நண்பர்களே,
வணக்கம். உடல் நலம் தேற நீங்கள் அன்பாய்த் தெரிவித்த வாழ்த்துக்கள் பலித்ததோ ; தொண்டையின் விஸ்தீரணத்தை விட மொக்கையாத் தோற்றம் தந்த மாத்திரைகள் வேலை செய்தனவோ தெரியாது - ஆனால் இரண்டுமே இணைந்து என்னை சென்ற வாரம் எழுந்து நடமாடச் செய்தன என்பதே நிஜம் ! Thanks a ton guys ! As always, you are awesome !
ஈரோட்டுப் புத்தகவிழாவினில் பங்கேற்கும் பதிப்பகங்களின் ஸ்டால் ஒதுக்கீடு - சென்ற வாரம் சென்னையில் ஒரு திருமண மஹாலில் குலுக்கல் முறையில் நடந்தேறியது ! இது நாள் வரை இது போன்ற நிகழ்வுகளுக்கு டிமிக்கி கொடுத்து வந்த நான் - ஒரு curiosity -ல் அன்றைய மதியம் அங்கு ஆஜரானேன் ! வழக்கமாய் இந்தப் புத்தக விழா circuit -ல் பங்கேற்கும் பதிப்பக / விற்பனை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் புதுசாய் 'திரு திரு' விழியோடு அமர்ந்திருந்தவன் நான் மாத்திரமே என்று சொல்லலாம் ! ஒருவாறாக நமது முறை வந்த போது, டபராவிற்குள் கை விட்டு ஒரு நம்பரை நான் தேர்வு செய்து தர - 'ஸ்டால் # 78 - பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி' என்று வாசித்தார்கள். 'சிவகாசி' என்ற உடனேயே அங்கே புருவங்கள் சில உயர்ந்ததை உணர முடிந்தது ! பதிப்பகங்களின் மையம் சென்னையாகவும் ; தலைநகரைத் தாண்டிய புத்தகத் தயாரிப்பு மையங்கள் வெகு குறைச்சலே என்பதையும் புரிந்திட முடிந்தது ! அதிலும் சிவகாசியிலிருந்தொரு பதிப்பகம் எனும் போது அது ஏதேனும் 'சஸ்தாவான' ; தரமில்லா சரக்காய் இருக்குமென்ற ஒரு கணிப்பு இந்தத் துறையில் நிலவுவதை அன்று நெருடலோடு உணர இயன்றது ! ஈரோட்டில் இவ்விழாவை நடத்திடும் 'மக்கள் சிந்தனைப் பேரவை" கூட துவக்கத்தில் நமது விண்ணப்பத்தை அத்தனை சுவாரஸ்யமாய் வரவேற்கவில்லை என்பதற்கு காரணம் இந்த சிந்தனையே என்பதை நமது நண்பர் ஸ்டாலின் சொன்ன போது தான் NBS & சமீபத்திய வண்ண இதழ்களை அவர்கள் பார்வைக்கு அனுப்பிடத் தீர்மானித்தேன் ! நமக்காக நம் கடிதம் பேசியதோ - இல்லையோ ; நமது வண்ணங்களும், சித்திரங்களும் நிச்சயம் பேசி இருக்க வேண்டும் ! 'சிவகாசியிலிருந்தும் தரம் சாத்தியமே' என்ற புரிதலோடு அமைப்பாளர்கள் நமக்கு ஸ்டால் ஒதுக்க சம்மதித்துள்ளனர் !'தொடரும் பிரதான புத்தக விழாக்களில் இனி தவறாது பங்கேற்பது ; நம் ஆக்கங்களை இத்துறையினில் பழம் தின்று கோட்டை போட்ட ஜாம்பவான்களுக்கும் அறியச் செய்வது' priority பட்டியலில் முதன்மை கொள்பவை என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன்!
'மனதில் மிருகம் வேண்டும்' பணிகள் நிறைவேறி ; பைண்டிங்கில் உள்ளதால் அதைப் பற்றி no issues ! திருவாளர் சுட்டி / குட்டி லக்கியின் பணிகள் இப்போது தான் ஜரூராய் நடந்து வருவதால் - ஈரோட்டு விழாவின் தருவாயினில் தான் தயாராகும். So - ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று இரு புது இதழ்களும் உங்களை வந்து சேரும் - ஈரோட்டில் இருந்தாலும் , சந்தாவில் இருந்தாலும் ! சமீபம் வரை நமக்கு ஸ்டால் கிட்டுவதே சஸ்பென்சாக இருந்து வந்ததால் துவக்க நாளுக்கு என்னால் திட்டமிட இயலவில்லை ! So ஆகஸ்ட் 11 (ஞாயிறு ) அங்கு attendance போடலாமென எண்ணியுள்ளேன் ! 'வாலிப- வயோதிக அன்பர்களே - டாக்டர் விஜயம் இன்ன இன்ன தேதியினில் ' பாணியிலான விளம்பரம் இப்போது நினைவுக்கு வருவது ஏனோ தெரியவில்லை :-) Anyways - எப்போதும் போல் நண்பர்களை சந்திக்க ஆவலாய் இருப்பேன் ! Please do drop in folks !
கட்டிலைக் கட்டிக் கண்டு 4 நாட்களை நகற்ற முயன்ற பொழுதுகளில் ஏராளமாய் காமிக்ஸ் trailer களை எனது tablet pc -ல் பரிசீலிக்க இயன்றது ! இந்தாண்டு கோட்டா கிட்டத்தட்ட full என்ற போதிலும் +6 வரிசையில் இன்னும் இரு ரூ.50 இதழ்கள் காத்துள்ளன தானே ?! அவற்றில் ஒரு slot-க்கு ஒரு (புதிய) கார்ட்டூன் நாயகர் தயார் என்பதால், எஞ்சியுள்ள இதழில் எதாச்சும் offbeat ஆகச் செய்தால் நன்றாக இருக்குமே என்ற நமைச்சல் நிறையவே எனக்குள் ! சென்ற பதிவில் நண்பர் ஆதி தாமிரா குறிப்பிட்டு இருந்தது போல - 'ஒரு டெக்ஸ் வில்லரை அசைக்க நமது 'பிரளயத்தின் பிள்ளைகளுக்கோ ' ; இன்ன பிற கிராபிக் நாவல்களுக்கோ நிச்சயம் ஆற்றல் போறாது ' என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் ; ஆனால் ஒரு சுகமான ; சலனமற்ற ; ரிஸ்கும் இல்லா வட்டத்துக்குள்ளே தொடரும் நமது பயணத்தை இன்னும் சற்று சுறுசுறுப்பாக்க அவ்வப்போது ஒரு பெக் 'நல்-நேர நஞ்சு' கிட்டினால் தப்பில்லை என்று தோன்றியது !
வழக்கமாய் ஒரு புதுத் தொடரைத் தேடித் புறப்படும் போது என்னவெல்லாம் நான் எதிர்பார்ப்பேனோ - அவை சகலத்தையும் சட்டை செய்யாமல் - விழிகளையும், சிந்தைகளையும் அகலத் திறந்து வைக்கும் போது - கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் படைப்புகளின் வீச்சு மிரளச் செய்கிறது ! அனைத்தும் 'சூப்பர் ஹிட்' என்றோ ; காவியங்கள் என்றோ சொல்லிட இயலாது தான் ; ஆனால் அந்த முயற்சிகளின் சுதந்திரம் ; வழக்கமாய் நாம் பார்த்துப் பழகிப் போன டமால்-டுமீல்களைத் தாண்டிய உலகின் பரிமாணம் ; ஆக்சனுக்கு பின்சீட் கொடுத்து விட்டு மனித உணர்வுகளை பிரதிபலிக்கச் செய்யும் படைப்புகள் என்று ஒவ்வொன்றும் ஒரு வகை ! அனைத்துமே வெவ்வேறு மொழிகளில் இருப்பதால் - கதைகளைப் படிப்பது சாத்தியமாகவில்லை எனினும், தேடிப் பிடித்து அவற்றின் விமர்சனங்கள் ; படைப்பாளிகள் தரும் பின்னணி ; சித்திரப் பாங்கு என்று நிறைய observe செய்ய முயன்றேன் !தொடரும் நாட்களில் shortlist செய்து வைத்துள்ள சில தொடர்களை இயன்றளவு விரிவாய் பரிசீலிக்க முயற்சி செய்வேன் ; அவற்றில் தேறுபவை 2014-ல் களமிறக்கப்படும் - நிச்சயமாய் !
புது முயற்சிகளின் தரம் ; அவற்றின் வெற்றி-தோல்வி சாத்தியங்கள் ;' காமிக்ஸ் என்றால் நான் எதிர்பார்ப்பது பரிச்சயமான பாணி மாத்திரமே' ரீதியிலான நண்பர்களின் conservative அணுகுமுறை ; இவை அனைத்தையும் தாண்டி பெரியதொரு அரணாய் இது போன்ற 'விஷப் பரீட்சை வேளைகளில் ' நிற்பது - 'ஆண்டுக்கு 12 இதழ்கள் + கொசுறாய் ஒரு சில' என்ற கட்டுப்பாடு மாத்திரமே ! புதிதாய் கண்ணில் படும் ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் 4-6 பாகங்கள் கொண்டவை எனும் போது - அவற்றை ஆறப் போடாமல் சட சட வென வெளியிடுவதே அவற்றின் சுவை சிதையாதிருக்க உதவும். ஆனால் லார்கோ ; ஷெல்டன் ; டெக்ஸ் ; டைகர் ; லக்கி ; சிக் பில் ஒரு மொத்தமாய் கைகளில் ஒரு தடியோடு slow motion -ல் ஓடி வருவது என் மனக்கண்ணில் அவ்வப்போது தோன்றி மறையும் போது, மண்டையைச் சொறிய மாத்திரமே முடிகின்றது ! அதற்காக 'டமால்' என புதியதொரு இதழைத் துவக்கும் வாய்ப்புகளும் குறைச்சல் எனும் போது - 'பழைய பார்முலா + புது இணைப்புகள் ' என்று ஒரு balancing act அவசியமாகிறது!
அத்தி பூத்தார் போல எப்போதாவது ஓரிரண்டு பாகங்கள் ; அல்லது ஒரே இதழோடு நிறைவாகும் ஆக்கமென்று வருவதும் உண்டு என்பதால், நான் அந்தத் தேடலில் ஆழ்ந்திட முயன்றேன் ! அதன் பலனாய்ச் சிக்கியதொரு one shot episode தான் நமது +6 முயற்சியின் இவ்வாண்டுக்கான இறுதி இதழாக அமையப் போகிறது ! இதுவும் கூட ஒரு இரண்டாம் உலக யுத்தப் பின்னணிக் கதையே - ஆனால் சோகமாய் பயணிக்காமல் ; ஆக்க்ஷன் ; யதார்த்தம் ; நட்பு என்று அழகாய் நடை போடும் ஒரு முயற்சி ! குறிப்பாக நாம் இது வரை யுத்த விமானங்களை முன்னிலைப்படுத்தி அதிகமாய்க் கதைகளை வெளியிட்டதில்லை ; அசாத்திய சித்திரத் தரத்தோடு வரவிருக்கும் இந்தக் கதை அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ! இந்தப் பக்கத்தைப் பாருங்களேன் நிதானமாய் :
வார்த்தைகளுக்கு விடை கொடுத்து விட்ட போதிலும், ஓராயிரம் ஓசைகளையும், ஒரு ஆக்ரோஷத்தையும் அட்டகாசமாய் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் இந்த ஓவியருக்கு விமானங்கள் மீது காதலாம் ! (ஷெல்டன் ஓவியர் ஒரு truck பிரியர்!!) 1930-களில் போருக்கு முந்தைய போலந்தில் வசிக்கும் 3 நண்பர்களோடு துவங்கும் இந்தக் கதை, சிறுவர்களுக்கே உரித்தான அந்த 'விமானக் காதல்' ; போரின் அண்மை கொண்டு வரும் சோதனைகள் ; நட்பின் வலிமை என்று வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்துச் செல்கிறது ! முழு வண்ணத்தில் வரவிருக்கும் இக்கதைக்கு ஓவியர் தீட்டிய சில boards இதோ உங்கள் பார்வைக்கு!
ஓவியர் இவரே ! |
'ஐரோப்பாவில் அழகான வரவேற்பு பெற்ற இதழ் ' என்ற அடையாளம் இருப்பினும், முதல் பார்வையிலேயே இந்தக் கதையினில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளதை உணர்ந்திட முடிந்தது ! எனது gut feel தவறாகவும் இருக்க வாய்ப்புகள் நிரம்பவே உண்டு தான் ; ஆனால் தடுமாறி விழாது நடக்கப் பயின்ற குழந்தை தான் எது ? முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று தோன்றியது - what say guys ?
கிராபிக் நாவல்களின் சுவைக்கு நாம் பரிச்சயம் கொண்டு விட்டால், காத்திருக்கும் களங்கள் ஏராளம் ! பாருங்களேன் நம் பரிசீலனையிலிருக்கும் சில படைப்புகளின் சித்திர விந்தைகளை !!
இதுவொரு சிறார் மாயாஜால பாணிக் கதை ; இதனை இப்போதைக்குப் பிரசுரிக்க நம்மிடம் களமில்லை தான் - ஆனால் அந்த பேசும் சித்திரங்கள் மெய் மறக்கச் செய்கின்றன ! |
'சித்திரமும் பேசும் ' என்பதற்கு இதை விடவும் வேறு உதாரணங்கள் அவசியமா- என்ன ? பூமியில் உலவும் இது போன்ற அசாத்திய ஆற்றலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாய் நாம் ரசிக்கும் நாள் நிச்சயம் புலரும் என்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன் இப்போதைக்கு ! See you around soon ! Take care !
P.S: மொழிபெயர்ப்புப் போட்டியினைத் தொடர்ந்து "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?' என்ற டிசைன் திறமைகளை வெளிக்கொணரும் போட்டியைப் பற்றி ஹேஷ்யமாய் நாம் இங்கு பேசி இருக்கிறோம் ; ஆனால் முதன்முறையாக அதனை நடைமுறைப்படுத்திட எனக்கொரு சிந்தனை தோன்றியது ! வரவிருக்கும் நமது ஈரோடு புத்தக விழாவினில் நமது ஸ்டால் அலங்காரத்தின் பொருட்டு banner & printouts தயாரிக்கும் பணி நம் முன்னே காத்து நிற்கிறது ! ஆர்வமுள்ள நண்பர்கள் தம் கற்பனைகளுக்கு அழகாய் வடிவம் கொடுத்து - தம் கம்ப்யூட்டர் கிராபிக் திறமைகளையும் வெளிப்படுத்திட இது ஒரு வாய்ப்பாகுமே ? நமது தற்சமய நாயகர்களைக் கொண்டு ஒரு colorful கதக்கழியை நடத்திக் காட்டுங்களேன் guys ? உங்கள் ஆக்கங்களை உயர் resolution -ல் நமக்கு மின்னஞ்சலாய் அனுப்பிடலாமே ? இன்றிலிருந்து ஆகஸ்ட் 1 வரைக்குள்ளாக அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ; டாப் தேர்வுகள் ஈரோட்டில் பளிச்சிடுவதொடு ; நமது தளத்திலும் ; தொடரும் இதழ்களிலும் வெளியாகும் !
P.S: மொழிபெயர்ப்புப் போட்டியினைத் தொடர்ந்து "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?' என்ற டிசைன் திறமைகளை வெளிக்கொணரும் போட்டியைப் பற்றி ஹேஷ்யமாய் நாம் இங்கு பேசி இருக்கிறோம் ; ஆனால் முதன்முறையாக அதனை நடைமுறைப்படுத்திட எனக்கொரு சிந்தனை தோன்றியது ! வரவிருக்கும் நமது ஈரோடு புத்தக விழாவினில் நமது ஸ்டால் அலங்காரத்தின் பொருட்டு banner & printouts தயாரிக்கும் பணி நம் முன்னே காத்து நிற்கிறது ! ஆர்வமுள்ள நண்பர்கள் தம் கற்பனைகளுக்கு அழகாய் வடிவம் கொடுத்து - தம் கம்ப்யூட்டர் கிராபிக் திறமைகளையும் வெளிப்படுத்திட இது ஒரு வாய்ப்பாகுமே ? நமது தற்சமய நாயகர்களைக் கொண்டு ஒரு colorful கதக்கழியை நடத்திக் காட்டுங்களேன் guys ? உங்கள் ஆக்கங்களை உயர் resolution -ல் நமக்கு மின்னஞ்சலாய் அனுப்பிடலாமே ? இன்றிலிருந்து ஆகஸ்ட் 1 வரைக்குள்ளாக அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ; டாப் தேர்வுகள் ஈரோட்டில் பளிச்சிடுவதொடு ; நமது தளத்திலும் ; தொடரும் இதழ்களிலும் வெளியாகும் !
ஈரோடு புத்தக திருவிழா எப்போது வருமென ஆவலோடு.....!!!
ReplyDeleteகோவைலிருந்து லயன் மற்றும் முத்து வெறியன்........
Welcome back boss!
ReplyDeleteயுத்த கதைகளை இவ்வளவு தெள்ளத்தெளிவாக படித்ததில்லையாகையால் இக்கதையை வரவேற்கிறேன்!
அப்படியே இதுவரை எங்கள் கண்ணில் காட்டாத லயன் காமிக்ஸின் முகமான, அபிமான ஸ்பைடர் தோன்றும் "spider vs sinister seven" 150 பக்க கதையை முடிந்தவரை நாசூக்காக எடிட் செய்து, உங்களின் தனித்துவ மொழிப்பெயர்ப்பில், இருப்பட பேனல்ககளாக (நீதிக் காவலன் ஸ்பைடர் போல quality உடன்) எந்த சைஸிலாவது, ஏழு தனித்தனி சாகசங்களாக, இக்கதை விரும்புவோர்களின் ஆர்டரின் பேரில் (300 or 500 or 1000 or 2500 nos?), எந்த கட்டுப்படியாகும் விலையிலாவது வெளியிடுங்கள் சார் தயைசெய்து.
இந்த புத்தக தயாரிப்புப்பணிகளில் எந்த உதவி தேவை என்றாலும் நான் உதவிடுகிறேன் ஸார்!
ஆர்ச்சியின் கதைகளையும் அப்படியே சேர்த்து!
ஸ்பைடர்......... நானும் அட்ராசக்க அட்ரசக்கன்னு ரொம்ப அழுத்தமா ஆதரவு தரேன் நண்பரே.......( நிறைவேறினால் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் )
Deleteudhay ; Ravi Krishnan : T .V .யில் சேனல் மாற்றும் சமயங்களில், சின்ன வயதில் நாம் பார்த்து ரசித்த TOM & JERRY கார்டூன்கள் குறுக்கே ஓடும் போது புன்னகையோடு ஒரு 30 வினாடிகள் செலவழிப்பது நிஜம் தான் ; ஆனால் அதனையே ஒன்றரை மணி நேரத்துக்கு பார்ப்பதெனில் இருப்புக் கொள்ளுமா ?
Deleteஅதிலும் "பெரியண்ணன் ஸ்பைடர்" கதைகளில் இந்த SINISTER 7 கதை ஒரு தனி ரகம் ; 10 பக்கங்களைப் புரட்டுவதற்குள்ளாகவே காதோரம் இரத்தம் கசிவது போலொரு பிரம்மையை உருவாக்கும் ! இதனை முழு நீள இதழாக வெளியிட்டு சகலரையும் E.N.T டாக்டர் வசம் அனுப்பிடல் அவசியமாகுமா ?
'சில கதவுகள் மூடப்பட்டு விட்டன - நிரந்தரமாகவே ! 'என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் நாள் புலர்ந்து வெகு காலமாகி விட்டதன்றோ ?
டியர் சார்... உங்கள் உடல் நலம் குணமானதில் மிக்க சந்தோசம்.. ஸ்பைடர் கதையை தாங்கள் வெளியிடுவதில் உள்ள சிக்கல் எங்களுக்கும் புரிகிறது. ஆனால் ஸ்பைடர் மேல் உள்ள ஈடுபாட்டினால் தான் அதை போடுமாறு தொடர்ந்து வலியிறுத்தி வருகிறோம், இன்னும் இருப்பது ஒரே ஒரு கதைதான் அதையும் தாங்கள் போட்டு விட்டால் அதற்கு பிறகு யாரும் வாயைத் திறக்க போவதில்லை, இதனை முழு நீள புத்தகமாக போட்டால் தானே சார் பிரச்சனை, தொடர்ந்து வரப்போகும் கருப்பு, வெள்ளை புத்தகத்தில் தொடராக போடலாமே? ஒரு பத்து, பத்து பக்கமாக போட்டு முடித்து விடலாமே சார்?
Delete//இன்னும் இருப்பது ஒரே ஒரு கதைதான் அதையும் தாங்கள் போட்டு விட்டால் அதற்கு பிறகு யாரும் வாயைத் திறக்க போவதில்லை//
DeleteWELL SAID நண்பரே!
வேண்டும் வேண்டும் வேண்டும் தீயை தீண்டும் தில் ....
Deleteஅந்த ஸ்பைடர் கதையை முழுப்புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
DeleteThank you, friends! We made a request. Like Bruno Brazil said, that story can be divided into several parts and can make spider as guest appearance in b/w special issues.will hope for the good result in future.
Deleteஇன்னா வாத்தியாரே! நீங்கோ இப்டி பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமா சொல்லீட்டேன். பின்ன எங்க தல spider கதைய கொஞ்சம் போட்டா தான் இன்னாவாம்? இந்த spider கத மட்டும் நம்ம லயன்ல வர்லீனா, சாவற வரைக்கும் சோறு துன்ன மாட்டேன். ஆமா சொல்ட்டேன்.
DeleteWelcome back sir...
ReplyDeleteயுத்த கதைகளை வரவேற்கிறேன், அதுவும் அந்த விமானங்கள் தொடர்பான கதைஇன் சித்திரங்கள் simply superb...Graphic நாவல்களை நம் வாசகர்கள் அனைவரும் ரசிக்கத் தொடங்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பது கண்கூடு....
princebecks : ஒன்றாய் ஸ்பைடர்களையும் ; சட்டித் தலையன்களையும் ரசித்தோம் ; ஒன்றாய் ப்ரின்ஸ்களையும் ; டைகர்களையும் வரவேற்றோம் ; இப்போது இணைந்தே இந்த கிராபிக் நாவல்களையும் சுவைப்போமே !
Deleteஇரண்டாம் உலகயுத்த பின்னணியில், இரும்புக்கை நார்மன் பங்குபெறும் கதை ஒன்று [ ஜெர்மன் விமானப்படைத்தளபதி கோயரிங் கை கடத்தும் கதை ] முன்பு வெளிவந்தது...... ஆஷ்விட்ச் முகாமில் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை எடிட்டர் முன்பு தொடராக எழுதி வந்தார்....... ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட போது ஜப்பானியர்கள் அனுபவித்த துயரம் முன்பு தொடராக வெளிவந்தது......தற்போதுதான் நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது.........பாதுகாப்பான நிலப்பரப்பில் வாழும் தமிழர்கள் [பிரிவினையின் போது கடும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வட இந்தியர்களே...... மாலிக் காபூர் தவிர எந்த பெரிய படையெடுப்பின் கொடுமையையும்
Deleteதமிழர்கள் அனுபவித்ததில்லை ]
காமிக்ஸ் மூலமாவது போரின் பரிமானங்களை சற்று அறிவோமே....?
சிவ.சரவணக்குமார் : யுத்தங்களை பரிச்சயம் கொள்ளும் அவசியமில்லாது போனது நமது பாக்கியமே !
Deleteஎனினும் போரின் ரணங்களை ; கொடூரங்களை - இது போன்ற கதைகள் மூலமாய் நாம் சிறிதேனும் அவதானிக்க முடிந்தால், 'எங்கோ, யாருக்கோ நிகழ்ந்த வேதனைகள் தானே..? நமக்கென்ன போச்சு ? ' என்ற ரீதியில் மெத்தனம் நம்முள் குடி கொள்ளாதிருக்க உதுவும் தான் !
சித்திரங்கள் பேசும் நேரத்தில் நம் வார்த்தைகள் மௌனமாகின்றன !
ReplyDeleteWelcome back sir..
ReplyDeleteஉற்சாகத்தை பீறிட செய்து விட்டது
ReplyDelete.உங்கள் பதிவு .சற்றே பழகிக்கொண்டால் அற்புதமான சித்திர விருந்துகள் காத்துள்ளன என்பது கண்கூடாக தெரிகிறது .அதுசரி ...//வாலிப-வயோதிக நண்பர்களே ..//இதில் உள்குத்து ஏதும் இல்லையே ..
// வாலிப-வயோதிக நண்பர்களே..//
Deleteமுறையே, ஈரோடு விஜய்-ஈரோடு ஸ்டாலின் ஆகியோரை குறிக்கின்றன! :)
:-)
Delete:-)
Deleteஅதாவது நமது வாலிப மனது,,,,,,காமிக்ஸ் குறித்து....
Deleteகையில் க்ளைடர் பொம்மையையும் கண்களில் ஏக்கத்தையும் வைத்திருக்கும் சிறுவனும் போர் விமானங்களும் அற்புதமான சித்திரம் சார்! யுத்தப் பிண்ணனியில் அமைந்த பல சுவாரஸ்யமான கதைகளையும் இன்டியானா ஜோன்ஸ் டைப்பிலான அட்வென்சர் கதைகளையும் மிக ஆவலோடு எதிர்பார்க்கிறோம் சார்!
ReplyDeletekrishna babu : நானுமே ஆவலாய் இருக்கிறேன் - புதுக் களங்களை தரிசிக்க !
Deleteசூப்பர்
DeleteWelcome back sir
ReplyDeleteAlagaana oviyangal...
ReplyDeleteParanitharan K : துளி மாற்றமும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாய் ஒரே மாதிரியான கையெழுத்து உங்களுக்கு எவ்விதம் சாத்தியமாகுது நண்பரே ? (சென்ற பதிவில் நீங்கள் 1995-ல் எழுதி இருந்த கடிதத்தைக் குறித்தே எனது கேள்வி !)
Deleteஎல்லாம் உங்கள் ஆசிர்வாதம் சார் .... :-)
Deleteஆனால் ...கை எழுத்து மாறா விட்டாலும் தலை எழுத்து தான் மாறி கொண்டே இருக்கிறது சார் .:-)
Deleteயப்பா... ரொம்ப கஷ்டப்பட்டு, உள்ள வந்தாச்சு... விஜயன் சார் உடல் நலத்துடனிருக்க்க வாழ்த்துகளுடன்... இப்போதைக்கு அம்புட்டுத்தான்..! மீண்டும் சந்திப்போம்..! இனிய ஞாயிறு காலை..!
ReplyDeleteArun Kamal : நன்றிகள் நண்பரே ! நேரம் கிட்டும் போது உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் !
Deletesure sir..!
Deleteதலைவா...யுத்த கதைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்....சூப்பர் தலைவா.....சிறுவர்களுக்கான மாயாஜலக்கதைகளையும் வெளியிடலாம் தலைவா .....ஒன்னே ஒன்னு வெளியிட்டு பாருங்களேன் தலைவா.....அதே போல் ஈரோடு விழாவில் அட்ராசக்க அட்ரசக்கன்னு.....ஒரே ஒரு லிஸ்டில் இல்லா புதிய வெளியீடு..................(ஹி ஹி ஹி ......டெக்ஸ் ) ? நீங்க 11-ம் தேதி வரும்போது அனைத்து நிறைய வாசகர்களும் வருவார்கள் அப்போது வெளியிட்டு நமது சக்தியை காட்டினால் மற்ற பதிப்பகத்தார்களின் புருவம் உயரும் என்று நினைக்கிறேன் தலைவா........( நற ......நற நற .......அட எத்தனைதான் சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டீங்களா என்று சொல்லும் உங்கள் குரலும் கேட்கிறது )........ஹும்ம்ம்ம்
ReplyDeleteமஞ்சள் மாநகருக்கு வருகைபுரியவிருக்கும் டாக்டர் விஜயன் அவர்களை 'ஈரோடு காமிக்ஸ் க்ளப்' நண்பர்கள் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்! :)
ReplyDeleteErode VIJAY : ஊரெல்லாம் 'டுபுக்கு டாக்டர்களை ' கொத்தாக அள்ளி 'அரசாங்க உபசரிப்பில் ' வைப்பதாக கேள்வி ! ஆகையால் இது M.B.B.S பட்டமா ? அல்லது 'ஈரோடு காமிக்ஸ் க்ளப்' பலகலைக்கழகம் வழங்கும் கௌரவப் பட்டமா ? என்று தெரிந்தால் நலம் !
Delete(அந்த சதுர சைஸ் பட்டம் மாதிரியான தொப்பி எங்கே கிடைக்கும் என்றும் விசாரித்துச் சொன்னால் அலைச்சல் மிச்சமாகுமே ?) :-)
Sir please give consideration to Thorgal
ReplyDelete/-\R(|-| /-\NGE|_ : Maybe someday when we are prepared for it !
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteவரிசையாக பல புதிய பாணி கதைகளை நீங்கள் களமிறக்க முடிவெடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!
//'சஸ்தாவான' ; தரமில்லா சரக்காய் இருக்குமென்ற ஒரு கணிப்பு இந்தத் துறையில் நிலவுவதை//
// NBS & சமீபத்திய வண்ண இதழ்களை அவர்கள் பார்வைக்கு அனுப்பிடத் தீர்மானித்தேன்//
'சஸ்தாதான், ஆனாலும் மஸ்தான சரக்கு' என்று புரிந்து கொண்டிருப்பார்கள்! :) சென்னை போன்ற மாநகரங்களில் அச்சேறினால் நிச்சயம் இந்த விலையில் சாத்தியமாகாது!!!
//So ஆகஸ்ட் 11 (ஞாயிறு ) அங்கு attendance போடலாமென எண்ணியுள்ளேன்//
ஆகஸ்ட் 11ம் தேதி திருப்பூரிலிருந்து தற்காலிக பேச்சலராக பெங்களூர் திரும்பிக் கொண்டிருப்பேன் என்பதால் வழியில் அப்படியே ஈரோடு நண்பர்களை சந்திக்க எண்ணி இருக்கிறேன்! :)
//'வாலிப- வயோதிக அன்பர்களே - டாக்டர் விஜயம் இன்ன இன்ன தேதியினில் ' பாணியிலான விளம்பரம் இப்போது நினைவுக்கு வருவது ஏனோ தெரியவில்லை//
அப்படியே 'சிவகாசி சித்திரக் கதை வைத்தியரையும்' சந்தித்து, பலத்த சேதாரத்துடன் வந்திருந்த எனது லக்கி ஸ்பெஷல் சந்தா பிரதிக்கு இலவச மாற்று மருந்து ஏதாவது கிடைக்குமா என்று விசாரிக்க வேண்டும்! ;)
//+6 எஞ்சியுள்ள இதழில் எதாச்சும் offbeat ஆகச் செய்தால் நன்றாக இருக்குமே//
ஏதாவது ஒரு one-shot ஹாரர் கதையை தேடிப் பாருங்களேன்?!
//புதிதாய் கண்ணில் படும் ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் 4-6 பாகங்கள் கொண்டவை எனும் போது - அவற்றை ஆறப் போடாமல் சட சட வென வெளியிடுவதே அவற்றின் சுவை சிதையாதிருக்க உதவும்//
ஐரோப்பாவில் காமிக்ஸ் தொடர்களுக்கா பஞ்சம்? இந்தியாவில் பண்டிகைகளுக்கா பஞ்சம்?! புதிய தொடர்களை, தடித்தடியாக நவராத்திரி ஸ்பெஷல், பக்ரீத் ஸ்பெஷல், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் என்று வரிசையாக வெளியிட்டால் ப்ராப்ளம் சால்வ்ட்! :)
//ஆனால் லார்கோ ; ஷெல்டன் ; டெக்ஸ் ; டைகர் ; லக்கி ; சிக் பில் ஒரு மொத்தமாய் கைகளில் ஒரு தடியோடு slow motion -ல் ஓடி வருவது//
அவர்கள் அனைவரையும் NBS-ல் கூட்டத்தோடு கோவிந்தா போட வைத்த பாவத்திற்காகத்தானே சார்?! ;)
//ஒரு இரண்டாம் உலக யுத்தப் பின்னணிக் கதையே - ஆனால் சோகமாய் பயணிக்காமல் ; ஆக்க்ஷன் ; யதார்த்தம் ; நட்பு என்று அழகாய் நடை போடும் ஒரு முயற்சி//
யுத்த கதைகள் வெளிவருவதில்லை என்ற குறை இந்த ஆண்டு களையப் பட்டு இருக்கிறது! (பி.பி., ஒ.சி.சு. & Dent d'ours - கரடிப் பல்?!). சற்று ஆக்ஷன் தூக்கலான யுத்தக் கதைகள் வந்தால் நன்றாக இருக்கும்!
// P.S: "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?போட்டியினில் பங்கேற்க எண்ணும் நண்பர்கள் - ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் நலம் ! //
நீங்கள் சென்ற பதிவில் இதன் பின்னணி பற்றி ரகசியமாக அப்டேட் செய்து சென்றது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!!! :) :) :) அந்தப் பத்தியை இந்தப் பதிவிலும் இணைத்திருக்கலாமே?!
//மொழிபெயர்ப்புப் போட்டியினைத் தொடர்ந்து "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?' என்ற டிசைன் திறமைகளை வெளிக்கொணரும் போட்டியைப் பற்றி ஹேஷ்யமாய் நாம் இங்கு பேசி இருக்கிறோம் ; ஆனால் முதன்முறையாக அதனை நடைமுறைப்படுத்திட எனக்கொரு சிந்தனை தோன்றியது ! வரவிருக்கும் நமது ஈரோடு புத்தக விழாவினில் நமது ஸ்டால் அலங்காரத்தின் பொருட்டு banner & printouts தயாரிக்கும் பணி நம் முன்னே காத்து நிற்கிறது ! ஆர்வமுள்ள நண்பர்கள் தம் கற்பனைகளுக்கு அழகாய் வடிவம் கொடுத்து - தம் கம்ப்யூட்டர் கிராபிக் திறமைகளையும் வெளிப்படுத்திட இது ஒரு வாய்ப்பாகுமே ? நமது தற்சமய நாயகர்களைக் கொண்டு ஒரு colorful கதக்கழியை நடத்திக் காட்டுங்களேன் guys ? உங்கள் ஆக்கங்களை உயர் resolution -ல் நமக்கு மின்னஞ்சலாய் அனுப்பிடலாமே ? இன்றிலிருந்து ஆகஸ்ட் 1 வரைக்குள்ளாக அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ; டாப் தேர்வுகள் ஈரோட்டில் பளிச்சிடுவதொடு ; நமது தளத்திலும் ; தொடரும் இதழ்களிலும் வெளியாகும்//
Karthik Somalinga : //ஏதாவது ஒரு one-shot ஹாரர் கதையை தேடிப் பாருங்களேன்?!//
Delete'இதைப் போட்டே தீர வேண்டுமென்ற கோரிக்கையோடு ஜூனியர் எடிடர் சமீபமாய் தூக்கி வந்ததொரு கதை - ஒரு one shot horror கதையே ! ஆனால் அதன் பதிப்பாளர் இந்தியாவை உலக வரைபடத்தில் கூடப் பார்த்திரா புதியதொரு நண்பராக இருப்பதே பிரச்சனை ! இங்குள்ள மார்கெட் நிலவரம் ; இங்குள்ள நடைமுறைகள் பற்றி அவர்களுக்கு புரியச் செய்வது நிறையவே நேரத்தை விழுங்குகிறது ! நம்பிக்கையோடு தொடர்கிறேன் எனது முயற்சிகளை !
ஐரோப்பாவில் ஏனோ இந்த horror genre அத்தனை பிரபலமாகவில்லை ! இங்குள்ள கதைகள் fantasy ; zombies ரகங்களிலேயே பெரும்பாலும் இருக்கின்றன !
//... புதிய தொடர்களை, தடித்தடியாக நவராத்திரி ஸ்பெஷல், பக்ரீத் ஸ்பெஷல், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் என்று வரிசையாக வெளியிட்டால் ப்ராப்ளம் சால்வ்ட்! :) ...//
Deleteநான் இதை வழிமொழிகிறேன் :)
//புதிதாய் கண்ணில் படும் ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் 4-6 பாகங்கள் கொண்டவை எனும் போது - அவற்றை ஆறப் போடாமல் சட சட வென வெளியிடுவதே அவற்றின் சுவை சிதையாதிருக்க உதவும்//
Deleteஐரோப்பாவில் காமிக்ஸ் தொடர்களுக்கா பஞ்சம்? இந்தியாவில் பண்டிகைகளுக்கா பஞ்சம்?! புதிய தொடர்களை, தடித்தடியாக நவராத்திரி ஸ்பெஷல், பக்ரீத் ஸ்பெஷல், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் என்று வரிசையாக வெளியிட்டால் ப்ராப்ளம் சால்வ்ட்! :)
Agree 100%
ஐரோப்பாவில் காமிக்ஸ் தொடர்களுக்கா பஞ்சம்? இந்தியாவில் பண்டிகைகளுக்கா பஞ்சம்?! புதிய தொடர்களை, தடித்தடியாக நவராத்திரி ஸ்பெஷல், பக்ரீத் ஸ்பெஷல், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் என்று வரிசையாக வெளியிட்டால் ப்ராப்ளம் சால்வ்ட்! //
Deleteஇத்தனை ஸ்பெஷல், அதுவும் தடித்தடியாக!! அதோ பாருங்கள் சிங்கமுத்து சார் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார். நல்லா பேசிகிட்டிருக்கும் போதே இதுமாதிரி ஏதாவது குண்டைத்தூக்கிப்போட்டு அவரை விரட்டிவிடுவதே உங்க வேலையாப்போச்சு! :-))))))))))
ஆதி தாமிரா : //அதோ பாருங்கள் சிங்கமுத்து சார் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார். //
Deleteமுன்பெல்லாம் எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நானாக எதாச்சும் ஒரு கட்டை விரலை வாய்க்குள் திணித்துக் கொள்வேன் ; இப்போதோ - எனக்கு அந்த சிரமமே வைக்க வேண்டாமென்று , நண்பர்கள் வரிசையாய் நிற்கிறார்கள் - ஆளுக்கொரு விரலைத் தேர்வு செய்து :-) I am ஜூட் !!
ஸ்பைடர் கதைக்காக மனம் ஏங்குகிறது!:-o
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : ஆஹா.... !!
Deleteஏத்துக்கமாட்டேங்குங்கறாங்களேயா .....
DeleteAction, adventures நிறைந்த யுத்த கதைகள், archology சம்மந்தப்பட்ட கதைகள் உதாரணமாக மர்மமனிதன் MARTIN போன்ற கதைகள் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeletepresent sir
ReplyDeleteகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : பணிகள் சீராய்ச் செல்கின்றனவா ? :-)
Delete/பணிக்கு அதிகாரப்பூர்வமாக நாளைதான் (29/07/13)பொறுப்பேற்கிறேன். 1-ம் தேதி முதல் திருநெல்வேலியில். சிவகாசிக்கு 4G network கொண்டுவருவது எங்கள்பணியாக இருக்கும்
Deleteஅப்போ நெல்லை வந்தால் உங்களிடம் இருக்கும் புத்தகங்களை அள்ளி வரலாம்!
Deleteயாருப்பா நீ...... வர வர கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது
Deleteஇன்னும் வர வர சரியாயிரும் .....
Deleteவந்து பாக்க வைக்கிறேன்
மேற்கூறியவை அனைத்தையும் சேர்த்து ஒரே வெளியிட்டாலும் கொண்டாட்டமாயிருக்கும் ...அற்புதமான சித்திரப்படைப்புகள் சார்..நண்பர்களும் வரவேற்பது நிச்சயம் .கூடிய விரைவில் கொண்டுவர முயற்சி மேற்க்கொள்ளமுடியுமா?
ReplyDeleteSir, It is the time for we move on graphic novel... I would like to say we should move on slowly from stereo type western bang...bang... to modern era psychologial thrillers and mystries...etc.
ReplyDeleteare there any western mystries, and thrillers stories instead of bang...bang....
leom : //are there any western mystries, and thrillers stories instead of bang...bang....//
DeleteYes, stories like SPOOKS are around ; but they are a bit too ahead of our current tastes !
டியர் எடிட்டர்,
ReplyDeleteதங்கள் உடல் நலம் தேறியதற்கு கடவுளுக்கு நன்றி.
இந்த பதிவில் காட்டப்பட்டுள்ள முன்னோட்டங்கள் மிக அருமை. நாங்களும் மிக ஆர்வமாய் உள்ளோம்.
ஆயினும் டியர் சார், மற்ற நண்பர்களையும் சற்று அரவணைத்து செல்வது தான் எங்களுக்கும் மகிழ்ச்சி. தனியாய் வேகமாக ஓடுவதை விட, நண்பர்களுடன் பேசிக்கொண்டு நடக்கும் மெதுநடையின் சுகமே அலாதிதான்.
நண்பர்களுடன் இணைந்து புது புது காமிக்ஸ் உலகத்தை அணு அணுவாக ரசிக்கும் சந்தோசத்தை எதிர்பார்க்கும்....
அருமை யாக சொன்னீர் நண்பரே ...
Delete@ Paranitharan K: நீங்களும் வாருங்கள் நண்பரே.. ஒரு மெதுநடை பேசிக்கொண்டே நடப்போம்..
Deleteதனியாய் வேகமாக ஓடுவதை விட, நண்பர்களுடன் பேசிக்கொண்டு நடக்கும் மெதுநடையின் சுகமே அலாதிதான். //
Deleteஉணர்வுகளைச் சரியாகச் சொன்னீர்கள்!
@ ஆதி தாமிரா : நன்றி நண்பரே.. உணர்வுகளை புரிந்துகொள்வதும் அதை பிரதிபலிப்பதும் தானே நட்பு..
DeleteMuthu Kumaran : //தனியாய் வேகமாக ஓடுவதை விட, நண்பர்களுடன் பேசிக்கொண்டு நடக்கும் மெதுநடையின் சுகமே அலாதிதான். //
Deleteநிச்சயம் தனியாக ஓடும் உத்தேசம் நமக்கில்லை ; மெது நடை போடும் தோழர்களை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டே தான் பயணமிருக்கும் !
Editor: அதுதான்.. அதேதான்.. தோல் கொடுக்க நாங்களும் ரெடி..
Delete// தோல் கொடுக்க நாங்களும் ரெடி..//
Deleteநண்பரே கவனம். யாராவது செருப்பு கம்பெனி காரங்க காதுல விழுந்திடப் போகுது!
//நண்பரே கவனம். யாராவது செருப்பு கம்பெனி காரங்க காதுல விழுந்திடப் போகுது!//
Deleteஅவங்களையெல்லாம் தூக்க முடியாது.. நண்பரே..
சார் ..உங்கள் உடல் நிலை சீரானதில் மகிழ்ச்சி சார் ..
ReplyDeleteஈரோடு புத்தக கண்காட்சிக்கு முதல் வாரமே வருவீர்கள் என்ற எதிர் பார்ப்போடு இந்த சண்டே அட்வான்ஸ் விடுமுறை விண்ணப்பித்து இருந்தேன் .மாற்ற வேண்டும் .
#சோகமாய் பயணிக்காமல் ஆக்ஷன் .,நட்பு என பயணிக்கும் # வரவேற்கிறேன் சார் .
#ஆண்டுக்கு 12 பிளஸ் கொசுறாய் சில #கொசுரில் தானே சார் கிராபிக்..:-)
கிராபிக் நாவல் " வெளி வரும் பொழுது எல்லாம் தனியாக 100 ருபாய் இதழ்....... கூட வந்தால் NO PROBLEM ..:-)
கிராபிக் நாவல் என்றால் சோகம் என கொள்ள வேண்டாம் நண்பரே...
Deleteஇப்போது ஆசிரியர் காட்டியிருக்கும் கிராபிக் ஓவியங்கள் ,அந்த பின்னாளில் இடம் பெறப்போகும் மாயஜால காவியங்கள் கண்டும் கலக்கம் ஏனோ! வாருங்கள் கொண்டாடுவோம், உப்பு மூட்டை தூக்கி அல்ல குதித்தாடியே!
Deleteகொசுரில் தானே சார் கிராபிக்..:-)
Delete//
நல்லாத் தெரிஞ்சிவைச்சிக்கிட்டே கன்பர்ம் பண்ணிக்க கேட்கவேண்டியது. அதில ஒரு சந்தோசமா உமக்கு? நல்லாரும்யா.. :-)))))
சார் ..பழைய மாதிரி நமது புத்தகத்தில் ஓவிய போட்டி .. க்ரைம் குவிஸ் போன்ற போட்டி வைக்கலாமே ..?
ReplyDelete(நண்பர்கள் அடிக்க வராமல் இருந்தால் )....;-)
ஆஹா விமானங்களின் மேல் காதல், இரண்டாம் உலக போர் எனது உற்ச்சாகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை, விரைந்து வெளியிடுங்கள் லார்கோவை விட அதிகம் எதிர் பார்க்கிறேன்!
ReplyDeleteஅந்த மாயா ஜால கதையில் நிச்சயம் ஏதோ வசீகரம் உள்ளது எப்போது எப்போது எப்போது?
என்னது ...லார்கோ வை விட அதிக எதிர் பார்ப்பிலா ....வேண்டாம் நண்பரே ..இந்த கொலை வெறி ...:-)
Deleteவிமானங்கள் என்றால் அப்படி ஒரு எதிர்பார்ப்பு நண்பரே , ஆசிரியர் கூறுவதை பார்த்தால் எனது விமானம் குறித்த அறிவை இந்த ஓவியங்களில் பரீட்ச்சிக்கலாமே ......விமானங்களின் மேல் காதலுக்கு q நிறுவன துப்பறிவாளர் பைலட் ஜானி , ஆர்ச்சி, ஸ்பைடர் தாம் முக்கியம் என்றால் மிகை அல்லவே!
Deleteஅப்புறம் ராணி காமிக்ஸில் வந்த அந்த தப்பி ஓடிய இளவரசி என்ற அடிக்க முடியாத கதையினை இப்போது ஆசிரியர் காட்டியுள்ள சித்திரங்கள் நினைவு படுத்துகின்றன .......மிகவும் ஏங்கி போயிருக்கிறேன் நண்பரே அந்த ஏக்கம் தீர அதாவது அந்த மாயாஜால கதை நிகழ ஏக்கங்களுடன் காத்திருக்கிறேன், தொடர் அறிவிப்புகள் ஒன்றை ஒன்றை தூக்குவதால் இப்படி காத்திருந்தே வாழ்கை முடிந்து போய் விடுமோ!
ஒவ்வொரு மாதமும் எப்போது வருமென காத்திருக்கிறேன், தவிர்க்க இயலவில்லை! முன்பு ஸ்பைடர், டெக்ஸ், ஆர்ச்சி, லாரான்ஸ்,மாயாவி வரும் மாதங்களுக்காக தவமிருப்பேன்,,,,இப்போதோ ஒவ்வொரு மாதமும் ....மாற்றங்கள் மகத்தானதாய் இருக்கும் பொது என்ன செய்ய ....வாரம் ஒரு முறை புத்தகங்கள் வந்தால் மட்டுமே எனது ஏக்கங்கள் தீரும்....நிறைவேறுமா ....
கோயம்புத்தூர் ஸ்டீல் நண்பரே ...
Deleteஇப்பொழுது விளம்பர படுத்தி இருக்கும் கிராபிக் நாவல்கள் "action " பாணியில் இருப்பதால் எனக்கு "கொஞ்சம் " ஓகே வாக இருக்கிறது .பார்க்கலாம் .
வாரம் ஒரு முறை புத்தகங்கள் வந்தால் மட்டுமே எனது ஏக்கங்கள் தீரும்.//
Deleteஅது மேட்டர்!! மீ டீ ஸேம் ஃபீலிங்!
கிராபிக் நாவலோ, ஸ்பைடரோ.. அது என்னக் கதையா இருந்தாலும் சரி. கதைகளில்தான் மாற்றுக்கருத்தே தவிர, காமிக்ஸில் இல்லை, ஆக மொக்கை (ஸ்பைடர், ஆர்ச்சி ரக) கதையாக இருந்தாலும் வாங்காமல் இருக்கப்போவதில்லை.
ஆதி தாமிரா : //மொக்கை (ஸ்பைடர், ஆர்ச்சி ரக) கதையாக இருந்தாலும் வாங்காமல் இருக்கப்போவதில்லை.//
Deleteஎதுவாக இருப்பினும் நண்பர்கள் வாங்காதிருக்கப் போவதில்லை என்பதை அறிவேன் ; ஆனால் உங்கள் பணமும், நம் உழைப்பும் சிறிதாகவேனும் ஒரு பயன் கொண்டதாய் அமைந்தால் தானே மனதுக்கு நிறைவு ?
மொக்கையர் கிளப்பில் ஸ்பைடர் & ஆர்ச்சி ! என்ன கொடுமை சாமி ?!
நேத்து பேஞ்ச மலீல இன்னிக்கு மொளச்ச காலானுங்கோ spider க்கு தண்ணி காட்டுதுங்கோ !
Deletesuper...புது கதைகளங்களை எப்பொழுதும் வரவேற்கிறோம்...
ReplyDeleteஅந்த கறுப்பு கிழவியின் கதைகளை போட chance இருக்கா sir ...+6 (thigil ரசிகர்களுக்காக...)
ReplyDeleteயுத்த பிண்ணனி கதைகள் எப்பொழுதும் நன்றாக இருக்கும்... (மாண்டு போன நகரம்.. எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை..)...one of my favorite
ReplyDeleteசார் ...அடுத்த வருட சந்தா நிர்னியித்து விட்டிர்கலா..?
ReplyDeleteஈரோடு வந்தால் அதையும் கட்டி விட்டால் போஸ்ட் ஆபீஸ் செல்லும் வேலை மிச்சம் .
அடுத்த வருட சந்தாவை ஈரோடு புத்தகத் திருவிழாவிலேயே நானும் கட்டத் தயார்!
Deleteசந்தா எல்லாம் கணக்கு பார்க்க கூடாது நண்பர்களே, கையில் காசுள்ளபோது நமது கணக்கில் போட்டு வைத்து விடுங்கள்.என்னுடைய கணக்கில் இந்த வருட சந்தா போக 2000-க்கு மேல் உள்ளது
Deleteஅடுத்தவருடம் நானும் அவ்வாறே செய்கிறேன்!
Delete@ friends : புதுச் சந்தாக்கு இன்னும் நிறையவே அவகாசம் உள்ளது ! டிசெம்பரில் அது பற்றிய அறிவிப்பு வந்திடும் !
DeleteLalaku tol tappima!
ReplyDeleteDear Editor,
ReplyDeleteநீங்கள் இங்கே பகிர்ந்துள்ள புதிய முயற்ச்சிகளுக்கான அனைத்து ஓவியங்களுமே அருமை. விரைவில் இவற்றை முழுப்புத்தகமாக எதிர்பர்ர்க்கிறேன்
=='தொடரும் பிரதான புத்தக விழாக்களில் இனி தவறாது பங்கேற்பது ; நம் ஆக்கங்களை இத்துறையினில் பழம் தின்று கோட்டை போட்ட ஜாம்பவான்களுக்கும் அறியச் செய்வது' priority பட்டியலில் முதன்மை கொள்பவை என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன்!==
ReplyDeleteநல்லதொரு தீர்மானம் சார்… நமது காமிக்ஸ் இதழ்களை நம்மைத்தவிர்த்து பிறரும் அறிந்து கொள்ள இது சரியான வாய்ப்பாக இருக்கும்.
==வழக்கமாய் நாம் பார்த்துப் பழகிப் போன டமால்-டுமீல்களைத் தாண்டிய உலகின் பரிமாணம் ; ஆக்சனுக்கு பின்சீட் கொடுத்து விட்டு மனித உணர்வுகளை பிரதிபலிக்கச் செய்யும் படைப்புகள் என்று ஒவ்வொன்றும் ஒரு வகை !==
காமிக்ஸ் என்பது சிறுபிள்ளை சமாச்சாரம் அல்ல என்று அனைவரும் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது தெரிகிறது. முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்…
ஆனாலும் சார்… ஸ்பைடர் கதைக்கு என் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன் ;-)
அப்படியே... கருப்பு வெள்ளை கதைகளுக்கும். முக்கியமாக ரிப் கிர்பி, மார்டின், சி.ஐ.டி. ராபின். வருடத்திற்கு ஒரு முறையாவது இவர்களைப் போன்ற நாயகர்களை வைத்து "அந்த சைசில்" ஒரு புத்தகம்.:-)
Delete+1
Deleteகாமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : மனித மனத்தின் பயணப் பாதைகள் தான் எத்தனை புதிரானது ?
Deleteஒன்றரை ஆண்டுக்கு முன்பு வரை, இந்த வண்ணம் ; தரம் ஒரு கனவாய் மாத்திரமே இருந்த போது, எழுந்திடாத black & white மீதான காதல் இப்போது புத்துயிர் பெற்று வருவதை வேறு என்னவென்று சொல்லுவது ?
:-)
புத்துயிர் எல்லாம் இல்லை சார்.. கருப்போ வெள்ளையோ எங்களுக்கு நம் காமிக்ஸ் என்றால் எப்போதுமே உயிர்தான். தவிர டெக்ஸ், டயபாலிக் போன்ற கதைகள் இப்போதும் Black & Whiteல் வரும்போது ரிப் கிர்பி, மார்டின், சி.ஐ.டி. ராபின், விங் கமாண்டர் ஜார்ஜ் போன்றோரும் வரலாமே...
Deleteபுதிய களங்கள் திறக்கட்டும். அப்போதுதான் சிந்தனைகள் விரிவடையும். அதற்காக பழையனவற்றை ஒரேயடியாக தூக்கி குப்பையில் போட்டுவிடவேண்டும் என்று சொல்லவில்லை. காதுல பூ சமாச்சாரங்களும் ரசிக்கக்கூடியவையே. என்ன, இப்போது ஒதுக்கப்பட்டுள்ள அவற்றுக்கு இடம் கொடுத்தால், மீண்டும் ஒரேயடியாக குடிவந்துவிடுவார்களோ என்று நண்பர்கள் (இப்போது ஆசிரியரும்) பயப்படுவதுபோல் தெரிகிறது.
ReplyDeleteஅவ்வப்போது வருடத்துக்கு ஒரு டைஜஸ்ட் போல, முன்பு வந்த கதைகளில் ரசிக்கக் கூடியவற்றை தொகுத்து 'க்ளாசிக்' பேனரிலேயே வெளியிடலாம். அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவமாக (முன்பு அவர்களை படிக்காத வாசகர்களுக்கும்) இருக்கும். கடந்த காலத்தை நினைத்து ஏங்கும் நண்பர்களுக்கும் உற்சாகம் தரும்.
//அவ்வப்போது வருடத்துக்கு ஒரு டைஜஸ்ட் போல, முன்பு வந்த கதைகளில் ரசிக்கக் கூடியவற்றை தொகுத்து 'க்ளாசிக்' பேனரிலேயே வெளியிடலாம். அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவமாக (முன்பு அவர்களை படிக்காத வாசகர்களுக்கும்) இருக்கும்//
DeletePodiyan : புராதன நாயகர்களுக்கு கொஞ்ச காலம் நெடுந்துயிலில் ஆழ்ந்திட ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் மீதான நேசம் புதிப்பிக்கப்படவும் வாய்ப்புண்டன்றோ ?
Deleteவாழ்க்கை ஒரு வட்டம் தானே ?! (சத்தியமாய் இது பஞ்ச் டயலாக் இல்லை !!)
//(சத்தியமாய் இது பஞ்ச் டயலாக் இல்லை !!)//
Deleteஆமா சார். இது எப்பவோ 'பஞ்ச்சர்' ஆகிப்போன டயலாக்தான்! :-)
டியர் எடிட்டர்
ReplyDelete// So ஆகஸ்ட் 11 (ஞாயிறு ) அங்கு attendance போடலாமென எண்ணியுள்ளேன் ! //
முதல் வாரம் தொடக்க விழாவிற்கு வருவீர்கள் என எண்ணி, ஆகஸ்ட் 3 & 4 தேதிகளில் வர டிக்கெட் எல்லாம் போட்டச்சே :( இப்படி கவுத்துட்டீங்களே சார் :)
// !தொடரும் நாட்களில் shortlist செய்து வைத்துள்ள சில தொடர்களை இயன்றளவு விரிவாய் பரிசீலிக்க முயற்சி செய்வேன் ; அவற்றில் தேறுபவை 2014-ல் களமிறக்கப்படும் - நிச்சயமாய் ! //
காத்திருக்கிறோம் நிறைய கனவுகளுடன் :)
Editor://'இதைப் போட்டே தீர வேண்டுமென்ற கோரிக்கையோடு ஜூனியர் எடிடர் சமீபமாய் தூக்கி வந்ததொரு கதை - ஒரு "one shot horror" கதையே !//
ReplyDeleteஜூனியர் எடிட்டர் களத்தில் இறங்கிவிட்டார்! அவருக்கு சூப்பரா ஒரு "ஓ" போடுங்க பா!
அப்படியே, "கருப்புக்கிழவி" கதைகளையும் consider பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் சார்!
+1
DeleteWillerFan@RajaG : கறுப்புக் கிழவியை பிரத்யேக இதழ்களாய் வெளியிட்டால் தவிர, அவற்றின் உரிமைகளை பெற சாத்தியமாகாது ! அவற்றை filler pages -க்கு தரும் mood -ல் படைப்பாளிகள் இல்லை !
Delete+1 for more variety Graphic Novels! The next Graphic Novel's preview is promising!
ReplyDeleteவரவிருக்கும் கிராபிக் நாவல்களின் சித்திரங்கள் உண்மையிலேயே மெய்மறக்கச் செய்கின்றன! KAUN BANEGA GRAPHIC DESIGNER போட்டிக்கு நண்பர்கள் அமர்க்களம் செய்வார்கள் என்று நம்புகிறேன்!
ReplyDeleteசார்,
ReplyDeleteநாம் இப்போது பயணிக்கும் பாதை மாறி வேறேதோ ட்ராக்கில் செல்வதுப்போல் ஒரு நெருடல்? கூடிய சீக்கிரமே டெக்ஸ், டைகர், லார்கோ, ஷெல்டன், லக்கி லூக் etc ., அனைவரும் நம்ம ஸ்பைடர் மற்றும் மாயாவியிடம் நல்லதொரு நாளில் கைக்குலுக்கி ஐக்கியமாகிவிடுவார்களோ?
கருப்பு & வெள்ளை கதைகளுக்கு almost மூடுவிழா என்ற இன்றைய சூழலில் எல்லாவற்றிகும் ஒரு breaking point உண்டுதானே....?
MH Mohideen : இது தான் பாதை என்ற இலக்கணங்கள் ஏது நமக்கு ? ரசனைகளும், அவற்றின் பரிணாமங்களும் தானே நம்மை வழி நடத்தும் guides ?
Delete20 ஆண்டுகளுக்கு முன்பு இதே லார்கோ நமக்கு கிஞ்சித்தும் பொருத்தமானவராய் இருந்திருக்க வாய்ப்பில்லை ; ஆனால் இன்றோ அவர் ஒரு prime ஹீரோ அல்லவா ?
இது தான் நம் வட்டம் ; நம் பாதை என்று நமக்கு நாமே கடிவாளம் போட்டுக் கொள்ளாமல் ஜாலியாய், சுதந்திரமாய், நடை பயிலுவோமே ?
டியர் எடிட்டர் ,
ReplyDeleteநமது வாசகர்களின் வேண்டுதலோ சரி , மருத்துவர்களின் மாத்திரைகளோ சரி நீங்கள் கூடிய விரைவில் ப்ளாக் இக்கு திரும்பி புது பொலிவுடன் திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சி . நீங்கள் கமெண்ட்ஸ் போடாது ப்ளாக் தூங்கி வழிந்தது. "மனதில் மிருகம் வேண்டும்"+"சுட்டி லக்கி " இரண்டின் வருகைக்காக காத்துள்ளேன் சார். "சிவகாசியிலிருந்தும் தரம் சாத்தியமே "- நம் ஆக்கங்களை இத் துறையினில் பழம் தின்று கொட்டை போட்ட ஜம்பவன்களுக்கும் அறியச் செய்வது ": இது இது , இந்த போராட்ட குணம்தான் உங்களிடம் எனக்கு பிடித்தது சார். இல்லாது விடில், பினிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் உயிர்தெழ முடிவதெப்படி?
உங்களின் புதிய தேடல்களை ரசிக்கும் வேளையில் எமக்கு முதுகில் சிறகுகள் முளைகின்றன. XIII இன் பாகம்கள் 20,21 இன் அறிவிப்பு வெளியாகியும் இன்னும் வரவில்லையே சார்? எப்போது வர கூடும்? NBS இல் அல்லவா வருவதாக இருந்தது?
பாரிஸ் இக்கு வந்த பிரதிகளில் பெரும்பான்மை விற்று விட்டன . சில மட்டுமே எஞ்சி உள்ளன. முதலில் விற்பனையானது டெக்ஸ் வில்லர் இன் சாகசங்களே .புதிய கிராபிக்ஸ் நாவல்களின் தேடல்களில் உங்களின் தெரிவுகள் நன்றாகவே உள்ளது . கூடிய விரைவில் களம் இறக்குங்கள் .காத்துளோம் !
//பாரிஸ் இக்கு வந்த பிரதிகளில் பெரும்பான்மை விற்று விட்டன . சில மட்டுமே எஞ்சி உள்ளன. முதலில் விற்பனையானது டெக்ஸ் வில்லர் இன் சாகசங்களே .//
DeleteSuper!
Thiruchelvam Prapananth : // XIII இன் பாகம்கள் 20,21 இன் அறிவிப்பு வெளியாகியும் இன்னும் வரவில்லையே சார்?//
DeleteOctober'13 ! காத்திருக்க அதிக நாட்களில்லை !
எடிட்டர் சார்,
Delete// October'13 //
நான் விசாரித்ததில் நண்பர்கள் பலரும் மேலுள்ள 13ஐ தேதியாகவே நமது 'வருகிறது' விளம்பரங்களில் கண்டு குழம்பியுள்ளனர்.
'October 2013' என்பது குழப்பத்தைத் தவிர்க்குமில்லையா?
(நன்றி: என் குழப்பத்தைப் போக்கிய நண்பர் ப்ளூ-பெர்ரிக்கு!)
Erode VIJAY : 'இப்படியும் ஒரு குழப்பமா ?' என்று எனக்கு ஒரே குழப்பம் தான் !
Deleteஈரோடு புத்தக திருவிழாவில் எமது சிங்கம் & முத்து காமிக்ஸ் விற்பனையில் சாதனை படைக்க வாழ்த்துக்கள் .
ReplyDeleteகிரீன் மேனர் உயர்வர்கதினரிடையே நடக்கும் கதை , அதற்கு ''மாமு எப்படி இருக்கே ?'' என்ற மொழி நடையை கையாளலாமா ? அல்லது ''பிரபு தாங்கள் நலமா?'' என்ற மொழி நடையை கையாளலாமா ?
ReplyDelete''சாமியோவ் !'' என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து குறவர்களின் கதா பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க முடியாது . (இது ஒரு உதாரணமே ).
இதை போன்றே ஒவ்வொரு சமயத்தினர்க்கும், மதத்தினர்க்கும், வர்க்கதினர்க்கும் கலாச்சார ரீதியாக தனித்தனி மொழி நடைகள் இருக்கின்றன .,
இவற்றை தவிர்த்து பொதுவான மொழிநடையில் இதுபோன்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க இயலுமா ?!
''வாலிப- வயோதிக அன்பர்களே - டாக்டர் விஜயம் இன்ன இன்ன தேதியினில் ' பாணியிலான விளம்பரம் இப்போது நினைவுக்கு வருவது ஏனோ தெரியவில்லை :-)''
ReplyDeleteஏனெனில் அது போன்ற விளம்பரங்களில் ஈரோடு விஜயம் இன்னின்ன தேதிகளில் என்ற வாக்கியம் ஒளிபரப்பாகும் .
சார் 2014இல் வெறும் 12+6 தானா? அப்போ Sunshine ?
ReplyDelete12 - லயன் / முத்து @ 100 (டெக்ஸ், லார்கோ, டைகர், ஷெல்டன், B/W spl 1, டயபாலிக், etc)எனவும் , +6 @ 50 ஐ கார்ட்டூன் கதைகளுக்கென தனியாக மினி லயன் ஆக வெளிவிடலாமே? Sunshine X 6 @ 100 - கிராபிக் novel / reprints க்கு என வைத்துகொள்ளலாமா ?
1 மெகா ஸ்பெஷல் @ 500 (மின்னும் மரணம்.. ஹி ஹி ஹி )
இப்படிதான் இருக்குமா 2014 சந்தா ? Rs 2600+ 360 =Rs 3960
Slowly We should label each logo with a genre.. சான்ஸ் இருக்கா?
@சூப்பர்,
Deleteஸார் ஏதாவது நல்ல ஐடியா வைச்சிருப்பார். அதுக்குள்ள நீங்களே பிளானை கம்மி பன்ணிடுவீங்க போலயே.. நிறைய கேளுங்க, அப்பதான் கொஞ்சமாச்சும் கிடைக்கும்.
இப்ப என் லிஸ்டைப் பாருங்க..
லயன் x 12 x 100=1200 (only மாடர்ன் ஹீரோஸ் டெக்ஸ், டைகர், லார்கோ, ஷெல்டன், டயபாலிக்)
முத்து x 12 x 100=1200 (only புதிய களங்கள் லைக் கிராஃபிக் நாவல்ஸ், க்ரீன் மெனார்)
+6 x 100=600 (லக்கி, சிக்பில் வகையறா)
+6 x 400=2400 (குண்டு ஸ்பெஷல்ஸ் ஆண்டுமலர், தீபாவளி மலர், ஆடிஅமாவாசைமலர், etc., இதில் பிளாக் & ஒயிட் குண்டு, டெக்ஸ் குண்டு, டைகர் குண்டு, xii குண்டு, புது குண்டுனு அல்லது மிக்ஸுடு குண்டுனு ஸார் எதைத் தந்தாலும் சண்டை போடாம வாங்கிக்குவோம். ஓகேயா?)
5400/- (குரியர் சார்ஜ் ஃப்ரீ)
எப்பூடி.? :-))))))
சூப்பர் விஜய் & ஆதி தாமிரா ; FULL FORM -ல இருக்கீங்க .....
Delete5400 விலையில் லிப்கோ சைசில் ஒரே புத்தகமாக வந்தாலும் சரியே!
Delete//..
Deleteலயன் x 12 x 100=1200 (only மாடர்ன் ஹீரோஸ் டெக்ஸ், டைகர், லார்கோ, ஷெல்டன், டயபாலிக்)
முத்து x 12 x 100=1200 (only புதிய களங்கள் லைக் கிராஃபிக் நாவல்ஸ், க்ரீன் மெனார்)
+6 x 100=600 (லக்கி, சிக்பில் வகையறா)
+6 x 400=2400 (குண்டு ஸ்பெஷல்ஸ் ஆண்டுமலர், தீபாவளி மலர், ஆடிஅமாவாசைமலர், etc., இதில் பிளாக் & ஒயிட் குண்டு, டெக்ஸ் குண்டு, டைகர் குண்டு, xii குண்டு, புது குண்டுனு அல்லது மிக்ஸுடு குண்டுனு ஸார் எதைத் தந்தாலும் சண்டை போடாம வாங்கிக்குவோம். ஓகேயா?)
5400/- (குரியர் சார்ஜ் ஃப்ரீ)
...//
+1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, ...........
ஆஹா…! நினைச்சாலே இனிக்குதே…! ஆசிரியர் கூறுவது போல சந்தா எண்ணிக்கை மந்திர எண்ணைத் (குறைந்தது 3000?) தொடும்பட்சத்தில் நம் கனவுகள் நனவாக வாய்ப்புள்ளது…! ஆகவே நம் வயதையொத்த நண்பர்களிடம் பழைய காமிக்ஸ் நினைவுகளை வளர்த்து இப்போதைய நமது புதிய பொலிவு காமிக்ஸ்களை இரவல் தந்து படிக்க வைத்தால் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்த எண்ணிக்கை கண்டிப்பாக சாத்தியப்படும்…! பிறகு தினம் தினம் தீபாவளிதான்…!
Deleteசூப்பர் விஜய் ; ஆதி தாமிரா ; Periyar : ராஜகுரு : //ஆடிஅமாவாசைமலர், etc., இதில் பிளாக் & ஒயிட் குண்டு, டெக்ஸ் குண்டு, டைகர் குண்டு, xii குண்டு, புது குண்டுனு அல்லது மிக்ஸுடு குண்டு//
Deleteயாரேனும் புதிதாய் நம் தளத்திற்கு வருகை தந்தால், இது ஏதோ bomb தயாரிப்புக் கூடம் போலவும் ; நாமெல்லாம் ரகசிய ஏஜென்ட்கள் போலவும் தோன்றினால் அது அவர் தப்பாகாது !
மைக் 1...மைக் 2...மைக் 3..ஓவர்..ஓவர் !
//ஏதோ bomb தயாரிப்புக் கூடம் போல //
Deleteஹா ஹா!
he he he Rs.2960 ஹி ஹி ஹி.. கணக்குல நான் ஒரு ஸ்டீல் பாடி..
ReplyDeleteமகிழ்ச்சி தரும் அறிவிப்புகள், திட்டமிடலுக்கு நன்றிகள் ஸார். நான் சென்னைவாசி என்பதால் ஈரோடு விழாவுக்கு வர விருப்பம், இயல்கிறதா தெரியவில்லை. முயற்சிக்கிறேன்.
ReplyDeleteடிஸைனர் போட்டியில் கால அவகாசம் மிகக்குறைவென்பதால் என்னால் கலந்துகொள்ள இயலுமா தெரியவில்லை. தொடர்ந்து டிஸைனர், மொழிபெயர்ப்புப் போட்டிகளை எதிர்பார்க்கிறேன் ஸார்!!
நண்பர் ஆதி தாமிரா "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு பற்றி இரண்டு பதிவுக்கு முன் சிறு சந்தேகத்தை வினவி இருந்தீர்கள் .உடனடியாக ஆசிரியர் புது பதிவை இட்டதால் என்னால் பதில் கூற முடிய வில்லை .எனவே இப்பொழுது ....உங்கள் சந்தேகம் ...
Delete#"சிங்கத்தின் சிறு வயதில் "தொடர் இன்னும் முடிய வில்லை .அதற்குள் எப்படி புத்தகமாக "#
காரணம் அந்த தொடர் இப்பொழுது 32 பாகத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது .இப்பொழுதே ஆசிரியர் பிடி கொடுக்க வில்லை .இன்னும் 50 பாகத்தை தாண்டி வந்தவுடன் நாம் கேட்டால் ...."ஆசிரியர் தொடர் நீண்டு விட்டது .பக்கம் அதிகம் ஆகி விட்டது .எனவே புத்தகமாக வந்தால் அதிகம் விலை வைக்க வேண்டும் .முன்னரே அனைவரும் இந்த தொடரை படித்து உள்ளதால் வாசகர்கள் விரும்ப மாட்டார்கள் "என ஆசிரியர் ஜகா வாங்கி விடுவார் .அதற்குதான் இப்பொழுதே ..:-)
30 பாகத்தை புத்தகமாக போட்டால் மீதியை தொடர் முடிந்த வுடன் போட்டு தானே ஆக வேண்டும் .
சிங்கம் 1
சிங்கம் 2
சிங்கம் 3
எப்படி எங்க சங்கத்தின் ஐடியா ... :-)
'சிங்கத்தின் சிறு வயதில்' - முடிவில்லாதது என்பதால், எங்கள் போராட்டக்குழு தலைவரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.
Delete( எடிட்டருக்கு இது விசயமா இன்னுமொரு கடுதாசி எழுதிவுடுங்க தலைவரே!)
இதோ ..வந்துட்டேன் ...ஒரு நிமிஷம் ..
Deleteமீ குண்டு புக் ரசிகன் என்பதால் 50 பாகம் என்ன 100 வந்தாலும் சரி, லிப்கோ டிக்ஷ்னரி சைஸ்க்கு ஒரே குண்டுதான். :-))))))
Deleteபட், சிங்கம் 2, சிங்கம் 3 ஐடியாவும் நல்லாத்தான் இருக்குது.
நான் சொன்னது விளையாட்டு அல்ல நண்பர்களே, ஆசிரியர் நம் பதிப்பகத்தில் போடவில்லை என்றால், அத்தனைத் தகுதி வாய்ந்த புக் என்பதால் நிச்சயம் நண்பர்கள் இணைந்து இலக்கிய அந்தஸ்தோடு உயிர்மை, காலச்சுவடு போன்ற பிரபல பதிப்பகம் வாயிலாக போடப்போவது உறுதி.
Erode VIJAY : //( எடிட்டருக்கு இது விசயமா இன்னுமொரு கடுதாசி எழுதிவுடுங்க தலைவரே!)//
Deleteஆனாலும் ஒரு கடுதாசியை ஏவுகணை ரேஞ்சுக்கு பயன்படுத்தும் உங்கள் சங்கத்தின் முன்னே - ஆ.கொ.தீ.கா.லாம் பிச்சை தான் வாங்கணும் :-)
ஆதி தாமிரா ://தொடர்ந்து டிஸைனர், மொழிபெயர்ப்புப் போட்டிகளை எதிர்பார்க்கிறேன் ஸார்!!//
Deleteஈரோடு பணிகள் முடியட்டும் ; அடுத்த மாதம் புதிதாய் ஒரு போட்டியைத் துவக்கிடுவோம் !
நான் நூறு! இந்த வாய்ப்பை நீண்ட நாட்களுக்கு பின்னர் அளித்த/விட்டு வைத்த நண்பர்களுக்கு நன்றிகள்!
ReplyDeleteaugust 11-முதலில் வருவதுன்னு கங்கணம் கட்டி இருந்தேன். பாக்கலாம்...
ReplyDeleteDr. அல்கேட்ஸ் : நல்வரவு !
Deleteஉங்களுடைய "BACK TO FORM" மிக்க மகிழ்ச்சியளிக்கிறது சார்.
ReplyDelete//அசாத்திய சித்திரத் தரத்தோடு வரவிருக்கும் இந்தக் கதை அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ! இந்தப் பக்கத்தைப் பாருங்களேன் நிதானமாய் ://
இந்த சித்திரங்கள் "PEARL HARBOR" ரை நியாபகப்படுத்துகிறது. அதனை சுற்றி பின்னப்பட்ட கதையா ??. ஓவியங்களின் தரம் MARVELOUS! அப்படியே நமது சுகந்திர போராட்டத்தையொட்டி/ நமது இந்திய வரலாற்றையோற்றி புனையப்பட்ட ஏதாவது தரமான படைப்புகள் இருக்கிறதாவென்று தேடிப்பாருங்கள் சார்!
நம்முன் தற்போது விரிந்துள்ள இந்த காமிக்ஸ் சமுத்திரத்தில் தரமானே மீன்கள் ஏராளம் எனபது நித்தர்சனமான உண்மையாக இருக்கும்போது நமது வலையில் பிடிபட்ட தரமான மீன்களை குறுகிய காலத்துக்குள் எங்களுக்கு படைக்கவேண்டும் என்கிற உங்கள் ஆவல் குன்றின்மேலிட்ட விளக்காய் பிரகாசிக்கிறது. மகிழ்ச்சியே என்றாலும் இது போன்ற தரமான கிராபிக் நாவல்களை தனியே வெளியிட வேண்டும் அல்லது அப்படி முடியாவிட்டால் அதனையொட்டிய GENRE கதைகளை தொகுக்க வேண்டும் எனபது எனது தாழ்மையான வேண்டுகோள். நமது தற்போதைய வழக்கமாக "இருக்கும் எல்லா வகைகளிலும் ஒரு கதை" எனும் பாணியை மாற்ற முயற்சிகலாமே!
உங்கள் வாசகர்களின் மீதும் படைப்புகளின் மீதும் நம்பிக்கை வையுங்கள் சார், நிச்சயம் விற்பனையில் வெற்றிபெற முடியும்.
உங்களுடைய மற்ற TRAILER கள் இவை நமது தமிழ் மொழியில் வரும் நாள் எந்நாளோவென மனதை ஏங்க வைக்கிறது.
//இதுவொரு சிறார் மாயாஜால பாணிக் கதை ; இதனை இப்போதைக்குப் பிரசுரிக்க நம்மிடம் களமில்லை தான் - ஆனால் அந்த பேசும் சித்திரங்கள் மெய் மறக்கச் செய்கின்றன !//
குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆடுவது எனபது இதுதானோ ??? : )
விஸ்கி-சுஸ்கி : //குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆடுவது எனபது இதுதானோ ??? : ) //
Deleteமெய்யான ஆதங்கம் நண்பரே ! முழு இதழையும் பார்க்கும் போது அந்த சித்திரத் தரம் கண்ணைக் கட்டுகிறது ! ஒரு 20 ஆண்டுகள் ரிவர்சில் செல்ல வாய்ப்பிருந்தால் - இந்த இதழ் எப்போதோ நம்மிடையே ஆஜராகி இருக்கும் !
சிறுவயதில் அசோகரின் கலிங்க போரில் ஏற்பட்ட ஆர்வம் இன்றும் அப்படியே உள்ளது . எனினும் முழுவதும் அறியப்படாத பக்கமாக மனதின் ஒரு ஓரத்தில் உள்ளது .
ReplyDeleteஅதை போக்குகின்ற விதமாக போர்கதைகள் வந்தால் மகிழ்ச்சியே !
நிறைய வரலாற்று சம்பவங்களும், விசயங்களும் பொதிந்தாகவோ அல்லது தந்திரங்கள் நிறைந்ததாகவோ இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் .
பி .கு :- காலத்தை கடந்தும் ஞாபகத்தில் உள்ள கரகாட்டகாரனின் சொப்பன சுந்தரியை போல் ''யெளவனமான யுவதி'' தனித்து தெரியும் ஒரு வார்த்தை . வரவேற்கிறேன் .
Meeran : "சொப்பன சுந்தரியை" அடிச்சுக்க இன்னொரு கவுண்டர் வந்தால் தான் உண்டு ! நாம் அருகாமையில் நின்றாலே பெருமையே !
DeleteAction, adventures நிறைந்த war stories, மர்ம மனிதன் Martin, indiana jones போன்ற Archology சம்மந்தப்பட்ட கதைகளையும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்!
ReplyDeleteArchology +1
DeleteArchology +11
DeleteDollarக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காமிக்ஸ் காதலர்களான நம்மை எந்த அளவு பாதித்துள்ளது? 2014லில் வாசகர்களான எங்களுக்கும், பதிப்பகத்தாரான தங்களை இந்த வருடமே இதன் பாதிப்பு தெரியும் என கருதுகிறேன். உண்மைதானே sir?!
ReplyDeleteஎன்ன எல்லோரும் IT returns பைல் பண்ணுறதுல பிசியா இருக்காங்களோ? ஈயாடுது ப்ளாக் .. வாங்கப்பா, வந்து பஞ்சாயத்த ஆரம்பிங்க..
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteஜூனியர் லயன் காமிக்ஸ் , மினி லயன் காமிக்ஸ் இதழ்களில் வெளிவந்த அலிபாபா முஸ்தபா கதை வரிசை நமக்கு மட்டுமில்லாமல் சிறார்களுக்கும் ஏற்ற ஒரு அற்புதமான கதை வரிசை.
இப்போதைய சூழலில் அதனை ரீப்ரின்ட் செய்தால் நன்றாக இருக்கும்.
அந்த கதையை பற்றிய ஒரு முழு நீள பதிவு இங்கே:
அலிபாபா & முஸ்தஃபா - மினி லயனின் டாப் காமெடி கதாநாயகர்கள்
வாருங்கள் நண்பர்களே, அனைவரும் சேர்ந்து இந்த கதையை அடுத்த வருடம் எடிட்டரிடம் ரீப்ரின்ட் செய்ய கோருவோம்.
அதுவும் அந்த மீன் கலந்த பேரிச்சம் பழ சமையலை செய்து முடித்த பின்னர் கொள்ளைகாரன் முகம் போகும் போக்கு !
Deleteநிச்சயம் இக்கதைகள் தனித்துவம் வாய்ந்தவை லக்கிக்கோ, சிக் பில்லுக்கோ சிறிதும் சளைத்ததல்ல! ஏன் அதனை விட கூட மேம்பட்டவை, வித்தியாசமான கதை வரிசைதனில்!
+!
Delete+1
Deleteஎனக்கும் அலிபாபா முஸ்தபா கதை வரிசை reprints வேண்டும்
நான் முதலில் இரண்டு கைகளையும் தூக்கி கொள்கிறேன் நண்பர்களே ....
Deleteடியர் எடிட்டர்,
Deleteநண்பர் விஸ்வா தனது சமீபத்திய பதிவில் அலிபாபா & முஸ்தஃபா கதைகளை அழகாக விமர்ச்சித்து எங்கள் ஆர்வத்தை ஏகத்துக்கும் அதிகரித்துவிட்டார். டவுசர் போட்டுக் கொண்டு, தலை முடி கலைந்திருப்பதைப் பற்றிக்கவலைப் படாமல் பழைய புத்தகக் கடைகளில் காமிக்ஸ் ஏதாவது கிடைக்காதாவென சுற்றியலைந்த அந்நாட்களை அட்டகாமாய் நினைவுபடுத்தும் அக்கதைகள் திரும்பவும் வண்ணத்தில் கிட்டிடாதாவென ஏங்கவைத்துவிட்டது அந்தப் பதிவு!
வேறென்ன?; எங்களுக்கு மட்டுமன்றி இப்போதைய வாண்டுகளையும் காமிக்ஸின் பக்கம் திரும்பவைத்திடும் அந்தச் சித்திரங்களும், கதைகளும் மறுபதிப்பாக வந்திட்டால் மகிழ்வோம்! (இதன் மறுபதிப்புக்காக உங்களிடம் கோரிக்கை விடுக்க நிறைய எண்ணிக்கையில் நண்பர்கள் தயாராகிவருவதை விஸ்வாவின் வலைப்பூவிற்கு ஒரு விசிட் அடித்தால் தெரிந்துகொள்ளலாம்)
இத்துடன்,
* அந்த வெள்ளைத் தாடிக்குள் ஒரு ஓரமாய் ஒளிந்திருக்கும் மெல்லிய சோகத்தைக் காவியமாய் காட்டிடும் 'கார்ஸனின் கடந்த காலம்' முழுவண்ணத்திலும்;
* கேப்டன் டைகர் செவ்விந்தியர்களுக்கு 'நிஜமாகவே' நல்லது செய்வதைப் போன்ற ஒரு அற்புதக் காவியமான 'மின்னும் மரணம்' முழுவண்ணத்திலும்;
அடுத்தவருட மறுபதிப்புகள் லிஸ்டில் இடம் பெற வேண்டுமென்று இந்த சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது!
கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லையென்றால் போராட்டம் வெடிக்குமென்பதையும் நீங்கள் அறியாதவரல்லவே? ;)
அலிபாபா கதைகளும் விஸ்கிசுஸ்கி கதைகளும் மிகவும் சைல்டிஷாக இருப்பதாலேயே அவற்றைத் தவிர்ப்பதாக ஆசிரியரை ஒருமுறை நேரில் பார்த்துப் பேசியபோது சொன்னார். சிக்பில்,லக்கிலூக், மதியில்லா மந்திரி இவர்களை ரசிக்கும் நம்மால் அலாவுதீன்,விஸ்கி சுஸ்கி கதைகளைக் கண்டிப்பாக ரசிக்க முடியும் என்றே நம்புகிறேன்!
Delete//* அந்த வெள்ளைத் தாடிக்குள் ஒரு ஓரமாய் ஒளிந்திருக்கும் மெல்லிய சோகத்தைக் காவியமாய் காட்டிடும் 'கார்ஸனின் கடந்த காலம்' முழுவண்ணத்திலும்;
Delete* கேப்டன் டைகர் செவ்விந்தியர்களுக்கு 'நிஜமாகவே' நல்லது செய்வதைப் போன்ற ஒரு அற்புதக் காவியமான 'மின்னும் மரணம்' முழுவண்ணத்திலும்;
அடுத்தவருட மறுபதிப்புகள் லிஸ்டில் இடம் பெற வேண்டுமென்று இந்த சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது!
கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லையென்றால் போராட்டம் வெடிக்குமென்பதையும் நீங்கள் அறியாதவரல்லவே? ;)//
மின்னும் மரணம் ஏறத்தாள உறுதி ஆகி விட்ட நிலையில் டெக்ஸ்சின் மிக சிறந்த டாப் கதையான கார்சனின் கடந்த காலம் அதுவும் வண்ணத்துடன் வந்தால் காமிக்ஸ் உலகம் அடையும் பேரு வேறேதும் இருக்காதே!
//* அந்த வெள்ளைத் தாடிக்குள் ஒரு ஓரமாய் ஒளிந்திருக்கும் மெல்லிய சோகத்தைக் காவியமாய் காட்டிடும் 'கார்ஸனின் கடந்த காலம்' முழுவண்ணத்திலும்;
Delete* கேப்டன் டைகர் செவ்விந்தியர்களுக்கு 'நிஜமாகவே' நல்லது செய்வதைப் போன்ற ஒரு அற்புதக் காவியமான 'மின்னும் மரணம்' முழுவண்ணத்திலும்;
அடுத்தவருட மறுபதிப்புகள் லிஸ்டில் இடம் பெற வேண்டுமென்று இந்த சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது!
கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லையென்றால் போராட்டம் வெடிக்குமென்பதையும் நீங்கள் அறியாதவரல்லவே? ;)//
//மின்னும் மரணம் ஏறத்தாள உறுதி ஆகி விட்ட நிலையில் டெக்ஸ்சின் மிக சிறந்த டாப் கதையான கார்சனின் கடந்த காலம் அதுவும் வண்ணத்துடன் வந்தால் காமிக்ஸ் உலகம் அடையும் பேரு வேறேதும் இருக்காதே! //
தீர்மானம் முழுமனதாக அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது .... தீர்மானத்தின் நகல் ஈரோடு புத்தக திருவிழாவில் ஆசிரியரிடம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் ...
அலிபாபா, முஸ்தபா கதைகள் ரீபிரிண்ட் செய்ய வேண்டுமாய் எடிட்டரைக் கேட்டுக்கொள்கிறேன்...
Delete@ FRIENDS : மொத்தம் 3 கதைகள் "அலிபாபா " வரிசையில் வந்திருந்ததாக ஞாபகம் ! (உலகம் சுற்றும் அலிபாபா ; வெள்ளைப் பிசாசு ; சொர்கத்தின் சாவி ) அவற்றை மறுபதிப்பு செய்வதென்பது இயலா காரியமல்ல தான் ; வண்ணத்துக்கும் ஏற்ற அழகான வரிசை அது ! இன்றைய பொடுசுகளுக்கும் அது பிடிக்க வாய்ப்புள்ளது தான் !
Deleteஆனால் நடைமுறை சிக்கல் என்னவெனில் - இது போன்ற 'புராதன' ; (ஐரோப்பாவில்)'less popular 'கதைகளை, digitalize செய்ய பதிப்பகத்தினர் முயற்சிக்கவில்லை ! So அவற்றை வண்ணத்தில் வெளியிட தற்போதைக்கு வழி கிடையாது.
தங்களின் அசுரத்தனமான படைப்புக் கையிருப்புகளை சிறுகச் சிறுக டிஜிட்டல் files ஆக மாற்றி வருகிறார்கள் ; அலிபாபாவும் அந்தப் பட்டியலில் இடம் பெரும் சமயம் நம் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது !
அது வரை போராட்டக் குழு பொறுமை காக்கக் கோரி மனு சமர்ப்பிக்கிறேன் !
சார்,
Deleteமொத்தம் நான்கு கதைகள் சார்.
1. உலகம் சுற்றும் அலிபாபா
2. சொர்கத்தின் சாவி
3. வெள்ளைப்பிசாசு
4. மாயத்தீவில் அலிபாபா
Good Things come to those who wait. So, Let's wait for the Reprint of Ali Baba Now.
பிரதிவாதியின் கோரிக்கை மனு போராட்டக்குழுவினால் உடனடியாக நிராகரிக்கப்கடுகிறது.
Delete'கார்ஸனின் கடந்த காலம்', 'மின்னும் மரணம்' பற்றி மூச்சுவிடாமல் கடந்து சென்றதையும் போராட்டக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!
King Viswa : Thanks !
DeleteErode VIJAY :உண்ணாவிரதப் பந்தலின் பின்பக்கமாய் பிரியாணிப் பொட்டலம் விநியோகிக்கப்படுவதாய்த் தகவல் ! முந்தினால் leg piece நிச்சயமாம் !
அவசர அறிவிப்பு:
Delete'போராட்டம் நிபந்தனையின்றி கைவிடப்பட்டது'
:)
"பாரிசில் முதலில் விற்று தீர்ந்தது டெக்ஸ் கதைகள் தாம் "
ReplyDelete"டெக்ஸ் கதைகள் தாம் "
"டெக்ஸ் கதைகள் "
"டெக்ஸ் "
உள்ளூர் நண்பர்கள் சொன்ன பொழுது அதிகம் யாரும் நம்ப வில்லை .இப்பொழுது வெளி நாட்டு நண்பரே சொல்கிறார் .இதை "அனைத்து " காமிக்ஸ் ரசிகர்களும் ..,முக்கியமாக ஆசிரியரும் "பசுமரத்தாணி "போல நெஞ்சில் நிறுத்தி கொள்ள வேண்டுகிறேன் .......:-)
இத்தாலிக்குச் சென்று கொத்தடிமையாகவேனும் பிழைப்பு நடத்திக்கொள்ளலாம் என்ற தீவிர எண்ணத்திலிருக்கிறேன். நீங்க வர்ரீங்களா பரணிதரன்?
Deleteநண்பரே...நான் ரெடி ...எனது மேற் பார்வையில் டெக்ஸ் புத்தகத்தை படித்து கொண்டே நீங்கள் " கொத்தடிமை "யாக வேலை பார்ப்பதை பாரக்க நான் ரெடி ..;-)
DeleteTEX always Rocks...
Deleteஹெர்லக் ஷோம்ஸ் கதைகளும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அட்டகாசமான கதைகளே! அந்த வரிசையில் மீதமுள்ள கதைகள் இன்னும் உள்ளனவா சார்?
ReplyDeleteராஜகுரு : Yes...இன்னும் உள்ளன ! தற்சமயம் ஸ்டீல்பாடியாரோடு - ஹெர்லக் சோம்ஸ் மோதிட வாய்ப்புள்ளதால், கொஞ்ச காலம் கழித்து அவரை வரவழைப்போம் !
Deleteஈரோடு விஜய் @ சி.சி .வயதில் குழுவின் உப தலைவருக்கு .....
ReplyDeleteஉங்கள் கோரிக்கையை அடுத்து உடனடியாக ஆசிரியருக்கு நாளையே ஒரு "வித்தியாசமான "கடித கணை செல்ல போகிறது . ஆசிரியர் உஷார் .. :-)
//நாளையே ஒரு "வித்தியாசமான" கடிதக் கணை செல்லப்போகிறது. ஆசிரியர் உஷார் //
Deleteஇன்னும் கொஞ்ச நேரத்தில் எடிட்டர் இதைப் படிக்கும்போது, நடு ராத்திரியில் 'ஊடு சூன்யம்' படிச்ச மாதிரி ஒரு எஃபெக்ட் அவர் முகத்திலே பரவப்போவது உறுதி! :D
நல்லா கிளப்புறாங்கையா பீதியை !
Delete//நல்லா கிளப்புறாங்கையா பீதியை ! //
Delete: )
மொஹலாய மட்டன் பிரியாணி + செட்டி நாடு சிக்கன் வறுவல் ....... அசைவ பிரியர்கள் நாவில் நீர் ஊற செய்யும் உணவு . ஒரு நாள் , இல்லை ரெண்டு நாள் சாப்பிடலாம் ..... தினமும் சாப்பிடமுடியுமா ........ ? ஆனால் சாம்பாரும் , ரசமும் தினமும் வைத்தாலும் சாப்பிடமுடியும் . COME BACK ஸ்பெஷல்க்கு பின் நமது லைன் முத்து முதலில் சொன்ன பிரியாணியும் சிக்கன் வருவலும் போல் இருக்கிறது. லேசாக சலிப்பு தட்டுகிறது ....... திகட்டுகிறது ........
ReplyDeleteமாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் வாசகருக்கு வருடம் ஐயாயிரம் சந்தா கட்டுவது சுலபமாக இருக்கலாம் ....... இவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் ....... முக்கால் வாசி லைன் முத்து சந்தாதாரர்கள் நடுத்தர வர்க்கத்தினர் ...... தினமும் பிரியாணியா அல்லது வாரம் முழுவதும் சைவ சாப்பாடு ..... வார கடைசியில் அசைவ சாப்பாடா ? ....... விஜயன் சார் தான் முடிவு செய்ய வேண்டும் .
sundaramoorthy j : வாரம் முழுவதும் சைவச் சாப்பாடு பரிமாறப்பட்ட போது பல்லாயிரக்கணக்கானோர் சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பின் உங்களின் ஆதங்கம் வலுவானதாக இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் !
Deleteபந்திக்கே ஆள் தேட வேண்டிய நிலையில் தானே இருந்தோம் ?
இரண்டு ரூபாய்க்கு லக்கி லுக்கின் 'சூப்பர் சர்க்கஸ்' இதழை வெளியிட்ட போது என்ன மனநிலையில் இருந்தேனோ - அதுவே தான் இன்றைக்கும் என்னிடம் ! ஆனால் விலைவாசிகளும், ரசனைகளும், நிலையாய் நிற்கும் வாய்ப்பு துளியும் கிடையாதென்பதால் மாற்றங்கள் காலத்தின் கட்டாயங்களே !
தவிர மாதமொன்றுக்கு ரூ.150 என்பது தானே நமது தற்போதைய maximum பட்ஜெட் ? ஆண்டுக்கு ஐயாயிரம் என்ற கணக்கெல்லாம் நமக்குப் பொருந்தா சங்கதியாச்சே ?
சுந்தரமூர்த்தி சார்,
Deleteகாமிக்ஸ் ஓவியர்கள், மனிதசக்தியின் அளப்பரிய ஆற்றல்களுள் ஒன்றைக் கொண்டவர்கள் என நம்புகிறேன். அதனால்தான் இத்தனை பெருமைகள் கொண்ட நம் சமூகத்திலிருந்து இன்னும் ஒரு காமிக்ஸ் ஆர்டிஸ்ட் கூட தோன்றிட வழியில்லாது இருக்கிறோம். அதற்கான ரசனையும், திறமையும், பயிற்சியும், முயற்சியும் அதீதமானவை. காமிக்ஸ் இதழ்கள் பிற இதழ்கள் போன்றவை அல்ல. நூற்றுக்கணக்கான மாத, வார இதழ்கள் இருக்கின்றன, அவரவர் ரசனைக்கு ஏற்ப தேர்ந்துகொள்ள! ஆனால் இருந்த ஓரிரு இதழ்களுள் இப்போதும் காலத்தை வென்று மிஞ்சி நிற்பது நமது சிங்கமுத்து மட்டுமே..
காலத்துக்கேற்ற வகையில் மேம்பாடடையாமல் இன்னும் 10 ரூபாய் பிளாக் அண்ட் ஒயிட்டிலேயே இருப்போமானால் காமிக்ஸ் எனும் கலை தமிழில் இல்லாது போகும்!
மாதம் 100 ரூபாயோ, 200 ரூபாயோ இன்றைய காலகட்டத்தில் ஒரு பொருட்டே அல்ல. ஒரு வருடம் முன்பு வரை 50000க்கு மேல் மாத சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நான் இன்று வேலையில்லாமல் அடுத்த மாத வாடகைக்கு என்ன வழி என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் நம்பிக்கைதான் வாழ்க்கை. 10000 வருட சந்தா என்றாலும் வாங்குவேன் என நம்பிக்கையோடிருக்கிறேன். அப்படி இயலாது போனாலும் கூட நமது காமிக்ஸின் நியாயமான வளர்ச்சியைக் கண்டு மகிழ்வேனே தவிர 10 ரூபாய் இதழ்கள் வரவில்லையே என எண்ணமாட்டேன். ஏனெனில் சகல துறைகளிலும் ஊழல், அநீதியும் பெருகிவரும் வேளையில் அடுத்த தலைமுறைக்கு நற்குணங்களை வாசிப்பு மட்டுமே தரும்! நற்குணத்துக்கும், ரசனைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என நம்புகிறேன் நான். ஆக, நல்ரசனையை ஏற்படுத்தும், கலையார்வத்தை ஏற்படுத்தும், நல்வாசிப்பை ஊக்கப்படுத்தும் காமிக்ஸைத் தூக்கிப்பிடிப்பது என்பது ஒருவகையில் சமூகக் கடமை என்றும் கொள்ளலாம்.
விஜயன் சார் ஒரு காமிக்ஸ் ரசிகர் என்ற வகையில் உயர்ந்து நிற்கிறாரே தவிர, ஒரு வியாபாரியாக வீக்காகத்தான் இருக்கிறார் என்பது என் தனிப்பட்ட கருத்து. வேறு யாருக்கும் சாத்தியமே இல்லாத, நம் வண்ண இதழ்களின் 100 ரூபாய் விலையே அதற்கான சாட்சி!!
சகல ஊடகங்களிலும், சகல வழிகளிலும் முயற்சித்து வியாபாரத்தைப் பெருக்க அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டு இப்போதிருக்கும் 3 இதழ்கள் மட்டுமல்லாது மேலும் பல இதழ்களையும், மாத வாராந்தரிகளையும், பல்வேறு வடிவங்களில், விலைகளில் சகலரையும் சென்றடையுமாறு ஒரு காமிக்ஸ் சாம்ராஜ்யத்தையே உருவாக்கவேண்டும் என்பது என் ஆசை. அது அவரது வியாபாரம், ரசனை என்பதையும் தாண்டி சமூகக் கடமை என்பதாகவும் உருமாறவேண்டும்!!
பிரியாணி, ரசம் சாதம் என்று வாசிப்பை இப்படி உணவோடு ஒப்பிடுவதே தவறானதாகும். உண்மையில் தமிழின் அசாத்தியப் பசிக்கு விஜயன் சார் தருவது சோளப்பொரியே ஆகும்!
Delete@ ஆதி
Deleteஅட்டகாசமான எண்ணங்கள்! ஒவ்வொரு வரியிலும் பாஸிடிவ் வைப்ரேஷனை உணர முடிகிறது!
தூள்!
Dear Adhi,
DeleteYou nailed it. In fact we are getting very few books. I would like to see our comics will expand in future to give us more books. I am sure every comic fan will agree to your point.
Thx. & Regards,
Aldrin Ramesh from Muscat
@ஆதி தாமிரா:
Deleteநல்ல கருத்துக்கள்! உங்கள் வலைப்பூவில் காமிக்ஸ் பற்றியும் அதிகம் எழுதலாமே?!
@ஆதி தாமிரா
Deleteஅருமையான கருத்துகள். நூறு சதவீதம் உங்கள் கருத்துடன் ஒததுப்போகிறேன்
//ஒரு வருடம் முன்பு வரை 50000க்கு மேல் மாத சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நான் இன்று வேலையில்லாமல் அடுத்த மாத வாடகைக்கு என்ன வழி என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்//
வெளிப்படையான உங்கள் வார்த்தைகள் ஒரு தன்னம்பிக்கை டானிக். விரைவில் மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்க வாழ்த்துக்கள். :-)
ஆதி தாமிரா: வாருங்கள் வாதிடுவோம் !
Deleteரசனைகளை இதுதான் உயர்ந்தது என்றும்; இது தான் அறிவுக்கு உகந்தது என்றும் பிரிப்பது; அந்த ரசனையை உள்வாங்காத வாசகரின் பார்வைக்கு அபத்தமாகவே தோன்றும். நாம் உச்சமென நினைக்கும் இந்த காமிக்ஸ் ரசனைக்கூட ஒரு astrology விஞ்ஞானியின் பார்வையில் தாழ்ந்தது போல் தோன்றலாம்; இதுபோன்ற பொழுது போக்கும் வாசிப்புகளால் மனிதகுல மேம்பாடும் இளைஞர் சமுதாயத்தின் அளப்பரிய ஆற்றலும் வீண் போவதாக அங்கலாய்க்கலாம்; எனவே இதுவே உச்சம் மற்றதெல்லாம் மட்டம் என்ற கோட்பாடு அறிவுப்பூர்வமாக ஏற்பது எவ்வகையில் நியாயம் ?
எளிய வகையில் எல்லோரும் புரிந்துக் கொள்ளத்தக்க வகையில் வாசிப்பை உணவோடு வாசகர் சுந்தரமூர்த்தி ஒப்பிட்டதில் தவறொன்றுமில்லை. இங்கு அனைவருக்கும் புரியவைப்பது மட்டுமே முக்கியம். மொத்தத்தில் அனைத்து ரசனைகளும் உணர்வோடு கலந்து உள்ளத்தில் சங்கமமாகும் ஒன்று தானே ? அந்த உள்ளத்தில் உவகை ஏற்படுத்தும் எந்த ஒரு நல்ல விஷயமும் அவரவருக்கு உயர்ந்த ரசனைகளே !
கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு சராசரி ஆரோக்கியமான மனிதன் தன் இறுதி காலத்தில் எதிர்பார்ப்பது நல்ல உணவு; நிம்மதியான தூக்கம் பாதுக்காப்பான வாழ்க்கை இவைகள் தானே அன்றி, அந்திமத்தில் நம் எண்ணங்களாக மிஞ்சுவது வேறு என்ன உள்ளது ?
தொடர்கிறது..
ஆஹா ஆரம்பிச்சிடதீங்கப்பா...எதையும்..
Delete@ஆதி தாமிரா:
Delete//அதனால்தான் இத்தனை பெருமைகள் கொண்ட நம் சமூகத்திலிருந்து இன்னும் ஒரு காமிக்ஸ் ஆர்டிஸ்ட் கூட தோன்றிட வழியில்லாது இருக்கிறோம்//
முன்பு நிறைய பேர் இருந்திருக்கிறார்கள்! ஆனால், இந்த தலைமுறையில் புதிய திறமைகள் இன்னமும் இனங்காணப் படவில்லை (அல்லது நமக்குத் தெரியவில்லை!)
கீற்று சிறப்புக் கட்டுரை - ஓவியமும் ஓவியரும் >
@சுந்தரமூர்த்தி
Delete//ஆனால் சாம்பாரும் , ரசமும் தினமும் வைத்தாலும் சாப்பிடமுடியும் . COME BACK ஸ்பெஷல்க்கு பின் நமது லைன் முத்து முதலில் சொன்ன பிரியாணியும் சிக்கன் வருவலும் போல் இருக்கிறது. லேசாக சலிப்பு தட்டுகிறது ....... திகட்டுகிறது .......//
நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல சார்...நமது சந்தா தொகை அதிகமாவதை பத்தி நீங்க POINT பண்ணனும்ம்னு நின்னைசீங்கன்ன,உங்க கருத்தை ஏத்துக்க முடியாது. நாட்டுல விக்கற விலைவாசிய COMPARE பண்ணுனா, நமக்கு கிடைக்கற புத்தகங்களுக்கு நாம கொடுக்கற சாந்த தொகை சற்று குறைவுன்னு தான் சொல்லுவேன்.நாம 10 வருஷத்துக்க முன்னாடி வாங்கின அதே 1 லிட்டர் பெட்ரோல் அதே 1 கிலோ அரிசி இன்னைக்கு என்ன விலைக்கு விக்குதுன்னு பாருங்க...ஆனா நம்ம காமிக்ஸ் தரம் பத்து வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்தது ?? இப்போ எப்படி இருக்கு ?? எந்த தரத்திலும் மாறாத பொருட்களுக்கு நாம 200 - 300 சதம் விலை உயர்த்தி தர தயாரா இருக்கும்போது இப்போ தரத்தில இவ்வளவு உயர்வ வர்ற நம்ம காமிக்ஸ்க்கு இந்த விலை உயர்வு அவசியம் இல்லையா ??
இன்னொரு விஷயம். இவ்வளவு குறைச்சல SUBSCRIBERS உள்ள நம்ம இதழ்கள் இன்னமும் CIRCULATION அதிகம் ஆகும்போது நம்ம ஆசிரியர் விலை குறைப்பதை பத்தி நிச்சயம் யோசிப்பார். அதுக்கு உங்களால முடிஞ்சா உதவிகள நீங்க செய்யுங்க. நாம எல்லோரும் கூட்ட அதுக்கு முயற்சி செஞ்சோமுன்ன நிச்சயம் விலை குறைப்பு சாத்தியமே.
//மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் வாசகருக்கு வருடம் ஐயாயிரம் சந்தா கட்டுவது சுலபமாக இருக்கலாம் ....... இவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் ....... முக்கால் வாசி லைன் முத்து சந்தாதாரர்கள் நடுத்தர வர்க்கத்தினர் ...... தினமும் பிரியாணியா அல்லது வாரம் முழுவதும் சைவ சாப்பாடு ....//
நியாயமான கருத்து. ப்ளாக்ல சும்மா பிட்ட போட்ட டயலாக்க நீங்க சிரியஸ்ச எடுதிடீங்கன்னு நினைகிறேன். வருசத்துக்கு 120 ருபாய் சந்தா மாசம் 10 ரூபாய்க்கு ஒரு கருப்பு வெள்ளை இதழ் பாக்கெட் சைஸ் ன்னு நாமளும் ஒரு பிட்ட போடலாமா...சும்மா வாங்க BOSS! இந்த மாதிரி COMMENTS எல்லாத்தையும் தாங்கிக்கறதுக்கு சிவகாசியில நம்ம ஆசிரியர் இருக்கார். கொவிசுக்கவே மாட்டார். : )
@ வி-சு
Deleteஇப்போதைய விலை வாசி; நமது புத்தகத் தரம் - ஒப்பீடு அருமை!
இப்போதைய நமது புத்தகத் தரமும், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையும் நிச்சயம் 'மலிவு விலைப் பதிப்பை' போன்றதே!
தேடினாலும் கிடைத்திடாது!
@ ஆதி
Delete//மாதம் 100 ரூபாயோ, 200 ரூபாயோ இன்றைய காலகட்டத்தில் ஒரு பொருட்டே அல்ல.//
பொதுவா படைப்பு திறனை அடிபடைய கொண்ட எந்த ஒரு வியாபாரத்துக்குமே சமூகத்தில இரண்டு வகையான தேவைப்பாடுகள் இருக்கும்.
ஒரு வர்க்கம் அந்த கலையின் பால் நாட்டம்கொண்டு அதற்கு செலவிடும் கூட்டம். இன்னொன்று ENTERTAINMENT எனும் பொழுதுபோகுக்காகவே செலவு செய்யும் கூட்டம்.
முதல் வகை விலையை பற்றி கவலைபடாத வகை, எண்ணிகையிலும் மிக குறைவு. இரண்டாம் வகை செலவு செய்ய யோசிக்கும் வகை. இவர்களே பெரும்பான்மையோர்.
SO இப்படி நீங்க பொதுப்படையா சொல்றது பொருத்தமா இல்லையே?? நீங்க சமீபத்தில "எல்லோருக்கும் மதியம் புல் மீல்ஸ்" பத்தி DISCUSS பண்ண காங்கிரஸ் கூட்டத்துக்கு டெல்லி போயிட்டு வந்தீங்களா ??
@ ஆதி
Delete.//பிரியாணி, ரசம் சாதம் என்று வாசிப்பை இப்படி உணவோடு ஒப்பிடுவதே தவறானதாகும். உண்மையில் தமிழின் அசாத்தியப் பசிக்கு விஜயன் சார் தருவது சோளப்பொரியே ஆகும்!//
சோளப்பொரிய எங்க ஊரில் உணவாகவும் சாப்பிடுவாங்க சார்! : )
@ஆதி தாமிரா
Delete==சகல துறைகளிலும் ஊழல், அநீதியும் பெருகிவரும் வேளையில் அடுத்த தலைமுறைக்கு நற்குணங்களை வாசிப்பு மட்டுமே தரும்! நற்குணத்துக்கும், ரசனைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என நம்புகிறேன் நான். ஆக, நல்ரசனையை ஏற்படுத்தும், கலையார்வத்தை ஏற்படுத்தும், நல்வாசிப்பை ஊக்கப்படுத்தும் காமிக்ஸைத் தூக்கிப்பிடிப்பது என்பது ஒருவகையில் சமூகக் கடமை என்றும் கொள்ளலாம்==
==சகல ஊடகங்களிலும், சகல வழிகளிலும் முயற்சித்து வியாபாரத்தைப் பெருக்க அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டு இப்போதிருக்கும் 3 இதழ்கள் மட்டுமல்லாது மேலும் பல இதழ்களையும், மாத வாராந்தரிகளையும், பல்வேறு வடிவங்களில், விலைகளில் சகலரையும் சென்றடையுமாறு ஒரு காமிக்ஸ் சாம்ராஜ்யத்தையே உருவாக்கவேண்டும் என்பது என் ஆசை. அது அவரது வியாபாரம், ரசனை என்பதையும் தாண்டி சமூகக் கடமை என்பதாகவும் உருமாறவேண்டும்!!==
நல்ல கருத்துக்கள் நண்பரே... என் மகனுக்கு பூந்தளிர், கோகுலம் போன்ற இதழ்கள் படிக்க கிடைக்குமா என இன்னமும் ஏக்கம் இருக்கிறது.. நம் எடிட்டர் இந்த வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்பது என் தனிப்பட்ட ஆசையும் கூட... பூந்தளிர் போன்று ஒரு இதழ் தொடங்குவதுதான் தன் கனவாக இருந்தது என்று எடிட்டரும் ஒரு முறை கூறியிருக்கிறார்..இது மட்டும் நிறைவேறுமானால்...?
//காமிக்ஸ் ஓவியர்கள், மனிதசக்தியின் அளப்பரிய ஆற்றல்களுள் ஒன்றைக் கொண்டவர்கள் என நம்புகிறேன். அதனால்தான் இத்தனை பெருமைகள் கொண்ட நம் சமூகத்திலிருந்து இன்னும் ஒரு காமிக்ஸ் ஆர்டிஸ்ட் கூட தோன்றிட வழியில்லாது இருக்கிறோம்.//
Deleteஉண்மையை சொல்வதானால் இதில் எந்த தவறும் இல்லை, யார் மீதும் குறையும் இல்லை.
நமது நாடும் மக்களும் வளர்ச்சியின் பாதையில் உள்ளோமே தவிர உயர்ந்த luxurious state of experience க்கு இன்னமும் வந்துவிடவில்லை (we have to ignore minor exceptions). சிறு வயதில் சித்திரக்கதைகளை வரைந்த அனுபவம் எனக்கு உண்டு. என் அனுபவத்தில் நான் உணர்ந்தது - இது நிச்சயம் சரிவிகித உணவும், நியாயமான ஓய்வும் கூட கிட்டாத மக்களுக்களுக்கு எந்தவகையிலும் refreshmentஆக அமையாது. So for now comics in our culture has only tiny room for creation - so obviously we have to depend on imports and translations.
ஆதி தாமிரா: Ramesh Kumar:
Deleteநண்பர்களே ! எப்படி நாம் அனைவர் மீதும் எளிதாக குற்றம் சாட்டுகிறோமோ அதுப்போலவே யார் மீதும் குற்றம் இல்லை என்றும் எளிதாக கூறிவிட்டு நடையைக் கட்டிவிடலாம். ஆனால் அது உண்மையை ஒலிப்பதாக என்றுமே அமைந்து விடாது !
உதாரணமாக 7.21 கோடி மக்கள் தொகை உள்ள நம் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே காமிக்ஸ் க்கு சந்தா உறுப்பினர்கள் வெறும் 600 சொச்சம் மட்டுமே. அதிலும் இரட்டை பிரதி எத்தனை என்று தெரியாது. அதை நம்பி அச்சடிக்கப்படும் பிரதிகள் அதிகப்பட்சம் 5000 த்தை தாண்டாது. இதில் நீங்கள் கூறுவதுபோல சித்திரக்கதைகளுக்கு ஓவியம் வரைய தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒரு திறமைசாலி கலைஞனக்கு சோறு யாரு போடுவது :(
// இதில் நீங்கள் கூறுவதுபோல சித்திரக்கதைகளுக்கு ஓவியம் வரைய தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒரு திறமைசாலி கலைஞனக்கு சோறு யாரு போடுவது :(//
Deleteஇதை ஒரு பிரத்யேக புரிதலோடு நோக்குதல் நலம். உலகில் எந்த சுயதொழிலும் volunteersஇன் உதவியினால் நிலைத்து நிற்பதில்லை. தொழிலை நடத்துபவரின் பக்குவம் + ஆர்வம் தனக்குத்தானே சோறுபோட்டுக்கொள்ளம் அளவுக்கு இருப்பின் - அதுவே அனைவருக்கும் நலமும் தன்னுடைய ஆர்வத்தை expand செய்யவும் உதவும். Hope this is what we are seeing right now - a positive thing to notice.
Ramesh Kumar:
Delete//தொழிலை நடத்துபவரின் பக்குவம் + ஆர்வம் தனக்குத்தானே சோறுபோட்டுக்கொள்ளம் அளவுக்கு இருப்பின் - அதுவே அனைவருக்கும் நலமும் தன்னுடைய ஆர்வத்தை expand செய்யவும் உதவும்//'
நான் கூறியது புதிய காமிக்ஸ் ஓவியக் கலைஞனை பற்றிய கருத்து மட்டுமே. ஆனால் உங்கள் வரிகள் அதை மாற்றுவதாக அல்லவா உள்ளது ?
//நான் கூறியது புதிய காமிக்ஸ் ஓவியக் கலைஞனை பற்றிய கருத்து மட்டுமே. ஆனால் உங்கள் வரிகள் அதை மாற்றுவதாக அல்லவா உள்ளது ?//
Deleteபுதிய காமிக்ஸ் & imported Translation - இரண்டுக்குமே risk factorsஐ பொறுத்தவரையில் வித்தியாசமே கிடையாது. Original படைப்புக்கு கூடுதல் முயற்ச்சி தேவைப்படுவதால் riskஐ சமாளிக்கும் பொறுப்பு படைப்பாளியினுடையதாகிறதே தவிர சொற்ப வாசகர்களின் பங்களிப்பாக (படிப்பதற்கு அப்பால்) எதுவும் கிடையாது.
முதலில் அயல்நாட்டு படைப்புகளை low investmentஇல் வெளியிடுவதே நம்மூரில் பெரிய சாதனையாக இருக்கும்போது original படைப்புகளைப்பற்றி கற்பனை செய்வதாக இருப்பின் - we have to assume first the artist doesn't depends on external help to continue the business. Otherwise one day or another day the primary issue of "insufficient demand" will show a red signal.
@ஆதி தாமிரா:
Deleteதமிழ்நாட்டில் சித்திரக்கதை தயாரிக்கும் முயற்சிகளில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை / வரவேற்பு கிடைப்பதில்லை என்ற கவலைகள் ஒருபுறம் இருந்தாலும்; (வட) இந்திய அளவில் பார்த்தோமானால், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உலகத்தரமான 'இந்தியச்' சித்திரக்கதைகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன! அவற்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று கடந்த வருடம் ஆசிரியரிடம் கோரிக்கை வைத்திருந்தேன்! அப்படி அவை வெளியானால், 'இது முழுக்க முழுக்க எங்க நாட்டு காமிக்ஸ் கதை' என்று நாமும் தமிழில் காலர் தூக்கி விட்டுக் கொள்ளலாம்! :)
உலகம் சுற்றும் அலிபாபா " இந்த இதழின் அட்டைப்படம் பார்த்தவுடன் ஏற்படும் உணர்வுகளை விவரிக்க முடியவில்லை .காலாகாலத்துக்கும் நெஞ்சில் நிறைந்து விட்ட இந்த பொக்கிஷத்தை மறுப்பதிவு செய்யுமாறு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் .
ReplyDeleteஆசிரியரின் பதிலை படிக்காமல் பதிவிட்டதற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
Deleteநண்பர் AHMEDBASHA அவர்களின் கருத்தை நானும் வழி மொழிகிறேன் சார்.
Delete//ஆனால் நடைமுறை சிக்கல் என்னவெனில் - இது போன்ற 'புராதன' ; (ஐரோப்பாவில்)'less popular 'கதைகளை, digitalize செய்ய பதிப்பகத்தினர் முயற்சிக்கவில்லை ! So அவற்றை வண்ணத்தில் வெளியிட தற்போதைக்கு வழி கிடையாது//
அலிபாபா கதைகளை மறுபதிப்பு செய்யும் தருணம் நிச்சயம் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் சார் !!!!
அற்பப்பதரே ...(own மேடிசின்)ஹா ...ஹா ...
Deleteடியர் எடிட்டர்
ReplyDeleteXIII அக்டோபர் 13ம் திகதி வெளிவருவது கூடுதல் சந்தோசம் .ஏன்னெனில் அதன் ஒரிஜினல் பிரெஞ்சு பிரதிகளை ஏற்கனவே படித்துவிட்டேன் .இருப்பினும் உங்களின் மொழிபெயர்ப்பில் கொஞ்சும் தமிழில் அள்ளி பருகிட ஆவல் . "கார்சனின் கடந்த காலம் " மறுபதிப்பு ப்ளீஸ் ? விடுபட்டு போன இந்த சூப்பர் ஹிட் காவியத்தை கண்டு களிக்க தயவு செய்து கருணை காட்டுங்கள் சார். எமது வாசகர்களின் விருப்பமும் இதுவே .
Welcome back sir.
ReplyDeleteI have planned 2 visits. August 3rd and august 11th. Just 3 days remaining.. :-)
மின்னும் மரணம் மறு பதிப்பு வேண்டும் சார்.
ReplyDeleteபிளாக் & ஒயிட் காலகட்டத்தின் சோறு பதம்தான் தெரியுமே தவிர பெரும்பாலானவற்றை வாசித்து அனுபவிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. கார்சனின் கடந்தகாலம், மின்னும் மரணம் போன்ற இதழ்களைப் பற்றி நண்பர்கள் மீண்டும் மீண்டும் சொல்வதைப்பார்த்தால் ஆசையாக இருக்கிறது. நானும் வேண்டுகோள் வைக்கிறேன். ஸார், மனது வையுங்கள்!
ReplyDeleteநண்பரே லயனில் வந்த கராத்தே டாக்டர் கதையை ஒருமுறை படித்து பாருங்கள், அதில் "கியான்க்" என்ற ஒலி எழுப்பி கொண்டு சண்டை இடுவார் கதையின் கதாநாயகர் :).அதை படித்த பிறகு பழைய கருப்பு வெள்ளை இதழ்களை படிப்பதை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டீர்கள் :) :) :)
Deleteஇங்கு நண்பர்கள் எழுப்பும் எல்லா விதமான கோரிக்கைகளுக்கும் அது சம்மந்தமான போராட்டங்களுக்கும் என் முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்... :-)
ReplyDeleteடிசம்பர் மாதம் நம்ப வாத்தியார் 2 ஸ்பெஷல் புக் வெளி இட போறதா சன் டிவி பிளாஷ் நியூஸ்-ல வந்தத பார்த்து இன்னைக்கு காலைல நான் மேலும் ஒரு 500 ரூபாய நம்ம காமிக்ஸ் கம்பெனிக்கு அனுப்பி விட்டேன்!
ReplyDeletewow super...
Deleteஉலகம் சுற்றும் அலிபாபா,
ReplyDeleteசொர்கத்தின் சாவி,
வெள்ளைப் பிசாசு,
மாயதீவில் அலிபாபா:
இப்போதைய லயன் / முத்து காமிக்ஸ் சைசில் வெளியிட்டு நம்மைப் போன்றவர்களையும், வயதில் சிறியவர்களையும் ஒருங்கே ஈர்க்கும் ஒரு சில கதை வரிசைகளில் இதுவும் ஒன்று என்பதால் இதனை இப்போது ரீப்ரின்ட் செய்தால் அட்டகாசமாக இருக்கும்.
150+ பக்கங்கள்
(48 பக்கம் X 2 கதைகள்) + (24 பக்கம் X 2 கதைகள்)
நூற்றி ஐம்பது ருபாய் ஸ்பெஷல் வெளியீடு
thanks - தமிழ் காமிக்ஸ் உலகம்