Sunday, November 25, 2012

அடாது இருட்டடித்தாலும் ..விடாது பதிவோம் !

நண்பர்களே,

வணக்கங்கள் ! NEVER BEFORE ஸ்பெஷல் முன்பதிவுகள் ஒரு பக்கம் எங்கள் அலுவலகப் பணியாளர்களை மும்முரமாக வைத்திருக்க ; மறு பக்கம் அதன் தயாரிப்புப் பணிகள் இதர நபர்களை பெண்டு நிமிர்த்தி வருகின்றது ! அச்சுக்குச் சென்றிடும் நேரம் நெருங்கி வருவதால் எங்களது 'லப்-டப்' வேகங்களும் அடுத்த இரு வாரங்களுக்கு உச்சஸ்தாயியில் இருக்கப் போகின்றது ! காலை ஆறு மணிக்கு jogging புறப்படும் ஆர்வலனைப் போல் கிளம்பிடும் மிஸ்டர் மின்சாரம்,திரும்புவதோ மதியம் இரண்டு மணிக்கு !  மாலை ஆறு மணி வரை விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையாய் தங்கி விட்டு, அப்புறம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு மணி நேரம் கண்ணாமூச்சி ஆடிடுகிறார் ! அவரது கடாட்சம் அடுத்த 20 நாட்களுக்கு எங்களுக்கு இன்றியமையா அவசியமென்பதால் - கைகளில், கால்களில் உள்ள அத்தனை விரல்களையும் cross செய்து வைத்து ரத்தக் கண்ணீர் M.R. ராதா போல் காட்சி தருகின்றோம் ! 'ஒரு மின்சாரப் புலம்பல்' என்று இந்தப் பதிவிற்கு நீங்களாய் பெயரிடும் முன்னே, இதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகின்றேனே !அச்சுக்குப் புறப்படும் பக்கங்களின் ஒரு சிலவற்றை உங்களுக்கு டிரைலராக அறிமுகப்படுத்திடலாமே என்று மனதில் பட்டதன் பலனே இந்தப் பதிவு! கடைசி நிமிட மாற்றமான வேய்ன் ஷெல்டன் கதைகளின் பணிகள் தற்சமயம் feverish pace -ல் நடந்தேறி வருகின்றன; so அவற்றின் ட்ரைலர்கள் மாத்திரம் அடுத்த வார இறுதிக்கு ! Here goes ! 

இதோ - முதல் கதையாக வரவிருக்கும் லார்கோவின் "கான்க்ரீட் கானகம் NEW YORK "-ன் ஒரு action packed பக்கம் ! 


 தொடர்வது - லார்கோவின் பாகம் இரண்டான "சுறாவோடு சடுகுடு " கதையின் கிளைமாக்சில் இருந்து ஒரு high -voltage பக்கம் ! லார்கோவின் இந்த சாகசங்களை ஆங்கிலத்திலோ ; பிரெஞ்சிலோ ஏற்கனவே படித்திருக்கும் நண்பர்களுக்கு அதன் இடியாப்பச் சிக்கல் plot பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் ! புதிதாய்ப் படிக்கவிருக்கும் நண்பர்களே - சின்னதாய் ஒரு suggestion - 'உஷார் !' உங்களின் 200 % கவனத்தைக் கோரவிருக்கும் கதை இது ! 


லார்கோவின் roller coaster சவாரிக்குப் பின்னே, உங்களுக்குக் காத்திருப்பதோ ஒரு பறக்கும் கம்பளப் பயணம் ! ரொம்ப காலம் கழித்து முழு வண்ணத்தில் வந்திடும் சிக் பில் & குழுவின் இந்த கார்ட்டூன் கலாட்டாவை நிஜமாக ரசித்தேன் ! உங்களுக்கும் பிடித்திடுமென்ற நம்பிக்கையோடு - "கம்பளத்தில் கலாட்டா" கதையின் ஒரு இடைப்பட்ட பக்கம் இதோ !  


அடுத்து வருவதோ நம் கேப்டன் டைகரின் serious stuff ! "மரண நகரம் மிசௌரி" யின் தொடர்ச்சியான "கான்சாஸ் கொடூரன்" ! வழக்கம் போல் பரபரப்பான ஆக்க்ஷன் நிறைந்ததொரு சாகசம் !  


டைகரின் முதல் சாகசத்தைத் தொடர்ந்து வரக் காத்திருப்பவர் புது வரவான கில் ஜோர்டன் ! கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் என்ற போதிலும் இது ஒரு ஜாலியான துப்பறியும் கதையே ! பெல்ஜியப் படைப்புகளில் பிரசித்தி பெற்றதொரு கதைத் தொடர் இது!நம்மையும் இது impress செய்திடுமாவென்பதை NBS மூலம் அறிந்திடக் காத்திருக்கின்றேன் !  இதோ - "அலைகளின் ஆலிங்கனம்" கதையின் முதற் பக்கம் !




ஜோர்டனைத் தொடர்ந்து மீண்டும் கேப்டன் டைகர் ! புதிதாய்த் துவங்குமொரு சாகசத்தின் பக்கம் இதோ ! "இருளில் ஒரு இரும்புக் குதிரை" டைகருக்கும் ரயில்களுக்குமுள்ள காதலை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகும் கதை ! 


டைகரின் இரண்டாம் சாகசத்தைத் தொடர்ந்து WAYNE SHELTON - பாகம் 1 & 2 நூற்றியேழு பக்க நீளத்தில் அற்புத வண்ணக் கலவையில் வரவிருக்கிறது ! அத்தோடு வண்ணக் கோட்டா நிறைவுற - மாயாவி & மாடஸ்டி black & white  பகுதியினைத் துவக்கிடுகிறார்கள் ! அடுத்த வாரப் பதிவில் இவர்களது ட்ரைலர்களும் இடம் பெறும் ! 'இன்றைய இந்தப் பதிவை இத்தோடு முடித்துக் கொள்ளும் வழியைப் பாரு சாமி ' என்று எனது இன்வெர்ட்டர் பாட்டரிகள் கூவிடத் துவங்கியதால், கொசுக்கடிக்குள் ஒரு அவசரமான adios amigos போட்டிட வேண்டிய நெருக்கடி ! See you soon folks ! Take care !

Saturday, November 17, 2012

நினைவுகளுக்கு வயது நாற்பது !


நண்பர்களே,

வணக்கம். கொஞ்சம் இனிப்புகள் ; கொஞ்சம் பட்டாசுகள் ; ஊரெல்லாம் 'திடும்' 'திடும்' ஓசைகள் ; ஒரு மாறுதலுக்கு முழு நாளும் மின்சாரம் என்று இந்தாண்டுத் தீபாவளி பயணித்தது ! குடும்பத்தோடு சின்னதாய் ஒரு விடுமுறைக்கு வாய்ப்புக் கிட்டியதால் இந்த வாரம் முழுவதுமே இங்கே தலை காட்டிட இயலவில்லை ! இடைப்பட்ட நாட்களில் இங்கே நண்பர்கள் செம உற்சாகமாய் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதையும் ; நமது வலைப்பதிவின் பார்வைகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியதையும் ; ஒரு சில அற்புத நினைவாற்றலாளர்கள் எனது திருமணதினத்தைக் கூட நினைவு கூர்ந்திருப்பதைப் படிக்க முடிந்த போது - "நன்றி" என்ற ஒற்றைச் சொல்லிற்குள் எங்கள்  உணர்வுகளை ; சந்தோஷங்களை இயன்றவரை அடக்கிட ஆற்றல் கொடுக்கக் கோருகிறோம் தமிழன்னையிடம் ! Thanks ever so much folks !

டிசம்பரில் ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" ரூபாய் பத்து விலையில் வரவுள்ளது ! குறைவான விலைகளில் ; கறுப்பு-வெள்ளை பாணிகளில் நாம் அத்தனை காலமாய்ப் பரிச்சயம் கொண்டிருந்த அந்தப் பயண சகாப்தத்தின் இறுதி இதழ் இதுவாகத் தானிருக்கும் ! திட்டமிட்டபடி டெக்ஸ் வில்லரின் "காவல் கழுகு" இதழை இதே பாணியில் 'சஸ்தாவாய்'   வெளியிடுவதில் அதன் படைப்பாளிகளுக்கு சம்மதமில்லை. புத்தாண்டில், புது விலைகளில் ; புதுப் பொலிவுடன் டெக்ஸ் வில்லர் கதைகளை வெளியிடும் பொருட்டு அவர்களை நான் சமீபத்தில் சந்தித்த போது, இனியும் இந்தக் குறைவான தரத்தில் தங்களது டாப் ஹீரோவை படுத்தி எடுக்க வேண்டாமே என்றொரு அன்புக் கட்டளை போட்டனர் ! இத்தாலியில் ஒரு சகாப்தமாய் விளங்கும் அத்தனை பெரிய பதிப்பகம் நம்மிடம் வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் அளவிற்கு நாமொன்றும் பெரியதொரு அப்பாடக்கர் அல்ல என்பதாலும் ;பிப்ரவரியில் புது அவதாரமெடுக்கும் நம் இரவுக் கழுகை இனி ஒரிஜினலின் தரத்திலேயே ரசிப்பதும் முறையான ஏற்பாடு தான் என்று எனக்கும் மனதுக்குப்பட்டதாலும் , "காவல் கழுகு" பிறிதொரு நாளில் hi -tech அவதாரமெடுக்கும் வரை பரணில் தான் வாசம் செய்திடல் அவசியமாகிறது ! டெக்ஸ் ரசிகர்கள் 'நர நர' வென்று பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்டாலும், இப்போதைக்கு 'ஹி..ஹி' ..தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு ! Sorry guys ! 

NEVER BEFORE ஸ்பெஷல் இதழில் புது இணைப்பு Wayne Shelton நீங்கலாக பாக்கிக் கதைகள் தயார் நிலையில் உள்ளன என்பதே லேட்டஸ்ட் update ! நம் மின்வாரியத்தின் அசாத்தியத் தாண்டவம் இன்னும் தீர்ந்த பாடைக் காணோம் என்பதால் 16 மணி நேர மின்வெட்டை இப்போதெல்லாம் 'ஹாவ்' என்றதொரு கொட்டாவியோடே எதிர்நோக்கப் பழகி வருகின்றோம் ! NEVER BEFORE ஸ்பெஷல் என்ற பெயர் பொருத்தமோ என்னவோ -இது போன்ற மின்வெட்டுக்களையும் சரி ; இருளினுள் பணியாற்றும் பாணியையும் சரி....never before have we encountered them ! இதழின் இதர பக்கங்களை நிரப்பும் பணி இப்போது என் முன்னே ! இன்று ஓய்வில் இருந்தாலும் நம் காமிக்ஸ் முயற்சிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்ட என் தந்தையின் தலையங்கம் தான் முதற்பக்கத்தை அலங்கரிக்கப் போகின்றது. தொடரவிருப்பது நமது பணியாளர்களை உங்களுக்கு அறிமுகம் செய்திடவிருக்கும் புகைப்படப் பக்கங்கள் ! "விஜயன்" என்ற ஒற்றைப் பெயருக்குப் பின்னே ஓசையின்றி பல  காலமாய்ப் பணியாற்றி வரும் நம் டீமின் முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிடவிருக்கிறேன் ! வழக்கம் போல் எனது 'காமிக்ஸ் டைம் ' பகுதி ; போஸ்ட் பாக்ஸ் ; சந்தா விபரங்கள் என்பதைத் தாண்டி இந்த landmark இதழில் உங்களது பங்களிப்பும் அவசியமென்று எனக்குப் பட்டது ! 

இது முழுக்க முழுக்க நமது முத்து காமிக்ஸ் கொண்டாட்டம் என்பதால் இங்கே நமது இதர வெளியீடுகள் பற்றிய சங்கதிகளை நுழைத்திடாது, exclusive ஆக முத்துவின் best பற்றிப் பேசிட சில பக்கங்கள் முதன்மைத் தேவை என்று மனதுக்குப் பட்டது ! So - முதலில் வருவது MUTHU COMICS TOP 5 இதழ்களைப் பற்றிய தேர்வு ! இது வரை வெளி வந்துள்ள நமது 316 இதழ்களில் அவரவர் ரசனைக்கேற்ப, மனம் கவர்ந்த டாப் 5 இதழ்களைத் தேர்வு செய்து அவற்றைப் பற்றிச் சுருக்கமாய் இங்கே எழுதிடலாம் ; அல்லது எனக்கு மின்னஞ்சலும் செய்திடலாம். சுவாரஸ்யமான தேர்வுகள் நமது NBS - ல் பிரசுரிக்கப்படும் ! அதற்கு முன்னே நமது இதழ்களின் முழுப் பட்டியலும் தேவை அல்லவா ? இதோ - நம் நண்பர் பாண்டிச்சேரி கலீலின் பிரமிக்கச் செய்யும் வலைப்பதிவிலிருந்து (http:/mudhalaipattalam.blogspot.in) 'லவட்டிய' லிஸ்ட் ! (நன்றிகள் கலீல் சார்!) நமது இன்றைய தலைமுறை நண்பர்களுக்கு இவற்றில் நிறைய  பரிச்சயமில்லா இதழ்களாக இருந்திடுமென்பது எனக்குத் தெரியும். No worries ....நீங்கள் படித்த இதழ்களுக்குள் டாப் 5 தேர்வு செய்தும் எழுதிடலாம் !   

1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி

2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி

3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி

4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி

5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்

6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி

7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்

8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ

10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி

11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்

12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ

13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்

15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ

16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி

17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்

18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ

19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ

21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்

22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி

23. கொலைக்கரம் - ஜானி நீரோ

24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ

25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி

26. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்

27. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்

28. புதையல் வேட்டை - ரிப் கெர்பி

29. C. I .D. லாரன்ஸ் - லாரன்ஸ் & டேவிட்

30. கடத்தல் ரகசியம் - சார்லி

31. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ

32. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி

33. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ

34. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் & டேவிட்

35. காணாமல் போன கைதி - ஜானி நீரோ

36. ஜானி இன்  ஜப்பான் - ஜானி நீரோ

37. ரோஜா மாளிகை ரகசியம் - ரிப் கெர்பி

38. ஒற்றன் வெள்ளை நரி - ஜார்ஜ்

39. குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் - சார்லி

40. மைக்ரோ அலைவரிசை -848 - ஜானி நீரோ

41. 10 டாலர் நோட்டு - ஜார்ஜ்

42. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி

43. நெப்போலியன் பொக்கிஷம் - ஜார்ஜ்

44. கொள்ளைக்கார பிசாசு - இரும்புக்கை மாயாவி

45. மடாலய மர்மம் - காரிகன்

46. வைரஸ் - X - காரிகன்

47. ரயில் கொள்ளை - சிஸ்கோ

48. விசித்திர வேந்தன் - கில்டேர்

49. காணாமல் போன கலைப்பொக்கிஷம் - காரிகன்

50. தீவை மீட்டிய தீரன் - மிஸ்டர் பென்

51. இஸ்தான்புல் சதி - சார்லி

52. கொலை வழக்கு மர்மம் - ரிப் கெர்பி

53. பேய்த்தீவு ரகசியம் - சார்லி


54. கல் நெஞ்சன் - கில்டேர்


55. திக்குத் தெரியாத தீவில் - சார்லி


56. வெடிக்க மறந்த வெடிகுண்டு - சார்லி


57. கடலில் தூங்கிய பூதம் - காரிகன்


58. முகமூடி வேதாளன் - வேதாளர்


59. பகல் கொள்ளை - ரிப் கெர்பி


60. ஜும்போ - வேதாளர்


61. இரத்த வெறியர்கள் - சிஸ்கோ


62. பில்லி சூனியமா? பித்தலாட்டமா? - காரிகன்


63. இருளின் விலை இரண்டு கோடி - மாண்ட்ரெக்


64. மூன்று தூண் மர்மம் - ரிப் கெர்பி


65. விண்வெளி வீரன் எங்கே? - வேதாளர்


66. தீ விபத்தில் திரைப் படச்சுருள் - காரிகன்


67. விசித்திரக் கடற் கொள்ளையர் - வேதாளர்


68. பேய்க்குதிரை வீரன் - சிஸ்கோ


69. பழி வாங்கும் பாவை - காரிகன்


70. பட்லர் படுகொலை - ரிப் கெர்பி


71. மர்மத் தலைவன் - மாண்ட்ரெக்


72. ஆவியின் கீதம் - சிஸ்கோ


73. ராட்சத விலங்கு - வேதாளர்


74. பனித்தீவின் தேவதைகள் - காரிகன்


75. முகமூடிக் கள்வர்கள் - வேதாளர்


76 கள்ள நோட்டுக்  கும்பல் - ரிப் கெர்பி


77. குறும்புக்கார சுறாமீன் - மாண்ட்ரெக்


78. வான்வெளி சர்க்கஸ் - காரிகன்


79. முத்திரை மோதிரம் - வேதாளர்


80. யார் குற்றவாளி? - சிஸ்கோ


81. விண்ணில் நீந்தும் சுறா - மாண்ட்ரெக்


82. பனிமலை பூதம் - காரிகன்


83. விசித்திர குரங்கு - ரிப் கெர்பி


84. வேதாளனின் சொர்க்கம் - வேதாளர்


85. முகமூடிக்  கொள்ளைக்காரி - காரிகன்


86. சூனியக்காரியின் சாம்ராஜ்யம் - வேதாளர்


87. Mr. பயங்கரம் - காரிகன்


88. பிரமிட் ரகசியம் - ரிப் கெர்பி


89. கப்பல் கொள்ளையர் - வேதாளர்


90. மாண்ட்ரேக் கொள்ளைக்காரனா? - மாண்ட்ரெக்


91.கற்கோட்டை புதையல் - ரிப் கெர்பி


92. மரண வலை - காரிகன்


93. கீழ்த்திசை சூனியம் - வேதாளர்


94. காணாமல் போன வாரிசுகள் - ரிப் கெர்பி


95. விபரீத வித்தை - மாண்ட்ரெக்


96. விசித்திர மண்டலம் - காரிகன்


97. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி


98. பூ விலங்கு - வேதாளர்


99. சூரிய சாம்ராஜ்யம் - ரிப் கெர்பி


100. யார் அந்த மாயாவி - இரும்புக்கை மாயாவி

101. சர்வாதிகாரி - வேதாளர்

102. பறக்கும் தட்டு மர்மம் - காரிகன்


103. உதவிக்கு வந்த வஞ்சகன் - மாண்ட்ரெக்


104. கையெழுத்து மோசடி - ரிப் கெர்பி


105. இரண்டாவது வைரக்கல் எங்கே? - காரிகன்


106. ஆழ்கடலில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


107. கானகக் கள்வர்கள் - வேதாளர்


108. உலகே உன் விலை என்ன? - மாண்ட்ரெக்


109. யார் அந்த கொலையாளி - ரிப் கெர்பி


110. கூண்டில் தூங்கிய சர்வாதிகாரி - வேதாளர்


111. இராணுவ ரகசியம் - காரிகன்


112. கொலைக்கு விலை பேசும் கொடியவன் - மாண்ட்ரெக்


113. மரணக்குகை - ரிப் கெர்பி


114. பயங்கரவாதி Dr. செவன் - காரிகன்


115. நாலூகால் திருடன் - ரிப் கெர்பி


116. வழிப்பறிக் கொள்ளை - ரிப் கெர்பி


117. விபத்தில் சிக்கிய விமானம் - இரும்புக்கை மாயாவி


118. தலை நகரா? கொலை நகரா? - காரிகன்


119. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி


120. வாரிசு யார்? - ரிப் கெர்பி


121. விபரீத விளையாட்டு - ஜான் சில்வர்


122. ஒருநாள் மாப்பிள்ளை - சார்லி


123. விண்வெளி விபத்து - இரும்புக்கை மாயாவி


124. ரவுடிக்கும்பல் - ஜான் சில்வர்


125. விண்வெளி ஒற்றர்கள் - இரும்புக்கை மாயாவி


126. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்


127. யார் அந்த அதிஷ்டசாலி - சார்லி


128. சுறாமீன் வேட்டை - ஜார்ஜ்


129. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ


130. சூதாடும் சீமாட்டி - டான்


131. கணவாய்க் கொள்ளையர் - ஜிம்மி


132. தவளை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி


133. ஃபார்முலா திருடர்கள் - லாரன்ஸ் & டேவிட்


134. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்


135. நாடோடி ரெமி - ரெமி


136. கொலைகாரக் குள்ள நரி - இரும்புக்கை மாயாவி


137. திசை மாறிய கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்


138. களிமண் மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி


139. ஃப்ளைட்-731(மறு பதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்


140. பறக்கும் பிசாசு - இரும்புக்கை மாயாவி


141. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ


142. ப்ளாக் மெயில் - இரும்புக்கை மாயாவி


143. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்


144. வான்வெளிக் கொள்ளையர் - இரும்புக்கை மாயாவி


145. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி


146. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்


147. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ


148. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்


149. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


150. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ

151. நியூயார்க்கில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


152. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்


153. மாயாவிக்கோர் மாயாவி - இரும்புக்கை மாயாவி


154. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ


155. ஃபார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்


156. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி


157. இயந்திரப் படை - இரும்புக்கை மாயாவி


158. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ


159. பாம்புத் தீவு - இரும்புக்கை மாயாவி


160. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்


161. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ


162. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி


163. இரும்புக்கை மாயாவி - இரும்புக்கை மாயாவி


164. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ


165. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்


166. கொள்ளைக்காரப் பிசாசு - இரும்புக்கை மாயாவி


167. முத்து ஸ்பெஷல் - ஜெஸ்லாங்


168. கடல் பிசாசு - லூயிஸ்


169. தலை வாங்கும் சிலை - ரோஜர் மூர்


170. மாயாவிக்கொரு சவால் - இரும்புக்கை மாயாவி


171. இரத்த இரவுகள் - ஜெஸ்லாங்


172. சைத்தான் சிறுவர்கள் - இரும்புக்கை மாயாவி


173. பயங்கரப் பனிரெண்டு - மார்ஷல்


174. ஆகாயக் கல்லறை - ஜான் சில்வர்


175. வழிப்பறிப் பிசாசு - செக்ஸ்டன் பிளேக்


176. சம்மர் ஸ்பெஷல் - ஜெஸ்லாங்


177. இரத்தப் பாதை - ஜான் சில்வர்


178. சிங்கத்தின் குகையில் - டேவிட்


179. பச்சை வானம் மர்மம் - மேடிஸன்


180. ஆழ்கடல் அதிரடி - ஜான் சில்வர்


181. கண்ணீர் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


182. துரோகியைத் தேடி - ஜான் ஸ்டீல்


183. Mr. ஜோக்கர் - வெஸ்லேட்


184. மனித வேட்டை - ஜான் சில்வர்


185. தேவை ஒரு தோட்டா - வெஸ்லேட்


186. சார்லிக்கொரு சவால் - சார்லி


187. பிழைத்து வந்த பிணம் - ஜார்ஜ்


188. மைக்ரோ அலைவரிசை- 848 - ஜானி நீரோ


189. மரண மச்சம் - ஜார்ஜ்


190. பரலோகப் பயணம் - லாரன்ஸ் & டேவிட்


191. புயலோடு ஒரு போட்டி - இரட்டையர்கள்


192. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ


193. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


194. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி


195. நாச அலைகள் - இரும்புக்கை மாயாவி


196. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி


197. பயந்து வந்த பயங்கரவாதி - லாரன்ஸ் & டேவிட்


198. காற்றில் கரைந்த கரன்ஸி - மாண்ட்ரெக்


199. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்


200. மர்மச் சுரங்கம் - சிஸ்கோ

201. காலத்தோடு கண்ணாமூச்சி - மாண்ட்ரெக்


202. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி


203. ஊடு கொலைகள் - ஷெர்லக் ஹோம்ஸ்


204. எமனின் எண்- 8 - மாண்ட்ரெக்


205. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ


206. உறை பனி மர்மம் - இரும்புக்கை மாயாவி


207. கொரில்லா வேட்டை - ஜார்ஜ்


208. இரத்த வாரிசு - சார்லி


209. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்


210. பேய்த்தீவு ரகசியம் - சார்லி


211. Mr.சில்வர் - சில்வர்


212. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி


213. தலைவாங்கும் தலைவன் - மாண்ட்ரெக்


214. திசை மாறிய சுரங்கம் - ஷெர்லக் ஹோம்ஸ்


215. கொலைகாரக் கபாலம் - ஜார்ஜ்


216. மயான மாளிகை - ஷெர்லக் ஹோம்ஸ்


217. விசித்திரக் கொள்ளையர் - மாண்ட்ரெக்


218. சிங்கத்திற்கொரு சவால் - ஜார்ஜ்


219. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி


220. பழி வாங்கும் பனி - ஜேம்ஸ்பாண்ட்


221. கொலையுதிர் காலம் - மாண்ட்ரெக்


222. ஒரு கைதியின் கதை - சார்லி


223. மோசடி மன்னன் - ஜார்ஜ்


224. கொலை வள்ளல் - ஜான் சில்வர்


225. பச்சை நரிப் படலம் - ஜெஸ்லாங்


226. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர் 


227. நடு நிசிப் பயங்கரம் - மாண்ட்ரெக்


228. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி


229. மரணத்தின் முகம் - ஜெஸ்லாங்


230. மாண்டு போன நகரம் - ஜான் ஸ்டீல்


231. ஒரு வீரனின் கதை - பில் ஆடம்ஸ்


232. ஜானி இன் பாரிஸ் - ஜானி நீரோ


233. பாதாள பாசறை - மாண்ட்ரெக்


234. C. I. D லாரன்ஸ்(மறுபதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்


235. சூதாடும் சூறாவளி - ஜேம்ஸ்பாண்ட்


236. யார் அந்த மாயாவி(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி


237. கல்லறையில் ஒரு கவிஞன் - ஜெஸ்லாங்


238. காணாமல் போன ஜோக்கர் - டிரேக்


239. தவளை மனிதர்கள்(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி


240. புயல் படலம் - டைனமைட் ரெக்ஸ்


241. ஒரு மாந்திரீகனின் கதை - டாமி


242. தங்கக் கல்லறை - 1 - கேப்டன் டைகர்


243. தங்கக் கல்லறை - 2 - கேப்டன் டைகர்


244. பனியில் ஒரு பிணம் - சி.ஐ.டி. ராபின்


245. ரவுடி ராஜ்யம் - அலெக்ஸாண்டர்


246. பென்குயின் படலம் - ஜார்ஜ்


247. நரகத்தின் நடுவில் - சி.ஐ.டி. ராபின்


248. விசித்திர வில்லன் - பெர்ரி மேஸன்


249. குற்ற வருஷம் - 2000 - ரிப்போர்ட்டர் ஜானி


250. இரும்புக்கை எத்தன் - கேப்டன் டைகர்

251. திகில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி


252. ஒரு மர்ம இரவு - ஷெர்லக் ஹோம்ஸ்


253. பரலோகப் பாதை - கேப்டன் டைகர்


254. வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்


255. மரணத்தின் நிறம் கறுப்பு - பெர்ரி மேஸன்


256. மின்னல் ஜெர்ரி - ஜெர்ரி


257. இருளின் தூதர்கள் - ரிப்போர்ட்டர் ஜானி


258. ஹாரர் ஸ்பெஷல  - கருப்புக்கிழவி


259. மின்னும் மரணம் - கேப்டன் டைகர்


260. மாயக் குள்ளன் - மாண்ட்ரெக்


261. திகில் கனவு - ரிப்போர்ட்டர் ஜானி


262. மைடியர் மம்மி - சி.ஐ.டி. ராபின்


263. நள்ளிரவு நாடகம் - மாண்ட்ரெக்


264. வைர வேட்டை - சைமன்


265. சாத்தானின் சாட்சிகள் - ரிப்போர்ட்டர் ஜானி


266. உறைந்த நகரம் - ப்ரூனோ பிரேசில்


267. துரத்தும் தோட்டா - வெஸ்லேட்


268. திரில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி


269. கொலை அரங்கம் - ஜான் ஸ்டீல்


270. சிலந்தியோடு சதுரங்கம் - சி.ஐ.டி. ராபின்


271. காற்றில் கறைந்த பாலர்கள் - மாண்ட்ரெக்


272. புயல் பெண் - சி.ஐ.டி. ராபின்


273. பறக்கும் பாவைப் படலம் - ஜேம்ஸ்பாண்ட்


274. சிறையில் ஒரு புயல் - கேப்டன் டைகர்


275. நிழலும் கொல்லும் - ஜேம்ஸ்பாண்ட்


276. எத்தர் கும்பல் - 8 - மாண்ட்ரெக்


277. திகில் டெலிவிஷன் - ரிப்போர்ட்டர் ஜானி


278. மரண மண் - வெஸ்லேட்


279. பழி வாங்கும் புகைப்படம் - ஜார்ஜ்


280. சிவப்புத் தலை சாகசம் - ஷெர்லக் ஹோம்ஸ்


281. பழிவாங்கும் பிசாசு - சி.ஐ.டி. ராபின்


282. டாலர் வேட்டை - ஜார்ஜ்


283. திசை திரும்பிய தோட்டா - கேப்டன் டைகர்


284. ஆழ் கடல் அதிசயம் - மாண்ட்ரெக்


285. மரண ரோஜா - ஜார்ஜ்


286. ஜன்னலோரம் ஒரு சடலம் - சி.ஐ.டி. ராபின்


287. தோட்டா தலைநகரம் - கேப்டன் டைகர்


288. கொலைப் பொக்கிஷம் - சி.ஐ.டி. ராபின்


289. மீண்டும் முதலைகள் - ப்ரூனோ பிரேசில்


290. யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ


291. குள்ள நரிகளின் இரவு - ப்ரூனோ பிரேசில்


292. அமானுஷ்ய அலைவரிசை - மார்ட்டின்


293. சரித்திரத்தை சாகடிப்போம் - மார்ட்டின்


294. இரத்தக் கோட்டை - கேப்டன் டைகர்


295. மேற்கே ஒரு மின்னல் - கேப்டன் டைகர்


296. தனியே ஒரு கழுகு - கேப்டன் டைகர்


297. மெக்சிகோ பயணம் - கேப்டன் டைகர்


298.புதையல் பாதை - ரேஞ்சர் ஜோ


299. செங்குருதிப் பாதை - கேப்டன் டைகர்


300. புயல் தேடிய புதையல் - கேப்டன் டைகர்

301. திசை திரும்பிய பில்லி சூன்யம் - ரிப்போர்ட்டர் ஜானி


302. மரண ஒப்பந்தம் - சி.ஐ.டி. ராபின்


303. பேழையில் ஒரு வாள் - மார்ட்டின்


304. காலத்திற்கொரு பாலம் - மார்ட்டின்


305. மரண மாளிகை - ரிப்போர்ட்டர் ஜானி


306. ஒரு திகில் திருமணம் - ஜார்ஜ்


307. காற்றில் கரைந்த கதாநாயகன் - ரோஜர் மூர்


308. சித்திரமும் கொல்லுதடி - சி.ஐ.டி. ராபின்


309. கதை சொல்லும் கொலைகள் - ஜான் ஸ்டீல்


310. பொன்னில் ஒரு பிணம் - மார்ட்டின்


311. நொறுங்கிய நாணல் மர்மம் - ஜூலியன்


312. நிழல் எது? நிஜம் எது? - மாண்ட்ரெக்


313. விண்ணில் ஒரு குள்ள நரி - ஜார்ஜ் 

314. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல் - ஸ்பெஷல் -

315. சிகப்புக் கன்னி மர்மம்

 316.தற்செயலாய் ஒரு தற்கொலை 
- ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விடு பட்ட சித்திரக் கதைகள் - 


1. திசை மாறிய கப்பல்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ் & டேவிட் 


2.இரண்டாவது வைரக்கல் எங்கே ? (மறுபதிப்பு) - காரிகன் 


3. காணாமல் போன கைதி (மறுபதிப்பு) - ஜானி நீரோ 


4. பார்முலா திருடர்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ்& டேவிட் 

மூச்சிரைக்க முழுப் பட்டியலையும் படித்து முடித்து விட்டு  - இதில் எத்தனை ஞாபகத்தில் உள்ளன ; எத்தனை வெறும் பெயர்களாய் மாத்திரமே நினைவில் உள்ளன என்று உங்களின் நினைவாற்றலோடு மல்யுத்தம் போடும் முன்னே  உங்களுக்கு தொடர்ந்து இன்னும் பணிகள் காத்துள்ளன ! 

  • இந்தப் பட்டியலில் உங்களின் TOP 5 தலைப்புகள் எவை ? 
  • TOP 5 அட்டைப்படங்கள் எவை ?
  • TOP 5 நாயகர்கள் யார்? 
நிச்சயம் இது ஒரு கிறுகிறுக்கச் செய்யும் படலமென்பது நான் அறியாததல்ல ! ஆனால், சுவாரஸ்யமானதொரு தலைசுற்றலுக்கு இதை விட சுலபமான வழி(லி ) இருக்க முடியாதே ! So உங்களின் அந்த சிந்தனைத் தொப்பிகளைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு get cracking please ! அடுத்த வாரம் இன்னொரு NBS பதிவோடு உங்களை சந்திப்பேன் ! அது வரை have fun !