பொறுத்துக் கொள்ளக் கோருகிறேன் folks ; ஜூலை இதழ்கள் டாணென்று ஜூலை 6-க்கு டெஸ்பாட்ச் கண்டிடும் & ஆகஸ்டிலிருந்து மறுபடியும் முதல் தேதிகளுடனான உறவினைப் புதுப்பித்திருப்போம் ! ஓராயிரம் apologies all !

தாமதத்தின் நதிமூலம் ஆன்லைன் மேளாவின் 10 எக்ஸ்டரா புக்ஸ் எடுத்துக் கொண்ட நேரம் என்று தோன்றிடலாம் தான் ; ஆனால் நிஜம் அதுவல்ல ! In fact அந்தப் பத்தை சுலபமாய் ஊதித் தள்ளியிருந்தோம் தான் ! தாமதத்தின் மெய்யான துவக்கப்புள்ளி டின்டின் சார்ந்த பணிகளே ! ஒரு சர்வதேச ஜாம்பவானை ஓராயிரம் இடர்களுக்கு இடையே தமிழுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், அவருக்கான மொழிபெயர்ப்பினில் எவ்வித சமரசங்களும் இருந்திடக்கூடாதே என்ற ஆர்வமானது கிட்டத்தட்ட தலைக்குள் ஒரு obsession ஆகவே உருமாறியிருந்தது ! ஏற்கனவே இது குறித்தான குட்டிக்கரணங்களை முந்தைய பதிவினில் விவரித்திருந்தேன் தான் ; but படைப்பாளிகளின் பரிசீலனைக் குழுவானது நமது ஆக்கத்தினை கையில் எடுக்க கொஞ்சம் அவகாசமாகிடும் என்று அதற்குப் பின்பாகத் தெரிய வந்தது ! So கிடைத்திருந்த கூடுதல் அவகாசத்தினில் ஸ்கிரிப்டை  இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டிக் கொள்ளலாமே ?! என்று தோன்றிட, மறுபடியும் அதனுள் மூழ்கிப் போயிருந்தேன் ! So காரணம் # 1 அதுவே ! 

காரணம் # 2 - "சம்மர் ஸ்பெஷல்" ஆல்பங்களுள் எனக்கு காத்திருந்த பணியினை நான் குறைத்து மதிப்பீடு செய்து விட்டிருந்தேன் என்பதே ! "ரொம்பவே அவசரம்" என்றால் ஒரு 44 பக்க பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பத்தை ஒன்றரை நாட்களில் தட்டித் தூக்கி விட முடியும் தான் ! இதோ - ஆண்டுமலருக்கான லக்கி லூக் சாகஸத்துக்கு சரியாக இரண்டே தினங்களே அவசியப்பட்டன ! அதே மெத்தனத்தில் தான் டின்டினுக்குள் கூடுதலாய் நேரத்தை செலவிட்டு விட்டேன் போலும் !  And சம்மர் ஸ்பெஷலின் பணிகளைக் கையிலெடுக்கும் வேளையில் தான் புரிந்தது - இங்குள்ள நாலு நாயக / நாயகியருமே வெவ்வேறு விதங்களில் சக்கையாய் பிழிந்தெடுக்கும் ஆற்றலாளர்கள் என்பது ! So அந்தத் தப்புக் கணக்கே சிக்கலை பெரிதாக்கி வைத்தது ! அப்புறமாய் அச்சுக்கு அடித்துப் பிடித்துப் போனால் அங்கே 2 நாட்களுக்கு மிஷின் break down ! பல்லைக்கடித்துக் கொண்டு, மெஷினில் பழுநீங்கிய பிற்பாடு பிரின்டிங் முடித்து பைண்டிங்குக்கு ஓடினால், அங்கே செம ரஷ் ! பள்ளிகள் திறக்கும் தருணம் என்பதால், பாடநூல் ; நோட்ஸ் ; கைடு ; ஸ்கூல் டயரி என்று வரிசை கட்டி வேலைகள் குவிந்து கிடக்கின்றன & அந்தந்த ஊர்ப் பள்ளிகளிலிருந்து யாரேனும் ஒரு பிரதிநிதியை பைண்டிங்கில் தேவுடு காக்கச் செய்துள்ளனர் ! மிகச் சரியாக இந்த வேளையில் நமக்கோ hardcover புக் - which means loads of binding work !! பைண்டிங்கில் அவரையும் கோபித்துக் கொள்ள வழியில்லை ; அவரது பிழைப்பையும் பார்த்தாக வேண்டும் தானே ? So என்னை நானே ஜோட்டாவால் அடித்துக் கொள்வதைத் தாண்டி வேறு எதுவும் செய்திட மார்க்கமிருக்கவில்லை ! இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், நாளைக்கும் வேலை வைத்து, திங்களின் டெஸ்பாட்ச்சுக்கு இயன்ற மட்டிலும் மூன்று இதழ்களையும் தந்திட பைண்டிங் நண்பர் வாக்குத் தந்துள்ளார் ! So fingers crossed !!

இந்தத் தாமதமும் சரி, பணிகளில் போட நேர்ந்த மொக்கைகளும் சரி, ஒரு விதத்தில் Surf Exel போல நல்லதுக்கே என்றும் தோன்றுகின்றது ! நானே அறியாமல் என்னுள் ஒருவித சோம்பல் குடியேறியிருந்துள்ளது இப்போது புரிகிறது ! டின்டின் போலான ஒரு மாஸ் நாயகரின் சவால் என்றவுடன் அகல விரிந்த அண்டா கண்கள், நார்மலான பணிகளுக்கு அதே போலான ஆர்வம் கொண்டிருக்கவில்லை தான் ! So இப்போது நிகழ்ந்துள்ள இந்தத் தாமதப் படலம் அந்த அரூப சிலந்திவலைகளை போட்டுத் தள்ளியுள்ளது அப்பட்டமாய்ப் புரிகிறது ! இங்கே இன்னொரு சமாச்சாரமுமே உள்ளது ! இந்தப் பதினொன்றரை ஆண்டுகளில் நம்மவர்கள் உங்களிடம் எதெதெற்கோ சாத்து வாங்கியிருப்பர் தான் ; ஆனால் "புக்ஸ் லேட்" என்று யாரிடமும் குட்டு வாங்கியதாய் எனக்கு நினைவில்லை ! ஆனால் இந்த வாரத்தின் முழுமையிலும் அவர்கள் ஒவ்வொரு போனுக்கும் நெளிவதைப் பார்த்த போது ரொம்பவே சங்கடமாகிப் போனது ! 


So ஜூன் இதழ்களை முடித்த மறுநொடியே ஜூலை இதழ்களின் பணிகளை பிசாசாய் துவக்கினோம் & bingo - வரும் வாரத்தில் அவை நான்குமே அச்சுக்கு செல்லவுள்ளன ! And அதே வேகத்தில் ஆகஸ்ட் இதழ்களையும் போட்டுத் தாக்கி விட்டால், we would be back on track ; ஆகஸ்ட் இதழ்களை ஆராமாய் முதல் தேதிக்கு அனுப்பிட சாத்தியப்படும் ! 

And oh yes, கணிசமான நண்பர்கள் proof reading செய்திட முன்வந்திருப்பதால், "ஈரோடு ஸ்பெஷல்" இதழ்கள் தனி ஒரு தடத்தில் தடதடத்து வருகின்றன ! இங்கே எனக்கொரு சன்னமான சந்தோஷமும் ; சங்கடமுமே ! சந்தோஷத்தின் காரணத்தைக் கேட்டால், "அட லூசுப் பக்கி !! இதுக்கெல்லாமா சந்தோஷப்படுவாங்க ?" என்று உங்களுக்குத் தோன்றக்கூடும் தான் ! But அதுக்காண்டிலாம் இந்த மொக்கை போட்ட வாரத்தினில் யாம் லைட்டாக பல்லிளிக்கக் கிடைத்த காரணத்தை சொல்லாது இருக்க முடியுமா - என்ன ? ஹி..ஹி...வேறொன்றுமில்லை guys ...மொத்தம் 6 நண்பர்களுக்கு பிழை திருத்தம் செய்திட பக்கங்களை அனுப்பியிருந்தோம். ஐவர் முடித்து அனுப்பிவிட்டுள்ளனர் & ஒருத்தர் பாக்கியின்றி அத்தனை பேருமே ஆங்காங்கே கோட்டை விட்டுள்ளனர் தான் ! ஒற்றுப் பிழைகள் மிகக் கணிசம் ! So இந்த ஒற்றை விஷயத்தில் நாம் சொதப்பிடும் பாணிகள் நமக்கே நமக்காய் பிரத்தியேகமானவை அல்ல போலும் ; நண்பர்களும் நமக்குத் துணைக்கு இருக்கிறார்கள் தான் என்ற போது ரணகளத்திலும் பல்லைக்காட்டாது இருக்க இயலவில்லை ! Sorry folks, but I understand this is not easy at all !! ஒரு நாவலையோ, கட்டுரையையோ proofread செய்வதற்கும் நமது பாணியிலான படைப்புகளை proof read செய்வதற்குமிடையே நிரம்ப வேற்றுமைகள் உண்டு தான் ! ஒரு பக்கம் வரிசை கட்டும் படங்கள் கவனத்தைக் கோர, இன்னொரு பக்கம் ஒரே கட்டத்துக்குள் மூணு பேர் தம் கட்டி டயலாக் பேசுவது திணறடிக்க, பிறிதொரு பக்கமோ யார் பேசும் பலூன் யாருக்கு நேராய் உள்ளதென்ற யோசனைகளும் நம்மை அழுத்துவதை உணர முடியும் ! So நண்பர்கள் பார்த்துள்ள முதல் round பிழைகளைக் களைந்து, fresh பிரிண்டவுட் எடுத்து அடுத்த ரவுண்ட் proofread செய்திட அடுத்த batch நண்பர்களுக்கு அனுப்பிடவுள்ளோம் ! ரெண்டுவாட்டி பார்த்தான பின்னே எனக்கு மேலோட்டமான வேலைகளைத் தாண்டி வேறேதும் இராதென்ற நம்பிக்கையுள்ளது ! So ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள் ஜூலை கடைசிக்குள்ளாகவே ரெடியாகிக் காத்திருக்கும் என்பது உறுதி !    

ஈரோடுக்கென நாங்கள் தயாராகி வருவது ஒரு விதமெனில், நம் மத்தியிலுள்ள "விளையாட்டுப் பிள்ளைகள்" வேறொரு விதத்தினில் தயாராகி வருகின்றனர் !! IPL ; உலகக்கோப்பைக்கான finals ; இப்போது Ashes என்று நெடுக முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் அரங்கேறி வருவதன் தாக்கமோ என்னவோ, "இம்புட்டு நாளா கோழி கடை வாசலிலே நின்னிருக்க நான் கோலி ஆக மாட்டேனா ? நேக்கும் தொப்பை கீது..ரோஹித்துக்கும் தொப்பை கீது...நாங்களும் அடிப்போம்லே ?"  என்று வீறு கொண்டு பொங்கி கிரிக்கெட் மேளா ஒன்றிற்குத் தயாராகி வருகின்றனர் ! "காமிக்ஸ் & கிரிக்கெட் திருவிழா 2023" என்ற பெயரில் 4 அணிகளாய், ஆக்ரோஷமாய், ஆவேசமாய், நம்ம சிங்கங்கள் ஈரோட்டில் ஜூலை 30-க்கு களமிறங்குகின்றன ! Ashes தொடரை அன்னிக்கி ஒரு நாளைக்கு நிறுத்தி வைச்சுப்புட்டு, நம்ம டோர்னமெண்ட்டுக்கு காமெண்டரி செய்திடவும், Livestream பண்ணிடவும் Star Sports தயாராகி வருவதாய் நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல் !        

மோதவிருக்கும் தங்கங்கள் 4 அணிகளில் தெறிக்க விடவுள்ளனர் !! பாருங்களேன் : 


  





Jokes apart, அட்டகாசமான திட்டமிடல், அசத்தலான லோகோக்கள் and அனைத்துக்கும் மேலாய் நமது காமிக்ஸ் மீது கூடுதலாய் கவனம் பாய்ந்திட வேண்டுமென்ற அவா இம்முயற்சியின் பின்னிருப்பது கண்கூடாய்த் தெரிகிறது ! இந்த லோகோக்களை இத்தாலிக்கும், பிரான்சுக்கும் அனுப்பி நண்பர்களின் இந்த முயற்சி பற்றித் தகவல் சொன்ன போது அவர்களுக்கும் செம சந்தோஷம் !! "லோகோஸ் அட்டகாசம் !! And போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள் ? என்பதை மறக்காம சொல்லுபா !" என்று பதில் போட்டிருந்தனர் ! முதன்முறையாக நண்பர்களின் இந்த initiative வெற்றி காண நாம் இயன்ற ஒத்தாசைகளைச் செய்திடுவோமா folks ? வெற்றி காணும் அணிக்கான கோப்பையினை நம்ம லயனார் பார்த்துக் கொள்வார் ! ஆகஸ்ட் 5-ம் தேதியிலான நமது சந்திப்பின் போது வெற்றி கண்ட டீமுக்கு கோப்பையினை வழங்கிடலாமா ?

Bye all...see you around ! Have a fun weekend !

And இதோ - இது வரைக்கும் கண்ணில் காட்டியிருக்காத இம்மாதத்தின் இதர இதழ்களின் preview :

செமத்தியான yet another கோலிவுட் பாணியில் தல செய்யும் ரகளை இந்த 46 பக்க சாகசம் !! பிரான்க்கோ-பெல்ஜிய பாணிச் சித்திரங்கள் என்பதால் லக்கி லூக் சைசில் வருகிறது !! Don't miss it !!

And இதோ நம்ம V காமிக்சில் ஜம்பிங் நாயகர் !! ஆக்ஷன் த்ரில்லர் all the way !!






Saturday, June 10, 2023

சம்மரே ஸ்பெஷல் !

 நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு அட்டவணையும் ரெடியாகிடும் போது, நீங்கள் அதனைப் பார்த்திடுவது ஒரு பாணியிலென்றால், அதையே நான் பார்த்திடுவது முற்றிலும் வேறொரு கோணத்திலிருக்கும் ! "இதிலே ரெம்போ சுலபமான பணியா எது இருக்கப் போகுது ? எது உறுதியான ஹிட்டடிக்கப் போகும் புக் ? எது கணிசமான சர்ச்சையினை உண்டாக்கப் போகும் புக் ? எது நம்ம குறுக்கை கழற்றப் போகும் புக் ?" என்ற ரீதியினில் ஆராய முனைவேன் ! நாளாசரியாய், கி.ந. தடமானது சுருங்கிப் போன பிற்பாடு, சர்ச்சைக் களங்களும் குறைந்து விட்டன ; so இப்போதெல்லாம் அவற்றை எண்ணி பெருசாய் மொக்கை போடும் அவசியங்களும் இருப்பதில்லை ! Therefore இப்போதெல்லாம் புருவங்களை சுருங்கச் செய்வது - "நடப்பாண்டில் எந்த ஆல்பத்தில் வேலை நொங்கை எடுக்கக் காத்துள்ளதோ ?" என்ற கேள்வி மாத்திரமே ! 

ஒவ்வொரு ஆண்டும் திட்டமிடும் போதெல்லாம், "சொந்த காசிலே சூனியம் வைச்சுக்காம, சுலபமா பிளான் பண்ணனும்" என்ற மகாசிந்தனை எழும் தான் ; ஆனால் அட்டவணைக்குள் பணியாற்றப் புகுந்திடும் போது, "அத்தாச்சிக்கு இடமில்லைன்னு சொல்லப்படாது ; இங்கே நொழைச்சிடுவோம் ! அப்புச்சிக்கு ரெகுலர்ல சீட் இல்லே ; அவரையும் இந்த பொந்திலே புகுத்திடுவோம் !" என்ற கதையாய் சிக்கலான பார்ட்டிக்களையும் எங்கெங்கேயாச்சும் இணைத்து விடுவது வழக்கம் ! And கேட்லாக் பிரிண்ட் ஆகும் போதே தெரியும் - இன்ன இன்ன இதழ்கள் வெளியாகிடவுள்ள மாதங்களிலெல்லாம் seven and a half வெயிட்டிங் என்று ! 

இந்த 7 + 1/2 சிரமங்களிலேயே இரண்டு விதங்கள் உண்டு ! 

ஒன்று - எக்கச்சக்கப் பக்கங்கள் கொண்ட ஸ்பெஷல் இதழ்கள் - இதோ காத்துள்ள 'தல' டெக்சின் THE SUPREMO ஸ்பெஷல் போல ! வண்டி வண்டியாய் முடித்துத் தள்ளினாலும், அங்கே மேற்கொண்டும் மேற்கொண்டும் வேலைகள் துளிர்விட்டுக் கொண்டே இருப்பதுண்டு ! ஆனால் இங்கொரு flip side-ம் உண்டு தான் - நேர்கோட்டுக் கதைகளே எனும் போது பிட்டத்துக்கு பசை போட்டு பணியாற்ற ஆரம்பித்தால், கரை சேர்ந்து விடலாம் தான் ! 

சிரமத்தின் விதம் # 2 தான் நாக்காரை மெய்யாலும் தொங்கப் பண்ணும் ரகம் ! இங்கே கதைகளே செம அடர்த்தியாய் இருப்பதுண்டு ! முதல் வாசிப்பில் முழுசையும் புரிஞ்ச பிழைப்பே இருக்காது ; 'காதல்' பரத்தையும், 'சேது' விக்ரமையும் ஒன்றாய் புடிச்ச மாதிரி காட்சி தருவோம் ! And கூகுளாண்டவர் ஆசிகளின்றி உள்ளுக்குள் பயணம் பண்ணினால், பூசணிக்காய் சைஸ்களுக்கு செமத்தியாய் பல்புகள் சல்லிசாய் வாங்கிடலாம் ! And இவற்றுக்குள் பேனாவோடு பயணிப்பதென்பது, வெறுங்காலோடு கோடைகாலத்துக் காவிரிப் படுகையில் நடப்பதற்கு சமானம் ! மார்ட்டினின் "கனவுகளின் குழந்தைகள்" ; "இனியெல்லாம் மரணமே" ; அர்ஸ் மேக்னா ; டெட்வுட் டிக் ; தாத்தாஸ் - போன்ற பணிகளை இந்த லிஸ்ட்டில் சொல்லலாம் ! 

சில தருணங்களில்.........ரொம்பவே சில தருணங்களில்.......... சிரமம் # 1 & சிரமம் # 2 கூட்டணி போட்டுக் கொள்வதுண்டு - "ஏகப்பட்ட அடர்த்தியான கதைகள் ஒரே ஆல்பத்தில்" என்ற குண்டு புக்காய் ! அங்கே சர்வ நிச்சயமாய் சட்னி என்பது முன்கூட்டியே உணர முடியும் ! இதற்கொரு prime உதாரணம், சென்றாண்டின் The FIFTY & FOREVER ஸ்பெஷல் ! CIA ஏஜெண்ட் ஆல்பா - 3 பாக த்ரில்லரில் ; புது வரவு சிஸ்கோ - 2 பாக த்ரில்லரில் ; டேங்கோ - நெடும் சோலோ த்ரில்லரில் ; "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" - 5 பாக ஆக்ஷனில் etc etc என்ற திட்டமிடல் - ஆஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் மேட்சை டிரா பண்ண நம்மாட்கள் படப்போகும் கஷ்டத்தை விடவும் கூடுதலானதொன்று ! ஆனால் கொரோனா லாக்டௌன் # 2-ன் புண்ணியத்தில் அந்த ராட்சஸப் பணிகளை ஒப்பேற்ற முடிந்தது ! 

"சரி, இதெல்லாம் இப்போ எதுக்குடாப்பா ?" என்கிறீர்களா ? இருக்கே...காரணம் இருக்கே....சிரமம்ஸ் # 1 & 2 ஒன்றிணைந்ததொரு இதழாய் நடப்புச் சந்தாவில் "சம்மர் ஸ்பெஷல்" உள்ளதே !! காத்திருக்கும் அந்த blockbuster சார்ந்த எனது புலம்பல்களே இந்தப் பதிவு !  

சம்மர் ஸ்பெஷல் ! இந்தப் பெயரைக் கேட்டாலே அப்படியே ஜெல்லி ஐஸ்க்ரீம் தொண்டைக்குள் நழுவும் இதம் தான் நினைவுக்கு வருவதுண்டு ! மினி-லயன் வெளிவந்து கொண்டிருந்த நாட்களின், கோடை விடுமுறைகளில், கைக்குச் சிக்கிய ஜாலியான கதைகளுடன், ஜாலியான சைஸ்களில்  தயாரித்திடும் அந்த "சம்மர் ஸ்பெஷல்" இதழ்கள் அத்தனை ரம்யமானவை ! அந்த நினைப்பினில் நடப்பாண்டில் ஒரு "சம்மர் ஸ்பெஷல்'23" இதழைப் போட்டுத்தாக்கிடலாம் என்ற எண்ணம் தோன்றியது ! And ஒரு கதம்ப குண்டு இதழுக்கு போன வருஷத்தைப் போலவே பிரத்தியேக அனுமதி வாங்கி வைத்திருக்க, ஆல்பா ; டேங்கோ ; ரூபின் & சிக் பில் என்ற கூட்டணியினைக் கொண்டு, சம்மரை ஸ்பெஷலாக்கிடலாம் என்று திட்டம் ! 

அட்டவணையும் ரெடி ; கதைகளும் ரெடி ; ஆனால் இது எப்படியும் பெண்டைக் கழற்றாது விடாதென்ற உணர்வுமே உள்ளுக்குள் ரெடியாக இருந்தது ! பொதுவாய் இது போல் சிக்கலான வேலைகள் எந்தெந்த இதழ்களில் இருக்குமோ, அவற்றையெல்லாம் நான் வருஷத்தின் கடைசிக்குத் தள்ளி விடுவது வாடிக்கை ! ரிப்போர்ட்டர் ஜானி ; மார்ட்டின் ; டெட்வுட் டிக் ; தாத்தாஸ் போன்றோர் கடைசி க்வாட்டர்களில் பெரும்பாலும் தலைகாட்டுவதன் பின்னணிக் காரணமே இது தான் ! ஆனால் இதுவோ பெயரிலேயே "சம்மர்" என்று கொண்டிருக்கும் இதழ் ; சோம்பல்பட்டு இதனையுமே நான் டிஸம்பர்க்குக் கொண்டு போக நினைத்தேனென்றால், 50-50 என்ற சந்தேகத்தில் இருப்போர் கூட - "ஈ ஆள் confirm ஆயிட்டு பிராந்தன் தன்னே !!" என்று தீர்மானித்து விடுவர் என்று தோன்றியது ! So கோடை காலத்தின் முடிவுக்குள் கொணர வேண்டிய நிர்ப்பந்தம் ! 

கதைகள் நான்கு ! நான்கில் ஒன்று சிக் பில் கார்ட்டூன் ; நேர்கோட்டுக் கதை & ரொம்ப காலமாய் கருணையானந்தம் அங்கிள் எழுதி வரும் கதையும் கூட ! So ஒன்றை அவரிடம் ரொம்ப முன்னமே தள்ளிவிட்டிருந்தேன் ! One down ...three to go & இந்த மூன்றையும் நானே கையாள்வதென்று மூலை சேர்த்து வைத்திருந்த நிலையில் நமது டீமில் சமீபமாய் இணைந்திருந்ததொரு சகோதரி ALPHA-க்கு சரிப்படுவாரோ ? என்ற கேள்வி எனக்குள் இருந்த சோம்பேறித்தடியனுக்கு எழுந்தது ! அவர் ஒரு எழுத்தாளரும் கூட ; நாவலொன்றை தமிழில் எழுதி அது பப்லிஷ் ஆகவும் செய்திருந்தது ! பற்றாக்குறைக்கு இந்த ALPHA ஆல்பம் Cinebook இங்கிலீஷிலும் வெளியிட்டிருந்ததொன்று எனும் போது,  தமிழாக்கத்துக்கு ரொம்பவே உதவிடும் என்று நினைத்தேன் ! So அவருக்கு ஒரு 4 பக்கங்களை அனுப்பி வைத்து மொழிபெயர்க்கச் செய்து பார்த்தேன் ; மோசமில்லை என்பது போலிருந்தது ! ரைட்டு...சிக் பில் & ஆல்பா - என ரெண்டையும் தள்ளி விட்டுவிட்டால், ரெண்டு மாத்திரமே நமக்கு ! என்றபடிக்கு காலாட்டியபடியே டின்டின் மொழிபெயர்ப்புக்குள் பிசியாகி இருந்தேன் ! ஆனால் நாட்களின் ஓட்டம் மின்னலாய் இருக்க, "மழை காலம் ஆரம்பிக்கும் முன்னே சம்மர் ஸ்பெஷலை கண்ணிலே காட்டிடணும்டா ராசா !" என்று பட்டது ! 

டேங்கோ ! தனிவேங்கை கதைகள் எப்போதுமே ஒரு மாறுபட்ட flavor கொண்டிருப்பது வாடிக்கை ! And இதுவோ சமுத்திரத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் ஒரு தனிவேங்கை எனும் போது, ரொம்பவே ஈர்த்தது ! பற்றாக்குறைக்கு இந்தத் தொடரின் சாகசங்கள் நிகழ்வதெல்லாமே நாம் (காமிக்ஸ்களில்) அதிகம் பார்த்திராத தேசங்கள் ; தீவுகள் என்ற போது, ஒரு எக்ஸ்டரா கிக் இருந்தது போல்பட்டது எனக்கு ! போன வருஷம் வெளியான அந்த முதல் ஆல்பம் செம ஹிட்டாகிட, அப்போதிலிருந்தே நான் இவருக்கு fan ! So தொடரின் ஆல்பம் # 3 - "பனாமா படலம்" பக்கங்களைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன் ! டேங்கோவின் மொழிபெயர்ப்பில் ஒரு வித்தியாச பாணியுண்டு ! கதையில் மாந்தர்கள் குறைவு என்பதால், கதாசிரியரும் ஒரு பங்கேற்று அவரது monologues வழியாக கதையை நகர்த்துவது இங்கே வாடிக்கை ! And இதில் சிக்கல் என்னவென்றால் ரொம்ப லேசாய் நாலைந்து வாக்கியங்களை ஒற்றை பிரேமுக்குள் அடக்கி விடுகிறார் ! And பிரெஞ்சில் எப்படியோ, தெரியலை - இங்கிலீஷில் நறுக்கென்று சொல்லி விடுகிறார்கள் ! ஆனால் அதையே நாமும் பின்பற்றினால் மணிரத்னம் பாணியாகத் தென்படும் ; so நீட்டி முழக்கி சொல்வதற்குள் நாக்கு தொங்கிவிடுகிறது ! ஒரு மொழிபெயர்ப்பாளனாய் இங்குள்ள பிரதான சவாலே - நாலைந்து வாக்கியங்களை ஒரே இடத்தில் இணைக்கும் போது, ஒவ்வொரு வரிக்குமிடையே ஒரு நூலிழையாச்சும் தொடர்பு இருப்பது போல, சீரான ஒரே டெம்போவில் சம்பாஷணையினை நகர்த்திட வேண்டும் என்பதே ! இம்முறை கதைக்களம் பனாமா ! And ரொம்ப ஆழமான கதை முடிச்சு என்றெல்லாம் கதாசிரியர் மெனெக்கெடவில்லை ; சிம்பிளானதொரு knot சகிதம் ஆக்ஷன் + சித்திர மேளாவாய் உருவாக்கியுள்ளார் ! டேங்கோ & மரியோ ஜோடி இந்தத் தொடரின் ரீல் நாயகர்களென்றால், நிஜ நாயகர்கள் கதாசிரியரும், ஓவியரும் தான் என்பேன் - இருவரும் அத்தனை ஒன்றிப் போய் கலக்கியுள்ளனர்! 

ஒரு மாதிரி தக்கி முக்கி TANGO மொழிபெயர்ப்பினை முடித்து விட்டு ரூபின் பக்கமாய்த் திரும்பினால் - uffffff ....காத்திருந்தன  ஒரு லாரி லோடில் பணிகள் ! ஏற்கனவே சொல்லியிருந்தேன் தான் - இந்தக் கேரட் கேச அழகியின் கதையின் பாணி ரொம்பவே complex என்று ! Mythic என்ற புனைப்பெயரில் கதையெழுதியுள்ள இந்தக் கதாசிரியருக்கு நம்ம ரிப்போர்ட்டர் ஜானியின் அந்த இடியாப்ப பாணியென்றால் ரொம்பவே இஷ்டம் போலும் ; ரூபின் கதைகளுக்குள்ளும் ஒரு வித்தியாச பயணப் பாதையினை வகுத்திருக்கிறார் ! And ரிப்போர்ட்டர் ஜானியுடனான ஒற்றுமை அத்தோடு முற்றுப் பெறவில்லை ; கடைசி ரெண்டு பக்கங்களுக்குள் அத்தனை மர்மங்களுக்குமான விடைகளையும், ஜானியின் ஸ்டைலில் போட்டு சரமாரியாய் இங்கேயும்  தாக்கித் தள்ளுகிறார் ! "ரைட்டு...இந்த இடத்தில இப்புடி ஒரு ட்விஸ்ட் வரணுமே....? இந்தாள் ஏதாச்சும் லொள்ளு பண்ணனுமே ?" என்ற ரீதியில் கதையுடனான பயணத்தில் நமக்குத் தோன்றினால், நிகழ்வது நேர்மாறாக இருந்திடுகிறது ! அதிலும் இங்கே கைரேகைகளைக் கொண்டு ஆடும் ஒரு ஆட்டம், ரூபினை மட்டுமல்ல, நம்மையும் சிண்டை பிய்த்துக் கொள்ளச் செய்யும் ! And சோடா கதைகளை போலவே சித்திரங்களில் மெலிதான சில பல clues விதைக்கப்பட்டுள்ளன கதை நெடுகிலும் ! பர பரவென்று ஓட்டமெடுத்த எனக்கு, கிளைமாக்சில் ஏதோ உதைக்கிறதே ? என்ற உணர்வு தலைதூக்கியது ! கையிலிருந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பும் கதைக்கு நிகரான complex சமாச்சாரம் எனும் போது மறுக்கா, மறுக்கா படிச்சும் புரியலை ! அப்புறம் படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பம் முதலாய் 'பொம்ம' பார்த்துக் கொண்டே வந்தால் தான் புரிந்தது - சித்திரங்களில் இருந்த சில clue-க்களை நான் கோட்டை விட்டிருந்த சமாச்சாரம் ! மண்டையெல்லாம் காயச் செய்தாலும், இது போலான கதைகளில் ஒரு இனம்புரியா வசீகரம் இருப்பதுண்டு ; 'நங்கு நங்கென்று' சுவற்றில் முட்டிக்கும் உணர்வு தோன்றினாலும், அதைத் தூக்கிக் கடாச மனசே வராது ! Same here !! தப்பான புரிதலோடு எழுதிப் போயிருந்த சுமார் 15 பக்கங்களைக் கிழித்துக் குப்பையில் போட்டுவிட்டு மறுக்கா பயணித்தேன் ! அயர்வாக இருந்தது தான் ; பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம், வண்டி வண்டியாய் இருந்த வரிகளை தமிழுக்குக் கொணர்வதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது தான் - ஆனாலும் சுவாரஸ்யம் மட்டும் குன்றிடவில்லை ! In fact இந்தக் கதை முழுக்க ருபினுமே என்னைப் போலவே மண்டையை பிய்த்துக் கொண்டே தான் பயணித்திருக்கிறார் ; "டிடெக்டிவ்" என்பதற்காக எட்டு ஊருக்கு ஊடு கட்டியெல்லாம் அடிக்கவில்லை ! ஒரு மாதிரியாய் கதையின் முடிச்சை புரிந்து கொண்டதால், கதையின் பளு ரொம்ப அழுத்தாதது போல் தோன்றிட, கதைக்கு "சுபம்" போட்ட சமயம் எதையோ உருப்படியாய் செய்து முடிச்ச பீலிங்கு !! 

ரைட்டு...இனி ஆல்பா & அதுக்கப்புறம் சிக் பில் என்று எடிட்டிங் மட்டும் பண்ணிட்டாக்கா "சம்மர் ஸ்பெஷலுக்கு" மங்களம் பாடிடலாம் என்றபடிக்கே தெம்பாக ஆல்பாவுக்குள் புகுந்தேன் ! அடடே..அடடே... "இரத்தப் படலம்" இரண்டாம் சுற்றின் ஓவியரான Jigounov கைவண்ணத்தில், ஒவ்வொரு ஆளும், ஒவ்வொரு அம்மணியும், ஒவ்வொரு காரும், ஒவ்வொரு ஊரும் அழகோ அழகாய் காட்சி தந்தன(ர்) ! And செம விறுவிறுப்பாய் கதை ஆரம்பம் காண, வேக வேகமாய் பக்கங்களைப் புரட்டினேன் ! ஆனால் ஒரு ஏழோ எட்டோ பக்கங்களிலேயே தெரிந்து விட்டது, இது நான் எதிர்பார்த்திருந்த உரிச்ச வாழைப்பழம் அல்ல என்பது ! கதைக்கு கணிசமாகவே layers இருப்பது கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிய ஆரம்பித்த போது, கதாசிரியர் யார் ? என்று ஒருவாட்டி புரட்டிப் பார்த்தேன் ! Surprise ...surprise ...அதே MYTHIC சார் தான் இங்கேயும் பேனா பிடித்திருக்கிறார் ! In fact ஆல்பா தொடரினை துவக்கிய ஒரிஜினல் கதாசிரியர் மரித்துப் போனதைத் தொடர்ந்து ஆல்பம் # 3 முதலாகவே இங்கே இவர் தான் கதைகளை எழுதி வருகிறார் என்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது ! "ஆத்தீ..இவர் இடியாப்பத்தை, நூடுல்ஸோடு கலந்து, புது பாணியில் சமைக்கும் ஜாம்பவானாச்சே !!" என்ற உதறல் லேசாய் உள்ளுக்குள் எடுக்க ஆரம்பித்த வேளையிலேயே மொழிபெயர்ப்பிலும் உதறல் தென்பட ஆரம்பித்தது ! To cut a long story short - ரொம்பவே complex ஆன இந்தக் கதைக்குள் நம்மளவிற்கொரு புதியவரை இறக்கி விட்டது என் பிழையே என்பது புரிந்தது ! ஊஹூம்...இது பட்டி டிங்கரிங் பார்த்து செப்பனிடக்கூடிய சமாச்சாரமே அல்ல என்பது ரொம்பவே சீக்கிரமாய் புரிஞ்சு போன நொடியில் டயர் ரெண்டுமே பஞ்சரான வண்டி போல உணர்ந்தேன் ! 46 பக்கங்கள் with a complicated storyline - முழுசாய்க் காத்திருப்பது புரிந்தது ! 

மெய்யாலுமே வியர்த்து விட்டது கொஞ்ச நேரத்துக்கு ! இந்தக் கதையையே இப்போதைக்கு ஓரம்கட்டி விட்டு வேறு எதையாச்சும் உள்ளே புகுத்தலாமா ? என்றெல்லாம் யோசிக்கும் அளவிற்குப் போயிருந்தேன் ; ஆனால் பின்னட்டையில் மூன்றில் ஒரு பங்கு இடத்தினை ஆல்பா ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, இங்கே என் சுந்தர வதனத்தை ஸ்டிக்கராக்கி ஓட்டினால் கூட முழுசையும் மறைக்க முடியாதென்று தோன்றியது ! தம் கட்டிக்கொண்டு ஆரம்பித்தேன் - ஹங்கேரியிலிருந்து துவங்கிய அந்தக் கதையினை and உள்ளே போகப் போகத் தான் புரிந்தது, சமகாலக் கதைகளின் உருவாக்கத்தில் எத்தனை அரசியல்..எத்தனை வரலாறு கலந்துள்ளதென்று ! இங்கே இன்னொரு நோவு இருந்தது - ஓவியரின் சித்திர பாணி காரணமாய் ! ஹீரோவையும், ஈரோயினியையும் தவிர்த்த பாக்கிப் பேரையெல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஓவியர் வரைந்திருக்க, "இந்த ஆள் M .N .நம்பியாரா ? A.V.M ராஜனா ? இந்தக்கா சொர்ணக்காவா ? சொர்ணமால்யாவா ?" என்ற ரீதியில் சந்தேகங்கள் எழுந்தன ! CIA தலைவரும், ஒரு முன்னாள் ஏஜெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோற்றம் தர, ரெண்டு பேருக்கும் மத்தியிலான 6 வித்தியாசங்களைத் தேடிக் கண்டுபுடி ! என்ற போட்டியெல்லாம் வைக்காத குறை தான் !  கதையின் ஓட்டத்தோடு செப்டம்பர் 1 ..2 ..3 என்று தேதிகளை வரிசைக்கு கொடுத்துக் கொண்டே வந்திருந்தனர் ! சும்மா ஏதோவொரு அலங்கார detail இது என்றபடிக்கே உதாசீனப்படுத்தி விட்டுப் போனால், க்ளைமாக்சில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீடு இருப்பது புரிந்தது !! And கூகுளுக்குள் புகுந்து இம்மியூண்டு விஷயத்துக்குக் கூட சோம்பல்படாது தேடினால் தான் கதாசிரியரின் முழு வீச்சைப் புரிந்து கொள்ள முடிந்தது ! 

இணை தடங்களாய் மெயின் கதை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, அதே வாஷிங்டனின் இன்னொரு பக்கத்தில், இன்னதென்று புரியா கொலைகள் அரங்கேறி  வருகின்றன ! பற்றாக்குறைக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு மெகா நிகழ்வு & அதிலிருந்து 9 ஆண்டுகளுக்கு அப்புறமான இன்னொரு நிகழ்வு ! இவை சகலத்தையும் க்ளைமாக்சில் ஒன்றிணைத்து தெறிக்க விட்டிருக்கிறார் Mythic !! And புத்தம் புது புல்லெட்டில் அவர் பறந்து போயிருக்கும் அதே பாதையில், 'கரையாண்டி சைக்கிள் கடையில்' எடுத்த சைக்கிளை மிதித்தபடிக்கே நான் பின்தொடர்ந்த காமெடி தொடர்ந்த நாட்களில் அரங்கேறியது ! And yes - இங்கேயும் ஒவ்வொரு படத்தினையும் உன்னிப்பாய்க் கவனிக்காது, வாசித்தபடிக்கே நகர்ந்திடும் தப்பை மட்டும் செய்து விடாதீர்கள் folks ; அப்புறம் உங்களிடம் வண்டை வண்டையாய் திட்டு வாங்கி மாளாது எனக்கு ! இதோ, அச்சுக்குச் செல்லவிருந்த இந்தக் கதையின் ஓரிடத்தில் ஒரு பிழை இருப்பது இன்று காலை குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று உறைத்தது !! துண்டை கட்டிக்கொண்டே மைதீனுக்கு போன் பண்ணி அந்தப் பக்கத்தினை அனுப்பப் சொல்லி திருத்தம் போட்டேன் ! Phewwwwww !! இங்கேயுமே கடைசி 2 பக்கங்களில் கதாசிரியர் அடிக்கும் twist சத்தியமாய் அந்நாட்களில் ரவிச்சந்திரனும், ஜெமினி கணேசனும் ஆடியிருக்காத twist !! அது வரைக்கும் கதை இது தான் என்றபடிக்கே பயணிப்போரின் முகங்களில் ஒரு வாளி தண்ணீரை சலோர் என்று தெளித்திருக்கிறார் !! நம்பினால் நம்புங்கள் guys - கடைசி 2 பக்கங்களை மூணு வாட்டி எழுத வேண்டியதாகியது ! எத்தனை விளக்கம் சொல்ல முனைந்தாலும் அப்புறமுமே ஏதேனுமொரு loose end தொங்கிக்கொண்டிருப்பதாய் படும் ; அடித்து விட்டு மறுக்கா முயற்சிப்பேன் ! எது எப்படியோ - ஒரு crackerjack த்ரில்லர் காத்துள்ளது guys & கொஞ்சம் பொறுமையாய் க்ளைமாக்ஸை நீங்கள் அணுகிட வேண்டியிருக்கும் தான் ! ஆனால் அந்தப் பொறுமைக்குப் பலனின்றிப் போகாது !! Trust me on that !!

ஷப்பா...போட வேண்டிய மொக்கையெல்லாம் போட்டாச்சு ; இனி சிக் பில் மட்டும் தான் ! "முடிஞ்சமட்டுக்கு எழுத்துப் பிழைகளை மட்டும் பாத்திட்டு தந்துடறேன் மைதீன் !" என்று வியாழன் இரவு சொல்லிவிட்டு, "கிட் ஆர்டின் ஜாக்கிரதை" கதைக்குள் புகுந்தேன் ! சமீபத்து நமது தேர்வுகள் எல்லாமே டாக்புல் அல்லது ஆர்டினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாகவே இருந்து வந்துள்ளன & இங்கே நம்ம ஆர்டின் சார் தான் பிரதான பாத்திரம் ! ஜாலியாய் உள்ளே நுழைந்தால் "ஹி..ஹி..ஹி.." என்றொரு இளிக்கும் ஓசை மட்டும் கேட்டது போலிருந்தது ! "யார்டா இந்நேரத்துக்கு ? ஊரே அடங்கிடுச்சி...?" என்றபடிக்கே பக்கத்தை இன்னும் லைட்டாய்ப் புரட்டிய போது தான் புரிந்தது - அந்த இளிப்புச்  சத்தம் வேறெதுவுமல்ல - விதி என்னைப் பார்த்துக் கெக்கலித்த ஓசை தான் என்பது !! கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளாய் க்ளாஸிக் கதைகளைத் தவிர்த்து வேறெதற்கும் பேனாவே பிடித்திருக்காத அங்கிள் இங்கே சிக் பில்லுக்கு இலக்கண நடையில் மொழிபெயர்ப்பை பிளந்து கட்டியிருந்தார் !! விக்கித்துப் போனேன் - ரெண்டே பக்கங்களைப் படித்து முடிப்பதற்குள் ! 

'பேச்சு வழக்கு நடை தான் கார்ட்டூன்களுக்கு சுகப்படும்' என்பதைத் தீர்மானித்து - கடந்த 11 ஆண்டுகளாய் அத்தினி கார்ட்டூன்களுக்கும் ஒரே சீராய் அந்த பாணியையே தந்தும் வந்திருக்கிறோம் ! நடுநடுவே ஏதேனும் கார்ட்டூன் மறுபதிப்புகள் வரும் போது தான், அந்நாட்களில் நாம் உபயோகம் செய்திருந்த உரைநடை பாணிகள் எட்டிப்பார்த்து பல்லெல்லாம் ஆடச் செய்வதுண்டு (லக்கி லூக்குக்கு கல்யாணம் இதழில் போல!!) And அங்கிள் நமது தற்போதைய template-ஐ  சுத்தமாய் மறந்திருந்தது மட்டுமல்லாது - மருந்துக்கும் கூட நகைச்சுவை பக்கமாய் போயிருக்கவில்லை ! இதில் கொடுமை  என்னவென்றால், ஒரிஜினலின் டயலாக்களிலும் ஹியூமரை வலை வீசித்தான் தேட வேண்டியிருந்தது !! "எக்ஸ்டரா நம்பரே போடாதடா அம்பி ; ஒரிஜினலில் உள்ளதையே போடு - போதும்" என்று கொடி பிடிக்கும் நமது நண்பர்களிடம் இந்த ஆல்பத்தின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பினை தந்து ஒருவாட்டி வாசித்துப் பார்க்கச் சொல்லும் ஆசை அலையடித்தது ! அவர்கள் அந்த வாசிப்பினில் ஈடுபட்டிடும் வேளையினில், கிட்டக்கவே ஒரு ஆளை சம்பளம் தந்து அமர்த்தி, நாள் முழுக்க கிச்சு கிச்சு மூட்டச் சொல்லி முயற்சித்தாலும் - ஊஹூம் !! பலன் இராது - because மற்ற மொழிகளில் அவர்கள் பழகியுள்ள கார்ட்டூன் ரசனைகள் நம்மிடமிருந்து மாறுபட்டவை ! நமக்கு இங்கே லட்சுமி வெடிச்சிரிப்புகள் இல்லாங்காட்டியும், ஊசிவெடிச் சிரிப்புகளாவது இன்றியமையா சமாச்சாரங்கள் ! அதற்குமே வாய்ப்புகள் குறைவெனில், உப்பு குறைவான சமையலாகவே பார்த்திடுகிறோம் ! 

Anyways இங்கே டவுசர் சுத்தமாய் கழன்று தொங்குவது புரிந்தது ; ஆண்டுக்கு ஒரேயொரு சிக் பில் கதை ; அந்த ஒற்றை கதையும் இலக்கண நடையும், சீரியஸ் பாவனையுமாய் நகன்றால் "நம்மளை கொண்டே போட்டுப்புடுவாங்க" என்று தலைக்குள் பட்சி சொன்னது ! மொத்தம் 30 பக்கங்கள் ; முழுசையும் கார்ட்டூனுக்கான பாணியில் & இயன்ற இடங்களில் கொஞ்சமாச்சும் ஹியூமர் இழையோட மாற்றி எழுதிட எனக்கிருந்த அவகாசம் : முக்கால் நாள் ! இதோ, இந்தப் பதிவினை டைப்பும் சனி மாலைக்கு 3 மணி நேரங்கள் முன்னே தான் மொத்தத்தையும் முடித்து மறு DTP செய்து அச்சுக்கு ரெடி செய்து வருகிறோம் ! 

'நாக்கு தொங்கிப் போச்சு...பெண்டு நிமிர்ந்து போச்சு' என்றெல்லாம் அடிக்கொரு தபா சொல்லுவோம் தான் ; ஆனால் அதன் மெய்ப்பொருளை இந்த வாரத்தில் தான் உணர்ந்துள்ளேன் ! இந்த 39 ஆண்டுப் பயணத்தில் குட்டிக்கரணங்கள் நமக்குப் புதுசே அல்ல தான் ; ஆனால் இம்முறை அடித்திருப்பதோ ரொம்ப ரொம்ப மாறுபட்டவை ! ஒற்றை நாளிலும், ஒன்றரை நாளிலும் முழுசாய் எழுத அவசியப்பட்டுள்ள இந்தக் கதைகளை, நார்மலாய் எழுதினால் லேசாக ஒரு வாரமோ, பத்து நாட்களோ பிடிக்கும் ! ஆனால் அப்படியொரு குஷன் இல்லாத நெருக்கடியில் பணியாற்றியது நிஜமாகவே நமது பல்டி அளவுகோல்களுக்கே ரெம்போ சாஸ்தி என்பேன் !!  

ஆனால் இந்தப் பணிகளை ஒட்டு மொத்தமாய் நிறைவு செய்து, இந்த 4 கதைகளையும் ஒருசேர மேஜையில் போட்டுப் புரட்டிடும் போது மனசுக்குள் ஒரு விவரிக்க இயலா நிறைவு ! Oh yes - இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பை-பாஸ் ரைடர் பஸ்ஸில் கூட போக மாட்டேன் தான் ; சிவனே என்று நேர்கோட்டில் பயணம் பண்ணும் டவுன் பஸ்ஸே போதும் என்பேன் தான் ! ஆனால், இந்த இதழ் உங்களை எட்டிடும் போது, நீங்கள் கதைகளையும், அவற்றின் பின்னுள்ள உழைப்புகளையும் ரசித்திடும் பட்சத்தில் "ஜெய் மூக்கை முன்னூறு தபா சுற்றும் கதைஸ் !!" என்று கோஷம் போடுவேனோ - என்னமோ ?! Whatever the hassles, this has been an immensely satisfying work !

And இந்த மாதிரியான தருணங்களில் தான் "மறுபதிப்புகள்" இருக்கும் திசை நோக்கி பெருசாய் நமஸ்காரம் சொல்லத் தோன்றுகிறது ! இடையிடையே அவை மட்டும் மூச்சு விட்டுக் கொள்ளவும், சக்கரங்கள் சுழன்றிடவும் உதவிடவில்லை எனில், கிழிஞ்சது கிருஷ்ணகிரி for sure !!  மறுபதிப்பு எனும் போது - பர பரவென ஈரோட்டு ஸ்பெஷல்ஸ் இதற்கென ரெடி செய்திருக்கும் இன்னொரு டீமின் சகாயத்துடன் தடதடத்து வருகிறது ! And boy oh boy ...சும்மா சொல்லக்கூடாது - MAXI சைசில் "கார்சனின் கடந்த காலம்" பக்கங்களைப் பார்க்கக் கண்கள் கோடி வேணும் போலும் ! Simply stunning !! இதோ -  டிரெய்லர் !! 



இதழ்கள் தயாராகி வரும் மின்னல் வேகத்துக்கே முன்பதிவுகளும் டாப் கியரில் ஓடிக்கொண்டுள்ளன ! சொற்ப நண்பர்கள் கா.க.க. வேணாம் என்று இதர இதழ்களுக்கு புக்கிங் செய்துள்ளனர் தான் ; ஆனால் trust me folks - புக்கை கையில் ஏந்திப் பார்க்கும் வேளை வரும் போது இந்த இதழுக்கு No சொல்லிடுவோர் யாரும் இருப்பரென்று எனக்குத் தோன்றவில்லை ! அட்டைப்படமுமே முதல்முறையாக solo கார்சன் சகிதம்    மாசாய் உருவாகி வருகிறது ! குறைவான பிரிண்ட்ரன் மாத்திரமே என்றாலும், இதற்கென செய்திடவுள்ள நகாசு வேலைகள் நிச்சயமாய் 'தல' ஆண்டு # 75-க்கு நியாயம் செய்யாது போகாது ! And முன்பதிவு செய்துள்ள நண்பர்கள் இதனைக் கையில் ஏந்தும் நொடியினை நிச்சயமாய் சீக்கிரத்துக்குள் மறந்திட மாட்டார்கள் என்ற மட்டுக்கு நிச்சயம் ! 



இங்கொரு விண்ணப்பம் folks :
  • சுஸ்கி & விஸ்கி மறுபதிப்பு (பேரிக்காய் போராட்டம்) ரெடி !
  • மாயாவி கதை ரெடி !
  • இரும்புக்கை நார்மன் கதை ரெடி !
  • ஸ்பைடர் சீக்கிரமே ரெடியாகிடும் !
  • கா.க.கா. பாகம் 1 சீக்கிரமே ரெடியாகிடும் !
இவற்றினுள் எழுத்துப் பிழைகளை நீக்கித் தரும் proof reading பணிக்கு நண்பர்கள் தயாராக இருப்பின், மின்னஞ்சலில் தகவல் தெரிவிக்கலாம் - ப்ளீஸ் ? ஒன்றுக்கு இருமுறை பார்த்திட வேண்டி வரும் என்பதால் நண்பர்கள் can work in teams ! And நிச்சயமாய் இது ஓசியில் ஒப்பி அடிக்கும் முயற்சியாக இராது - நிச்சயமாய் உரிய சன்மானங்கள் இருந்திடும் ! So ஆற்றலுள்ளோர் & ஆர்வமுள்ளோர் - மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாமே ப்ளீஸ் ? எனக்கு இதன் பொருட்டு கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் அவகாசம் கிட்டினால், ஜூலை இதழ்களை fasttrack செய்திட பெரிதும் உதவும் ! So any help will be most welcome !!

Bye folks...see you around ! Have a fun Sunday !!

Monday, June 05, 2023

அறுபதே நாட்களில் அதகளம் செய்வது எப்படி ?

 நண்பர்களே,

வணக்கம். கிட்டத்தட்ட 200 நண்பர்கள் பங்கேற்றதொரு poll, துளியும் குளறுபடிகளின்றி அழகாய் நிறைவுற்றுள்ளது !! நிறைய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை அந்த site சாத்தியப்படுத்தித் தந்ததால், முன் போல 'தென்னைமரத்திலே ஒரு குத்து ; பனைமரத்தில் ஒரு குத்து' என்ற டப்ஸாக்களை இம்முறை பார்க்க இயலவில்லை ! And thanks guys - உங்களின் காமிக்ஸ் கடமைகளை அழகாய் செய்து தந்தமைக்கு !! 

MAXI-க்கே (எதிர்பார்த்த) ஜெயம் என்றாலும், அந்த வெற்றியின் margin நிஜமாகவே ஆச்சர்யமூட்டுகிறது ! பட்ஜெட்டை கருத்தில் கொண்டு நான் போட்ட வோட்டு கூட ரெகுலர் சைசுக்கே ; ஆனால் சந்தேகங்களுக்கு இடமே இல்லாததொரு வெற்றியினை MAXI தனதாக்கியுள்ளது ! So உங்களின் தீர்ப்பே கம்பெனியின் தீர்ப்பாகவும் இருந்திடும் ! இதோ - வாக்கெடுப்பின் இறுதி நிலவரம் :

To recap : 

*ஈரோட்டில் ஆகஸ்ட் 4 to 15 தேதிகளில் நடைபெறவுள்ளது புத்தக விழா !

*And புனித மனிடோ மனம் வைத்தால் ஆகஸ்ட் 5 தேதியன்று (சனிக்கிழமை) காலையில் நமது சந்திப்பு ! இடம் விரைவில் அறிவிக்கப்படும் !

*2019-க்கு அப்புறமாய் நாம் சந்திக்கவிருப்பது இப்போது தான் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷலாய் ரகளைகள் செய்திட ஸ்பெஷல் புக்ஸ் திட்டமிட்டுள்ளோம் !

*இதோ - அவற்றின் பட்டியல் :

இதழ் # 1சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் II : ஒரு புத்தம் புதிய கதை + ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு ! கலரில்....மிரட்டும் தயாரிப்புத் தரத்தில்..ஹார்ட் கவர் இதழாய் - ரூ.330 விலையினில் !

இதழ் # 2 The BIG BOYS ஸ்பெஷல் - ஸ்பைடர் + இரும்புக்கை மாயாவி + இரும்புக்கை  நார்மன் என்ற கூட்டணியில் - க்ளாஸிக் கதைகளுடன் ! ஸ்பைடரின் "கொலைப்படை" கதை மட்டும் 2 வண்ணத்தில்....பாக்கி இரண்டும் black & white-ல் ! MAXI சைசில்...ஹார்ட் கவர் இதழ்...விலை.ரூ.300 ! 

இந்த இதழுக்கு Variant கவர்ஸ் option இருந்திடும் ! ஸ்பைடரின் அட்டைப்படம் ஒரிஜினலாக அமைந்திடும் ! யாருக்கேனும் தானைத் தலீவர் அட்டைப்படத்தினில் வேணாம் ; மாயாவி இருந்தால் தேவலாம் என்று தோன்றிடும் பட்சத்தில் ஆர்டர் செய்யும் போதே Variant 'M" என்று குறிப்பிட வேண்டி வரும் ! எதுவும் குறிப்பிடாது ஆர்டர் செய்வோருக்கு ஸ்பைடர் அட்டைப்படமே வந்திடும் !

இதழ் # 3 - "விதி எழுதிய வெள்ளை வரிகள் !" 112 பக்கங்கள் ; கருப்பு-வெள்ளையில்-ரூ.100 ! அழகானதொரு கிராபிக் நாவல் !

இதழ் # 4 - மார்ட்டின் in கலர் !! 64 பக்கங்கள் ; முழுவண்ணத்தில் மர்ம மனிதன் மார்ட்டினின் புது சாகசம் ; விலை : ரூ.85 !

இதழ் # 5 - மிரட்டும் MAXI சைசில் ; 336 பக்கங்களுடன் ; டாலடிக்கும் கலரில் ; உங்களின் மனம் கவர்ந்த ஒரிஜினல் ஆடல் + பாடல்களுடன் "கார்சனின் கடந்த காலம்" !! "தலையில்லா போராளி" போல ஒவ்வொரு பக்கமும் மெகா சைசில் அமைந்திடும் ! ஹார்ட் கவர் ! 

And முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு, இந்த இதழின் முதல் பக்கத்தில் நீங்கள் தந்திடும் போட்டோக்களை அச்சிட்டு இணைத்திடும் option உண்டு ! ஒரு disclaimer : கார்சனின் 'கபி..கபிக்களை' மனதில் வைத்துக் கொண்டு, நீங்க பாட்டுக்கு எசகுபிசகான போட்டோக்களை அனுப்பி வைத்து, அப்புறம் மாவுக்கட்டு போட புத்தூருக்குப் பயணிக்க நேர்ந்தால், பழி கம்பெனியை சாராது ! 

போட்டோக்கள் அனுப்பிட last date : ஜூலை 10 '2023 !

*5 இதழ்களையும் ஒட்டுக்கா புக் செய்திடும் நண்பர்களுக்கு ஸ்பெஷல் விலை : ரூ.1550 ப்ளஸ் கூரியர் கட்டணம் ! 

*ஈரோட்டில் நேரில் வாங்கிக் கொள்வதாயின் no கூரியர் கட்டணம்ஸ் ! 

*5 இதழ்கள் கொண்ட பார்சலின் எடை நெருக்கி இரண்டரை கிலோ வரும் என்பதால் - தமிழகத்தினுள் ரூ.150 & வெளி மாநிலத்துக்கு ரூ.200 கூரியர் கட்டணங்கள் வந்திடும் !

வழக்கம் போல கெத்தாய் கடை விரிச்சாச்சு - "இங்கு நல்ல கறிகாய்  விற்கப்படும்" என்ற போர்டுடன் !! சுலபமான வேலை இந்த அறிவிப்பு portion தான் ; மெயின் பிக்ச்சர் ஆரம்பிக்கப்போவது  இனிமேலே எனும் போது, அடுத்த 60 நாட்களுக்கு சரமாரியாக குட்டிக்கரணங்கள் அடிக்க ரெடியாகிட வேண்டும் ! 

So yet another புது முயற்சிக்குள் புகுந்து ஜெயம் கண்டிட, அந்த சந்தன கணேச பெருமானின் ஆசிகளைக் கோரியபடிக்கே விடைபெறுகிறேன் folks ! முன்பதிவுகள் ஆன்லைனிலும் ரெடி !! போட்டுத் தாக்கலாமா ?

P.S : ஈரோட்டுக்கு சீனியர் எடிட்டர் + கருணையானந்தம் அவர்களை வழக்கம் போல அழைத்து வர எண்ணியுள்ளோம் ! இயன்றால், நமது office டீமையுமே !!

Sunday, June 04, 2023

Mr.P & Mr.U.P. !!

 நண்பர்களே,

வணக்கம். ஒரே நேரத்தில் உங்களுக்கு 2 அடையாளங்கள் உண்டு guys ! "சுலபமாய்க் கணிக்கக்கூடியவர்கள்" என்பது ஒரு அடையாளமெனில், "இம்மியும் கணிக்க இயலாதவர்கள்"  என்பது அடையாளம் # 2 !! 

சில தருணங்களில், உங்களுக்கு செமையாகப் புடிக்கும் என்ற நம்பிக்கையினில், ஏதேதோ ரெசிபிக்களை யூடியூபில் தேடிப்பிடித்து, எங்கெங்கிருந்தெல்லாமோ exotic ஐட்டங்களைக் கொள்முதல் பண்ணி, "செம wonderful dish ya...இதை சப்பானிலே சாக்கி சான் சாப்ட்டாகோ ;  மொரோக்கோவில மைக்கேல் சாக்ஸன் சாப்ட்டாகோ" என்ற பில்டப் சகிதம்,  'டக்கிலோ' என்ற சமையலை ஆரம்பித்தால், அடுக்களை பக்கமாய் மயான நிசப்தம் நிலவிடுவதுண்டு ! அதே சமயம் "க்ளாஸிக் மறுபதிப்புகள்" என்ற சர்க்கரைப் பொங்கலை, வழக்கமான பச்சரிசியும், வெல்லமும், நெய்யும் போட்டு, அடுப்பில் ஏற்றிய  நொடியே, பிகில்கள் காதை பிளப்பதுண்டு ! Predictable & Unpredictable too folks !!

நேற்றைய பதிவினில், உங்களின் அந்த 2 அடையாளங்களையுமே தரிசிக்க எனக்கு இயன்றது ! "கார்சனின் கடந்த காலம்" நிச்சயமாய் உங்களின் ஆர்ப்பரிக்கும் அபிமானங்களை ஈட்டிடும் என்றமட்டில் என்னால் யூகிக்க முடிந்திருந்தது ! So உங்களை Mr.Predictables ஆக அங்கே பார்த்திட முடிந்தது ! 

அதே சமயத்தில், "MAXI சைசில் போட்டாலென்ன ?" என்ற எனது நப்பாசைக்கு, பிய்ந்த விளக்குமாறுகளே பரிசாகப் பறக்குமென்று  எதிர்பார்த்திருந்தேன் ! "ரெண்டாம் கண்ணாலம் கட்டப் போற ஆன்ட்டிக்கு, பார்லருக்குப் போய் bridal makeup வேற கேக்குதோ ?" என்று முட்டுச் சந்துக்குள் கடாசிக் குமுறி எடுப்பீர்கள் என்றே எதிர்பார்த்திருந்தேன் ! இருந்தாலும் வடிவேலு பாணியில், கொஞ்சம் விறைப்பாக நின்னுக்கினே "ஆருகிட்டே கேக்க போறோம்....நம்ம அண்ணனுங்க..தம்பிங்க கிட்டே தானே ? மிஞ்சி போனா ஒரு ராவுக்கோ, ரெண்டு ராவுக்கோ மூ.ச.விலே வைச்சு ராவி எடுப்பாங்க !! போவோம்..போயி தான் பாப்போமே ?! என்றபடிக்கே பிட்டைப் போட்டு வைத்தேன் ! And ஆத்தாடியோவ்...சுனாமியாய் ஆதரவு - proving that you can be Mr.Unpredictables too !!

சேலத்திலும் சரி, கரூரிலும் சரி, திருப்பூரிலும் சரி, பூத் ஏஜெண்ட்கள் உருட்டைக்கட்டைகள் சகிதம் ஓட்டுக்களை சாகுபடி செய்தது ஒருபக்கமென்றாலும், நமக்கு ஓசையின்றி வந்துள்ள மின்னஞ்சல்களிலும், வாட்சப் தேர்வுகளிலும் கிட்டத்தட்ட 90% வோட்டுக்கள் MAXI சைசுக்கே விழுந்துள்ளன ! இன்னமும் நேரம் இருப்பதால் இதோ - நேற்றைக்கே நான் போட ரெடி பண்ணி வைத்திருந்த independent poll-ன் லிங்கையும் இங்கே தருகிறேன் இப்போது !

https://strawpoll.com/polls/e7ZJGpl9Gy3

ஒரு பார்வை அங்கேயும் பார்க்கலாமே folks ?

எது எப்படியோ - I now have here the numbers & details for the ஈரோட்டு சம்பவம்ஸ் :

1.சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் - ரூ.330 

2.The BIG BOYS ஸ்பெஷல் - ரூ.300 

3.விதி எழுதிய வெள்ளை வரிகள் - ரூ.100 

4.மார்ட்டின் in கலர் - ரூ.85 

5.(ஒரிஜினல் ஆடலும், பாடலுடனும் )கார்சனின் கடந்த காலம் !

கா.க.கா.MAXI சைஸ் தேர்வாகிடும் பட்சத்தில் - மொத்த package : ரூ.1550 + கூரியர் என்றிருக்கும் ! கூரியர் கட்டணங்கள் பற்றி நாளை தெரிந்ததும் சரியாக அறிவித்து விடுகிறேன் !

இது முன்பதிவுகளுக்கான பிரத்தியேக விலை மாத்திரமே - which means MAXI சைசிலான கா.க.கா.விற்கென நீங்கள் தரவிருப்பது ரூ.735 மட்டுமே !

கடைகளிலோ, இதழ் வெளியான பிற்பாடு விழாக்களிலோ வாங்கிட எண்ணிடும் பட்சத்தில் the price would be higher ! முன்பதிவுகள் செய்யாது அந்நேரம் கழுவிக் கழுவி ஊத்திடும் சங்கத்தைச் சார்ந்தோராய் நீங்கள் இருப்பின், sorry folks ! Can't do much about it ! 

And "இது வேணாம் ; அது போதும்" என்று தேர்வு செய்து வாங்கிட நீங்கள் எண்ணும் பட்சத்தில், உங்கள் தேர்வுகளோடு ஒரு வாட்சப் தகவலை  73737 19755 என்ற ஆபீஸ் நம்பருக்கு அனுப்பினால், கூரியர் சேர்த்து எவ்வளவு அனுப்பிட வேண்டுமென்று சொல்லுவார்கள் ! இங்கே நான் தந்துள்ளது மொத்தமாய் 5 இதழ்களையும் வாங்கிடவுள்ள நண்பர்களுக்கான முன்பதிவுக் கட்டணம் மாத்திரமே ! முன்பதிவுகள் ஜூலை 10 வரையிலும் தான் guys !! 

And ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்ள விரும்புவோராய் நீங்கள் இருக்கும் பட்சத்தில், கூரியர் கட்டணங்களுக்கு அவசியங்கள் இராது ! ஆனால் அதை முன்கூட்டியே நீங்கள் தெரிவிக்க வேண்டியிருக்கும் - for us to bring your books there !

Phewwwww !! 'எல்லாத்தையும் கவர் பண்ணியாச்சு' என்றபடிக்கே மல்லாக்கப் படுத்தால், நிச்சயமாய் ஏதேனுமொரு புதுக் கேள்வியோடு நம்மாட்களை நாளைக்குப் பந்தாடுவீர்கள் என்பது தெரிந்தது தான் !! But still இப்போதைக்கு எல்லா பக்கமும் கேட்டை போட்டாச்சு என்ற நினைப்போடு ரூபினின் பணிகளை நிறைவு செய்யக் கிளம்புகிறேன் guys ! Bye for now ; have a sweet Sunday !! 


Saturday, June 03, 2023

மூணு விரல்களுள் ஒண்ணைத் தொடுங்கோ !

 நண்பர்களே,

வணக்கம். மாடு மேல் முட்டாமல், ஒழுங்காய்த் தண்டவாளங்களில் ஓடிடும்  'வந்தே பாரத்' ரயில்களின் வேகத்தோடு ஒப்பிடுவதாயின், நமது DTP அணியின் ஸ்பீடை சொல்லலாம் தான் ! நான் மூணு நாள் மாங்கு மாங்கென்று கண்முழிச்சி  எழுதி அனுப்பும் பேப்பர்களை, தோனியின் ஸ்டம்பிங்க் ஸ்பீடில் முக்கால் நாளுக்குள் டைப்செட் செய்து, மேஜையில் கொண்டு வந்து அடுக்கி விடுவார்கள் ! ஆனால்.....ஆனால் முதல்வாட்டியாய், லொடக்கடி..லொடக்கடி என்று நமது DTP வண்டி தவழ்ந்த சம்பவம், நேற்றும் இன்றும் அரங்கேறி வருகிறது and in many ways என்னால் அவர்களின் மெதுவேகத்தினைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது ! 2 தினங்களுக்கு முன்பாய் நான் விவரித்திருந்த ரூபின் கதையின் மண்டை காயச் செய்திடும் பணிகளில் தான் நானும் சரி, அவர்களும் சரி - பிசியாக இருந்து வருகிறோம் ! And மொழிபெயர்ப்பினில் எனக்குப் பிதுங்கும் விழிகள், டைப்செட்டிங்கிலுமே அவர்கட்கு அதே ரீதியினில் பிதுங்கி வருகிறது ! இதோ - பக்கம் 34-ஐ தான் தொட்டிட முடிந்துள்ளது நேற்றும், இன்றுமாய்ச் சேர்த்து பேனா பிடித்ததில் !! So இந்தப் பதிவினை ஒரு நெடும் பதிவாய் அமைக்க 'தம்' லேது folks ; காலத்தில் இங்கே அட்டெண்டன்ஸ் போட்டு முடித்து விட்டு ரூபினை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திடக் கிளம்பியாக வேணும் ! 

போன பதிவினில் நான் விவரித்திருந்த "ஈரோட்டுச்  சம்பவம்ஸ்" இங்கே வலைப்பக்கத்தினில் ஏற்படுத்திய ரகளைக்குச் சற்றும் குறைச்சலில்லாத ஆரவாரத்தை நமது front desk மத்தியிலும் அரங்கேற்றிக் காட்டியுள்ளன ! வெள்ளி காலை முதலாகவே நம்மாட்களுக்கு சரமாரியான போன்கள் - "மொத்த புக்ஸ் எண்ணிக்கை கித்னா ? அமௌன்ட் கித்னா ?" என்று ! இதில் கொடுமையென்னவெனில் வியாழன் நள்ளிரவுக்கு இங்கே பதிவைப் போட்டுப்புட்டு, கொஞ்ச நேரம் உங்களோடு உரையாட நேரமும்  செலவிட்டு விட்டு, கட்டையைக் கிடத்தக் கிளம்பிய போதே மணி ஒன்றைத் தொட்டு விட்டிருந்தது ! So காலையில் பத்து மணிக்கு ஆபீசுக்கு வரும் நம்மாட்களிடம் இந்த அறிவிப்புப் பற்றி விளக்கிச்  சொல்ல எனக்கு அவகாசம் இருந்திருக்கவில்லை ! As a result, ஆளாளுக்கு "ஈரோட்டு சம்பவம்ஸ்" பற்றிக் கேட்டு, சிவகாசியில் செய்த சம்பவம்ஸில், எதுவுமே தெரிந்திருக்காத நம்மாட்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோமென்று ஓட்டமெடுக்காத குறை தான் ! But to their credit, இத்தனை காலத்தில் எனது குரங்கு பல்டிகளுக்குப் பழகியும் விட்டார்கள் ! So ஆளாளுக்கு நீங்கள் "சம்பவம்ஸ்" பற்றி விசாரிக்கும் போதே, "நம்ம பிராந்தன்  ராவுக்கு ஏதோ புதுசா அள்ளி விட்டிருப்பான் போல !!" என்பதைப் புரிந்து கொண்டுவிட்டு, மெதுவாய் எனக்கு போன் அடிச்சு விபரம் கேட்டார்கள் ! "திங்கட்கிழமை சொல்லிக்கலாம் ; அதுக்கு முன்னே பதிவில் விபரங்களை நானே போட்டிருப்பேன்" என்று சொல்லி விட்டு, மறுக்கா ரூபினுடன் கரம் கோர்க்கக் கிளம்பி விட்டேன் !  

To recap - ஈரோட்டு சம்பவம்ஸ் பட்டியலில் உறுதிப்படுத்தப்பட்ட ஆல்பங்கள் இவையே :

1 சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் - II 

2 The BIG BOYS ஸ்பெஷல் !

3 கி.நா. - "விதி எழுதிய வெள்ளை வரிகள்" !

4 மர்ம மனிதன் மார்ட்டின் - கலக்கலான கலரில் !

பட்டியலின் முதல் இதழ் கிட்டத்தட்ட ஏகோபித்த thumbsup பெற்றுள்ளது என்பதால் அண்ணாச்சி ஹேப்பி ! 

And இரண்டாம் க்ளாஸிக் ஆல்பமுமே தெறிக்கச் செய்யும் வரவேற்பினை ஈட்டியுள்ளது கண்கூடு ! யுகங்களாய் வெயிட்டிங்கில் இருந்த தானைத் தலீவரின் "கொலைப்படை" & கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாய்ப் பார்வைகளில் பட்டிருக்கவே செய்திராத இரும்புக்கை நார்மனும் இந்த இதழ்களின் highlights என்றால் அதனில் no மிகை ! And மாயாவியாரின் ஆக்ஷன் த்ரில்லர், கேக் மீதான ஐஸிங்குக்கு சமானம் என்பேன் ! ஒரு iconic இதழினை மறுக்கா ஆரவாரமாய் மறுபதிப்பு செய்திடும் தருணத்தில் அதே அட்டையினை உருவாக்கினால் தேவலாம் என்று பட்டது ! அந்நாட்களில் நாம் பயன்படுத்திய அட்டை டிசைன் Fleetway ஒரிஜினல் & அப்போதைய transparency color negative ஆக வந்திருந்தது ! அதெல்லாம் இயேசு கிறிஸ்து காலத்து டெக்நாலஜி என்பதால் அதனை இப்போது பயன்படுத்த வழி லேது ! So நமது சென்னை ஓவியரைக் கொண்டு உருவாக்கிய டிசைன் இது - வெவ்வேறு நிலைகளில் ! இறுதி output இனி மெருகூட்டலுக்கும், நகாசு வேலைகளுக்கும் போய், ஹார்ட்கவர் இதழாய் உங்களை ஆகஸ்டில் சந்திக்கும் சமயத்தினில், கீர்த்தி சுரேஷுக்கு, கீர்த்தி ஷெட்டிக்கும் செம tough தரவல்ல அழகில் மிளிர்ந்திடும் ! 





Variant கவர் என்பதால், இதே இதழுக்கான மாயாவியின் அட்டைப்படத்தினை அடுத்த பதிவில் காட்டுகிறேன் ! In fact அது கூட, முத்து காமிக்சில் இதே சாகசத்துக்குப் போடப்பட்ட ஒரிஜினல் சித்திரமே ! அதனை தேடிப்பிடித்து எடுத்து, டிஜிட்டலாக improve செய்திடும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் ! So உங்களுக்கு ஸ்பைடர் அட்டைப்படம் வேண்டாம் என்றால் மட்டுமே நம்மாட்களுக்குச் சொல்ல வேண்டி வரும் ! எதுவும் சொல்லாத பட்சத்தினில், by default ஸ்பைடர் அட்டைப்படத்துடனான ஆல்பம் உங்களதாகிடும் ! 

தேர்வுகள் # 3 & 4 புதுச் சரக்கு என்பதோடு, பெரிய விலைகளும் கொண்ட இதழ்கள் அல்ல என்பதால், "வன்மையாக கண்டிக்கிறேன்" என்ற ரீதியிலான கண்டனங்கள் ஏதும் கண்ணில்படவில்லை ! So ஓ.கே என்ற சாப்பாவை அங்கேயும் குத்தி விட்டு தேர்வு # 5 பக்கமாய்ப் போய் நிற்கிறேன் !! 

வெந்நீர்த்தொட்டிக்குள் பெருசு கார்சன் குளியல் போட்டுக்கினே "பாட்டு ஒண்ணு எடுத்துவிடட்டுமா கண்ணுகளா ?" என்ற கேள்வியை உங்களிடம் முன்வைக்கும் போதே, தேர்வாகிடக்கூடிய இதழ் எதுவென்று யூகித்திருப்பீர்கள் என்றே எண்ணியிருந்தேன் ! But 'பளிச்' என்று அடித்துச் சொல்லாமல், "இதுவா இருக்குமோ ? அதுவா கீதுமோ ?" என்று ஆளாளுக்கு வினாக்களை எழுப்பிய வண்ணமே சுற்றி வந்ததில் எனக்கு லைட்டான ஆச்சர்யமே ! டெக்ஸ் ஆண்டு # 75 என்ற மைல்கல் புலர்ந்த  போதே - இரவுக்கழுகாரின் மெகா கதைக்குவியலினுள் நமக்கும் சரி, பல்வேறு  தேசங்களது டெக்ஸ் ரசிகர்களுக்கும் சரி, "தேர்வு # 1" ஆக இருந்துவரும் "கார்சனின் கடந்த காலம்" இதழுக்கு, நம்ம கோவை கவிஞரிடம் ஒரு கால் கிலோ "கவித" வாங்கிப் போய் Limited Collector's Edition ஆக வெளியிட எண்ணியிருந்தேன் ! கா.க.கா. இதழின் இதற்கு முன்பான வண்ண மறுபதிப்பு வெளிவந்துமே கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டிருக்க, இம்முறை அழகாய், நேர்த்தியாய் இந்த இதழை ஒரு ஹார்ட்கவர் அட்டகாசமாய் உங்களிடம் தந்திடும் துடிப்பு உள்ளுக்குள் அலையடித்தது ! But  உள்ளுக்குள் இருக்கும் பாரதிராஜா சாருக்கு பக்கத்து வீட்டான், வழக்கம் போலவே - "ஐ வாண்ட் மோர் யமோஷன்ஸ்" என்று ஆர்ப்பரிக்க, லைட்டாய் ஒரு குழப்பம் ! 

என்ன குழப்பம் என்கிறீர்களா ? Simple enough folks :

*336 பக்கங்கள் கொண்ட இந்த ட்ரிபிள் ஆல்ப சாகசத்தினை ரெகுலரான டெக்ஸ் சைசில் (half MAXI) கலரில், ஹார்ட்கவரில், ரூ.450 விலையினில், TEX CLASSICS வரிசையினில் வெளியிடலாம் ! இது நார்மல் version ஆக இருந்திடும் ! 

*But அதே 336 பக்கங்களை, மெகா சைசில்..."தலையில்லாப் போராளி" பாணியில்...சித்திரங்கள் பெருசாய், அழகாய்த் தெரியும் விதத்தில்... கலரில்...ஹார்ட்கவரில் வெளியிட்டால் எண்ணூற்றுச் சொச்சம் விலையாகும் தான் ; but தெறிக்க விடும் Collector's இதழாக அமைந்திடக்கூடுமே என்று மண்டைக்குள் ஒரு மங்குணி மகானின் குரல் ஒலித்தது ! இந்த மைல்கல் ஆண்டினில் திட்டமிடப்பட்டுள்ள புது இதழ்களெல்லாமே கூட நார்மலான அளவினிலேயே இருக்கப் போகின்றன ! இந்தச் சூழலில் இந்த ஒற்றை இதழாவது செம standout இதழாக அமையக்கூடுமே என்றும் மங்குணியார் அபிப்பிராயப்பட்டார் ! So அதுவே குயப்பத்தின் சாராம்சம் ! 

"நார்மலே நலம் !" என்ற நார்மலானந்தாவின் குரலுக்கு செவி சாய்ப்பதா ? 

அல்லது 

"நார்மலிலான சம்பவமெல்லாம் சம்பவமே அல்ல ; மாக்சியில் செய்யும் சம்பவமே அவற்றுள் தலை !" என்று மங்குணியாரின் பொன்மொழிக்கு தலையசைப்பதா ? 

*அல்லது பட்ஜெட் ரொம்பவே உதைக்குமென்று தோன்றும் பட்சத்தில், ரூ.300 விலைக்கு "ஓநாய் வேட்டை" Tex Classics தற்போதைய template-ல் கலரிலேயே ; ஹார்ட்கவரிலேயே நுழைத்துப்புடலாமா ?!

நேக்கு தெரியலீங்கோ - உங்கள் தேர்வே கம்பெனியின் தேர்வாக இருக்கப்போகிறது  !  So சொல்லுங்களேன் அண்ணாச்சி : 

*நார்மலானந்தாவா ? 

*மங்குணியாரா ? 

*பட்ஜெட் பத்மநாபனா ?

எந்தத் தேர்வு டிக் ஆனாலும் நமக்கு ஓ.கே தானுங்கோ ! 

So காரசாரங்களின்றி ; கத்தி, கப்படாக்களைத் தேடி எடுக்கும் அவசியங்களின்றி ; கழுவிக்கழுவி காக்காய்க்கு ஊற்றும் முனைப்புகளுமின்றி, பதில்ஸ்  ப்ளீஸ் ? இங்கே பதிலளிக்க ஏதேனும் நெருடல்ஸ் இருப்பின், நமது மின்னஞ்சல் முகவரிக்கோ ; 73737 19755 என்ற ஆபீஸ் வாட்சப் நம்பருக்கோ உங்களின் தேர்வுகளைத் தெரிவிக்கவும் செய்யலாம் ! 

And FB / வாட்சப் க்ரூப்களின் admins : இதே கேள்வியினை உங்கள் வட்டங்களுக்குள்ளும் சுற்றி விடலாமே - ப்ளீஸ் ? திங்கள் காலையில் ஈரோட்டு சம்பவம் லிஸ்ட் + பட்ஜெட் ரெடியாகிட வேண்டியிருக்கும் என்பதால் ஒரே நாளின் அவகாசம் மட்டுமே ப்ளீஸ் !

தெய்வமே...பெய்த லேசான மழையில் மூ.ச. கொஞ்சம் சுத்தமா இருந்தா தப்பிச்சேன் !! ஜெய் ப்ளீச்சிங் பவுடர் ! Bye all ....see you around !! Have a super weekend ! 

Thursday, June 01, 2023

வியாழனின் வாக்குறுதி !!

 நண்பர்களே,

வணக்கம்.  "விசாலக்கியமையே அடுத்த பதிவு வந்துப்புடும் !" என்று கெத்தாய் அள்ளி விட்ட போது, இடையினில் முழுசாய் நாலைந்து நாட்கள் இருப்பது போலவே இருந்தது ! ஆனால் CSK வெற்றியின் புண்ணியத்தில் ஒரு திங்கள் முழுக்கவே சிவராத்திரியாகிப் போயிருக்க, ராவிலே தூங்காம செவ்வாய் முழுக்க ஆபீசில் சாமியாடிக்கினே இருந்து விட்டு, புதனன்று முட்டைக்கண்களை அகல விரித்துப் பார்த்தால் - 'இன்னும் ஒரே நாளில் வெசாழன் புலர்ந்திடும் மாப்பு !!' என்று காலெண்டர் கூவியது ! "ஆஹா...நமக்கு மொத எதிரி நம்ம முந்திரிக்கொட்டை வாய் தான்" என்பதை நானூற்றி அறுபத்தி ஆறாம் தபாவாய் உணர்ந்த நொடியினில், என் முன்னே கிஞ்சித்தும் எதிர்பார்த்திரா ஒரு மண்டை காயச் செய்யும் முரட்டுப் பணி காத்திருப்பது உறைத்தது !! 

'நீ டின்டினுக்கு டான்ஸ் ஆடுவியோ, ஈரோட்டுக்கு இங்கி-பிங்கி-பாங்கி போடுவியோ தெரியாது ; ஆனா அதுக்கெல்லாம் முன்பாக மூஞ்சிக்கு முன்னே காத்திருக்கும் "சம்மர் ஸ்பெஷல்" இதழுக்கொரு பதில சொல்லுடியோய் !!" என்று அட்டவணையானது என்னிடம் கூவுவது போலிருந்தது !! மொத்தம் 4 சாகசங்கள் கொண்ட இந்த ஹார்ட்கவர் இதழினில், ஆல்பா & சிக் பில் கதைகளுக்கு DTP பணிகள் முடிந்து என் மேஜையில் கிடக்க, டேங்கோ & டிடெக்டிவ் ரூபினுக்கு நான் பேனா பிடிக்க வேண்டியவன் ! 54 பக்கங்கள் டேங்கோ + 46 பக்கங்கள் ரூபின் என மொத்தம் 100 பக்கங்கள் காத்திருந்தன ! டின்டினுக்கு வசனங்களை finetune செய்திடும் பணியானது ஆஞ்சநேயரின் வால் போல நீண்டு கொண்டே சென்றிட, அதற்குள் கொஞ்ச நேரம், டேங்கோவுடன் கொஞ்ச நேரமென நேரத்தினை செலவிட்டதில் 2 நாட்களுக்கு முன்னே டேங்கோவுக்கு 'சுபம்' போட இயன்றது ! ரைட்டு....ஒரே மட்டுக்கு சம்மர் ஸ்பெஷலின் பணிகளை முடித்து விடலாம் என்றபடிக்கே டிடெக்டிவ் ரூபினின் "96 மணி நேரங்கள்" கதையினை எடுத்து வரச் சொன்னேன் மைதீனிடம் ! பட்ஜெட் தாக்கல் செய்யப்போகும் நாளில், நிதி அமைச்சகத்திலிருந்து பண்டல் பண்டலாய்க் காகிதங்களை வண்டியில் ஏற்றுக் கொண்டு போவார்களே ; அது போலானதொரு பண்டலோடு ஆஜரானான் மைதீன் ! "இல்லேப்பா...மற்ற கதைகளையெல்லாம் நான் அப்புறமா பாத்துக்குறேன் ; இப்போதைக்கு ரூபின் மட்டும் எடுத்திட்டு வா - போதும் !" என்றேன் ! அவனோ தயங்கியபடியே "இது ரூபின் கதை மட்டும் தான் அண்ணாச்சி !" என்றான் ! மலங்க மலங்க முழித்தேன் - அவன் மேஜையில் வைத்திருந்த கத்தையின் பரிமாணத்தையும், பருமனையும் பார்த்து ! நமது பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பாளரை நானிங்கு நிரம்பத் தடவைகள் சிலாகித்துள்ளேன் தான் ; ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனுமொரு தருணத்தில் என்னை விக்கித்துப் போகச் செய்ய அவர் தவறுவதே கிடையாது ! ரொம்பச் சமீபத்தில் 70 அகவைகளைப் பூர்த்தி செய்தவர் ; வீட்டில் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்ந்து அக்கடாவென்று ஓய்வினை கழிக்க ஆண்டவன் எல்லா வசதிகளைத் தந்திருந்தும், கடமையே கண்ணாய் கடந்த 22 ஆண்டுகளாய் நாம் தரும் பட்டாணிக்கடலை சன்மானங்களை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, வண்டி வண்டியாய் மொழிபெயர்ப்பினை செய்து வருபவர் ! And அவரது சர்வீஸுக்கே கூட இம்முறை ரூபின் ஒரு செமத்தியான சவாலாக இருந்திருக்க வேண்டுமென்பேன் !! Simply becos - "96 மணி நேரங்கள்" ஒரு சிம்பிளான கதையாகவே இருக்கவில்லை & அதன் இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் இருந்தது - அப்படியொரு தடிமனில் !!! கோடு போட்ட பரீட்சை தாளில் அழகாய், அடித்தல், திருத்தம் இல்லாத கையெழுத்தில் மொத்தம் 50 பக்கங்கள் இருந்தது ஸ்கிரிப்ட் !!

ஏற்கனவே சொன்னது தான் - செம சோம்பேறி மாடன் என்பதால் எழுதும் எந்தக் கதையையும் நான் துவக்கத்திலேயே முழுசுமாய் படிக்க நேரம் எடுத்துக் கொள்வதில்லை ! உங்களை போலவே பக்கம் பக்கமாய்ப் பயணிப்பதே எனக்கும் வழக்கம் ! So மைதீன் மேஜையில் வைத்துப் போயிருந்த கதையின் ஒரிஜினல் பக்கங்களை எடுத்து மொள்ளமாய்ப் புரட்டினேன் - கதையின் ஓட்டம் எவ்விதமுள்ளதென்று பார்க்க ! நிரம்ப ஆக்ஷன் கண்ணில்பட்டது தான் ; but பக்கத்துக்குப் பக்கம் பேசுறாங்க...பேசுறாங்க..பேசிட்டே போறாங்க பாரு மக்கா, நம்ம ஸ்டீலெல்லாம் வெறும் கொயந்தைபுள்ளை என்று சொல்லும் ரேஞ்சுக்குப் பேசுறாங்க ! பொதுவாய் டெக்ஸ் கதைகளில் ஆக்ஷன் sequences-ல் எனக்கு வேலையே இராது...டமால்..டுமீல் என்று குறிப்பதைத் தாண்டி ! டேங்கோவில் கூட வசனங்களை கணிசம் தான் என்றாலும், சித்திர ஜாலங்களில் நாம் மெய்மறந்திட நேர்ந்திடும் பக்கங்களிளெல்லாமே வசனங்களை ஒரு மிடறு குறைவாகவே இருந்திடும் ! So ஒரு மாதிரிச் சமாளித்து விட்டிருந்தேன் ! ஆனால் இங்கேயோ புரட்டப் புரட்ட, கண்ணில்பட்ட பக்கங்களிளெல்லாமே மூச்சு விட நேரமின்றி கதை மாந்தர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் ! பொதுவாய் இது போலான கதைகள் ஒருவித அயர்ச்சியினை ஏற்படுத்திடுவதே வழக்கம் ; ஆனால் இங்கேயோ ஒரு இனம் புரியா வசீகரம் ! இன்னதென்று சொல்லத் தெரியாத ஏதோவொன்று, என்னைக் கையைப் பிடித்து இந்தக் கதைக்குள் நுழைக்க முனைவதை உணர முடிந்தது ! 

'டேங்கோ'வுக்கு சுபம் போட்ட முப்பதாவது நிமிடமே ரூபினுக்குள் புகுந்தால் - oh wow !! இந்தப் பதிவினை டைப்பும் தருணத்தில் நான் தொட்டிருப்பது 12-ம் பக்கத்தைத் தான் ; and கதையின் பிற்பகுதி எவ்விதம் இருக்கவுள்ளதோ - no idea at all !! ஆனால் இது வரைக்குமான பக்கங்களில் ஒரு க்ரைம் த்ரில்லருக்கான பரபரப்பு சும்மா தீயாய் இழையோடுகிறது ! ஒரு வசதியான குடும்பத்து அம்மணி, வாழ்க்கையில் மொத தபாவாய் ஆத்துக்காரனுக்கு துரோகம் செய்திடும் முனைப்பினில் காட்டுக்குள் இருக்கும் ஒரு காட்டேஜில் தனது கள்ளக்காதலனைச் சந்திக்கிறாள் ! "இதென்ன ஒரே குஜால்ஸ் பார்டீஸ் சீசனா கீதே...?? இது நல்ல லவ்சா ? நொள்ளை லவ்சா ? என்ற ஆராய்ச்சி பண்ண மறுக்கா நம்மாட்கள் களமிறங்கணுமோ ? " என்றபடிக்கே கதையோடு நகர்ந்தால், நாலாம் பக்கத்திலேயே நான்கு தோட்டாச் சத்தங்கள் கேட்கின்றன & Mr.க.கா. காலுக்குள் கிடக்கிறான் பாடியாய் !!  ஒரு கொலை விழுந்த நொடி முதலாய் பறக்க ஆரம்பிக்கும் இந்த சாகசத்தில் கதாசிரியர் வைத்துள்ள முடிச்சுகள் என்னவோ - இன்னமும் எனக்கே தெரியாது தான் ! But சர்வ நிச்சயமாய் இதுவொரு வித்தியாசமான த்ரில்லராகவே இருக்குமென்று உளுந்தவடை சொல்கிறது ! பொதுவாகவே இதுபோலான பணிகளிலிருந்து, பின்னங்கால் பிடரியிலடிக்க ஓட்டமெடுக்க விழைந்திடும் எனக்கே இதன் கதைக்களம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், பணியின் கடுமை கண்ணில் தெரிய மாட்டேன்கிறது ! So அடுத்த சில நாட்களுக்குள் நமது  70 வயது மொழிபெயர்ப்பாளர் போட்டுத் தாக்கிய கதையினை, இந்த 56 வயது இயைஞன் பிறாண்டியெடுக்கக் காத்திருக்கிறான் ! For all you know , பிற்பாதியில் கதை பப்படமாக இருந்து, எனக்கு செம பல்பு தரவும் வாய்ப்புண்டு தான் ; but இப்போதைக்கு I'm loving it !


ஒரு மாதிரியாய் ரூபின் வண்டியை தக்கி முக்கியேனும் இந்த வாரயிறுதிக்குள் பூர்த்தி செய்து விடலாமென்ற நம்பிக்கை இருப்பதால் - மெதுவாக "வெசால கெழமை பிராமிஸ்" பக்கமாய் கவனங்களைத் திருப்பினேன் ! வீட்டில் எனது work desk-ல் உள்ளதொரு 48 பக்கக் கட்டுரை நோட் தான் இப்போதெல்லாம் எனது அட்சய பாத்திரம் ! நம் கைவசமுள்ள கதைகளின் லிஸ்ட் ; அவற்றுள் நெடும் துயில் பயிலும் கதைகள் எவை ? நமது ரேடாரில் இருக்கின்ற தொடர்கள் எவை ? என்ற முழு விபரங்களும் அதனில் உண்டு ! So அண்டா காக்கஸூம் ; குண்டா பாக்கசூம் என்ற உச்சாடனங்களுக்கெல்லாம் அவசியமே லேது ! பட்ஜெட் இன்னதென்று தீர்மானம் மட்டும் ஆகி விட்டால், சைஸ் சைஸாய் ; ரகம் ரகமாய் கதைகளுண்டு ! 

"ரைட்டு...இத்தினி சரக்கை பூதமாட்டம் காவல் காத்திக்கினு இருந்தும், இது போலான தருணங்களில் மறுபதிப்புகளையே கட்டி மாரடிப்பானேன்டா தம்பி ?" - என்ற உங்களின் ஒரு (சிறு) அணியின் குரல் காதுகளில் விழாதில்லை தான் ! இது ஏற்கனவே பதிவில் துவைத்துத் தொங்கப்போட்ட மேட்டர் தான் என்றாலும், இங்கேயும் ஒரு தபா சற்றே விசாலமாய் அலசி விடுவதில் தவறில்லை என்பேன் ! மறுபதிப்புகள் ஆபத்பாந்தவர்களாய் எனக்குத் தோன்றிட காரணங்கள் இரண்டு folks ! பிரதானமானது - உங்களின் பெரும்பான்மையின் மாற்றம் கண்டிடா பழமை மோகம் ! காமிக்ஸ்களுக்கும், பால்ய நினைவலைகளுக்கும் சொர்க்கத்தில் போட்ட முடிச்சோ என்னவோ - நம்மில் கணிசமானோருக்கு முன்னாட்களில் ரசித்த கதைகளோடே  மறுக்கா சவாரி செய்வதில் அலாதி ஆனந்தம் என்பதில் no secrets ! So உங்களின் அந்த அவாக்களும், அவற்றின் நீட்சியான விற்பனை உத்வேகங்களும் ஒன்றிணைந்து எனது காரணம் # 1 ஆகிறது ! And காரணம் # 2 - புதுசாய் ஒரு மொழியாக்கம் ; எடிட்டிங் ; அட்டைப்படம் இத்யாதி..இத்யாதிகளை செய்திடத் தேவை இல்லையே என்ற shortcut தான் ! Maybe நமது ரெகுலர் அட்டவணைகள் கொஞ்சம் லாத்தலாக இருப்பின், இடையில் புகுந்திடக்கூடிய ஸ்பெஷல் இதழ்களுக்கு உழைப்பைத் தருவது சாத்தியமாகிடலாம் தான் ! ஆனால் "பங்குனி ஸ்பெஷல்" ; "மங்குணி ஸ்பெஷல்" என்ற ரேஞ்சுக்கு எதையேனும் போட்டுச் சாத்தி வரும் சூழலில், அந்தந்த மாதங்களின் அட்டவணைகளுக்கு நியாயம் செய்வதிற்குள்ளேயே நாக்கார் மாத்திரமன்றி பல்லார், கடைவாயார் ; உண்ணாக்கார் - என வாய்க்குள் இருக்க வேண்டிய சகல அவயங்களும் தொங்கிப் போய் விடுகின்றன ! லைட்டா கரிச்சட்டிக்குள்ளாற மண்டையையும், மீசையும் ஒரு முக்கு முக்கியெடுத்த கையோடு, ஊரிலுள்ள தெய்வங்களையெல்லாம் வேண்டியபடிக்கே 'தம்' கட்டி தேரை ஒரு மாதிரி இழுத்து விட்டு, "நோவே இல்லியே...நம்பளுக்கு தேர் இழுப்பதெல்லாம் தேன்குழல் சாப்புடற மாதிரி....ரெம்போ ஷிம்பிள் !!" என்று அடித்து விட்டுக் கொண்டிருந்தாலும், உள்ளாற பார்ட் பார்ட்டாய்க் கழன்று ஓடுவதெல்லாம் அடியேன் மாத்திரமே அறிந்த இரகசியம் ! And ஞான் அள்ளிவிடும் பீலாக்களையும், நமது டீம் உருண்டோ, புரண்டோ ஒவ்வொரு முறையும் தயார் செய்து பந்திக்குக் கொண்டு வரும் பதார்த்தங்களையும் பார்த்து விட்டு - "இவனுக ஏதோ ராக்கெட்டுக்கு ஊத்துற பெட்ரோலை வாய்க்குள்ளாற ஊத்திக்கிறானுக போலும் ! மெய்யாலுமே சூப்பர்மேனுக்கு பக்கத்து ஊட்டுக்காரவுக தான்டோய் !" என்று என்ற நம்பிக்கை பரவலாகிப் போகிறது  ! இதோ நாலு நாட்களுக்கு முன்னே கூட வந்ததொரு சேதி நம்மை சூப்பர் தாத்தாக்களாக உருவாக்கப்படுத்தியதன் தொடர்ச்சியே !! "வன்மேற்கின் அத்தியாயம்" மொத்தம் 75 பாகங்கள் என்று பார்த்தேன் ! வருஷத்துக்கு ரண்டு பாகம்னு போட்டு நாம என்னிக்கி கரை சேருறது ? நண்பர்கள்கிட்டே கேட்டுப்புட்டு மெகா தொகுப்புகளா போட்டு மூணோ, நாலோ வருஷத்திலே முடிக்கிற வழியைப் பாக்கலாமே ?" என்றிருந்தது ! அழுவதா ? சிரிப்பதா ? என்றறியாத அந்தக் கணத்தில் புரிந்தது - சாயச்சட்டியின் உபயமெல்லாம் மெய்யென்றே நண்பர்களில் சிலர் கருதி வருவது !! நெசத்திலே நாம புல்தடுக்கிப் பயில்வான்கள் தான் என்பது தான் கூத்தே ! Maybe அடுத்தாண்டு முதலாய் திட்டமிடலை சற்றே சுலபமாக்கிட இயன்றால், இது போலான ஸ்பெஷல் வேளைகளில் மெய்யாலுமே மூச்சு வாங்காது தேர் இழுக்க சாத்தியப்படக்கூடுமோ - என்னவோ ?! So குறுகியதொரு கால சாளரம் மாத்திரமே திறந்திருக்கும் சமயங்களில், பெருசாய், புதுசாய் குட்டிக்கரணங்கள் அடிக்க மேலெல்லாம் நோவுவதே நிஜம் ! கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்வரையிலும் ஈரோட்டில் சந்திப்பு ஒரு நிச்சயமான நிகழ்வு என்றிருக்க, அதற்கென எதையேனும் அட்டவணையிலேயே இணைத்திட இயன்ற வந்தது ! ஆனால் கொரோனா புண்ணியத்தில், தொடராய் மூன்று ஆண்டுகளுக்கு சந்திப்புகளும் சாத்தியமின்றிப் போயிட, ஈரோட்டுக்கென நடப்பு அட்டவணையினில் பெருசாய் எதையும் கோர்த்து விட்டிருக்கவில்லை ! So எது திட்டமிட்டாலும் அது அட்டவணைக்கு வெளியே - என்றே இருந்திட வேண்டியதாகிறது ! And in any case - அட்டவணையில் குல்பி ஐஸ்க்ரீமே இருந்தாலும், அதற்கு வெளியிலாக ரெண்டு குச்சி ஐஸாவது வாங்கிச் சப்புவதில் தானே நமக்கெல்லாம் ஆனந்தம் ?! So இந்தாண்டுக்கென்றான குச்சி ஐஸ் பக்கமாய்ப் பார்வையை ஓட விட்டேன் !!

தேறியது பால் ஐஸா ? சேமியா ஐஸா ? கிரேப் ஐஸா ? இரவு பத்தரைக்கு திட்டமிடல் சார்ந்த விபரங்களோடு ஆஜராகிறேன் guys !! அதுவரைக்கும் மனசுக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதாயின் வால்யூமை மட்டும் கூட்டிப்புடாதீங்கோ ? விளம்பர images ஒரு பக்கம் ரெடியாகிட இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை & நான் டைப்படிக்கவுமே ! So சந்திப்போம் - அத்தியாயம் 2-ல் !!

வெசாழனின் வாக்குறுதி - Part 2 :

ஏற்கனவே ஆகஸ்டில் மூணோ, நாலோ ரெகுலர் புக்ஸ் உண்டென்பதால் கொச கொசவென ஏகப்பட்டதை மறுக்கா களமிறக்குவானேன் ? என்ற சிந்தனையில் தான் "ஈரோட்டுக்கு இரண்டே ஸ்பெஷல்" மாத்திரம் என்று வரையறுக்க விழைந்தேன் ! நோட்டைத் திறந்தாலோ "இதைப் போடலாமோ ? அதைப் போட்டாலென்ன ?" என்று ரவுண்டு கட்டிக் குழப்பும் கதைகளின் அணிவகுப்பு ! 

அவற்றின் மத்தியில் தேர்வான முதல்  ஸ்பெஷல் : சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் II தான் ! (நமக்கு) ஒரு புத்தம்புதிய கதை + ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு என்ற இந்த காம்போவில் பால்யங்களின் நினைவூட்டல்களும் இருக்கும், புதுசானதொரு வாசிப்பும் இருக்கும் என்பதால் இந்த ஆல்பத்தை ஈரோட்டின் முதல் சம்பவமாய்த் தேர்வு செய்திடத் தீர்மானித்தேன் ! தவிர 1989-க்குப் பின்பாய் ஒரு புத்தம் புதிய சு.& வி.சாகசத்தினை வாசிக்கும் வாய்ப்பினை இந்த ஆல்பம் நமக்குத் தந்திடவிருப்பதும் ஸ்பெஷல் என்றுபட்டது ! எல்லாவற்றிற்கும் மேலாக, ஹாலந்திலிருந்துமே சு.&வி.ரசிகர்கள் இந்த ஆல்பத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து வினவிய வண்ணமுள்ளனர் ! So 2022-ன் most succesful இதழான சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் 1 க்கு வாரிசாக ஆகஸ்டில் "நானும் ரவுடி தான்" வெயிட்டிங் ! அதே ஹார்ட்கவர் ; அதே தயாரிப்புத் தரம் ; அதே பாணியில் 2 கதைகள் & அதே விலை ! 

ரைட்டு...! ஒரு குச்சி ஐஸ் தேர்வான கையோடு, அடுத்ததையும் தேர்வு பண்ணிப்புட்டால் வேலை முடிஞ்சதென்றபடிக்கே நடப்பாண்டு அட்டவணையின் "எங்கே ? எப்போது ?" பக்கங்களை நிதானமாய்ப் புரட்டினேன் ! பவுன்சர் மெகா இதழொன்று பிரதானமாய் கண்ணில்பட்டது & அதற்கான கோப்புகளும் தயாராய் இருப்பது நினைவிருந்தது ! ஆனால்...ஆனால்...கிட்டத்தட்ட 150+ பக்கத்து நெடும் சாகசம் எனும் போது இதனுள் புகுந்து, பணியாற்றி, கரைசேர்க்கும் வாய்ப்புகள் ரொம்பவே குறைச்சல் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! In fact ஆகஸ்டின் நமது ரவுசுகளுக்குப் பிற்பாடு, ஒரேயொரு மாத இடைவெளியினில், டெக்சின் THE SUPREMO ஸ்பெஷல் & அதன் மறுமாதத்தினில் தீபாவளி மலராய் THE SIXER ஸ்பெஷல் காத்துள்ளதை எண்ணி இப்போதே லைட்டாய் வயிற்றைக் கலக்குகிறது ! இரண்டுமாய்ச் சேர்த்து கிட்டத்தட்ட 1000 பக்கங்கள் !! So ஆகஸ்டின் பணிகளைக் கரைசேர்த்த சற்றைக்கெல்லாமே அந்த ஆயிரம்வாலாவுக்கு பதில் சொல்லிட நமக்குத் தெம்பு எஞ்சியிருந்திட வேண்டி வரும் ! இருப்பதை முழுக்கவே இப்போதே ஆற்றி விட்டால், அப்புறமாய் 'சேது' விக்ரம் போல மலங்க மலங்கவே முழிக்க இயலும் என்பதால் பவுன்சருடன் கை கோர்ப்பது இப்போதைக்கு வேண்டாமென்று தீர்மானித்தேன் ! அதன் பின்னே கண்ணில்பட்டது ஸாகோர் ஸ்பெஷல் ! 2 முழுநீள முழுவண்ண சாகஸங்கள் எனும் போது அங்கேயும் கிட்டத்தட்ட 260 பக்கங்களுக்கான பணி அவசியமாகிடும் ! So பவுன்சருக்குச் சொன்ன அதே பதிலையே ஸாகோருக்கும் சொல்லிய கையோடு பக்கத்தைப் புரட்டினால் கண்ணில்பட்டது THE BIG BOYS ஸ்பெஷல் ! 

ஸ்பைடரின் கொலைப்படை (அதே ஒரிஜினல் 2 வண்ணங்களுடன்) ; மாயாவியின் கொலைகாரக் குள்ளநரி & இரும்புக்கை நார்மனின் "மனித எரிமலை" என்ற முக்கூட்டணி இதழ், Full MAXI சைசில், ஹார்ட்கவரில் என்ற திட்டமிடல் செம கூலானதாக எனக்குத் தென்பட்டது ! And சிலபல மாதங்களுக்கு முன்னமே அதே ஒரிஜினல் ஸ்பைடர் அட்டைப்படத்தினை நமது சென்னை ஓவியரிடம் போட்டு வாங்கியிருந்ததும் நினைவுக்கு வந்தது ; சும்மா தெறிக்க விட்டிருந்தார் ! So இவை 1985 ; 1986 காலகட்டங்களிலிருந்தான மறுபதிப்புகள் எனும் போது, கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பின்பான ரீபிரிண்ட் முயற்சியினில் நிச்சயமாய்த் தப்பில்லை என்றும்பட்டது ! ஒரிஜினலாக Fleetway-ல் இந்தக் கதைகள் வெளியான அதே சைசில் நாமும் இந்த இதழைத் திட்டமிட்டிருப்பதால், ரொம்பவே க்யூட்டாக இந்த இதழ் அமைந்திடுமென்று நினைத்தேன் !  "ஊஹூம்..இதுக்கு இந்த சைஸ் கொலை பாதகமாகிடும் ; இது பாக்கெட் சைசில் வந்தால் தவிர உருப்படவே உருப்படாது !" என்று ஆசீர்வதிக்க நண்பர்கள் காத்திருப்பர் என்பதில் இரகசியங்களில்லை தான் !  ஆனால் ஒரிஜினலின் சுவடுகளில்   வரவிருக்கும் THE BIG BOSS ஸ்பெஷல் - will be ஈரோட்டின் சம்பவம் # 2 ! Again ஹார்ட்கவர் ; இம்முறை VARIANT அட்டைகளுடன் ! ரொம்பச் சீக்கிரமே ஸ்பைடரின் அட்டைப்படத்தினையும், மாயாவியின் அட்டைப்படத்தினையும் கண்ணில்காட்டி விடுவேன் ! உங்களுக்கு எது ரசிக்கிறதோ, அதனை மாத்திரமே வாங்கிடக் கோருவேன் ! (பெர்சனலாய் எனது தேர்வு ஸ்பைடரின் அட்டையாகவே இருந்திடும் ! புத்தக விழா audience-ஐ மனதில் கொண்டு மட்டுமே மாயாவியார் ! (இரண்டையுமே நீங்கள் வாங்கிட வேண்டுமென்ற பேராசையெல்லாம் நிச்சயமாய்க் கிடையாது ; மாயாவி அட்டைப்படம் மிகக் குறைவாக மாத்திரமே ரெடி செய்திடவிருக்கிறோம் !







ரைட்டு....ரெண்டு பொஸ்தவமேன்று அறிவித்தோம் ; ரெண்டை தேர்வு பண்ணியாச்சு ! கடைக்கு ஷட்டர் போட்டுப்புட்டுக் கிளம்பலாமென்று பார்த்தால் மனசில் கொஞ்சமாய் நெருடல் ! பழமையினை ஆராதிக்கும் மெஜாரிட்டி நண்பர்களுக்கு, இந்த 2 தேர்வுகளிலும் தங்களின் நினைவலைகளை மீட்டெடுக்க கணிசமான ஐட்டங்கள் இருக்கக்கூடும் எனும் போது நிச்சயமாய் குஷியாகிடுவர் என்பது புரிந்தது ! அதே சமயம் சிறுபான்மையாக இருப்பினும், புது வாசிப்புகளுக்கு வழிகோலும் சமாச்சாரங்களை எதிர்நோக்கிடும் நண்பர்களுக்கு இங்கே ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிடும் என்பதும் உள்ளுக்குள் உறுத்தியது ! ஒரு சிறு வட்டத்தின் ஒவ்வொரு முகத்திலும் இயன்ற புன்னகையினை மலரச் செய்வதே நமது அபிலாஷை எனும் போது அவர்கட்கென என்ன செய்யலாம் ? என்று யோசிக்க ஆரம்பித்தேன் ! 

Of course படைப்பாளிகளின் ஒப்புதல் கிட்டின் - டின்டின் ஈரோட்டில் ஆஜராகிடுவார் தான் & அவர் ஏகோபித்த அபிமானத்தை ஈட்ட வல்லவர் என்பதும் தெரிந்த சமாச்சாரம் தான் ! ஆனால் படைப்பாளிகளின் ஒப்புதல் process நமக்கு இன்னமும் பரிச்சயமில்லா ஒரு விஷயம் எனும் போது, டின்டினை மாத்திரமே, why not something new ? எனும் அணியினருக்கான குச்சி ஐசாக்கிட மனம் ஒப்பவில்லை ! அப்பாலிக்கா என்ன ? "வண்டிய எட்றா சம்முவம் ! தூக்குறா அந்த கால ........அந்த கட்டவிரல வாய்க்குள்ளாற திணிறா !!" என்று அசரீரி கேட்டுச்சோ இல்லியோ, நாட்டாமை விஜயகுமாரின் மாடுலேஷனில் நம்ம மைண்ட்வாய்ஸ் கேட்டுச்சு ! மெகா இதழ்களாய் ரெடி செய்திட இயலாது போனாலுமே, "குற்ற நகரம் கல்கத்தா" ; "தீதும், நன்றும் பிறர் தர வாரா.." போன்ற இதழ்களின் ரேஞ்சுக்கு ஏதேனும் தயாரிப்பதில் நிச்சயமாய் நாம் தேய்ந்து விட மாட்டோம் என்று   தீர்மானித்தோம் !! So ஈரோட்டின் சம்பவங்களின் எண்ணிக்கை கூடுதுங்கோ !! 😎

PART : 3

ரைட்டு...புதுசாய் என்ன செய்யலாமோ ? என்ற யோசனை தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த வேளையில் நமது ஆன்லைன் மேளாவின் பார்முலா நினைவில் நிழலாடியது ! நிறைய ஜாலி இதழ்களுக்கு இடையே கொஞ்சம் சீரியஸான "குற்ற நகரம் கல்கத்தா" மிளிர்ந்தது போல, ஏதேனுமொரு கிராபிக் நாவலைக் களமிறக்கினாலென்ன ? என்ற மகாசிந்தனை துளிர்விட்டது ! And கைவசம் black & white கி.நா.க்கள் கணிசமாகவே இருப்பதால் அவற்றுள் ஒன்றை எடுத்து விட, இது அழகான தருணமாகிடக்கூடும் என்று நினைத்தேன் ! So மறுக்கா நோட்டை உருட்டினால் பளிச்சென்று தென்பட்டது "விதி எழுதிய வெள்ளை வரிகள் !" இதுவும் 1800-களின் காலகட்டத்தைப் பின்னணியாய்க் கொண்டதொரு ஆல்பம் ! To be precise 1812 !! ரஷ்யர்கள் மீது போர் தொடுத்து, தோற்றுப் போன பிரெஞ்சுப் படையில் மிஞ்சிய  ஒரு மிகச் சொற்பமான அணி தப்பி ஊர் திரும்ப பிரயத்தனம் மேற்கொள்கிறது ! ஆனால் அவர்களுக்கு முதல் எதிரியாய் நிற்பதோ மிரட்டும் ரஷ்ய பனிக்காலம் ! திரும்பிய திக்கெல்லாம் வெள்ளை வெளேரென பனிப்போர்வை விரவிக் கிடக்க, அதனூடே பயணிக்கும் மாந்தர்களின் பாடுகளை மிரட்டலான சித்திரங்களுடன் சொல்லியுள்ளனர் ! And artwork வேறொரு லெவல் !! So "விதி எழுதிய வெள்ளை வரிகள்" ஈரோட்டு சம்பவம் லிஸ்ட்டில் # 3 ஸ்பாட்டை பிடிக்கின்றது ! 


"சரி....ஒரு கி.நா.வை களமிறக்க ரெடியாகியாச்சு ! எண்ணிக்கைக்கு மூணு பொஸ்தவமாச்சு ! இது போதாதா ?" என்றபடிக்கே மோட்டை கொஞ்ச நேரம் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தால், "இவ்ளோ வந்தாச்சு, இன்னும் ஒண்ணோ, ரெண்டோ கூடுச்சுனா என்ன குடியா  முழுகிடப் போகுது ?" என்ற கேள்வி ஓடியது உள்ளுக்குள் ! ரைட்டு - கமர்ஷியல் ரசிகர்களுக்கும் புடிச்சிருக்கணும், கி.நா.பிரியர்களுக்கும் புடிச்சிருக்கணும் ! அப்படியொரு கதையா செலெக்ட் பண்ணுனா எது தேறும் ? என்று யோசித்தால் ஆர்வமாய்க் கை தூக்கி நின்றார் மர்ம மனிதன் மார்ட்டின் !! Classy நாயகர் ; கமர்ஷியல் கிட்டும் தர வல்லவர் ; சிண்டைப் பிய்த்துக் கொள்ளச் செய்யும் ஆற்றலும் கொண்டவர் ! எல்லாம் சரி தான், but இவரை தான் ரெகுலர் தடத்தில் அவ்வப்போது பார்க்கிறோமே, what can be special now ?? என்ற கேள்வி எழுந்தது ! அப்போது தான் நினைவுக்கு வந்தது மார்ட்டின் தொடரில் கலக்கும் கலரில் உள்ள ஒரு மித நீள சாகசம் ! உருவாக்கப்பட்டதே கலரில் ; 64 பக்கங்களுக்குள்ளான racy சாகசம் ; so கட்டுக்குள் வைக்கக்கூடியதொரு விலையும் இங்கே சாத்தியமாகும் ! Maybe 2024-ன் அட்டவணையில் மார்டினின் கலர் அவதாரைக் கண்ணில் காட்டிடலாமென்று எண்ணியிருந்தேன் ; but இப்போதே செய்யக்கூடியதை அடுத்தாண்டு வரைக்கும் ஒத்திப் போடுவானேன் ? என்று தோன்றியது ! So மார்ட்டின் in கலர் - ஈரோட்டு சம்பவம் # 4 !! 

PART 4 :

ஆச்சு...மாயாவி, ஸ்பைடர் என்று கமர்ஷியல் மறுபதிப்ஸ் ; கார்ட்டூனில் பிரியமான சுஸ்கி & விஸ்கியும்....கி.நா. ஜானருக்கு ஒரு ஆல்பம்....ஆக்ஷன் கலந்த மர்ம த்ரில்லருக்கு மார்ட்டின் - அதுவும் கலரில் !! ஆனால் இன்னமும் ஏதோவொன்று..ஏதோவொன்று குறையுறா மெரியே ஒரு பீலிங்கு !! கிடாவெட்டுக்கு வந்திட்டு பந்தியில் சைவ பிரியாணியை பரிமாறினால், பாவப்பட்ட சப்ளையரின் கையைக் கடிக்கணும் போலவே தோணுவது எனக்கு மாத்திரமே இருக்காது என்று உறுதியாய் பட்டது !! அதுவும் ஒரு 'தல' landmark ஆண்டினில் தலையின்றி ஒரு கொண்டாட்டமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் உறுத்தியது ! ரைட்டு....அடுத்த பதிவினில் இது பற்றித் தீர்க்கமாய்த் தீர்மானிப்போம் என்றபடிக்கே இந்தப் படத்தை மட்டும் போட்டுக்கினு கிளம்புறேன் guys ! வியாழன் வாக்குறுதி வெள்ளி வரை நீண்டுப்புடலாகாதில்லையா ? So சொல்லுங்களேன் உங்களின் அபிப்பிராயங்களை !! Bye for now !! See you around !!